No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, June 10, 2016

கள்ளக்காதலில், முடிவுரும் மூவர் வாழ்க்கை!


சம நிலையில் இருக்கும் தண்ணீர் தனது தர்மத்தைக் காக்க, ‘‘தன்னுள் (விழு, வீழ்)ந்தவனை இரண்டுமுறை பிழைத்துப்போ என தானாகவே மேலே தூக்கி விடுமாம். அதற்கு மேலும் அவனால் தப்பித்துச் செல்ல முடியவில்லை என்றால் மட்டுமே, இனி நீ இருப்பதே பிரயோஜனமில்லாத ஒன்று’’ என உள்ளே அமுக்கி உயிரை விடச் செய்யுமாம். இப்படித்தான் முடிந்திருக்கிறது, சென்னையில் ஒரு கள்ளக்காதல் கொலை.
ஆமாம், தொழில் முறைப்பொய்யர் ஒருவர், தன் மனைவின் கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டுள்ளார். ‘‘தான் செய்த தர்மமே, தன்தலையைக் காக்கும்’’ என்பது முதுமொழி. பொய்யர்களின் தொழிலைச் செய்தவர், அதிலும் தன்னைவிட மேலானப் பொய்யர்களான நடிகர், நடிகைகளின் வழக்கக்களில் அதிக கவனஞ் செலுத்தியுள்ளவர், நிச்சயம் தர்மத்தைக் காத்திருக்க மாட்டார். ஆகையால்தான், தர்மமும் அவரைக் காக்காமல், இரண்டு வாய்ப்புக்களை வழங்கியப்பின் கைவிட்டு விட்டது.
இக்கொலை குறித்து எதற்கும் பிரயோஜனம் இல்லாத பலவாறான செய்திகள் வழக்கம்போலவே ஊடகங்களில் வருகின்றன. இதில் கள்ளக்காதல் மனைவி, தன் கொலைகாதல் லீலை பேச்சுக்களை எல்லாம், ஒலிப்பதிவு வேறு செய்து வைத்து உதவியிருக்கிறாள். அதன் முக்கிய கூறுயிது!
//லோகேசினி: என்னை யாரோ கொலை செய்ய திட்டம் போட்டிருக்காங்க. வெளிய போகவே பயமா இருக்குன்னு சொல்லி அவரு வீட்டுக்குள்ளயே கிடக்கார். அவரை கொலை செய்ய நாம போட்ட திட்டம் தெரிஞ்சுபோச்சோன்னு எனக்கு பயமா இருக்கு. எந்த விஷயமும் தெரிஞ்சுடாம பாத்துக்க…. நேத்து நைட் முழுக்க பயந்துட்டே இருந்தாரு. என்னை தூங்கவே விடலை. புலம்பிட்டே இருந்தாரு. யாரோ என்னை நோட்டம் பாக்கிறாங்க. இதை செய்றது யார்னு கண்டுபிடிக்காம விடமாட்டேன்னு சொல்லிட்டே இருந்தார். நான்தான் அவர் கவனத்தை திசைதிருப்பி, ஒருமாதிரி சமாதானம் பண்ணினேன்.
சண்முகநாதன்: அதுபத்தி எல்லாம் கவலைப்படாதடா செல்லக்குட்டி. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். அவன் (முருகன்) எங்க போறான்றதை மட்டும் கண்காணிச்சு எனக்கு சொல்லிட்டே இரு.
லோகேசினி: இப்ப இருக்கிற வீடு ராசி இல்லை. நாளைக்கே வேற வீடு பாத்துப் போயிருவோம்னு சொல்லிட்டு இருக்கார்.
சண்முகநாதன்: அவன் எத்தனை வீடு பாத்தாலும் அந்த வீட்டில் குடியிருக்க போறதில்லை. அதுக்குள்ள அவனை கவனிச்சுருவேன். நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் சேந்திருப்போம். கலங்காம இரு கண்ணு. ஆமா.. மாப்பிள்ளை (முருகன்) பார்சலில் எதையோ வாங்கி வந்தாரே.. என்ன விசேஷமா.. ஏதாவது மல்லிகை பூ, அல்வா வேலையா…
லோகேசினி: சீச்சீ… அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அதெல்லாம் நாளாச்சி. கண் வலிக்குதுன்னு சொன்னார். நான்தான் கண்ணுக்கு மருந்து போட்டு விட்டேன். இப்ப நல்லா தூங்குறார்.
சண்முகநாதன்: இதை முன்னாடியே சொல்லி இருந்தா நான் வந்திருப்பேனே… இப்படி பேச்சு நீள்கிறது. இந்த ஆடியோவை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.//
கொலையுண்டவர் தொழில் முறையில் தன் சாதிப்பொய்யர் என்பதால், கள்ளக்காதல் மனைவிக்கும், கள்ளக்காதலனுக்கும் நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.
கூடவே, தங்களது தொழில் முறையின்படி, நீங்களிருவரும் வழங்கிலிருந்து விடுதலையாகி விடலாம். ஆனால், அதற்கு அதிக செலவாகும் (அரசுப் பொய்யருக்கும், நிதிபதிக்கும் பங்கு தரவேண்டுமென்பது உட்பொருள்) என்றுகூறி அவர்களது மொத்த சொத்தையும் வழிபறி செய்து விடுவார்கள். அநேகமாக, இது குற்றச்சாற்றுக்களைப் பதிவுசெய்வதற்கு முன் பிணையில் வருவதற்கே நடந்துவிடும்.
மேலும், கள்ளக்காதல் மனைவியை, ‘உட்கார் என்றால் உட்காரனும், படு என்றால் படுக்கனும்’ என வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று சொல்லுமளவிற்கு நிதிபதிகள் உள்ளிட்டோரிடம் இன்னும் எத்தனையெத்தனையோ கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இவர்கள் தங்களுக்காக வாதாட பொய்யினிகளைப் படித்தாலுங்கூட, இதுதான் நடக்கும். இதில் காவலூழியர்களும் விதிவிலக்கல்ல. ஆனால், இதெல்லாம் தெரியாமல், கள்ளக் காதலனும், காதலிலும் இந்தச் சிறையில் இருந்து அந்தச் சிறைக்கும்; அந்தச் சிறையில் இருந்து இந்தச் சிறைக்கும், ‘இவ்வழக்கில் இருந்து விடுதலையாகி நாம் எப்படியெல்லாம் வாழப்போகிறோம்’ என்பதுபற்றி, இனிப்பான காதல் கடிதங்களை எழுதிக் கொண்டிருப்பார்கள்.
இவைகள் அனைத்துக்குமான சமிக்ஞைகள்தான், ‘பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவது குற்றமல்ல’ என்பன போன்ற நிதிபதிகளின் கருத்துக்கள். இதற்குப் பதிலாக, ‘‘தன் கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்வது குற்றமல்ல’’ என்று கருத்தை சொல்லி கைது செய்யாமலேயே விட்டுவிடலாமே! இப்படி விட்டு விட்டால் தாங்கள் நினைத்த பாலியல், பணம்பறிப்பு உள்ளிட்ட கள்ளக் காரியங்களைச் செய்ய முடியாதே, அதான்!!
காவலூழியர்கள், அரசுப் பொய்யர்கள், நிதிபதிகள் என அனைவருமே மதில்மேல் பூனையாகத்தான் இருப்பார்கள். தங்களின் எண்ண நிறைவேற்றலுக்கு தக்கவாறு, மயிருக்கு உதவாத காரணத்தைச் சொல்லி, எப்பக்கம் வேண்டுமானாலும் குதித்து விடுவார்கள்.
நாங்கள் தெய்வமாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இப்படியெல்லாங்கூட செய்வார்களா அப்பாவியாக கேட்காதீர்கள். என்னிடம் உள்ள ஆதாரங்களை எல்லாம் பார்த்தால், அடப்பாவிகளா என்பீர்கள்.
ஆமாம், விபச்சாரிகள் கைதுசெய்யப்பட்டால், அவர்களுக்கு பொய்யர்கள் எப்படியெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு பிணை மனுவை தாக்கல் செய்து, பிணையில் வந்ததும் அவர்களை வைத்து கள்ளக்குடும்பம் நடத்துவார்கள்..,
தங்களுக்கு மேலான நிதிபதிகளின் எங்களின் ஊழியப்பொறுப்பு பகுதிக்கு வந்தால், அவர்களுக்கு மது, மாது உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்டு, நிதிபதிகளிடம் நிலவும் பல்வேறு சங்கதிகளை பற்றியெல்லாம், அந்நிதிபதிகளால் பாதிக்கப்பட்ட நிதிபதியொருவர் எனக்கு ஒலி ஒளி பேட்டியே கொடுத்துள்ளார்.
இப்படியெல்லாம் நடக்கும் என்பது தெரிந்தால், யாரும் அவ்வளவாக கள்ளக்காதலில் ஈடுபடமாட்டார்கள், ஈடுபட்டாலம் கொலைச் செய்யும் அளவிற்கு போகமாட்டார்கள். ஆனால், இதையெல்லாம் ஆராய்ந்து எடுத்துச் சொல்லத்தான் ஆட்கள் இல்லையே ஒழிய, இதுபோன்ற செய்திகளை மூலதனமாகக்கொண்டு பணம் பறிப்பவர்களே அதிகம்.
கள்ளக்காதலில் ஆண்கள் புத்திசாலி என்றால், பெண் அதிபுத்தி சாலிகள். ஆகையால், கள்ளக்காதலை கண்டுக்கொள்ளாமல் இருப்பதே இன்பம்.
இல்லையேல், அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் கொலைச் செய்யப்படுவார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். மொத்தத்தில் மூவரின் வாழ்க்கை முடிந்தது.
இதுகுறித்த விரிவான விவரங்களுக்கு நீதியைத்தேடி… சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் படிக்கலாம்.
நீதியைத்தேடி… சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களைப் பெற 9842909190 என்ற உலாப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளுங்கள். சட்டமறிந்து, சந்தோசமாய் வாழுங்கள்.

சேர்க்கை நாள் 02-03-2018

இவளுகளுக்கு எத்தனை ஆண்கள் தேவைப்படுவர்


வழக்கமாக கள்ளக்காதலில், ஒருவர் கொள்ளப் படுவார். இருவர் சிறைக்கு செல்வர். ஆனால், இங்கு கொல்லப்பட்டது குழந்தை. 
ஆகவே, இருவரின் வாழ்க்கை சிறைத்தண்டனையில் இருந்து தப்பித்தாலும், குழந்தை இழப்பு என்ற தண்டனையில் இருந்து தப்ப முடியவில்லை.
ஏற்கெனவே கணவனை இழந்தவள் தன்னை விட ஐந்து வயது குறைவானவனை திருமணம் செய்திருக்கிறாள். ஆனாலும், 27 வயது இளைஞனுடன் கள்ள உறவு வைத்திருக்கிறாள். 
இவளுகளுக்கு எல்லாம் எத்தனை ஆண்கள்தான் தேவைப்படுவார்களோ, தெரியவில்லை!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, June 8, 2016

நிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள், ஓர் எச்சரிக்கை!கீழ்கண்டவாறு Nanjil K Krishnan என்ற முகநூல் அன்பர், நீதியைத்தேடி… நூல்களைப் பெற தான்பட்ட சிரமம் குறித்தும், தேவையில்லாமல் பத்தாயிரம் ரூபாய் செலவிட்டது குறித்தும் பதிவிட்டுள்ளார். அப்பதிவின் முக்கியப் பகுதி இதுதான்!
******
//கிரி லா புக் ஹவுஸ் , ATC. புக் சென்டர், நண்பர் சிக்கல் சிவபாரதி உள்ளிட்ட. சட்ட புக் விற்பனையாளர்களிடம் இருந்து பல சட்ட நூல்களை வாங்கி படித்தேன்.
நண்பர் ஒருவர் “வாரண்ட் பாலா ” அவர்களின் நீதியைத்தேடி நூலினை எடுத்து வந்து அதில் குறிப்பிட்டுள்ள ஒருசில சட்டப் பிரிவுகளை காட்டினார்.
இந்த புத்தகம் எங்கு வாங்கினீர்கள் என்றேன் ?
சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வாங்கினேன் என்றார்.
கொடுங்கள் படித்து விட்டு தருகிறேன் என்றேன். அவர் தர மறுத்து விட்டார்.
இன்னொரு நெருங்கிய நண்பர் ஒருவர் மனுக்கள் எழுதும் போது பல சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு எழுதுவார்.
ஆனால் வாரண்ட் பாலா அவர்களின் நூலினை பார்த்து தான் எழுதுகிறார் என என்னிடம் தெரிவிக்க வில்லை.
செந்தமிழ் கிழார் அவர்களின் ஒருசில நூல்களும் கிடைத்தது.
ஆனால் வாரண்ட் பாலா அவர்களின் நூல்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
இந்நிலையில் ஒரு சட்ட பயிற்சி வகுப்பில் நண்பர் ஒருவர் வாரண்ட் பாலா அவர்களின் நூல்கள் கிடைக்கும் கேர் சொசைட்டி முகவரி கொடுத்தார்கள் .
கேர் சொசைட்டி மூலம் நீதியைத்தேடி ஐந்து புத்தகங்களை வாங்கி படித்தேன்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய்க்கு மேல் வாங்கி படித்த சட்ட புத்தகங்கள் அனைத்தும் வெறும் 500 ரூபாயில் எப்படி சாத்தியம்?
அனைத்து சட்ட விளக்கங்களுடன் சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் தெள்ளத் தெளிவாக. இப்படி ஒரு நூலா?
அதுவும் குறைந்த விலையிலா?
நீதியைத்தேடி நூல்கள் புத்தக வாசிப்பு சாலைகளிலா?
பல சட்ட பயிற்சியாளர்கள் வாரண்ட் பாலா அவர்களின் நூல்களின் மூலம் தான் தங்களை “சட்ட ஆர்வலர்கள்” என பீற்றி கொள்வது தெரிய வந்துள்ளது.//
******
உண்மைதான். இக்காலத்திலும் நீதியைத்தேடி… நூல்களை வாங்க இவ்வளவு சிரமப்பட்டுள்ளாரா என்பதை அறியும்போது, ‘‘சுயநல முட்டாள்கள் இருக்கும் வரை, எளிதாக கிடைக்கக்கூடிய எது ஒவ்வொன்றுக்காகவும் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும்’’.
இப்படித்தான், எச்சிக்கலும் இல்லாமல் எளிதாக வாழ வேண்டிய வாழ்க்கையை கோடான கோடி மடங்கு சிக்கல்களுக்கு உள்ளாக்கி விட்டனர். இச்சிக்கல்களில் மட்டுமல்லாமல், எச்சிக்கலில் இருந்தும் வெளிவர உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில்தான், எனக்கு நன்றாகத் தெரிந்தவைகளை எல்லாம் நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இவரது இப்பதிவால் முகநூல் அன்பர்கள் சிலர் நீதியைத்தேடி… நூல்களை எளிதாக வாங்கி விட்டனர். இப்படி வாங்கியவர்கள், உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.
இவர்களும் படித்துவிட்டு, படித்ததில் தங்களுக்குப் பிடித்த முக்கியச் செய்திகளைப் பதிவிட்டால் பலரும் பயனடைவார்கள் என்பதோடு, கீழே விளக்கிச் சொல்ல உள்ளது போன்று பெரும்பணத்தை இழக்க நேரிடாது.
சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, கைதிகளுக்கு கூட நீதியைத்தேடி… நூல்கள் எளிதாக கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான், மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதி குறைந்ததாக இருந்தாலும், மேலும் நிதியை திரட்டி போதுமான நூல்களை அச்சடித்து, அனைத்து பொதுநூலகங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் கொடுக்கிறோம்.
இன்னுஞ் சொல்லப்போனால், கைதிகள் யாராவது கேட்டால், அவர்களுக்கு இலவசமாக அனுப்புவதற்கென்றே 2007 ஆம் ஆண்டில் அச்சிட்ட நீதியைத்தேடி… பிணையெடுப்பது எப்படி நூலில் பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டோம்.
சட்ட ஆர்வலலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லோருமே நீதியைத்தேடி… நூல்களைப் படித்தவர்களோ அல்லது எனது சட்டப்பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டவர்களோ அல்லது இவ்விரண்டையும் ஒறுங்கேப் பெற்றவர்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதில் சிலர் தன் பெயரில் வாங்காமல் தங்களது மனைவி அல்லது வேறொருவரின் பெயரில் திருட்டுதனமாக வாங்கிப் படிப்பது குறித்தும், ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் எழுதியுள்ளேன்.
இன்னுஞ் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லப்போனால், ‘‘அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்’’ என காத்திருந்தவர்களுக்கு 2010 ஆம் ஆண்டோடு சட்ட ஆராய்ச்சியை முடித்து வெளியேறி விடுவேன் என 2008 ஆம் ஆண்டில் நடந்த நீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக அறிவித்தப் பிறகு, கிளம்பிய அடிமுட்டாள்கள்.
இவர்கள் என்னுடைய தொடர்பில் இருக்கும்போதே, பலரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் பல உள்ளன. இனியும் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே, அவற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாக தொகுத்து வெளியிடலாமா என்றே எனத் தோன்றுகிறது.
இத்தறுதலைகள் நமக்குள்ள மதிப்பும், பிழைப்பும் நாறிவிடும் என்பதற்காக, நீதியைத்தேடி… நூல்கள் குறித்து வெளியில் சொல்லுவதே இல்லை என்பதோடு அடிப்படையில் தேவையான சட்ட நூல்கள் குறித்தும் சொல்வதில்லை. நீதியைத்தேடி… நூல்களில் அடிப்படைச் சட்ட நூல்கள் குறித்து தெளிவாகவே எழுதியுள்ளேன்.
மாறாக, பொய்யர்களுக்கு வழக்காளிகளைப் பிடித்துத் தரும் புரோக்கர்களாக மாறியும், இதே புரோக்கர் அடிப்படையில் பொய்யர்கள் தங்களின் பிழைப்புக்காக எழுதிய, ஒவ்வொருவருக்கும் தேவைப்படாத சட்டஞ் சார்ந்த நூல்களையும், சட்டங் குறித்து விவரமறிய வருவோர் தலையில், விவரத்தைச் சொல்லாமலேயே கட்டிவிட்டு விற்க ஆரம்பித்து சம்பாதித்து வருகின்றனர்.
இதன் விளைவாகத்தான் அன்பர் Nanjil K Krishnan அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, எதற்குமே உபயோகமில்லாமல் ஆயிரக்கணக்கான ரூபாய்களை, இவரைப்போன்றே ஆயிரக் கணக்கானோர் இழந்துள்ளனர்.
எனவே, சட்ட விழிப்பறிவுணர்வு குறித்து பேசுவோர் யாராக இருந்தாலும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது உங்களின் பொறுப்பே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

தமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!


இன்றும், ஆங்கிலத்தில் செல்போன் என்பதற்கு தமிழில் செல்பேசி, அலைபேசி, உடன்பேசி போன்ற காரணப் பெயர்களை சொல்லுகின்றனர்.
‘நாம் எங்கெல்லாம் உலாவுகிறோமோ, அங்கெல்லாம் பேச முடியும்’ என்பதால், இதனை ‘‘உலாப்பேசி’’ என பத்தாண்டுகளுக்கு முன்னரே மொழிப் பெயர்த்து நீதியைத்தேடி… குற்ற விசாரணைகள் நூலிலேயே எழுதினேன்.
இதனை விடுதலை நாளிதழில் மதிப்புரையில் குறிப்பிட்டும் பாராட்டியும் எழுதியிருந்தார்கள். இந்த உலாப்பேசி என்ற வார்த்தையை தாராளமாகப் பயன்படுத்தி பழக்கப்படுத்துங்கள். இப்படி புதிதாக அர்த்தம் தரக்கூடிய தமிழில் இல்லாத சில சொற்களை வடிவமைத்துள்ளேன். அவைகளையும் பயன்படுத்துங்கள்.
இதனை வெகுவாகப் பாராட்டிய தமிழ் வெறியர் ஒருவர்,ஒரே ஒரு வார்த்தையில் மட்டும் அவரது கொள்கை ரீதியாக முரண்பட்டார். அதனால், ‘தமிழில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் நீங்கள் புதிதாக உருவாக்கக்கூடாது’ என்றார்.
ஏன் என்றேன்?
தமிழில் இல்லாத வார்த்தை இது. தமிழ் இலக்கணப்படி, இவ்வார்த்தை சரியன்று என்றார்.
சரி என்று சொல்லி, அந்த வார்த்தையை எதற்காக உருவாக்கினேனோ அதன் கருப்பொருள் விளக்கத்தை எடுத்துரைத்து, ‘இந்தப் பொருளில் என்ன வார்த்தையை தமிழில் வைத்திருக்கிறீர்கள் என்றேன்?’
நான் வந்த வேலையை உங்களுக்கு முடித்து தந்துவிட்டு போகும்போது இறுதியில் சொல்கிறேன். ஆனால், ‘நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்’ என்று சொன்னவர், பலமுறை கேட்டும் இன்றுவரை சொல்லவே இல்லை. இனியும், இறுதிவரை சொல்லப் போவதுமில்லை. 
ஏனெனில், நான் உருவாக்கிய வார்த்தைக்கு நிகரான அர்த்தமுள்ள வார்த்தை தமிழில் இல்லை என்று உறுதியாகச் சொல்லுவேன். இந்த வார்த்தையை தற்போது நான் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறேன். ஆகையால், அது என்ன வார்த்தை என்பதை நீங்களே யூகிக்கலாம்.
வெறி பிடித்தவர்களைப் போல, நான் வெளி பிடித்து வெட்டி வேலைகளைச் செய்வதில்லை. சமூகத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை மட்டுமே செய்கிறேன். இதில் சட்டம் மட்டுமன்று; எனக்கு நன்றாகத் தெரிந்த எல்லாவற்றிலும் செய்கிறேன்.
உண்மையை உடைத்துச் சொல்வதைத்தவிர, ‘வேறெதிலும் நான் எதிலும் வெறித்தனங் கொண்டவன் அல்ல’. அவ்வளவே!
இதேபோல, ஒரு வார்த்தையை (உண்மைக்காக உ(ய)ரிய) அதன் கருப்பொருள் மாறுபடும் வகையில், இரண்டு விதமாகப் பிரித்தும் சேர்த்தும் எழுதுவதை அறிந்திருப்பீர்கள். இதையெல்லாம் வெகுசிலர் மாத்திரமே பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் தாராளமாகப் பயன்படுத்திப் பாருங்கள். உங்களின் எழுத்தாற்றல் சிறக்கும்.
இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு வார்த்தையாக தட்டச்சு செய்வதற்குப் பதிலாக கூகுலில், ஓரிரு எழுத்துக்களை தட்டச்சு செய்தாலோ, அது தொடர்பான வாக்கியங்கள் தானாகவே வரும். ஆகையால் எளிதில் எழுதி முடித்துவிடலாம் என்று, அதன்பால் அடிமைப்பட்டுக் கிடக்கும் 100க்கு 90% பேரில் சிலர் அறிவில்லாத்தனமாக அறிவுருத்துகிறார்கள்.
இப்படி அடிமைப்பட்டுக் கிடப்பதில் தமிழ் வெறியர்களும் உண்டு.
மேற்சொன்னவாறு நான் எழுத நினைக்கும் வார்த்தைகள் கூகுலில் கிடைக்குமா?
தமிழனுக்கு தன் தாய்மொழியில் எழுதத் தேவையான வார்த்தைகளை ஆங்கிலேயன்தான் உருவாக்கித் தரவேண்டுமா என்ன? அவன் உருவாக்கி தருவதுதான் அர்த்தமுள்ளதா, அழகானதா?!
தனக்குத் தேவையான அர்த்தமுள்ள, அழகான வார்த்தையை வடிவமைக்க என்னைப்போன்ற சராசரி தமிழனுக்கு தகுதியில்லை என தமிழ்வெறியர்கள் நினைக்கிறார்களா??
தமிழ் வெறியகர்ளே சிந்திக்காத இச்சிந்தனைகளைகள் எல்லாம், மிகவும் லாபகரமான முறையில் சம்பாதிக்க நினைக்கும் கூகுலின் நிர்வாக இயக்குனருக்கு இருக்குமா என்ன???
இப்படியே போனால், கூகுலில் உள்ள தமிழ் வார்த்தைகளைத் தவிர மற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற தடை உத்தரவு வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை!!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, June 5, 2016

உங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்!


பலரும் எனது சட்ட ஆலோசனை தேவை என்கி(றீ, றா)ர்கள்.
எனது சட்ட ஆலோசனைகள் என்னவோ அதைத்தான் நூல்களில் எழுதியுள்ளேன். வேறென்ன ஆலோசனை தேவையென்றால் வழக்கிற்கான சட்ட ஆலோசனை என்கி(றீ, றா)ர்களே ஒழிய, நூலில் எழுதியுள்ளது புரியவில்லையென யாரும் சந்தேகம் கேட்பதில்லை.
காரணம் என்னவென ஆராய்ந்தால், நூல்களை யாரும் வரிசைக்கிரகமாக நான் சொல்லும் அறிவுரைப்படி படிப்பதில்லை. மாறாக, தங்களுக்கு தேவையான விடயம் எங்கே இருக்கிறது என ஆங்காங்கே தேடித்தேடி படிப்பதுதான்.
இதனை இன்னும் பச்சையாகச் சொல்லப்போனால்,‘‘எழுதியவன் முட்டாள்; படிக்கும் நாமே புத்திசாலி’’என்று தானே அறியாத மனோபாவத்தில் படிப்பவர்கள்.
இன்னுஞ் சிலர், பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது அப்பா, அம்மா அல்லது ஆசிரியருக்காகவே படிக்கிறோம் என்ற எண்ணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு படித்தார்களே அதுபோல, எனக்காகவே எனது நூல்களைப் படிப்பதுபோல் எண்ணுகிறார்கள்.
பொதுவாக நூல்களை எழுதுபவர்கள் யாரும் அதில் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையே போக்க முன்வருவதில்லை என்பதோடு, அவர்களோடு பேசுவதோ அல்லது இதுபோன்று உரையாடுவதோ கூட கடினம். இந்த நிலையில், எனது நூல்களில் ஏற்படும் உங்களின் சந்தேகங்களைப் போக்க நான் தயாராக இருக்கிறேன்.
இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி தேவையான தெளிவைப் பெற முன்வராமல், ‘‘எனக்கிருக்கும் அதிகபட்ச அறிவில் சட்ட ஆலோசனையைக் கேட்டு உங்களால் எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியாது’’என்பதை பல்வேறு விதங்களில் ஆராய்ந்து, இவற்றை நூல்களிலும் எழுதியுள்ளேன்.
எனவே உ(ய)ரிய நன்கொடை கொடுத்து வாங்கிய நூல்களை ஒழுங்காகப் படித்திருந்தால், இதெல்லாம் சாதாரணமாகப் புரிந்திருக்கும். இனியாவது, புரிந்துக் கொண்டால், உங்களது பிரச்சினைகள் தீர்வதற்கான வழிபிறக்கும்.
இல்லையேல், உங்களது (நல், பண)வரவுக்காகவே காத்துக் கிடக்கிறார்கள் பொய்யர்கள். இப்பொய்யர்களிலும் நல்லப் பொய்யர் தேவையென்றால், சட்ட ஆர்வலர்களின் சந்திப்புக்குச் சென்றால், அங்கே பொய்யர்களுக்கான புரோக்கர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் அமர்த்தித்தருவார்கள்.
இவர்களுக்கெல்லாம் பணங்கொடுக்கனுமே, அதுகென்ன பண்றதுங்கிற கவலையும் உங்களுக்கு வேண்டாம். எங்களிடம் வாங்கிய நூல்களை அப்படியே பத்திரமாக திருப்பி அனுப்பிவிட்டு கொடுத்த நன்கொடையைப் பெற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் திருப்பிக் கொடுக்கும் நூல்கள் நிச்சயமாக, தன் பிரச்சினையை தானே தீர்க்க முயலும் வேறு யாருக்காவது பெரிதும் உதவும்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

(இ, அ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்!


நம் நீதியைத்தேடி… நூல்கள் ஓசூரில் இருந்து மட்டுமே அனுப்பி வைக்கப்படும். பிரபல சட்டப் புத்தக கடைகள் உள்ளிட்ட வேறெங்கும் கிடைக்காது.
சென்னையில் உள்ள சீத்தாராமன் அன்கோ கடையில், பல வாசகர்கள் வாரண்ட் பாலாவின் நீதியைத்தேடி… நூல்கள் இருக்கிறதா என கேட்கவே, அவர்கள் அப்படியொவரை நாங்கள் கேள்விப்பட்டதே கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்.
காவல் ஆய்வாளர் ஒருவர், காவல் நிலையங்களுக்கு கொடுத்திருந்த நீதியைத்தேடி… பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலை கையோடு எடுத்துச் சென்று கேட்கவே, அதிலிருந்த நம் முகவரிக்கு கடிதம் எழுதினார்கள்.
அதன் பேரில் கையிருப்பில் இருந்த நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்தோம். அவர்களும் உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தங்களது பிரிவுக்கடையில் மிகுந்த ஆர்வத்தோடு, இந்நூல்கள் எல்லோருக்கும் தெரியவேண்டுமென விரும்பிப் பணப்பரிவர்த்தை நடைபெறும் இடத்தில் விற்பனைக்கு வைத்துவிட்டார்கள்.
இக்கடையில் அதிகமான நூல்களை வாங்குவோர் பொய்யர்களே ஆவர். அவர்களில் ஏதோவொரு கத்துக்குட்டி பொய்யர், நீதியைத்தேடி… சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலின் அட்டைப்படத்தில் உள்ள, ‘‘வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!’’ என்ற தத்துவத்தை படித்துவிட்டு…,
எங்களை நம்பித்தான் உங்களின் பிழைப்பு ஓடுகிறது. அப்படியிருக்கையில் எங்களுக்கு எதிரான கருத்தைச் சொல்லும் நூலை நீ எப்படி விற்கலாமென தாட்பூர் தஞ்சாவூர் என குதிக்கவே, அவர்கள் எதுக்குடா வீண் வம்பென உள்ளே எடுத்து வைத்து விட்டார்கள்.
தங்களின் பிரச்சினையை தாங்களே தீர்த்துக் கொள்ள முடியாத பொய்யர்கள், உங்களுக்காக வாதாடுகிறோம் சட்ட விழிப்பறிவுணர்வில்லாத மக்களை ஏமாற்றும் கொள்ளையர்கள் ஆயிற்றே!
உண்மையில், இவர்களுக்கு தைரியமிருந்தால், இதனை எழுதிய என் மீதல்லவா வழக்குப் போட்டிருக்கனும்!! இதனைச் செய்ய வக்கில்லாமல் வியாபாரிகளைப் போய் மிரட்டினால், அவர்கள் வேறென்ன செய்வார்கள்?
இந்ந நூலில்தான் “நிதிபதிகள் கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகள்” என்றும் எழுதியுள்ளேன் என்பதோடு, இந்நூலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிதிபதிகளுக்கும் படிக்கவும் கொடுத்துள்ளோம்.
அவர்களே மூடிக்கொண்டு கம்முன்னு இருக்கும்போது பொய்ய ரொருவர் குதிக்கிறார் என்றால், எல்லாப் பொய்யர்களையும் கூட்டி வந்து தகராறு செய்யலாம் என்ற கோழைத்தனத்தை தவிர வேறென்ன?
மேலும், நம் நீதியைத்தேடி… நூல்கள் மறைத்து வைத்து படிக்க வேண்டிய மஞ்சல் பத்திரிகைகள் அல்லவே!
மாறாக, அனைவரும் படிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியைப் பெற்றல்லவா அனைத்து நூலகங்களுக்கும், நிதிபதிகளுக்கும் சிறைச்சாலை கைதிகளுக்கும் வழங்குகிறோம்.
பதிப்பகங்கள் தானே முன்வந்து பதிப்பிக்க வேண்டுமென்பதற்காக பதிப்புரிமையை பொதுவுடைமை எனவும் அறிவித்துள்ளேன். ஆனால், யாருக்கும் வெளியிடும் தைரியமில்லை. இதைப்பற்றி எழுதினால், ஒரு சிறு நூலே எழுதலாம்.
எனவே, ஆர்வம் உள்ளவர்கள் உங்களது பகுதியில் உள்ளவர்களுக்கு, முன் பணத்தை செலுத்தி மொத்தமாக வாங்கி வைத்து கொடுக்கலாம். திருப்பியும் கொடுக்கலாம். இதற்கு எத்தனை பேர் தயாரா இருக்கீங்க?
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, June 2, 2016

துப்பில்லாத நிதிபதிகள்!


கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய சங்கதிகள் குறித்து, டி.கே. பாசு வழக்கில் சொன்னவை எல்லாம் பின்பற்றப்படுகிறதா என அந்தந்த மாநில அரசுச் செயலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்ற நிதிபதிகள் உத்தரவிட்டிருப்பதாகவும், இது வரவேற்கத்தக்கது என்ற ரீதியில், சமூக ஆர்வலர்கள் என்றப் பெயரில் அலையும், சட்ட அறிவில்லாதவர்கள், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய சாசனக் கோட்பாடு 141 இன்படி, தாங்கள் சொல்லுந் தீர்ப்பானது, சட்ட விதிகளில் இல்லாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில், இந்திய சாசனக் கோட்பாடு 142 இன்படி, அத்தீர்ப்பினை பாராளுமன்றம் அல்லது குடியரசுத்தலைவர் சட்டமாக அறிவிக்க வேண்டுமென கேட்க வேண்டும்.
இப்படி அறிவிக்கப்பட்ட மற்றும் மத்திய அரசால் இயற்றப்பட்ட மத்திய சட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்துகின்றனவா என்பதை, மத்திய அரசின் நிர்வாகத்தை அதிகாரமுள்ள குடியரசுத் தலைவரோ அல்லது அவருக்காக ஊழியம் புரியும் மத்திய சட்டத்துறை செயலர்கள்தான் கண்காணிக்க வேண்டும்.
இன்னுங் கொஞ்சம் வெளிப்படையா புரியிற மாதிரி சொல்லனும்னா, உங்களது அதிகார ஆவணங்களை நீங்கள்தானே பாதுகாப்பீர்கள்! அடுத்தவர்கள் பாதுகாக்க மாட்டார்கள்தானே? ஆகையால், உச்சமட்ட நிதிபதிகளின் உத்தரவை, கீழ்மட்ட நிதிபதிகள்தானே கண்காணிக்க வேண்டும்??
ஆனால், இதனைச் செய்வதில்லை என்பதோடு, தங்களின் தீர்ப்பு சட்டமாக இயற்றப்பட வேண்டுமென எந்த கூறுகெட்ட நிதிபதிகளுஞ் சொல்வதில்லை.
மேலும், இப்படி சொல்லமுடியாததற்கு காரணம், நிதிபதிகளே சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்லாமல், தங்களைப் போன்ற கூறுகெட்ட நிதிபதிகள் ஒவ்வொருவரும் மனம் போன போக்கில் சொன்னத் தீர்ப்புகளில் இருந்து, கர்நாடக உயர்நீதிமன்ற நிதிபதி கூட்டல் குமாரசாமி போல, தாங்கள் வாங்கிய லஞ்சத்துக்கு ஏற்றபடியுள்ள தீர்ப்புகளை மேற்கோள் காட்டியல்லவா தீர்ப்புரைக்கிறார்கள்.
கோடிக்கணக்கான வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் ஒன்றிரண்டு இருந்தாலே பெரிது. மற்றவை எல்லாம், ஏதோவொன்றைக் கொடுத்து வாங்கப்படுந் தீர்ப்புகளே!
ஆகவே, நாங்கள் பிறப்பித்த உத்தரவு சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து, அந்தந்த மாநிலத்தின் செயலர்கள் பதிலலிக்க வேண்டுமென உத்தரவு போடுவார்கள்.
ஏனெனில், மத்திய அரசுச் செயலர்கள் உச்சநீதிமன்ற நிதிபதிகளின் உத்தரவுகளை அவ்வளவாக மதிப்பதில்லை. அதனால், மாநில அரசுச் செயலர்களை மட்டுந்தான், இப்படியெல்லாம் மிரட்டிப் பார்க்கலாம் என எண்ணத்தோன்றும். இதேபோல, மாநில அரசுச் செயலர்கள், உயர்நீதிமன்ற நிதிபதிகளின் உத்தரவுகளை மதிப்பதில்லை.
இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால், ‘‘இந்நிதிபதிகள் எப்படி குறுக்கு வழியில் பதவிக்கு வந்தார்கள்’’ என்பது, எல்லா அரசுச் செயலர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதுதான்.
அரசுச் செயலர்களுங்கூட அப்படித்தான் குறுக்கு வழியில் பதவிக்கு வருகிறார்கள் என்றாலுங்கூட, பல்வேறு பாட்டங்களை உடைய இந்திய ஆட்சிக்கான ஊழியத்தேர்வில் தேர்ச்சி பெற்றல்லவா வருகிறார்கள். இது அவர்களுக்கான அடிப்படைத் தகுதியாகி விடுகிறது. ஆனால், நிதிபதிகள் சட்டத்திலேயே தேர்வதில்லை. இதுபற்றி, நீதியைத்தேடி… சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலில் எழுதியுள்ளேன்.
மேலும், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழான தண்டனைகளை, நிதிபதிகள் சாதாரண பொதுமக்களுக்குத்தான் நிறைவேற்ற முடியுமே தவிர, அரசுச் செயலர்கள் மட்டத்தில் அன்றன்று; சாதாரண அரசூழியரிடம் கூட செயல்படுத்த முடியாத அளவிற்கு துப்புகெட்டவர்கள் என்ற நிலையில்…,
எந்த அரசுச் செயலரும், ‘‘நீங்கள் பிறப்பித்த உத்தரவுகளை எங்களது மாநிலத்தில் பின்பற்றவில்லை’’எனப் பதில் சொல்ல முட்டாள்கள் அல்லவே. எனவே, மாநில அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாட நியமிக்கப்பட்டுள்ள அரசுப் பொய்யர்களின் ஆதரவோடு, தெளிவானதொரு பொய்யறிக்கையை தாக்கல் செய்துவிடுவார்கள்.
ஆகையால், இந்த வழக்கைப் பொறுத்தவரை, குடிமக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா என ஆராய்ந்தால், மயிரளவிற்கு கூட பயனில்லை. மாறாக, கோடிக்கணக்கான பணமும், நேரமும்தான் விரயம்.
ஆனால், என்னைப் படைத்த இயற்கைக்கே இல்லாத அதிகாரங்கள் கூட, தங்களுக்கு இருப்பதுபோல பெற்றுப் பீலாக்க(லை, ளை) விட்டு அற்பத்தனமான ஆனந்தத்தை அடிமை நிதிபதிகள் அடைகிறார்கள். அவ்வளவே!
சரி, இதற்கு நம்ம பாணியில தீர்வென்ன எனக் கேட்டால், நாங்கள் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்படவில்லை எனில், எங்களுக்கு தகவல் சொல்லுங்கள் என நிதிபதிகள், மக்களை கேட்டுக் கொள்வது மட்டுந்தான். நிதிபதிகளே கேட்கவில்லை என்றாலுங்கூட, முறையற்ற கைதால் பாதிக்கப்பட்டவர்கள் நிதிபதிகளுக்கு நேரடியாகவே பதில் சொல்வதுதான்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)