‘அரசு என்பது, மக்களுக்குச் சேவை செய்யத்தான்’என்ற தவறான நிலைப்பாடு மக்களிடத்தில் நிலவி வருகிறது. மக்களுக்குள் சேவைக்கான தேவை இருக்கும்போது, எப்படி மக்கள் உற்ற உறவுகளுக்குள்ளும், நட்புகளுக்குள்ளும், நம்மைப் போன்ற முகந்தெரியாதவர்களுக்குள்ளும், அச்சேவைத் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்களோ, அப்படியே தங்களுக்கு உள்ளேயும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
அரசு என்பது, பெயரளவிற்கான ஏமாற்று அமைப்புதான். ஆமாம், எந்தவோர் அமைப்பும் அதன் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகத் தான் செயல்படும் என்பதை, பல இடங்களில் சொல்லியிருந்தாலுங் கூட, மிகமுக்கியமாக ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் சொன்னது நினைவிருக்கும்.
உண்மையில், வக்கற்ற அரசுக்கு வாக்களித்தும், வரி செலுத்துவதன் மூலமும், மக்களே, அல்ல அல்ல; பிச்சைக் காரர்கள்கூட, அரசுக்குச் சேவையைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்களே ஒழிய, பிச்சைக்காரர்கள் என்ற பெயரைக் கொடுத்ததைத் தவிர எதையும் அரசு, இவர்களுக்குச் செய்த தில்லை. ஆனாலுங்கூட, அப்படிச் செய்வதுபோல காட்டிக் கொள்வது, வரிச்சட்டப்படி கொள்ளையடித்த கோடான கோடியில், அற்பத்தனமான சில்லரைகளைச் செலவழிப்பதே ஆகும்.
ஆகையால், இதனையெல்லாம் மறைக்கவும், தட்டிக் கேட்காமல் தடுக்கவும், சட்டப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு எதிராகப் போராடுவது குற்றமென, அரசு தனக்குத் தானே சட்டஞ்செய்து வைத்திருக்கிறது. இதனை நிறைவேற்ற வேண்டியது, பெ(று, ரு)ங் கூலிக்கு மாரடிக்கும் நிதிபதிகளின் பொறுப்பு.
மொத்தத்தில், அரசு என்பதும், அரசின் அதிகாரம் பெற்ற அமைப்புக் கள் என்பதும், மக்களுக்குப் பெருந்தொல்லை தரக்கூடியது. ஆகையால், அது தேவையற்றது. அவ்வளவே!
அரசே பெருந்தொல்லையாக இருக்கும்போது, பொதுச் சேவை செய்வதற்காகவே அரசூழியத்திற்கும், ஆட்சி ஊழியத் திற்கும் (குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள்) வருவதாக சொல்லிக் கொள்ளும் எவரும், எவ்வாறு இருப்பார்கள்?
இவர்கள், தங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள் வதற்காகவே வருகிறார்கள். இதற்கான சிறு முதலீடாகத்தான், இலஞ்சங்கொடுத்துக் குறுக்கு வழியில் அரசூழியத்துக்கும், ஆட்சி ஊழியத்திற்கும் வருகின்றனர்.
இதனால், மக்களுக்கான எந்தவோர் ஊழியத்தையும் சரியாகச் செய்யாமல், தங்களால் என்னென்ன கயமைத் தனங்களை அரங்கேற்ற முடியுமோ, அவையனைத்தையும் அரங்கேற்றும் கோமாளிகளாக, வெள்ளையர்களை விஞ்சும் வகையில், அரசூழியர்களும், அவர்கள் நினைப்பவர்களும் மக்களைக் கொள்ளையடிக்கின்றனர், கொள்ளையடிக்கப் பெரிதும் துணை நிற்கின்றனர்.
கீழ்த்தரம், நடுத்தரம், மேல்தரம் என்று பொதுமக்களை மூன்று வகையாக அரசு பிரிப்பது போன்றே, நானும், அரசூழியர்களைக் கீழ்த்தர ஊழியர்கள், நடுத்தர ஊழியர்கள், மேல்மட்ட ஊழியர்கள் என மூன்றாகப்பிரித்து, இந்நூலுக்கென முன்மொழியும் தத்துவமிது!
அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்,
காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!!
வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!!
காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!!
வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!!
ஆமாம், கீழ்த்தர ஊழியர்கள், காரிய அடிமைகள்! நடுத்தர ஊழியர்கள், கயமைக் கோமாளிகள்!! மேல்மட்ட ஊழியர்கள், வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்கள்!!!
பொதுமக்களில் நடுத்தர வர்க்கத்தினரே, எதிலும் பெரிதும் பாதிக்கப்படுவதுபோல, நடுத்தர ஊழியர்களான கயமைக் கோமாளிகளால் பாதிக்கப்படுவர்களே மிகமிக அதிகம்.
இத்தத்துவ விளக்கத்தை முன்வைத்தே, இம்மநு வரையுங் கலை நூலை எழுதியுள்ளேன். மேலும், சத்தியவான் காந்தி யின், ‘இந்தியத் தன்னாட்சி’ நூலில் இருந்து எடுக்கப்பட்டு, மேற்கோளாக இம்மநு வரையுங்கலையின் நூலின் பின்பக்க அட்டையில் தொகுக்கப்பட்டுள்ள கருத்துக்களும், உங்களுக்கு இத்தத்துவ விளக்கத்தின் உண்மையை பல்வேறு விதங்களில் உணர்த்தும்.
எழுத்தாளர்களில் எத்தனையெத்தனையோ வகையினர் இருக்கின்றனர். இவற்றில், தத்துவ எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாத வகையினர். ஒருவரின் வாழ்க்கைக்கு, மற்ற எழுத் தாளர்கள் எந்த அளவிற்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவியலாது.
ஆனால், தத்துவ எழுத்தாளர்கள், நிச்சயமாக ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டிகளாகத்தான் இருப்பார்கள் என்ற வகையில், இத்தத்துவ விளக்கத்தோடு தொடங்கும், இம்மநு வரையுங்கலை நூல், உங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்குமென்பது, என் தீர்க்கமான நம்பிக்கை.
நீதித்துறை சீர்திருத்தத்திற்கான
சட்ட ஆராய்ச்சியாளர்
வாரண்ட் பாலா
சட்ட ஆராய்ச்சியாளர்
வாரண்ட் பாலா
மநு வரையுங்கலை நூலிலிருந்து…
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment