நமது சட்ட விழிப்பறிவுணர்வு வரிசையில் ஏழாவது பெறுநூலாக அன்றன்று; அகராதியாக ‘‘மநு வரையுங்கலை!’’ வெளி வந்துவிட்டது. இந்நூலுக்கு பங்களிப்புத் தொகை செலுத்தியவர்களுக்கு நன்கொடைப் பிரதியென்று அனுப்பி வைக்கப்படும். ஆகையால் நன்கொடை செலுத்தி வாங்க வேண்டியதில்லை.
மற்றபடி தேவைப்படுபவர்கள் நூலுக்கான நன்கொடை 400 + கூரியர் செலவு 50 என மொத்தம் 450 ஐச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
நமது அடுத்த நூலின் தலைப்புதான், தகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா? அரசின் தந்திரமா?!
இதற்கான மத்திய சட்டம் சற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவி அடுத்தாண்டு கிடைக்குமென நம்புகிறோம். மத்திய அரசு நிதி கொடுத்துதான் இந்நூலை வெளியிட வேண்டும் என்றில்லை. நமக்கு வரும் நிதியுதவியைப் பொறுத்து, நாமே வெளியிடலாம்.
எனவே, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவி கிடைத்த ஓரிரு மாதங்களுக்கு உள்ளாகவே இந்நூலை வெளியிடும் பொருட்டு, உங்களின் நிதியுதவியை வழக்கம்போலவே எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
மேலும், சாட்சிய சட்டப்படி சேகரித்த சான்று நகல்கள் மற்றும் சான்று நகல் தொடர்பாக தங்களின் சந்தேகங்கள் ஆகியவற்றைத் தெரிவித்தால், இந்நூலில் தெளிவுபடுத்த ஏதுவாக இருக்கும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment