No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, May 31, 2016

பிரபலமாவது பிரச்சினைக்கு உரியதே!


இத்தலைப்பு 2008 ஆம் ஆண்டில், நான் எழுதி வெளியிட்ட சட்ட அறிவுக்களஞ்சியம் என்னும் நூலில் உள்ள ஒரு தலைப்பாகும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கிறது. ஆனால், தன்னார்வலர்களுக்கு இருக்கும் ஆசையோ, நாம் எப்படியாவது பிரபலம் ஆகவேண்டும் என்பதாகும்.
ஆனால், மேற்சொன்ன நூலில் இதனைப் படித்த சிலர், தாங்கள் பிரபலம் ஆகவேண்டும் என்ற எண்ணத்தையே கைவிட்டு விட்டார்கள். இதனைப் படிப்பதற்கு முன்பாக, அப்படியொரு ஆசை இருந்ததாக அவர்களே என்னிடம் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
எல்லோருக்குமே தன்னடக்கம் தேவையென்றாலுங்கூட, தன்னார்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இத்தன்னடக்கம் மிகமிக அதிகமாக இருக்கவேண்டும்.
ஏனெனில், ‘‘நாம் செய்யவேண்டிய கடமையைச் செய்தால், அதற்கு உ(ய)ரிய பலன் தானே நம்மை வந்து சேரும்’’ என்றப் புரிதல் இவர்களுக்கு இருக்கும் காரணத்தினாலேயே, இவர்கள் தன்னார்வலர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். ஆனால், இதனை உணராத தன்னார்வலர்களே அதிகம் என்பதை நான் நன்கறிவேன்.
இவர்களைத்தான் நான் எனது பாணியில் தறுதலைகள் என்பேன். இத்தறுதலைகளில் தற்போது தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களே அதிகம் என்பேன்.
ஏனெனில், முதலில் இவர்களுக்கு அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வே இருப்பதில்லை. சட்ட ராய்ச்சியாளர் என்ற முறையில் சட்டங்களின் அடிப்படையை ஆராய்ந்து இன்னென்னச் சட்டங்கள் நியாயந்தான் சட்டம் என்ற வரையறைக்குள் வருகிறது. இன்னென்ன சட்டங்கள் நியாயத்திற்கு உட்பட்டதாக இல்லை என்று எடுத்துச் சொல்லும் எதையும் காதில் வாங்குவதில்லை.
ஆனால், எப்படியாவது எதையாவது செய்து பிரபலமாகிவிட வேண்டுமென நினைப்பவர்கள், இவர்களைப் போலவே தறுதலையான தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு சட்டச் சிக்கல்களில் சிக்குகிறார்கள். இதன் மூலம் தாங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்து விட்டதாகவும் நினைக்கிறார்கள். இது உண்மையாகச் சேரும் பலனன்று; மாறாக, அவர்களுக்கவர்களே துடைத்தெறிய வேண்டிய சகதியாகும்.
ஆனால், உண்மையில் இதுபோன்ற தறுதலைகளால், நம் கடமையைச் செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் கூட, நமக்கேன் வம்பென பயந்துக் கொண்டு ஒதுங்கி விடுகிறார்கள்.
நாம் யாரென்பது வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும் என்பதில்லை. நமது கடமை சமூகத்திற்குச் சென்று சேர்ந்தால் போதும். நமக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
இதனைத்தான், ‘‘நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம்! அதிகாரம்!!’’ என்று கடமைமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின் மையத்தத்துவமாக முன்மொழிந்துள்ளேன்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, May 20, 2016

சட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது!


பாலா / ஐயப்பன் அவர்களுக்கு வணக்கம்,
முதலில் எனது குறையானது, தாங்களின் அணைத்து நூல்களையும் படித்து முடிக்கவில்லை
(முதல் நூலான குற்றவிசாரணை படித்துவிட்டேன், தற்பொழுது சட்ட களஞ்சியம் படித்து வருகிறேன்) இடையில் எனது தேவைக்கான சட்ட விளக்கத்தை பொருளடக்கம் மூலம் அணைத்து நூலிலும் தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை (எனது தேடல் அவசரத்தின் காரணமாகவும் விடுபட்டிருக்கலாம், எனது குறைக்கு வருந்துகிறேன்) ஒருவேலை சரியான தேடலாக இல்லாமலும் இருந்திருக்கலாம். அதனால் தங்களின் உதவியை நாடலாம் என்ற கோரிக்கை இது
இது சொத்து சம்பந்தமாக,
எனது தாய்வழி புலத்தில் (தோட்டத்தில்) வசித்து வருகிறோம், அதற்கு நாங்கள் அறிந்த வரை அங்கிகரிக்கப்பட்ட பாதை கிடையாது, அதனால் பக்கத்துக்கு தோட்டத்தின் வழியாக பொது பாதையை அடைந்து வந்தோம், ( இது எனக்கு தெரிந்து 40/50 வருடங்களாக) கடந்த சிலவருடங்களுக்கு( 5 or 6 yrs back) முன்னால் பக்கத்துக்கு தோட்டதுகாரர் பாதை அழித்து விட்டு எங்களையும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் (காரணம் பாதை எழுதித்தர எங்களிடம் பணம்(5 lacs) அளவுக்கு அதிகமாக கேட்டார், அன்றைய மதிப்பு படி 1 acre 1 லட்சம் வரைதான் விற்றது, பாதைக்கு மட்டுமே 5 lacs என்பது சமாளிக்க முடியாத தொகையாக எண்ணி,( மற்றும் இவர் வக்கீல் என்பதால் நாங்கள் இவரை ஒன்றும் செய்யமுடியாது என்று பயந்து விட்டுவிட்டோம்) வேறொருவரிடம் பாதை கேட்டோம்.
அவரிடம் இருந்த புலம் பட்ட நிலம் அல்ல (கோவில் நிலம் என்று சொல்லுகிறார்கள் அதனால் அதை பதிய முடியாது இருந்தாலும் பாதையை பதிய முடியும் என்று சொன்னதின் பேரில் அவரிடம் 3.5 acre எனது பேரில் பத்திரம் எழுதி பாதையை மட்டும் பதிவு செய்தோம். மீதி நிலத்திற்கு பத்திரம் எழுதி உள்ளோம் ஆனால் பதியவில்லை.
கடந்த மாதம் அதிலும் சிக்கல் வந்து உள்ளது,
எங்கள் தோட்டத்தின் வழியாக அவர் எழுதி கொடுத்த பாதையின் எல்லைவரைக்கும் தான் போக முடியும், அதற்கும் மேல உள்ள பாதையானது 4 or 5 பெருக்கு உள்ள கூட்டு பாதை என்கிறார்கள், இந்த கூட்டு பாதையிலும் ஏக போக பாத்தியம் உண்டு என்று பதிவு செய்யப்பட பத்திரத்தில் குறிப்பிட பட்டுள்ளது
ஆனால் மற்ற நபர்கள் கூட்டு பாதையை இவர் மட்டுமே எழுதி கொடுத்து உள்ளார் நாங்கள் அதை ஒப்புகொள்ளவோ எழுதி தரவோ இல்லை, அதனால் எங்களுக்கு பாதைய தடுக்கும் உரிமை உள்ளது என்று தடுத்தும் உள்ளார்கள் (எங்களை நேரடியாக தடுக்கவில்லை மாறாக எங்கள் தோட்டத்திருக்கு வருபவர்களை தடுத்து உள்ளார்கள், எனது தந்தை ஏன் என்று கேட்டதற்கு மேல் கூறியவாறு சொல்லியுல்லார்கள்).
எனது சட்ட தேடல் இரண்டு பகுதியாக உள்ளது
முதல் தேடல்,
ஒரு புலத்திருக்கு சரியான பாதை இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளதா ( இதை சட்டம் அங்கிகரிகிறதா )
தனியார் பாதையின் சட்ட நிர்ணியம் பற்றி எந்த நூலில் தெரிந்து கொள்ளலாம் அல்லது, ஒரு புலத்திற்கு கட்டாயம் பாதை இருக்க வேண்டும் என்று எந்த சட்டத்தின் கீழ் நிர்ணியம் செய்யப்பட்டுள்ளது
இரெண்டாம் தேடல்,
கோவில் நிலம் என்று ஒன்று உள்ளதா ( கிராம நிவாக நூலில் இதை பற்றி பொருளடக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியவில்லை) கோவில் நிலத்தை அனுபவிக்கும் உரிமை உள்ளதா இருந்தால் அதை பெறுவது எப்படி என்றும் தெரியவில்லை
கூட்டு பாதையை கூட்டில் உள்ள ஒருவர் மட்டும் அடுத்தவருக்கு பகிரும் உரிமை உள்ளதா அப்படி உரிமை பங்கீடு வழங்கும் பட்சத்தில் மற்ற கூட்டு உரிமையாளர்கள் புதியவரை தடுக்கும் உரிமை உள்ளதா ?
இதற்கு அப்பால் கடந்த சுமார் 5 ஆண்டு காலமாக அனுபவ உரிமையை கோர முடியமா (கூட்டு உரிமையாளர்கள் எங்களை தடுக்கும் பட்சத்தில்)?
அனைத்தையும் தாண்டி எங்கள் நிலத்திற்கு பாதை கிடையாது என்று தீர்ப்பாகும் பட்சத்தில், ஏதேனும் அடிப்படை உரிமை சட்டம் உள்ளதா
( ஏனேற்றால் சொத்துரிமை இருக்கும் பொது அதை அனுபவிக்க பொது பாதையிலிருந்து தங்கு தடையின்றி செல்ல வழி இல்லை என்றால் அந்த சொத்தை எப்படி நான் உரிமை கொண்டதாக எடுத்துகொள்ள முடியும்)
இதை அனைத்தையும் VAO விடம் கேட்க நினைக்கிறேன் சட்ட விழிப்புரண்வுடன், அதனால் இது தொடர்பான அடிப்படை உரிமை சட்டத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன், எந்த நூலில் இதை பற்றிய சட்ட விளக்கம் இருக்கும் என்பதை எனக்கு உதவுங்கள்.
குறிப்பு,
தகவல்/அறிவு பகிர்வு நோக்கத்துடன் திரு கார்த்திகேயன் அவர்கள் நகல் பெறுபவராக இணைக்கப்பட்டுள்ளார்.
*********
நல்லது. எல்லோரும் செய்யும் தவறைத்தான் நீங்களும் செய்கிறீர்கள். நீங்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.
இல்லையெனில், எங்களது பிரச்சினையையே எங்களால் தீர்த்துக் கொள்ள முடியாமல், ஆர்ப்பாட்டம், போராட்டம், நீதிமன்றப் புறக்கணிப்புச் செய்யும் பொய்யர்கள், உங்களது பிரச்சினைகளை தீர்த்துத்தருகிறோம் என்று மாக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்களே, அப்படித்தான் நானும் ஆகியிருக்க வேண்டும். இல்லையேல், நிதிபதியாகி இருக்க வேண்டும். இப்படியெல்லாம் நானே ஆக விரும்பவில்லை என்றாலுங்கூட, வாசகர்கள் அவ்வப்போது இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு ஆக்கத்தான் முயற்சிக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சினை. அவையெல்லாவற்றையும் நாங்கள் ஆராய்ந்து தீர்வு சொல்லவில்லை. மாறாக, அதனை ஆராய்வதற்கான அடிப்படைச் சட்டங்கள் குறித்த விழிப்பறிவுணர்வை ஏற்படுத்துகிறோம். இவையிருந்தால், அடுத்தடுத்து உங்களுக்கு வரும் எல்லாப் பிரச்சினைகளையும் நீங்களே ஆராய முடியும். அவ்வளவே!
ஆகையால், நம் நூலில் ஏதாவது சந்தேகம் என்றால் தெளிவுபடுத்த முடியுமே தவிர, ஏனெனில், நன்றாகத் தெரிந்த சங்கதிகளைத்தான் எழுதியுள்ளோமே தவிர, தெரியாத சங்களிதகள் குறித்து எழுதவில்லை.
ஆகையால், தங்களின் சட்ட சந்தேகங்களை எல்லாம் தெளிவுபடுத்த இயலாது. இது எங்களால் மட்டுமன்று; எல்லோராலுந்தான் என்பதை, நான் சட்ட ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன்பு, எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விடைகாண எவ்வளவோ முற்பட்டும், காணமுடியாமல் போனதன் விளைவாகத்தான், அடிப்படைச் சட்டங்களைப் போதிப்பது என்ற இக்கொள்கையைக் கையிலெடுத்தேன்.
இதனைத்தான், வேறு விதமாக குற்ற விசாரணைகள் நூலின் ஆய்வறிக்கையில் வேறுவிதமாக சொல்லியுள்ளேன். இப்படி ஒவ்வொருவரும் சரியான புதியப் புரிதல் பாதையை உருவாக்கி, அதுகுறித்த விழிப்பறிவுணர்வு நூல்களை வெளியிட்டால், எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வை எவரும் எளிதில் அடையலாம்.
ஆனால், இப்படி யாருமே புதியப் பாதையை உருவாக்க முன்வராமல், ஏற்கெனவே இருக்கும் பாதையிலேயே கடக்க முயல்வதால், பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.
தீர்த்துக்கொண்ட வெகுசிலரோ அதுகுறித்து தெளிவானதொரு நூலையெழுத முன்வரவில்லை. ஆகையால், இவர்களைப்பற்றியெல்லாம் நான் நூல்களில் எழுதியிருக்கிறேன்.
ஆகையால், உங்களது பிரச்சினைக்குரிய விடயங்களில் எங்களையும் அறிவுவறுமை மிக்கவர்களாகவே கருதுங்கள். இதுவே, உங்களின் தேடுதலுக்கும், விடியலுக்கும் வழிவகுக்கும் என்பதை, எனது அனுபவத்தேடலில் சொல்கிறேன். இதை விட்டுவிட்டு எனக்கு மட்டுந்தான் எல்லாந்தெரியும் என்ற முடிவுக்கு தாங்கள் வந்து விட்டால், இதனால் நிச்சயம் உங்களுக்குப் பலனில்லை.
முதலில், அவசரப்படாமல் உ(ய)ரிய விலை கொடுத்து வாங்கிய நூல்களைப் பொறுமையாக வரிசையாகப் படியுங்கள். முதல் நூலுக்குப்பிறகு மூன்றாவது நூலுக்குப் போய்விட்டது தவறு. இரண்டாவது நூலில் உங்களுக்கு பயன்படும் தகவல் எதுவுமே இல்லையென்று நீங்களாகவே எப்படி முடிவு செய்தீர்கள். அதிலும் உரிமையியல் சார்ந்த பல சங்கதிகள் உள்ளன.
எனவே, ஆங்காங்கே உங்களுக்கு தேவைப்படும் கருத்துக்கள் வரும்போது, அவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு பயன்படுத்துங்கள். 40 ஆண்டுகாலம் பொறுமையாக இருந்த நீங்கள், நான்கைந்து நூல்களைப் படித்து முடிக்கும் வரை பொறுமையாக இருக்கக்கூடாதா?
உங்களுக்கு இதற்கான நேரம் இல்லாதபோது, அப்பா உள்ளிட்ட அச்சொத்துக்கு உரிமையுள்ளவர்களை படிக்கச் சொல்லுங்கள். இது குடும்ப உறுப்பினர்களிடையே நல்லதொரு கலந்துரையாடலுக்கு வழிவகுத்து, சட்டப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கும் புரிதலை ஏற்படுத்தும். இதையும் முதலில் நூலில் சொல்லியுள்ளேன்.
இறுதியாக, சட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது. இதுகுறித்து கிராம நிர்வாக ஊழியர்கள் நூலின் அத்தியாயம் ஐந்தின் பிரிவு, ஐந்தாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, May 19, 2016

ஆராய்ச்சி தத்துவ உரை


‘அரசு என்பது, மக்களுக்குச் சேவை செய்யத்தான்’என்ற தவறான நிலைப்பாடு மக்களிடத்தில் நிலவி வருகிறது. மக்களுக்குள் சேவைக்கான தேவை இருக்கும்போது, எப்படி மக்கள் உற்ற உறவுகளுக்குள்ளும், நட்புகளுக்குள்ளும், நம்மைப் போன்ற முகந்தெரியாதவர்களுக்குள்ளும், அச்சேவைத் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்களோ, அப்படியே தங்களுக்கு உள்ளேயும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
அரசு என்பது, பெயரளவிற்கான ஏமாற்று அமைப்புதான். ஆமாம், எந்தவோர் அமைப்பும் அதன் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகத் தான் செயல்படும் என்பதை, பல இடங்களில் சொல்லியிருந்தாலுங் கூட, மிகமுக்கியமாக ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் சொன்னது நினைவிருக்கும்.
உண்மையில், வக்கற்ற அரசுக்கு வாக்களித்தும், வரி செலுத்துவதன் மூலமும், மக்களே, அல்ல அல்ல; பிச்சைக் காரர்கள்கூட, அரசுக்குச் சேவையைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்களே ஒழிய, பிச்சைக்காரர்கள் என்ற பெயரைக் கொடுத்ததைத் தவிர எதையும் அரசு, இவர்களுக்குச் செய்த தில்லை. ஆனாலுங்கூட, அப்படிச் செய்வதுபோல காட்டிக் கொள்வது, வரிச்சட்டப்படி கொள்ளையடித்த கோடான கோடியில், அற்பத்தனமான சில்லரைகளைச் செலவழிப்பதே ஆகும்.
ஆகையால், இதனையெல்லாம் மறைக்கவும், தட்டிக் கேட்காமல் தடுக்கவும், சட்டப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு எதிராகப் போராடுவது குற்றமென, அரசு தனக்குத் தானே சட்டஞ்செய்து வைத்திருக்கிறது. இதனை நிறைவேற்ற வேண்டியது, பெ(று, ரு)ங் கூலிக்கு மாரடிக்கும் நிதிபதிகளின் பொறுப்பு.
மொத்தத்தில், அரசு என்பதும், அரசின் அதிகாரம் பெற்ற அமைப்புக் கள் என்பதும், மக்களுக்குப் பெருந்தொல்லை தரக்கூடியது. ஆகையால், அது தேவையற்றது. அவ்வளவே!
அரசே பெருந்தொல்லையாக இருக்கும்போது, பொதுச் சேவை செய்வதற்காகவே அரசூழியத்திற்கும், ஆட்சி ஊழியத் திற்கும் (குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள்) வருவதாக சொல்லிக் கொள்ளும் எவரும், எவ்வாறு இருப்பார்கள்?
இவர்கள், தங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள் வதற்காகவே வருகிறார்கள். இதற்கான சிறு முதலீடாகத்தான், இலஞ்சங்கொடுத்துக் குறுக்கு வழியில் அரசூழியத்துக்கும், ஆட்சி ஊழியத்திற்கும் வருகின்றனர்.
இதனால், மக்களுக்கான எந்தவோர் ஊழியத்தையும் சரியாகச் செய்யாமல், தங்களால் என்னென்ன கயமைத் தனங்களை அரங்கேற்ற முடியுமோ, அவையனைத்தையும் அரங்கேற்றும் கோமாளிகளாக, வெள்ளையர்களை விஞ்சும் வகையில், அரசூழியர்களும், அவர்கள் நினைப்பவர்களும் மக்களைக் கொள்ளையடிக்கின்றனர், கொள்ளையடிக்கப் பெரிதும் துணை நிற்கின்றனர்.
கீழ்த்தரம், நடுத்தரம், மேல்தரம் என்று பொதுமக்களை மூன்று வகையாக அரசு பிரிப்பது போன்றே, நானும், அரசூழியர்களைக் கீழ்த்தர ஊழியர்கள், நடுத்தர ஊழியர்கள், மேல்மட்ட ஊழியர்கள் என மூன்றாகப்பிரித்து, இந்நூலுக்கென முன்மொழியும் தத்துவமிது!
அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்,
காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!!
வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!!
ஆமாம், கீழ்த்தர ஊழியர்கள், காரிய அடிமைகள்! நடுத்தர ஊழியர்கள், கயமைக் கோமாளிகள்!! மேல்மட்ட ஊழியர்கள், வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்கள்!!!
பொதுமக்களில் நடுத்தர வர்க்கத்தினரே, எதிலும் பெரிதும் பாதிக்கப்படுவதுபோல, நடுத்தர ஊழியர்களான கயமைக் கோமாளிகளால் பாதிக்கப்படுவர்களே மிகமிக அதிகம்.
இத்தத்துவ விளக்கத்தை முன்வைத்தே, இம்மநு வரையுங் கலை நூலை எழுதியுள்ளேன். மேலும், சத்தியவான் காந்தி யின், ‘இந்தியத் தன்னாட்சி’ நூலில் இருந்து எடுக்கப்பட்டு, மேற்கோளாக இம்மநு வரையுங்கலையின் நூலின் பின்பக்க அட்டையில் தொகுக்கப்பட்டுள்ள கருத்துக்களும், உங்களுக்கு இத்தத்துவ விளக்கத்தின் உண்மையை பல்வேறு விதங்களில் உணர்த்தும்.

எழுத்தாளர்களில் எத்தனையெத்தனையோ வகையினர் இருக்கின்றனர். இவற்றில், தத்துவ எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாத வகையினர். ஒருவரின் வாழ்க்கைக்கு, மற்ற எழுத் தாளர்கள் எந்த அளவிற்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதைச் சொல்லவியலாது.
ஆனால், தத்துவ எழுத்தாளர்கள், நிச்சயமாக ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டிகளாகத்தான் இருப்பார்கள் என்ற வகையில், இத்தத்துவ விளக்கத்தோடு தொடங்கும், இம்மநு வரையுங்கலை நூல், உங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்குமென்பது, என் தீர்க்கமான நம்பிக்கை.
நீதித்துறை சீர்திருத்தத்திற்கான
சட்ட ஆராய்ச்சியாளர்
வாரண்ட் பாலா
மநு வரையுங்கலை நூலிலிருந்து…
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, May 13, 2016

தகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா? அரசின் தந்திரமா?!


நமது சட்ட விழிப்பறிவுணர்வு வரிசையில் ஏழாவது பெறுநூலாக அன்றன்று; அகராதியாக ‘‘மநு வரையுங்கலை!’’ வெளி வந்துவிட்டது. இந்நூலுக்கு பங்களிப்புத் தொகை செலுத்தியவர்களுக்கு நன்கொடைப் பிரதியென்று அனுப்பி வைக்கப்படும். ஆகையால் நன்கொடை செலுத்தி வாங்க வேண்டியதில்லை.
மற்றபடி தேவைப்படுபவர்கள் நூலுக்கான நன்கொடை 400 + கூரியர் செலவு 50 என மொத்தம் 450 ஐச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான மத்திய சட்டம் சற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவி அடுத்தாண்டு கிடைக்குமென நம்புகிறோம். மத்திய அரசு நிதி கொடுத்துதான் இந்நூலை வெளியிட வேண்டும் என்றில்லை. நமக்கு வரும் நிதியுதவியைப் பொறுத்து, நாமே வெளியிடலாம்.
எனவே, மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவி கிடைத்த ஓரிரு மாதங்களுக்கு உள்ளாகவே இந்நூலை வெளியிடும் பொருட்டு, உங்களின் நிதியுதவியை வழக்கம்போலவே எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
மேலும், சாட்சிய சட்டப்படி சேகரித்த சான்று நகல்கள் மற்றும் சான்று நகல் தொடர்பாக தங்களின் சந்தேகங்கள் ஆகியவற்றைத் தெரிவித்தால், இந்நூலில் தெளிவுபடுத்த ஏதுவாக இருக்கும்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)