நீதிமன்றத்தில், நிதிபதிகள் உள்ளிட்ட ஊழியர்கள் செய்யும் முறை கேடுகளைத் தடுக்க கேமராப் பொருத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இக்கேமராவைப் பொறுத்திவிட்டால், தவறே நடக்காது என்ற நம்பிக்கை, கேமரா பொறுத்தியுள்ள பொது இடங்களில் குற்றங்களே நடக்காததுபோல நம்புகிறார்கள்.
கட்டுப்பாடுகள் அனைத்தும் நம் வசமுள்ள கேமராவின் முன் நடக்கும் வெளிப்படையான குற்றச் சம்பவங்களையே, நம்மால் தடுக்கவோ அல்லது தக்க சட்ட நடவடிக்கையை எடுக்கவோ முடியாதபோது, முழுவதும் அவர்கள் வசமுள்ள கேமராக் கட்டுப்பாடுகளின் மூலம், குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நிதிபதிகள் என்ற குற்றவாளிகளின் குற்றச் செயல்களை மட்டும் கட்டுப்படுத்திவிட முடியுமென நம்புவது முழுக்கமுழுக்க முட்டாள்தனமாகத்தான் தெரிகிறது.
ஏனெனில், லஞ்சப்பிச்சை உள்ளிட்ட எல்லாமே நீதிமன்றத்தில் மட்டுந்தான் நடப்பதாக நம்புகிறார்கள். உண்மையில், நீதிமன்றத்தில் வெளிப்டையாக நடக்கும் குற்றச் செயல்கள் மிகமிக குறைவே. தீர்ப்பை விலைக்கு வாங்கும் எந்தப் பேரமும் நீதிமன்றத்தில் நடப்பதில்லை. நீதிமன்றத்துக்கு வெளியேதான் அத்தனையும் நடக்கிறது.
இதில் பணபேரம் மட்டுமன்று; பிரபல நடிகைகள், துணை நடிகைகள் தனக்கு கீழான பெண் நிதிபதிகள், நிதிபதி பதவிக்கு வர ஆசைப்படும் பொய்யனிகளை பாலில் வல்லுறவு செய்வது உள்ளிட்ட, பல்வேறு குற்றச் செயல்களும் நடக்கின்றன.
இதன் விளைவாக நீதிமன்றத்தில் நடப்பது, சட்டக் குறைபாடுள்ள எழுத்து மூலமான தவறுகள்தான். இதனை கேமரா வைத்து எப்படி தடுக்கமுடியும் என, கேமராவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் விளக்கினால், விளங்கிக் கொள்வேன்.
மக்கள் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று, திறந்த நீதிமன்றத்தில் அமர்ந்து விசாரணை நடவடிக்கைகளை கண்காணித்தாலே போதும். திரித்து எழுதப்படும் தீர்ப்புகளை சட்டத்துக்கு உட்பட்டு விமர்சித்தாலே போதும். குறைந்தபட்டம் நீதிமன்றத்தை நாடும் வழக்காளிகள், இதனைச் செய்தாலே போதும். ஆனால், யாருமே செய்யவில்லை.
எனது சட்ட ஆராய்ச்சியில், நான் இப்படித்தான் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆராய்ந்து எழுதினேன். இதனால்தான், நிதிபதிகளால் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை.
இதற்காக, தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கும் சென்றுள்ளேன். பல்வேறு இடங்களில் பாடம் நடத்தியுள்ளேன். விவரிக்க முடியாத பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துள்ளேன் என்பது, என் நூல்களைப் படித்துள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.
மாறாக, சட்ட ஆராய்ச்சி என்றால், நான் நடத்திய சட்டப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டும், நான் எழுதியுள்ள நீதியைத்தேடி… நூல்களில் உள்ளவற்றைப் படித்து, அதனை அப்படியே வாந்தியெடுத்து விட்டு, பொய்யர்களென்ற புரோக்கர்களுக்கு, புரோக்கர்களாய் ஆள் பிடித்து தரும் ஈனத்தொழிலின் மூலம் நிதியைத்தேடி… கூட்டமாய் அலையும் பலப் பன்றிகள், நாங்களுஞ் சட்ட ஆராய்ச்சி யாளர்கள் என்று சொல்லிக் கொள்வது போலன்று.
நிதிபதிகளின் சட்ட விரோதச் செயல்களை தடுக்க சட்டத்தில் இருக்கும், திறந்த நீதிமன்றம் மற்றும் நிதிபதிகளின் தீர்ப்புகளை விமர்சித்தல் என்ற இந்த இரண்டு அரிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல், இல்லாத கேமரா பதிவுக்காக போராடுவது, இருப்பதை விட்டு விட்டு, பறப்பதைப் பிடிக்க அர்த்தமே இல்லாமல் ஆசைப்பட்ட கதைதான்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment