நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, January 1, 2016

நல்ல நா(ளெ, ள)ன்று கூறி அடிக்கப்படும் கொள்ளையோ கொள்ளை!



எல்லா நாட்களும், நல்ல நாட்களே என்பதை மறந்து, மனிதகுலம் தன் சுயநலத்திற்காக உருவாக்கி வைத்துள்ளவையே நல்ல நாட்கள் என்றால், பெரும்பாழான மாக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இல்லையில்லை, மக்களின் நன்மைக்காகத்தான் உருவாக்கப் பட்டது என்றுதான் சொல்வார்கள். இதுவே உண்மையென்றால், இந்நாட்களில் மக்களுக்கு தேவையான கூடுதல் சலுகைகளை அளிக்க வேண்டும் அல்லவா?
ஆனால், இந்நாட்களில் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் கூட, நீங்கள் என்னதான் பெயரளவிலான தொலைத்தொடர்பு சேவை சலுகைகளைக் கூடுதலான பணத்தைச் செலுத்தி பெற்றிருந்தாலுங்கூட, பண்டிகை நாட்களில் அவ்வப்போது ஆளும் அரசியல்வாதிகளின் தொழிற்சாலைகளான தொலைத்தொடர்பு நிறுவன மாஃபியாக்களுக்கு பெறும் பணத்தை கொடுக்க வேண்டும்.
முன்பெல்லாம், குறுஞ்செய்திக்கு மட்டுமே ரத்து செய்யப்பட்ட சிறப்பு சலுகையும், விலை உயர்வும், தற்போது அழைப்புகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஒருநாள் சலுகை ரத்தென்பது, இரண்டு நாட்களாகி விட்டன. இதுவும் போக்கப்போக கூடலாம்.
மேலும், இந்த சலுகை ரத்து, சமூக வலைத்தளங்களை பயன்படுத்து வோரின் எண்ணிக்கையில் ஏற்படும் பணயிழப்பை கருத்தில் கொண்டு, இணைய இணைப்பிற்கும் கூட, எதிர்க்காலத்தில் வருமென உறுதியாக நம்பலாம்.
இதையெல்லாம், கண்டுங்காணாமல் இருப்பதற்காகவே, அமைக்கப் பட்டுள்ளதுதான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்னும் டிராய்!
நீங்கள் வரவேற்கவில்லை என்பதற்காக எந்த நாளும் வராமல் கோபித்துக்கொண்டு போய்விடாது என்பதோடு பெறும் பணத்தை செலவுசெய்து, அக்குறிப்பிட்ட அந்நாளில் வாழ்த்து சொல்லாததாலேயே, உங்களது அன்பர்களும் நாசமாகிவிடப் போவதோ அல்லது வாழ்த்து சொன்னதாலேயே நாசமாகிப் போய் இருந்தவர்கள் நல்லாகி விடப் போவதோ அன்று!
இந்த உண்மை புரியாமல், இந்த நன்நாளில் உங்களிடம்தான் முதலில் பேசினேன். ஆகையால், எனக்கு எது நடந்தாலும் நீங்கதான் பொறுப்பென வம்புக்கென்றே சொல்லி வம்பிழுக்கும் கூறுகெட்ட வர்களும் உண்டே யொழிய, தப்பித்தவறி கூட நன்றாக இருப்பவர்கள், முதலில் உங்களிடம் பேசியதால்தான் நன்றாக இருக்கிறேன் என சொல்லி விடுவதில்லை.  
எது எப்படியிருப்பினுங்கூட, இவற்றையெல்லாம் விட சிறப்பானது, மனதார வாழ்த்தும் வாழ்த்தென்பதால், இதனைச் செய்தாலேப் போதும்.
ஆனால், மனதார வாழ்த்த மனமில்லாமல், கௌரவத் திற்காகவோ அல்லது வேறுயெதற்காகவோ பெறும் பணத்தை செலவுசெய்து வாழ்த்துவதில் பலனில்லை.
பெறும் பணத்தை செலவு செய்தால்தான், வம்பு வழக்கு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முடியும், நோய்களை போக்கிக்கொள்ள முடியும், ஆன்மிகத்தில் நுழைந்து, முக்தியை அடைய முடியுமென்று பலவாறாக, நம் மண்டையில் ஏற்றப்பட்டுள்ள கொள்ளையடிக்கும் யுக்தி, நல்ல நா(ளெ, ள)ன்று சொல்லும் வாழ்த்திலும் மெல்லப் புகுத்தப்பட்டு விட்டது.
மொத்தத்தில், நுகர்வோர்களான நம் உழைப்பு, நாம் சாதாரணமாகச் சிந்திக்க முடியாத அளவிற்கு பல்வேறு வழிவகைகளில் சுரண்டப் படுகிறது.
இதிலிருந்து நம்மை நாம்தான் காத்து, கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமே தவிர, வேறு யாராலுமன்று.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)