இது நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த படத்தின் டயலாக் என்றாலுங் கூட, உண்மையில், நான் சட்ட ஆராய்ச்சியில் களமிறங்குவதற்கு முன்பு இப்படிப்பட்ட நிலைதான் இருந்தது.
ஆமாம், நீதியைத்தேடி… பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலின் முதற்பதிப்பு 2004 இல் வெளிவந்தப் பிறகுதான், பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கு கைது செய்யப்பட்ட வர்கள் மற்றும் தண்டிக்கப் பட்டவர்களை பிணையில் விடுவதற்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்ட விதிகள் உள்ளன என்பது தெரிந்தது.
அதற்கு முன்புவரை நான்கே நான்கு விதிகள்தான் தெரியும். இன்றுங்கூட, இந்த நான்குதான் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கும் பொய்யர்களும் உண்டு. இவர்கள் எல்லாம் நீதியைத்தேடி… பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலைப் படிக்காத பொய்யர்கள். அவ்வளவே!
தற்பொழுதுங்கூட, பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என, பயந்தவர்களுக்கு பீதியை கிளப்பி, பேதியாகும் அளவிற்கு செய்தித்தாள்களில் மட்டுமல்லாது இணையப் பக்கங்களிலுங்கூட, செய்திகள் எழுதப்படுகின்றன. ஆனால், உண்மை இதுவன்று!
தடுப்புக்காவலில் வைக்கப்படுபவர்கள் மாத்திரமே ஒரு வருடத்திற்கு சிறையில் அடைக்கப்படுவார்கள். அதன் பிறகு அதனை நீர்த்துப்போகச் செய்வதா அல்லது நீட்டிக்கச் செய்வதா என முடிவெடுப்பார்கள். இதற்கு முன்பாகவே, தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட நபர், மூன்று மாதத்திற்குள் அறிவுரை குழுமம் சென்று அல்லது ஆட்கொணர்வு மனுச்செய்து தடுப்புக் காவலை உடைத்து வெளிவருவதும் உண்டு.
சரி நம்ம விசயத்துக்கு வருவோம்.
தடுப்புக்காவல் அல்லாது, தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளின் தன்மைக்கு ஏற்ப கைது செய்யப் பட்டவர்கள் கு.வி.மு.வி 169 இன்படி, காவல் நிலையத்திலேயே பிணையில் வரலாம்.
நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமன்று; சிறைக்குள் செல்வதும் சாதனைதான் என நினைப்பவர்களும், சிறை அனுபவத்தை பெற நினைப் பவர்களும் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாற்றுகளுக்கு ஏற்ப சிறையில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஓய்வாக இருந்துவிட்டு பின் கு.வி.மு.வி 167(2) இன்கீழ் மனுச்செய்து, பிணையில் வரலாம்.
இப்பிரிவின்படி, முதலில் சிறையில் இருந்தபடியே அங்சல் மூலம் பிணை மனுவை அனுப்பி பிணையில் வந்து, நீதித்துறையில் பெறுஞ்சாதனைப் படைத்திட்ட இருவர் நம் நீதியைத்தேடி… வாசகர்களே ஆவர்.
இதற்காக பொய்யர்கள் எவ்வளவு பணம்பறிக்க முயன்றார்கள், மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வாங்கிய இப்பிணை உத்தரவைப் பெற, தங்களின் அறிவு வறுமையால் உச்சநீதிமன்றத்துக்குத்தான் போக வேண்டும் என்று கூறியெல்லாம், நம் வாசகர் எழுதிய இக்கடிதத்தில் வெளிப்படும்.
2004 ஆம் ஆண்டுக்கு முன்பாக, இவ்விதியின்படி எவரும் பிணையில் வந்ததாக சரித்திரமில்லை என துணிந்து சொல்லுவேன். மறுக்க விரும்புபவர்கள் தக்க உத்தரவோடு மறுக்கலாம்.
இதன் பிறகே, இவ்விதியைப் பொய்யர்கள் வெகுவாகப் பயன்படுத்தி பணஞ் சம்பாதித்து வருகிறார்கள். அதாவது, மக்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக, ஆராய்ந்து எழுதப்பட்ட நீதியைத்தேடி… நூல்கள், மக்களின் சட்ட விழிப்பறிவுணர்வு அக்கரையின்மையால், பொய்யர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்து விட்டது.
எது எப்படி இருப்பினுங்கூட, நான் சொல்லியுள்ள சட்ட விதிகளின் கீழ் பொய்யர்களால் பிணையில் எடுப்பதைத் தவிர, வேறு எதையுஞ் செய்ய முடியாது என்பதும் உறுதி. எனவே நம்பி நாசமாய் போகாதீர்கள்.
நீதிமன்றத் தகவல்கள் இணையப்பக்கங்களில் பதிவேற்றப்பட்டு விட்டதால், பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் செயற்பாடுகளை ஆராய்வது மிகவும் எளிமையாகி விட்டது. இந்த வகையில் நேற்று சில நீதிமன்றப் பக்கங்களில் உலா வந்தபோதுதான், பொய்யர்கள் கு.வி.மு.வி 167(2) ஐப் பயன்படுத்தி பிணையில் எடுக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் சிக்கியது.
நம் வாசகர் 20 ரூபாய் செலவில் பிணையில் வந்தார்.
இப்பொய்யரோ மிகக் குறைந்தது என்று சொல்லப் போனால் கூட, குறைந்தபட்சம் இருபதாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் இரண்டு லட்சம் வரை ஆட்டைய போட்டு வழிபறி செய்திருப்பார். ஏனெனில், வழக்கு அத்தன்மை கொண்டது.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment