No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, November 9, 2015

தீப ஒளித்திருநாளின் (மெய், விஞ்)ஞான விளக்கம்!பொதுவாக தீபாவளிக்கு சொல்லப்படும் காரணம், நரகாசுவரன் என்று ஒருவன் இருந்தான். அவன் மனிதர்களை எல்லாம் பிடித்து கொன்றும், சாப்பிட்டும் வந்தான். அதனால், கிருஷ்ணர் அவனை வதஞ்செய்து அழித்த நாளே ‘‘தீபாவளி’’ என்று சொல்லப்படுகிறது. இதுவே, நம் எல்லோர்க்கும் பரவலாக தெரிந்தது.
ஆனால், உண்மை இதுவன்று என்பதோடு, இதனை கொண்டாடுவதற்கான அறிவியல் பூர்வ காரணமும் இருக்கிறது. இந்த காரணத்தை அறிந்து கொண்டால், நாம் நிச்சயமாக வியப்படைவோம் என்பதோடு, இதனால் நமக்கு ஏற்படும் நன்மையை அறிந்து, தீப ஒளித்திரு நாளை எல்லோருமே கொண்டாடத் தொடங்கி விடுவோம். இத்தீப ஒளித்திரு நாளே, வழக்கம் போல, வழக்கத்தில் தீபாவளியாகவும் மருவிவிட்டது.
தீபாவளி என்றால், புத்தாடை உடுத்தி, இனிப்பை சாப்பிட்டு, பட்டாசு வெடிப்பது என்பதை யாவரும் அறிவோம். ஆனால், அப்பட்டாசின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்துப் பார்த்தோமா என்றால், இல்லவேயில்லை.
மாறாக, மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, பட்டாசுப் புகையால் காற்று மாசுபடுகிறது; காசுங்கரியாகிறது என்ற காரணத்தை மட்டுஞ் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். இதற்காக, வழக்குகள் மேல் வழக்குகளைப்போட்டு, நிதிபதிகள் விதிக்கும் முறையற்ற கட்டுப்பாடுகள் என்ற நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகிவிட்டோம்.
இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்றால், இருந்த இடத்தில் இருந்தே தங்களின் தவ வலிமையால் மெய்ஞானத்தை உணர்ந்து, அதற்கேற்றவாறு நம் சமூகத்திற்கு தேவையான சம்பிரதாயங்களை வகுத்த நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும்..,
அங்கும், இங்கும் அலைந்து திரிந்து, அழிவைத்தரும் அறிவியலை கண்டுபிடிக்கும் நாமே அதிபுத்திசாலிகள் என்கிற எண்ணம், ஒவ்வொருவரிடத்திலும் நீக்கமற நிறைந்து இருப்பதால், நம் முன்னோர்களின் செயற்கரிய செயற்பாடுகளை ஆராய முற்படாமலும், உண்மையை அறியாமலும், பல்வேறு இன்னல்களுக்கிடையில் வாழ்வை தொலைத்துக் கொண்டே இருக்கின்றோம்.
ஆனால், அறிவியல் பூர்வமான உண்மையென்ன வென்றால், பட்டாசுகளில் பயன்படுத்துப் படும் வெடி உப்பு, கந்தகம், மனோசீலை, பாஸ்பரஸ் (திமிரி பாஷானம்) உள்ளிட்டவை சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் புகையை சுவாசிப்பதால், உடலுக்கு நன்மையே அன்றி, தீமையன்று.
தீமை யென்றால், தீபாவளிக்கு பிறகு எண்ணிக்கையில் அடக்காத மரணங்கள் மனிதகுலத்திற்கு ஏற்பட வேண்டும். ஆனால், முறையற்ற வெடி விபத்துக்களால் ஏற்படும் இழப்புகளைத் தவிர, வேறு உயிரிழப்புகள் ஏதுவும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நரன் என்றால் மனிதன்
அகம் என்றால் மனிதனின் உள் இயக்கம்
அசுரன் என்றால் வெகுவேகமாகப் பரவுதல் என்று அர்த்தம்.
நர+அக+அசுரன் = நரகாசுவரன்
நம் பூமியானது, தலா ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உருளும், புறளும் தன்மை கொண்டது. ஆடி முதல் மார்கழி – தை வரை புறள்வது, தட்சினாயனம். தை முதல் ஆனி – ஆடிவரை உருளுவது, உத்திராயனம்.
மேலும், அம்மாவாசையில் சுழலும் மற்றும் பௌர்ணமியில் சுற்றும் தன்மை கொண்டது. சுழலுதல் என்றால், ஓரிடத்தில் தானே சுழலுதல் என்றும், சுற்றுதல் என்றால், மற்ற இடங்களைச் சுற்றி வருதல் என்றும் பொருள்.
கிருஷ் என்றால் மண்
கிருஷ்ணம் என்றால் பெண்
கிருஷ்ணன் என்றால் ஆண்.
கிருஷ்ணஹா என்றால் பலவின் பால். அதாவது, மூன்றாம் பாலினம்.
இதனால்தான், மூன்றாம் பாலினத்தவர்கள் எல்லாம் தங்களை, கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக் கொள்கிறார்கள். நான் எனப்படுவது முப்பாலினத்திலும் பொதுவானது. ஆகையால், இத்தகைய ‘‘நானே’’ ஆன்மா எனப்படுவது. நம் உடலுக்கு ‘‘மண்’’ என்றப் பெயரும் உண்டு.
நம் பூமியானது புறளும் தன்மை கொண்ட இப்புரட்டாசி மாதத்தில் ஏற்படும் மண்ணின் நொதிப்புத் தன்மையால் கண்ணுக்குப் புலப்படாத கோடானகோடி நுண்ணுயுரிகள் தோன்றி, மனித குலத்திற்கு ஜலதோசம் உட்பட அனைத்து நோய்களுக்கும் அஸ்திவாரம் இடும்.
இதனை அழிப்பதற்கு, அம்மாவாசை எனப்படும் வெளிச்சமில்லாத இரவிலும், அதிகாலைப் பொழுதிலும் பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் ‘ஒலி’யாலும் (சத்தத்தாலும்), ‘ஒளி’யாலும் (வெளிச்சத்தாலும்) அந்த நுண்ணுயிரிகள் என்று சொல்லப்படும், நுண்கிருமிகள் அனைத்தும் கொல்லப்படும். இக்காலத்தில் மனிதன் பெரிதும் அஞ்சும் கொசுவுங்கூட, இருக்காது என்பதை, நாம் வெளிப்படையாகவே அறியலாம்.
வெடி ஒலியாளும், ஒளியாளும் அழிந்த அந்நுண்ணுயிரிகள் நம் உடலில் தங்கிவிடக்கூடாது என்பதற்காக, இனிப்பை சாப்பிடுகிறோம். இந்த இனிப்பில் நெய் அதிகமாக சேர்க்கவேண்டும். இப்படி சேர்ப்பதால், அந்த நுண்ணுயிரிகள் வெளியேற முடியாமலும், வயிறு தன் கழிவை வெளியேற்ற முடியாமலும் மந்தப்பட்டு விடும்.
இதனை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்திக் கொள்ள, தீப ஒளி லேகியத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். இது உடலின் உட்புறத்தை முழுமையாக சுத்தப்படுத்திக் கொள்வதற்கான வழி. இதுவொரு இயற்கை மூலிகை தயாரிப்பு. இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
உடலின் வெளிப்புறத்தில் தங்கியுள்ள நுண்கிறுமிகளை அகற்றவே, எண்ணெய் குளியல். இதற்குஞ்சில வழிமுறைகள் உண்டு. எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலுமிதில், மிக முக்கியமாக இரண்டு வரமிளகாய் (காய்ந்த சிவப்பு மிளகாய்) மற்றும் சிறிது வெந்தயம் (அரை ஸ்பூன்) போட்டு காய்ச்ச வேண்டும்.
தலை, நெற்றி, தொண்டைக்குழி, தோல்பட்டை, தலையின் உச்சிப்பகுதி மற்றும் கால்களின் பாதப்பகுதிகள் எல்லாம் நுண்ணுயிரிகள் எளிதாக தாக்கக்கூடிய இடங்கள். ஆகையால், இந்தப் பகுதிகளில் காய்ச்சிய எண்ணையைத் தடவியப்பின் நலுங்கு வைக்கவேண்டும்.
இந்த நலுங்கில், நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட குண்டு அல்லது விரலி மஞ்சளை அரைத்து, உடன் சுண்ணாம்பு சேர்த்த கலவையை தடவி, சீகற்காய் தேய்த்து வெதுவெது வெந்நீரில் குளிப்பதன் மூலம், நம் புற உடலையும் தூய்மை செய்திட முடியும்.
இதையே கார்த்திகை மாதத்தில் காசி போன்ற வடக்குப் பகுதியில், ‘‘ருத்ர தீப ஒளி’’ என்று கொண்டாடுவார்கள். நாமுங்கூட, இத்தீப ஒளித்திரு நாளுக்கு வாங்கிய மிச்சம்மீதி பட்டாசுகளை கார்த்திகை மாதத்தில், வெடித்தும் கார்த்திகை திருநாளை தீப ஒளியேற்றியும் கொண்டாடுகிறோம். சீனாவிலும், நேபாளிலுங்கூட, இத்தீப ஒளித்திரு நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதன் சுருக்க கருத்தானது, ‘ஆன்ம சேவாலயம் ஸ்ரீ யோகா பவுண்டேஷன்’ வெளியீடான ‘ப்ரம்மத்தின் வாசல்’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டு, நம் புரிதலுக்கேற்ப வாரண்ட் பாலா ஆகிய என்னால் விரிவாக எழுதப்பட்டு உள்ளது.
தீப ஒளித்திருநாளை அர்த்தத்தோடு கொண்டாடுவோம்! அக்கறையோடு உடல் மற்றும் சமூக நலனைப் பேணுவோம்!! 

இதுபற்றிய இவரது விளக்கக் காணொளிகளை காண... 
1. https://www.youtube.com/watch?v=tecsF1pJrgs
2. https://www.youtube.com/watch?v=_XQ-Bm1HjnU
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

3 comments:

 1. பட்டாசு வெடித்தால் நல்லது ஆனால் பட்டாசு புகையை சுவாசித்தால் தீமை இல்லை என்பதை ஒப்புகொள்ள முடியவில்லை.ஏனன்றால் பட்டாசில் உள்ள மருந்துகள் அனைத்தும் கெமிக்கல்லில் உருவானவை.அப்புகையை சுவாசித்தால் நமது நுரையீரல் கெட்டுவிடும்.கண்கள் கெட்டுவிடும்.இதை சோதிக்க விரும்பினால் யாரையாவது பட்டாசு வெடிக்கும் இடத்தில் அரை மணி நேரம் நிற்க வைத்தால் அவர்கள் இந்த உண்மையை சொல்லிவிடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நான் எதையும் ஆராயாமல் எழுதுவதில்லை.

   ‘‘புகை நமக்குப் பகை’’ என்ற பொத்தாம் பொதுவான புதுமொழியை நமக்குள் புகுத்திக் கொண்டதே, நாம் எல்லாப் புகையையும் பகையாகப் பார்க்க காரணம்!

   நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ‘‘இந்த தீபாவளிக்கு பட்டாசு தயாரித்தவர்கள் யாரும், அடுத்தாண்டு தயாரிக்க உயிரோடு இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், தயாரிப்பு பணியில் ஈடுபட முடியாத அளவிற்கு நோயுற்று இருக்கனும்’’. உண்மையில், அப்படியா இருக்கிறார்கள்?

   இவர் நடத்திய சில யாகவேள்விகளில், நான் கலந்துக் கொண்டிருக்கிறேன். மருந்தாக நேரடியாக உட்கொள்ள முடியாத, பல்வேறு செடிகள், அதன் காய்ந்த குச்சிகள், காய்கள், கனிகளை யாகத்தில் இட்டு, அப்புகையை நுகரச் செய்வதன் மூலம் நோயை குணப்படுத்தி இருக்கிறார்.

   Delete
 2. அருமை ♪♪♥♥♥ திரு பாலா அவர்கலுக்கு தீப ஔி திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)