ஒவ்வொருவரது நியாயத்தையும் திருடும் பொய்யர்களை, திருடர்களை சட்டமும், சமூகமும் வக்கீல் என்கிறது. இந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுபவர்களை நீதிபதிகள் என்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், இவர்கள் நியாயத்தை திருடும் கொள்ளையர்கள், கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகள் என்பதுதான் எனது ஆராய்ச்சி முடிவு.
ஆனால், இவை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் அவ்வப்போது தெரிய வருகிறது. இந்த வகையில், இன்று இந்தச் செய்தி வெளி வந்துள்ளது.
இது நீதித்துறை குறித்து, அ(ந்)நீதித்துறையே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் என்பதால், யாரும் மறுக்கமுடியாது. ஆகையால், நிதிபதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்கள் ஒருபோதும் மறக்கவும் கூடாது.
இதனையெல்லாம் நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? என்கிற நூலில், ‘‘நீதிபதிகள் கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகள்’’ பகிரங்கமாகவே எழுதி அவர்களுக்கும் படிக்க கொடுத்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. உண்மையைத் தானே எழுதியிருக்கேன்னு, நிதிபதிகள் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க!
இதுல, இன்னொரு கொடுமை என்னான்னா, அறக்கட்டளையின் தலைவர் பதவியில் இருந்து பதவி காலத்திற்கு முன்பே என்னை விலக்கியதால், தனக்கு இருபது லட்சம் நட்டம் என்பதோடு, அறக்கட்டளை நிர்வாகிகளோ முப்பது லட்சம் கேட்டு தன்னை மிரட்டினார்கள் என்கிறார், வழக்கு போட்டவர்.
அறக்கட்டளைகளில் அறஞ்சார்ந்த செயல்கள் எதுவும் நடப்பதில்லை. தொண்டு என்கிற பெயரில் ஃபண்டை சுருட்டும் பணிதான் நடக்கிறது என்கிற எனது ஆய்வு முடிவும் அப்படியே அரங்கேற்றப்பட்டுள்ளன.
ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சரவணப்பா சஜ்ஜன், வழக்கொன்றில் ஒரு வருக்கு சாதகமாக நடந்துகொள் வதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட் டுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பி.ஏ.பாட்டில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் சிவில் நீதிமன்றத்தில் சரவணப்பா சஜ்ஜன் மூத்த நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வரிடம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.
லஞ்சம்பெறும்போது கர்நாடக உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு லஞ்சம்
நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் மீது லஞ்ச புகார் அளித்த காசிநாத் என்பவர் கூறியதாவது:
பீதர் மாவட்டம் ஹூல்சூரில் உள்ள குருபசவேஷ்வரா கல்வி அறக்கட்டளைக்கு 1995-ம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டேன். எனது பதவி காலம் முடிவதற்குள் பசவேஷ்வரா மடத்தை சேர்ந்தவர்கள் என்னை அப்பதவியில் இருந்து வெளியேற்றினர். இதனால் எனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் எனது பதவி காலம் முடிவதற்குள் வெளியேற்றியதால் ஏற்பட்ட ரூ. 20 லட்சம் நஷ்டத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு பசவேஷ்வரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் என் னிடம் ரூ.30 லட்ச ரூபாயை வட்டியுடன் செலுத்துமாறு மிரட்டினர். இது தொடர்பாக கடந்த 2000-வது ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன்.
கடந்த 14 ஆண்டுகளாக தீர்ப்பு வெளியாகவில்லை. விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் தருமாறு நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து கர்நாடக உயர்நீதி மன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தேன்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் கூறியவாறு கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியளவில் பீதர் பசவண்ணா சிலைக்கு அருகே சென்றேன். அங்கு காத்திருந்த நீதிபதி சரவணப்பா என்னிடம் ரூ. 5 லட்சம் லஞ்சமாக பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை சம்பவ இடத்திலே கைது செய்தனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.