இவர் மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில், ஆதரவற்று தெருவில் கிடக்கும் நபர்களுக்கு உணவு வழங்கி வந்தவர். உணவு வழங்குவது ஒகே. ஆனால், அதற்கு முன்பாக அவர்களின் காலை தொட்டு கும்பிடுவது உள்ளிட்ட அனைத்து பில்டப்பும் தேவையற்றது என நம்பினேன்.
அதெல்லாம் எதற்காக (உன்னை கொல்லப்போகும் பாவத்திற்காக என்னை மன்னித்துவிடு) என்பது இப்போது புரிந்துவிட்டது.
சாலையோரங்களில் வசித்தபோது கூட இறக்காத அளவிற்கு, ஆசிரமத்தில் ஒரு மாதத்திற்கு இவ்வளவுபேர் இறந்தால், அது எப்படி ஆதரவற்றோருக்கு உணவளிப்பதும், இறப்பதும் ஆகும். அப்பெண் சொல்வதுபோல, கொலைதானே என்கிற சந்தேகம் எழாமலில்லை.
இப்படி துணிந்து குற்றம் புரிபவர்களுக்கு பின்னால், யாரோவொரு உயர்மட்ட அரசூழியர் இருப்பார் என்பது மட்டும் உறுதி! 2010 ஆம் ஆண்டில், இவரை சி.என்.என் நிறுவனம் கதாநாயகனக தேர்ந்தெடுத்தது. இவர் விக்கிபீடியாவில் வேறு இடம் பிடித்துவிட்டார்.
நக்கீரனலிருந்து ......
உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல், பிறந்த மேனியோடு, கதறியபடி ஓடி வந்த அந்த இளம்பெண்ணை முதலில் பார்த்தவர்கள் நூறு நாள் வேலை செய்யும் பெண்கள்தான்.
அக்ஷயா ஆசிரமத்தின் காம்பவுண்டின் சுவரை எகிறிக்குதித்து ஓடி வந்ததை அவர்கள் பார்த்தார்கள்.. ‘‘நான் மெண்டல் இல்லை. மத்த பொண்ணுங்களை கொலை செஞ்ச மாதிரி என்னையும் சாகடிக்கிறதுக்கு டைம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. ப்ளீஸ் அக்கா..அம்மா.. என்னைக் காப்பாத்தி ஒங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க.''
"இந்தாம்மா.. முதல்ல இதை உடம்புல சுத்திக்க'' தங்கள் தலையில் சுற்றியிருந்த சாயத் துண்டுகளை அந்த இளம் பெண்ணுக்கு கொடுத்து நிர்வாணத்தை மறைக்க வைத்தார் கள், அன்றைய வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பத் தயாராக இருந்த அந்த 100 நாள் வேலைப் பெண்கள்.
மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், சோழவந்தான் அருகில், நாகமலை புல்லூத்து என்ற இடத்தில், ஆடம்பரமாக காட்சியளிக்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத்தி லிருந்து கூப்பிடு தூரத்தில், 5.6.14 வியாழன் மாலை 4 மணிக்கு நடந்தது இந்தச் சம்பவம். அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்த பெண்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
அக்ஷயாவில் இருந்து ஊர் தப்பிவந்த ஆயிஷா என்ற அந்த இளம்பெண்ணை தங்களோடு அழைத்துச் சென்று, சேலை ரவிக்கை அணியவைத்து, சாப்பாடு கொடுத்து, கிராம நல அலுவலர் உதவியோடு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தவர்கள் கொடிமங்கலம் மக்கள்தான். கொடிமங்கலம் மக்களின் பாதுகாப்பில் இருந்த அந்தச் சிறுபொழுதில் ஆயிஷாவைச் சந்தித்தோம். எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோட்டம் போல பேசினார்.
"அக்ஷயா ஆசிரமத்தில் நடக்கிறது சேவையோ தொண்டோ கிடையாது. அவங்க, அநாதைகளின், மன நிலை சரியற்றவர்களின் உடல் உறுப்புகளை வியாபாரம் செய்றாங்க. அங்கே இருக்கிற என்னை மாதிரி இளவயசுக் காரங்களை சுயமா யோசிக்க விடமாட்டாங்க. தினமும் மூணு தடவை போதை ஊசி போட்டு மிதக்க விடுறாங்க. அசிங்கமா பேசுறதா நெனைக்காதீங்க. இப்ப ஏழெட்டு நாளா எனக்கு உமட்டுது. வாமிட் வர்ற மாதிரி இருக்கு. கர்ப்பமா இருக்கிறேனோ அப்படின்னு எனக்கே சந்தேகமா இருக்கு.
ஆசிரமத்தில் பாதி சாமத்தில பெண்கள் அலறுவாங்க. பயமாயிருக்கும். எழுந்து ஜன்னல் வழியா பார்ப்பேன்... அடுத்த அறையில வீடியோ கேமராவால் ஆபாச படம் எடுக்கிறது தெரியும். இல்லைனா நிர்வாணமா ஆடச் சொல்லி படம் எடுப்பாங்க. டிரஸ்ஸை கழட்ட மறுக்கிற பெண்களை ரெண்டு மூணு தடியனுங்க அடிப்பானுங்க. அந்தப் பொண்ணுங்க அடிதாங்க முடியாம கதறுங்க. இதெல்லாம் மிட் நைட்லதான் நடக்கும்...
அப்புறம், வாரம் ஒருமுறையாவது யாராவது ரெண்டு ஃபாரீன்காரங்களை ரமேஷ்ன்ற தடியன் கூட்டிட்டு வருவான். அந்த வெளிநாட்டுக்காரங்க முன்னாடி எங்களை வரிசையா நிக்கவச்சு பார்ப்பாங்க. எங்கள்ல இருந்து ரெண்டு மூணு பேரை அவங்க காட்டிட்டு போவாங்க. அடுத்த ரெண்டுநாள்ல, அவங்க காட்ன ரெண்டு மூணுபேரும் பிணமாயிடு வாங்க. சாகிறவங்க எல்லாரும் நைட்லதான் சாவாங்க. அது சாவு இல்லை, கொலை. மயக்க மருந்து கூட கொடுக்காம உறுப்புகளை அறுத்தெடுக்கிற கொலை. ராத்திரி யோட ராத்திரியா புதைச்சிடுவாங்க. இல்லைனா எரிச்சிடுவாங்க.
4- ஆம் தேதி புதன்கிழமை பகல்ல ஒரு வெள்ளைக்காரனை கூட்டிட்டு வந்தான் ரமேஷ். அந்த வெள்ளையன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனான். அப்பவே எனக்கு பயம் வந்திருச்சு. என்கூட இருந்த பொண்ணுங்க... "ஆயிஷா உனக்கு அஞ்சாம் நைட் ஆபரேஷனாம்'னு சொல்லிக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க. அதான்... அதாண்ணே அஞ்சாம் தேதி சாயந்தரமே... குளிக்கிறதாச் சொல்லிட்டு, யூனிபார்மை கழட்டிப் போட்டுட்டு, ஓடி வந்து இவங்க கிட்ட அடைக்கலம் புகுந்தேன்!'' குளமான கண்களைத் துடைத்தபடி சொல்லி முடித்தார் ஆயிஷா.
ஆயிஷா சொல்வது எந்த அளவுக்கு உண்மை? கொடிமங்கலம் ராஜாமணியிடம் கேட்டோம்.
"நிச்சயமாக சொல்றேன். அக்ஷயா ஆசிரமத்தில் ரொம்ப தப்பு நடக்குது. மதுரை பெரியாஸ்பத்திரியில் கூட இவ்வளவு பேர் சாகிறதில்லை. மாதத்துக்கு கொறஞ்சது இருபது இருபத்தஞ்சு பிணங்களை நாகமலை சுடுகாட்ல எரிக்கிறாங்க. அல்லது புதைக்கிறாங்க. எஸ்.எஸ்.காலனியில சாதாரணமா இருந்த ஒரு ஆளு... 2 கோடிக்கு நிலம் வாங்கி கோடிக்கணக்கில் செலவழிச்சு கட்டடங் களை கட்டி, வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆயிரம் பத்தாயிரம் லட்சம்னு வாரிக் குடுக்கிறதா சொல்றாங்க. நிச்சயமா அங்கே பெரிய கிரைம் நடக்குது!'' வியப்பின்றிச் சொன்னார் ராஜாமணி.
ஆயிஷாவுக்கு சேலை ரவிக்கை கொடுத்த லீலாவதியிடம் கேட்டோம். "பாவம்ங்க இந்த ஆயிஷா... அது கத்திக்கினு ஓடியாரதைப் பார்த்தப்போ எங்க ஈரக்கொலையே ஆடிப்போச்சு. பாதிச் சாமத்தில அந்த ஆசிரமத்தில பொண் ணுக அலறுற சத்தம் நல்லா கேக்கும். ஆனால் நாம யாரும் அதுக்குள்ள போகவே முடி யாது. இப்பக் கூட பாருங்க. போலீஸ் ஆபீசர்களைக் கூட உள்ளே விடமாட்டேன்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே!'' என்றார் லீலாவதி.
மாதம் இருபது முப்பது பிணங்கள் எரிக்கப்படுவது உண்மையா?
பொறுப்பு வி.ஏ.ஓ.வாக இருக்கும் திரவியத்திடம் கேட்டோம்.
"பழைய வி.ஏ.ஓ.வும், உதவியாளரும் கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50-க்கும் அதிகமான சாவுகள் என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்'' என்றார் அவர்.
அக்கம் பக்கக் கிராமங்களின் மக்களும், ஆயிஷாவும் சொல்லும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமந்து கொண்டு நிற்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத் துக்குச் சென்றோம்.
டி.எஸ்.பி. சாந்த சொரூபனையே உள்ளே அனுமதிக்க முடியாதென்று வெளியே நிறுத்தி வைத்திருந்தார்கள். கிராம மக்களின் ஆவேசத்தை தாங்க முடியாமல் தான் கடைசியில் மெயின் அலுவலகம் வரை போகலாம் எனத் திறந்து விட்டார்கள்.
அக்ஷயா ஓனர் திருமதி வித்யா கிருஷ்ணய்யரை சந்தித்தோம்.
"அநாதைகளை, மனநலமற்றவர்களை பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் இது. இந்த ஆயிஷாவும் கொடிமங்கலம் மக்களும் எங்க மீது ஏன் இப்படி அபாண்டமா சொல்றாங்களோ தெரியலை. அனாதைப் பிணங் களை வி.ஏ.ஓ.விடமும் தலையாரியிடமும் சொல் லிட்டுதான் அடக்கம் செய்றோம். மற்றபடி கிட்னியெல்லாம் திருடமாட்டோம்ங்க!'' சற்றே எரிச்சலோடு சொன்னார்.
அதன்பிறகு, அந்த அக்ஷயாவுக் குள் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. சாந்த சொரூபன், உசிலம்பட்டி டி.எஸ்.பி. சுரேஷ், ஆர்.டி.ஓ. ஆறுமுக நைனார், சப்-கலெக்டர் ஆர்த்தி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, வட்டாட்சியர் முத்துராமலிங்கம் என அதிகாரிகள் பலர் சென்று வந்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் வாய்திறக்க மறுத்தார்கள்.
ஆர்.டிஓ. ஆறுமுக நைனார் மட்டும் நம்மிடம், "துறை ரீதியான விசாரணை தொடருது. போஸ்ட்மார்ட் டம் செய்யாமல், போலீசுக்கு தெரி விக்காமல் 15 சடலங்களை எரித்ததை ஒப்புக்கொண்டார்கள். மற்றபடி போலீஸ்தான் விசாரிக்க வேண்டும்!'' என்றார்.
அக்ஷயா தொண்டு நிறுவனத் திற்குள் போலீசார் போவார்களா? "இன்னமும் எஃப்.ஐ.ஆர். போடலீங்க. கேட்டம்னா... அந்தப் பைத்தியக்காரி சொல்றதை எப்படி நம்புறதுனு கேக்குறாக. யாரோ ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியோட சப்போர்ட் அக்ஷயா கிருஷ்ணய்யருக்கு இருக்கு. அது யாருனு தெரியலையே!'' என்கிறார்கள் கவலையோடு கொடிமங்கலம் மக்கள்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
It was a shock when I heard the news from the media. I still can't believe the whole incident. Anyway, it's time to accept it and move on!
ReplyDeleteAre we in a democratic country, even we are not unable to protect our own poor citizens from our neighbor criminals. Criminals are Dare to do all evils but we public are coward to fight against them, if polices are afraid to file the case then where they will go......?? What is the Solution for such oppressed citizens??
ReplyDeleteWhat is the Solution for such oppressed citizens??
ReplyDeleteThe solution is right within us. When we take care of citizens around us, when we take responsibility for everything around us, then we could see a better world!