நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, June 15, 2014

மழைநீரால் நாம் மட்டுமன்று; கூவமும் மணக்கும்!


1. தமிழகம் உள்ளிட்ட மாநில, மைய அரசுகள்  மனம் வைத்தால்--எளிதாக நிரந்தரத் தீர்வு காணலாம்! பட்டிக் காடுகளில், மலைமேல், பாலைநிலத்தில், நகரங்களில்- எங்கே மனிதகுலத்தார் வாழு கின்றனரோ அங்கே--200 சதுர அடி 300 சதுர அடி உள்ள வீடுகளில் கூட--அந்தந்தக் கட்டிடத்தின் கூரைமேல் விழும் மழை நீரை--நீர் கசியா நிலத்தடித் தொட்டிகளில் காற்று  வெளிச்சம்படாமல் ஒரு ஆண்டு முழுதும் சேமித்தால், ஈராண்டுக்குக் குடிக்க/சமைக்க, நோயற்ற, சுவையான, எலும்பைப் பாதிக்கும் ஃளூரைட் (fluoride) உப்பு/பூச்சிக்கொல்லி மருந்தற்ற, சமையலுக்கான எரிபொருளை 20-ரூ சதம் கூட மிச்சம் செய்யும்-நீர் கிடைக்கும்!


நகரத்து ஆழ்குழாய் நீரை ஒப்பிட்டால் 30 சதம் எரிவாயு அல்லது விறகும், உள்ளாட்சிகளின் (ஆறு/ஏரியிலிருந்து கொணரப்படும்) நீரை ஒப்பிட்டால் 20 சதமும் மிச்சமாகிறது! புல்லால், தட்டையால், அல்லது ஓலையால் வேய்ந்த கூரைகள் மீது கூட--தார்/சிமெண்ட் அட்டை/தகட்டு அட்டைகளால் மூடி--நீரைச் சேமிக்க முடியும்! மனமிருந்தால் மார்க்கமுண்டு! அப்படிப்பட்ட புல்/தட்டை/ஓலைக் கூரைகள்- கோடையில் குளிர்சி மாறாமலும், மழைகாலத்தில் வெதுவெதுப்புக் குறையாமலும் இருக்கும் என்பதையும் யோசிக்கவும்!


நான் இந்த ஆய்வில் ஈடுபட்ட கதையுடம் என் பின்னணியும்:


 2. நான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட வரலாற்றை முதலில் தங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன் என்னைப் பற்றிய சில வார்த்தைகளைச் சொல்லிக் கொள்ள ஆசை. பொறுத்துக் கொள்ளுங்கள்!


Veeyeskae. Karuppannan3. நான் ஒரு பட்டிக்காடன். கம்பு சோளம் தின்று காட்டு வேலை செய்து-பள்ளியில் பாதியில் நின்று, எருமை மேய்த்துச் சளைத்துப் போய், மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்தாலும், எப்போதும் பள்ளியில் கணக்கு தவிர்த்த அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணாக்கனாக வந்தவன். 20-ஆவது வயதில்தான் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி சேர்ந்து படித்தவன். கல்லூரியிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல்வனாக நின்றவன். மருத்துவத் துறையில் போக வேண்டியது தவறிய கதையை இங்கே எழுத விரும்பவில்லை.


4. ஆனால், 12 வயது முதல் வள்ளுவரின் வாக்குப்படி எப்பொருள் யார் யார்வாய்க்கேட்பினும், எத்தன்மைத் தாயினும் அவற்றின் மெய்ப்பொருளைக்காண்பதில் என்னையறியாமலே ஈடுபட்டு வந்துள்ளேன். எனக்கு  24 முடிந்து 25 நடக்கும் போது பட்டப்படிப்பு முடித்து, சான்று கிடைத்த மறுநாள் முதல்-6 மாதம் ஆசிரியனாக உயர்நிலைபப் பள்ளியில் பணியாற்றி, மாலை 5 மணிக்கு ராஜிநாமா செய்துவிட்டு மறுநாள் காலை காவல்துறை உதவி ஆய்வாளனாகப் பணியில் சேர்ந்து-34 ஆண்டுகளுக்குப் பிறகு 1997 கடைசி நாள் ஓய்வு பெற்று--அதிலிருந்து இன்றுவரை படிப்பது நுகர்வோர் பாதுகாப்புச்சங்கம் நடத்துவது மக்களுக்கு  விழிப்புணர்வூட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறேன்.


5. என் இரு பெண்குழந்தைகள் நான் விட்ட மருத்துவப்படிப்பை வென்றெடுத்தார்கள். பட்ட மேற்படிப்பும் அதற்கு மேல் நிபுணத்துவப்படிப்பும் (ளுரயீநச ளயீநஉயைடவைல) படித்துள்ளார்கள். அவர்களது கணவர்மார்களும்(ளுரயீநச ளயீநஉயைடவைல) மருத்துவர்களே. ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜன். மற்றவர் இருதய நிபுணர். என் முதல் பேராண்டி கண்ணன் என்ற சித்தார்த்தன் 11 ஆம் வகுப்பிலேயே (16வயது) தேர்வெழுதி சர்சிவி ராமன் மற்றும் அப்துல் கலாம் இருவரும் பணியாற்றிய பெங்களூரு மைய விஞ்ஞான நிறுவனத்தில் இளம் விஞ்ஞானியாகத் தேர்வு செய்யப்பட்டு 12 ஆம் வகுப்பில் மாதம் ரூ.4500/-படிப்புத் திறமைக்காகப் பரிசாகப்பெற்றவன். அதற்கு மேல் ஓசு பணம் வாங்க மறுத்து-- தற்சமயம் டெல்லி ஐஐடியில் பயின்று வருகிறான். என் பெற்றோரின்  மரபுக்கூறுகள் என் மூலம் என் குழந்தைகள் பேத்துக்களுக்குச் சென்றுள்ளன.


என் அண்ணன் ஆசிரியர். 2 முறை ஆசிரியர் தொகுதி எம்எல்சியாக இருந்தவர். என் தம்பி ஒருவர் அமெரிக்காவில் மருந்துத்துறைப் பேராசியராக இருந்துவிட்டு சுய மருத்துக்கம்பெனி நடத்துகிறார். 30 எஸ்ட்ஸ் நோயாளிகளின் பிள்ளைகளுக்கு விடுதி கட்டிக் கொடுத்து கல்வியும் உணவும் படிப்பும் கடந்த 8 ஆண்டுகளாகத் தந்து வருகிறார்.  எனது கடைசி இரண்டுஆண்டுப்பணி க்யூ பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் பணி. நாமக்கல்லிலேயே தங்கிப் பணி புரிந்தேன்.


தனது தப்பை அரசு ஏற்று, என்னை இறுதி இரண்டு ஆண்டுகள்  மாவட்ட கூடுதல் காவல்  கண்காணிப்பாளராகப் பணியாற்றியதாகப் பாவிக்கப்பட்டாலும்,  ஒரே மாதம் மட்டும்  தேனி மாவட்ட கூடுதல் காவல்  கண்காணிப் பாளராகப் பணியாற்றி ஓய்ந்தேன்! பணி முடிந்த தேதியில் இருந்து மக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். 1997 இல் ஓய்வுற்ற நான் 2000 முதல் ஊமையர் குரல் பத்திரிகை மூலம் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்கிறேன். நாமக்கல் பஸ்நிலையத்தில்-நகராட்சி அனுமதி பெற்று- ஒரு 20 அடி அகலம் 10 அடி உயர் கரும்பலகை ஒன்றைச் செய்வித்து--அதில் அவ்வப்போது மக்களை விழிப்படையச் செய்யும் செய்திகளை எழுதிப் போடுகிறேன். சுயபுராணம் இத்தோடு நிற்க.


“குடிநீர் பிரச்சினை தீர்க்க--கூரைமீது விழும் மழைநீரை நிலத்துக்குள் அனுப்பு! அல்லது மின் சாரம் துண்டிக்கப்படும்!”-2001 இல் தமிழக அரசின் எச்சரிக்கை என்னைச் செயல்பட வைத்தது!


6. 2001-இல் இன்றைய இதே முதல்வரின் கீழ் இருந்த ஆட்சி--மிக்கடுமையான குடி தண்ணீர்த் தட்டுப் பாட்டைச் சமாளிக்க--நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த் தும் முயற்சியாக--தமிழகத்தில் நகரமோ பட்டிக்காடோ தோட்டமோ, மலை உச்சியிலோ (ஓலை புல் முதலிய னவற்றால் வேய்ந்த கூரை தவிர்த்த)--எந்த கான்க் கிரீட் கூரை, ஓட்டுக்கூரை வீடானாலும்  அதன் கூரை மேல் விழும் மழை நீர்--ஒரு பக்கமாகக் கொணரப் பட்டு-பைப் மூலமாக தரையில் தோண்டப்பட்ட ஒரு இரண்டடி ஆழமாவது உள்ள குழியில் கண்மணல் போட்டு அதில் விட வேண்டும்--கிணறு அருகில் இருந்தால் அதில் விட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாது போனால்--அக்கட்டிடத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்தும் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்கும் நல்லெண் ணத்தோடு செய்யப்பட்டாலும்--அது அவ்வளவு விஞ்ஞானபூர்வ திட்டமில்லை என்பதுதான் உண்மை!


7. மின்சாரம் துண்டிக்கப்பட்டால், கற்காலத்துக்கு வாழ்க்கை போய்விடும். எனவே, அனைவரும் அதை நிறைவேற்றினர். நான் சற்று யோசித்தேன். நீரை கல் மண்நிரப்பிய இரண்டடி சின்னக் குழியில் விட்டால்-2 செகண்டில் அது நிரம்பி மீண்டும் வெளியில் தான் ஓடப்போகிறது என்று எண்ணிப் பார்த்தேன். அதிகாரி களுக்கு அவ்வளவுதான் சொல்லத் தெரிந்திருக்கிறது! என்ன செய்ய?


8. யோசித்தேன். படித்த விஞ்ஞானம் கை கொடுத்தது. என் வீடு கான்ங்கிரீட் கூரையால் ஆனது. 2500 சதுரபரப் புள்ளது. எனது கான்கிரீட் கூரை நீரை--நிலத்தடித் தொட்டி கட்டி, சேமித்து காற்று வெளிச்சம் படாமல் முடிவிடுவது என்று முடிவு செய்து-என் வீட்டு வாசலில் (முன்புறக்காலியிடம்) கார் நிறுத்த இடையூறின்றி--இடக்கைப்பக்கம் 14 அடி நீளம் 8 அடிஅகலம் 10அடி ஆழம் உள்ள தொட்டியைக் கட்டி நீர் கசியாத் தூளை சிமெண்ட்டுடன் சேர்த்துப் பூசி மேலேயேயும் காற்று வெளிச்சம் படாமல்--ஒரு ஆள் நுழையும் மூடிக்கு (Manhole) இடம் விட்டு காங்கிரீட் போட்டு தொட்டியை முடினேன். அதன் மேல் எனது சிறிய நூல் நிலையத்தைக் கட்டி அதை என் அலுவலகமாகவும் கணிணி தட்டச்சு செய்யுமிடமாகவும் இன்றுவரை பயன் படுத்தி வரு கிறேன்.


9. மாடி மேல் விழுந்த நீரை முதலில் விவரம் தெரியாமல்--தொடர் மழை காலத்தில் இரண்டொரு நாள் மழைநீரை மண்ணில் பாய விட்டுவிட்டு-தூசு துப்பில் லாமல் நீர் வருவம் நாள் பார்த்து தொட்டிக்குள் செலுத்தி னேன். மழைக்காலத்தில் இரண்டு நாளில் அந்தத் தொட்டி நிரம்பி விடுகிறது. பிறகு சில நாட்களிலேயே யோசித்து--சிறு தொட்டி ஒன்றை நிலத்துக்கு மேலே கட்டி அதில் மணல் ஜல்லி அதன் மேல் மணல் ஜல்லி-மணல் என்று பல அடுக்குகள்(Several layers) கொட்டி அதற்குள் மாடி மழைநீரைப் பாய்ச்சினேன். அது பண் ணாடை போல் நீரில் தப்பித் தவறி வரும் அனைத்து அழுக்குகளையும் தூசு துப்புகளையும் அகற்றி உள்ளே அனுப்பியது. துவக்கத்தில் மழை நீரில் ஏதாவது கிருமி கள் இருந்தால் என்ன செய்வது என்றுபயந்து காய்ச்சி ஆறவைத்துக் குடித்தோம். சமையலுக்கு அந்தக்கஷ்டம் இல்லை. சோறு சீக்கிரம் வெந்தது. வெள்ளையாக இருந்தது! பெருமகிழ்ச்சி!  ஆனால் காய்ச்சி ஆறிய நீர் குடிக்க சுiயாய் இல்லை. எப்படி இருப்பினும் கலர் கலராக முனிசிபாலிடி அனுப்பிய காவிரி நீரை விட இது சிறந்ததுதான்.


10. இப்படி   இருக்கையில் 10 மாதம் முடிந்து,  ரத்தப் பரிசோதனை நிலையத் தில் இருந்துகிருமிகள் அகற்றப்பட்ட சுத்தமான சிறு மூடியோடு கூடிய டப்பாவைக்(Sterilised container) கொண்டு வந்து, தொட்டியில் இருந்து--மாதிரி நீரை(Water sample) எடுத்துச் சென்று சோதனைக்குக் கொடுத்தேன். ஒரு நுண்கிருமியும்(பாக்டீரியா) இல்லை என்று  4 நாள் வைத்திருந்து பார்த்துவிட்டுச் சான்று தரப்பட்டது. அது முதல்  காய்ச்சிக் குடிப்பதை விட்டு மழைநீரை நேரடி யாகக் குடித்தோம். மிக ருசியாக இருந்தது. அதன் பின் 11 ஆண்டுகள் கழித்து 2013-இல் இதே சோதனையை மீண்டும் செய்த போதும் எந்த நுண்கிருமிகளும் இல்லை.


மழை அளவு பற்றிய புள்ளிவிவரம் சேகரிப்பு:


11. பிறகு என் வீட்டின் மேல் விழும் முழு நீரையும் சேகரித்தால் எவ்வளவு நீர் கிடைக்கும் என்று அறிய மண்டை அரிப்பெடுத்தது. சார்பதிவாளர் அலுவலகம் ஒவ்வொன்றிலும்--நாடு முழுதும் மழைமாணி(Rain Guage) உண்டு என்பதறிந்ததே! வட்டார அலுவலகம் இருக்கும் இடத்தில் அந்த மழை நீர் அளவுகள் வட்ட அலுவலக மழைநீர் கிளார்க்கிடம் அது இருக்கும். வட்டார அலுவலகம் இல்லையானால் அதே சார்பதிவாளரின் சம்பந்தப்பட்ட கிளாக்கிடம் இருக்கும்.


12.  நான் தறபோது வாழும் நாமக்கல், படித்து வளர்ந்த சேந்தமங்கலம், தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை மூன்றுக்கும் அதற்குரிய கட்டணங்களைக் கட்டி 2000 முதல் 2013 முடிய காலண்டர் ஆண்டுகளுக்கு (ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை)  பெய்த மழையளவைப் பெற்றேன். இதர அண்டை வட்டங்களான ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலுhர், கரூர் ஆகிய ஊர்களில் உள்ள மழையளவுகளை நேரில் சென்று--கெஞ்சிக் கேட்டு பதிவேடுகளில் பார்த்துக் குறித்துக் கொண்டேன். எல்லா ஊர்களிலும் கிட்டத்தட்ட இதே மாதிரி மழை அளவுதான் இருந்தது.


13. தமிழகத்தின் பாலை நிலம் என்பது கொங்குநாடுதான். அதாவது கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை-மாவட்டங்கள்தான். இதே போல இன்றைய பெரம்பலூர் மாவட்டமும் சிவகங்கை மாவட்டமும் பாலைநிலங்கள்தான்.


14. கொல்லி மலை ஓரம் உள்ள ஊர்களில் மட்டும் சற்றே எச்சாக மழை பெய்திருந்தது. நாமக்கல்லின் சராசரி மழை அளவு 650 மி.மீ. ஆகும். 300 மி.மீ. என்பது 30 செ.மீ. அல்லது ஒரு அடி உயரமாகும். ஒரு கனஅடி நீர் என்பது 28.32 லிட்டர் கொண்டதாகும்.  200 லிட்டர் ஒரு பெரிய பேரல் ஆகும்.


15. எனவே என் வீட்டுக்கூரையில் சராசரியாக ஆண்டுக்கு 2500 ஒ 28.32 ஒ 2.16=1,52,928. அதாவது தோராயமாக 1,50,000 சதுர அடி என்று வைத்துக்கொண்டாலும் அது தினம் ஒன்றுக்கு(15000 வகுத்தல் 365 நாள் வகுத்தல்  200லிட்டர்=) 2.05 அல்லது தோராயமாக 2 பேரல் நீராகிறது! எவ்வளவு பெரிய குடும்பமும் இந்த நீரை வைத்து குடிக்க, சமைக்க, குளிக்க துணிகளை வெளுக்கப் போதுமானது!


சமையல் & குடிநீர் சேமிப்பதெப்படி? நானே செய்த பரிசோதனையில் கண்ட உண்மைகள்!


16. நான் நாமக்கல்லில் முதலில் புறவீட்டைக்கட்டி விட்டு, தலைவீட்டை(Main House) கட்டினோம். அதில்  வீடு கட்டும் முன்பு நான் ஆழ்துளைக்கிணறு தோண்டி அத்தண்ணீரில் வீடு கட்டினேன். முதலில் புறவீட்டைக்கட்டி விட்டு போர் தண்ணீரில் சோறாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது--சராசரி எங்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர் கேஸ் செலவாயிற்று.  வீடு கட்டி முடித்த பிறகு காவிரி ஆற்று நீர் வந்தது.


17. அது வந்தபிறகு 10 சிலிண்டர்தான் செலவாகியது. நான் மழைத்தண்ணீர் சேமித்தபிறகு மழைத்தண்ணீரைப் பயன்படுத்தியபோது ஆண்டுக்கு  ஆண்டுக்கு 8 சிலிண்டர்  எரிவாயுதான் செலவாகியது.


மழைநீர் அறுவடை செய்த கதையை பத்திகள் 6 முதல் 15 வரை-காண்க!


18. அற்ப மழையே பெய்யும், ஆண்டுக்கணக்கில் வறண்டே கிடக்கும்--நாமக்கல் மாவட்டம் வேலூர் வட்டத்தில் உள்ள புளியம்பட்டி என்ற பட்டிக் காட்டில் உள்ள என் சின்ன மகள் தோட்டத்திலும் அந்த மாதிரி குழிதோண்டி பூமிக் கடியில் நீர் போகச் செய்யப்பட்டது. ஆனால் மழை  பெய்தால் சில செக்கண்டுகளில்-அந்த ஊரிலும் கூட-(எல்லா ஊரி லும் நகரங்களிலும்தான்) அந்தக் குழி நிறைந்து நீர் வெளியில் தான் ஓடுகிறது. இது தேவையில்லாதது. இங்கெல்லாம் குழி தோண்டி நிலத்துக்குள் நீர் விடச் சொன்னது பைப் வியாபாரிகளுக்கு அல்லாமல் யாருக்கும் எப்பயனும் இல்லை! மேலும் விவசாயிகள் வயல்களை நிரவி வைத்துள்ளனர். அந்த குறைந்த மழை வரப்பை மீறிப் போக முடியாது. போனாலும் பக்கத்துக் குட்டைகளில்தான் தங்கும். அனைத்து வயல்களும் நிரவப்பட்டு பெரிய வயல் கரைகள் உள்ளன. மழை அந்த வயல்களில் சேர்ந்தாலே அந்நீரை பூமி உடனே சில மணிநேரத்தில் உறிஞ்சி விடும். குட்டைகள் இப்போது இருபது  வருடங்களில் நிரம்பி நான் கண்டதில்லை!


விவசாயத்துக்கு வரும் காவிரி ஆற்று நீர் கூட நீல, மஞ்சள், சிவப்பு நிறங்களாக வருகிறது! நாமக்கல் நகராட்சி தரும் காவிரி நீர் என் வீட்டுக்கு மஞ்சள் நிறத்தில்தான் வந்து கொண்டிருக்கிறது! ஈரோடு, பவானி, பள்ளிபாளையம் சாயப்பட்டறைக் கழிவுகளால்தான் இப்படி நடக்கிறது! எனவே மழைநீரை சேமித்து குடிக்க சமைக்கப்பயன்படுத்துவது--நாட்டுமக்களின் சுகாதாரத்தைக்காக்க மிக அவசியம்!


19. இந்த ஆண்டு பட்டிப் பொங்கலுக்கு என் சின்ன மகள் தோட்டத்துக்குப் போயிருந்தேன். மாட்டுப்பொங்கலை நாங்கள் பட்டிப்பொங்கல் என்பதுதான் இன்றுவரை வழக்கம். மகளும் மருமகனும் டாக்டர்கள்; கோவையில் உள்ளார்கள். என்சம்பந்திகள்-வயதானவர்கள் ஆனதால்-ஆடு மாடுகள் வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, பட்டிக் காடுகளில் காலம் காலமாக நடந்து வருவதுபோல்--பக்கத்துத் தோட்டத்தில் மாட்டுப்பட்டியில்-அவர்களோடு சேர்ந்து பொங்கல் இட்டோம்.


20. அந்த பக்கத்துத் தோட்டத்துக்காரர்-LIC-ஏஜெண்டாகப் பணியாற்றுகிறார். படித்த விவரமறிந்த மனிதர். தன் தோட்டத்துக்கு இதரரோடு சேர்ந்து கூட்டு உழவு நீர் திட்டமிட்டு, காவிரிக்கரையோரம்  போர் போட்டு--காவிரி நீரை உறிஞ்சி வந்து விவசாயம் செய்கின்றனர். ஆனால் குடிக்க ஆர்வோ மெஷின் வைத்து போர் தண்ணீரைச் சுத்தம் செய்து குடிக்கிறார். கிணற்றில் நீர் கிடையாது.  காவிரி ஆற்றில் இருந்து பைப் மூலம் நீர் கொண்டுவந்து குடியானவர்கள் நூற்றுக் கணக்கான ஏக்கர்களை மேட்டில் பாய்ச்சுகிறார்கள். வரும் ஆற்றுநீர்--கலர் கலராக வருகிறது. இந்தக் கலர்-பவானி, குமாரபாளையம்,  பள்ளிபாளையம், ஈரோடு பகுதிகளில் இருந்து வரும் தோல் பதனிடும் & துணிகள் சாயமேற்றப்படும் ரசாயனங்களால் வருவதுதான். இது இன்னும் மோனூர், முசிரி, குழித்தலை, திருச்சி, திருவரங்கள் போன்ற காவிரிக்கரை நகரங்கள் ஊர்கள் அனைத்தின் மலக்கழிவுகளையும் இதர கழிவுகளையும் சுமந்து செல்வதால், தஞ்சையிலும் நாகப்பட்டினத்திலும் காரைக்கால் பாண்டியிலும் மழைநீரைச் சேகரித்துக் குடிப்பது சமைப்பதே ஆரோக்கியத்தை உறுதி செய்யும்!


21. என் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆறு ஓடும் இடம் எல்லாம்--மேற்படி நகரங்களின் மனிதக்கழிவுகளும் சாக்கடை நீராக காவிரியில் விடப்பட்டு மிதந்து வருவது நேரில் பார்த்தால் குடலைப் பிடுங்குகிறது. எனவே, அந்த டுஐஊ நண்பர்-தன் நிலத்தில் போர் போட்டு நீரை உறிஞ்சி ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து (=மெல்லிய ஜவ்வு வழியாகப் பாய்ச்சி சுத்தம் செய்தல்) குடிக்க சமைக்கப் பயன்படுத்துகிறார். மீதி நீரை  ஆடு மாடுகளுக்குப் பயன்படுத்தியது போக உழவுக்குப் பயன் படுத்துகிறார். மக்கள் வரிப் பணத்தில் இலவச கரண்ட் கிடைப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்! ஆனால் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது! என்ன செய்தாலும் போர் மூலம் எடுக்கும் நிலத்தடி நீரில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்தையும் சாயப்பட்டறை ரசாயனங்களையும், இதர உப்புக்களையும் 100 சதமானம்  நீக்க முடியாது என்பது அவருக்குத் தெரியாது! மழைநீரை அறுவடை செய்து உணவு சமைக்க குடிக்க ஆடுமாடுகளுக்குக் குடிக்கப் பயன்படுத்தலாம் என்பது அவருக்குத் தெரியாது.


22. அவரது குடியிருப்பு வீடு உள்ளிட்ட ஆடுமாட்டுக்  கொட்டகைகள் வணிகத்துக்காக முட்டைக் கோழிகளை முன்பு வளர்த்த கூரைகள் அனைத்தும் கான்கிரீட் மற்றும் சிமெண்ட் அட்டைகளால் ஆனவை. அவற்றின் பரப்பளவு சுமார் 7000 சதுர அடி இருக்கும். பல ஆயிரக்கணக்கான் அடிகள் கொண்ட கோழிக்கொட்டகைகளை-ஒன்றும் விளையாத வரட்டு நிலத்தில் இருந்து அவர் அகற்றி விட்டார். அது மாடு மேயப்பயன்படுகிறது!


23. நிற்க. அவர் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீர் கசியா நிலத்தடித் தொட்டிகட்டி வெளிச்சம் காற்றுப்படாமல் மூடி- நன்கு மழை பெய்யும் வருடத்தில் மழை அறுவடை செய்தால்--நான்கு நாளில் தொட்டி நிறைய மழை நீரை அறுவரை செய்து விடலாம். அது அவருக்கு குடிக்க சமைக்க 5 ஆண்டுகூட வரும்! சென்ற ஆண்டுபோல மழை மிகக் குறைவான ஆண்டில்கூட ஒரு முப்பது நாற்பதாயிரம் லிட்டர் நீரை அறுவடை செய்து விடலாம்! ஆனால் அப்படி செய்து வைக்க அவருக்குத் தோன்றவில்லை. அரசோ தன்னார்வ இயக்கங்களோ ஊடகங்களோ அதை வலியுறுத்திச் சொல்லவில்லை என்பதுதான் காரணம்! ஊடகங்கள்--மக்கள் நீருக்காகப் போராடுவதையும் சாலைமறியல் செய்வதையும் பெரிது படுத்தி பணம் சம்பாதிக்கத்தான் முயல்கின்றன. மகக்களுக்கு வழிகாட்ட வரவில்லை! நான் கஷ்டப்பட்டுவிலக்கிச் சொன்னேன். அவர் அதைக்காதில் வாங்கினார். காற்றில் விட்டாரோ வைததுள்ளாரோ, நடை முறைப்படுத்துவாரா மாட்டாரோ தெரியவில்லை! ஆண்டவனுக்கே வெளிச்சம்!


கூகைளில் இருந்து கொட்டி பூமிக்குள் சென்ற மழைநீரால் நன்மை யின்றிப்போவதும்-பூமிக்குள் நுழைய விடாமல்-நீர்கசியா நிலத்தடித்  தொட்டிகளில் சேமித்துக் காக்கப்படும் மழை நீரால்  விளையும் நன்மைகளும்!


(ஆற்று நீருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை! ஆறுகளில் சாயப்பட்டறைக் கழிவுகளும் தோல் பதனிடு கழிவுகளும், சாக்கடை நீரும் கலப்பது தனி விஷயம்!)


பூமிக்குள் செலுத்தப்படும்/சென்றுவிடும் மழை நீர் என்ன ஆகிறதென்று அறிந்திடுங்கள்!


25.  (1) மழைநீர் கூரைமேலிருந்து பூமியில் விழுந்த உடனே பூச்சிக் கொல்லி மருந்து விஷத்தோடு கலக்கிறது. 2. ஃளூரைட் போன்ற உப்புக்களும் இதர உப்புக்களும் கலந்து கடின நீராகிவிடுகிறது. குடிக்க ருசியில்லை 3. மழை நின்ற மறுநிமிடம் முதல்-பூமிக்குள் சென்ற மழைநீர்--தொடர்ந்து ஆவியாகிக் காற்றில் கலந்து போய்க்கொண்டே இருப்பதால்-ஏராளமான நிலத்துக்குள் சென்ற மழை நீரை இழக்கிறோம்! 4. இந்த விஷம் மற்றும் உப்புக் கலந்த நீரைக் கிணற்றில் இருந்து அல்லது ஆழ்குழாய் மூலம் எடுத்துக் குடித்தால்  புற்று நோய் உள்ளிட்ட பல வித தோய்கள் வருகின்றன. 5(1) மழைநீரில் கரைந்த ஃளூரைட் உப்பால்--பல் நிரந்தரமாகக் கரை படிந்திருக்கும். 5(3)கால் கை எலும்புகள் வளைந்து போகலாம். 5(4) மூட்டுக்களில் வலி ஏற்பட்டு படு துன்பத்துக்கு ஆளாக்கலாம். 6(1) இந்த உப்புக்கலந்த நீரில் சோறாக்குவதால் விறகோ-எரிவாயுவோ குறைந்தது 20 சதம் அதிகமாகிறது. 6(2) சமையலுக்கு நிறைய நேரம் வீணாகிறது. 7. குடிக்க இந்த நீர் சுவையாக இல்லை. எனவேதான் சின்தெட்டிக் கேன்களில் நீரை வாங்கிக் குடிக்கும் அல்லது வீட்டி லேயே ஆர்ஓ (R.O.=Reverse Osmosis) செய்து உப்பகற்றிக் குடிக்கும் பழக்கம் ஏற்படுகிறது.


26. நாமக்கல் போன்ற நகரங்கள், சேந்தமங்கலம் போன்ற பேரூர்கள் மற்றும் மரூர்ப்பட்டி போன்ற சிற்றூர்களில் கூட வசதி  படைத்தவர்கள்  அங்கங்கே தங்களுக்குக் குடிக்க உப்புக் கலவாத குடிநீர் கிடைக்கவில்லை என்பதால்-உப்பு நீக்கிய நீரை-மினரல் வாட்டர் என்ற பெயரால்-நைலான் கேன்களில்  தமிழக மெங்கும்/நாடெங்கும் வாங்கிக் குடிக்கின்றனர். ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து அக்வா கார்டு, அக்வாஃபினா போன்ற மிஷின்களை வாங்கி-அரசு தரும் மான்ய விலை மின்சாரத்iத் துஷ்பிரயோகம் பண்ணி --ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்(சுநஎநசளந டீளஅடிளளை) செய்து குடிக்கின்றனர்.


கேன்களில் நீர் விற்கும் நீர்வணிகர்கள் “சுத்திகரிப்பது” வீண் கண்துடைப்பு!


27. ஆனால் வணிகர்கள் அப்படி நிலத்தடி நீரை அல்லது ஆற்றோர கிணற்று நீரை உறிஞ்சி அவர்கள் சுத்திகரித்து கேன்களில் விற்பதாகச்  சொல்லிக் கொண்டாலும்--அண் மையில் பல கம்பெனிகளின்ஆர்வோ நீர் கேன்ககளில் அசுத்த நோய்க் கிருமிகள் மட்டுமின்றி வண்டுகள் புழுக்கள்  உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு--சென்னையைச் சுற்றி உள்ள பல கம்பெனிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன!


28. 10 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மினரல் வாட்டர் பாட்டிலில் ஒரு வளர்ந்த வண்டே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நாமக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டு--எனது சகோதர நுகர்வோர் சங்கத் தலைவர் ஒருவரால்  வழக்கிடப் பட்டது.


29. நீர் வணிகர்கள் சங்கம் அமைத்துப் போராடுகிறார்கள். மக்கள் குடிக்க நீர் இன்றி சென்னை, மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் மாவட் டங்களில் அப்படி சப்ளை செய்யும் சில கம்பெனிகள்--தரும் நீர் சுத்தமாக இல்லாமல்-நோய்க்கிருமிகள் உள்ள சங்கதி தெரிந்தபின்  ஒரே போராட்டமாக உள்ளது. காவிரி, பாலாறு, தென்பென்னை, ஐயாறு, வைகை, தாமிரபரணி, செய்யாறு  அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. அரசாங்கம் நல்ல குடி நீரை சப்ளை செய்யத் தவறி விட்டதாக கண்டித்து அறிக்கைகள் வெளிவருகின்றன. அவரவர் ஓட்டுப் பிடிக்க இதைச் சொல்கின்றனர். கடவுளே நாட்டை ஆண்டாலும், மழை பொய்த்தால்--நீரை எப்படி மந்திரத்தில் உற்பத்தி பண்ணித் தருவாரா? இந்தப்பிரச்சினையைச் சமாளிக்கத்தான் நிலத்தடித் தொட்டிகளில் மழைநீர் சேமித்து வைக்கப்படவேண்டும். இரண்டாண்டு மழை இல்லை என்றாலும் சமாளித்து விடலாம். பெருமுதலாளிகளுக்குத்தான் தங்கள் தொழிற்சாலை களுக்குத் தண்ணீர் உறிஞ்சுவது கடினமாகப் போகும். அவர்கள் ராட்சதப் போர் போட்டு உறிந்துவிடுவதால் விவசாயம் தான் நாசமாகிறது! விவசாயிகள்இதைக் கண்டு கொண்டு போர் போட அனுமதிக்காமல் போராட வேண்டும்!


30. தத்தம் கூரைமேல் விழும் மழை நீரை--நீர் கசியா நிலத்தடித்தொட்டிகளில்  சேமித்து வெளிச்சம் காற்றுப்படாமல் மூடிவிட்டால், இந்த நீர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. பூச்சி புழு தோன்றுவதில்லை. ஆவியாகிப்போய் குறைவதில்லை. நிலத்தடி நீரின் அனைத்துத் தீமைகளும் பறந்து போகின்றன.


31. நிலத்தடித்தொட்டி நீரால் விளையும் நன்மைகள்: 1. குடிக்க மிகச் சுவையான நீர் 2.விற கோ எரிவாயுவோ 40 சதம் குறைவு. 3.சமைக்கும் நேரம் குறைவு. 4. பெரிய வீடுகளின் கல்லூரிக் கட்டிடங்களின் கூரைகளில், ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் கூரைகளில் இருந்து  சேமிக்கப்படும் மழைநீர் (i) குடிப்பதற்கு (ii)சமைப்பதற்கு மட்டு மின்றி, அனைத்து ஹாஸ்டல் மாணவர்களுக்கும், பயணிகளுக்கும் (iii)துணிதுவைக்க (iஎ)குளிக்க வேண்டிய நீர் கிடைக்கிறது.(ii)ரயில் பயணிகளுக்கு நல்ல குடிநீரும், கக்கூசுக்குக் கூட நல்ல நீர் கிடைக்கும் (iii) யார் எங்கிருந்தாலும் உடல்  சோப்பு 75 சதம் மிச்சமாகிறது.(iஎ) துணி சோப்பு குறைந்தது 60 சதம் குறைகிறது. (எ) துணி பளிச்சென்று வெளுக்கிறது.(எi)வீடுகளில் ஹாஸ்டல்களில் சேமித்த நீர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வரும். அண்டை யில் வாழும் எளியோருக்கும் கூட நீர் தொடர்ந்து சப்ளை செய்யலாம்!


சென்னை நடுநகரில் உள்ள லயோலா, திருச்சி புனித வளவனார் கல்லூரிகளைக் கணக் கில் கொள்ளுங்கள். நாமக்கல்லில், இதர மாவட்டங்களில்  கல்வி வணிகர்களால் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான பொறியில் கல்லூரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான் பள்ளிகளைக் கணக்கில் கொள்ளுங்கள்! ஏராளமான நனமை கள் அற்ப செலவில் விளையும். அவர்கள் அளவற்ற பணத்தைஅள்ளிக் குவிக்கிறார்கள். அவர்களை அரசு தயவு தாட்சண்யமின்றி நிலத்தடி நீரைத்தொடாதே, மழைநீர் முழுதையும் நிலத் தடித் தொட்டிகளில் கட்டாயம் சேமி என்று உத்தர விடலாம். அரசுக்கு மின்னுற்பத்திச் செலவு குறையும்.  கல்லுரி பள்ளி வணிகருக்கும் அள வற்ற லாபம்! ஆனால் ஒரு முறை மட்டும் முதலீடு தேவை! இந்தக்கோடீஸ்வரஸ்களுக்குக் கடன் தர வங்கிகள் காத்துக் கொண்டு வரிசையில் நிற்கின்ற னவே!


32. இந்தனை கெடுதல்களை அகற்றி இத்தனை நன்மைகளை அடையக் கூடிய திட்டத்தை-மைய மாநில அரசுகள்  தீர ஆலோசித்து நிறைவேற்ற வேண்டும். அதற்காக தன்னார்வ இயக்கங்கள் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் அணுக வேண்டும்!


இல்லாத நீரை எப்படி சப்ளை செய்வது?


33. ஆண்டு முழுதும் மழை பொய்த்துப் போன நேரத்தில் யார் அரசாண்டாலும் மந்திரத்தில் மாங்காய் காய்க்க வைக்க முடியாது; நீர் தரமுடியாது! அரசை நக்கல் செய்வது தர்ம மல்ல.


34.  இல்லாத நீரை எப்படி சப்ளை செய்யமுடியும்? அதி காரிகளும் ஊடகத்தினரும்--தனியார் ஆற்றோரம் ஆழ் துளைக் கிணறுகளில் (Borewells) இருந்து தண்ணீரை  உறிஞ்சி விடுகிறார்கள் என கூக்குரலிடுகின்றனர். அதே தனியாரிடம் இருந்து தங்கள் வீட்டுக்கு மட்டும் நீரை வாங் கிக் கொட்டிக் கொள்கின்றனர்.


35.  தனியார் ஈடுபடும் எதிலும் பொருள் தட்டுப்பாடு ஏற்படுங் காலங்களில் கொள்ளை லாபம் அடிப்பது உலகறிந்த ரகசியம். தனியார் தொழிலை இந்த அரசியல் வணிகர்களால் தடை செய்ய முடியுமா? எந்தப்பத்திரிகையானாலும்--இன்ன தனியார் இந்தத் தப்பைச் செய்கிறார் என்று ஏன் பெயர் குறிப்பிட்டு-எழுதுவதில்லை? பல தொழில்களையும் செய்யும் பல கட்சிப் பிரமுகர்கள்தான் இதைச் செய்கின்றனர் என்பது தெரியும். அவர்களைப் பெயர் குறிப்பிட்டு எழுதி விட்டால், அப்புறம் விளம்பரம் கிடைக்காது. சில பத்திரிகைகளுக்கு செய்திகளாக வணிக விளம்பரத்தைப் போடப் பணம் கிடைக்காது.


36.  சுத்தமான குடிநீர்ப்பஞ்சத்தை நிரந்தர மாகப் போக்க ஒரே வழி-அனைத்து நகரங்கள் & கிராமங்களில், தோட்டங்களில் உள்ள வீடுகளின்,கட்டிடங்களின்-கூரைகளின்மேல் விழும் மழைநீரை நிலத்தடித் தொட்டிகளில் சேமிப்பதே! அத்தோடு சமையல் எரிவாயு பயன்பாடும் 20 சதமாவது குறைந்து போகும்! நீரைச் சுத்திகரிக்கும் மின்சாரம் மிஞ்சம்! பூச்சிக்கொல்லி மருந்து, ஃப்ளூரைட் உப்பு, அவற்றால் விளையும் நோய் கள் என்ற பேச்சுக்கும் இடமில்லை!


நானே செய்த பரிசோதனை!


37. 2001-இல் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த முதல்லர் ஜெயலலிதா அவர்கள் மழை நீரை அறுவடை செய்யச் சொல்லி  உத்தரவிட்ட போதே-நான் என் வீட்டில் யாரும் சொல்லித் தராமலே-வீட்டுக் கான்கிரீட் கூரை மேல் விழும் நீரை குழாய்களின் மூலம் கொண்டு வந்து-ஒரு நீர்கசியா நிலத்தடித் தொட்டியில் சேமித்தேன். அத்தொட்டி கட்டும் போது நீர் கசியாத ரசாயனப் பவுடர் கலந்து கட்டினேன். நீர் வெளியிலும் போக முடியாது. எத்தனை மழை கொட்டினாலும் வெளிநீரும் ஒரு சொட்டுக் கூட உள்ளே கசிந்து வர முடியாது. தொட்டியின் மேல் காங்கீரிட் தளத்தால் மூடி விட்டேன். ஒரு ஆளிறங்கு மூடியும் (ஆயnhடிடந) வைத்தேன். நீர் தொட்டிக்குள் செல்லும்முன்--மணல் சிறு ஜல்லிகள் அடுப்புக்கரி இவை நிரப்பிய இரு சிறு தொட்டி களின் மூலம் செலுத்தி வடிகட்டிச் சுத்தம் செய்து--நிலத்தடித் தொட்டியில் சேமித்தேன்.


38.  மேலே சொல்லியபடி--அந்தத் தொட்டியில் மழை நீரை கடந்த 2001-இல் முதன் முதல் சேமித்தேன். முதலில் 10 மாதம் கழித்து ரத்தப் பரிசோதனை நிலையத்தில் என் தொட்டி நீரைக் கொடுத்து--ரத்தத்தில் கிருமிகள் உள்ளனவா என்று சோதிப்பது போல--கல்ச்சர் டெஸ்ட் செய்து பார்த்தேன். எந்தக் கிருமி யும் வளரவில்லை. ஏனெனில் அந்த நீரில் வெளிக்காற்றோ ஒளி யோ படாமல் மூடப் பட்டு உள்ளது. சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயிரும்  வாழமுடியாது. இது உயிரியல் விஞ்ஞானம் படித்த அனைவருக்கும் தெரியும். நான் தாவரவியல் படித்தவன் என்பதால் இது எனக்கு-பால பாடம் போல் தெளிவாகத் தெரியும்.  இம்மாதிரி காற்றும் ஒளியும் படாத தொட்டியில் இருக்கும் நீர் பூமியடியில் இருந்து போர் மூலம் எடுக்கப்படும் நீருக்குச் சமமே; என்றுமே கெடாது--என்பதறிக.


இங்கிலாந்தில் கூரை நீர்--வீடு தவறாது சேமிக்கப்படுகிறது!


39. ஆண்டு முழுதும் மழை பெய்யும் இங்கிலாந்தில் ஒரு வீடு தவறாது கூரைகளில் மழை நீரைத் தொட்டிகளில் சேமிக்கிறார்கள் என்று-கோவையில் அவிநாசி சாலையில் குடியிருக்கும் என் நண்பர்-ஓய்வு பெற்ற காவல்துறை னு.ளு.ஞ. மு.சுப்பண்ணன் எனக்குச் சொல்கிறார். இவரது மகன் ஒரு மருத்துவர். அவர் லண்டனில் மருத்துவத் தொழில் புரிகிறார். பிரிட்ஷ் குடிமகனாக மாறி உள்ளார். அடிக்கடி மகனையும் மருமகளையும் பேரக் குழந்தைகளையும் பார்க்க லண்டன் செல்லும் நண்பர்-நேரடியாகக் கண்டுவிட்டு இதைச் சொல்கிறார். இத்தனைக்கு ஆண்டு முழுதும் மழை பெய்யும் நாடு இங்கிலாந்து!


40. 2001-இல் இருந்து இன்றுவரை எனக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு என்பது கிடையாது. காவிரி ஆறு--சாக்கடைத் தண்ணீர் போல் ஓடுவதால்-நகராட்சி வழங்கும் காவிரி நீரைக் குடிப்பதில்லை. துணிதுவைக்க குளிக்க பாத்திரங்கள் சுத் தம் செய்யப் பயன்படுத்துகிறோம்.


41.  என் வீட்டின்  கூரைப் பரப்பு 2500 சதுர அடி கொண்டது என்றாலும்-நன்றாக வடகிழக்கு மழை பெய்யும் போது இரண்டு அல்லது மூன்றுநாளில் சுமார் 30,000லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டி நிறைந்து விடுகிறது. மழைக்காலம் முடியுமுன்பு--செலவாகும் நீரைச் சரிசெய்து தொட்டியில் குறைந்து போகும் நீரையும் நிரப்பி விடுகிறேன். சென்ற ஆண்டுக்கு முன்  சேமித்த நீர் இன்றும் பயன்படுகிறது. தினம் சமையலுக்கும் குடிக்கவும் 40 லிட்டர்  எடுத்தாலும் கூட, 30000 லிட்டர் நீர் 750 நாட்களுக்கு வரும்.


நாமக்கல்லில் வீட்டின் மேல் கொட்டிய “சிறுவாணி” நீர்!


42.  ஒருமுறை இந்த நீரை பாட்டிலில் கிருஷ்ணகிரிக்கு எடுத்துச் சென்றேன். அங்கே ஒரு பொறியாளர் அந்த நீரைக் குடித்துவிட்டு-- “ஏங்க சார், இது என்ன சிறுவாணி நீரா?” என்று கேட்டார். “ஆமாம்! சிறுவாணி நீரை எங்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து இலவசமாகக் கொட்டுகிறார்கள். உமக்கு வேண்டுமானாலும்-கிருஷ்ணகிரிக்கே இலவசமாகக்  கொட்டச் சொல்கிறேன்” என்றேன்.

43. “என்னசார்,  கிண்டல் பண்ணறீங்க! உள்ளதைச் சொல்லுங்க சார்!” என்றார். “உள்ளதைத்தான் சொன்னேன். மாரியாத் தாள் (மழைக்கடவுள்) உங்கள் வீட்டு மேல் கிருஷ்ணகிரியில் பிரதி வருஷமும் தூய காய்ச்சி வடித்த (மழை) நீரைக் கொட்டுவ தில்லையா?” என்றேன்.


44. அப்போதுதான் அவருக்கு விளங்கியது. என் பாட்டிலில் நான் கொண்டு வந்திருந்தது என் வீட்டுக் கான்ங்க்ரீட் கூரையில் இருந்து நான் அறுவடை செய்து சேமித்து வைத் துள்ள மழைநீர் என்பதைப் புரிந்து கொண்டார். அடுத்த வாரமே என் வீட்டுக்கு வந்து நான் சேமிக்கும் முறையைப் பார்த்து அப்படியே தன் வீட்டில் செய்தார். இன்று அவருக்கு குடிநீர், சமையல் நீர்பிரச்சினை--மழையே பெய்யாத ஆண்டிலும்  இல்லை.


45.  என்னைக் காப்பி அடித்து என் மாமன் மகன் வடிவேலு  புதிதாகத் தான் கட்டிய வீட்டில் என் தொட்டியைக் காட்டிலும் பெரிய தொட்டியை--தனது நடுக்கூடத்துக்கு(Central Hall) அடியில் அமைத்து-குடிக்க சமைக்க மட்டுமின்றி குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்துகிறார். நாமக்கல்லில் அதுபோல் பலர் காப்பியடித்துப் பயன்படுத்துகின்றனர். நாமக்கல் வட்டாரத்தில் பலர், கூரை மேல் விழும் மழைநீரை வடிகட்டும் தொழில் நுட்பம் தெரியாமல்-கூரை அழுக்கோடு சேமித்த நீரை-திறந்த தொட்டிகளில் சேமித்து-துணி துவைக்க மட்டும் பயன்படுத்துகின்றனர்! அதுவே பெரிய சங்கதி! சோப்பு மிச்சம். போர் தண்ணீர் கரண்ட் மிச்சம்! வண்டித் தண்ணீர் தண்டம் மிச்சம்!
46. கோவையில் இருந்து ஒரு நண்பர் வந்து என் நீர் சேமிப்பைக் காப்பியடித்து கோவை மருத்துவமனை அருகில் புதிதாக் கட்டிய வீட்டில் மழை நீர் சேமித்துப் பயன்படுத்துகிறார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி! இது ஒன்றும் கண்டு பிடிப்பு (invention) அல்ல; ஒரு புத்திசாலித்தனமான உபயோக முறையைக் கண்டசெயல்தான்(innovative action). இதை இந்த நாடு முழுக்கப் பயன்படுத்தினால், ஆண்டுதோறும் லட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் பெருமான எரிவாயு மற்றும் மின்சாரம் விஞ்சும். நான் சாகுமுன் இது நடந்தால் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொள்ள, நாட்டைத் திரட்டிய காந்தியைப்போல் மகிழ்வேன்.


47. சரியாக விவரம் தெரியாமல், என் வீட்டில் 8 அடி அகலம் 14 அடி நீளம் 12 அடி ஆழம் மட்டுமே உள்ள சிறிய தொட்டியைக் கட்டி விட்டேன். அத்தொட்டியின் கொள்ளவு 14ஓ8ஓ12=1120 கன அடி நீர் ஆகிறது. ஒரு கன அடி நீர் என் பது 27 லிட்டர் கொண்டது ஆகும். எனவே  தொட்டியின் கொள்ளளவு 1120X27=30240 லிட்டர் ஆகிறது.


48.  என் தலைமை வீட்டின் (Main House) மேலும், என் புற வீட்டின்(Outhouse) மேலும் சேர்ந்து 2500 சதுர அடிப் பரப்பின் மேல் விழும் நீரில் தலா 75 ஆயிரம் லிட்டர் கொள்ளும்  தொட்டிகளாகக் கட்டி இருந்தால்--நகராட்சி தரும் காவிரி நீரே தேவையில்லை.


49.  முழுத் தண்ணீரையும் சேமிக்குமாறு தொட்டி கட்டி இருந்திருந்தால், கடவுளால் அல்லது இயற்கையால் காய்ச்சி வடிக்கப்பட்டு-மாரியாயி ஆத்தா (இயற்கை) ஆண்டு தோறும் கூரை மேல் கொட்டும் நீரை வைத்துக் கொண்டு--பாதி அழுக்குநீரை துணி துவைக்கவும் என் வீட்டுக்கு வெளியே மற்றும் வீட்டுக் காங்க்ரீட் கூரை மேல் உள்ள 2 முழ ஆழம் மண்கொட்டி நான் வைத்திருக்கும் தோட்டத்தில் உள்ள செடி களுக்கு தாராளமாக நீர்பாய்ச்சவும் வாய்ப்பிருந்திருக்கும். நகராட்சியின் நீரே தேவைப்படாமல் போயிருக்கலாம். குளிக் கும் சோப்பு மற்றும் துணி சோப்பு பாதி மிச்சமாகும். துணி சட்டென்று மிக அழகாக வெளுக்கும். உணவு சமைக்க 40 சத கேஸ் மிச்சமாகும்.


50.  என் வீட்டைக் காப்பியடித்து நாமக்கல்லில் பல வீடு களிலும் கிருஷ்ணகிரி கோவை போன்ற இடங்களிலும் மழை நீரைச் சேமித்துக் குடிக்கின்றனர்; சமைக்கின்றனர்; துணி துவைக்கின்றனர்; குளிக்கின்றனர். என் கதையை மெய்ப் பிக்க சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நானே கூட்டிச் செல்லத் தயார். என்னை அணுகுவோர் யார்?


51.  நான் மேலே இட்டு வைத்திருக்கும் கணக்கை எந்த சிவில் எஞ்சினியரிடம் வேண்டுமானாலும் கேட்டு சரிபார்த்துக் கொள் ளலாம். நாட்டுக்கும் தனி நபர்களுக்கும் மின்சாரம் மிச்சம். மாரியாத்தாள்அல்லது இயற்கை வெகுதூய காய்ச்சி வடித்த நீரை(னளைவடைடநன றயவநச) நம் ஒவ்வொருவர் கூரையின் மீதும்--சாதி மதம் அரசியல் கட்சி என்று பார்க்காமல்-கொண்டு வந்து கொட்டும் போது--நீரை விலைக்கு வாங்கு வதை விடக் கேவலம் ஏதும் இல்லை.


ஆந்திரத்துக் “கிருஷ்ணா” “கோவிந்தா” நதி நீர் எல்லாம் சென்னைக்குத் தேவையில்லை!


52. சென்னைக்குக் குடிநீருக்காக நீங்கள் கிருஷ்ணா (கோவிந்தா!) நதிகளை நம்ப வேண்டியதில்லை. சென்னை யின் கட்டிடங்கள் மீது கொட்டும் அத்தனை நீரையும் கடலுக் குள் ஓட விட்டுவிட்டு, கடல்நீரை மக்கள் வரிப்பணச் செல வில் ஏராளமான மின்சாரத்தைச் செலவழித்து, உப்பு நீக்கி மக்களுக்கு-சப்ளை செய்வது என்பது விவரமறியாமையின் உச்சம் என்பேன்.


53.  சென்னை நகரில்--ஒரு 200 சதுர அடி கான்கிரீட் அல்லது சிமெண்ட் அட்டைக் கூரையில் இருந்து--மழை துவங்கியதும் கொட்டும் மழைநீரை  சென்னையில் நிலத்தடி யில் சேமித்தால்-குறைந்த பட்சம் 200 சதுரஅடிஓ நாலரை கனஅடி என மொத்தம் 900 கனஅடி நீரைச் சேமிக்கலாம். அது 900ஓ27 லிட்டர்=24,300 லிட்டர்  நீராகச் சேரும். ஓராண்டுக்கு நாளொன்றுக்கு 66 லிட்டர் நீர்கிடைக்கும். இது ஆண்டு முழுதம் சமைக்கவும் குடிக்கவும் 4 பேர் உள்ள குடும்பத்துக்குப் போதுமானது. 900 கனஅடி நல்ல நீரைச் சுலபமாகச் சேமிக்கலாம். வீடு கட்டும் போதே வீட்டடியில் 10 முதல் 15 அடி ஆழத்துக்குத் தோண்டி கீழிருந்தே கான் கிரீட் தளம் அமைத்து செங்கல்லால் தொட்டி போட்டுக் கட்டி வரலாம்.


இதற்கு மைய மாநில அரசுகள் மானியம் கொடுத்து உதவ வேண்டும். அல்லது ஏற்கனவே கட்டி முடித்த நெருக்கடியான ஏழை எளியோர் வாழும் பகுதியாக இருந்தால்-- ஒவ்வொரு கான்கிரீட்/சீமை ஒட்டுக் குடிசைப் பகுதியிலும் உள்ள பள்ளி வளாகத்தின் விளையாட்டுத் திடலை மாபெரும் தொட்டியாக ஆழமாக வெட்டி, பொதுவான தெரு வீடுகளின் நீர் சேமிப்புத் தொட்டியாக வைத்து, அன்றாடம் விகிதாச்சாரப்படி நீரைப் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு மாநகராட்சியும் மாநில அரசும் தமது நிதியோடு மைய அரசின் நிதியையும் சேர்ந்து நிதி மானியம் தந்தால், சம்பந்தப்பட்ட கான்கிரீட் குடிசையாளர்கள் தங்கள் உடல் உழைப்பைச் சந்தோசமாகத் தருவர். ஓடி ஓடி மகிழ்ச்சியோடு வேலை  செய்வர்!


54. நடுத்தர வர்க்கத்தினர்-கிளார்க்குகள், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், காவலர்கள் போன்றோர்--பலர் 500 சதுரஅடி முதல் 1000 சதுரஅடி வரை உள்ள தனித்தனி வீடுகளை வைத்துள்ளனர். அல்லது சென்னை நகரத்தில் அனைத்துப் பகுதிகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உள்ளன. இவை அனைத்தின் மீதும் கொட்டும் மழைநீரை மொத்தத்தில்--வண்டிகள் நிறுத்தப்பயன்படும் பரந்த வெற் றிடத்தில் ஆழமான--கசியா நீர்த்தொட்டிகளைக் கட்டி, மழைநீரை--கரி, ஜல்லி, மணல் ஆகியவற்றால் வடிகட்டிச் சேமித்து, விகிதாச் சாரப்படி பயன்படுத்திக் கொள்ளலாம். அன்றாடம் நீரை--அதுவும் நல்ல நீரா, நோயுள்ள நீரா-என்று அறியாமலே--கேன்களில் விலைக்கு வாங்கும் அவலம் இருக்காது.


55. இந்தத் தேதிமுதல் எந்தக்கட்டிடம் கட்டினாலும் நிலத்தடித் தண்ணீர் சேமிப்புத் தொட்டியுடன் கட்டினால்தான் கட்டிடம் கட்ட அனுமதி தருப்படும் என்ற சட்டம் செய்து விட்டால் பிரச்சினையே இருக்காது. மொத்தக் கட்டிடச் செலவில் இதற்கு 2 அல்லது 3 சதம் ஆகலாம். மிக அதை அரசு மான்யமாகத் தந்து விடலாம். அவ்வளவே!


56.  சென்னையில் 1000 சதுர அடிக்கு 4500 கனஅடி நீர் சேமிக்கலாம். அது தினம் ஒன்றுக்கு 4500X27=94,500 கனஅடி நீர் சேமிக்கலாம். தினம் ஒன்றுக்கு அது 1,21,000 லிட்டர்/365=331 லிட்டர்-தினம் ஒன்றுக்குக் நீர் கிடைக்கும். இது குடிக்க, சமைக்க என்பதோடு-சராசரி குடும்பத்துக்கு குளிக்கவும் துணி துவைக்கவும் உதவும். மாநகராட்சித் தண்ணீர் வராமல் போன நாளில், நம் நீரைப் பயன்படுத் தலாம்.  ஏற்கனவே கட்டிய வீடுகள் பகுதிகளில் பள்ளி வளாகங்களை அல்லது மாநகராட்சி காலி வளாகங்களை--மழைநீர் சேமிப்புத் தொடடிகள் கட்ட அரசு அனுமதிக்க மக்கள் பயன்படுத்தலாம். தொட்டி பூமியடியில் இருக்கும். மேலே குழந்தைகள் விளையாடுவது வண்டிகள் நிற்பது எதற்கும் தடை இருக்காது.


57. சென்னையில் மழை அளவு புள்ளிவிவரம் கடந்த 13 ஆண்டுகளுக்கு வருமாறு:
2000- 1092 m.l.   2001- 1667 m.l.    2002- 1402 m.l..  2003-  737 m.l.   2004- 1197 m.l.    2005-2556 m.l.
2006- 1323 m.l.   2007- 1310 m.l.2008- 1597 m.l.     2009- 1181 m.l.   2010-1615 m.l..   2011-1835 m.l.
2012-1021 m.l.  Total  (13 Years) :  18,533 m.l.
Per Annum rainfall at Madras in  milli litre :18533/13=1425 m.l.  எனவே எப்படிப் போனாலும் சராசரியாக வருடம் ஒன்றுக்கு சென்னை நகரில்1400 m.l. மழை சென்னையில் பெய் கிறது. கணக்கில் எடுத்துள்ள 13 ஆண்டுகளில் 2001, 2005, 2008, 2010, 2011-ஆகிய 5 முறை வெள்ளம் பெருகி நீரோட்ட வாய்க்கால்கள் கூவம் ஆறு அடையாறு கரை களில் உள்ள தாழ்வான பகுதிக் குடிசைகளுக்கு ஏராளமான சேதங்களை ஏற்படுத்தின.


58. 2002-இல் சராசரி மழையும், 2000, 2004,  2006, 2007, 2009, 2012 ஆகிய 6 ஆண்டுகள் சராசரிக்குச் சற்றுக் குறைவான மழையும், 2005-இல் அளவற்ற வெள்ள சேதம் ஏற்படுத்தும் அளவு பெருமழையும் பெய்துள்ளது.  2005-இல் பள்ளக்கால் வீடுகள் நீரில் மூழ்கியதும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதும் பலர் உயிர்விட்டதும் மட்டுமன்றி, பல திட்டமிட்ட புதுநகர்ப் பகுதிகளில் (Well laid out new Colonies at the periphery of the City) கூட- சாலைகளில் வண்டிகள் போக முடியாமல் பல வாரங்கள்  தடுமாறின. தென்மேற்கு சென்னையில் உள்ள என் உயர்நிலைப்பள்ளி வகுப்புத் தோழர் காதர் பாஷாவின் வீடு-நீர் நின்ற  சாலையை விட 6 அடி உயரத்தில் இருந் தாலும், சாலையில் நடக்கக் கூட முடியாமல் நீர் இடுப்பளவு நின்றதை நானே கண்டுள்ளேன்.


சென்னையில் மிகக் குறைவான மழையான 737 அ.அ. அளவே கூட- நாமக் கல்லின் சராசரி மழை அளவான 650 அ.அ.-ஐ விட அதிக மாக உள்ளது. எனவே சென்னையிலும் மழைநீர் வீணாகப் போகாமல் பார்த்துக் கொண்டால், சென்னைப் பூங்காக் களையும், பங்களாவாசிகளின் பூஞ்செடிகள் புல் தரைகளை யும் வளர்க்கவும் துணிகளைத் துவைக்கவும் அழுக்குக் கலந்த நன்னீரைப் பயன்படுத்தலாம். குடிசைகள் சிறு வீடு களுக்குக் கூட அழுக்கற்ற தூயகுடிநீர் மற்றும் சமையல் நீரையும் காலணா கரண்ட் செலவின்றி  சேமித்துத் தரலாம்.


59. மைய, மற்றும் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நீண்டதூர பயணிகள் மேடைப் பந்தல்கள் (miles and miles of passenger platforms), தென்னிந்திய ரயில்வே டிக்கட் விற்கும் முரட் டுக்  கட்டிடம், ரயில் கோட்ட அலுவலகம், மூன்று மாபெரும் அரசு மருத்துவ மனைகள், அரசினர் தோட்டக் கட்டிடங்கள், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அளவற்ற மைய மாநில அரசுக் கட்டிடங்கள், கடற்கரைச் சாலையில் உள்ள  ஏராள மான சர்க்கார் கல்லூரிகள் அலுவலகங்கள், காவல் துறைத் தலைமை அலுவலகம் மற்றும் லயோலா, கிருஷ்டியன், பச்சை யப்பா போன்ற கல்லூரிகள், ரிப்பன் பெயரால் உள்ள மாநக ராட்சிக் கட்டிடம் மற்றும் மாபெரும் வணிக வளாகங்கள், ஏக்கராக் கணக்கில் நிலம் உள்ள பெரும் பெரும் பங்களாக் கள் என எண்ணற்ற கட்டிடங்களின் மேல் விழும் நல்ல நீர் அனைத்தும் வெள்ளமாக ஓடி பல சேதங்களையும் விளை வித்து, கடலில் கலக்க வீணாகிப் போக-இன்று அனுமதிக் கப்படுகிறது. இவை அனைத்தும் அந்தந்த வளாகத்தில் மாபெரும் நிலத்தடிக் கசியா நீர்த் தொட்டிகளைக் கட்டிச் சேமித்தால்--வெள்ளக் கொடுமையும் குறையும்.


சென்ட்ரல் ரயில்வே எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற கட்டி டங்கள் பயணிகள் மேடை அனைத்தின் மீதும் விழும் தண்ணீர் வீணே கடலுக்குப் போக அனுமதிக் கப்படுவதைத் தடுத்துச் சேமித்தாலே, இந்தப் பெரிய நிறுவனங்களுக்குக் குடிக்க குளிக்க தரை சுத்தம் செய்ய, ரயில் பெட்டி கக்கூஸ் டேங்க்களை நிரப்ப வேண்டிய தண்ணீர் கிடைக்கும். அதற்கேற்றபடிக்கு-ஆஆனுஹ தண்ணீரை விலை கொடுத் துப் பெறுவதைக் குறைத்துக் கொள்ளலாம். மிச்சமாகும்  தண்ணீரை-எளியோர் பக்கம் திருப்பலாம். உட் லண்ட்ஸ், சேரன் டவர்ஸ்  போன்ற ஓட்டல்கள், அனைத்துக் கல்லூரிகள்--தமக்கு வேண்டிய குடிநீரை தமது கட்டிடங் களில் இருந்தே அறுவடை செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். உயர்ந்த கட்டிடங்கள்(multi storeyed buildings) உடைய ஓட்டல்களுக்கு அவர்கள் மாநகராட்சி நீர் கேட்டால் அவர்களுக்கு மார்க்கட் நிலவரப்படி அதிக விலைக்குத் தண்ணீர் விற்கலாம்.


60. இவற்றைச் செய்தால்--ஆண்டுதோறும் குடிசைவாசி களை மாநகரப் பள்ளிகளில் தங்க வைப்பதும் மக்கள் வரிப் பணத்தில் பிச்சைச் சோறு போடுவதும், புதிதாக மீண்டும் அதே ஆற்றங்கரைகளில் வீடு கட்டிக் கொள்ள பணம் கொடுப்பதும் நின்று போகும்.


61.  பள்ளங்களில் அனுமதியின்றி வீடுகட்டும்போது- லஞ்சம் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கும் மாநகர கீழ் மட்ட அலுவலர்கள் உடனுக்குடன் எழுத்து மூலம் தெரிவிக் காத பட்சத்தில் அவர்களை டிஸ்மிஸ் செய்யச்சட்டம் செய் தால்--அவர்கள் தங்கள் வேலைபோய் விடும், பென்சனும் கிட்டாது என்ற பயத்தால் ரிபோர்ட் கொடுத்து விடுவர். அதன் மேல் நடவடிக்கை எடுக்காத மேலதிகாரிகளுக்கு டிஸ்மிஸ் மற்றும் சிறைத் தண்டனைகொடுத்தால்--அவர் களும் ஆளும் கட்சிக்காரர்கள் என்ன, முதலமைச்சரே சொன்னாலும்--எந்தக்கட்சி ஆட்சியானாலும்--ஒத்துக் கொள்ளாமல் முறையற்ற கட்டிடங்களை துவத்திலேயே இடித்துத் தள்ளுவர். இதற்கென லோக்பால் செயல்பட வேண்டும். லோக்பாலே கூடாது என்ற கட்சிகளை ஆட் சிக்கு வரக் கூடாது என்று செய்வது மக்கள் கடமை! வாளா விருப்பது மாபெரும் மடமை!


62. கூவத்தை ஒட்டி வெள்ளக் காலங்களில் வெள்ளம் புக வாய்ப்புள்ள அத்தனை கட்டிடங்களையும் இடித்து அகற்றுங் கள். வேறு வெள்ளம் புகாத இடங்களில் அடுக்கு மாடியோ-இடுக்கு மாடியோ-கட்டித்  தங்க வையுங்கள்.


மீண்டும் கூவத்தை மணக்கும் நதியாக்குக்குங்கள்!


72. கூவம் என்றாலே நாற்றம் என்ற பொருள் படும்படி நாம் இன்று பேசுகிறோம். கூவம் ஒரு காலத்தில் சுத்தமான நீர் ஓடும் நல்ல குடிநீர் ஆறாக சிறுவாணி ஆற்று நீர் போல் சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருந்த ஆறுதான். சென்னை நகரம் விரிவடைந்து சாக்கடை நீர் பூராவும் அதில் விடப் பட்டதால் அது இன்று நாறிக் கிடக்கிறது.


73. பருவ மழை வெள்ளம் இல்லாத காலங்களில்--கூவம் ஓடும் பகுதி பூராவும்  கூவத்துக்குள்ளேயே இரு ஓரங்களிலும் இரு கால்வாய்களைக் கட்டி, சாக்கடை ஓடச் செய்தால் இடைப்பட்ட ஆற்றின் அகன்ற பகுதிகளில் நீர் தேங்கி சென்னையை நாறடிக்காது.


74. சாக்கடை ஒடும் இரு பக்க வாய்க்கால்களின் மேல் கான்கிரீட் மூடி இருக்க வேண்டும். நகரம் இன்னும் வளர்ந் தால் கூட மழைவெள்ளமில்லாத சாதாரண சாக்கடைத் தண்ணீரை இட்டுச் செல்லும் அளவுக்கு வழி வைத்து அந் தச் சாக்கடைக் கால்வாய்கள் கட்டப்பட வேண்டும். கூவம் நதி மழைக் காலத்தில் மட்டும் நதியாக ஓட வேண்டும். மற்ற நேரம் காவிரி போல் காய்ந்து கிடக்கட்டும்! நல்ல நமது நகரை நாறடிக்கக் கூடாது!


ஒகேனக்கல் குடிநீர்த்திட்டம் முடிந்துபோன தொடர்ந்து அனாவசிய மின்செலவு வைக்கும் திட்டம் தேவையில்லை!


75. நான் ஒகேனக்கல் உள்ளிட்ட பென்னாகரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவன். ஒகேனக்கல் நீரை தருமபுரி கிருஷ்ணகிரி போன்ற நகரங்களுக்குக் கொண்டு செல்ல--குறைந்தது இரண்டு மைல் உயரம் நீரை மோட்டார் வைத்து இறைத்து பென்னாகரம் கொண்டுவரவேண்டும். அங்கிருந்து ஒவ்வொரு பள்ளத்திலிருந்தும் மீண்டும் n மாட்டாரால் இறைத்து மேலேற்றி தருமபுரி கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பாலக்கோடு மத்தூர் திருப்பத்தூர் போன்ற அனைத்து நகரங்களுக்கும் எடுத்துச் சென்றாலும்--பட்டிக்காடு களுக்கும் ஒவ்வொரு சிற்றூருக்கும் குக்கிரமங் களுக்கும் காட்டுத் தோட்டக் குடியிருப்பு களுக்கும் கொண்டு செல்ல முடியாது!


76. நாமக்கல் மாவட்டத்தை விட தருமபுரி கிருஷ்ணகிரி இரண்டுமே மலைகள் நிறைந்த மாவட்டங்கள். மழையளவும் அதிகம்தான். முக்கியமாக பென்னையாறும், வாணியாறும், ஜோலார்ப்பேட்டையருகேயுள்ள எலகிரிமலையில் இருந்து இறங்கி ஊத்தங்கரை வழியாக ஓடி பென்னாற்றில் கலக்கும் பாம்பாறும், காவிரியும் கூட இந்த மாவட்டங்களின் வழியா கத்தான் ஓடிவருகின்றன. இரு மாவட்டங்களிலும் பணி புரிந்தவன் நான். மழைக்காலங்களில் தமிழகத்தின் இந்தியாவின் அனைத்து ஊர்களிலும் நகரங்களிலும் பள்ளி கல்லூரி, அரசு அலுவலகங்கள், தனியார் வீடுகள் மேல் உள்ள கூரை களின் மேல் விழும் அனைத்து மழைநீரையும் பூமிக்குள் போய் உப்பும் பூச்சி கொல்லி மருந்துகளும் கலப்பதையும், மழை நின்றவுடன் சூரிய வெப்பத்தால் பூமியில் இருந்து கண்ணுக்குத் தெரியாத மயிர்க்கால் அளவுள்ள துளை களின் மூலம் நீர் ஆவியாகிப் போவதையும் தடுத்து, நீர் கசியா பூமியடித் தொட்டிகளில் சேமித்து விட்டால், 100 சதம் தூய குடிநீர் மற்றும் சமையல் நீர் கிடைத்துவிடும். ஒரு ஆண்டு முழுதும் மழை சுத்தமாகப் பொய்த்துப் போனால் கூட, பாலைவன ஊரில் கூட, முந்திய ஆண்டின் நீர் குடிக்க சமைக்கப் போதுமானதாக இருக்கும். இதை நானே நாமக் கல்லில் சுயமாக அனுபவித்துவருகிறேன். நீரூபித்துள்ளேன்!


77. இப்போதுள்ள உள்ளாட்சிகளின் குடிநீர்த் திட்டங்க ளின் மூலம் கிடைக்கும் நீரை-மற்றபடி துணிகள் துவைக்க, பண்ட பாத்திரங்கள் கழுவ, குளிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


78. பள்ளி கல்லூரிகளைப் பொறுத்தவரை மாணவர் விடுதி இல்லாவிட்டால், பெரிய ஊர்கள் தெருக்களுக்கே வேண்டிய குடிநீர் கிட்டும். நாமக்கல் தெற்கு, வடக்கு மற் றும் மகளிர் மேநிலைப் பள்ளிகளின் மற்றும் இரு அரசுக் கல்லூரிகளின் நீரைச் சேமித்தால், நாமக்கல்லில் நகராட்சிப் பகுதியின் பாதிப் பகுதிக்கு அந்தக் குடிதண்ணீரே போது மானது. பெரிய வீடுகள் வைத்திருப்பவர்கள் தம்தம் வீடு களில் தொட்டி கட்டி சேமித்தால் குடிநீர்ப் பிரச்சினை முழு தும் தீர்ந்து போகும். மேலும் நாமக்கல், பெருந்துறைப் பகுதி களில் உள்ள கோழிப் பண்ணைகளின் மேல் விழும் நீரைச் சேமித்தால் குடிக்க குளிக்க பட்டிக் காடுகளுக்கு வேறு தண்ணீரே தேவையில்லை. கோழிகளுக்கும் அதே நீரை மூன்று அல்லது ஆறு மாதமாவது பயன்படுத்தலாம்.


தனி நபராகிய என்னால் இவை பற்றிய துல்லியமான புள்ளி விவரங்களைச் சேமிக்க முடியவில்லை. இதைச் செய்ய நான் பொதுவாழ்க்கையில் இருக்கும் ஒரு வணிகர்/கட்சிக்காரர், ஒரு சட்டசபை உறுப்பினர் இவர்களின் உதவியை நாடி யிருக்கிறேன். அவர்களும் உதவுவதாகச் சொல்லி உள்ளார் கள். அந்தப் புள்ளிவிவரங்கள் வந்தால் ஒரு புத்தக வடி வமாகவே, தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிட்டு இந்தியாவின் அனைத்து மாநில ஆஞகள், ஆடுஹ- களுக்கு அனுப்வுவதென்ற ஆசை உள்ளத்தில் நிற்கிறது. காலம்தான் பதில் சொல்லும்.


79. மேற்சொன்ன கிருஷ்ணகிரி தருமபுரி இரு மாவட்டங்களிலும் மட்டும் அன்றி, சேலம் நாமக்கல்லிலும் பல்லுக்கு ஊறுவிளைவிக்கும் ஃப்ளூரைட் (கடரநசனைந) என்ற உப்பு மண் ணில் கலந்திருக்கிறது. எனவே, கிணற்றுத் தண்ணீரில், ஆழ்குழாய்த்தண்ணீரில் இந்த உப்புக்கள் உள்ளன. ஃப்ளூ ரைட் கலந்த கிணற்று நீரைக் குடித்தால், குடரநசநளளை என்ற நோய் வரும். அது வந்தால் பற்கள் கரை படிந்தும் வளைந்தும் கோணையாக முளைத்தும் பலவிதத் தொல்லை களைக் கொடுக்கும். அத்தோடு கால்எலும்புகள் வளைந்து போகும். எங்கெங்கெல்லாம் எலும்பு மூட்டுகள் உள்ளனவோ அங்கெல்லாம் மூட்டு வலிகள் வரும். கழுத்தில் உள்ள மூட்டும் முழங்கால் மூட்டும் மிகவும் தொல்லையானவை. பல் காரை பிடித்த மாதிரி சாகும் வரை இருப்பதனால் முகத்தின் அழகையே கெடுக்கும்.


80. நாமக்கல் & சேலத்தைவிட- பூமி கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்தும் வெப்பம் குறைந்தும் உள்ள மாவட்டங்கள் தருமபுரியும் கிருஷ்ணகிரியும். நாமக்கல் & சேலத்தை விட அதிக மழை பெய்யக் கூடிய மாவட்டங்கள். எனவே இந்த மாவட்டங்களில் ஒகேனக்கல் நீர் கொண்டு வந்தது என்பது காலகாலத்துக்கு அனாவசிய வரிப்பணச் செலவையே வைக்கும். மின்சாரத்தை வீணாக்கும். மாறாக இதே காவிரி நீரை ஆடுதாண்டிப் பள்ளத்துக்கு அப்பால் கர்னாடகத்தை இருபுறமும் கொண்டு ஓடிவரும் காவிரி-ஒசூர் தளிப் பகு தியில் ஒருபக்கம் தமிழகமும் மறுகரை கர்னாடகமும் உள்ள இடம் துவங்குகிறது. இந்த இடத்தில் இருந்து கிட்டத்தட்ட நீரை மின்சாரத்தைப் பயன்படுத்தாமலே தமிழகத்துக்குள் குழாய்கள் அமைத்து கிருஷ்ணகிரி தருமபுரி இருமாவட்டத் துக்கும்--காளிங்கராயன் கால்வாயைப் போலவே--மேடு மேடாக குடிநீர் கொண்டு வர-நீர்ப்பாசனப் பொதுப் பணித் துறை-பற்பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமே தீட்டி வைத் துள்ளது. அந்த எளிய திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, இந்தக் குப்பைத் திட்டத்தை யாரோ என்ன காரணத்துக் காகவோ கையில் எடுத்துத் துவங்கினர். அதை இன்றைய அரசினரும் வேறு வழியின்றி முடித்தும் விட்டனர்.


விவசாயத்துக்கு காவிரி, பாலாறு, பெரியாறு நீருக்காக அண்டை மாநிலங்களோடு போரா டும் தமிழக அரசு--தமிழக நீர், ஆண்டுதோறும் கடலில் கலப்பதைத் தடுத்தாலே கிட்டத்தட்ட விவசாய நீர்ப்பஞ்சம் தீரும் என்பதறிவீர்!


81. அதே போல மூன்றாண்டுக்கு அல்லது நான்காண் டுக்கு ஒருமுறை வெள்ளம் பெருகி, அணைகளைத் தாண்டி, கடலில் வீணாகக் கலக்க அனுமதிக்கப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பே பவானி ஆற்று நீரை வறண்ட ஈரோட்டு மேட்டு நிலங்களுக்குக் கால் வெட்டித் திருப்பினார் காளிங்கராயன் என்ற பாண்டிய மன்னனின் அதிகாரி (கலெக்டர், அரசனின் சார்பாக சுயமாக வரிவிதித்து வசூல் செய்பவர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் என்ற பலரின் அதிகாரமும் கொண்டவர்). அந்தக் காலத்தில் எந்த பொறி யியல் கல்லூரியும் இல்லை என்பது உண்மை என்றாலும் அரிய பொறியியில் அறிவு இருந்திருக்கிறது. இல்லையேல் இதைச் செய்திருக்க முடியாது. இன்றைய கருவிகளுக்குப் பதிலாக சாதாரண வேறுவித கருவிகள் இருந்திருக்கலாம். அதற்கு எழுத்துபூர்வ ஆதாரங்கள் எழுதி வைக்கப் பட வில்லை என்பதுதான் வருந்தத் தக்கது. மொகலாயர்கள் நாட்டைப் பிடித்து ஆளத்துவங்கிய பிறகுதான் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் பதியும் வழக்கம் இந்தியாவில் எற்பட்டது.


82. அன்று வெட்டப்பட்ட காளிங்கராயன் கால்வாய் போல் -திட்டமிட்டு அனைத்து ஆறுகளிலும் நீரை அள்ளைகளில் கால்வாய்கள் வெட்டி எடுத்துச் சென்று பாசனம் செய்விப் பதும் ஏரிகளில் சேர்ப்பதும் நடந்திருக்கிறது. காவிரி யிலிருந்து அள்ளைகளில் ஒரு ஆயிரம் ஏரிகளுக்கு தன் பாய்ச்சல் வாய்க்கால்கள்(Contour Canals without any need for pumping) மூலம் நீர் பாசனம் ஏற்படுத்தப் பட்டிருப்பதை-பொதுப் பணித்துறையின் ஆற்றுப் பாதுகாப்புப் பிரிவில் பணி யாற்றிய ஓய்வுற்ற கண்காணிப்புப் பொறியாளர் திரு. நடராஜன் நினைவு கூர்ந்துள்ளார்.


83. காளிங்கராயனைப் பின்பற்றி மைசூரை ஆண்ட ஒரு மன்னன் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே, சத்தியமங்கலம் அருகில் கொடிவேரி என்னும் இடத்தில்--பவானி ஆற்றிலிருந்து இடது வலது அள்ளைகளில்- “அரக்கன் கோட்டை”, “தடப்பள்ளி”-என்ற பெயருள்ள இரு கால்வாய் களை வெட்டி அந்தக் காலத்திலேயே கோபிச்செட்டிப் பாளையம் பகுதிகளைச் செழிப்பாக்கி உள்ளனர்.


84. பாலாற்றில் இருந்து வாணியம்பாடி பக்கமாக கர்னாட கத்தில் இருந்து தமிழகத்தில் நுழையும் பாலாறு நெடுக-கடல் போய்ச் சேரும் வரை ஆங்காங்கே ஆற்றில் தன் போக் கில் கால்வாய்கள் வெட்டப்பட்டு நீர் ஓடி, பல ஏரிகளை நிரப்பு கின்றன. அவற்றில் மிகப் புகழ்பெற்ற ஏரிகளுள் ஒன்று-வேலூரை அடுத்த குணவட்டம் ஏரி. ஆம்பூர் பக்கம் பாலாற் றில் இருந்து நீர் நிரம்பும் ஏரி கிரிசமுத்திரம் என்பது என் நினைவு. திருவலம் ஏரி பொன்னையாற்றில் இருந்து நிரம்பு கிறது. பொன்னையாறு பாலாற்றில் கலக்கிறது. அதன் பின் வாலாஜா வட்டத்தில் உள்ள பூண்டி ஏரி, காவிரிப் பாக்கத் தின் மாபெரும் ஏரி, ராணிப்பேட்டை அம்மூர் ஏரி-அனைத் தும் வெள்ள காலங்களில் பாலாற்று நீரால் நிரப்பப்பட்டு விளைநிலங்களுக்குப் பாய்ச்சப்படுகின்றன. காவிரியில் இருந்தே 1000 ஏரிகள் நிரப்பப்படுவதால் பாலாற்றில் இருந்து குறைந்தது 300 அல்லது 400 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படக் கூடும். இதுபோல் கொள்ளிட ஆற்று நீர்தான்--தன் பாய்ச்சலாக கால்வாய் வெட்டப்பட்டு சென்னைக்கு நீர் தரும் மாபெரும் ஏரியாகிய வீராணம் ஏரியை நிரம்புகிறது.


85. தமிழகத்தில் பேராறுகள் என்றால் தென்பென்னை, பாலாறு, காவேரி, வைகை, பொருநை(தாமிரபரணி) என் பவைதான். மற்றபடி இன்றும் 94 சிற்றாறுகளும் ஓடைகளும் உள்ளன. அனைததும் வெளி மாநிலங்களில் உற்பத்தி ஆகித் தமிழகத்துக்குள்வருகின்றன. நானறிய செய்யாறு, ஐயாறு இரண்டு மட்டும்தான் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் ஓரளவு பெரிய ஆறுகள்.


ஆறுகளின் குறுக்கே கதவணை களைக் கட்டினால் அள்ளைகளில் நீர் கொண்டுபோவதோடு, வெள்ள காலங்களில் மணலும் வண்டலும் கடலுக்குப் போகாமல் தடுக்கலாம்!


86. மேட்டூருக்குக் கீழே கட்டப்பட்டுள்ள நான்கு மின்னுற் பத்தி செய்யும் கதவணைகளைப்போல், 1980-களில் தமிழக மின்வாரியம் மொத்தம் 23 கதவணைகளைக் கட்டிடத் திட்டமிட்டது என்றும், அவற்றுள் இதுவரை எட்டே கதவ ணைகள் கட்டப்பட்டுள்ளன வென்றும்--பொதுப் பணித் துறையில்--ஆற்றுபாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி ஓய் வுற்ற கண்காணிப்புப் பொறியாளர் திரு.நடராஜன் கூறி யுள்ள செய்தி சூநநன வடி ஊடிளேநசஎந ஹஎயடையடெந றுயவநச in ஊயரஎநசல க்ஷயளin கடிச ஐசசபையவiடிn-என்ற தலைப்பில் 10.6.2012 இந்து நாளிதழில் பக்கம் 4-இல் விவரமான செய்தியாக வந்துள்ளதைப் படியுங்கள்.


மொத்தம் ஒரு ஆயிரம் ஏரிகளுக்கு காவிரி நீர்-ஏற்கனவே திருப்பி விடப்பட்டுள்ளதைப் பதிவு செய்துள்ளார். பெருவாரியான ஏரிகளும் அவற்றிக்குக் காவிரி நீர் போய்ச் சேரும் கால்வாய்களும் அரசர்கள் காலத் திலேயே கட்டப் பட்டுவிட்டன என்பது அரிய செய்தி.


87. காவிரியின் குறுக்கே திட்டமிட்டபடி மீதமுள்ள 15 கத வணைகளைக் கட்டி-அவற்றில் இருந்து அள்ளைகளில் வாய்க்கால்களைப் புதிதாக வெட்டி-காங்கயம் வெள்ளி யணை போன்ற-காய்ந்த பாலைநிலப் பூமிகளில் மாபெரும் ஏரிகளை அமைத்து--வெள்ள நீரைச் சேமித்தால்--அந்த ஏரிகள் அமையும் பகுதிகளில்--மற்ற மழை குறைந்த அல் லது சராசரிக்கும் குறைவாக மழைபெய்கிற 3 ஆண்டு களுக்கு கிணற்று நீர் கிடைக்கும். ஓராண்டாவது நேரடியாக ஆற்று/ஏரி நீர் விவசாயம் பண்ணலாம்.


88. வண்டல் மண் பெரிய அணைக்கட்டு போன்ற அந் தந்தப் பேரேரிகளுக்கு (பெரிய ஏரிகளுக்கு) வந்து சேரும். அம்மண்ணை வறண்ட காலங்களில் அள்ளிச் சென்று மேட் டுக் காட்டு வயல்களில் கொட்டி வளப்படுத்தலாம். கரூர்ப் பகுதி பூராவும் மேல் மண் காற்றால் அரிக்கப்பட்டு, 4 அங்குல மண்கூட இப்போது கிடையாது. எனவே, வண்டல் மண் கடலுக்குச் செல்லாமல் காத்து--காய்ந்த, மண்ணில்லாத காடுகளில் கொட்டினால் மாடுகளுக்குத் தீவனமாவது நன்கு வளரும். தண்ணீர் குறைந்த வருடங்களில் நிலம் கொடுத்த விவசாயிகள் அப்பேரேரிகளுள் உள்ள கிணறுகளைப் பயன்படுத்தி விவசாயம் பண்ணலாம். ஆள்பஞ்சம் தலைவிரித்தாடும் இந்நாளில்--குறைந்த பட்சம் அந்த அணைகளில்/பேரேரிகளில்-நீரால் அழியாத மரங்களை நட்டுக் காத்து, பெரிதான பிறகு அவர்களே வெட் டிக் கொள்ள அனுமதித்தால், மார்க்கட் நிலவரத்துக்குச் சம்பந்தமில்லாத அற்ப நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்டு, எதிர்ப்பின்றி அணைக்கு நிலம் தருவர்.


அரசின் உரிமை பாதிக்கப்படாதபடி அதே நேரம் நிலம் தந்தவருக்கு கால காலத்துக்கு--தான் பயன்படுத்தவோ விற்கவோ உரிமை வைத்து-பேரேரிகள் அல்லது அணைகள் கட்ட நிலம் கைய கப்படுத்தப்பட வேண்டும். யாருக்கும் மன உளைச்சல் இருக்காது. மேட்டூர் அணை0யின் உள்வாய்-தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது. ஒகேனக்கல்லும் அதே காவல் நிலைய எல்லைக்குட்பட்டது. நான் அந்த ஊர் காவல் உதவி ஆய்வாளராக இருந்துள் ளேன். அணையில் நீர் வற்றினால் நிலம் கொடுத்த விவசாயி கள் பழைய உரிமையின் அடிப்படையில் இன்றும் வளமான விவசாயம் செய்வதைக் கண்டுள்ளேன். பழைய எல்லைக் கற்கள்-அரசு நட்ட சர்வே கற்கள்-அப்படியே இருந்தன.


இதில் விவசாயிகளுக்குக்குக் கிடைக்கும் சகாயம்: ஒன்று கிணற்று நீர் மேலேயே கிடைப்பது. அடுத்தது--வறண்ட மண் ணில் வளமான வண்டல் மண் வந்து படிந்திருப்பது. இந்த சர்வேக் கற்களை மாற்றி நட்டு விட்டதாக வந்த தகராறைத் தீர்க்க நான் வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து மறு சர்வே செய்து கற்கள் முறையான இடங்களில் மீண்டும் நடப்பட்டன.


89. இது மாதிரி நாடு முழுதும், ஆறுகளின் அள்ளைகளில் குறைகளாகக் (Barren Lands) கிடக்கும் நிலங்களில் அணை கள் கட்டி நீர் சேமித்து நீர் வடிந்த நாட்களில் விவசாயம் செய்ய முடியும். குடியானவனும் கூலிக்காரனும் பட்டிக் காட்டை விட்டு பட்டணத்துக் குப்பை வாழ்க்கையை நாடி ஓடுவது குறையும். நேரடி விவசாயம் செய்ய முடியாதவர் களின் நிலங்களை மற்ற நிலமற்றவர்களுக்கு விற்க அனு மதிக்கலாம். அரசு நிலமற்ற விவசாயிகள் அப்படி விலைக்கு வாங்க பண உதவி செய்து வட்டி இல்லாமல் வசூலித்துக் கொள்ளலாம்!


90. நமது அரசு நடத்துவோர் இதைக் கணக்கில் எடுப் பரா? அதிகாரிகளை வைத்து இந்த யோசனையை-தீர ஆய்ந்து திட்டம் தீட்டச் சொல்வரா?


91. நமது பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டைப் பகுதி மக்களுக்கு மட்டுமே நன்கு தெரியும். மேல் நீராறு சோலையாறு தமிழகத்தில் வால் பாறை மலைமேல் உள்ள ஆறுகள். அவற்றின் நீர் உலகம் தோன்றிய காலத்தில் இருந்து கேரளத்துக்குள் நுழைந்து அரபிக்கடலில் கலந்து வீணாகப் போனது.


மாமேதை சி.சுப்ரமணியம் பொள்ளாச்சிப் பகுதிக்காரர். நன்றாக ஆனைமலையை அறிந்தவர். எனவே, நேருபோன்ற தேசத் தலைவர்களை அணுகி, ஐந்தாண்டுத்திட்டத்தில் ஆழியாறு பரம்பிக்குளம் திட்டத்தைச் சேர்த்து, நீராரின் குறுக்கே, சோலையாறின் குறுக்கே இரு அணைகள் கட்டி, சோலையால் அணையில் இருந்து ஒரு டனல் வெட்டி கேரள எல்லையில் இருக்கும் பரம்பிக்குளத்துக்குத் திருப்பி, அங்கிருந்து மலைமேலேயே பாறைகளை வெட்டி வாய்க்காலாக நீரை உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்திமலை அணைவரை இட்டுச் சென்றார். கனடா தேசத்து பொறியாளர்கள் தான் தொழில் நுட்பம் தந்து மேற்பார்வை செய்தவர்கள்.


இதைப் போல் எத்தனையோ நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கேரளா, கர்னாடகா, கோவா, மஹாராஷ்ரா பகுதி களில் அரபிக்கடலில் கலக்கின்றன. அவை அனைத் தையும் பெரியாற்றில் அக்காலத்தில் பென்னி குயிக் செய் தது போல--ஆழியாறு பரம்பிக்குளம் திட்டம் போல், டனல் அடித்து நீரை--காய்ந்து போன தமிழகப் பகுதிகள் மற்றும் வட கர்னாடக, தென் மராட்டியப் பகுதிகளில் நுழைய விட் டால் நாம் இன்னும் 100 கோடி மக்கள் தொகை இருந்தாலும் சோறு போடலாம். இறக்குமதிகள் பலவற்றை நிறுத்தலாம். ஏராளமான விவசாயப்பொருள்களை ஏற்றுமதி செய்து நாட்டின் வளத்தை மேம்படுத்தலாம். நாடு உண்மையிலேயே வலுவடையும். இதற்கு மைய அரசு தலையிட வேண்டும். மைய அரசு தன் செலவில் இந்தத் திட்டங்க்ளை நிறைவேற்ற வேண்டும். இத்திட்டங்களின் மூலம் ஏராள மான மின்சாரம் கிடைக்கும். அந்த மின்சாரத்தை நீர் அனுமதிக்கும் மாநிலங்களுக்கு எச்சாகவே ஒதுக்கலாம். அது அந்த மக்களைத் திருப்திப் படுத்த உதவும்.


92. மங்களூர் அருகே கடலில் நேரடியாகக் கலக்கும் ஆறு காளிநதி! மிகப்பெரிய ஆறு. பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து மலைமேலேயே ஓடிவந்து ஒரு ஏக்கர் நிலம் கூடப்பாயாமல் கடலில்கலக்கிறது.கர்னாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து 9 ஆறுகளில் இருந்து 2000கூஆஊ மழை வெள்ளம் அப்படியே ஒரு செண்ட் நிலம்கூடப்பாயாமல் அப்படியே அரபிக்கடலுள் கொட்டுகிறது. வெறும் 200 கூஆஊ நீருக்கு--தமிழகமும் கர்னாடகமும் அடித்துக் கொள்கின்றன. வேடிக்கை! அதே போல விந்தியமலையின் இருபுறமும் பெய்யும் மழைநீர், ஆரவல்லி மலை போன்ற வட மராட்டியம் தென் குஜராத், காஷ்மீரம் முதல் பர்மா வரை இந்திய இமய மலையில் கொட்டிடும்--வெயில் காலத்தில் பனிக்கட்டி கரைந்து வரும் அளவற்ற நீரின் பெரும்பகுதி அப்படியே அரபி மற்று வங்கக்கடல்களில் வீணாகக்கலந்து கொண்டுள்ளதைத் தடுத்து அங்கங்கே அணைகள் கட்டினால் அண்டை நாடுகளுக்கு நாம் மின்சாரம் சப்ளை செய்யலாம்!


93. மேற்சொன்ன கர்னாடக ஆறுகள் 9-ஐ மட்டும் பரம்பிக்குளம் திட்டத்தில் சி.சுப்ரமணியம் அவர்கள் செய்ததைப் போல்- தமிழகம், வறண்ட வடமாவட்டங்களைக் கொண்ட கர்னாடகம், வறண்ட கடப்பை மாவட்டங்களைக் கொண்ட ஆந்திரம் மூன்றும் மைய அரசும்சேர்ந்து செலவிட்டு--ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்த்து மலைமேலேயே ஆறுகளைத் தடுத்து அணைகள் கட்டி காண்டூர் கெனால் (Contour Canals) அல்லது மேடுமேடாக பாறையை வெட்டிச் செல்லும் கால்வாய் அமைத்தும்--மலையின் அகலம் குறைவாக உள்ள இடத்தில் சுரங்கப்பாதை அமைத்தும்--அந்த நீரை வட கர்னாகத்துள் வந்து விழச் செய்யலாம். வழி முழுக்க எத்தனை இடத்தில் மின்சாரம் எடுக்க முடியுமோ அதைச் செய்யலாம். காடம்பாறை திட்டம் போல் மேலும் கீழும் அனை கட்ட வாய்ப்புள்ள இடத்தில் நீரை தலைகீழாகப்பாய்ச்சி ஏராளமான மின்சாரத்தை மாலை நேரத்தில் எடுக்கலாம். இரவு பனிரெண்டுக்கு மேல் நீரை மேலேற்றலாம்.


எச்சாக வரும் நீர் அத்தனையும் தரைக்கு அனுப்பலாம். இரண்டொரு நாள் மழைநீரில் நான் சொல்லும் படியான இரட்டை அனைகளை நிரப்பி விடும். அவ்வளவு நீர் அந்தக் காளி நதியிலும் இதர 8 நதிகளிலும் வருகிறது.


94. அதேபோல் எராளமான நீரை அரபிக்கடலில் வீணாக்கும் கோவா மராட்டிப்பிரதேசத்து மேற்குத்தொடர்ச்சி மலை ஆறான ஜூவாரி ஆற்றைத் திருப்பலாம். அது வட கர்னாடகத்துக்கும் தென் மராட்டியத்துக்கும் ஏராளமான நீரையும் மின்சாரத்தையும் கொடுக்கும். மைய அரசு முன்வந்து செய்ய வேண்டும். அதற்காக மக்களைத் திரட்ட வேண்டும். நாமே செய்துகொள்வது மழைநீரைக் குடிநீராகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் திட்டம்.


95. எளிய மக்களுக்கு 50 சதம் மானியம் தா: கூரை மேல் விழும் மழைநீரை மக்களே சேமித்துப்பயன்படுத்த இதற்கு மையமாநில அரசுகள் உதவ வேண்டும். ஏற்கனவே கட்டி முடித்த நெருக்கடியான ஏழை எளியோர் வாழும் பகுதியாக இருந்தால்-- ஒவ்வொரு கான்கிரீட்/சீமை ஒட்டுக் குடிசைப் பகுதியிலும் உள்ள பள்ளி வளாகத்தின் விளையாட்டுத் திடலை மாபெரும் தொட்டியாக ஆழமாக வெட்டி, பொதுவான தெரு வீடுகளின் நீர் சேமிப்புத் தொட்டியாக வைத்து, அன்றாடம் விகிதாச்சாரப்படி நீரைப் பகிர்ந்து கொள்ளலாம்.


இதற்கு மாநகராட்சியும் மாநில அரசும் தமது நிதியோடு மைய அரசின் நிதியையும் சேர்ந்து நிதி மானியம் தந்தால், சம்பந்தப்பட்ட கான்கிரீட் குடிசையாளர்கள் தங்கள் உடல் உழைப்பைத் தரவேண்டும் எனக் கட்டாயப் படுத்தலாம். ஓடி ஓடி மகிழ்ச்சியோடு வேலை செய்வர்! அடித்தட்டு மக்களுக்கு தொட்டி கட்டுவதில் பாதிசெலவான சிமெண்ட் கம்பி, ஜல்லி, செங்கல் இவற்றை அரசும் மைய அரசு இலவசமாகத் தரலாம். பாதிச்செலவு உழைப்புத்தான். அதை அந்த மக்களே இலவசமாகக் கொடுத்து--தொட்டி கட்டிக் கொண்டு சுகாதாரத்தோடும் குடிக்க நீரில்லை என்று சாலை மறியல் செய்யாமலும் மகிழ்வாக இருப்பார்கள்!


96. நடுத்தர மக்களுக்கு வட்டியின்றி அல்லது குறைந்த வட்டியில் கடன் தா: நடுத்தர வர்க்கத்தினர்-கிளார்க்குகள், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், காவலர்கள் போன்றோர்--பலர் 500 சதுரஅடி முதல் 1000 சதுரஅடி வரை உள்ள வீடுகளை வைத்துள்ளனர். அல்லது சென்னை நகரத்தில் அனைத்துப் பகுதி களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. இவை அனைத்தின் மீதும் கொட்டும் மழைநீரை மொத்தத்தில்--வண்டிகள் நிறுத்தப்பயன்படும் பரந்த வெற்றிடத்தில் ஆழமான--கசியா நீர்த்தொட்டிகளைக் கட்டி, மழைநீரை--கரி, ஜல்லி, மணல் ஆகியவற்றால் வடிகட்டிச் சேமித்து, விகிதாச்சாரப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்.


அன்றாடம் நீரை--அதுவும் நல்ல நீரா நோயுள்ள நீரா என்று அறியாமலே--கேன்களில் விலைக்கு வாங்கும் அவலம் இருக்காது. இவர்கள் வீடு கட்டும் போதே பில்லர் போட்டு வீடு கட்டுவதால் தங்களின் கூடத்தையே மழைநீர்த்தொட்டியாக துவக்கத்திலேயே கட்டிக்கொள்ள சட்டமே செய்து கட்டாயப்படுத்தலாம்! மகிழ்ச்சியோடு அவர்கள் ஏற்பர். புதிதாகக்கட்டுவதானால் அரசு அவர்களுக்கு வட்டியில்லாமல் அல்லது குறைந்த வட்டியில் பணம் கடன் தந்தால்தான் நடக்கும்.


சென்னையில் 1000 சதுர அடிக்கு 1,36,880 கனஅடி நீர் சேமிக்கலாம். அதாவது ஆண்டு முழுதும் தினசரி 1.875 பேரல் அல்லது 375 லிட்டர் நீர்--ஒன்றே முக்கால் பேரல் கிடைக்குமளவு நீர் சேமிக்கலாம். மாநகராட்சித் தண்ணீர் வராமல் போன நாளில் நம் நீரைக் குளிக்கவும் துணி துவைக்கவும் கூடப்பயன்படுத்தலாம். புதிய வீடு திட்டங்களுக்கு இதை துவக்கத்தில் இருந்தே, சட்டம் இயற்றிக் கட்டாயப் படுத்தலாம். ஏற்கனவே கட்டிய வீடுகள் பகுதிகளில் பள்ளி வளாகங்களை அல்லது மாநகராட்சி காலி வளாகங்களைப் பயன்படுத்தலாம். தொட்டி பூமி யடியில் இருக்கும். மேலே குழந்தைகள் விளையாடுவது வண்டிகள் நிற்பது எதற்கும் தடை இருக்காது.


சென்னையில் மழை அளவு புள்ளிவிவரம் கடந்த 13 ஆண்டுகளுக்கு வருமாறு: Already Given above
ஆண்டொன்றுக்கு சென்னையில் 1400 அ.அ. மழை சென்னையில் பெய்கிறது. கணக்கில் எடுத்துள்ள 13 ஆண்டுகளில் 2001, 2005, 2008, 2010, 2011-ஆகிய 5 முறை வெள்ளம் பெருகி நீரோட்ட வாய்க்கால்கள் கூவம் ஆறு அடையாறு கரைகளில் உள்ள தாழ்வான பகுதிக் குடிசைகளுக்கு ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியது. 2002-இல் சராசரி மழையும், 2000, 2004, 2006, 2007, 2009, 2012 ஆகிய 6 ஆண்டுகள் சராசரிக்குச் சற்றுக் குறைவான மழையும், 2005-இல் அளவற்ற வெள்ள சேதம் ஏற்படுத்தும் அளவு பெருமழையும் பெய்துள்ளது. 2005-இல் பள்ளக்கால் வீடுகள் நீரில் மூழ்கியதும் நீரில் அடித்துச் செல்லப் பட்டதும் பலர் உயிர்விட்டதும் மட்டுமன்றி, பல திட்டமிட்ட புதுநகர்ப் பகுதிகளில் (Newly Planned peripheral Colonies) கூட- சாலைகளில் வண்டிகள் போக முடியாமல் பல வாரங்கள் தடுமாறின.


தென் மேற்கு சென்னையில் உள்ள என் நண்பர் காதர் பாஷா வின் வீடு-நீர் நின்ற சாலையை விட 6 அடி உயரத்தில் இருந்தாலும் சாலையில் நடக்கக் கூட முடியாமல் நீர் நின்றதை நானே கண்டுள்ளேன். சென்னையில் மிகக்குறைவான மழையான 737 அ.அ. அளவே-- நாமக்கல்லின் சராசரி மழை அளவான 650 அ.அ.-ஐ விட அதிகமாக உள்ளது. எனவே சென்னையில் மழைநீர் வீணாகப் போகாமல் பார்த்துக் கொண்டால், சென்னைப் பூங்காக்களையும், பங்களாவாசிகளின் பூஞ்செடிகள் புல் தரைகளையும் வளர்க்க அழுக்குக் கலந்த நன்னீரையும், குடிக்கக் குளிக்க துணிகள் துவைக்க நல்ல நீரையும்-- குடிசைகள் சிறு வீடுகளுக்குக் கூட அழுக்கற்ற தூய குடிநீர் மற்றும் சமையல் நீரையும் சேமித்திடலாம்.


மைய, மற்றும் எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நீண்டதூர பயணிகள் மேடைப் பந்தல்கள் (யீயளளநபேநச யீடயவகடிசஅ ளாநனள), தென்னிந்திய ரயில்வே டிக்கட் விற்கும் முரட்டுக் கட்டிடம், ரயில் கோட்ட அலுவலகம், மூன்று மாபெரும் அரசு மருத்துவ மனைகள், அரசினர் தோட்டக் கட்டிடங்கள், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அளவற்ற மைய மாநில அரசுக் கட்டிடங்கள், கடற்கரைச் சாலையில் உள்ள ஏராளமான சர்க்கார் கல்லூரிகள் அலுவலகங்கள், காவல் துறைத் தலைமை அலுவலகம் மற்றும் லயோலா, கிருஷ்டியன், பச்சையப்பா போன்ற கல்லூரிகள், ரிப்பன் பெயரால் உள்ள மாநகராட்சிக் கட்டிடம் மற்றும் மாபெரும் வணிக வளாகங்கள், பெரும் பெரும் பங்களாக்கள் என எண்ணற்ற கட்டிடங்களின் மேல் விழும் நல்ல நீர் அனைத்தும் வெள்ளமாக ஓடி பல சேதங்களையும் விளைவித்து, கடலில் கலக்க வீணாகிப்போக அனுமதிக் கப்படுகிறது. இவை அனைத்தும் அந்தந்த வளாகத்தில் மாபெரும் நிலத்தடிக் கசியா நீர்த் தொட்டிகளைக் கட்டிச் சேமித்தால்--வெள்ளக் கொடுமையும் குறையும்.


சென்ட்ரல் ரயில்வே எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற கட்டிடங்கள் பயணிகள் மேடை அனைத்தின் மீதும் விழும் தண்ணீர் வீணே கடலுக்குப் போக அனுமதிக்கப்படுவதைத் தடுத்துச் சேமித்தாலே, இந்தப் பெரிய நிறுவனங்களுக்குக் குடிக்க குளிக்க தரை சுத்தம் செய்ய, ரயில் பெட்டி கக்கூஸ் டேங்க்களை நிரப்ப வேண்டிய தண் ணீர் கிடைக்கும். அந்த அளவுக்கு ஆஆனுஹ தண்ணீரை விலை கொடுத்துப் பெறுவதைக் குறைத்துக் கொள்ளலாம். மிச்சமாகும் ஆஆனுஹ தண்ணீரை-எளியோர் பக்கம் திருப் பலாம். உட்லண்ட்ஸ், சேரன்டவர்ஸ் போன்ற ஓட்டல்கள், அனைத்துக் கல்லூரிகள்--தமக்கு வேண்டிய குடிநீரை தமது கட்டிடங்களில் இருந்தே வடித்து வைத்துக் கொள் ளலாம். அதுவும் போதாமல் அவர்கள் மாநகராட்சி நீர் கேட்டால் அவர்களுக்கு மார்க்கட் நிலவரப்படி அதிக விலைக் குத் தண்ணீர் விற்கலாம்.


இவற்றைச் செய்தால்--ஆண்டுதோறும் குடிசைவாசிகளை மாநகரப் பள்ளிகளில் தங்க வைப்பதும் மக்கள் வரிப் பணத்தில் பிச்சைச் சோறு போடுவதும், புதிதாக மீண்டும் அதே ஆற்றங்கரைகளில் வீடு கட்டிக் கொள்ள பணம் கொடுப்பதும் நின்று போகும்.


பள்ளங்களில் அனுமதியின்றி வீடு கட்டாமல் தக்க சட்டங்களை நிறைவேற்றவும் அவற்றை மீறுவோரையும் கண்டுகொள்ளாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளும் அரசலுவலர்களைத் தண்டிக்கவும் நாம் சொல்லித் தரவேண்டியதில்லை. மனம் இருந்தால் மார்க்கம் ரெடியாக உள்ளது.


கூவத்தை ஒட்டி வெள்ளக் காலங்களில் வெள்ளம் புக வாய்ப்புள்ள அத்தனை கட்டிடங்களையும் இடித்து அகற் றுங்கள். வேறு வெள்ளம் புகாத இடங்களில் அடுக்கு மாடி யோ-இடுக்கு மாடியோ-கட்டித் தங்க வையுங்கள். பருவ மழை வெள்ளம் இல்லாத காலங்களில்--கூவம் ஓடும் பகுதி பூராவும் கூவத்துக்குள்ளேயே இரு ஓரங்களிலும் இரு கால் வாய்களைக் கட்டி, சாக்கடை ஓடச் செய்தால் அகன்ற பகுதிகளில் நீர் தேங்கி சென்னையை நாறடிக்காது. சாக்கடை ஒடும் வாய்க்கால் மேல் கான்கிரீட் மூடி இருக்க வேண்டும். நகரம் இன்னும் வளர்ந்தால் கூட மழைவெள்ளமில்லாத சாதாரண சாக்கடைத் தண்ணீரை இட்டுச் செல்லும் அளவுக்கு வழி வைத்து அந்தக் கால்வாய்கள் கட்டப்பட வேண் டும். கூவம் நதி மழைக் காலத்தில் மட்டும் நதியாக ஓட வேண்டும். மீண்டும் கூவம் மணக்க வேண்டும்!


ஒகேனக்கல் குடிநீர்த்திட்டம் முடிந்துபோன புத்திசாலித்தனமற்ற, தொடர்ந்து மின்செலவு வைக்கும் தண்டத் திட்டம்!


நாமக்கல் மாவட்டத்தை விட தருமபுரி கிருஷ்ணகிரி இரண்டுமே மலைகள் நிறைந்த மாவட்டங்கள். மழையளவும் அதிகம்தான். முக்கியமாக பென்னையாறும், வாணியாறும், ஜோலார்ப்பேட்டையருகேயுள்ள எலகிரிமலையில் இருந்து இறங்கி ஊத்தங்கரை வழியாக ஓடி பென்னாற்றில் கலக்கும் பாம்பாறும், காவிரியும் கூட இந்த மாவட்டங்களின் வழியாகத்தான் ஓடிவருகின்றன. இரு மாவட்டங்களிலும் பணிபுரிந்தவன் நான். மழைக்காலங்களில் தமிழகத்தின் இந்தியாவின் அனைத்து ஊர்களிலும் நகரங்களிலும் பள்ளி கல்லூரி, அரசுக்கட்டிடங்கள் மேலும் விழும் மழைநீரை ஆங்காங்கே கசிவில்லாத நிலத்தடித் தொட்டிகளில் சேமித்தாலே--இந்த ஃ.ப்ளுரைட் பிரச்னை இல்லாமல் போய் விடும்.


பெரும் கட்டிடத்துக்குக் காரர்கள்--கல்யாண மண்டபம் பள்ளிகள் நடத்துவோர் இதைச்செய்தால் ஏராளமான லாபம் என்று சொல்லிச் சலித்துப் போனேன். ஆனால் அண்மையில் ஈரோட்டில் நான் சந்தித்த நண்பர் ஒருவர்--பெரிய வணிகர்--லட்சம்சதுர அடி பரப்பளவுள்ள (7ஏக்கர்) கூரை உள்ள கட்டிடம் ஒன்றை ஈரோட்டருகில் ஒரே இடத்தில் துணி வணிகத்துக்காகக் கட்டி உள்ளார். அவர் ஆண்டு ஒன்றுக்கு வந்து போவோர்--கடைகள் வைப்போர் அனைவருக்குமாக--தினம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு (ஆண்டுக்கு 3கோடியே 60 லட்சம்ரூபாய்க்கு) நீர் விலைக்கு வாங்க தண்ணீர் பாட்டிலிங் கம்பெனி ஒன்றோடு ஒப்பந்தம் செய்ய இருப்பதாகச் சொன்னார். நீரைச் சும்மா கொண்டுவந்து கொட்டினால் வாங்கிக்கொள்ளச் சித்தமா என்றேன். சிரித்தார். மாரியாத்தா கொட்டும் தூய மழை நீர் சொன்னதும் அதை குறைந்த செலவில் நிறைவேற்றும் முறைகளைச் சொன்னவுடன் அவரது பொறியாளர்கள் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் அப்பணியை உடனே மேற்கொள்ள விருக்கிறார்கள். இது முடிந்தால் நாடு முழுதும் இது பரவும். தமிழகம் வழிகாட்டும்.


இந்த மாபெரும் திட்டத்துக்கு மைய அரசு உலகவங்கி மற்றும் உலக நிதி மையம் இரண்டிலுமிருந்தும் பணம் குறைந்த வட்டிக்கு வாங்கித்தரலாம். பெரும் வணிகர்களுக்குத் தேவையில்லை. மத்திய தர வர்க்கத்துக்குக்கடன் தரலாம். இதைவிட விவரமாக ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை வேண்டியவர்கள் பெற்றுக்கொள்ளலாம். என்னை எனது கைபேசிக்கு அழைத்துப்பேசலாம்.


ஆராய்ச்சியாளர்: காளிமைந்தன் வீ.செ.கருப்பண்ணன், B.Sc,ஓய்வுற்ற மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்! முகவரி: 55, கூட்டுறவுக் காலனி, நாமக்கல்-637001 கைபேசி: 08903281888. EMail ID: kaulimaindan2@ gmail.com
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)