நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, April 7, 2014

நீதியைத்தேடி... நூல்களை படிங்க!


திரு. சரவணன் என்கிற நீதியைத்தேடி... வாசகர் ஒருவர், தனக்கு எதிரான உரிமையியல் வழக்கில் அழைப்பாணை இல்லாமலே முன்னிலையாகி வழக்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்.


நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென பொய்யர்கள், பொய்யாக போராட்டங்களை நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வரும் வேளையில், நீதியைத்தேடி... வாசகர்கள் ஆங்காங்கே தமிழில் வழக்கை நடத்தி வருகிறார்கள்.


இதனால், பொய்யர்களின் பிழைப்பு மேலும் நாறத்தொடங்கி இருக்கிறது.


நம்ம சரவணனுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ள பொய்யர் ஆங்கிலத்தில் தாக்கல் செய்துள்ளார். அதனை சட்டப்படி தமிழில் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சேபித்து சரவணன் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட நிதிபதி, "தமிழில் கொடுக்க வேண்டும் என அப்பொய்யருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கவே, பயந்து கழிந்து கடந்த நான்கு வாய்தாவுக்கு வரவில்லை".


மனுதாரர் தரப்பு பொய்யர் வாய்தாவுக்கு வராததால், தனக்கு ஏற்பட்ட சம்பள இழப்பு மற்றும் இதர செலவு தொகைகளை தர உத்தரவுடுமாறு மனு கொடுத்து விட்டார்.


கடந்த வாரம் நடந்த விசாரணையில் மனுதார் தரப்பு பொய்யர், ‘‘நான் கொடுத்த ஆங்கில மனுவை தமிழில் நான் தர இயலாது. வேண்டுமானால், நீங்கள் மொழிபெயர்த்து கொடுங்கள்’’ என பொய்யர் நிதிபதியிடம் பேசியிருக்கிறார்.


கூடவே, சரவணன் மனு உரிய முறையில் இல்லை என்றும் பழக்க தோசத்தில் பொய்பேசி விட்டார்.


முதலில், சரவணன் தமிழில் கேட்டு நிதிபதியிடம் மனு கொடுத்த போது, நிதிபதியும் இதைதாம் சொன்னார். ஆனால், சரவணனோ, "நான் கொடுத்துள்ள மனுவை படித்து பார்த்துவிட்டு எதுவாக இருந்தாலும், எழுத்துப்பூர்வமாக உத்தரவு போடுங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொள்கிறேன் என சொல்லி விட்டார்".


உடனே, மனுவை படித்து பார்த்த நிதிபதி, ‘‘நீங்க என்ன வாரண்ட் பாலா வாசகரா?’’ என்று கேட்டிருக்கிறார். மனுவ படிக்க வச்சே வாரண்ட் பாலா வாசகர்கள் என நிதிபதிகளை தெளிய வச்சிடுறாங்க போல...


இவரும்  ஆமாம் என்று சொன்ன பிறகுதாம், இவன்களிடம் நம்ம பருப்பு வேகாது என்று தமிழில் கொடு என பொய்யருக்கு உத்தரவு போட்டது.


சரி, நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்.


பொய்யர்: இந்த நீதிமன்றம் இதுவரை எப்படி நடந்ததோ அப்படிதாம் நடக்க வேண்டும். (அதாவது சட்டத்துக்கு புறம்பாகதாம் நடக்க வேண்டுமேயன்றி, ஒருபோதும் சட்டப்படி நடக்க கூடாது)


நிதிபதி: நீங்க யார்கிட்ட மோதிக்கிட்டு இருக்கிங்கன்னு தெரியாம பேசிகிட்டு இருக்கிங்க... அவங்க சாதாரண ஆளுங்க கிடையாது...


அவரு வாரண்ட் பாலா குரூப்பு. அவரு மத்திய சட்ட அமைச்சகத்தில் இருந்து பணம் வாங்கி, சட்டத்தைப்பற்றி புத்தகம் வெளியிட்டு கோர்ட்டுக்கு கொடுக்குறவங்க...!



அவங்க புக்க படிங்கன்னு ஐகோர்ட்டுலேர்ந்து எங்களுக்கு அனுப்பி வச்சிருக்காங்க... பயிற்சி நீதிபதிகளுக்கும் அதைத்தான் கொடுக்குறாங்க... ஏங்கிட்ட இருக்கு... நானும் படிச்சிருக்கேன்.

அதுல ஒங்களையும் என்னையும்தான் சேர்த்து திட்டி எழுதியிருக்காங்க...

முடிஞ்சா வாங்கி படிங்க... அவ்வளவு ஏன், இவரு கொடுத்திருக்க மனுவை வாங்கி படிச்சி பாருங்கன்னு சொன்னதும், எல்லா பொய்யர்களும் படித்து பார்த்து இருக்காங்க...


அவர்கள் சொல்கிற ஒவ்வொரு சங்கதிக்கும் ஏற்றவாறு பத்திக்கு பத்தி சட்ட விதிகளை போட்டு எழுதியிருக்காங்க... ஒரு சட்டபிரிவு கூட போடாத நீங்க, அவங்க உரிய விதத்தில் மனு கொடுக்களேன்னு சொல்லுறீங்க (புளுகுறீங்கன்னு சொல்ல வேண்டியதுதானே)


மனுவை தமிழில் கொடுக்காம வழக்கு நடக்காது என இரண்டு மாத வாய்தா கொடுத்திருக்கார்.


இதற்கு தக்கவாறும், அடுத்தடுத்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதற்கு தக்கவாறு தனது நடவடிக்கைகளை நாளைக்கே அஞ்சலில் அனுப்ப இருக்கிறார், நம்ம சரவணன்.


நியாயம்தான் சட்டம்!
அதற்குத் தேவையா? தேவை-யில்லை; தேவையே-யில்லை விபச்சார வக்கீல் பட்டம்!

Neeyayam than sattam 04-05-2009 new


இது குறித்த விரிவான ஆடியோ பதிவுகளை வாய்ப்பு வரும்போது வெளியிடுகிறேன்.


இப்படியே, எல்லா நிதிபதிகளையும் நம் நூல்களை படிக்க வைத்து சட்டப்படி கடமையாற்ற வைக்க வேண்டும் என்கிற நோக்கில், கடமையைச் செய்! பலன் கிடைக்கும்  நூலுக்கு ரூபாய் இரண்டாயிரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.


இதன் அடுத்தகட்ட நிலையை அறிய, நீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)