No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, April 28, 2014

What is Professional Ethics?


       Lier catutionAll professions are not really professions. They were at first a service, and later on in the course of time they became money minting businesses. When service is converted into business, the general publics are sure to suffer losses. This is what is happening in real life. I see it practically after having put this very fact in book form 5 years ago.


       When a business is conducted in a fair way, it is business or industry, and when it is misused for profiteering at the cost of the public, it becomes a Service Deficiency or Unfair Trade Practice as per the Consumer Protection Act, 1986. As per this Act, the advocate is a service provider and the client engaging him is a consumer.


       The service providing advocate should do so efficiently do his duty with utmost efficiency and ensure the victory of the client’s claim.  The British advocates do so, or forego their fees! I know a fantastic incident of an Indian in India, a first cousin of mine by name B. Madan Mohan, who had failed to get a student visa, and his appeal to the government also failed. In the Govt. order, the British Govt. indicated that he was free to appeal to court against its order giving the address etc. details of the appellate authority.


       The student’s agent filed the case, paying an advance. The appeal won and compensation was also ordered, all within the stipulated time, most importantly. The most surprising thing is that the advocates in UK return the fees, if they fail in their client’s case! Can you imagine such a thing in India? They wouldn’t show even a concession in the agreed fees if the case is decided against.


The Indian lawyers, who pride on the British legal traditions, quietly skulk away when it comes to their fees! I want my people’s govt. to codify this tradition compelling the advocacy to follow the British Bar’s prevailing practice. Until then, I contend that we can approach the Consumer Grievances Redressal Fora for a return of fees in failed cases on the basis of deficiency of service.


       Even if the case is won by the services of an advocate, the duty of the lawyer does not end there. In case there came to light during the trial any fraud or false foisting of case, it is the duty of the advocate to pursue it, enlighten his client of his right to sue or prosecute the opponent for indulging in unfair and illegal act, thereby affecting the judicial system itself.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, April 23, 2014

ವಕೀಲರ ಕುರಿತು ಮಹಾತ್ಮಾ ಗಾಂಧೀಜಿ!


Gandhi in 1906ವಕೀಲರೂ ಮನುಷ್ಯರೇ ಅಲ್ಲವೇ! ಪ್ರತಿಯೊಬ್ಬ ಮನುಷ್ಯನಲ್ಲಿಯೂ ಏನಾದರೊಂದು ಒಳ್ಳೆಯದು ಇದ್ದೇ ಇರುತ್ತದೆ. ವಕೀಲರು ಒಳ್ಳೆಯದು ಮಾಡಿದ್ದಾರೆಂಬ ದೃಷ್ಟಾಂತಗಳೆಲ್ಲ ಅವರು ಮನುಷ್ಯರು ಎಂದು ಮಾಡಿದವು, ವಕೀಲರಾದುದರಿಂದ ಮಾಡಿದುದಲ್ಲ.


ಈ ವೃತ್ತಿಯು ದುರ್ನೀತಿಯನ್ನು ಕಲಿಸುತ್ತದೆ. ಇದರಲ್ಲಿ ಪ್ರಲೋಭನ ಹೆಚ್ಚು. ಇದಕ್ಕೆ ಬಲಿಯಾಗದವರು ಕಡಿಮೆ.


ಒಂದು ಕಡೆ ಹಿಂದೂಗಳೂ ಮುಸಲ್ಮಾನರೂ ಜಗಳವಾಡಿದರು. ಸಾಧಾರಣ ಮನುಷ್ಯ ಆದುದನ್ನೆಲ್ಲಾ ಮರೆತುಬಿಡಿ ಎನ್ನುತ್ತಾನೆ. ಎರಡೂ ಕಡೆ ಅಲ್ಪಸ್ವಲ್ಪ ತಪ್ಪಿದ್ದೇ ಇರುತ್ತದೆ. ಮುಂದೆ ಜಗಳವಾಡಬೇಡಿ ಎಂದು ಬುದ್ಧಿ ಹೇಳುತ್ತಾನೆ. ಆದರೆ, ಅವರು ವಕೀಲರ ಬಳಿಗೆ ಹೋಗುತ್ತಾರೆ. ಅವರು ಮಾಡುವುದೇನು? ತಮ್ಮ ಕಕ್ಷಿಗಾರನ ಪರವಾಗಿ ವಾದ. ಆ ಕಕ್ಷಿಗಾರನಿಗೇ ಗೊತ್ತಿಲ್ಲದ ಸಂಗತಿಗಳನ್ನೂ ಹುಡುಕಿ ತೆಗೆಯುವುದು. ಹಾಗೆ ಮಾಡದಿದ್ದರೆ ಅಂಥವರು ತಮ್ಮ ವೃತ್ತಿಗೇ ಕಳಂಕ, ಆದುದರಿಂದ ಸಾಧಾರಣವಾಗಿ ವಕೀಲರು ಜಗಳವನ್ನು ನಂದಿಸುವುದಿಲ್ಲ. ಮತ್ತಷ್ಟು ಉರಿಸುತ್ತಾರೆ.


ಇನ್ನೊಂದು – ಪರರ ದುಃಖ ನಿವಾರಣೆಗಾಗಿ ಯಾರೂ ವಕೀಲಿ ಮಾಡುವುದಿಲ್ಲ; ಹಣ ಗಳಿಸಲು ಮಾಡುತ್ತಾರೆ. ಐಶ್ವರ್ಯ ಸಂಪಾದನೆಗೆ ಇದೊಂದು ದಾರಿಯಾಗಿದೆ. ಜಗಳ ಹೆಚ್ಚಾದರೆ ಅವರಿಗೆ ಲಾಭ ಹೆಚ್ಚು. ಜಗಳ ಹೆಚ್ಚಾದರೆ ವಕೀಲರಿಗೆ ಸಂತೋಷ; ನಾನಿದನ್ನು ಸ್ವಂತವಾಗಿ ಬಲ್ಲೆ.


ಚಿಕ್ಕ-ಪುಟ್ಟ ವಕೀಲರು ಇಲ್ಲದ ಕಡೆ ಜಗಳ ಹುಟ್ಟಿಸುತ್ತಾರೆ. ಅವರ ದಲ್ಲಾಳಿಗಳು (ಫೂಟ್ ಲಾಯರ್) ಜಗಣೆಯಂತೆ ಬಡವರ ರಕ್ತವನ್ನು ಹೀರುತ್ತಾರೆ. ಆ ಕಸುಬೇ ಜಗಳ ಕಚ್ಚಾಟಗಳಿಗೆ ಪ್ರೋತ್ಸಾಹ ಕೊಡುವಂತಹುದು. ವಕೀಲರಿಗೆ ಹೆಚ್ಚು ಕೆಲಸ ಇರುವುದಿಲ್ಲ. ಭೋಗವಿಲಾಸಗಳನ್ನು ಬಯಸುವ ಮೈಗಳ್ಳ ಜನ ಇಂಥ ವೃತ್ತಿಗಳನ್ನು ಹುಡುಕುತ್ತಾರೆ. ಇದು ಸತ್ಯ, ಉಳಿದೆಲ್ಲಾ ವಾದವೂ ಬರೀ ನೆಪ.


ವಕೀಲಿ ಕಸುಬು ಗೌರವಯುತವಾದುದೆಂದು ಕಂಡುಹಿಡಿದವರು ವಕೀಲರೇ. ಆತ್ಮಪ್ರಶಂಸೆ ಮಾದಿಕೊಳ್ಳುವ ಹಾಗೆಯೇ ಕಾನೂನನ್ನೂ ರಚಿಸುತ್ತಾರೆ. ಎಷ್ಟು ಸಂಭಾವನೆ ತೆಗೆದುಕೊಳ್ಳಬೇಕೆಂಬುದನ್ನು ತಾವೇ ನಿರ್ಧರಿಸುತ್ತಾರೆ. ಬಹಳ ಠೀವಿಯಿಂದ ಇರುತ್ತಾರೆ. ಅದನ್ನು ಕಂಡು ಬಡಬಗ್ಗರು ಇವರನ್ನು ದೇವರೆಂದೇ ತಿಳಿಯುತ್ತಾರೆ.


ಸಾಮಾನ್ಯ ಕೂಲಿಗಾರನಿಗಿಂತ ಇವರಿಗೇಕೆ ಹೆಚ್ಚು ಸಂಭಾವನೆ ಬೇಕು? ಕೂಲಿಗಾರರಿಗಿಂತ ಹೆಚ್ಚು ಅವಶ್ಯಕತೆಗಳು ಇವರಿಗೇಕೆ? ಕೂಲಿಗಾರರಿಗಿಂತ ಹೆಚ್ಚಾಗಿ ಇವರು ಮಾಡಿದ ದೇಶಸೇವೆಯೇನು? ಸೇವೆ ಮಾಡಿದವರಿಗೆ ಹೆಚ್ಚು ಹಣ ಪಡೆವ ಅಧಿಕಾರವೇ? ಹಣಕ್ಕಾಗಿ ಕೆಲಸ ಮಾಡಿದರೆ ಅದನ್ನು ಸೇವೆಯೆನ್ನಬಹುದೇ?


ಹಿಂದೂ-ಮುಸ್ಲಿಂ ಜಗಳಗಳೆಲ್ಲಾ ಎಷ್ಟೋ ಸಲ ವಕೀಲರ ಕೈವಾಡದಿಂದಲೇ ಆಗಿವೆಯೆಂಬುದನ್ನು ಈ ಜಗಳಗಳ ಪರಿಚಯವಿದ್ದವರು ಬಲ್ಲರು. ಇದರಿಂದ ಕೆಲವು ಮನೆತನಗಳೇ ಹಾಳಾಗಿವೆ. ಅಣ್ಣತಮ್ಮಂದಿರು ಬದ್ಧ ವೈರಿಗಳಾಗಿದ್ದಾರೆ. ಎಷ್ಟೋ ಸಂಸ್ಥಾನಗಳು ಇವರ ಕೈಗೆ ಸಿಕ್ಕಿ ಸಾಲದಲ್ಲಿ ಮುಳುಗಿಹೋಗಿವೆ. ಅನೇಕರಿಗೆ ಸರ್ವನಾಶವಾಗಿದೆ.


ಎಲ್ಲಕ್ಕಿಂತ ಹೆಚ್ಚಾಗಿ ಅವರಿಂದ ದೇಶಕ್ಕಾದ ನಷ್ಟ ಇಂಗ್ಲಿಷರ ಮುಷ್ಠಿಯನ್ನು ಬಲಪಡಿಸಿದುದು. ಕೋರ್ಟುಗಳಿಲ್ಲದಿದ್ದರೆ ಇಂಗ್ಲಿಷರು ತಮ್ಮ ಆಡಳಿತ ನಡೆಯಿಸಲಾಗುತ್ತಿರಲಿಲ್ಲ. ಕೋರ್ಟುಗಳು ಜನರ ಹಿತಕ್ಕಾಗಿ ಆಗಿವೆ ಎಂದು ತಿಳಿಯುವುದು ತಪ್ಪು. ತಮ್ಮ ಸತ್ತೆಯನ್ನು ಸ್ಥಿರಗೊಳಿಸಬೇಕೆನ್ನುವವರು ಕೋರ್ಟುಗಳ ಮೂಲಕ ಹಾಗೆ ಮಾಡುತ್ತಾರೆ.


ಜನರು ತಮ್ಮ ಜಗಳಗಳನ್ನು ತಾವೇ ಪರಿಹರಿಸಿಕೊಂಡರೆ ಅವರ ಮೇಲೆ ಮೂರನೆಯವರದೇನು ಅಧಿಕಾರ? ಕಾದಾಡಿಯೋ, ತಮ್ಮ ಆಪ್ತೇಷ್ಟರಿಂದ ತೀರ್ಪು ಮಾಡೊಕೊಂಡೋ, ಜನರು ತಮ್ಮ ತಮ್ಮೊಳಗೆಯೇ ಜಗಳಗಳನ್ನು ಪರಿಹರಿಸುತ್ತಿದ್ದಾಗ ಇಷ್ಟು ನಪುಂಸಕರಾಗಿರಲಿಲ್ಲ. ಈ ಕೋರ್ಟು-ಕಚೇರಿಗಳಿಗೆ ಹೋಗಲು ಮೊದಲಿಟ್ಟ ಮೇಲೆ ಜನರು ಹೆಚ್ಚು ಅಂಜುಗೂಳಿಗಳೂ, ನಪುಂಸಕರೂ ಆದರು.


ಹೊಡೆದಾಡಿ ಸಾಯುವುದು ಅಸಭ್ಯತೆಯೆ, ಸಂದೇಹವಿಲ್ಲ. ಆದರೆ, ನಮ್ಮ ಜಗಳಗಳನ್ನು ನೀವು ತೀರಿಸಿಕೊಡಿ ಎಂದು ಮೂರನೆಯವರನ್ನು ಕೇಳುವುದು ಮಾತ್ರ ಅಸಭ್ಯತೆಯಲ್ಲವೇ? ಮೂರನೆಯವರು ಮಾಡಿದ ತೀರ್ಮಾನ ಯಾವಾಗಲೂ ಸರಿಯೆಂದು ಹೇಳಬಲ್ಲವರು ಯಾರು? ಯಾರದು ಸತ್ಯವೋ ಆ ಕಕ್ಷಿಗಳಿಗೆ ಮಾತ್ರವೇ ಗೊತ್ತು.


ನಾವು ಭೋಳೇ ಜನ, ಅಜ್ಞಾನಿಗಳು. ನಮ್ಮ ಹಣ ತೆಗೆದುಕೊಂಡ ಹೊಸಬ ನಮಗೆ ನ್ಯಾಯದಾನ ಮಾಡಬಲ್ಲ ಎಂದು ತಿಳಿಯುತ್ತೇವೆ.


ಮುಖ್ಯವಾಗಿ ನೆನಪಿಡಬೇಕಾದುದು ಇಷ್ಟು; ವಕೀಲರಿಲ್ಲದಿದ್ದರೆ ಈ ಕೋರ್ಟುಗಳೇ ಸ್ಥಾಪಿತವಾಗುತ್ತಿರಲಿಲ್ಲ. ಕೋರ್ಟುಗಳಿಲ್ಲದೆ ಇಂಗ್ಲಿಷರು ರಾಜ್ಯ ನಡೆಸಲಾಗುತ್ತಿರಲಿಲ್ಲ. ಬರೀ ಇಂಗ್ಲಿಷ್ ನ್ಯಾಯಾಧೀಶರು, ಇಂಗ್ಲಿಷ್ ವಕೀಲರು, ಇಂಗ್ಲಿಷ್ ಪೊಲೀಸರೇ ಇದ್ದಿದ್ದರೆ, ಇಂಗ್ಲೀಷರನ್ನು ಮಾತ್ರ ಅವರು ಆಳಬಹುದಾಗಿತ್ತು. ಭಾರತೀಯ ನ್ಯಾಯಾಧೀಶರು, ಭಾರತೀಯ ವಕೀಲರು ಇಲ್ಲದೆ ಇಂಗ್ಲಿಷರ ಕೆಲಸ ನಡೆಯುತ್ತಿರಲಿಲ್ಲ.


ಮೊಟ್ಟಮೊದಲು ವಕೀಲರು ಹೇಗೆ ಹುಟ್ಟಿಕೊಂಡರೋ, ಅವರ ಮೇಲೆ ಹೇಗೆ ಕೃಪಾಕಟಾಕ್ಷ ಬಿತ್ತೋ, ನೀವು ತಿಳಿದುಕೊಳ್ಳಬೇಕು. ಆಗ ಈ ಕಸುಬಿನ ಬಗ್ಗೆ ನನಗಿರುವಷ್ಟೇ ತಿರಸ್ಕಾರ ನಿಮಗೂ ಹುಟ್ಟುತ್ತದೆ.


 ಈ ವಕೀಲರು ತಮ್ಮ ಕಸುಬನ್ನು ಬಿಡಲಿ, ಈ ಕಸುಬು ಹೀನ ಎನ್ನಲಿ; ಇಗ್ಲಿಷರ ರಾಜ್ಯ ಒಂದು ದಿನದಲ್ಲಿ ಕರಗಿ ಹೋಗುತ್ತದೆ.


 ನ್ಯಾಯಾಧೀಶರ ಕುರಿತು ಮಹಾತ್ಮಾ ಗಾಂಧೀಜಿ!


ವಕೀಲರನ್ನು ಕುರಿತು ಹೇಳಿದುದೆಲ್ಲಾ ನ್ಯಾಯಾಧೀಶರಿಗೂ ಅನ್ವಯಿಸುತ್ತದೆ. ಅವರೂ ಇವರೂ ದಾಯಾದಿಗಳು. ಅವರಿಂದ ಇವರಿಗೆ ಬಲ. ಇವರಿಂದ ಅವರಿಗೆ ಬಲ.


ಅಧಾರ: ಹಿಂದ್ ಸ್ವರಾಜ್ಯ (ಲೇಖಕರು – ಮೋಹನ್ ದಾಸ್ ಕರಮ್ ಚಂದ್ ಗಾಂಧಿ. ೧೯೦೮, ಮೊದಲ ಮುದ್ರಣ. ಪ್ರಕಾಶಕರು – ಗಾಂಧಿ ಸ್ಮಾರಕ ನಿಧಿ, ಗಾಂಧಿ ಭವನ, ಕುಮಾರ ಪಾರ್ಕ್ (ಪೂರ್ವ), ಬೆಂಗಳೂರು – ೫೬೦ ೦೦೧)


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, April 7, 2014

நீதியைத்தேடி... நூல்களை படிங்க!


திரு. சரவணன் என்கிற நீதியைத்தேடி... வாசகர் ஒருவர், தனக்கு எதிரான உரிமையியல் வழக்கில் அழைப்பாணை இல்லாமலே முன்னிலையாகி வழக்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்.


நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென பொய்யர்கள், பொய்யாக போராட்டங்களை நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வரும் வேளையில், நீதியைத்தேடி... வாசகர்கள் ஆங்காங்கே தமிழில் வழக்கை நடத்தி வருகிறார்கள்.


இதனால், பொய்யர்களின் பிழைப்பு மேலும் நாறத்தொடங்கி இருக்கிறது.


நம்ம சரவணனுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ள பொய்யர் ஆங்கிலத்தில் தாக்கல் செய்துள்ளார். அதனை சட்டப்படி தமிழில் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சேபித்து சரவணன் கொடுத்த மனுவை ஏற்றுக் கொண்ட நிதிபதி, "தமிழில் கொடுக்க வேண்டும் என அப்பொய்யருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கவே, பயந்து கழிந்து கடந்த நான்கு வாய்தாவுக்கு வரவில்லை".


மனுதாரர் தரப்பு பொய்யர் வாய்தாவுக்கு வராததால், தனக்கு ஏற்பட்ட சம்பள இழப்பு மற்றும் இதர செலவு தொகைகளை தர உத்தரவுடுமாறு மனு கொடுத்து விட்டார்.


கடந்த வாரம் நடந்த விசாரணையில் மனுதார் தரப்பு பொய்யர், ‘‘நான் கொடுத்த ஆங்கில மனுவை தமிழில் நான் தர இயலாது. வேண்டுமானால், நீங்கள் மொழிபெயர்த்து கொடுங்கள்’’ என பொய்யர் நிதிபதியிடம் பேசியிருக்கிறார்.


கூடவே, சரவணன் மனு உரிய முறையில் இல்லை என்றும் பழக்க தோசத்தில் பொய்பேசி விட்டார்.


முதலில், சரவணன் தமிழில் கேட்டு நிதிபதியிடம் மனு கொடுத்த போது, நிதிபதியும் இதைதாம் சொன்னார். ஆனால், சரவணனோ, "நான் கொடுத்துள்ள மனுவை படித்து பார்த்துவிட்டு எதுவாக இருந்தாலும், எழுத்துப்பூர்வமாக உத்தரவு போடுங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொள்கிறேன் என சொல்லி விட்டார்".


உடனே, மனுவை படித்து பார்த்த நிதிபதி, ‘‘நீங்க என்ன வாரண்ட் பாலா வாசகரா?’’ என்று கேட்டிருக்கிறார். மனுவ படிக்க வச்சே வாரண்ட் பாலா வாசகர்கள் என நிதிபதிகளை தெளிய வச்சிடுறாங்க போல...


இவரும்  ஆமாம் என்று சொன்ன பிறகுதாம், இவன்களிடம் நம்ம பருப்பு வேகாது என்று தமிழில் கொடு என பொய்யருக்கு உத்தரவு போட்டது.


சரி, நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்.


பொய்யர்: இந்த நீதிமன்றம் இதுவரை எப்படி நடந்ததோ அப்படிதாம் நடக்க வேண்டும். (அதாவது சட்டத்துக்கு புறம்பாகதாம் நடக்க வேண்டுமேயன்றி, ஒருபோதும் சட்டப்படி நடக்க கூடாது)


நிதிபதி: நீங்க யார்கிட்ட மோதிக்கிட்டு இருக்கிங்கன்னு தெரியாம பேசிகிட்டு இருக்கிங்க... அவங்க சாதாரண ஆளுங்க கிடையாது...


அவரு வாரண்ட் பாலா குரூப்பு. அவரு மத்திய சட்ட அமைச்சகத்தில் இருந்து பணம் வாங்கி, சட்டத்தைப்பற்றி புத்தகம் வெளியிட்டு கோர்ட்டுக்கு கொடுக்குறவங்க...!அவங்க புக்க படிங்கன்னு ஐகோர்ட்டுலேர்ந்து எங்களுக்கு அனுப்பி வச்சிருக்காங்க... பயிற்சி நீதிபதிகளுக்கும் அதைத்தான் கொடுக்குறாங்க... ஏங்கிட்ட இருக்கு... நானும் படிச்சிருக்கேன்.

அதுல ஒங்களையும் என்னையும்தான் சேர்த்து திட்டி எழுதியிருக்காங்க...

முடிஞ்சா வாங்கி படிங்க... அவ்வளவு ஏன், இவரு கொடுத்திருக்க மனுவை வாங்கி படிச்சி பாருங்கன்னு சொன்னதும், எல்லா பொய்யர்களும் படித்து பார்த்து இருக்காங்க...


அவர்கள் சொல்கிற ஒவ்வொரு சங்கதிக்கும் ஏற்றவாறு பத்திக்கு பத்தி சட்ட விதிகளை போட்டு எழுதியிருக்காங்க... ஒரு சட்டபிரிவு கூட போடாத நீங்க, அவங்க உரிய விதத்தில் மனு கொடுக்களேன்னு சொல்லுறீங்க (புளுகுறீங்கன்னு சொல்ல வேண்டியதுதானே)


மனுவை தமிழில் கொடுக்காம வழக்கு நடக்காது என இரண்டு மாத வாய்தா கொடுத்திருக்கார்.


இதற்கு தக்கவாறும், அடுத்தடுத்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதற்கு தக்கவாறு தனது நடவடிக்கைகளை நாளைக்கே அஞ்சலில் அனுப்ப இருக்கிறார், நம்ம சரவணன்.


நியாயம்தான் சட்டம்!
அதற்குத் தேவையா? தேவை-யில்லை; தேவையே-யில்லை விபச்சார வக்கீல் பட்டம்!

Neeyayam than sattam 04-05-2009 new


இது குறித்த விரிவான ஆடியோ பதிவுகளை வாய்ப்பு வரும்போது வெளியிடுகிறேன்.


இப்படியே, எல்லா நிதிபதிகளையும் நம் நூல்களை படிக்க வைத்து சட்டப்படி கடமையாற்ற வைக்க வேண்டும் என்கிற நோக்கில், கடமையைச் செய்! பலன் கிடைக்கும்  நூலுக்கு ரூபாய் இரண்டாயிரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.


இதன் அடுத்தகட்ட நிலையை அறிய, நீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, April 4, 2014

மகத்தான மக்களாட்சி மலர...!உலகில் மற்ற எந்த நாடுகளும் வழங்காத சாதி, மதம், இன, பேத, மொழி ஆகியவைகளை கடந்து ஒருவர் எந்த மதத்தை, இனத்தை, மொழியை, நாட்டை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு அவர்களுடைய நாட்டில் என்னென்ன அடிப்படை உரிமைகள் உண்டோ, அவ்வுரிமைகளை எல்லாம் அப்படியே வழங்கிய ஒரே நாடு என்பதால்தான், உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்ற பெருமைக்குறியதாக திகழ்கிறது, நமது இந்திய தாய்திருநாடு.

ஆனால், உண்மையில் மக்களாட்சி நடக்கிறதா என்றால், மக்களாட்சி என்கிற பெயரில் தேர்ந்தெடுக்கப்படும் அவ்வேட்பாளர்களது மனைவி, துணைவி, மக்கள் என நடக்கிறது என்பதே கேள்வியும், பதிலுமாக இருக்கிறது.

தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் புலம்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளன. இதிலும், ஆளுங்கட்சிகளே அதிகமாக புலம்பும் அளவிற்கு, ஐந்து வருடம் செய்த ஆட்சியின் நம்பிக்கையின்மை இருக்கிறது.

மக்களாட்சி என்றால், மக்களால் பொதுத்தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில், மக்கள் ஏன் பிரச்சினையிலேயே வாழ்கிறார்கள்? என்பதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை பலரும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்வதை விட, மக்களாட்சி அரசாங்கத்தை அமைக்க, மாபெரும் பொறுப்புல்ல தேர்தல் ஆணையமே அறியாமல்தான் இருக்கிறதா அல்லது அறிந்தும், அறியாதது போல நடந்து கொள்கிறதா என்பது தெரியவில்லை.

இந்திய அரசமைப்பு கோட்பாடு 19(1)(இ)-இல், சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வுரிமையின் கீழ் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில்தான், சங்கங்கள் மட்டுமல்லாது, அறக்கட்டளைகளும், இயக்கங்களும், மக்களாட்சி அரசை நிறுவ போட்டாப்போட்டி போடும் அரசியல் கட்சிகளும் பதிவு செய்யப்படுகின்றன.

இப்படி பதிவு செய்யப்பட்ட சங்கம், அறக்கட்டளை, இயக்கம், அரசியல் கட்சியில் முக்கியமானதொரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்றால், பொதுக்குழுவை கூட்டி, அதன் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவை அவசியம் பெற வேண்டும். இதனை ரத்தினச் சுருக்கமாக பெரும்பான்மை பலம் என்பார்கள். இப்பலத்தை பெறவில்லை என்றால், அம்முக்கிய முடிவு நிறைவேறாது முடங்கிப் போய் விடும்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சங்கதியே, மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவைப் பெற வேண்டிய சங்கத்தில், இயக்கத்தில், கட்சியில் கூடும் அனைவருமே கிட்டத்தட்ட ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பார்கள் அல்லது முக்கிய முடிவை எட்ட வேண்டிய பிரச்சினைக்கு உரிய சங்கதியைப் பொருத்தமட்டில் சிறுபகுதியினர் கருத்து வேறுபட்டவர்களாய் இருப்பார்கள்.

இதில், மேன்மேலும் சச்சரவு வரவோ, வளரவோ கூடாது என்ற அடிப்படையில்தான், முன்றில் இரண்டு பங்கு என்ற பெரும்பான்மை முடிவு நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ஆட்சியைப் பிடிக்க போட்டா போட்டி போடும் கட்சிகளைப் பொருத்தவரை நாற்காலி கொள்ளைக்காக, கூட்டணி போடுகிறார்களே ஒழிய, அடிப்படை கொள்கைக்காக அல்லவே அல்ல என்பது நானறிந்த விசயமட்டுமன்று; ஊரறிந்த உண்மைதான்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவத்தோடு, தேர்தலுக்கு தேர்தல், மாறிமாறி ஆட்சி செய்யும் இருகட்சிகளில் எக்கட்சியில் நம்மைப் போலவே யார்யார் கூட்டு சேருவார்கள் அல்லது சேருகிறார்கள், அதில் எக்கூட்டணி வெற்றி பெறும் என்பதை மட்டுமே கணித்து, கூட்டணியை மாற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் நாளொரு நட்பு, நடப்பு நிலைப்பாடு நாடே அறிந்த விசயம்தான்.

இதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சி என எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம் என்றாகி விட்டது.

ஆனால், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம் இதுவரையிலும், மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி செய்ததில் எப்போதுமே தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விளங்கும் இருகட்சிகளுக்கு மட்டும் இதுவரையிலும் பொருந்தாமல் போனது ஏனோ?!

இனி பொருந்துவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரியவில்லை. காரணம், வேறு எதுவுமே இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும், இவ்விரு கட்சிகளுக்கும் மக்கள் தங்களின் வாக்குரிமை மூலம், மாறி மாறித்தரும் பெரும்பான்மையும், அங்கீகாரமுமே ஆகும்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை என்ற அடிப்படை தத்துவம், இது வரை தனிப்பெரும்பான்மையோடு நாட்டை ஆட்சி செய்துள்ள எதிரெதிர் பிரதாண கட்சிகளு க்கும் பொருந்தி விட்டால், மகத்தான மக்களாட்சிக்கும் மக்களுக்கும் பிரச்சினையே இல்லை.

நம் நாட்டைப் பொருத்தவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஒரு சிலவும், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சுமார் ஆயிரத்து முன்னூறு உள்ளன என்பது தேர்தல் ஆணையத்தின் அண்மைக்கால அறிக்கை. அரசியல் கட்சிகளின் பதிவு என்பதும், அங்கீகாரம் என்பதும் ஒன்றல்ல, வெவ்வேறானது.

சங்கத்தையோ, அரசியல் கட்சியையோ சட்டப்படி பதிவு செய்ய குறைந்தது ஏழு பேர் இருந்தாலே போதுமானது. ஆனால், அங்கீகாரம் என்பது அப்படியல்ல. அச்சங்கத்தை அல்லது கட்சியை அதனோடு உறவாடுவோர்கள் அங்கீகரிக்க வேண்டும். தமக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் அல்லது நடந்து கொள்ள முயலும் என முதலாளி நம்புகிற தொழிலாளர் சங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அங்கீகரிக்கிறாரோ அதுபோலவே, நமக்கு நல்லது செய்யும் என நம்புகிற கட்சியை பெரும்பான்மையான மக்கள் தேர்தலின் மூலம் அங்கீகரித்து, ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும்.

பெரும்பான்மையை இழந்த கட்சிகளோ, பெரும்பான்மையோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள் தங்கள் இஷ்டம்போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செய்யும் செயல்பாடுகளை எதிர்த்து, தடுத்த நிறுத்தும் எதிர்கட்சிகளாக இருக்கும். இப்படி, எதிர்கட்சியாக தனது கடமையை செவ்வனே செய்த அரசியல் கட்சிகள் தாம் அடுத்தடுத்த தேர்தல்களில் மக்களால் சாதாரணமாகவே அங்கீகரிக்கப்படும் அல்லது சாதனையாக பெரும்பான்மையோடு ஆட்சியில் கூட அமர்த்தப்பட்டுள்ளது.

இதிலும், அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற தகுதியை பெறுவதற்கு, பதிவு செய்யப்பட்ட ஓர் கட்சியானது, ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பதிவான ஒட்டு மொத்த வாக்குப்பதிவில் குறைந்தது 6% வாக்கைப் பெற வேண்டும் என்பது அங்கீகாரத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு கோளாகும்.

இந்த அளவுகோளின்படி, இன்றைய நிலையில், அதாவது கடந்த பொதுத்தேர்தல் முடிவின்படி, தேசிய அளவில் ஏழு கட்சிகளும், தமிழ்நாடு மாநில அளவில் மூன்று கட்சிகளுமே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. மற்றவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரத்திற்காக காலம் காலமாக காத்திருக்கும் அல்லது காலா காலத்திற்கும் காத்திருக்கப் போகும் கட்சிகளே என்ற நிலையில்தான் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எல்லாமே உள்ளன என்றால் மிகையல்ல.

ஏனெனில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் எல்லாம், தேர்தல் வரும் போது, பிரபல கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அல்லது பிரபல கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டாலே நாம் பிரபலமடைந்து விடுவோம், மக்களால் அங்கீகரிக்கப்பட்டு விடுவோம் என்ற குறுட்டுத்தனமான நம்பிக்கையில்தான் இருக்கிறார்களே ஒழிய, வளர்ந்த கட்சிகள் எப்படி வளர்ந்தன? மக்களால் எப்படி அங்கீகரிக்கப்பட்டன? என்பதை ஆராய்ந்தறிந்து அதற்கு ஏற்றபடி, மக்களுக்கான களப்பணியை ஆற்றுவதில்லை.

மாறாக, வளர்ந்து விட்ட அக்கட்சிகள் தற்போது என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றனவோ, அதே நிலைப்பாட்டில் தங்களையும் ஒத்த கருத்துள்ளவர்களாய் கூட்டணி கட்சியை தேவைப்படும் போது அல்லது ஆட்சிக்கு ஒருமுறை என மாறிமாறி மாற்றிக் கொள்வதனாலேயே, தேர்தல் களத்தில் தனிப்பெரும்பான்மையோடு வெல்வதும் இல்லை. இனியும் வென்று ஆட்சிக் கட்டிலில் அமரப்போவதும் சாத்தியமில்லை.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியல்லாது மக்களுக்கான களப்பணியோடு, தனியாத அரசியல் ஆர்வத்தில், தனியொரு நபராக, சுயேட்சையாக போட்டியிடும் தன்னார்வலர்களை, எங்கே தங்களைவிட்டு போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் மக்கள் அவர்களை அவ்வளவு எளிதில் அங்கீகரித்து தேர்ந்தெடுப்பதில்லை.

அப்படியே அங்கீகரித்து அனுப்பி வைத்தாலும் கூட, பத்தோடு ஒன்னு, பதிணொன்னு. அத்தோடு இதுவொன்னு என்ற நிலையில்தான் செல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய, சுயேட்சையாக போட்டியிட சுயமாக முடிவெடுத்தது போல், சுயேச்சையாக வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எதையுமே சுயமாக செய்ய முடிவதில்லை.

போட்டி என்றாலே, அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் சரிநிகர் சமம் என்ற அடிப்படையில் வயது, எடை, அறிவு போன்ற ஏதோவொரு வகையில் ஒத்திருக்க வேண்டும் என்பதே நியாயமானது என்பதால், அதுவே விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் தகுதிக்கான அளவு கோலாக நிர்ணயிக்கப்படுகிறது.

விளையாட்டாக விளையாடும் விளையாட்டுக்கே இப்படி தகுதி நிர்ணயிக்கப்படும் போது, அரசாள போட்டி போடுபவர்களுக்கு அனைத்து விதத்திலும் சரிநிகர் சமமான தகுதியை நிர்ணயிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கட்டாய கடமையல்லவா?

ஆனால், அரசாள போட்டி போடும் அரசியல் கட்சிகளின் போட்டியைப் பொருத்தவரை இப்படிப்பட்ட நியாயமான எவ்வித தகுதியுமோ போட்டியாளர்களுக்கு நிர்ணயிக்கப் படுவதில்லை. இதனால், பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம், தங்களின் வலிமையை, பலத்தை, தகுதியை, தன்னைவிட அனைத்து விதத்திலும் தகுதியில் குறைந்த சாதாரண எதிர்கட்சி வேட்பாளரிடம் போட்டி போட்டு நிலைநாட்டும் வெற்றி எப்படி உண்மையான, சரி நிகர் சமமான நியாயமான வெற்றியாக கருத முடியும்?

ஆனாலும், மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்த வேதனையான வெற்றிகள் எல்லாம் கடந்த காலங்களில் ஐம்பதாண்டு சாதனைகளாக சட்டப் பேரவையிலேயே கொண்டாடப் பட்டுள்ளது. இவர்களின் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது, இவர்களே முதல்வராக பொறுப்பேற்று உள்ளார்கள்.

உண்மையில், கட்சியின் தலைவரை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்களில், யாராவது வெற்றி பெற்றால் மட்டுமே, அது மாபெரும் வெற்றியாகும். இப்படியும் கூட, நடக்குமா என்ற சந்தேகமே வேண்டாம். இதுவும், தமிழக தேர்தல் வரலாற்றில் நடந்துள்ளது.

எனவே, நியாயமாக பார்க்கப்போனால், அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒரே தொகுதியில் போட்டியிட தேவையான சட்டக் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சித்தலைவரின் கட்சி வெற்றி பெறும் போது மட்டுமே, அவர் தலைமையிலான ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும்.

ஒருவேளை கூட்டணிக்கட்சி தலைவர் வெற்றி பெற்றால், அவர் தலைமையில் ஆட்சியை அமைக்க அழைக்க வேண்டும். இவ்விரண்டு சாதக சூழ்நிலைகளும் இல்லாத போது, அதற்கான மாற்று வழிவகைகளையும் செய்ய வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வதன் மூலமே, தொங்கு சட்டமன்ற அல்லது பாராளுமன்ற கூட்டணி ஆட்சியில் நிகழும் குழப்பங்களான, எங்களுக்கு இத்தனை மந்திரி பதவி வேண்டும் அல்லது எங்கள் தலைமையில் இத்தனை ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம் அல்லது எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், எந்த நேரத்திலும் அரசுக்கு தந்த ஆதரவை விலக்கி கொள்வது மற்றும் பெரும்பான்மையைப் பெற மற்ற கட்சிகளுக்கு விலை பேசுவது போன்ற பல்வேறு கூட்டணி குழப்பங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

பிரபல கட்சித் தலைவர், தன்னை விட தகுதி குறைந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக அல்லது பிரதம அமைச்சராக பொறுப்பேற்பது, மக்களாட்சிக்கான பொதுத்தேர்வு என்னும் பொதுத்தேர்தலில் அடிப்படையில் நிகழும் முதல் தோல்வி என்றால், தேர்தலின் முடிவில் உண்மையில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியே, மறைமுகமாக ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்பது மக்களாட்சியின் முடிவான தோல்வியாக இருக்கிறது. எப்படி?

ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும் போதோ தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலின் முடிவில் ஒருகட்சியோ அல்லது ஒருகட்சியின் தலைமையிலான கூட்டணி கட்சிகளோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. நேர்வுக்கு ஏற்ப அதிகாரம் மிக்க ஆளுநரால் அல்லது குடியரசு தலைவரால் வெற்றி பெற்ற அக்கட்சி அல்லது அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது.

இப்படிப்பட்ட ஆட்சியை அடிப்படையில் மக்கள்தானே தேர்ந்தெடுத்தார்கள். அப்படியானால், ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், விலையை ஏற்றினாலும், ஏற்றாவிட்டாலும், தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பொறுமையாக ஏற்றுக் கொள்வதுதானே வாக்களித்த மக்களின் கடமை!

ஆனால், உண்மையில் மக்களாட்சியில், மக்களாட்சிக்காக வாக்களித்த மக்களின் நிலை என்ன? ஆட்சியாளர்கள் விலையை ஏற்றினாலோ அல்லது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவில்லை என்றாலோ அல்லது தங்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என்றாலோ போராட்டம், ஆர்பாட்டம், சாலை மறியல் போன்ற சட்டத்துக்கு உட்படாத செயலில் இறங்குவது ஏன்?

இப்படி இறங்கியவர்கள் தங்களுக்கு அளித்த வாக்குகளுக்கு நன்றிக்கடனாக தங்களின் தவறுகளை, சட்ட விரோத செயல்களை சரி செய்து நல்லதொரு மக்களாட்சியை, மக்களுக்கு விருப்பமான ஆட்சியை நிலைநாட்டுவதுதானே ஆட்சியாளர்களின் கடமை?

ஆனால், உண்மையில், கடந்த காலங்களில் நாமறிந்தவரை என்ன நடந்துள்ளது? மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களாட்சியில், மக்களை மகிழ்ச்சியில் வைத்திருக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள், மக்களின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்துவது, வழக்கு பதிவு செய்து தண்டனையை பெற்றுத்தருவது போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவது ஏன்? இதுதான் வாக்களித்தமைக்கு கொடுக்கும் பரிசா?

முன்னுக்கு பின் முரணான இவ்விரண்டு செயல்பாடுகளுக்கும் அடிப்படை காரணம் என்ன என அடிப்படையில் ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு, மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அம்மக்களை ஆள ஆட்சியில் அமர்த்தப்பட்டிருப்பது பெரும்பான்மை மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர் என்பதே!

உண்மையாக, தேர்தலில் நான்கு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டி போடுவதாகவும், நூறு சதவிகித வாக்குகள் பதிவாவதாகவும் எடுத்துக் கொள்வோம். இதில் முதல் கட்சிக்கு 27 வாக்குகளும், இரண்டாவது கட்சிக்கு 25 வாக்குகளும், முன்றாவது மற்றும் நான்காவது கட்சிக்கு சராசரியாக தலா 24 வாக்குகளோ அல்லது ஓரிரு வாக்குகள் ஏறக்குறைய வாக்குகளாகவோ பதிவாகிறது என்று எடுத்துக் கொள்வோம்.

இங்கு 27 வாக்குகளைப் பெற்ற முதல் கட்சிதானே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி செய்ய அமர்த்தப்படுகிறது. ஆனால், உண்மையில் இப்படி அமர்த்தப்படும் கட்சியை எதிர்த்து மற்ற மூன்று கட்சிகளுக்கும் வாக்களித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 73 நபர்கள் அல்லவா?

இப்படி, பெரும்பான்மை எதிர்போடும், சிறுபான்மை ஆதரவோடும் நடைபெறும் ஆட்சி எப்படி உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியாக இருக்க முடியும்?

நான்கு கட்சிகள் போட்டி போட்டு, பொறுப்புணர்வோடு நூறு சதவிகித வாக்குகள் பதிவாகும் மக்களாட்சியே, உண்மையான மக்களாட்சியாக இல்லாத போது, கணக்கிலடங்கா கட்சிகளோடு, சுயேச்சைகள் வேறு போட்டி போடும் பொதுத்தேர்தலில், அதிகபட்சமாக சற்றேறக் குறைய எழுபது சதவிகித வாக்குகளே பதிவாகிற வாக்குப்பதிவில், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்ற உறுதியில்லா மின் வாக்குப்பதிவு, கள்ள வாக்கு, இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கும் வாக்கு, இலவசங்களை கொடுத்து இலவசமாக பெறும் வாக்கு, விருப்பம் இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக பதிவாகும் வாக்கு என பல்வேறு தரப்பட்ட வாக்குப்பதிவுகளின் மூலமே வெற்றி பெற்று நடைபெறும் ஆட்சி எப்படி மாண்புமிக்க மக்களாட்சியாக இருக்க முடியும்?

மாறாக, நிச்சயமாக, மனசாட்சி இல்லாத, மக்களின் மதிப்பை பெறாத ஆட்சியாகத்தானே இருக்க முடியும். அன்றன்று; அப்படித்தானே இருக்கிறது. அப்படியானால், உண்மையான நியாயமான, மகத்தான மக்களாட்சி மலர இதில் நாம் சொல்லும் சீர்கேடுகள் எல்லாம் இந்திய அரசமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக களையப்பட வேண்டும்.

இதற்கு முன்னோட்டமாக, இதுவரை நடைப்பெற்ற தேர்தல்களில் எல்லாம் செலுத்தியதை விட, தனது சுய அதிகாரத்தை தேர்தல் ஆணையம், தற்போதைய பொதுத்தேர்தலில் முழு முனைப்போடு செலுத்தி, மகத்தான மக்களாட்சி மலர முதற்கட்டமாக களமிறங்கி, சீர்கேடுகளை களையெடுக்க முயற்சிக்க வேண்டும். 

அனைவருக்கு ஓட்டுரிமை!

அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென ஒரு காலத்தில் முற்போக்கு வியாதிகள் போராடினார்கள். அதனால், வாக்குரிமை கிடைத்தது. ஆனால் தனக்கு கிடைத்த வாக்குரிமை எப்படிப்பட்டது என தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்ததா?

ஆகையால், விலைக்கு விற்கிறார்கள். மதிப்புத் தெரியாதவனிடம் மதிப்புள் பொருளை கொடுத்தால், அது குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போன்றுதான் ஆகும்.

இப்போதைய முற்போக்கு வியாதிகள், ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள் என கூவினாலும், யாரும் கேட்கத் தயாரில்லை. குரங்கிடம் பூமாலையைக் கொடுத்து விட்டு, பத்திரமாக வைத்திரு என்றால் வைத்திருக்குமா?

இதுபோல, இனியும் வாக்கு விற்பனை தொடரத்தான் செய்யும். போராடி ஓட்டுரிமையை வாங்கியதால், சாதித்தது என்ன... சாகடித்தது என ஆராய்ந்தால், நிச்சயமாக சாகடித்ததே அதிகம். இதனை நான் சொல்லவில்லை. முற்போக்கு வியாதிகளே வேறுவிதமாக சொல்கிறார்கள்.

ஆமாம், ‘‘இதைத்தான், பணநாயகம் வாழ்கிறது, ஜனநாயகம் சமாதியாகி விட்டது’’ என்று முற்போக்கு வியாதிகள் கூச்சல் போட்டுப் பார்க்கிறார்கள். எனக்கு குவாட்டர் கிடைத்தால் போதும் என்பவர்களிடம் ஒன்றும் எடுபடவில்லை.

இப்படியெல்லாம் நடக்குமென நினைத்துத்தான் நம் முன்னோர்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை மறுத்தார்களோ என்னவோ! இப்படி உண்மையில் முற்போக்குத்தனமாக சிந்தித்தவர்களை பிற்போக்குகள் என்று சொன்னவர்கள், இப்போது புறம்போக்குகளைப் போல் ஆகிவிட்டனர்.

முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள். நாமே புத்திசாலிகள் என நினைப்பவர்கள், முன்னோர்கள் எப்படியோ அப்படித்தான் நாமும் இருப்போம் என்ற அடிப்படை அறிவில்லாதவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல், ஆங்கிலேயர்களுக்குப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எது சரி?
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, April 3, 2014

தவறுகளுக்கு வழிவகுக்கும் தகவல் தொழில் நுட்பம்!


நாம் மாணவர்களாக இருந்த போது, படிச்சி வக்கீலாகப் போறியா, டாக்டராகப் போறிய, இஞ்சியராக போறிய என பல்போன பொக்கைவாய் பாட்டி கூட கேட்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி கேட்பது தற்போது குறைந்து, சாப்பிட்டு வேர் இஞ்சினியர் ஆகப் போறியா என கேட்க தொடங்கி விட்டார்கள்.


இப்படி யாராவது என்ன முன்பாக கேட்டால், படித்து பொய்யனாக போறியா, கொலைகாரனாக போறியா, மோசடிக்காரனாக போறியா என்று மாற்றி கேளுங்கள் என்பேன் அல்லது அவர்கள் முன்பாக நானே கேட்டு விடுவேன்.


பொய்யர்கள் அதிகமாக, அதிகமாக குற்றங்களும் அதிகமாகின்றன. பொய்யர்களே குற்றவாளி களாகவும், சட்டந்தெரியாத கோமாளிகளாகவுந்தாம் இருக்கிறார்கள். இதேபோல், மருத்துவர்கள் அதிகமாக, அதிகமாக நோய்கள் அதிகமாகின்றன. மருத்துவர்களே பல்வேறு நோயாளிகளாகத்தாம் இருக்கிறார்கள். இதுகுறித்து என்னை போன்றவர்கள் கேள்வி கேட்டால், நாங்களும் மனிதர்கள்தாம் என்பார்கள்.


ஆனால், இவ்வுலகத்தில் எங்களைவிட புத்திசாலிகள் யாருமேயில்லை; நாங்களெல்லாம் கடவுளுக்கு நிகரானவர்கள் என ஒன்றுமறியாத அப்பாவிகளிடம் பீற்றிக்கொள்வார்கள். உண்மைதாம், இவர்களைவிட திறமையாக நம்பிக்கை மோசடி செய்பவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆகையால், இத்தொழில்களை செய்பவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளே கிடையாது. மாறாக, ஈனப்பிறவிகளே!


நமது வீட்டுக்குள்ளே உலகத்தை கொண்டுவரும் அளவிற்கு வளர்ந்து வந்த தகவல் தொழிற்நுட்பம், திடீரென யாரும் எதிர்பார்க்காத சரிவைக்கண்டு, ஒரே நொடியில் உலகெங்கும் கோடிகணக்கானோருக்கு வேலையில்லாமல் செய்தது.


தகவல் தொழிற் நுட்ப புரட்சியால்தால் உலகம் எல்லா விதத்திலும் முன்னேறியுள்ளது, அதீத வளர்ச்சி கண்டுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால், இந்த தகவல் தொழிற்நுட்பம் எது எதில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வரையறை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று நம்நாடு உள்ளது.


எது ஒன்றையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தும் போது அது குறித்து சர்ச்சைகள் ஏதும் எழுவதில்லை. அது குறித்து யாரும் சிந்திப்பதும் இல்லை. தவறாக பயன்படுத்தும் போது அதுகுறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள், சிந்தனைகள் எல்லாம் இயல்பாகவே எழுகின்றன.


பொதுவாக எந்த ஒரு துறையாக இருந்தாலும் அத்துறைப் பற்றி ஒரளவேணும் மற்ற துறையில் அல்லது மாற்று துறையில் உள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியும்.


மற்ற சாதனங்களை பயன்படுத்துவதை விட தகவல் தொழிற்நுட்ப சாதனங்களை மக்கள் பயன்படுத்தாத வினாடிகளே இல்லை என்கிற அளவிற்கு அதன் அதீத வளர்ச்சி கடைக்கோடி சாமானிய மனிதனைக் கூட சென்றடைந்துள்ள இந்த கால கட்டத்தில், ‘‘அதில் ஏற்படும் பிரச்சினைகள், குளறுபடிகள் குறித்து மற்ற சாதனங்களில் புரிந்து கொள்வதைப் போல புரிந்து கொள்ள, அத்துறை சார்ந்தவர்களைத் தவிர வேறு யாராலும் முடிவது இல்லை என்பதை விட, பெரும்பாலான சமயங்களில் அவர்களாலேயே கூட முடியவில்லை என்பது அனைவரும் அறிந்த நிதர்சனம்’’.


உலகளாவிய சட்ட விழிப்பறிவுணர்வுக்காக நீதியைத்தேடி... இணையப்பக்கத்தை நிர்வகித்து வரும் நான், சமூக வலைதலங்களில் வரும் புகைப்படங்கள், காணொலி காட்சிகள் எல்லாம் எப்படி எப்படியோ சித்தரிக்கப்படுகின்றன என்பதை அறிவேன்.


பன்பாடு இல்லாத மேற்கத்திய மற்றும் நம்மவர்களது பாலியல் காட்சிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை என்பதை இணையத்தில் உலாவரும் ஒவ்வொருவரும் அறிவர். இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் குற்றங்களை மட்டும் தடுக்க நினைப்பதும், நிதிபதிகள் குற்றவாளிகளை தண்டிக்க நினைப்பதும் கையாளாகாத்தனமே தவிர, துடிப்பான தடுப்பு நடவடிக்கை அன்று.


மின்னஞ்சல் மற்றும் உலாப்பேசிகளுக்கு வரும் பரிசு, அவார்டு, லாட்டரி குறித்த மோசடி செய்திகளை யார் அனுப்புவது, எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை கண்டு பிடிக்க இயலாமல் சைபர் கிரைம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளும் எச்சரிக்கையாக இருக்கவே மக்களுக்கு போதிக்கின்றன என்பதில் இருந்து அவர்களின் கையாளாத்தனம் தெரிகிறது. மத்திய அரசின் முக்கிய இணையதளங்களையே முடக்கி காட்டியிருக்கிறார்கள்.


இன்றும் நம்ம ஊரில், குடிசை தொழில்களில் ஒன்றாக விளங்கும் பீடி சுருட்டுவது போல, சீனாவில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த அனைத்து பொருட்களும் குடிசை தொழிலாகவே தயாரிக்கப் படுவதாக சொல்கிறார்கள். நம் சந்தைக்கு பெருமளவில் வந்து குவியும் விதவிதமான இப்பொருட்களையும், அதன் மலிவு விலைகளையும் பார்த்தால் குடிசை தொழில் உண்மை என்றே நம்ப வேண்டியிருக்கிறது.


இப்படி தகவல் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவர்களை கொண்டுதாம், டெகல்கா, சேனல் 4 போன்ற ஊடகங்கள் சர்ச்சைக்கு உரிய ஆதாரங்களை மிக எளிதாக கைப்பற்றி வெளியிடுகின்றன என்றும், இதற்கு அந்நாட்டு இளைஞர்களுக்கு கொடுக்கும் கூலி சில டாலர்களே என்றும் தகவல் தொழிற்நுட்பத்தில் கைதேர்ந்த நம்மவர்கள் சொல்கிறார்கள்.


ஊருக்கு ஊர் கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் காவலர்கள் இருந்தே குற்றங்களை குறைக்க முடியவில்லை என்கிற அவல நிலையில், தகவல் தொழில் நுட்ப குற்றங்களை கண்டுபிடிக்கும் காவலர்கள் மாவட்ட அளவில் மட்டுமே இயங்கி வருகின்ற போது, எப்படி தகவல் தொழில் நுட்ப குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்?


உள்ளூரில் நடப்பதே இப்படியென்றால், வெளி மாநிலத்தில் இருந்தும் நாடுகளில் இருந்தும் செய்யப்படும் குற்றங்களை எப்படி கண்டு பிடிப்பார்கள், கட்டுப்படுத்துவார்கள்? ஆனால், முக்கிய நபர்களுக்கு ஏதாவது என்றால் மட்டும், கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.


நம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இத்தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் நம்மை வெகுவாக சுரண்டுகின்றன என்பதையும், அதனை நம்மால் தடுக்க முடிவதில்லை என்பதையும், அவர்கள் அனுமதிக்கும் அளவை விட குறுஞ்செய்திகளை அனுப்ப முடிவதில்லை என்பதையும், முறையற்ற வகையில் பேசுபவரை எங்கிருந்து பேசுகிறார் என்பதை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை.


தகவல் தொழில் நுட்பம் என்கிற சூழ்நிலை சூழ்ச்சி வலையில் சிக்கி வெவ்வேறு வகையான சாதனங்களை பயன்படுத்தி வரும் நாம் ஒவ்வொருவரும், மீண்டும் ஒரு நாகரீக அடிமை வாழ்வில் அடியெடுத்து வைத்து, அதாள பாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து, மீண்டு(ம்) வெளி வருவோமா?


தகவல் தொழிற்நுட்பத்தை ஒவ்வொருவரும் தமது வசதிக்கும், நோக்கத்திற்கும் தக்கபடி, தனித்தனியாக உருவாக்கி கொள்ள முடியும் என்பதோடு, அது மற்றவர்களுக்கு புரியாத வண்ணம் மிகச்சிறப்பான முறையில் கையாள முடியும் என்பதுதான்.


இப்படித்தான், ஓசூர் டி.வி.எஸ் நிர்வாகம், தன்னிடம் இருந்த தகவல் தொழிற்நுட்ப யுக்தியை முறைகேடாக பயன்படுத்தி, தொழிலாளி முறைகேடு செய்தார் என குற்றம்சாற்றி சர்வ சாதாரணமாக, சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்தது.


நிர்வாகத்துக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, நிர்வாகத்தின் சட்ட விரோதமான தகவல் தொழிற்நுட்பத்தை (வருகையை பதிவு செய்யும் மின்னணுப் பதிவை) கண்டும் காணாமல் இருந்த அரசு ஊழியர்களின் கழுத்தில் சட்டம் என்ற கத்தியை சாட்சியாக வைக்கவே, அவ்வூழியர்களோ நிர்வாகத்தின் கழுத்தில் தனது சட்ட அதிகார கத்தியை வைத்தார்கள். விளைவு?


வேறு வழியில்லாமல் டி.வி.எஸ் நிர்வாகம் தொழிலாளியின் வீடு தேடிச் சென்று சுமார் ஏழு லட்ச ரூபாய்களை இழப்பீடாக வழங்கியது.


இதெல்லாம், கோடான கோடிக்கு அதிபதியான நிர்வாகத்தை எதிர்த்து, மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே ஓசூரில் இயங்கும் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில், நமது பாணியில் மனு செய்த தொழிற்தகராறு வழக்கு எண் 251 / 2005 இல் சுமார் ஒன்றரை வருடத்திற்குள் சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் காட்டிய இமாலய சாதனை.


இந்நிலையில், நம்நாட்டில் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமானதாகவோ, மக்களாட்சிக்கு உகந்ததாகவோ தெரியவில்லை. ஏனெனில், தேர்தல் தலைமை பொறுப்பு பணி உட்பட மற்ற பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எவருமே தகவல் தொழிற் நுட்பத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க இயலாது.


அப்படியே பயிற்சி பெற்றிருந்தாலும் கூட, அழிக்க முடியாத, அழித்தால் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய, ஆவணங்களிலேயே அரசு ஊழியர்கள் தங்களின் ஆசாபாசங்களுக்காக எதையும் செய்யத் துணியும் போது, பெரும்பாலான மக்களுக்கு புரியாத புதிராக இருக்கிற தகவல் தொழிற்நுட்பத்தை தவறாக பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?


எந்த ஆட்சி தனது ஆசாபாசங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதோ, அந்த அரசுக்கு சாதகமாகத் தானே அரசு ஊழியர்கள் செயல்படுவார்கள், அதற்கு தக்கவாறுதானே தகவல் தொழிற்நுட்பத்தை மாற்றி அமைப்பார்கள்?


எவ்வித கட்டுப்பாடும் இன்றி குடிமகன் ஒருவர் சுயமாக செலுத்தக்கூடிய வாக்குரிமை பறிபோய், தற்போது அரசு அலுவலரின் சமிக்சைக்காக காத்து நிற்க வேண்டிய அவலம் மின்னணுவில் இருக்கிறது. வாக்குபதிவை விரைவாக கணக்கிட்டு வெற்றியை வெளிப்படுத்துவதில் கள்ளத்தனத்தை காண முடிகிறது. முடிவுகள் சிதம்பர ரகசியமாக உள்ளது.


முன்பு 49ஓ வில் தாம் ஓட்டு போட்டோம் என்பதற்கு உத்திரவாதம் இருந்தது. ஆனா, இப்போ அது கூட உத்திரவாதம் இல்லை. 49ஓ ஒட்டு போட, ஒரு தில்லும் வேண்டியிருந்தது. ஏன்னா தில் இல்லாதவங்க, இதுல ஓட்டுபோட மாட்டாங்க. வாக்குப்பதிவு யந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என ஒருவர் நிருபித்து இருக்கிறார், பாருங்கள்.


We can do faruf in voting machine


தனது தன்னிகரற்ற தகவல் தொழிற்நுட்ப திறமையால் உலகையே உளவு பார்க்கும் அமெரிக்கா, இன்றளவும் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு, வாக்குச் சீட்டையே பயன்படுத்தி வருவது, தகவல் தொழில் நுட்பத்தில் எதையும் செய்ய முடியும் என்பதற்கான வெட்ட வெளிச்சம்.


மொத்தத்தில் எல்லா கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கும் விதத்தில் தவறுக்கு வழிவகுத்து வருகிறது, தகவல் தொழிற்நுட்பம். இந்தியாவில் இதுவரை அமைந்துள்ள ஆட்சிகள் எதுவுமே மக்களாட்சி இல்லை. இது குறித்து, ‘மகத்தான மக்களாட்சி மலர...’ என்கிற தலைப்பில் விரைவில் படிக்க இருக்கிறீர்கள்!


மக்களாட்சி மலர மிக முக்கியமாக செய்யப்பட வேண்டிய சீர்த்திருத்தங்களில் ஒன்று, ‘வாக்குச் சீட்டு முறையை திரும்ப கொண்டு வர வேண்டும். வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையான ‘49 ஓ’ வாக்குச் சீட்டிலேயே அச்சிடப்பட வேண்டும்’.


ஐந்தாண்டுகளுக்கு நாட்டையாளும் வேலை யாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய அதிக பட்சமாக ஐந்து நாட்கள் காத்திருப்பதில் எதுவும் குடிமுழுகி விடாது. வருபவர்கள் பிடிக்காவிட்டாலும் ஐந்து வருடமோ அல்லது அதற்கு மேலோ காத்திருக்கத்தானே வேண்டும்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, April 2, 2014

Law slogan in Kannada


No law no life. Know law Know life. Law books

ಕಾನೂನಿಲ್ಲದೇ ಜೀವನವಿಲ್ಲ. ಕಾನೂನನ್ನು ತಿಳಿಯಿರಿ ಜೀವನವನ್ನು ಅರಿಯಿರಿ.

Plead in court just like talk the parents.

ನ್ಯಾಯಾಲಯದಲ್ಲಿ ವಾದಿಸುವುದು ತಾಯಿ, ತಂದೆಯರ ಜೊತೆ ಮಾತನಾಡಿದ ಹಾಗೆ. 

Justice is nothing but law. Don't require a degree in law.

ನ್ಯಾಯ ತೀರ್ಪು ಕಾನೂನಿನಿಂದ ಹೊರತಾಗಿಲ್ಲ. ಯಾವುದೇ ಕಾನೂನು ಪದವಿಯ ಅಗತ್ಯವಿಲ್ಲ.

Lawyers are liers and mere middle men.  ವಕೀಲರು ಸುಳ್ಳುಗಾರರು

ಮತ್ತು ಕೇವಲ ಮಧ್ಯವರ್ತಿಗಳಾಗಿರುವರು.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, April 1, 2014

Parliament & Newspapers - In the vision of Mahatma Gandhi


India ,mapReader : Then from your statement I deduce that the Government of England is not desirable and not worth copying by us.  


Editor : Your deduction is justified. The condition of England at present is pitiable. I pray to God that India may never be in that plight. That which you consider to be the Mother of Parliaments is like a sterile woman and a prostitute. Both these are harsh terms, but exactly fit the case. That Parliament has not yet, of its own accord, done a single good thing. Hence I have compared it to a sterile woman. The natural condition of that Parliament is such that, without outside presure, it can do nothing.


It is like a prostitute because it is under the control of ministers who change from time to time. Today it is under Mr. Asquith, tomorrow it may be under Mr. Balfour.  


Reader : You have said this sarcastically. The term "sterile woman" is not applicable. The Parliament, being elected by the people, must work under public pressure. This is its quality.  


Editor : You are mistaken. Let us examine it a little more closely. The best men are supposed to be elected by the people. The members serve without pay and therefore, it must be assumed, only for the public weal. The electors are considered to be educated and therefore we should assume that they would not generally make mistakes in their choice. Such a Parliament should not need the spur of petitions or any other pressure. Its work should be so smooth that its effects would be more apparent day by day.


But, as a matter of fact, it is generally acknowledged that the members are hypocritical and selfish. Each thinks of his own little interest. It is fear that is the guiding motive. What is done today may be undone tomorrow. It is not possible to recall a single instance in which finality can be predicted for its work.  


When the greatest questions are debated, its members have been seen to stretch themselves and to doze. Sometimes the members talk away until the listeners are disgusted. Carlyle has called it the "talking shop of the world". Members vote for their party without a thought. Their so-called discipline binds them to it. If any member, by way of exception, gives an independent vote, he is considered a renegade.


If the money and the time wasted by Parliament were entrusted to a few good men, the English nation would be occupying today a much higher platform. Parliament is simply a costly toy of the nation.


These views are by no means peculiar to me. Some great English thinkers have expressed them. One of the members of that Parliament recently said that a true Christian could not become a member of it. Another said that it was a baby. And if it has remained a baby after an existence of seven hundred years, when will it outgrow its babyhood?  


Reader : You have set me thinking; you do not expect me to accept at once all you say. You give me entirely novel views. T shall have to digest them. Will you now explain the epithet "prostitute"?  


Editor : That you cannot accept my views at once is only right. If you will read the literature on this subject, you will have some idea of it. Parliament is without a real master. Under the Prime Minister, its movement is not steady but it is buffeted about like a prostitute.


The Prime Minister is more concerned about his power than about the welfare of Parliament. His energy is concentrated upon securing the success of his party. His care is not always that Parliament shall do right. Prime Ministers are known to have made Parliament do things merely for party advantage. All this is worth thinking over.  


Reader : Then you are really attacking the very men whom we have hitherto considered to be patriotic and honest?  


Editor : Yes, that is true; I can have nothing against Prime Ministers, but what I have seen leads me to think that' they cannot be considered really patriotic. If they are to be considered honest because they do not take what are generally known as bribes, let them be so considered, but they are open to subtler influences.


In order to gain their ends, they certainly bribe people with honours. I do not hesitate to say that they have neither real honesty nor a living conscience.  


Reader : As you express these views about Parliament, I would like to hear you on the English people, so that I may have your view of their Government.  


Editor : To the English voters their newspaper is their Bible. They take their cue from their newspapers which are often dishonest. The same fact is differently interpreted by different newspapers, according to the party in whose interests they are edited. One newspaper would consider a great Englishman to be a paragon of honesty, another would consider him dishonest. What must be the condition of the people whose- newspapers are of this type?  


Reader : You shall describe it.


Editor : These people change their views frequently. It is said that they change them every seven years. These views swing like the pendulum of a clock and are never steadfast. The people would follow a powerful orator or a man who gives them parties, receptions, etc. As are the people, so is their Parliament. They have certainly one quality very strongly developed. They will never allow their country to be lost. If any person were to cast an evil eye on it, they would pluck out his eyes. But that does not mean that the nation possesses every other virtue or that it should be imitated.  


If India copies England, it is my firm conviction that she will be ruined.


From Indian Home Rule By : M. K.  Gandhi "THE CONDITION OF ENGLAND"


இதன் சுருக்கமான தமிழாக்கத்தை இங்கு சொடுக்கினால் படிக்கலாம்.


 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பாராளுமன்றம், பத்திரிகை குறித்து மகாத்மா காந்தி!


ஆங்கில அரசாங்க முறை பரிதாபத்திற்குறியது. இது நாம் விரும்பத் தக்கதோ, தகுதியானதோ அன்று என்பதால், இப்படியொரு நிலைமை இந்தியாவிற்கு என்றுமே வந்து விடக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.

பாராளுமன்றத்துக்கெல்லாம் அன்னையான இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு மலடியைப் போன்றும், விபச்சாரியைப் போன்றும் இருக்கிறது. இது சற்றே கடுமையான கருத்தே; ஆனாலும், முற்றிலும் சரியானதே!

இந்த பாராளுமன்றம், தானாகவே ஒருநல்ல காரியத்தைக்கூட இதுவரை செய்ததில்லை. இதனாலேயே அதனை ஒருமலட்டுப் பெண்ணுக்கு ஒப்பிடுகிறேன். வெளியில் இருந்து வரும் வற்புறுத்தலினால் அல்லாது, அது ஒன்றுமே செய்ய முடியாது என்பதே அதன் இயற்கையான நிலைமையாக இருந்து வருகிறது.

அடிக்கடி மாறும் மந்திரிகளின் ஆதிக்கத்தின்கீழ் அது இருந்து வருவதால், அதுவொரு விபச்சாரியைப் போன்றது. இன்று அது ஒருவரின் கீழ் இருக்கும். நாளை வெறொருவரின் கீழ் இருக்கும்.

சிறந்தவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் எனக் கருதப்படுகிறது. உறுப்பினர்கள் சம்பளமின்றி வேலை செய்கின்றனர்; ஆகையால், பொதுமக்களின் நன்மைக்காகவே சேவை செய்கிறார்கள் என்று கருதவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் படித்தவர்கள் எனக் கருதப்படுகிறார்கள்; ஆகையால் தேர்ந்தெடுப்பதில் பொதுவாக தவறு செய்யமாட்டார்கள் என்றும் நாம் ஊகித்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய பாராளுமன்றத்தை தூண்டுவதற்கு விண்ணப்பங்களோ அல்லது வேறுவகை தூண்டுதல்களோ அவசியமேயில்லை. அதுசெய்யும் காரியங்களின் தன்மை நாளுக்குநாள் மிகத் தெரிவானதாய் இருக்கும் வகையில், அதன் வேலை எளிதாக இருக்க வேண்டும்.

ஆனால் உண்மையில், அதன் உறுப்பினர்கள் கபடமுள்ளவர்களாகவும், சுயநலக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் சங்கதி. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சிறு நலன்களிலேயே கருத்துடன் இருக்கின்றனர். பயமே அவர்களை நடத்திச் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது.

முந்தைய நாள் உருவாக்கியதை, மறுநாள் வேறுவிதமாக அழித்து மாற்றியாகி விடும். அதன் வேலையில், இதுவே முடிவானது என்று ஒன்றை எடுத்துக்காட்டுவது முடியாதகாரியம்.

பெரிய பிரச்சனைகள் விவாதிக்கப்படும்போது, அதன் உறுப்பினர்கள் காலை நீட்டிக்கொண்டு தூங்கி விடுகின்றனர். சில சமயங்களில் கேட்பவர்கள் சலித்துப்போகும் அளவிற்கு, உறுப்பினர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள். அறிஞரும், எழுத்தாளருமான கார்லைல் என்பவர், அதனை ‘உலகத்தின் பேச்சுக்கடை’ என்கிறார்.

உறுப்பினர்கள் சிந்தித்துப் பாராமலேயே தங்கள் கட்சிக்கு சாதகமாக வாக்களிக்கிறார்கள். கட்டுப்பாட்டிற்கு இணங்கி அவர்கள் அப்படிச்செய்ய வேண்டியிருக்கிறது. எவரேனும் ஓர் உறுப்பினர் தப்பித்தவறி, சுயேச்சையாக வாக்கைச் செலுத்தி விட்டால், அவர் கட்சியை விட்டு பிரிந்தவராக கருதப்படுகிறார்.

பாராளுமன்றம் வீணாக்கி வரும் பணத்தையும், நேரத்தையும் சில நல்லவர்களிடம் ஒப்படைத்தால், அந்நாடு இன்னும் அதிக உயர்ந்த மதிப்பில் இருக்கும். அத்தேச மக்கள் அதிக செலவு செய்து நடத்தும் ஒரு பொம்மைக்கூத்தே பாராளுமன்றம்.

இதனை நான் மட்டும் சொல்லவில்லை; சில ஆங்கிலேய அறிஞர்களும் இதையே கூறியிருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்தவர் எவரும் அதில் உறுப்பினராக இருக்க முடியாது என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினரே கூறியிருக்கிறார். மற்றொருவர், அதுவொரு குழந்தை என்கிறார்.

எழுநூறு ஆண்டுகளாக இருந்து வரும் பாராளுமன்றம், இன்னும் குழந்தையாகவே இருக்கிறது என்றால், அது என்றுதாம் குழந்தைப்பருவத்தில் இருந்து மாறப்போகிறதோ?

பாராளுமன்றத்துக்கு உண்மையான முதலாளி கிடையாது. பிரதம மந்திரியின்கீழ் அதன் நடவடிக்கை நிலையானதன்று. அதனால், ஒரு விபச்சாரியைச் செய்வதுபோல், அதனை அலைகழிக்கின்றனர்.

பிரதம மந்திரிக்கோ பாராளுமன்றத்தின் நன்மையைவிட, தனது அதிகாரத்தில்தான் அதிக சிரத்தை. அவருடைய சக்தியெல்லாம், தம்முடைய கட்சிக்கு வெற்றியை தேடுவதிலேயே ஈடுபட்டிருக்கிறது. பாராளுமன்றத்துக்கு நியாயமானதையே செய்யவேண்டுமென என்பதில், அவருக்கு எப்பொழுதுமே அக்கறை கிடையாது.

தம் கட்சிக்கு அனுகூலமாகவே பாராளுமன்றம் காரியங்களை செய்யும்படி பிரதம மந்திரிகள் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவு. பிரதம மந்திரிகள் மீது எனக்கு எந்தப் பகையுமில்லை. ஆனால், நான் பார்த்திருப்பவைகளில் இருந்து அவர்களை தேசத்தின் அபிமானிகள் என்று என்னால் எண்ணமுடியவில்லை.

அவர்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்பதற்காக அவர்களை யோக்கியர்கள் என நினைத்தால், யோக்கியர்கள்தாம். ஆனால், வெளிவராத பல தூண்டுதல்களுக்கு இவர்கள் உடன்பட்டு விடுகிறார்கள்.

தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக, மக்களுக்கு கௌரவப் பட்டங்களை லஞ்சமாக கொடுக்கின்றனர். அவர்களிடம் உண்மையான நேர்மையோ, மனசாட்சியோ கிடையாது என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை.

வாக்காளர்களுக்கு அவர்களுடைய பத்திரிகைகளே வேதவாக்கு. அப்பத்திரிகைகளை கொண்டே அவர்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன. அப்பத்திரிகைகளோ எப்பொழுதுமே யோக்கியமானவை யன்று. ஒரே விசயத்தைப்பற்றி, பல பத்திரிகைகளும், அவை எந்த கட்சியின் சார்பாக நடத்தப் படுகின்றனவோ அதற்கு ஏற்றப்படி, வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்கின்றன.

ஒருவரை குறித்து ஒரு பத்திரிகை, யோக்கிய பொறுப்புக்கு உதாரணப்புருஷர் என்று கூறும். மற்ற பத்திரிகைகளோ, அவரை அயோக்கியர் என்று சொல்லும்.

இந்த வகைப் பத்திரிகைகளைப் படிக்கும் மக்கள் அடிக்கடியும், அதிகபட்சம் ஏழாண்டுகளுக்குள்ளும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். இக்கருத்துக்கள் கடிகாரத்தின் பெண்டுலம் போல அப்பக்கமும், இப்பக்கமுமாக ஊசலாடிக் கொண்டேயிருப்பதால், ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை.

நல்ல பேச்சாளர்கள் அல்லது தங்களுக்கு விருந்துகள், வரவேற்புகள் அளிப்பவர்களின் பின்னாலேயே அம்மக்கள் போய்க்கொண்டிருப்பார்கள். அம்மக்கள் எவ்வாறோ, அவ்வாறே அவர்களது பாராளுமன்றமும். ஆனால், அவர்களிடம் பலமாக ஊன்றிப்போன ஒருகுணம் மாத்திரம் நிச்சயமாக இருந்து வருகிறது.

தங்கள் நாடு அழிந்து போவதற்கு இடந்தரவே மாட்டார்கள். எவரேனும் கெட்டஎண்ணத்துடன் தங்கள் நாட்டை நோக்கி விட்டால், அவர்களுடைய கண்களைப் பிடுங்கி விடுவார்கள். இதனால், அம்மக்களிடம் எல்லா உயர்குணங்களும் இருக்கின்றன என்றோ, அவர்களைப் பின்பற்றி நடக்கவேண்டுமென்றோ ஆகிவிடாது.

இந்தியா, இங்கிலாந்தைப்போல நடப்பதென்று ஆரம்பித்துவிட்டால், இந்தியா அழிவுறும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.

1909 ஆம் ஆண்டில், தனது நாற்பதாவது வயதில் மகாத்மா காந்தி எழுதிய முதல் மற்றும் தத்துவ நூலான இந்திய தன்னாட்சியில், ‘இங்கிலாந்தின் நிலைமைஎன்கிற ஐந்தாம் பகுதியில் இருந்து, கருத்து மாறாமல் தேவைக்கேற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா. 

இதிலிருந்து நாம் தெரிந்து கொ(ள்ள, ல்ல)வேண்டியது...

சுமார் 105 ஆண்டுகளுக்கு முன்பாக சொன்ன இக்கருத்தில் தவறு ஏதுவுமில்லாமல் அப்படியே அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிதாம் மாறியுள்ளதே தவிர, அவ்வாட்சியில் இருந்தது போன்ற கட்சி ஆட்சிகள் மற்றும் காட்சிகள் எதுவுமே மாறவில்லை!

இந்தியா அழிவில் சென்று கொண்டிருக்கிறதே தவிர, நல்லரசாக வில்லை. எங்கே வல்லரசாவது?

மகாத்மா காந்தியின் கொள்கையால் நாடு நாசமாகவில்லை. அவரது கொள்கையை கடைப் பிடிக்காததால்தாம் நாசமாகிக் கொண்டு இருக்கிறது

உண்மையான காந்தியாவாதி யாராவது இருந்தால், தேர்தலில் போட்டியிடுவார்களா? இப்படி காந்தி சொன்ன எதையுமே கடைப்பிடிக்காத நம்தேசம் எப்படி காந்தி தேசமாகும்; அவரின் பெயரில் போடும்  வேஷமேயாகும்! 

இதையெல்லாம் எந்த நாளேடாவது, ஊடகமாவது செய்தியாக வெளியிட முன்வருமா? 

நம்மையெல்லாம் எப்படி அறிவாளிகள் என்று சொல்வது? ஆகையால்,  முட்டாள்கள் தின நல்வாழ்த்துக்கள்!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)