No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, March 8, 2014

சாதா சிவம்!?


தமிழில் படித்தால் தலைமை நிதிபதியாக கூட ஆகலாம்....!!!???

ஆம், சதாசிவம் என்கிற தமிழ் வழிக்கல்வியில் படித்த தமிழர், குடியரசுத் தலைவருக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் பெற்ற இந்தியாவின் தலைமை நிதிபதியாகிட்டார் என்று, வெற்று தற்பெருமை பேசுவதில் தமிழர்களுக்கு நிகர் உலகில் வேறு யாருமில்லை என்கிற வகையில் தற்பெருமை கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அவ்வப்போது உலா வந்து சற்றே ஓய்ந்திருக்கின்றன.

முதலில் இதனை சரி என்றும், பின் சதாசிவம் தமிழரில் இரண்டாவது தலைமை நிதிபதியே அன்றி முதல் தலைமை நிதிபதியன்று. தமிழரில் முதல் தலைமை நீதிபதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை நிதிபதியாக 07-11-1951 முதல் 03-01-1954 வரை பதவி வகித்த பதஞ்சலி சாஸ்திரி அவர்களே எனவும் சில ஊடகங்கள் மட்டும், ஆதரித்த செய்தியிலேயே மறுப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.இதுதான் உண்மையும் கூட என்பதை உச்சநீதிமன்றத்தின் இணையதள தகவல்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதனை தலைமை நிதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிதிபதி சதாசிவம், தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருந்தும், இதுவரையிலும் தெளிவுபடுத்தியதாக தெரியவில்லை.


இந்நிலையில், ஒரு தமிழர் இந்தியாவின் இரண்டாவது தலைமை நிதிபதியாக பதவி வகித்திருக்கிறார் என்பது கூட தெரியாத தமிழர்களாக சுமார் அறுபது ஆண்டு காலம், அறிவு வறுமையில் இருந்திருக்கிறோமே என வெட்கப்பட வேண்டியதற்கு பதிலாக, வெற்று தற்பெருமை எதற்கு?மொழி என்பது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஒருகருவியே! தாய்மொழி கண்போன்றது என்றால், பிறமொழி இமைபோன்றது. இதில் வெற்று தற்பெருமையும், வெறித்தனமும் எதற்கு?


நம் தமிழரான சதாசிவம் இந்தியாவின் நாற்பதாவது தலைமை நிதிபதி. அப்படியானால், இவருக்கு முன்பாகவும், பதஞ்சலி சாஸ்திரிக்கு முன்பாகவும் தலைமை நிதிபதியாக இருந்த மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் அவரவர்களின் தாய் மொழியில் படிக்காமல், நம் தமிழில் படித்தா தலைமை நிதிபதியானார்கள்?நிதிபதி சதாசிவத்திற்கு ஆங்கில அறிவு இல்லாமலா தலைமை நிதிபதியாகி விட்டார். ஆங்கில அறிவு இல்லையென்றால் தாலுக்கா நிதிபதியாக கூட முடியாது என்று தெரியாத வடிகட்டின முட்டாள்களா தமிழர்களான நாம்?


நிதிபதி சதாசிவத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தானாகவே போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டாரா?

சதாசிவத்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலம் முழுவதும் பதவியில் நீடித்தால், 26 ஏப்ரலில் 2014 இல் ஓய்வு பெற போகிற சதாசிவம், எந்தவொரு குடியரசுத் தலைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வாய்ப்பை பெறப் போவதில்லையே!

அட இவ்வளவு ஏன்...,இவர் எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாகவும் பதவி வகிக்காததால், எந்தவொரு மாநில ஆளுநருக்கும் கூட, பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்க வாய்ப்பு இல்லியே?


உண்மைகள் இப்படி அக்குவேறு, ஆணிவேறாக இருக்க நமக்கெதற்கு விதவிதமான விதண்டாவாத வெற்று தற்பெருமைகளும், பைத்தியக்காரத்தனமான பிதற்றல்களும்?

சதாசிவம் தலைமை நிதிபதியானதில் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. மகாத்மா காந்தி, பெரியார் மற்றும் எனது ஆராய்ச்சியில் சிறுமைப்படவே நிறைய இருக்கிறது.

சதாசிவம் தலைமை நிதிபதியாக பதவியேற்றபோது, இவரைவிட உச்சநீதிமன்ற நீதிபதிகளில் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவராக இருந்தவர் ஜி.எஸ்.சிங்வி என்பவரே.

இவர் ராஜஸ்தான் கிளை, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக 20-10-1990 முதல் 26-11-2005 வரை பணியாற்றி பின், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாக 27-11-2005 தேதி நியமிக்கப்படுகிறார்.

ஆனால், சதாசிவம் 08-01-1996 அன்றே சென்னை உயர்நீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார். பின் 20-04-2007 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியான மாநில உயர்நீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதன்பின் உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி பதவிக்கு நியமிக்கப்படாமலே நேரடியாக 21-08-2007 அன்று உச்சநீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

உயர்நீதிமன்ற தலைமை நிதிபதியாக நியமிக்கப்பட்டவர், அடுத்ததாக உச்சநீதிமன்ற நிதிபதியாக நியமிக்க தகுதியானவர் என்கிற முறையிலும், வயதிலும், அனுபவத்திலும் சதாசிவத்தை விட சிங்வியே முத்தவர்.

அப்படியானால், மூத்த சிங்வியை, சதாசிவம் தலைமை நிதிபதியாக முந்த காரணமே, சிங்வி 12-11-2007 அன்று உச்சநீதிமன்ற நிதிபதியாக படிப்படியாக தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு 12-12-2013 அன்று ஓய்வு பெறுகிறார்.

ஆனால், சதாசிவமோ எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாகவும் நியமிக்கப்படாமலே, நேரடியாக உச்சநீதிமன்ற நிதிபதியாக 21-08-2007 அன்று நியமிக்கப்படுகிறார். இந்த மூப்பு அடிப்படையிலேயே தலைமை நிதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 26-04-2014 அன்று ஓய்வு பெறுகிறார்.எது எப்படியோ, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ சத்தியப்பிரமாணம் செய்து வைக்கும் தகுதியை பெற்றிராத இந்தியாவின் ஒரே தலைமை நிதிபதி, நம்ம சதாசிவமாகத்தான் இருக்க வேண்டும் என்பதால், நீங்கள் நினைப்பது போன்று அவர் எவ்விதத்திலும் சாதனை சிவமன்று; சாதா சிவமே!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)