No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, February 27, 2014

மூவர் விடுதலையில், மூடர்கள் களியாட்டம்!


ஆங்கில திரைப்படங்களில் சூழ்நிலை கைதிகளை அல்லது அடிமைகளை எப்படி நடத்துவார்கள் என்பதை காட்டுவார்கள். அடிமை எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அடிமைப்படுத்தியவன் நடத்தும் கேளிக்களியாட்டத்தில் தோற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அதைப்பார்த்து அடிமைப்படுத்திய கூட்டம் ஆர்ப்பரிக்கும். இப்படித்தாம் இருக்கிறது, மூவர் விடுதலையில் மூடர்களது களியாட்டம்!

இன்றைய காலகட்டத்தில் வள்ளுவப்பாட்டன் இருந்திருந்தால், ‘மூடர் கூட்டம் என்ற அதிகாரத்தில்’ இதைத்தாம் முதல் திருக்குறளாக எழுதியிருப்பார்.

எதிலும் பாதுகாப்பு இயக்கங்களுக்கே முதல்பங்காம்
முடிப்பது மாந்தர்கள் பங்கு 

விளக்கம்: எதை பாதுகாக்க ஓர் அமைப்பு உருவாக்கப்படுகிறதோ, அவ்வமைப்போ முதலில் அதனை சாகடிக்க துவங்கும். மிச்சத்தை மூடர்கள் செய்து முடிப்பார்கள்.

ஆமாம், 
 • தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு - உச்சநீதிமன்றம்.

 • குற்றவாளிகளை விடுதலை செய்வது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் - உச்சநீதிமன்றம்

 • ஜெயலலிதா எங்களுக்கு கெடு விதிக்க முடியாது - உள்துறை அமைச்சகம்

 • ராஜீவ் கொலையாளிகள் விடுதலை - ஜெயலலிதா முடிவுக்கு ராகுல் கண்டனம்

 • மூவரின் விடுதலை பற்றி பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை - முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்

 • ராஜீவ் கொலையாளிகள் விடுதலை  - குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் எதிர்ப்பு

 • ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது - வாய் திறக்காத பிரதமர் காட்டம்

 • தண்டனை குறைப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் - மத்திய அரசு

 • ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியாது - சுப்ரமணிய சுவாமி

 • ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க இடைக்கால தடை - உச்ச நீதிமன்றம்

 • மூவர் விடுதலை சிக்கலுக்கு காரணம் ஜெயலலிதாவே - கருணாநிதி 

 • இறுதியாக, ஏழுபேரை விடுவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை - நிர்மலா ராணி என்கிற பொய்யரை நீதிபதியாக பரிந்துரை செய்வதற்காக, அவர் முன்னிலையாகும் வழக்குகளில் தீர்ப்புகளை திரித்து எழுதி, நீதியை வல்லுறவு செய்வதில் வல்லவரான நிதிபதி கேனச்சந்துரு.

இப்படி அதிகார வர்க்கத்திற்குள் அறிக்கைப்போர்கள் என்றால் செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு அக்கப்போர்கள் என எல்லாம் ஒருவழியாக ஓய்ந்து விட்டது.

இந்த அறிக்கைப் போரிலும், அக்கப்போரிலும் யாராவது ஒருவர், எழுந்துள்ள பிரச்சனைக்கு சட்ட காரண காரியங்களோடும், நடுநிலையோடும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியும் தீர்வு சொல்வார்களா என பார்த்தால் ஒருத்தரும் இல்லை. 

மாறாக, எல்லோரும் கூறுகெட்டவர்கள் போலவே பேசி, பிரச்சனையை பெரிதுபடுத்தி, மேன்மேலும் சிக்கலை உண்டாக்குகிறார்கள். 
இந்திய அரசமைப்புக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும், நீதியைக்காப்பேன் எனவும் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டு, எடுத்துக் கொண்ட அச்சத்தியப் பிரமாணத்தின் படி நடக்க வேண்டியவர்களே கூ முட்டைகளாக அறிக்கைபோர் விடும்போது, மற்றவர்களது அக்கப்போர்களை சொல்லவா வேண்டும்? 
இது குடியரசு நாடா அல்லது கூத்தாடிகளின் கூடாரமா... அர்த்தமே இல்லாமல் ஆளாளுக்கு அறிக்கைப்போர் விட்டு, அக்கப்போர் செய்வதற்கு?

தண்டனைகளில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை என்பது, முன்பு எப்போதுமே இல்லாத அளவிற்கு, நாடுமுழுவதும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. ஆகையால், முதலில் ஆயுள் தண்டனையைப் பற்றி அறிந்துகொண்டப்பின், மரண தண்டனைக்கு செல்வோம்.

குற்ற விசாரணை முறைவிதிகள் 1973 இன்விதிகள் 31(2)(எ) மற்றும் 433 எ இன்படி, ஆயுள் தண்டனை என்பது பதினான்கு வருடங்கள் மட்டுமே என்பது நிதிபதிகளுக்கு ஏன் தெரியவில்லை?

தெரிந்திருந்தால் பதினான்கு வருடத்திற்கு மேலாக ஏன், சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என மத்திய, மாநில அரசுகளை கேட்கவில்லை?

ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது என வௌங்காத விளக்கத்தை இந்த தீர்ப்பில் கூட கூறுகெட்டதனமாக சொல்கிறீர்களே! உங்களுக்கு எந்த சட்டவிதி இப்படி அறிவுருத்துகிறது?

மேற்கண்ட சட்ட விதிகளுக்கு புறம்பாக, ஆயுள் தண்டனையென்றால் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது என்று இஷ்டத்திற்கு உச்சநீதிமன்ற நிதிபதிகள் உளர ஆரம்பித்ததே, சமீபகாலத்தில்தாம் என்பதால், ‘இதன்நோக்கம் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட ராஜீவ் கொலையாளி நளினி முருகன் வெளியில் வந்து விடக்கூடாது என்பதே! இதில் வேறு சிலரும் இருக்கலாம்!!’

நளினியை விடுதலை செய்யக்கூடாது. அவரை வைத்து அரசியலாதாயம் தேடவேண்டுமென்பதில், மாநில அரசும், மற்ற கட்சிகளும் தெளிவாகவே இருந்து வந்துள்ளன.

நான்கு பேரில் ஒருவரான நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுங்கள் என சோனியா வேண்டுகோள் விடுத்தபோது, அப்பாவியாக இருந்தார். ஆனால், இப்போழுது அரசியல்வாதியாகி விட்டார். கூடவே, நளினி கர்ப்பமாகவும் இருந்தார் என்பது ஒரு காரணம்.

ஆயுள் தண்டனையென்றால், ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதுதாம் என்று அரசியல் வாதிகளோடு சேர்ந்து அரசியல் செய்யும் நிதிபதிகளின் உளரலால், தங்களுக்கு முன்பாக பதினான்கு வருட சிறைவாசத்திற்கு பிறகு, விடுதலையாகி இழந்த வாழ்க்கையை தொடர்ந்த ஆயுள்தண்டனை கைதிகளை போலவே, நாமும் வாழலாம் என்று நம்பிக்கையோடு, ஆசையோடும் இருந்த அத்தனை ஆயுள்தண்டனை கைதிகளும் பெறும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆமாம், ஆயுள் தண்டனை பெற்ற பல பேர் பதினான்கு வருட சிறை தண்டனையைக்கூட முடிக்காமல் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வெளிவந்திருக்கின்றனர். இதுபற்றி விரிவாக பின்னர் சொல்கிறேன்.

இவர்களைப்பற்றி எவரும் சிந்திக்காதது, குரல் கொடுக்காதது ஏன்? மற்றவர்களை விடுங்கள் ராஜீவ் கொலை வழக்கில் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பவர்கள் ஒரு சொல்லுக்குகூட, மற்றவர்களை விடுவிக்க இப்படியொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை ஏன்?

தமிழ்நாட்டில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ளவர்கள் தமிழர்கள் இல்லையா அல்லது இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இந்தியர்கள் இல்லையா? மற்ற நாட்டவர்களாக இருந்தாலுங்கூட, அவர்கள் எப்படி நம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தண்டிக்கப்பட்டார்களோ அப்படியே, விடுவிக்கப் படவும் வேண்டும் அல்லவா?

இவ்விசயத்தில் தமிழர்களுக்காக, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கும் மத்திய அரசு, ‘கேரள மீனவர்களை சுட்டுக்கொலை செய்த இத்தாலி நாட்டவர்களுக்கு, எக்காரணம் கொண்டும் ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்கமாட்டோம்’ என ஒப்பந்தம் செய்து, அவர்களை இந்தியாவிற்கு வரவழைத்தது ஏன் என்பதை காரணமாக முன்னிருத்தி, இந்தியா முழுவதும் ஆயுள் தண்டனையை முடித்து, எப்போது விடுதலையாவோம் என தெரியாமல் காத்திருப்போர் அனைவருக்காகவும் பொதுநல வழக்கு தொடுத்திருந்தால், நம்மைப்போன்ற சக வெளி மாநிலத்தவர்கள், தமிழர்கள் விடுதலைக்கு எதிராக கூக்குரலிட வாய்ப்பில்லாமல் போயிருக்கும் அல்லவா?

தான் அமல்படுத்தியுள்ள சட்டத்திற்கு எதிராக, இப்படியொரு ஒப்பந்தத்தை தானே ஏற்படுத்திக் கொள்ள மத்திய அரசுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? குற்றச்சாற்றை விசாரணை செய்து தண்டனை வழங்கும், அதிகாரத்தை பெற்றுள்ள நீதித்துறையின் அதிகாரத்தை அரசு கையிலெடுத்துக்கொண்டு ஒப்பந்தம் போட்டது ஏன்? அரசு சொல்வதைதாம் நிதிபதிகள் கேட்பார்கள் என்பதாலா?

இதற்கேற்றார் போல, சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய மற்றும் பலவலாக்கப்பட்ட அதிகாரத்தில் தங்களது பங்கை நிலைநாட்ட வேண்டிய குடியரசுத்தலைவர், உச்சநீதிமன்ற நிதிபதிகள் யாரும், மத்திய அரசை கேள்வி எழுப்பி, சட்டவிரோத அவ்வொப்பந்தம் செல்லாது என அறிவிக்காததும், எதிர்காலத்தில் இப்படியொரு ஒப்பந்தம் போடக்கூடாது என (த, க)ண்டிக்காதது ஏன்?

இந்திய அரசமைப்பு கோட்பாடு 50 இன்படி, நிர்வாகத்துறையில் இருந்து நீதித்துறையை தனியே பிரித்தெடுத்திருப்பதாக சொல்லப் பட்டாலுங்கூட, ‘உலகேயறிந்த இத்தாலி ஒப்பந்தத்தில் அரசை கேள்வி கேட்காததன் மூலம், நீதித்துறை தன்னிச்சையாக இயங்கவில்லை என்பதைப்பற்றி எவரும் கேள்வி எழுப்பவில்லையே ஏன்?’

தங்களது வாக்கின் மூலம் உங்களை தேர்ந்தெடுத்து, அதிகாரத்தை கொடுத்ததோடு அல்லாமல், தங்களது உழைப்பில் கிடைத்த வருவாயில் வரிசெலுத்தி, அதில் உங்களுக்கு கூலிகொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்திய குடிமக்களைவிட, இத்தாலிய குடிமகன்கள் இருவர் முக்கியமாய் தெரிவதற்கு நியாயமான காரணம் எதையும் மத்திய அரசால் சொல்லமுடியுமா அல்லது அக்கட்சியின் அடிமை தொண்டர்கள்தாம் கேட்க முடியுமா?

தொண்டர்கள் எல்லாம் குண்டர்கள்போல், தன் கட்சியும், தலைவனும் தலைவியும் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் தப்பில்லை. ஆனால், நம்மை போன்றுள்ள வேறு கட்டியும், அக்கட்டியின் தலைவனும், தலைவியும் இதர தொண்டர்களும் செய்வது மட்டுமே குற்றமென வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்குநிற்கும் கூறுகெட்டவர்களாகவே இருக்கிறார்களேயொழிய நடுநிலையோடு சிந்திப்பவர்களாக ஒருவர்கூட இல்லை.

மத்தியில் எந்தகட்சி ஆட்சி செய்தாலும், அதில் தன்மாநிலத்தின் பங்கு இருப்பதுபோல, தமிழகத்தின் பங்கும் இருப்பதை மற்ற மாநிலத்தவர்கள் உணராமலும், ஆயுள் தண்டனை என்றால் என்னவென்று புரியாமலும், ராஜீவை கொலை செய்த தமிழர்கள் என்பதால் விடுதலை செய்யப் படுகிறார்கள் என முத்திரைகுத்தி கூக்குரலிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

இவர்களைப் போலவே, கட்சி தலைவரை பலி கொடுத்த தமிழ்தொண்டர்கள் உள்ளிட்டோர் கூக்குரலிடுவதில் என்ன நியாயம் இருக்கிறது? கூக்குரலிடம் உங்களது வாக்குகளால் மட்டுமா, மத்தியில் உங்களது கட்சி ஆட்சி செய்தது அல்லது செய்கிறது. இனியும் செய்யப்போகிறது?

நேரடியாக இல்லாவிட்டாலும், கொள்ளைக்காக கூட்டணிச்சேரும் கட்சிக்காகவாவது கூறுகெட்ட வாக்காளர்கள் உங்க கட்சிக்கு வாக்களிக்கத்தானே போகிறார்கள்!
இப்படித்தானே கடந்த 19-05-2009 அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கையரசு அறிவித்தப்பின் நடைபெற்ற, நம் நாடாளுமன்ற தேர்தலில்கூட, தமிழகத்தில் நாற்பதில், இருபத்தேழை வெற்றியாக கொடுத்து மத்திய அரசுக்கு ஆதரவை தந்திருக்கிறார்கள் என்பதால், தமிழின படுகொலைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு ஒத்துழைப்பு தந்த பின்னுங்கூட, தமிழர்கள் வெறுக்கவில்லை என்பதுதானே உண்மை.
சர்ச்சைக்குரிய இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பெரும் போராட்டத்திற்கு பிறகு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டவர்களோடு, அதே வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட வர்களை தானே முன்வந்து விடுவிப்பதாக சொல்லும் அரசு, மற்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதாக அறிவிக்காதது ஏன் என்பதற்கும், எடுக்கப்பட்ட இம்முடிவு ஆரசியல் ஆதாயமற்றது என்பதற்கும் விளக்கம் சொல்ல முடியுமா?

கடந்த 19-02-2008 அன்று, வேலுர் மத்திய சிறையில் இருக்கும் நளினியை, ராஜிவ் மகள் பிரியங்கா ரகசியமாக சந்தித்து பேசியதாக சர்ச்சைக்கு உள்ளானபோது, இல்லை என மறுத்தது சிறைநிர்வாகம். ஆனால், 15-04-2008 அன்று, மேற்சொன்ன தேதியில் சந்திப்பு நடந்தது உண்மை என்பதை சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமல்லாது, ராகுலும் ஒப்புக்கொண்டார்.
இதன்பிறகே விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் தீவிரமானது. ஆகையால், நளினியிடம் போட்டு வாங்கிய தகவல்களின் அடிப்படையில் தாம் இவைகளை நடந்தியிருக்க முடியும். இலங்கைக்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது என்கிற மூன்று முக்கிய விடயங்களையும் நினைவுகூற வேண்டும்.
ஆனால், தன்னை நலம் விசாரித்தார் என்பதை தவிர, என்னென்ன பேசினார்கள் என்கிற தகவல் அதிகாரப் பூர்வமாக இத்தீர்ப்பு வரும்வரை வெளி வராமல் இருந்தது. ஆனால் தற்போது, ‘பிரியங்கா போலிஸ் அதிகாரி போல மிரட்டினார் என நளினி ஆரம்பித்திருக்கிறார். அதான பார்த்தேன். நலம் விசாரிக்க எதற்கு யாருக்கும் தெரியாமல் திருட்டுதனமாக பார்க்க வேண்டும்? சக கைதிகளை கூட, எதற்கு பூட்டவேண்டும்? ஊரை கூட்டி பார்த்திருக்கலாம் அல்லது சக கைதிகளோடு பார்த்திருக்கலாமே அல்லது தன் வீட்டிற்கே அழைத்து நலம் விசாரித்து இருக்கலாமே?

இப்படி பார்ப்பதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ வேறு தண்டனை கைதிகளை பார்த்துண்டா? இப்படி பார்த்ததுண்டு என்றால் கூட, தன் தந்தை கொலைக்கு காரணமாக இருந்தவரை கூட, நலம் விசாரிக்கும் மகாத்மா என்கிற பட்டத்தை இப்போதே வழங்கிவிடலாம்.

ஆனால், தங்களது சந்திப்பில் நடந்த அத்தனை உண்மைகளையுஞ்சொன்னால், விடுதலையாக முடியாது. விடுதலையாலும், உயிர்வாழ முடியாது என்றுபயந்து, சமயம் வரும்போது சொல்வதாக மு(ழு, ழ)ங்கி பேட்டியை முடித்திருக்கிறார், நளினி! 
தன்தந்தையை இழந்தவர் அவ்விழப்பிற்கு காரணமான குற்றவாளியோடு கொஞ்சிகுளாவ வாய்ப்பேயில்லை என்கிற நிலையில், இந்தியாவின் இரும்புமனுஷி இந்திராவின் பேத்தி, ஏத்து ஏத்துன்னு ஏத்தாமல் வேறென்ன செய்திருப்பார்?
ஆகையால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நளினியை பார்க்க பிரியங்காவை அனுமதித்ததே சட்டத்துக்கு புறம்பானசெயல்தாம். அதனால்தாம், அச்சந்திப்பு ரகசியமாகவும் நடத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் உலக தமிழர்களின் ஒரே முதல்(தலை)வர் ஒத்துழைத்துள்ளார். இதில் அரசியல் ஆதாயம் இல்லையென சொல்லமுடியுமா? இல்லையென சொன்னால் ஏன் ரகசிய சந்திப்புக்கு அனுமதி அளித்தார் என சொல்ல முடியுமா? தான் அனுமதி அளிக்கவில்லை என்றால், இவரது ஆட்சியை மத்திய அரசுக்கு குத்ததை விட்டிருந்தாரா?

இப்பொழுதாவது சட்டத்துக்கு உட்படாமல் நடந்த அந்த சந்திப்பில் நடந்த மிரட்டல்கள் என்ன என்பது குறித்து நீதிவிசாரணை நடத்தி, அதன் பேரில் பிரியங்கா மீது குற்ற நடவடிக்கை எடுக்குமா, மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடுவிதிக்குமளவிற்கு தைரியத்தை பெற்றுள்ள தமிழக அரசு?

தமிழ்நாட்டின் வேலூர் சிறையில் நடந்த இந்த சம்பவம் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நிதிபதிகள் கேள்வி எழுப்ப அரசமைப்பு சுயேச்சை அதிகாரம் இருந்தும், சுய தகுதியின்மையை உணர்ந்து கேட்கவில்லை என்பதன் மூலம், நிதிபதிகள் யாரும் சுயேச்சையாக இயங்கவில்லை. ஆளும்கட்சிகளின் அரசியல் வாதிகளைப் போலத்தாம் இயங்குகிறார்கள் என்பது தெளிவு.

ஆனால், தங்களைத் தாங்களே நீதியரசர்கள் என சொல்லிக் கொண்டு நீதியைகொல்லும் இவர்கள் நீதிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய மனு நீதிச்சோழனது சிலையை தங்களது வளாகத்திற்குள் நிறுவி ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பதோடு, மனு நீதிச்சோழனை கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றால்.., 

இதில் கேனச்சந்துரு என்பவர் மட்டும் என்னை நீதியரசர் என சொல்லவேண்டாம் என தன் தகுதியை தானே உணர்ந்து கேட்டுக் கொண்டார். தமிழகத்தின் நிதிபதிகளில் இப்படியோரு வேடதாரியும் இருக்கிறார் என்பதையும் படித்தறியுங்கள்

ஊழியத்தில் இருக்கும்போது தன்னை நீதியரசர் என சொல்ல வேண்டாம் என்ற இக்கேனச்சந்துரு, ஓய்வுப் பெற்றப்பின் தான் ஆதிக்கம் செலுத்தும் இதழ் செய்திகளில் எல்லாம், தன்னை நீதிநாயகம் என அடைமொழியிட்டுக் கொள்கிறார். 
தமிழக அரசின் கண்டுபிடிப்பு சாதனைகளில் ஒன்றான விலையில்லா என்பதற்றும், இலவச மென்பதற்கும் என்ன ஒற்றுமை வேற்றுமையோ அதுபோலதாம், இக்கேனச்சந்துருவின் கண்டு பிடிப்பான நீதியரசருக்கும், நீதிநாயகத்திற்கும். 
இந்த கேனச்சந்துரு தான் ஊழியத்தில் இருந்த காலத்தில், திரித்து எழுதிய தீர்ப்புகளில் உள்ள உண்மையை மறைத்து, இதழ்களில் எழுதுவதன் மூலம், தான் திரித்து எழுதிய ஆவணங்களாக உள்ள தீர்ப்புகளை மறைத்திட முடியும் என்கிற ஆணவத்தோடு மக்களை ஏமாற்றி முட்டாள்களாக்கி வருகிறார்.

சரி, இனி மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருனைமனு குறித்து, இந்திய அரசமைப்பின் நிலைப்பாடு என்னவென்பதைப்பற்றி பார்ப்போம்.

இந்திய அரசமைப்பு கோட்பாடு 72 இல், குடியரசு தலைவருக்கான ஊழியமாக வரையறை செய்யப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறேன். 
 • 72(1) (அ) இன்படி, படை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைகளை

 • 72(1) (அ) இன்படி, மத்திய அரசின் ஊழிய வரம்புக்குள் வரும் ஒரு விவகாரத்தில் செய்யப்பட்ட குற்றத்துக்கான தண்டனைகளை

 • 72(1) (இ) இன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதனை குறைக்கவோ, ரத்து செய்யவோ தண்டனையில் இருந்து மீட்கவோ, மன்னிக்கவோ உரிமையிருக்கிறது.

 • 72 (2) இன்படி, குடியரசு தலைவருக்கான இந்த உரிமைகள் படை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனைகளை குறைக்கு அல்லது நீக்கும் அதிகாரமுள்ள படையின் தலைமை ஊழியரது உரிமையை எவ்விதத்திலும் பறிக்காது.

 • 72 (3) இன்படி, அமலில் உள்ள சட்டப்படி மரண தண்டனையை ரத்து செய்யவோ, நிறுத்தி வைப்பதற்கும் அல்லது மாற்றியமைப்பதற்கும் ஒருமாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. 
இப்போது எழுந்துள்ள பிரச்சனை, கருனை மனுவை மத்திய அரசு நிராகரித்ததில் எற்பட்ட கால தாமதத்தை முன்னிருத்தி எழுப்பப்பட்டு, அதில் நிதிபதிகள் நாங்களே நீதியின் காவலர்கள் மற்றும் இந்திய அரசமைப்பின் காவலர்கள் என பீற்றிக் கொள்ளும் வகையில், கூறுகெட்டதனமாக தீர்ப்பெழுதி உள்ளார்கள். இதேபோல், மத்திய அரசின் காலதாமதம் ஏற்ககூடியதும் அன்று.

ஒவ்வொரு சட்டத்திலும் இவ்வளவு நாட்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டுமென நீதிமன்றங்களுக்கு வரையறை இருக்கிறது. ஆனால், அக்கால வரையறையின்படி எந்த நிதிபதிகளும் வழக்கை முடித்து தீர்வு சொல்லும் யோக்கியதை இல்லை என்கிற நிலையில் கால வரையறையே இல்லாத குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட்டு, நீதிகாப்பேன் என சூளுரைத்திருப்பது தான்தோண்றித்தனமானது.

ஏனெனில், குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருனை மனுவின் மீது அல்லது கருனை மனுமீது அரசு உரிய காலத்திற்குள் முடிவெடுக்கவில்லை அல்லது காலந்தாழ்த்தி முடிவெடுத்தது என்றால், மீண்டும் குற்றவாளிகள் நீதிமன்றத்தை நாட என்னவழி என்பதுபற்றி எனக்கு தெரிய எந்த சட்டத்திலும் வழிவகை சொல்லப்படவில்லை. சொல்ல வேண்டிய அவசியமுமில்லை.

ஆம், குற்ற விசாரணை முறைவிதிகள் 1973 இன்விதிகள் 31(2)(எ) மற்றும் 433 எ இன்படி, ஆயுள் தண்டனை என்பது பதினான்கு வருடங்கள் மட்டுமே என்பதை ஏற்கனவே விரிவாக படித்தோம்.

இதற்குமேல், அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை, கசாப்பைபோல எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அல்லது அதிகபட்சம் ஏழாண்டுகளுக்கு முன்பாக, கசாப் செய்திட வேண்டியதே (நியா, அநியா, அந்நி)யமானதாய் இருக்கும்.

ஏனெனில் கடுங்குற்றங்களுக்கு ஏழு அல்லது பத்து வருடங்கள் வரையிலான தண்டனையும், கொடுங்குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை வரையிலும் விதிக்கப்படுகிறது. இதில் பத்து வருடங்களுக்குள்ளாக விதிக்கப்படும் தண்டனையில், குற்றவாளிகள் எந்தசிக்கலும் இல்லாமல் தண்டனையை முடித்து வெளியே வந்து விடுகின்றனர். 
அரசும், நிதிபதிகளும் அடிக்கும் கேலிக் கூத்தால், ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் நமக்கு எப்பொழுது விடிவென்று தெரியாமல் கொத்தடிமைகளாக சிறைக்கொட்டடியில் கிடக்கின்றனர். 
இவர்களை வைத்து பலபேர், சமுதாயத்தில் தங்களை முன்னிருத்திக் கொள்ளவே முயல்கிறார்கள் என்பதை, மூவர் விடுதலை விவகார அறிக்கைப்போரில், ஒவ்வொருவரும் நன்றாகவே உணர்ந்திருக்க வேண்டும். 
ஆனால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒருவரை கற்பனையில் மரியாதைக்குரிய நபராக வைத்திருந்து அவர்களது அறிக்கைப் போர்களைப் போலவே நீங்களும் அக்கப்போரில் ஈடுபட்டதால் நிச்சயமாக உணர்ந்திருக்கவே முடியாது.

இப்படி உண்மையைச் சொல்வதால், தங்களின் கற்பனையில் மரியாதைக்குறிய நபராக திகழ்பவரும், தாங்களும் என்னால், இகழப்படுகிறார் என நீங்கள் நினைத்தால், அது தவறு என்பது கட்டுரையை படித்து முடிக்கும்போது தெளிவாக உணரமுடியும். ஆனால், இதற்கு உண்மையில் நடப்பது என்ன என்பதை உணர எவர்மீதுள்ள பற்றையும் துறந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் துரத்தியிருக்க வேண்டும்.

துறந்துவிட்டால் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள். துரத்தியிருந்தால், நம்மால் சுயமாக சிந்திக்க முடியுமா என தடுமாற ஆரம்பித்து இருக்கிறீர்கள். இப்படி தடுமாறுபவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள எதாவது ஒன்றைபற்றியே ஆக வேண்டுமென்பதால், அது அதிகபட்சம் ஏற்கனவே உங்களது மனதில் பதிந்துள்ள மரியாதைக் குரிய நபராகவே இருப்பார். அவ்வளவே!

இவர்கள் இப்படியென்றால், அரக்கர்களான பிணந்தின்னி அரசூழிய கழுகுகளின் ஊழல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனாலும் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். இதையெல்லாம் ஆய்வு செய்து எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகதானே, போராடி சிறைக்கு புனிதப் பயணம் போனேன்.

மத்திய சிறைகளில் ரிமிஷன் என்கிற சிறை வாசிகளின் நல்வாழ்வுப்பிரிவு என்று உண்டு. கைதிகளின் நல்வாழ்வுக்கு தேவையான, அனைத்து உதவிகளை செய்ய வேண்டிய இவர்களது கடமை. ஆனால் இவர்கள் செய்வதோ, முற்றிலும் கீழ்தரமான செயலாகத்தாம் இருக்கும்.

எழுதப்படிக்க தெரியாத பாமர கைதி ஒருவருக்கு மனு எழுதிதர வேண்டியது அவர்களின் ஊழியக் கடமைகளில் ஒன்று. ஆனால், அதற்கு 2005 ஆம் ஆண்டிலேயே ரூபாய் 50, 100 லஞ்சம் வாங்கிகொண்டு தாம் எழுதி தருவார்கள். 

அவர்கள் எழுதிதரும் மனுவில் எந்தச்சட்டப்பிரிவும் இருக்காது என்பதோடு, முழுக்க முழுக்க அவரது நலனுக்கு எதிராகத்தாம் இருக்கும். யார் யாரோ செய்த குற்றங்களுக்கு இவர்கள் பொறுப்பேற்பது போன்று இருக்கும் இது சாதாரண விசாரணை கைதி என்கிற அடிமைகளின் பிரச்சனை.

தண்டனை கைதிகள் என்றால் கொத்தடிமைகள். இதிலும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் என்றால் கொத்தடிமைகளே!

ஆமாம், இவர்களின் வசதி, அந்தஸ்து ஆகியவற்றைப் பொருத்து, காலம் முழுவதும் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒவ்வொரு கைதிக்கும் சிறை ஊழியர்கள், அவர்களது குடும்பத்திற்கு தகவல்களை பரிமாறும் பினாமிகளாகவே இருப்பார்கள்.

இக்கைதிகள் உடல்நிலை சரியில்லாத அல்லது இறந்துவிட்ட அப்பா, அம்மாவை பார்க்க மட்டுமே பரோல் எனப்படும் விடுப்பில் வெளியேவரமுடியும். இதற்கு விண்ணப்பித்தால் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். சமீபத்தில் சென்னையில் பிரபல வழக்குகளில் தொடர்புடைய ஆயுள்தண்டனை கைதியொருவரை பெண் பொய்யர் ஒருவர், பலத்த பாதுகாப்புக்கு இடையில் திருமணம் செய்ததாக செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். இதற்கெல்லாம் லட்சக்கணக்கில் செலவழித்து இருப்பார்கள்.

நன்னடத்தை கண்காணிப்பு ஊழியர் என்பவர்கள் இப்படி வெளிவரும் சிறைவாசிகளை கண்காணித்து அறிக்கை கொடுக்கவேண்டும் என்பதால், இவர்களையும் ரொம்பவே கவனிக்கப்படவேண்டும்.

இல்லையெனில், சிறையில் இருந்து விடுமுறையில் வர இயலாத அளவிற்கு, இவரது எதிரிகள் இவரை பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறார்கள். எனவே வெளியில் வந்தால், உயிருக்கு ஆபத்து என சுயநல அறிக்கையை கொடுத்து முட்டுக்கட்டை போட்டு விடுவார்கள். 

ஆகையால், இனி அகராதியை தொகுப்பவர்கள் நன்னடத்தை என்றால் என்னவென்பதை திருத்தி எழுதி, காலங்காலமாக வரும் கருத்துப்பிழையை நீக்குங்கள். 
ஆனால், நளினி விசயத்தில் பாதிக்கப்பட்ட சோனியா குடும்பத்தால் நளினியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என, பிரியங்கா ரகசியமாக சிறையில் சந்தித்து மிரட்டியதை கூட வெளிப் படையாக அறிக்கையில் சொல்லி முட்டுக் கட்டை போடமுடியாது அல்லவா? 
அதனால், நளினியால் அப்பகுதியில் வசிக்கும் பிரபலங்களது உயிருக்கு ஆபத்து என தோசையை திருப்பி போட்டு ராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் அறிக்கை வாங்கி, தன் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டதாக நளினி சொல்கிறார். இப்படியொரு எதிர்மறையான அறிக்கையை நான் கேள்விப்படுவது இதுவே முதன்முறை.

எனக்கு தெரிய குற்றத்தை தடுக்கும் முதல் பொறுப்பும், நடத்தப்பட்ட குற்றத்துக்கு தண்டனை வாங்கி தரும் பொறுப்பும் இருக்கிறதே ஒழிய, உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அறிக்கை கொடுக்க சட்டத்தில் இடமில்லை.

அப்படி கொடுத்திருந்தால், தான் கையாளாகாதவன் என சொல்லியிருக்கிறார் என்பதோடு, சட்டப்படி அதிகாரமில்லாத ஆவணத்தை ஆனால், மிகச் சரியாகவே தயாரித்திருக்கிறார் என்றே பொருள்.
ஆமாம், இவர்களது கையாளாகாதனத்தால் தானே குற்றங்களே நடக்கின்றன. ராஜீவ் படுகொலைகூட, தமிழக காவல்துறையின் கையாளாகாதனத்தால் நடந்ததுதானே! 
எனவே, அன்று பாதுகாப்பு பணியில் கடமை தவறிய காவலர்களுக்கும் சேர்த்தல்லவா தண்டனை தந்திருக்க வேண்டும். ஆனால், பேட்டரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க தெரிந்த முட்டாள் நிதிபதிகளுக்கு, கடமை தவறிய காவலர்களுக்கு கொடுக்காமல் போனதேன்? இப்போது, நானே நீதியின் காவலன் என சூளுரைப்பது முட்டாள்தனம்தானே?

ஏற்கனவே தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொண்டு சிறை தண்டனை அனுபவித்தவர், எப்படி மீண்டும் அதுபோன்ற செயல்களை செய்வார் என்று காவல்துறைக்கு பொறுப்பு வகித்த தமிழக முதல்வர் அல்லது முதல்வர்கள் முடிவு செய்தார் அல்லது செய்தனர். எந்த அடிப்படையுமே இல்லாமல் இந்த கூறுகெட்ட அறிக்கையை நிதிபதிகளும் ஆளுநரும் ஏற்றுக்கொண்டனர்.

உண்மையில், நளினி விடுதலையாவதற்கு, தமிழக காவல்துறையின் இந்த கையாளாகாத அறிக்கையே போதும். இதைவிட என்ன பெரிய ஆதாரம் வேண்டியிருக்கு?!

இதுதாம், உண்மை ஒருபோதும் உறங்காது என்பது. ஆனால், இவ்வுண்மையை உயரிய சட்ட விழிப்பறிவுணர்வோடு பிடித்துக்கொள்ள வேண்டிய நீங்கள், உண்மையென்றால் என்னவென்றே தெரியாத, தங்களது நாறிய பிழைப்புக்காக பொய் பேசும் பொய்யர்கள், எனக்காக அறிவால் விழித்திருக்கிறார்கள் என்றும், நிதிபதிகளும் அறிவால் விழித்திருந்து நீதி வழங்குவார்கள் என்று நம்பி, உங்களது சுய அறிவை உறங்க வைத்து விடுகிறீர்கள்.

இதனால், தான்உறங்காது தானேவந்த உண்மையை கூட உணர முடியாமலும், அதன் மூலமாக கிடைக்க வேண்டிய நியாயத்தை அனுபவிக்கமுடியாமலும் பரிதவிக்கிறீர்கள். உங்களது அனுதாபிகளும் பரிதவிக்கிறார்கள். ஆனால், பலனோ பூஜ்யம்.

இதனால்தாம், பூஜ்யமாக இருக்க வேண்டியவர்கள் எல்லாம் ராஜ்யம் செய்துகொண்டிருக்க, ராஜ்யம் செய்ய வேண்டிய நீங்கள் பூஜ்யமாகிக்கொண்டே போகிறீர்கள். இதேபோன்று பஞ்சாபைச் சேர்ந்த மரண தண்டனை கைதி தேவேந்திரபால் சிங் புல்லர், தனது கருனை மனு மீது கடந்த எட்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதால், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நீதிப்பேரானை மனு 86, 146 / 2011 ஐ தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனு மீது 2013 ஏப்ரல் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வு, ‘கருணை மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்துவதை காரணம் காட்டி தண்டனையைக் குறைக்கக் கோர முடியாது’ என்று இரண்டு நிதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த தீர்ப்பில் குடியரசுத்தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதாலும், வெளி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாலும், கருனை மனுமீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது என்பதாலும், ஆனாலும் விரைந்து முடிவெடுக்கும்படியும் பரிந்துரை செய்து 12-04-2013 தள்ளுபடி செய்துள்ளனர்.

இந்த தீர்ப்பின் பத்தி 47 இல், 1950 முதல் 2009 வரை சுமார் முன்னூறு கருனை மனுக்களில் 214 ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும், 69 நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒன்று மட்டும் முடிவெடுக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மிக முக்கியமாக 12-05-2011 தேதிய கணக்கீட்டின்படி, 1999 முதல் 2011 வரை சமர்ப்பிக்கப் பட்ட மனுக்களில் 18 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும், அதன் வருடங்கள் ஒன்று முதல் பதிமூன்று வரை எனவும் குறிப்பிடப்பட்டு, அப்பதினெட்டு பேரின் பட்டியலும் இணைக்கப் பட்டுள்ளது. அதில் மொத்தம் 25 பேர் இருக்கிறார்கள்.

இப்பட்டியலில் அதிகபட்சமாக அவ்வழக்கை தொடுத்த தேவேந்திரபால் சிங்கின் கருனை மனுவே அதிகபட்சமாக 13 வருடங்களாக கிடப்பில் இருப்பதாக தெரிகிறது. ஆகவே, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட போது சுமார் 14 முதல் 15 வருடங்கள் ஆகியிருக்கும் என்பது உறுதி என்பதோடு, அவரது மனு இன்றும் கிடப்பில் இருக்கிறது என்பது, உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த அவருடைய வழக்கின் மூலம் தெரிகிறது. 
ஒன்பது ஆண்டுகள் கால தாமதத்தை காரணம் காட்டி, வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேரின் தண்டனையை குறைத்த உத்தரவிட்டுள்ள அத்தீர்ப்பில் உண்மையில் "ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் இருந்த சோனியா மற்றும் சஞ்சீவ் ஆகியோரின் தண்டனையும் குறைக்கப்பட்டு உள்ளது". 

இப்பதினைந்து பேரை முன்னிருத்தி மூவரின் தண்டனையை தண்டனை குறைத்த நிதிபதி சதாசிவத்தின் அமர்வு, "சுமார் 15 வருடங்களாக கிடப்பில் இருக்கும், தேவேந்திரபால் சிங்கின் கருனை மனு மீது மட்டும் முடிவெடுக்க பதினைந்து நாட்கள் கால அவகாசத்தை மத்திய அரசுக்கு வழங்கியிருப்பது எந்த வகையில் நியாயமாகும்" என அவரது தீர்ப்பை ஆதரிப்பவர்கள் சொல்ல முடியுமா அல்லது அவரேதாம் சொல்லமுடியுமா? 
இப்படி எந்தவொரு சட்டத்தையும் கடைப் பிடிக்காது, தான் வழங்கிய தீர்ப்பை தானே கடைப்பிடித்தும், கடைப்பிடிக்காமலும் ஆளுக்கொரு நீதி என்கிற நிதிபதி சதா சிவத்தின் நிலைப்பாடு நிதியை திரட்டுவது, அரசியல் நிர்பந்தங்களை ஏற்படுத்தி ஆதாயம் அடைவது உள்ளிட்ட வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஈனத்தனமான செயல்களே அன்றி வேறில்லை. 
இப்பட்டியில் கொடுமை என்னவென்றால், தேவேந்திர பால் சிங்கை, ‘தரம்பால்’ என்றும் 1999 முதல் 2011 வரை என்பது ‘2009 முதல் 2011’ வரை எனவும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்டியலிலேயே இத்தகவல்கள் தவறாக இருந்தாலும் கூட, அத்தவறை திருத்தாமல் அப்படியே ஈயடிச்சான் காப்பி போல காப்பியடித்து தீர்ப்பு நகலோடு அப்பிழைபட்டியலை வெளியிட்டு இருப்பதால், இப்பிழைகளுக்கு அவ்விரு நிதிபதிகள்தாம் பொறுப்பாவார்கள். இதே போன்றதொரு பிழை பேரறிவாளன் தீர்ப்பிலும் இருப்பதை, அதைப்பற்றிய பகுதியில் சொல்கிறேன்.

நாம் சாதாரணமாக எழுதும் வாக்கியங்களில் குற்றம் கண்டுபிடித்து தண்டிப்பதை கொள்கையாக வைத்துள்ள நிதிபதிகள், அவர்கள் எழுதும் தீர்ப்புகளில் காணப்படும் இதுபோன்ற எந்தப்பிழையும் பிழையேயன்று, பிரச்சனையே அன்று என்பார்கள்.

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், மேற்கண்ட 12-05-2011 தேதி மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ள கருனை மனுக்கள் நிலுவை குறித்த அப்பட்டியலில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அப்படியானால், அத்தேதிக்கு முன்பாக கருனை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்? 
ஆனால், இம்மூவரின் கருனை மனுக்களும் 12-08-2011 அன்றே நிராகரிக்கப்பட்டதாக இவர்களது தீர்ப்பின் பத்தி ஆறில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு இவர்களது கருனை மனுக்களை கணக்கில் காட்டாமல், ஒளிக்கவேண்டிய அவசியம் என்ன? இது எவ்வளவு முக்கியமான தொரு பிரச்சனை? 
ஆனால், இந்தியாவின் பிரபல பொய்யரும், அதிகபட்ச கூலி வாங்குபவருமான திரு.ராம்ஜெத்மலானி அவர்கள் இதையெல்லாம் கண்டுபிடித்து மத்திய அரசை நாலு ஏத்துஏத்தாமலும், நிதிபதிகளிடம் சொல்லாமலும் போனதேன்?

இதில் கொடுமை என்னவென்றால், இப்பிரபல பொய்யர் திரு.ராம்ஜெத்மலானி மறைக்கப்பட்ட அப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட தேவேந்திரபால் சிங் வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுபவர் (அமிக்குருஷ்) என்ற அடிப்படையில் வாதாடியுள்ளார் என்பது அவ்வழக்கு தீர்ப்பின் பத்தி 11 இல் குறிப்பிடப்பட்டு உள்ளது. 
இந்தியாவே பரபரப்பாக பேசும் பொய்யர் திரு.ராம்ஜெத்மலானியின் நிலையே இப்படி யென்றால், நாட்டிலுள்ள மற்ற பொய்யர்களைப் பற்றி சற்றேனும் புரிந்துக் கொள்ள முயற்சியுங்கள். 
நான் இப்படி பத்தி பட்டியல் என குறிப்பிட்டு சொல்வது நீங்கள் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. ஏனெனில், பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளைப் போல், தாய்மொழியை தமிழாக கொண்ட குடும்பத்தில் பிறந்து, ஆக்ஸ்போர்டு யுனிவர் சிட்டியில் ஆங்கிலம் பயின்றவன் இல்லை. அரசுப் பள்ளியில் தாய்மொழியில் பயின்றவன் என்பதால், எனக்கு போதிய ஆங்கில அறிவு கிடையாது.

ஒன்றுக்கும் உதவாக இப்பொய்யர்களின் பீலாக்கலுக்கு லட்சத்தில் கோடியில் பணம் கொடுப்பவர்கள், இப்படிப்பட்ட சட்ட ஆராய்ச்சியை நூல்களின் மூலமாக, நூலகங்கள் வழியாக எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கான கடமையைச் செய்ய நிதியுதவி கேட்டால், அவ்வளவாக கண்டு கொள்ளவேமாட்டார்கள்.

நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது இப்போது நன்றாகவே புரிந்திருக்க வேண்டும். எனவே, உங்களுக்குள் மல்லுக்கு நின்று அடித்துக்கொண்டு வழக்கில் சிக்கி சித்தரவதை படாமல், உங்களின் வேலையை தொடருங்கள். இவ்வளவு அநியாயத்தை எப்படி பொறுத்துக்கொள்வது என்கிற தைரியம் இருப்பவர்கள், இதனை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கம் கேட்டுப் பாருங்கள்! 

மரண தண்டனை விவகாரத்தில் சட்டப்படி என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைப்பற்றிய ஆராய்வு பதிவு தொடரும்....
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)