நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, January 31, 2014

தடையுத்தரவுக்கு தடை!


Anandakumarதன் கண்ணுக்கு தெரியும் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அரசூழியர்களே அகற்றலாம். ஆனால், அவர்களே அதற்கு லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு உடந்தையாக இருப்பதால் அகற்றமாட்டார்கள்.


மேலும் லஞ்சம் பெற நம்மிடம் எழுத்து மூலமாக புகார் கேட்பார்கள். புகார் கொடுத்தால், போட்டுக்கொடுத்து விடுவார்கள்.


இதற்கு பதிலாக, அந்த ஆக்கிரமிப்பு இடத்திற்கு உரிய இடம் யார் பெயரில் பதிவாகி இருக்கிறது, அங்கு கட்டிடம் கட்டுவது யார், அதற்கு யார் அனுமதி அளித்தது போன்ற விபரங்களை கேட்டால் அகற்றி விடுவார்கள்.


ஓசூர் ஏரியில், துணைஆட்சியர் அலுவலகம் எதிரிலேயே ஆக்கிரமித்து கோயில் கட்டினார்கள். கோவில் இருந்தால் இடிக்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது ஆன்மிக தளங்களை முதலில் நிறுவுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அவ்விடம் குறித்த விபரத்தை துணைஆட்சியரிடம் நேரடியாகவே கேட்டோம்.
நம் சட்ட விழிப்பறிவுணர்வில், தாராள நம்பிக்கை கொண்டவர் என்பதால், ஒருநாள் அதிகாலையில் காவல்துறை பாதுகாப்புடன் இடித்து தள்ளிவிட்டார்.இப்படி ஏதும் நடக்கலாம் என்று முன்னெச்சரிக்கையாக ஆக்கிரமிப்பாளர் தடையுத்தரவை வாங்கி வைத்திருந்திருந்ததால், அத்துணையாட்சியர் மீது உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். இச்செய்தி இதழ்களில் எல்லாம் பல் இளித்தன.
இந்திய அரசமைப்பு கோட்பாடு 226(3)(அ) இன்கீழ், அதுதொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கொடுக்காமல், உயர்நீதிமன்றம் தடையுத்தரவு வழங்ககூடாது. அப்படி வழங்கினால் சட்டப்படி செல்லாது.ஏனெனில், சொந்த இடத்திற்கு எந்த முட்டாளும் தடையுத்தரவு கேட்கமாட்டான். ஆக்கிரமிப்பு செய்யும் அல்லது உரிமையில்லாத இடத்திற்குதாம் வாங்குவான் என்பதால்தாம் இக்கட்டுப்பாடு.


ஆனால், நம் கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகளான முட்டா நிதிபதிகளுக்கு கொடுக்கவேண்டிய துட்டைகொடுத்து விட்டால், ஆவணங்களை கொடுக்காமலேயே, தடையுத்தரவை பிறப்பித்து விடுவார்களே!


இதனை செய்துமுடிக்கும் திறன்கொண்ட பொய்யரைத்தானே, நிதிபதிகளுக்கான இடைத்தரகராக ஆக்கிரமிப்பாளர்கள் தேர்ந்தெடுப்பார்கள்!!


இதையெல்லாம் அறியாத சட்ட ஆராய்ச்சியாளனா நான்...


துணைஆட்சியருக்கு நீதிமன்ற அவமதிப்பு விளக்கம்கோரும் அறிவிப்பனுப்பிய நிதிபதிக்கு, முதலில் நீங்கள் இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லுங்கள் என்கிற எனது அறிவிப்பை உயர்நீதிமன்றத்தில் நேரடியாகவே சார்பு செய்து, ஒப்புதலைப் பெற்று, அவ்வொப்புதலுடன் துணைஆட்சியருக்கு சார்பு செய்தேன். அவரும் ஒப்புதலை தந்தார். நம் அறிவிப்பை பலமுறை படித்து மகிழ்ந்தார்.
நாம் வலியுறுத்தும் சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தை உணர்ந்து, சட்டத்தையும் படிக்க ஆரம்பித்து விட்டார். அத்தோடு அவர்மீதான நிதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் கைவிடப்பட்டது.  இவரொரு கால்நடை மருத்துவர் என்பதால், துணைஆட்சியராக இருந்தபோதே, கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்த மனிதாபிமானி. இவரது பெயரைச் சொன்னால், உங்களுக்கு புரியாது.


இவர் தன்மகள் கோபிகாவை படிக்க வைக்க மேற்கொண்ட நம்பிக்கையூட்டும் செயலைச்சொன்னால் எளிமையாக புரிந்துவிடும்.
ஆமாம், நம்மால் ஏழைக்குழந்தைகளும் தரமான கல்வி பெறமுடியும் என்பதற்காக, 2011 ஆம் ஆண்டில், ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தன்மகளை அரசுப்பள்ளியில் சேர்த்த திரு.ஆனந்தகுமாரே இவர்!வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின், வாசகர்களின் (மெ, பொ)ய்யறிவு பகுதியிலிருந்து...

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)