நல்லெண்ணத்தோடு நாம் செய்த செயல் சட்டப்படி குற்றமாகாது.
இதேபோல, ‘நம்மல கொல்லுற எண்ணத்தில் இருக்கிறவங்கள கூட, வீட்டுக்கு அழைத்து நல்லெண்ணையில் சமைத்து விருந்து படைத்தால், அவங்க எண்ணமே தலைகீழாய் மாறி விடும்’ என்கிறார்கள்.
அடடே... இப்படியொன்னு விசயம் நடந்தா எல்லோருக்கும், எல்லா வேலையும் மிச்சமாயிடுமே!
ஆமாம், ‘உங்க வாழ்க்கைய நல்ல அமைச்சுக்கனும்னா, சட்டத்த படிங்க, கடமைய செய்யுங்கன்னு பிரச்சாரம் பண்ற என்னய, இவனுக்கு வேற வேலையே இல்லையா என்று உங்ககிட்ட கண்டபடி திட்டு வாங்குற விட, நல்லெண்ணையில் சமச்சி நல்லா நல்லா சாப்பிடுங்கன்னு சொன்னா’ எவ்வளவு சந்தோசப்படுவீங்க... மனமார வாழ்த்துவீங்க!
மேலும், வைத்தியனுக்கு கொடுக்கிறத, வாணியனுக்கு கொடு என்று வேறு சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் வச்சி யோசிக்கும் போது, எனக்கென்னவோ நல்லெண்ணை - நல்லெண்ணம் ரெண்டும் ரொம்பவே ஒத்து போற மாதிரிதாம் தெரியுது.
ஆனா, அனுபவபூர்வ யாரும் உணர்ந்ததா தெரியல. ஏன்னா, நம் மேலேயே நமக்கு நம்பிக்கை இல்லாத போது, அடுத்தவன் மீது அவ்வளவு சீக்கிரம் வந்து விடுமா என்ன... அதனால், இந்த விஷப் பரிச்சைக்கு யாரும் தயாரில்லை.
எனக்கு இப்படியொரு கொடுமைய செய்வாங்கன்னு, யாரையுமே நான் நினைக்கல. அப்படி யாராவது இருந்திங்கன்னா, இந்த புக்கு உங்க கைக்கு கிடைச்சதும் வாங்க. சமச்சி விருந்து படைக்கிறேன், சாப்பிட்டுட்டு உண்மைய (சொ, கொ)ல்லுங்க!
அதுவரைக்கும், நாந்தேன் சொல்லிட்டேன்னு நம்பி, எப்படா சிக்குவான்னு காத்துகிட்டு இருக்கிறவங்க கையில சிக்கிகிட்டு, எனக்கு வாரண்ட்டோட எண்ணிக்கையை தயவு செய்து கூட்டிடாதிங்க!!
மக்களோட நல்வாழ்வுக்காக எத்தனையோ பேர், தங்களது இன்ப வாழ்வை இழந்திருக்காங்க.. இனியும் நாம் யாரும் யாரையும் இழக்க வேண்டாம் அல்லவா...
நல்லெண்ணத்தோடு நான் விடுக்கும் இந்த கோரிக்கை உங்களை ஒருபோதும் குற்றவாளி ஆக்காது.
நல்லெண்ணையும், நல்லெண்ணமும் உண்மையா என்பதை சோதித்து பார்த்து விடுவோம், வாருங்கள்!
வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின் கடமையாளர் பகுதியில் இருந்து...
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment