No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, December 25, 2014

கூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்...


ஒவ்வொருவரது நியாயத்தையும் திருடும் பொய்யர்களை, திருடர்களை சட்டமும், சமூகமும் வக்கீல் என்கிறது. இந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுபவர்களை நீதிபதிகள் என்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், இவர்கள் நியாயத்தை திருடும் கொள்ளையர்கள், கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகள் என்பதுதான் எனது ஆராய்ச்சி முடிவு.


ஆனால், இவை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் அவ்வப்போது தெரிய வருகிறது. இந்த வகையில், இன்று இந்தச் செய்தி வெளி வந்துள்ளது.


இது நீதித்துறை குறித்து, அ(ந்)நீதித்துறையே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் என்பதால், யாரும் மறுக்கமுடியாது. ஆகையால், நிதிபதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்கள் ஒருபோதும் மறக்கவும் கூடாது.


இதனையெல்லாம் நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி? என்கிற நூலில், ‘‘நீதிபதிகள் கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகள்’’ பகிரங்கமாகவே எழுதி அவர்களுக்கும் படிக்க கொடுத்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. உண்மையைத் தானே எழுதியிருக்கேன்னு, நிதிபதிகள் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க!


இதுல, இன்னொரு கொடுமை என்னான்னா, அறக்கட்டளையின் தலைவர் பதவியில் இருந்து பதவி காலத்திற்கு முன்பே என்னை விலக்கியதால், தனக்கு இருபது லட்சம் நட்டம் என்பதோடு, அறக்கட்டளை நிர்வாகிகளோ முப்பது லட்சம் கேட்டு தன்னை மிரட்டினார்கள் என்கிறார், வழக்கு போட்டவர்.


அறக்கட்டளைகளில் அறஞ்சார்ந்த செயல்கள் எதுவும் நடப்பதில்லை. தொண்டு என்கிற பெயரில் ஃபண்டை சுருட்டும் பணிதான் நடக்கிறது என்கிற எனது ஆய்வு முடிவும் அப்படியே அரங்கேற்றப்பட்டுள்ளன.


ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை!


Pribe judge arrest


கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சரவணப்பா சஜ்ஜன், வழக்கொன்றில் ஒரு வருக்கு சாதகமாக நடந்துகொள் வதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட் டுள்ளார்.


இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பி.ஏ.பாட்டில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் சிவில் நீதிமன்றத்தில் சரவணப்பா சஜ்ஜன் மூத்த நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வரிடம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.


லஞ்சம்பெறும்போது கர்நாடக உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளன‌ர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகாலை 4 மணிக்கு லஞ்சம்


நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் மீது லஞ்ச புகார் அளித்த காசிநாத் என்பவர் கூறியதாவது:


பீதர் மாவட்டம் ஹூல்சூரில் உள்ள  குருபசவேஷ்வரா கல்வி அறக்கட்டளைக்கு 1995-ம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டேன். எனது பதவி காலம் முடிவதற்குள் பசவேஷ்வரா மடத்தை சேர்ந்தவர்கள் என்னை அப்பதவியில் இருந்து வெளியேற்றினர். இதனால் எனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.


இந்நிலையில் எனது பதவி காலம் முடிவதற்குள் வெளியேற்றியதால் ஏற்பட்ட ரூ. 20 லட்சம் நஷ்டத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு பசவேஷ்வரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் என் னிடம் ரூ.30 லட்ச ரூபாயை வட்டியுடன் செலுத்துமாறு மிரட்டினர். இது தொடர்பாக கடந்த 2000-வது ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன்.


கடந்த 14 ஆண்டுகளாக தீர்ப்பு வெளியாகவில்லை. விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் தருமாறு நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து கர்நாடக உயர்நீதி மன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தேன்.


அதனைத் தொடர்ந்து நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் கூறியவாறு கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியளவில் பீதர் பசவண்ணா சிலைக்கு அருகே சென்றேன். அங்கு காத்திருந்த நீதிபதி சரவணப்பா என்னிடம் ரூ. 5 லட்சம் லஞ்சமாக பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை சம்பவ இடத்திலே கைது செய்தனர்.


இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, December 16, 2014

சட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை!


கடந்த சில நாட்களாகவே, நீதியைத்தேடி(டும்)... வாசகர்கள் சிலர் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் கோட்டை முதல் குமரி வரை நீதியைத்தேடி.... அல்லது நீங்களே வாதாடலாம் அல்லது நீங்களே வாதாட வழிகாட்டுதல் என்கிற பெயரில் ஆங்காங்கே நடத்தப்படும் சட்டப்பயிற்சி வகுப்புகள் குறித்தும், அத்தோடு எங்களுக்குள்ள தொடர்புகள் குறித்தும், அங்கு உங்களது நூல்கள் விற்பனைக்கு கிடைக்குமா என்றும் கேட்டு வருகிறார்களாம்.

நாங்கள் அப்படி எதுவும் தற்போது நடத்தவில்லை என்று தெரிவித்த போது, நீதியைத்தேடி... நூல்களில் குறிப்பிட்டுள்ள சிலரே, அப்பயிற்சி வகுப்புகளை முன்னின்று நடத்துவதால், தங்களது வழிகாட்டுதலில்தான் அப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள் என நினைத்தோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் இவர்களுக்கெல்லாம் சட்டப்பயிற்சி வகுப்பெடுத்தேன் என்பதும், அவர்களின் ஓரிரு சட்டச் சாதனைகள் குறித்து நீதியைத்தேடி... நூல்களில் எழுதியிருக்கிறேன் என்பதும் உண்மைதான்.

இதனாலேயே, அவர்கள் எனது வழிகாட்டுதலில்தான் சட்டப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள் என நினைப்பது, முற்றிலும் தவறு!

ஆமாம், 2000 ஆம் ஆண்டு சட்ட ஆராய்ச்சியை தொடங்கிய நான், 2010 ஆம் ஆண்டு அதனை முடிக்க இருக்கிறேன் என 2008 ஆம் ஆண்டு புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடந்த நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில், நான் பகிரங்கமாக அறிவித்தப் பின்னர், கிளம்பிய வாசகக் கூட்டமிது. அன்று ஒன்றாக இருந்த இக்கூட்டம், இன்று பலவாகவும், பல்வேறு பெயர்களிலும் பிரிந்து கிடக்கிறது.

இது தெரியாமல், தெரிந்தும் இதன் பின்னால் போனால் என்னவாகும் எனப் புரியாமல், என்னுடன் தொடர்பில் இருந்த வாசகர்கள் சிலரே இக்கூட்டத்தின் பின்னால் சென்று, பல விதத்திலும் பட்டுத் தெளிந்தப்பின், அவைகுறித்த வாக்குமூலங்களை எனக்கு அளித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும், நான் சட்டப்பயிற்சி வகுப்புகளை நடத்தியதே, ஆராய்ச்சியுடன் கூடிய அனுபவ நூல்களை எழுத வேண்டும் என்பதற்காகத்தான் என்கிற வகையில், அந்நூல்களை எழுதி, பொதுவுடைமை என அறிவித்து விட்டேன்.

ஆனால், இச்சட்டப் பயிற்சி வகுப்புகளில், அப்பொதுவுடைமை நீதியைத்தேடி... நூல்கள் கிடைக்காது. ஆனால், மதிப்புள்ளவை மட்டுமே திருடப்படும் என்கிற வகையில், இந்நூல்களின் கருத்துக்கள், அவரவர்களது ஆராய்ச்சிக் கருத்துக்களாக கிடைக்கும். அவ்வளவே!

அப்படியானால், ‘எங்களுக்கான உங்களது சட்டப்பயிற்சி வகுப்பு’ என கேட்பவர்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான்.

நீதியைத்தேடி... நூல்களை முதல் நூலில் இருந்து வரிசையாக படியுங்கள். தெளிவாக புரியும். ஏனெனில், அந்நூலை நான் எனக்காகவோ அல்லது எனக்கிருக்கும் சட்ட அறிவு (எ, இ)வ்வளவு என்பதை வெளிப்படுத்துவதற்காகவோ எழுதவில்லை.

உங்கள் ஒவ்வொருவருக்காகவுமே எழுதியுள்ளேன். அதனால்தான், அதனை சமுதாயத்தின் சொத்தாக பொதுவுடைமை எனவும் அறிவித்துள்ளேன்.

இந்நூல்கள் ‘‘கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் அன்று. சமைக்கத் தேவையான சுரைக்காயே, ஏடாகவும், எழுத்தாகவும், எழுதுதுக்கள் பேச்சாகவும் இருக்கிறது’’ என்பதை படிக்கப்படிக்க நன்கு உணர்வீர்கள்.

இதனை உணர்ந்து வாதாடி, யாருடைய வழிகாட்டுதலம், பயிற்சியும் இல்லாமல் வாதாடி, நியாயத்தைப் பெற்றவர்கள் பலர் என்றால், தினமணி, தீக்கதிர், துக்ளக், விடுதலை, உண்மை உட்பட எத்தனையோ இதழ்கள், இதனைக் குறிப்பிட்டே மதிப்புரைகள் எழுதியுள்ளன. இவைகள் அந்தந்த மறுபதிப்பு நூலிலும் தொகுக்கப் பட்டுள்ளன.

இதற்கு மேலும், புரியாத பகுதி எதுவும் இருந்தால், என்னிடம் கேளுங்கள். விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுவரை கேட்டவர்கள்தான் யாருமில்லை.

அக்கறையுள்ளவர்கள் இப்பதிவை தேவையான இடங்களில் பதிவிடுங்கள் அல்லது பயன்படுத்துங்கள். விழிப்பறிவுணர்வை ஊட்டுங்கள்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, December 12, 2014

நீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை!


நீதியைத்தேடி... நூல்களைப் படிங்க! என்கிற கட்டுரையின் தொடர்ச்சி இதுவென்பதால், இதனைப் படித்து (ஏற்கெனவே படித்திருந்தாலும் திரும்பப்படித்து நினைவூட்டிக் கொண்ட) பின்னரே தொடருங்கள்.


இவ்வழக்கில் இதுவரை மூன்று நிதிபதிகள் மாறி விட்டார்கள். நீங்க வாரணட் பாலா வாசகரா என கேட்டது முதல் நிதிபதி...


இரண்டாவது நிதிபதி இரண்டாவது வாய்தாவுக்கே, மாற்றல் வாங்கிக்கொண்டு ஓடி விட்டாராம்.


இப்ப வந்திருக்கிறவர் மூன்றாவது நிதிபதி.


இவர்கிட்ட முதல் வாய்தா 01-12-2014 அன்று வந்திருக்கு.


சரவணன் கொடுத்த மனுவையெல்லாம் வழக்கு கோப்பில் இருந்து எடுத்துப் படிச்சவரு, பொய்யர்களைப் பார்த்து நாமெல்லாம் தமிழ்லதான் பேசுறோம். பின்ன மனுவை மட்டும் எதற்கு ஆங்கிலத்தில் தாக்கல் செய்யுறீங்க... தமிழிலியே தாக்கல் செய்ய வேண்டியதுதானே என கேட்டிருக்கார்.


ஆனால், மூத்தப் பொய்யர்கள் மூன்றுபேர், அதெல்லாம் நடைமுறைச் சாத்தியமில்லை என்று சொல்ல, சட்டப்படி இந்நீதிமன்றத்தின் மொழியே தமிழ்தான் என்னும்போது, எப்படி சாத்தியமில்லாமல் போகும் என கேட்டு, விசாரணையை முடித்திருக்கிறார்.


அடுத்த நாளே, இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்குரை உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் தாக்கல் செய்ய வேண்டுமென்கிற அறிவிப்பை நீதிமன்ற வளாகம் முழுவதிலும், தன் கைப்பட கையெழுத்திட்டு ஒட்டியிருக்கிறார்.


IMG-20141212-WA0011


இது, நீதியைத்தேடி... வாசகர் சரவணனால், ஒட்டுமொத்தப் பொய்யர்களுக்கும் விழுந்த மரண அடியாகும். இப்படி ஒரு வாசகரே எல்லோருக்குமான தாய்மொழி உரிமையை பெற்றுத்தர முடிகிறதென்றால், ஒவ்வொரு வாசகரும் நினைத்தால் சமுதாயத்திற்கு எவ்வளவோ செய்ய முடியும்!


போகப்போக நிதிபதிகளை, அமலில் இருக்கும் சட்டத்தை கடைப்பிடிக்க வைப்பதே, சாதனையாகி விடும் போலிருக்கிறது.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, November 25, 2014

கிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்...!நம் நாட்டில், அரசு வேலைக்குப் பலரும் போட்டி போட காரணமே, நோவாமல் நோம்பு எடுக்கலாம் என்ற சட்ட விழிப்பறிவுணர்வு இன்மைதான்.

அரசுப் பணிக்கு வருபவர்களுக்கு என்னென்ன சட்டக் கடமைகள் இருக்கின்றன, அக்கடமையை ஆற்றாமல் போனால் ஏற்படும் விளைவுகளுக்கு, சட்டப்படி எப்படியெல்லாம் பொறுப்பாக்கப்படுவோம்; நோண்டி நொங்கெடுக்கப் படுவோம்; தண்டிக்கப்படுவோம் எனத் தெளிவாக தெளிந்தால், நிச்சயமாக ஒருவர்கூட அரசுப் பணிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்.

ஆனாலும், விரும்பி வருவதற்கு அடிப்படைக் காரணம், அவர்களின் சட்ட அறியாமை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம், நமக்கென பணியாற்றக்கூடிய அவ்வரசு ஊழியர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என மக்களாகிய நமக்கும் தெரிவதில்லை என்பது, அனைத்து விதத்திலும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இத்தோடு, அரசு அலுவலர்கள் என்றால், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாத அசுர பலம் மிக்கவர்கள் என்ற எண்ணம் அவர்களின் அடிமனதில் பதிந்து கிடக்கிறது.

உண்மையில் அவர்கள், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால், நமக்கான பணிகளைச் செவ்வனே செய்வதற்காக, நமது வரிப்பணத்தில் இருந்து, ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்களே என்பதால், அவர்களை அலுவலர்கள், அதிகாரிகள் என்ற ஆங்கிலேயர் காலத்து பட்டப் பெயர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் என்று குறிப்பிடுவதே, சொல்வதே, அழைப்பதே, எழுதுவதே ஜனநாயகத்தில் மிகவும் சரியானது.

நமது வேலைக்காக நம்மால் பணியமர்த்தப்படும் வேலைக்காரர் செய்யும் வேலையில் அவரைவிட நமக்கு நல்ல பரிச்சயம் இருந்தால் தானே, அவர் செய்த வேலையில் குற்றம் குறைகளைக் கண்டறிந்து, குறைகளைக் களையெடுக்கவும், கற்பிக்கவும் முடியும். அப்படியில்லாத போது, அவ்வேலைக்காரர் என்ன செய்கிறாரோ, சொல்கிறாரோ அதுவே சரியானது என்பதைத்தானே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும்?

இன்று இப்படித்தானே நமது நிலைமை இருக்கிறது!?

நாட்டில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், அரசு ஊழியர்கள் தங்களின் கடமைகளைச் சரியாக செய்யாததுதான் என்று சொன்னால், சற்றும் மிகையல்ல; சாலப் பொருந்தும்.

நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்று சொல்லாடல், சொல் அளவில் கையாளப்படுகிறதே ஒழிய, செயல் அளவில் அத்தகைய கிராமங்களில் தங்களின் கவனத்தைச் செலுத்த வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்களும், அக்கிராமங்களில் வாழும் நாமும் செலுத்துவதில்லை என்பதே உண்மை.

மக்களின் நல்வாழ்விலும், குற்றங்களைத் தடுப்பதிலும், காவல் நிலைய ஊழியர்களை விட, கிராம நிர்வாக ஊழியர்களே அதிக அக்கரை உள்ளவர்கள்/செலுத்த வேண்டியவர்கள். அதனால்தான், ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராம நிர்வாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், காவல் நிலையங்ளோ பல கிராமங்களுக்கு ஒன்று என்ற அளவிலேயே இயங்குகிறது என்பதன் மூலம் கிராம நிர்வாகத்தின் அதிமுக்கியத்துவத்தை, எவரும் எளிதாக எடை போட்டு விடலாம்.

கிராமம் என்பது, நாம் எல்லோரும் மனதளவில் நினைப்பது போல குக்கிராமங்கள் மட்டுமே அல்ல. மாறாக, குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை உள்ள ஒவ்வொரு பகுதியும் கிராமங்களாக வரையறை செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்தையும் சரியான முறையில் பராமரிக்க வழிகாட்டும் வகையில், "கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல் என இரண்டு தொகுதிகள் (பாகங்கள்) உள்ளன".

முதல் தொகுதியில் காவல் கடமை, நிலவரி வசூல், பல்வகைப்பட்டவை, மக்கள் நல்வாழ்வு  மற்றும் துப்புரவு, கொள்ளை நோய்கள் மற்றும் இதர நோய்கள், நச்சுக்கடி மற்றும் கொட்டுதல், நஞ்சிடுதல் மற்றும் தற்செயலாக நிகழும் விபத்து ஆகியவற்றைக் கையாள வேண்டிய விதம் குறித்த அறிவுறுத்தலும், இவ்வறிவுறுத்தல்களைச் செயற்படுத்துவதற்குத் தேவையான உரிய படிவங்களை இரண்டாவது தொகுதியிலும் அரசு தொகுத்துள்ளது.

ஆனால், இந்த இவ்விரு தொகுதி நூல்களையுமே, தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு அச்சிட்டு விற்பனை செய்யவில்லை என்பதால், தற்போது பணியில் உள்ள கிராம நிர்வாக ஊழியர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களிடம் இல்லைவே இல்லை என்று சொல்வதை  விட இப்படியொரு நடைமுறை நூல் இருக்கிறதா என என்னிடம், கேட்ட ஊழியர்களே அதிகம்.

அப்படி கேட்டவர்களுக்கெல்லாம் நகல் பிரதி எடுத்துக் கொடுத்து வந்தோம். தற்போது, இந்நூல் நம் குடிமக்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே மிகுந்த சிரமத்திற்கு இடையில், பொது மக்களின் நலன் கருதி முதல் தொகுதியை மட்டும் நூலாக வெளியிட உள்ளோம். 

இந்த நூலின் ஒரு பிரதியாவது நமக்கு கிடைக்காதா என தேடிக் கண்டுபிடிக்கவே எனக்கு சுமார் மூன்று வருடம் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அந்த அளவிற்கு இப்புத்தகம் குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. அப்படி தெரிந்தவர்கள் ரகசியம் காப்பது போல யார் கண்ணிற்கும் புலப்படாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இதன்படி, கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர், கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசின் பிரதிநிதியாக முழு நேர காவல் ஊழியம் உட்பட பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டியவர். மற்ற மூவரும் பகுதி நேர ஊழியர்கள் ஆவர். தஞ்சைப் போன்ற நெல் பயிரிடும் டெல்டா மாவட்டங்களில் பாசனக் காவலரை, தலையாரி என்பர்.

கிராமத்தின் மக்கள் தொகை, வருமானம், பாசன வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடுதலாக அல்லது குறைவாகவே இருக்கும்.

பொதுவாக ஒரு கிராமம் முதல் ஓரிரு கிராமங்கள் வரை, ஒரேயொரு கிராம நிர்வாக ஊழியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கிராம நிர்வாக ஊழியரின் ஆலோசனைப்படி, தாம் நியமிக்கப்பட்டுள்ள வேலைகளைச் செய்யக் கடமைப்பட்டவர்களே தவிர, அவரின் வீட்டு வேலைகளைச் செய்ய கடன்பட்டவர் அல்ல என்பதும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில் இவர்கள் கடனைக் கடமையாகவும், கடமையைக் கடனாகவும் செய்பவர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்தான்.

கிராம நிர்வாக ஊழியர் என்றால், நினைத்த போது வேலைக்கு வருவதும், போவதும் பொது மக்களில் எவராவது சான்றிதழ் கேட்டு வந்தால், அதிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள லஞ்சத்தைக் கவனிக்க வேண்டியதைக் கவனித்தால் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டுத் தருவது மட்டுமே பிரதானப் பணி என்கிற அளவிற்கு மிகவும் உயர்வானதொரு கடமைப் பணியை, மிகக் கீழ்த்தரமான கடமைப் பணியாக மாற்றி விட்டார்கள்.

இதற்கு மேலும், இவர்களை இப்படியே விட்டு வைக்காமல், குடிமக்களாகிய நாம்தான் நமக்காக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களை வேலை வாங்க வேண்டும் என்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் நோக்கத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இனியும் நாம் இக்கடமையைச் செய்யத் தவறினால், நம் வீடு மட்டுமல்ல; நாடே நாசமாகி விடும்.

முழு நேர ஊழியர்களான கிராம நிர்வாக ஊழியர்களுக்கு, தமது ஊழிய வரம்புக்குள் எவ்வித குற்றமும் நடைபெறாமல் தடுப்பது, கிராமத்தில் நடமாடும் கொள்ளைக் கூட்டத்தினர், தப்பி வந்த கைதிகள், சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்லது பொருள் தயாரிப்பில்  ஈடுபடுவோர், மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்களைப் பற்றி தெரிய வரும் போது அவர்களைப் பற்றி விசாரணை செய்வது, தேவைப்பட்டால் காவல்துறைக்கும், சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கும் தகவல் அளிப்பது உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது காவல்  கடமையாகவும்,

திடீர் மரணங்கள், அசாதாரண மரணங்கள், விபத்து மரணங்கள், விமான விபத்துக்கள் ஆகியவை நிகழும் போது உடனே அங்குச் சென்று அதற்கான காரணங்களை ஆராய்வது, பைத்தியக்காரர்கள் அல்லது தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள இயலாதவர்கள் ஆகியோரைத் தம் பாதுகாப்பில் கொண்டு வருவது இதுபற்றி காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் தேவைப்பட்டால் தகவலை அளிப்பது பாதுகாப்பு கடமையாகவும்,

தான் ஊழியம் ஆற்றும் கிராமத்தில் நடக்க இருக்கின்ற திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், தகாத சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும் பதினைந்து நாட்கள் முன்பாகவே அது குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு அளிப்பது ஆகியன பாதுகாப்பை நிலைநிறுத்தும் கடமையாகவும்,

நீர் நில வரி வசூல், ஆக்கிரமிப்பு, பட்டா பதிவு, கிணறுகள், ஓடைகள், ஏரிகள் அரசு பொது கட்டிடங்கள், புராதன கட்டிடங்கள், புதையல்கள், கனிம வளங்கள், இதர அரசாங்கச் சொத்துக்கள், ஊராட்சி நிதிகள், கால்நடை பட்டிகள் & நோய்கள், பிறப்பு & இறப்பு புள்ளி விபரங்கள், இயற்கை இடற்பாடுகளால் ஏற்படும் போக்குவரத்து தடையை நீக்குதல், எடை அளவுகளை ஆய்வு செய்தல், அஞ்சல் துறைக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குதல் உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் பல்வகை கடமையாகவும்,

தண்ணீர், கழிப்பிட பராமரிப்பு, குப்பை மேடுகள், இடுகாடுகள் & சுடுகாடுகள், இறந்த விலங்குகள், வாந்தி பேதி, மஞ்சல் காமாலை, மூளைக்காய்ச்சல், பிளேக், மலேரியா, வெறி நாய் கடி, பாம்புக்கடி, தேள் கொட்டுதல் உட்பட பல்வேறு விடயங்களைச் செம்மைப் படுத்துவது ஆகியன மக்கள் நல்வாழ்வு மற்றும் கிராம துப்புரவு கடமைகளாக, கிராம நிர்வாக ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டே, "கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஒருவேளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்களுக்கு, நிர்வாக ஊழியராக நியமிக்கப்படும் போது, அதில் ஏதாவதொரு கிராமத்தில் வசிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் 01-01-2011 தேதிய கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் 12,620 கிராமங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் பத்து சதவிகித கிராம நிர்வாக ஊழியர்கள் கூட அவர்களின் பொறுப்பு கிராமங்களில் வசிப்பதில்லை. கிராமத்தில் வசிக்க வேண்டியவர்கள் நகரத்தில் வசிக்கிறார்கள் என்றால், நகரத்தில் பணியாற்றுபவர்கள் கூட தங்களின் வசதிக்காக அடுத்தடுத்த நகரங்களிலும் வசிக்கும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு அடிப்படை காரணமாக, கிராமத்தில் போதிய வசதியில்லை என்ற அற்ப காரணத்தையே பலரும் முன் வைக்கின்றனர். அப்படியானால், அக்கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாம் சராசரி மக்கள் இல்லையா? பணி நியமன ஆணையைப் பெற்ற போது கிராமத்தில் தங்களுக்குப் போதிய வசதி கிடைக்காது என்பது தெரியாத அப்பாவிகளா இவர்கள்? ஒரு பேச்சுக்குத் தெரியாமல்தான் சேர்ந்தார்கள் என்றாலும் கூட, தெரிந்த பின் இந்த வேலை நமக்கு ஒத்து வராது என்று பணியை துறந்துவிட்டு வேறு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே?

இதற்கு வக்கில்லாதவர்கள், எப்படிப்பட்ட கிராமமாக இருந்தாலும் அங்கே தானே தங்கி ஊழியம் ஆற்ற வேண்டும்? மக்களின் வேலைக்காரர்களான இவர்களின் கூற்று, "சாமியே சைக்கிள்ல போகுதாம்; பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்!" என்ற கதையாகத்தான் இருக்கிறது.

இவர்களை நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்ட ஆட்சியர்கள் கூட, தாங்கள் எல்லாம் அரசு என்னும் ஒரு சாதி ஊழியர்கள் என்ற அடிப்படையிலும், தனது கையாலாகாத்தனத்தாலும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

இந்நூலின் பிரிவு 43-இல் கிராம நிர்வாக ஊழியர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமான அறிவிப்பை எப்படி சார்பு (சேர்க்க) வேண்டும், அதற்கு அவர் எப்படி பதில் அளிக்க வேண்டும், அவர் மீதான வழக்கிற்கு அரசு ஆதரவு தருமா? என்பன போன்று குடிமக்கள் நடவடிக்கை எடுக்க தேவையான பல விடயங்கள்  அடங்கியுள்ளன.

உங்களுக்கு ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்:

ஓர் அரசு ஊழியர் தனக்கு தெரியாமல் தவறு ஏதும் செய்து விடக்கூடாது என்பதில் சட்டம் தெளிவாகவே இருக்கிறது. ஆனால், இந்தத் தெளிவு அரசு ஊழியர்கள் எவருக்குமே இருப்பதில்லை. நான் இப்படிச் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என உங்களுக்குத் தெரிந்த அரசு ஊழியர்களிடமே உண்மையாக கேட்டுப் பாருங்கள். உங்களுக்குக் கிடைத்த தகவலை மறக்காமல், இக்கட்டுரைக்கான பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.

அதாவது ஒரு அரசு ஊழியர் செய்த தவறுக்காக அவர் மீது சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை நாம் அனுப்பினால், அதற்கு அவர் பதில் தர வேண்டும் என்றுதானே நினைப்போம். இது ஓரளவுக்குத்தான் சரி. பதில் கொடுப்பதில்தான் அவர்களுக்கு சிக்கலே இருக்கிறது. ஏனெனில், அவர்கள் நேரடியாக நமக்கு பதில் கொடுக்க முடியாது. மாறாக, நமது சட்டப்படியான அறிவிப்பையும், அதற்கு நமக்கு என்ன பதில் கொடுக்க வேண்டுமோ அதையும் எழுதி தனது மேல்நிலை ஊழியருக்கு உரிய முகப்பு கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். அதனைப் பெற்ற அந்த மேல்நிலை ஊழியர் அப்பதிலில் தேவையான திருத்தங்களைச் செய்து, மேலொப்பமிட்டுதான் நமக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், இச்சட்ட விபரம் அரசு ஊழியர்கள் எவருக்குமே தெரிவதில்லை. ஆதலால், நேரடியாகவே வீரமாகவும், மிரட்டலாகவும் பதில் அனுப்பி, எடுத்த எடுப்பிலேயே வசமாக சிக்கிக் கொள்வார்கள். பின், ஆளை விட்டால் போதும் என காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயங்கமாட்டார்கள் என்பது எனக்கு பல அரசு ஊழியர்களிடம் இருந்து கிடைத்த அனுபவம்.

இந்த ரகசியத்திலும், ரகசியம் என்னவென்றால், இப்படியொரு சூழ்நிலை கீழ்நிலை ஊழியருக்கு நேரும் போது, மேல்நிலை ஊழியர் எந்த விதத்திலும் வக்காலத்து வாங்க முடியாமல் போய் விடும். அப்படி வக்காலத்து வாங்கினால், அவரது மேலதிகாரியிடம் அவர் சிக்க வேண்டியிருக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் ஆட்சியராக இருந்த திரு.சகாயம் அவர்கள் சட்டத் தெளிவு உள்ளவர். அவரது அதிரடி சட்ட நடவடிக்கைக்குப் பயந்த கிராம நிர்வாக ஊழியர்கள், அந்தந்த கிராமங்களிலேயே தங்க ஆரம்பித்தார்கள். "மேயிற மாட்டை நக்கின மாடு கெடுத்த கதையாக", கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கம் மக்களின் ஆட்சியருக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்ததால், மக்களும் வெகுண்டெழுந்து ஆட்சியரின் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவாக போராட்ட களத்தில் இறங்கி கிராம நிர்வாக ஊழியர்களையும், அவர்களின் சங்கத்தையும் பணிய வைத்தனர்.

தங்கம் செய்யாத வேலையைச் சங்கம் செய்யும் என்பது, சங்கத்தின் செயல் பாடுகளைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறியாதவர்களின் கூற்று. இன்றைய சங்கங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு (வெகுஜன மக்களுக்கு)ச் சங்கடம் தரும் வேலைகளைத்தான் செய்கிறது.

நம் தாத்தா மகாத்மா காந்தி அவர்கள் கூட, "எந்த நோக்கத்திற்காக சங்கம் தோற்று விக்கப்படுகிறதோ, அச்சங்கமே  முதலில் அந்நோக்கத்தை கெடுக்கும்" என தென்னாப்பிரிக்க சத்தியாகிரக நூலில் முன்மொழிந்து உள்ளார். எனது ஆய்விலும், இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்த பிறகே, தாத்தாவின் கூற்றை வழிமொழிய கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் ஆட்சியர் இன்று மதுரையை ஆட்சி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நம்பிக்கையோடு அனுப்பப்பட்டு விட்டாலும் கூட, நாமக்கல் மாவட்டத்தில் அவரின் ஊக்கப் பயிற்சியாலும், தங்களின் தன்னார்வத்தாலும் சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர்கள் பலராலும், கிராம நிர்வாக ஊழியர்கள் இன்றும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மற்ற மாவட்டங்களில் இப்படிப்பட்ட கண்காணிப்புகள் எதுவும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.

நமது நாமக்கல் மாவட்டத்தைப் போலவே, அனைத்து மாவட்ட கிராமங்களிலும், கிராம நிர்வாக ஊழியர்கள், அந்தந்த கிராமங்களிலேயே தங்கி தங்களின் பணியை ஆற்ற வேண்டும் என்ற நோக்கோடு, அண்மையில் நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையைச் சேர்ந்த திரு.விவேகானந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றதன் மூலம் இந்த விடயத்தைப் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்துள்ளார்.


இதற்கு மேல், இதனைக் கண்காணித்து முன்னெடுத்துச் செல்லும் கடமை, ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் நம்மைப் போன்ற தன்னார்வலர்களுடைய கடமையே ஆகும். இவ்விடத்தில் இப்படிப்பட்ட கடமை நிகழ்வொன்றை சொல்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு கோவை தெலுங்குபாளையம் பகுதியில் பொது கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த பின், அதனை வீட்டோடு கூடிய சுற்றுச்சுவர் மூலம் தன்வசப்படுத்தும் முயற்சி நடந்ததை அடுத்து, அப்பகுதியில் வசிக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர் திரு.கண்ணன் என்பவர் அதனைத் தடுக்க கோரி கிராம நிர்வாக ஊழியரிடம் பிரிவு 2-இன்படி மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதாவது இந்தப் பிரிவின்படி, ஒவ்வொரு கிராம நிர்வாக ஊழியரும், தாங்கள் வேலை செய்யும் கிராமத்தில் குற்றம் ஏதும் நடக்காத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும். குற்றம் என்பது குற்றவியல் என்பதால் அதையே உரிமையியலில் பிரச்சினை என நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உங்களுக்கு இப்படி விளக்கிச் சொல்லுவது போல, மனுவில் சொல்வது கிடையாது என்பதால், அவர்கள் என்னமோ, ஏதோ என பயப்படுவார்கள்.

அதைப் படித்துப் பார்த்த அவ்வூழியர், அப்பிரிவின் வில்லங்க விளக்கம் தெரியாததால், கொஞ்சமும் பொறுப்பில்லாமல், இதெல்லாம் என் வேலை கிடையாது. நீங்க நீதிமன்றத்துல கேஸ் போட்டு ஸ்டே வாங்கி தடுத்து நிறுத்திக்குங்கோ என்று கூறி மனுவைத் திருப்பி தந்து விடவே, அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனைக் கேட்டார். மனுவை வாங்க மறுத்ததால் கூரியர் மூலம் சார்பு செய்யப்படுகிறது என மனுவிலேயே குறிப்பு எழுதி அனுப்பி வைக்கச் சொன்னேன். அவரும் அதன்படி செய்து விட்டார்.

அடுத்த நாள் காலை பத்து மணிக்கெல்லாம் கூரியர் கிடைத்ததோ இல்லையோ, சட்டப்பிரிவு எல்லாம் போட்டு இருக்கிறதால, நமது வேலைக்கு வேட்டு வந்து விடும் என அவ்வூழியர் விழுந்தடித்துக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் ஆஜரானதோடு, இனி இது போன்ற சட்ட விரோத ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடமாட்டேன் என எழுதியும் வாங்கி கொண்டார்.

வேறு வழியில்லாமல் ஆக்கிரமிப்பு ஆசையில் ஏற்கனவே இருந்த இடித்து தள்ளிய வீட்டு சுற்றுச்சுவரை மீண்டும் அதே இடத்தில் கட்டும்படியானது. வேறு வேலையாக திருப்பூர் வரை சென்ற போது, இவ்விடத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்று பார்த்தேன். ஆக்கிரமிப்பு செய்ய இருந்த ஒரு பகுதி சுற்றுச்சுவர் மட்டும் புதிதாக எழுப்பப்பட்டு சுண்ணாம்பு கூட அடிக்காமல் காட்சியளித்தது எனக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

சட்ட விழிப்பறிவுணர்வோடு, இப்படி எளிதாக ஒரு நாள் பொழுதிற்குள் காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, தலைமுறை தலைமுறையாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் மக்களை என்னவென்று சொல்வது? இதனைப் படிக்கும் நீங்கள்தான் எப்படியெல்லாம் சட்டம் அருமையாக இருக்கிறது என ஊற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கெல்லாம் எடுத்துச் சொ(செ)ல்லவும் வேண்டும்.

இப்படி சட்ட விரோத சம்பவங்கள் ஒவ்வொன்றுக்குமே, நாட்டில் ஏதாவதொரு இடத்தில்  திட்டம் போட்டுதான் நிறைவேற்றப்படுகின்றது. இதேபோல, திட்டங்களை நிறைவேற்றிய பின், நாட்டின் ஏதாவதொரு இடத்தில்தான் தங்க வேண்டியுள்ளது என்கிற எதார்த்த நிலையில், கிராம நிர்வாக ஊழியர்கள் தத்தமது ஊரிலேயே தங்கி, தங்களுக்குச் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்றினாலே, சட்ட விரோத செயல்கள் பலவற்றைத் தடுத்து விடலாம்.

இதேபோல், கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டிற்கோ அல்லது தெருவிற்கோ பிரச்சினை ஏற்படும் போது, அதனைச் சட்ட முறையில் தீர்த்து வைக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள கிராம நிர்வாக ஊழியர்கள் ஒரு தரப்பிடம் லஞ்சப்பிச்சை பெற்றுக் கொண்டு ஒரு தரப்பாக நடந்து கொள்வது, சான்றிதழ் என்ற பெயரில் கண்மூடித்தனமாக எதையாவது எழுதி கொடுத்து அநீதி இழைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதோர் மிக மிக குறைவே.

அரசு ஊழியர்களின் அலட்சிய செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் நமக்குள் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமே ஒழிய, அதனைத் தீர்த்து வைக்க வேண்டிய அரசு ஊழியர்களை விட்டு விடுகிறோம். இது சட்டப்படியும், சம தர்மப்படியும் முற்றிலும் தவறு.

நமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடும் போது, கிராம நிர்வாக அதிகாரி மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட எந்த அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும், நம்மிடம் இதுபற்றிய விழிப்பறிவுணர்வு இன்மையால் யாரும் அவ்வளவாக எடுப்பதில்லை என்பதே அவ்வூழியர்களின் அலட்சியப் போக்கு மற்றும் அட்டூழியங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.

ஆம்! இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவுகள் 119-இன்படி, குற்ற நிகழ்வைத் தடுக்க கடமையுள்ள அரசு ஊழியர் தடுக்க முயலாததால் குற்றம் நிகழ்ந்தால், அக்குற்ற தண்டனையில் பாதி முதல் பத்து ஆண்டுகள் வரையிலும் தண்டனை கிடைக்கும். சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமையைச் செய்யாமல், அதிலிருந்து தவறும் போது பிரிவு 166 இன்படி, ஒரு வருடம் வெறுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், துன்பம் இழைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுச் சட்டத்திற்கு உட்படாத ஆவணத்தைத் தயார் செய்யும் போது பிரிவு 167 இன்படி, மூன்று வருட வெறுங்காவல்  அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என சட்டம் அரசு மற்றும் பொது ஊழியர்களுக்கு அறிவுறுத்தினாலும், இவைகள் குறித்த அறிமுகம் நமக்கு இல்லாததால் அரசு ஊழியர்களிடம் அல்லோலப்படுகின்றோம்.

எனவே, அறிவோம் அரசு ஊழியர்களின் சட்டக் கடமைகளை! அறிவிப்போம் அவர்களின் சட்ட விரோத செயல்பாடுகளின் விளைவுகளை! அப்படியும் திருந்தவில்லையா, உரிய தண்டனைக்கு ஆளாக்கி, நியாயம் பெறுவோம்; நிம்மதியாய் வாழ்வோம்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, November 21, 2014

எனது (அ, எ)ருமை தமிழர்கள்


எ)ருமை தமிழர்கள்எனதருமை தமிழர்களே என அழைக்க வேண்டியவர், ‘எருமைத் தமிழர்கள்’ என்று தன் நூலுக்கு மிகத் தைரியமான நெஞ்சுரத்தோடு தலைப்பிட்டு, தமிழர்களால் கொஞ்சங்கொஞ்சமாக அழிக்கப்பட்டு வரும் தமிழைக் காப்பாற்ற, தமிழர்களை அழைத்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் இரா. திருமுருகன்.


இந்நூலில் தொன்மை வாய்ந்த தாய்மொழித் தமிழானது, எப்படி தமிழர்களால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை தனக்கே உரிய உயரிய தமிழ்நடையில் விளக்கியிருக்கும் இவர், இலக்கணம், மொழி வளர்ச்சி, இலக்கியம், பாடல் இசை மற்றும் வரலாறு என்கிற துறைகளின் கீழ் சுமார் முப்பது நூல்களை எழுதியுள்ள இவர், எருமைத் தமிழர்கள் நூலை 1998 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.


இந்நூலில் இருந்து எனக்கு பிடித்த, சிந்திக்க வேண்டிய சில வரிகள்...


ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, நாற்காலிக்கே முதலிடம்; ஆங்கிலத்திற்கு அடுத்த இடம்: தமிழுக்கு மூன்றாமிடந்தான்!


இவர்கள் தமிழ்ப்பயிரை, இந்தி மாடு மேயாமல் வேலி போட்டுக் காப்பதை மட்டுமே தமிழ்ப்பணி என்று நினைக்கிறார்கள். வேலிக்குள்ளே இருந்து பயிரை வயிறார மேய்ந்து வரும் ஆங்கில ஆட்டுக்குத் தண்ணீர் குடிப்பாட்டித் தட்டிக் கொடுக்கிறார்கள்!


தமிழே எழுதப்படிக்கத் தெரியாமல், கையெழுத்தை மட்டும் கோலம் போடுவது போல், தமிழில் போடக் கற்றுக் கொண்டவன் கூட, M. பழனி என்பது போல, அதில் ஓர் ஆங்கில எழுத்தையாவது சேர்த்துக் கொள்வதே பெருமை என நினைக்கிறான். தமிழனின் உயிரணுக்களில் அப்படி ஒரு ஆங்கில அடிமைத்தனம் ஊறிக்கிடக்கிறது!


அன்று 6 ஆம் வகுப்பில் மட்டுமே எட்டிப்பார்த்த ஆங்கிலம், இன்று முன்மழலை வகுப்பிலேயே புகுந்து கொண்டு நம் குழந்தைகளை ஆங்கிலேயர்களாக வளர்த்து வருகின்றது.


முகவரி : ஏழிசைச் சூழல், 62 மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி - 605001

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, August 21, 2014

அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை!


 மருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி சொல்லியுள்ள விசயத்தில், ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு மருத்துவத்தை மிகச்சரியானபடி உபயோகித்துக் கொண்டனர் எனக் கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மை.


ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று நெடுங்காலமாகி விட்டப்பின்னுங்கூட, அவர்களது பழக்க வழக்கங்களை அப்படியேப் பின்பற்றுவதால் அனைத்து விதத்திலும் அடிமைகளாய் இருக்கிறோம்.


இயற்கையின் அற்புதப்படைப்புளான உடல் உறுப்புகள் எல்லாம் அறிவு வறுமை ஆங்கில மருத்துவர்களால், அறுவை சிகிச்சை என்கிற பெயரில் வெட்டியெறிந்து, உயிருடன் உள்ளபோதே பாதி பிரேத பரிசோதனை முடித்து விடுகிறார்கள்.


சமீபத்தில் வெளிவந்துள்ள, சதுரங்க வேட்டை என்கிற திரைப்படத்தில் கூட, ‘ஏழைகளின் உடலை வைத்து மருத்துவத்தைக் கற்றுக்கொள்; அதனை பணக்காரனுக்கு பயன்படுத்தி பணத்தை சம்பாதித்துக்கொள்’ என்று மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை வெட்ட வெளிச்சமாகவே சொல்கிறார்கள்.


ஒருபக்கம் உரிமைக்காக போராடவேண்டிய நிலையென்றால், மறுபக்கமோ உடல் ஆரோக்கியத்திற்காகவும், உயிருக்காகவும் போராடிக் கொண்டே இருக்கிறோம் என்பதால், இவற்றைக் குறித்தும் விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவேதான், இதனை அப்படியே பதிவிடுகிறேன்.


சில தினங்களுக்கு முன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செல்லநேர்ந்த போது, உண்மையில் நாட்டில் இவ்வளவு புற்றுநோயாளிகள் இருக்கிறார்களா என எண்ணத்தோன்றியது. பாரம்பரிய வைத்திய முறையை பரப்புவோர், முகாமிட வேண்டிய இடம், இதுபோன்ற நோய் உற்பத்தி மருத்துவனைகளேயன்றி வேறில்லை.


Page 1 Page 2 Page 3 Page 4
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, August 17, 2014

பணம் ஒழிந்தால்; இதான் நடக்கும்!இரவு 12 மணி...

இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை.

மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள் நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது, என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.

தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!

வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல, போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது.

Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை, இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது. உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன, இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால் எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!

மக்கள் எல்லோரும் super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை பதுக்கிக்கொண்டார்கள், வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை தேடி ஓட ஆரம்பித்தார்கள் IT company கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது, எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும் மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது, நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது, நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!

வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி பருப்பு வாங்க நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,

உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது, வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது,

ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின, Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்,

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய உலக வெப்பமயமாதல் குறைந்து பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!

பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும், tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும் உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது, பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,

பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது, எல்லாம் இருந்தும் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த மக்களை மகிழ்விப்பதற்காக ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள்.

திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி! காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!

அதனால், தயவு செய்து கரகாட்டத்தையும் குறட்டையையும் நிறுத்திவிட்டு கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!

ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை, சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை!

இந்த கனவும் அப்படித்தான் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான் காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது, கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!

பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய 

பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது.

குறிப்பு: பொதுநலன் கருதி தலையங்கமாக வெளியிடப்படும் இந்த ஆக்கமானது, வெகுசில நாட்களாக சமூக வலைப்பக்கங்களில் உலா வருவதாகும்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, July 16, 2014

பச்சைதான் எனக்கு புடிச்ச கலரு!


ஓர் ஆவணத்தில், சட்டப்படி சான்றொப்பம் இட வேண்டியதாக இருக்கின்ற போது, அந்த ஆவணத்தை எழுதியவர், அதனை தானே எழுதியதாக செய்யும் ஏற்புரையானது அவரை பொறுத்தமட்டில் போதுமான நிரூபணம் ஆகுமென இந்திய சாட்சிய சட்ட உறுபு 70 அறிவுறுத்துகிறது.


இதன் விரிவான பொருள் விளக்கமாவது, அதாவது, எழுத்து மூலமாக உள்ள ஓர் ஆவணத்தில் சட்டப்படி சான்றொப்பம் இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆவணத்தை எழுதியவர், அதனை தானேதன் கைப்பட எழுதியதாக அல்லது தான் சொல்லச்சொல்ல வேறொருவர் எழுதியதாகவும் அல்லது தட்டச்சு செய்ததாகவும்,


அதனைப்படித்துப் பார்த்து சரியாக இருக்கிறது எனவும், அந்த ஆவணத்திலேயே குறிப்பிட்டு அந்நபர் செய்யும் ஏற்புரையுடன் கூடிய கையொப்பமானது, அவரைப் பொறுத்தமட்டில் வேறு எவ்விதத்திலும் நிரூபிக்க தேவையில்லாத, போதுமான நிரூபணமாகும்.


ஆம், இதன்படிதாம் நம்மில் இருந்து குடியரசுத் தலைவர் வரை எல்லோருமே கையெப்பம் போடுகிறோம். கையெழுத்து போட தெரியாதவர்கள் கைரேகையை பதிக்கிறோம். இந்த கையொப்பமும், கைரேகையுமே; சான்றொப்பமும் ஆகும். எப்படி?


நாமே கையால் எழுதும் அல்லது நம் சார்பாக வெறொருவர் எழுதும் அல்லது தட்டச்சு செய்யும் ஆவணத்தில் நாம் கையெழுத்திட்டாலோ அல்லது கைரேகையை பதிவு செய்தாலோ போதும்.


சான்று உறுதி எனப்படும் நோட்டரி பப்ளிக் உட்பட வேறு யாரிடமும் சான்றொப்பம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.


இதேபோல், நாம் கையெழுத்திட வேண்டாத ஓர் ஆவணத்தில், அதனை நாம்தாம் கொடுத்தோம் என்பதற்கு அடையாளமாக அதில், நாம் கையெழுத்திட்டு அல்லது கைரேகையை பதித்து கொடுத்தலுக்கு பெயரே சான்றொப்பம்.


இந்த சட்டம் 1872 ஆம் ஆண்டு முதல் அதாவது சுமார் 142  வருடங்களாக அமலில் இருந்தாலுங்கூட, இதுபற்றி மத்திய அரசுக்கு இன்றுதாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறது. இந்த சட்டப்பிரிவின் சங்கதிகள் தெரியாமத்தான், சம்பிரதாய கூத்தாடிகள் போலவே கூத்தடிக்குறாங்க!


No need attest


உயிரோடு இருந்த ஒருவர் இறந்து விட்டார் என்று நாமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காகவோ அல்லது சாட்சி சொல்வதற்காகவோ சட்டப்படி மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதை அந்நபரே உறுதிப்படுத்தினால் போதும்.


ஆமாம், நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சொன்னாலே போதும். நான் உட்பட வேறு யாரும் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில், உண்மையில் உயிரோடு இல்லாத நீங்கள், உயிரோடு இருக்கிறேன் என்று பொய்ச்சொல்ல முடியாது அல்லவா, அவ்வளவே!


நோட்டரி சட்ட விதிகளின்படி, நாம் கொடுக்க வேண்டிய பனிரெண்டு ரூபாய் கூலியை விட கூடுதலாக பெற்றுக் கொண்டு, பொய்ச்சான்று ஒப்பமிடும் இரண்டாந்தர, மூன்றாந்தர அரசூழியர்கள் மற்றும் நோட்டரி பொய்யர்களே பச்சை மையில், சட்டப்படியான சம்பிரதாய ஒப்பமிடும் போது...


முதல்தர முதலாளி சான்றாளர்களான நாம், இந்திய சாட்சிய சட்ட சான்றொப்பாளர்களாக அதே சட்ட சம்பிரதாய பச்சை மையில் ஒப்பமிட என்ன தடை இருக்க முடியும்; இனியும் ஏற்படுத்த முடியும்!


ஆதலால், அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரையில், எந்தவொரு ஆவணத்தில் கையொப்பம் இட நேர்ந்தாலும், ‘கையொப்பத்தை மட்டும் பச்சை மையில் போடுங்கள்; கைரேகையாக இருந்தாலும் பச்சையிலேயே பதியுங்கள்; தனி முத்திரையை(யும்) பதியுங்கள்!!’


கையொப்பம் தவிர, மற்றபடி கையால் எழுதினால், அநீதிக்கு எதிரான செய்திகளை கருப்பு நிற மையிலும், மற்ற செய்திகளை நீல நிறத்திலும் எழுதுங்கள். கணினியில் தட்டச்சு செய்து பிரதி எடுப்பதாக இருந்தால், உங்களின் வசதியைப் பொறுத்தும், சொல்லும் செய்திகளைப் பொறுத்தும் பல்வேறு நிறங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். இவைகள் நமது வெற்று சம்பிரதாயங்கள் அன்று. நிறங்கள் குறித்த ஆராய்ச்சியின் நிஜங்கள்.


பச்சை : மனதிற்கு தன்னம்பிக்கையையும், எதையும் தாங்கும் மனோபலத்தையும் தருகிறது.


நீலம் : மகிழ்ச்சியின் தூதன். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.


கருப்பு : வருத்தம், சோகம், எதிர்ப்பு.


இயற்கை என்றாலே பச்சை. அதில் ஆங்காங்கே, அவ்வியற்கையே விரும்பும் வேறுபல நிறங்கள். பகலில் வானின் வண்ணம் வெளிர்நீலம். கருப்பு நிறத்தை அளவாகவே காணவேண்டும் என்பதற்காகவே, இரவில் தூக்கம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, எல்லா உயிர்களுக்கும் பொதுவான அடிப்படையே என்றாலும், மனிதர்களில் சிலருக்கு அவரவர்களின் பகுத்தாராயும் அறிவாற்றலைப் பொறுத்து மாறுபடலாம்.


ஆகவே, வண்ணமே எண்ணத்திற்கான அடித்தளம் என்பதால், இனி எண்ணம்போல் வாழ்க்கை என்று யாருக்கேனும் அறவுரை சொல்ல நேர்ந்தால், வண்ணம்போல் வாழ்க்கை என பொருத்தமாகவே சொல்லுங்களேன்!


எனவே, நமது விருப்பத்திற்கு மாறாக, குறிப்பிட்ட வண்ணத்தைதாம் பயன்படுத்த வேண்டும் என்பது, இயற்கை நியதியை மீறிய செயலே.


இனியாவது, ஓர் அசல் சான்றின் மீது, ‘இது அசல் சான்றுதான் என சான்று வழங்க’, அச்சான்றை உருவாக்கியவரைத் தவிர, வேறு யாருக்கேனும் தகுதியிருக்க முடியுமா... இருக்க முடியும் என்றால், முதலில் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு பணத்தின் மீதும், நீங்களே சான்றொப்பமிட்டு கொடுங்கள். அப்போது மட்டுமே அப்பணம் அசலானதாகும்.


நீங்களே இந்த அரசு ஊழியத்தில் நியமிக்கப்பட்டு உள்ளீர்கள் என அரசு ஊழியர்களையும், தீர்ப்பை எழுதினீர்கள் என நிதிபதிகளையும், வேறொருவர் உறுதிப்படுத்தி சான்றை வழங்க வேண்டுமென கேளுங்கள். சான்று உறுதி குறித்த சர்ச்சைகள் சரியாகிவிடும்.


இப்படித்தான், நான் கடந்த பத்து வருடங்களாக சாதாரண குடிமகனில் ஆரம்பித்து, குடியரசுத் தலைவர் வரைக்கும் அனுப்பும் ஆவணங்களில் பச்சையில் கையொப்பமிட்டும், சான்றொப்பமிட்டும் வருகிறேன்.


சட்ட விழிப்பறிவுணர்வில் தெளிவான வாசகர்கள் பலரும் இப்படித்தாம் கையொப்பமிட்டு வருகிறார்கள். இப்ப நீங்க..!?

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, July 12, 2014

மனுவும், மற்றவைகளும்...


அரசூழியர்கள் மட்டுமன்று; எல்லோருமே சட்டப்படிதாம் செயல்பட முடியும். ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கடமை. நமக்கோ ஊதியமில்லா கடமை. அவ்வளவே!


ஆகையால்தாம், அரசூழியர்களிடம் நாம் எதையும் வாயால் சொல்லும்போது, மனுவாக எழுதி கொடுங்கள் என கேட்கிறார்கள். இதேபோல அவர்களும் எதுவொன்றையும் வாய் வார்த்தையால் சொல்லிவிட முடியாது. எழுத்து மூலமாகத்தான் தந்தாக வேண்டும்.


இதுதாம், நியாயந்தான் சட்டம் என்கிற தத்துவத்தின் அடிப்படை சாரம்சம். இத்தத்துவத்தை புரிந்துகொண்டால், எல்லாமே எளிதில் விளக்கும். இல்லாவிடில், எதுவுமே விளங்காது என்பதோடு, எல்லாமே சோரந்தான் போகும்.


இதற்கென்று வெகுசில சட்ட விதிகளும் இருக்கின்றன. ஆனால், எல்லா சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பொதுவானதொரு சட்டப்பிரிவாக இந்திய சாட்சிய சட்ட உறுபு 101 மற்றும் 106 ஐ எடுத்துக் கொள்ளலாம்.


யார் எதைச் சொல்கிறார்களோ அல்லது யார் எதனை மறுக்கிறார்களோ அதனை அவர்களே மெய்ப்பிக்கவும் அல்லது பொய்யப்பிக்கவும் கடமைப்பட்டவர்கள் என்பது, முறையே இவ்வுறுபுகளின் ரத்தினச் சுருக்கமான உட்கருப்பொருள்.


இப்படி எந்தவொரு மனுவாக இருந்தாலும், அக்கோரிக்கைக்கு பொருத்தமான அல்லது பொதுவானதொரு சட்டப்பிரிவை போட்டுவிடுவது நல்லது. ஒருமனுவில் பல கோரிக்கைகள் இருந்தால், ஒவ்வொன்றுக்குமே சட்டப்பிரிவை குறிப்பிடுவது சாலச்சிறந்தது.


இதனால், நன்மை என்று சொல்லப்போனால், நீங்கள் சட்ட விழிப்பறிவுணர்வோடு கேட்கிறீர்கள். ஆகையால், நாம் கடமையைச் செய்தாகவேண்டும் என்கிற கட்டுப்பாடு ஊழியர்களுக்கு ஏற்படும்.


தீமை என்று சொல்லப்போனால், நீங்கள் குறிப்பிடும் அச்சட்டப்பிரிவு குறித்து ஊழியர்களும் தெளிவாக அறிந்திருக்கவேண்டும். இதற்கு பெரும்பாழும் வாய்ப்பில்லை என்பதால், நீங்கள் பாடம் நடத்தவேண்டியிருக்கும்.


நான் இப்படி பல ஊழியர்களுக்கும், ஏன் நிதிபதிகளுக்குமே பாடம் நடத்தியுள்ளேன் என்பதை நீதியைத்தேடி... நூல்களைப்படித்தால் நன்கு விளங்கும் என்பதோடு, இந்நூல்களை அவர்களுக்கும் கொடுத்துள்ளோம் என்பதும் விளங்கும்.


எல்லா அரசூழியர்களுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டங்குறித்து ஓரளவேனும் தெரியும். ஆனால், சாட்சிய சட்டங்குறித்து நிதிபதிகளுக்கே தெரியாதபோது, ஊழியர்களுக்கு எப்படி தெரியும். ஆகையால், தகவல் பெரும் உரிமைச்சட்டப்படி விண்ணப்பிக்கவில்லை என்றோ அல்லது அதன் கீழான நிபந்தனைகளை நிறைவேற்றவில்லையென்றோ திருப்பி அனுப்புவார்கள்.


உரிமை என்பது தானாகவே தரப்படவேண்டிய ஒன்று. அப்படி தரப்படாதபோது, அவற்றை உரிமையுடன் கோரவேண்டுமே தவிர, மனுவில் தாழ்மையுடன் அல்லது கெஞ்சி கேட்டுகொள்கிறேன் என பிச்சை கேட்பதுபோல கேட்கவேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் விரிவாகச் சொல்லியுள்ளேன்.


இப்படி கொடுக்கப்படும் மனுவை, பின்வரும் இரண்டு காரணங்களுக்காகத்தாம் திருப்பிக் கொடுக்க முடியும்.


அ) அம்மனுமீது அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியாத பட்சத்தில், அம்மனுவை யாரிடம் கொடுக்கவேண்டுமென எழுத்து மூலமாகவே குறிப்பிட்டுதாம் திருப்பி கொடுக்க வேண்டும்.


ஆ) அம்மனுவில் குறைபாடு எதுவும் இருந்தால் அதனை குறிப்பிட்டு கொடுத்தால், அதனை சரிசெய்து மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டும்.


இதனை ஆங்கிலத்தில் ரிட்டன் என்டாஸ்மென்ட் என்பார்கள். அதாவது, திருப்பி கொடுப்பதற்கான காரண குறிப்பு என தமிழில் பொருள்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாழும் இப்படி எழுதி திருப்பிக் கொடுப்பதில்லை.


ஆமாம், யாது காரணத்துக்காகவும் அரசூழியர்கள் சட்டத்திற்கு உட்படாத வகையில் நடக்க நினைக்கும்போது இப்படி காரணத்தை எழுதி திருப்பி கொடுக்கமாட்டார்கள். இதனை விழிப்பறிவுணர்வில்லாமல் வாங்கிக்கொண்டுபோய் ‘அங்கே கொடுத்தால், இங்கே கொடுங்கள்; இங்கே கொடுத்தால் அங்கே கொடுங்கள்’ என பந்தாடி அலைக்கழிப்பார்கள்.


இதற்கு நிதிபதிகளும் விதிவிலக்கன்று. அப்படியே எழுதிக்கொடுத்தாலுங்கூட, நிதிபதிகளே நேரடியாக எழுதமாட்டார்கள். மாறாக, நிதிபதிகளின் எடுபிடிகளான நீதிமன்ற மா(மா)க்களே எழுதுவார்கள். இறுதியாக, இம்மா(மா)க்களையெல்லாம் மேய்க்கும் தலைமை மா(மா)க்களான நிதிபதிகளே ஒப்பமிட்டிருப்பார்கள்.


பெரும்பாழான நிதிபதிகளைப் பொருத்தவரை, ‘திருப்பப்படுகிறது’ என தலைப்பிட்டு ‘இம்மனு எப்படிச் செல்லும்?’ என்று ஒருகேள்வியை எழுப்பியே திருப்பி கொடுப்பார்கள்.


இப்படியெழுதிக் கொடுத்தால், அவர்களுக்கு அடிப்படை சட்ட அறிவே கிடையாதென்றும், ஆகையால் உங்களிடமிருந்து சட்ட விழிப்பறிவுணர்வைப்பெற விரும்புகிறார்கள் என்றும், நீங்களாகவே புரிந்து கொள்ளவேண்டும்.


ஆகையால், அதன் கீழேயே ‘சமர்ப்பிக்கப்படுகிறது’ என தலைப்பிட்டு இம்மனு எப்படிச் செல்லாது என சட்டவிதிகளோடு குறிப்பிட்டு, நிதிபதிகளான தாங்கள் குறிப்பெழுதிக் கொடுத்தால், எப்படிச் செல்லுமென்பதற்கான சட்டவிதிகளை விளக்கமாக குறிப்பிட்டு சமர்ப்பிக்கிறேன் என எழுதிக்கொடுத்தால் போதும். இவர்களிடம் இனி நாம் பூச்சாண்டி காட்டமுடியாதென நினைத்து உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள்.


பொய்யர்கள் யாரும் இப்படி எழுதிக்கொடுத்து நான் பார்த்ததில்லை. வேறாக, அவர்களுக்கேயுள்ள அபிலாஷையில் சரி, சரி... உனக்கென்ன பங்கு தரனுமோ, அதனை தந்துடுறேன். ஒழுங்கு மரியாதையா விசாரணைக்கு எடுத்துக்கோ என்கிற வகையில், நிதிபதிகளிடம் நேரடியாகவே பவ்வியமாக பம்முவார்கள்.


நிதிபதிகள் சட்ட விழிப்பறிவுணர்வில் டம்மி என்பது மட்டுந்தான் நமக்குத்தெரியும்.


ஆனால், வேறெதிலெல்லாம் வீக்கு என்பது பொய்யர்களுக்கு டீட்டெயிலாகவே தெரியும். உடனே, நிதிபதிகளும் எல்லாம் புரிந்து விட்டதுபோல மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்கள். உண்மையும் அதுதானே!


இந்தியா குடியரசாகி அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்தாம், மனுவும் மற்றவைகளும் குறித்து தெரிந்து கொள்ள நேரிடுகிறது என்பது, சட்ட விழிப்பறிவுணர்வில் எவ்வளவு தூரம் முன்னேறாமல் இருக்கிறோம் என்பது விளங்கும்.


மனு எழுதுவதும் ஒரு கலைதாம். இதனை எழுதயெழுதவே மற்றவர்களை தன்வசப்படுத்து மளவிற்கு வார்த்தைகள் நம் வசப்படும்.


நான் கொடுத்த மனுக்களை படித்து, திறந்த நீதிமன்றத்தில் நிதிபதிகள் நேரடியாகவே பாராட்டியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் எழுதலாம் என்பது அவர்களுக்கு தெரியாததால் தானே இப்படி...  இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?


பொய்யர்கள் மனுமேல் மனுபோடும்படி, பிரச்சனையை பெரிதுபடுத்தி விடுவார்கள். ஆனால், நானோ ஒரே மனுவில் எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமளவிற்கு செய்து விடுவேன் என்பதால், நீதியைத்தேடி... வாசகர்கள் பலரும் நானே மனு எழுதிக்கொடுக்க வேண்டுமென விரும்புவார்கள். எத்தனை பேருக்கு நானே எழுதிக்கொடுப்பது?


ஆகையால், நீங்கள் எழுதி அனுப்புங்கள் சரிசெய்து அனுப்புகிறேன் என சொல்லிவிடுவேன். அவர்களை உயரிய அக்கரையோடு எழுதியிருந்தால், அதனை ஒழுங்குபடுத்தி தருவேன்.


நான்தான் ஒழுங்குப்படுத்தி தரப்போகிறேனே என்கிற எண்ணத்தில் பொறுப்பற்ற முறையிலோ அல்லது சரியான புரிதல் இல்லாமலோ ஏனோதானோவென்று எழுதி அனுப்பினால் என்னிடம் கதையாகாது. ஏனெனில், நான் எழுதிக்கொடுத்தாலும் ஆகாது. பின்ன எதற்கு வெட்டியாக எழுதுவானேன்.


சட்டப்படி மனுவை எப்படியெழுத வேண்டும் என்பதற்காகவே, மனு வரையுங்கலை என்கிற நூலை எழுத திட்டமிட்டுள்ளேன்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, July 11, 2014

நீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல்


வடக்கு வாசல் நாள்: பிப்ரவரி - 2007


“உண்மை”யைப் பற்றிய பின் நவீனத்துவவாதிகளின் கருத்துக்கள் எவ்வளவு அபத்தமாக இருந்த போதிலும் அவை சரியாக இருக்கக் கூடிய இடம் உண்டெண்றால் அது நீதிமன்றங்கள்தான்.


நீதிமன்றங்களில் ஒரு விசயம் உண்மை என தீர்மானிக்கப்படுவது பல்வேறு விசயங்களைப் பொருத்தது. வாதி, பிரதிவாதிகளின் பணபலம், அதன் சாட்சிகளை விலைக்கு வாங்கும் அவர்களது சக்தி, அவர்கள் வைக்கும் வக்கீல்களின் திறமை, நிர்வாகத்திலும் காவல் துறையிலும் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு என பல விசயங்களைப் பொருத்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீதிபதிகளின் ஆளுமையையும் பொறுத்தது.


வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஒரு அசாதாரணமான நீதிபதியையும், மற்ற சாதாரண நீதிபதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது விளங்கும்.


அரசியல், நிர்வாகம், காவல்துறை என அனைத்து துறைகளுமே சீரழிந்து இருக்கிறது. உருப்படியாக இருப்பது நீதித்துறை மட்டுமே என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. இது மிகத்தவறான ஒரு கருத்து. இதைச் சொல்வதற்கு தைரியம் வேண்டும். வாரண்ட் பாலா அவர்களுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது.


இந்தியாவில் நீதிபதிகளும், நீதிமன்றங்களும் விமர்சனத்திற்கு உள்ளாவதில்லை. இதற்குக் காரணம் நீதிமன்றங்களிடம் இருக்கும் “நீதிமன்ற அவமதிப்பு” என்னும் மிகப்பெரும் சட்ட ஆயுதம். இச்சட்டம் போக வேண்டிய ஒன்று என வி. ஆர். கிருஷ்ணய்யர் போன்ற சட்ட மேதைகள் பல வருடங்களாக வாதிட்டு வருகின்றனர்.


நீதியைத்தேடி... என்கிற இப்புத்தகத்தில் நீதித்துறையில் நிலவும் சீர்கேடுகள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் வாரண்ட் பாலா அவர்கள் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளார். “நன்றாக படித்தவர்கள் எல்லாம் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் என பல்வேறு துறைகளுக்குச் சென்று விடுகின்றனர். தகுதி குறைவானவர்களே சட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர்” என்கிற ஆசிரியரின் கூற்றும் உண்மையென்றாலும், நீதித்துறையில் நிலவும் பல முக்கியமான பிரச்சனைகளுக்கான முக்கிய காரணமாக இதைக்கூற முடியாது.


இப்புத்தகம் பெரும்பாலும் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது. படிக்கின்றவருக்கு ஆசிரியர் தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது. ஒவ்வொருவரும் ஏன் சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், அப்படி தெரிந்து கொண்டால் எப்படி தங்களுக்காகத் தாங்களே வாதாடலாம் என்பதைப் பற்றியும் இப்புத்தகம் எளிமையாக விளக்குகிறது.


பொதுவாக காவல்துறை எப்படி நடந்து கொள்கிறது, விசாரணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லும் போதும், கைது செய்யும் போதும் அவ்வாறு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவரின் (இழுத்து செல்லப்படுகின்றவர் என சொல்ல வேண்டும்) கைது செய்யப்பட்டவரின் உரிமைகள் என்ன என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும்.


புகார் கொடுத்தவரே புலனாய்வு நடத்தும் வாய்ப்பை பெற முடியும் என்பதும், விசாரணைக்கு செல்வதற்கு போக்குவரத்து செலவிற்கு பணமில்லை என்றால் அதைக்கூட கேட்டுப்பெற முடியும் என்பதும் சட்டம் தெரியாதவர்களுக்கும் நிச்சயம் புதிய விசயங்கள் தான்.


சாதாரண மக்கள் நீதிமன்றங்களில் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்சினை வக்கீல்களும், நீதிபதிகளும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள் (எப்படிப்பட்ட ஆங்கிலம் என்பது வேறு விசயம்). இதுபோன்ற சந்தர்பங்களில் விசாரணையை எதிர்கொள்கிறவர் வக்கீலையும், நீதிபதியையும் தமிழில் பேசும்படி கேட்டுக்கொள்ள முடியும். அவர்களும் பேசியாக வேண்டும்.


“ஆங்கிலத்தை அரைகுறையாக தெரிந்து வைத்து கொண்டு வக்கீல்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து நீதிபதிகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்”, என்கிற ஆசிரியரின் கூற்று எராளமான வக்கீல் நண்பர்களை கொண்டவன் என்கிற முறையிலும், அடிக்கடி நீதிமன்றங்களுக்கு போகிறவன் (நண்பர்களை சந்திக்க) என்கிற வகையிலும் நன்கறிவேன்.


“இதுவரை எந்த நீதிபதிக்காவது சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?” என்றால் இல்லை. இதற்கு காரணம் அவர்களின் தேச துரோக ஜாதிப்பற்றுதான். தண்டனை கொடுக்க வேண்டியவரும் நீதிபதி என்பதால்தான்”, என்று ஆசிரியர் தடாலடியாக எழுதினாலும் இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் யாராவது குற்றம் செய்து அது நிரூபிக்கப்பட்டால் கூட அவரை நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும்.


இந்தியாவில் நீதிபதிகள் நியமனம் (உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களுக்கான) என்பது ஒரு ஏமாற்று என்றும், ஜனநாயக கோட்பாடுகளுக்கே எதிரானது என்றும், இந்தியாவின் புகழ் பெற்ற சட்ட வல்லுனர்களுள் ஒருவரான ஏ. ஜி. நூராணி கூறுகிறார்.


ஒரு நாட்டின் நீதித்துறையில் அரசியல் சாசன சட்டம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீதிபதிகள். ஏனெனில் அரசியல் சாசன சட்டத்திற்கு அவர்கள் அளிக்கும் விளக்கம்தான் இறுதியானது. “There is no guarantee of justice expect the personality of the judge” என்ற போலந்து நாட்டின் சட்ட மேதையான Stanislaw Ehrlich கூறினார்.


ஆங்கிலத்தில் சட்ட புத்தகங்களை வாசிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் உதவியாகவும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களு இப்புத்தகம் ஒரு எளிமையான அறிமுகத்தை தருகிறது. இப்புத்தகத்திலிருக்கும் வாக்கிய பிழைகளை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.


க.திருநாவுக்கரசு


குறிப்பு: இவர்கள் உட்பட வேறுசில இதழ்களும் சுட்டிக்காட்டியதற்கு ஏற்ப, அடுத்த பதிப்பில் எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டன.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, July 3, 2014

தகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே!


ர்ப் புறங்களில் ஒன்றுக்கும் உதவாத நபர்களைத் தறுதலை என்பார்கள். அதுபோன்றே அரசால் கொண்டு வரப்பட்டு, பலராலும் பயன்படுத்தப்படும் சட்டமான தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ஆனது, எனது சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், ஒன்றுக்கும் உதவாத தறுதலைச் சட்டமாகும்.


பொதுமக்களாகிய நம் வசம் உள்ள ஆவணங்களைத் தவிர, மற்ற அனைத்து வகையான ஆவணங்களும் பொது ஆவணங்களே என இந்திய சாட்சிய சட்டம் 1872- இன் உறுபு 74 மற்றும் 75 அறிவுறுத்துகிறது.


இதனைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை விட, இந்திய சாட்சிய சட்டம் 1872- இன் உறுபு 76-இன் கீழ் தேவையான தகவல்களை, சான்று நகலாகவே பெறலாம் என்பது அரசுக்குத் தெரியாமலா தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையே இயற்றியிருக்கிறது என்ற கேள்வி எழுந்தால், தெரிந்தோ தெரியாமலோ தான் இயற்றியிருக்கிறது என்று இரண்டாங்கெட்டான் தனமாகத்தான் பதில் சொல்ல முடியும்!


சரி, அப்படியானால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டியதன் அடிப்படை நோக்கம்தான் என்ன?


தன்னையும் தன்னைச் சார்ந்த ஊழியர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தானே தவிர, நிச்சயமாக நீங்கள் நினைப்பது போல் உங்களுக்குத் தகவலைத் தந்து பல விதங்களில் உதவுவவோ அல்லது தங்களைச் சீர்த்திருத்திக் கொள்ளவோ அல்லது பருவகால நிலை அறிந்து நிதி திரட்டி, திருடும் தன்னார்வலர்கள் கூறுவது போல, நமக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரமோ அல்லவே அல்ல..!


மாறாக, அரசு தான் தெரிந்தே செய்யும் தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான தந்தரமாகவே இந்தத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ஐ இயற்றியிருக்கிறது என்பது ஒருபுறம் என்றால், திருட்டுத் தன்னார்வலர்களுக்கு(!)ப் பொருளீட்டுவதற்கான தாரக மந்திரமே இதன் மறுபுறம் என்று நான் சொல்வது, உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாகவும், சந்தேகமாகவும்தான் இருக்கும். ஆனால், இதுதான் யதார்த்தமான உண்மை.


ஆம்! சட்டத்தைக் குறையரையாக (அரைகுறையல்ல; குறையில் அரை) தெரிந்து கொண்டு, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களும் இடைத்தரகர்களும் ஆன வக்கீலே, சமுதாய சீர்கேடுகள் அனைத்திற்கும் காரணம் என்றால், சட்ட அறிவு அறவே இல்லாத பல தன்னார்வ தொண்டர்கள், தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஃபண்டு நிறுவனமாக செயல்படுகின்றனர். இவர்களின் ஃபண்டுக்கு முக்கியமாக கை கொடுப்பது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் போன்று வரும் ஒருசில பருவகால நிலைமாறும் சட்டங்கள்தான்.


இந்த ஒரு சில பருவகால நிலைமாறும் சட்டங்களில் முதன்மையானது, 1986ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். அடுத்ததாக, 1993ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம். தற்போது, தகவல் பெறும் உரிமைச் சட்டம். அடுத்தது என்னவோ..?


இது போன்ற பருவ நிலைச் சட்டங்கள் அனைத்தும் அமலுக்கு வந்த கொஞ்ச காலத்திற்குப் பரபரப்பாகத்தான் இருக்கும். ஏனெனில், இவைகளைப் பரப்புவதற்காக, அரசும், வெளிநாட்டு நிறுவனங்களும் ஒதுக்கீடு செய்யும் நிதியைப் பெற்று, ஒரு பக்கம் உயர் வகுப்பு கும்பல் கும்மாளமிடுகின்றனர் என்றால், நடுத்தர கும்பலோ, நம்மைப் போன்றோரைக் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றனர்.


இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள் மற்றும் உரிமையியல் விசாரணை முறை விதிகள் போன்ற மிகவும் அவசியமான, அத்தியாவசியமான அடிப்படைச் சட்டங்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மட்டும், அரசே ஆங்காங்கே தண்டோரா போட்டு பிரபலப்படுத்த என்ன காரணம் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும், இல்லையோ?


நம்மை அடக்கியாளத் தேவையான ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்றுவதையே கொள்கையாக கொண்டு வதை செய்யும் அரசு, அதற்கு முற்றிலும் மாறாக, அவ்வளவு எளிதாக அரசை ஒழுங்குபடுத்தும் அளவிற்கு அவ்வளவு எளிதாக, நமக்கு வழிவகையை ஏற்படுத்தித் தருவதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் அப்பழுக்கற்ற துறவிகளா அல்லது துறவறம் பூண்டவர்களா? இல்லையே!


மாறாக, மனைவி மட்டும் போதாதென்று, துணைவிகளையும் துதிபாடுபவர்களையும் தூக்கி வைத்துக்கொண்டு மற்ற மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, கொல்லாமல் கொல்கிறவர்கள் ஆயிற்றே.


சுருக்குன்னு ஏறுகிற மாதிரி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நம்மிடம் வளர்ந்தால்தான் அவர்கள், அனைத்து வகையிலும் நம்மால் வளர முடியும். மாறாக, நான் குறிப்பிடும் ஐந்து அடிப்படை சட்டங்களைக் குறித்த விழிப்பறிவுணர்வு  வளர்ந்தால், அவர்கள் அறவே வளர முடியாது என்பதோடு, அறத்தோடுதான் ஆட்சி செய்ய வேண்டியிருக்கும்.


இதுவே உண்மை என்பதை,


கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக!


என்கிற வள்ளுவத் தாத்தாவின் தத்துவ வாக்கிற்கு இணங்க, மேற்குறிப்பிட்ட அவ்வைந்து அடிப்படை சட்டங்களையும் நீங்களே,


படித்து பரிசீலித்து பரிசீலித்ததைப் பயன்படுத்திப்
பலனடைந்து பண்பட்டாலே உண்டு!


இந்திய சாட்சியச் சட்டத்தின்படி, சான்று நகலைக் கோரும் விண்ணப்பத்திற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. அதேபோல வழங்கப்படும் சான்று நகல்களையும் மேற்சொன்ன “தாய்ப்பால் தத்துவத்திற்கு” இணங்க தருமமாகவே தருகிறார்கள்.


ஒருவேளை கட்டணம் கேட்டாலும் அதனை அஞ்சல் வழியே செலுத்தலாம் என்பதால், நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மின்னஞ்சல் மூலம் விண்ணப்பம் அனுப்பவும் பெறவும் தடையேதும் இல்லை. ஆனாலும் நானும் இதுவரை மின்னஞ்சலில் விண்ணப்பித்ததில்லை. தற்போது பெற முயற்சி செய்யும் விதமாக விண்ணப்பம் ஒன்றைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளேன்.


ஆனால், 2005ஆம் ஆண்டில் அனைத்து மாவட்ட மக்கள் தொடர்பு ஊழியர்கள், மற்றும் காவல் கண்காணிப்பு ஊழியர்களுக்கு, உலாப்பேசி மூலம், சான்று நகல் கோரி குறுஞ்செய்தி அனுப்பியதில், சுமார் பத்து பேருக்கும் மேல், குறுந்தகவல் மூலமே பதிலும் தந்தார்கள்.


ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பு ஊழியர் மட்டும் உலாப்பேசியிலேயே அழைத்து, முற்றிலும் வித்தியாசமான குறுஞ்செய்தி முயற்சியை ஊக்குவித்தார். அவர் பேச்சின் சாராம்சம், “நாம் அனுப்பும் கடிதங்கள் அவர்களின் கவனத்திற்குச் செல்லாமல், கீழேயே தப்பும் தவறுமாக, பொறுப்பில்லாதனமாக முடிவெடுத்து விடுகிறார்கள்” என்று பொறுப்போடு சொன்னார்.


“இது போன்ற குறுந்தகவல் எங்களுக்கு நேரடியாக கிடைப்பதால், உடனே பதில் அளித்து விட முடிகிறது” என்றும், “தன்னை ஒரு வாரத்திற்கு முன்பே வேறு பொறுப்புக்கு மாற்றி விட்டதாகவும் ஆனாலும், நவீன தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தில், சட்ட நுட்பத்தை நுழைத்ததில் ஈர்ப்பு கொண்டே அழைத்ததாக”வும் கூறினார். இப்போதுள்ள உயர்ரக உலாப்பேசி அப்போது இல்லாததால், குறுஞ்செய்தி மற்றும் உரையாடலைச் சேமித்து வைக்க முடியவில்லை.


அந்தக் குறுந்தகவல்களைப் பார்த்து, வாசகர்கள் பலரும் கூட ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனெனில், அரசு ஊழியர்கள் நமக்கான ஊழியர்கள் என்ற அடிப்படையில், அவர்களை எப்படி பணிய(ாற்ற) வைப்பது என்பதை நாம்தானே முடிவெடுக்க வேண்டும். நீங்கள் முடிவெடுக்க முயலாததால், அவர்கள் அப்படியே மூடி வைத்து விட முடிவெடுத்து விடுகிறார்கள். அவ்வளவே!


நான் கேட்டிருந்த கேள்வி என்ன தெரியுமா? “தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் எத்தனை நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் உள்ளன?” என்ற சாதாரண கேள்விதான்.


சாதாரண முறையில் பல்வேறு துறைகளிலிருந்து சான்று நகல்களைப் பெற்றுள்ளேன். இதில் தங்களின் பார்வைக்காக தமிழ்நாடு சட்டத்துறையில் இருந்து பெற்ற கடிதத்தை இங்கு உள்ளீடு செய்கிறேன்.


மீண்டும் ஒரு முறை இதனை நன்றாகப் படியுங்கள். ஏனெனில், இதிலுள்ள பல விடயங்களைப் பற்றி, அதீத பற்றுதலோடு பற்றவைக்க (தேவையற்றதை கொளுத்தவும், ஓட்டையுள்ளதை அடைக்கவும்) வேண்டியுள்ளது.


இக்கடிதத்தின் பொருள் பகுதியில், மேற்படி நான் சொன்ன இந்திய சாட்சிய சட்டத்தைக் குறிப்பிட்டு, சட்டத்துறையே சான்று நகல் தந்திருப்பதன் மூலம், தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு முன்பாக, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னரே, நமக்குத் தேவையான விடயங்களைச் சான்று நகலாக பெறவே உரிமை இருக்கிறது எனும் போது, ஒன்றுக்குமே உதவாத இத்தறுதலை தகவல் சட்டம் எதற்கு?


சரி, ஒரு சங்கதியைத் தகவலாக பெறுவதற்கும், சான்று நகலாக பெறுவதற்கும் என்ன வித்தியாசம்? தகவல் என்றால், அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது பொய்யாகவும் இருக்கலாம் என்பதால் அதனைத் தக்க ஆதாரமாக நீதிப்பூர்வமான விசாரணையில் எடுத்துக் கொள்ள இயலாது. இதில் பல தகவல்கள் பொய்யாகத்தான் இருக்கும் என்பது, அப்படி தகவலைப் போராடிப் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.


ஆனால், சான்று நகல் என்பது இந்திய சாட்சியச் சட்டம் 1872இன் உறுபு 76இன் கீழ், இதில் உள்ள விடயங்கள் எல்லாம் உண்மையே என அதைக் கொடுக்கும் அரசு அல்லது பொது ஊழியர் சான்றொப்பம் (attested) செய்து வழங்குவதாகும் என்பதால், அச்சட்டத்தின் உறுபு 77இன் கீழ், எந்த ஒரு நீதிப்பூர்வமான விசாரணையிலும் தாக்கல் செய்து, அதிலுள்ள விடயங்களைப் பொறுத்து நமக்கான நியாயத்தை நிலை நாட்டிக் கொள்ள முடியும்.


இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் கூட இந்தச் சான்று நகல் செல்லுபடியாகும். ஆனால், தகவலோ, தகவல் கொடுத்தவரோ, பிரச்சினை என்று வரும் போது, நான் அப்படிச் சொல்லவில்லையே என்று பல்டியடிப்பது உண்டு அல்லவா? அப்படித்தான்..! ஒன்றுக்குமே உதவாது.


ஆனாலும், இதை பெற எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்?


அடி ஆத்தாடி, இப்படியெல்லாம் கூட தப்பித்துக் கொள்ள சட்டத்தில் இடமிருக்கிறதா? அப்படியானால், சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள், சந்து பொந்துகள் இருக்கிறது என்பதெல்லாம் உண்மைதானே..? ஆனால், நீங்கள் என்னவோ சட்டம் சராசரியாக சரியாகத்தான் (நன்றாகத்தான்) இருக்கிறது. ஆனால், அதை கையாள்பவர்கள் தான் கையாலாகாதவர்களாக, கயமைத்தனம் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினீர்கள்?


அதனால், நீங்களே சட்ட விழிப்பறிவுணர்வோடு சட்டப் பிரச்சினைகளை ச(சி)ந்தியுங்கள், சாதியுங்கள் என்றல்லவா, “வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!” என்ற கட்டுரையில் சொன்னீர்கள், என நீங்கள் நினைத்தால், இதுவும் சரியே என்பதை விளக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன். இது பற்றியும் பின்னர் சொல்கிறேன்.


மேலே சான்றுக்குக் கொடுள்ள தமிழ்நாடு சட்டத்துறையின் கடிதத்தில் மேலும் நீங்கள் ஒரு செய்தியை உணரலாம். தங்களது கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களும் ஆவணங்களும் இத்துறையில் பராமரிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்களே, அது எதை என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? என்று இத்தோடு படிப்பதை நிறுத்தி விட்டு கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள். இது பற்றியும் பின்னால் சொல்கிறேன். உங்களது யூகத்தோடு ஒத்துப்போகிறதா? என சரிபார்த்து, உங்களின் சிந்தனைத் திறன் குறித்து, நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளப் பேருதவியாய் இருக்கும்.


நமது நல்வாழ்வு எப்படி பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் அடிப்படையில் அடங்கியிருக்கிறதோ, அதுபோலவே, நமது அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், தார்மீகக் கடமைகள், அனைத்து விதமான உரிமைகள் என எல்லாமே, இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்ற ஐந்து சட்டங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டது.


எப்படி என்பதை சற்று விளக்கமாக, “நியாயம்தான் சட்டம்” என்ற தலைப்பில் எழுதிய பதிவில் தெளிவு படுத்தியுள்ளேன். அதனைப் படித்து புரிந்து கொண்ட பின், இதனைத் தொடருங்கள்.


இவ்வடிப்படையான ஐந்து சட்டங்களையும் பற்றி அறியாமல், வேறு எந்தச் சட்டத்தையும் பயன்படுத்த நினைப்பது, பயனைத்தராது. மாறாக, பாழ் கிணற்றில் தள்ளிவிடும் அல்லது பதம் பார்த்துவிடும். எதிரிகள் உட்பட எவரும் எள்ளி நகையாட இடம் கொடுத்து விடும். எச்சரிக்கை!


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வரவேற்றவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களில் ஒருவருக்குக் கூட இவ்வைந்து அடிப்படையான சட்டங்களும் தெரியாது என்பது ஏற்கனவே, என்னால் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், “இந்நேரத்திலும்” அது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம்.


முதன் முதலில், தமிழ்நாட்டில் தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்திற்கு ரூ-50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசோ ரூ.10 கட்டணம் வசூல் செய்தது. மத்திய அரசு சட்டத்துக்கு எதிராக மாநில அரசு இப்படி கூடுதல் கட்டணம் பெறுவது இந்திய அரசமைப்பு கோட்பாடு 251க்கு விரோதமானது என்பதை உணர்த்தி, “எச்சட்டத்தின் அடிப்படையில், இப்படி கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறீர்கள்?” என, இந்திய சாட்சிய சட்டம் 1872இன் உறுபு 76இன் கீழ், சான்று நகலை கோரி 23.05.2006 தேதிய மனுவைச் சமர்ப்பித்தேன்.


“இப்படி வசூல் செய்ய வேண்டும் என்றால், இந்திய அரசமைப்பு கோட்பாடு 254(2)இன்படி மாநில அரசு, குடியரசுத் தலைவரிடம் இருந்து சிறப்பான அனுமதியைப் பெற வேண்டும். அப்படி ஏதும் சிறப்பான அனுமதியை வழங்கினீர்களா என்பதற்கான சான்று நகல் கோரி” குடியரசுத் தலைவருக்கும் அதன் நகலையே சமர்ப்பித்தேன்.


இதன் விளைவாக, 20.09.2006 முதலே தமிழ்நாட்டில் ரூ-10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது என்பது (ரு)சிகர தகவல். ஆனால், இது தொடர்பாக தமிழக அரசோ அல்லது குடியரசு தலைவரோ எனக்கு எழுத்து மூலமான பதில் எதையும் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை, அது எப்படி நியாயமாகும் எனவும், நீங்கள் கேட்க வில்லையா? எனவும் கேட்கத் தோன்றும்.


இதில், எனது அடிப்படை நோக்கம், கட்டணம் குறைக்கப்பட வேண்டுமென்பதே! அதுபோலவே, குறைக்கப்பட்டு விட்டது. இதை நான்தான் செய்தேன் என்று எப்படிச் சொல்ல முடியும்?. சட்டம் தவறாக இருக்கிறது என சட்டப்படி சுட்டிக்காட்டிய போது, சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது என்று சொல்வதே முற்றிலும் சரி..!


ஏனெனில், இந்திய அரசமைப்பு கோட்பாடு 254(2)இன்படி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரிடம் சிறப்பான அனுமதியைப் பெற்று கட்டணத்தை அமல்படுத்தி இருந்தால், நான் தலைகீழாக நின்றிருந்தாலும் கட்டண குறைப்பு நடந்திருக்காது.


பொதுவாக, ஒரு தனி நபரோ அல்லது அரசோ அல்லது பிற அதிகாரம் பெற்ற அமைப்போ தனது செயல் தவறு எனத்தெரிய வரும் போது, அது மேலும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் செய்வார்களே தவிர, அதுவரை செய்து விட்ட தவறை ஒரு போதும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால், அதனையே வேறு வகையில் அவர்களுக்கு உணர்த்தும் போது, வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதுவே மனிதர்களின் மடத்தனமான இயல்பு.


ஏதோவொரு தவறை செய்து விடுகிறோம். அதனை யாராவது சுட்டிக்காட்டும் போது, பல்வேறு காரணங்களால், நேரடியாக ஒப்புக்கொள்ள இயலாமல், இல்லவே இல்லை என்று மல்லுக்கு நிற்கிறோம். ஆனால், அதையே உறுதியாகச் சொல்ல வேண்டியவர்கள் உறுதிப்படுத்தும் போது, ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறோம். இதை முன்னரே செய்திருந்தால், மல்லுக்கு நின்றிருக்க வேண்டியதில்லை என்பதோடு, நம் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகமாயிருக்கும்.


விளக்கமாகச் சொன்னால், நாம் புரிந்த குற்றத்தை மறுத்து, பின் அதுவே, நீதிமன்ற விசாரணையில் நிரூபணமாகி தண்டனை கொடுக்கும் போது ஏற்றுக் கொள்வதைச் சொல்லலாம். ஆனால், இதை எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டிருந்தால், நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. அப்படியே அவசியம் ஏற்பட்ட பின் ஒப்புக் கொண்டாலும் அதிகபட்ச தண்டனை குறைந்து நம்மீதான மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். இதுதான் உண்மையின் மகிமை.


இந்த விடயத்தில் தனி நபரான நாம் மட்டுமல்ல; நம்மை ஆளும் அரசாட்சியும் அப்படித்தான் இருக்கிறது. இது குறித்து நீதிமன்றங்கள் அவ்வப்போது கண்டனம் தெரிவிப்பதும் என் விடயத்தில் தலையிட உனக்கு அதிகாரமில்லை என அரசு நீதிமன்றத்தைக் கண்டிப்பதும் அவரவர்களுக்கு முறுக்கேறும் போதெல்லாம் நடந்து கொண்டு தானே இருக்கிறது?


கண்டனம் என்பதே, நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்… நீயும் அழுகிற மாதிரி நடி… இதேபோல, நீ அடிக்கும் போது, நானும் அழுவது போல நடிக்கிறேன் என்கிற புரிந்துணர்வு ஒப்பந்த கண்துடைப்பு நாடகமே!


யாராக இருந்தாலும் செய்தது தவறாக (அறியாமையால் செய்ததாக) இருக்கும் போது, அதுவும் முதல் முதலாக இருக்கும் பட்சத்தில், இனிமேல் இப்படி செய்யக்கூடாது என எச்சரித்து விடுவிக்க முடியும். மற்றபடி, மற்றொரு முறை செய்தாலோ அல்லது தப்பாக (அறிந்தே, திட்டமிட்டே) செய்திருந்தால் தண்டிக்கத்தான் முடியுமே தவிர, கண்டிக்க முடியாது. இதுவே, சட்டத்தின் அற்புதமான அறிவுறுத்தல். ஆனால், மிகவும் அற்பத்தனமாக நீதிபதிகளால் பயன்படுத்தப்படுகிறது.


அப்படியே, ஒப்புக்குச் சப்பாக, அரசை நீதிமன்றம் கண்துடைப்புக்குக் கண்டித்தாலும், மக்கள் தங்களின் வாக்குரிமை மூலமும் தப்பு செய்த அரசை அவ்வப்போது தண்டித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதே நிலைமை கூடிய விரைவில் நீதிபதிகளுக்கும் வரும். அதற்கான அறிகுறிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிய ஆரம்பித்து விட்டன.


எனது தவறை சரியான முறையில் எவராவது விளக்கிக்காட்டும் போது, ஒப்புக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் சென்று விடுவேன் என்பதை விட, நானே அறியும் போதும், அதுபற்றி அறியாத உங்களுக்கும் நானாகவே தயங்காமல் தெரிவிப்பேன் என்பதை நீங்களே இந்நேரத்தில் உணர்ந்திருக்க வேண்டுமே! இல்லை என்றாலும் பரவாயில்லை. வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒருமுறை என்னவாக இருக்கும் என விடயத்தை மீட்டெடுக்கப் பாருங்கள் என்று சொல்லி இத்தோடு இதற்கு வாய்தா போடுகிறேன்.


இப்படி தவறை மறைக்க முயலாமல், வெளிப்படையாக ஒப்புக்கொள்வதால், எனக்குப் பல விதங்களில் நன்மையும் மதிப்பும் அதிகம். முக்கியமாக மனப் போராட்டம் உட்பட அனைத்து விதமான விடயங்களில் இருந்தும் உடனடி நிவாரணம் பெற்று விடுகிறேன்.


சரி, இத்தோடு எனது தனிப்பட்ட சிந்தனை முடிந்து விட்டது. இனி நமது கூட்டுச் சிந்தனைதான் மிச்சம். ஆம், பின்னர் பார்க்கலாம் என்று நாம் ஏற்கனவே வாய்தா போட்ட விடயங்கள் மூன்று இருக்கிறதல்லவா? அவை, ஒவ்வொன்றிலும் சிந்தனையைச் செலுத்தி, அதன் உள்ளுணர்வு உண்மையை வெளிக்கொணர்வோமா..!


முதலில் சட்டத்தில் சந்து பொந்துகள் பற்றி சற்றே அலசுவோம்.

1. சட்டத்தை யார் இயற்றுகிறார்கள்?


சட்டத்தைக் கையாள நினைப்பவர்களே அதனை இயற்றுகிறார்கள். யாருடைய ஆலோசனையின் பேரில் என்றால், அதிகபட்சம் அதைக் கையாள்பவர்களின் ஆலோசனையின் பேரில்தான் இயற்றப்படுகிறது. அதாவது, அரசுதான் சட்டம் இயற்றுகிறது. இதற்கு அடித்தளம் அமைத்து உதவி செய்வது, நாம் குற்றம் சாற்றும் சட்ட அறிவில்லாத அரசு ஊழியர்களும், வக்கீல்களும்தானே..? பின்னர் எப்படி அச்சட்டம் சரியாக இருக்கும்..? இதை எப்படி சந்து பொந்துகள் என சொல்ல முடியும்..?


நியாயம்தான் சட்டம் என்ற அடிப்படை தத்துவத்தில், நியாயமாக இயற்ற வேண்டிய சட்டத்தை அநியாயமாக இயற்றினால், அது கையாள்பவர்களின் கையாலாகாத்தனம் என்பதுதானே எதார்த்தமான உண்மை..!


அப்படியானால், இதற்குத் தீர்வுதான் என்ன?


நம்மைப் போன்ற சாதாரண மக்கள் சட்டத்தின் நோக்கம், தாக்கம், தர்க்கம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து, அசாதாரணமான நியாயச் சிந்தனை அறிவைப் பெற வேண்டும். அப்போது அரசே நம்மைக் கலந்து ஆலோசித்து சட்டம் இயற்றும். இப்படிப்பட்ட சூழ்நிலை வரும் போதுதான் சட்டம் சரியாக இருக்கும்.


அப்படியில்லை என்றால், சந்து பொந்துகள் வழியாகத் தப்பிக்கத்தானே செய்வார்கள் என்ற எண்ணமும் வேண்டாம். ஏனெனில், திறந்த வெளியிலேயே தப்பித்து ஓட முடியாதவர்களுக்குச் சந்து பொந்துகள் மட்டும் எப்படி அவ்வளவு எளிதில் சாத்தியமாகி விடும்? மாறாக, சக்கையாக சிக்கிக்கொள்ளதானே வைக்கும்..! அவர்களைப் பிழிந்தெடுத்து, வரும் சாற்றை உற்சாக பானமாக அருந்த வேண்டியதுதானே, இனி நமது கடமையும், உரிமையும். என்ன நான் சொல்றது சரிதானே..?!


இது சரிதான். ஆனால், சட்டம் இயற்றும் போது நம்மைப் போன்றவர்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று சொல்கிறீர்களே? அதுபற்றி எங்களுக்கு எதுவும் புரியவில்லையே என கேட்கத் தோன்றினால், இதனை வெறும் அனுமானத்தின் அடிப்படையில் நான் சொல்லவில்லை.


மாறாக, தகவல் சட்ட கட்டணக் குறைப்பு அனுபவத்தில் உள்ளபடியே இதுதானே நடந்துள்ளது! ஆனாலும், நேரடியாகவே கருத்து கேட்ட ஒரு விடயத்தை ஆதாரமாகவே சொல்கிறேன்.


1967 ஆம் ஆண்டு, அண்ணா முதலமைச்சராக இருந்த போது, இந்து மதக் கோட்பாடுகளையும் திருமண தத்துவங்களையும் புறக்கணித்த, பகுத்தறிவு தந்தை பெரியார் சீர்த்திருத்த திருமணத்தை வலியுறுத்தினார். விரும்பிய தம்பதிகளுக்குத் தானே முன்னின்று நடத்தியும் வைத்தார். அவரின் இச்செயலானது அப்போது, இந்தியா முழுவதும் அமலில் இருந்த இந்து திருமண சட்டம் 1955க்கு எதிரானது என்பதால் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்தன. தமிழக அரசுக்குப் பெரும் தலைவலியாய் இருந்தது.


இச்சிக்கல்களைச் சட்ட முறைப்படி தீர்ப்பதற்காக அமலில் இருந்த இந்து திருமண சட்டம் பிரிவு 7இல், கூடுதலாக 7அ ஆனது, தமிழ்நாட்டில் தகவல் பெறும் உரிமை விண்ணப்ப கட்டண குறைப்புக்கு அஸ்திவாரமில்லாது போனது போல் அல்லாமல், இந்திய அரசமைப்பு கோட்பாடு 254(2)இன் கீழ் குடியரசுத் தலைவரின் சிறப்பான அனுமதி என்னும் பலமான அஸ்திவாரத்தோடு சேர்க்கப்பட்டது.


இதன் மூலம், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இச்சிறப்பான சீர்திருத்தத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டும் இன்றும் அமலில் இருந்து வருகிறது. ஆனால், திராவிட இயக்கத்தினரில் கூட ஒரு சிலரைத் தவிர, வேறு எவருக்கும் இச்சட்ட விதி பற்றிய விழிப்பறிவுணர்வு இல்லை.


காதலர்கள் மத்தியில் இது குறித்து விழிப்பறிவுணர்வு ஏற்பட்டால், ஊரை விட்டு ஓடி ஒளிந்து வாழமாட்டார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து கொண்டே, விரும்பியவரைத் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழத் தொடங்கி விடுவார்கள்.


ஆம்! காதலர்களுக்கு யார் துணை நிற்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் நண்பர்கள் துணை நிற்பார்கள்தானே..! காதலர்களுக்கு அதுபோதும். ஏனெனில், உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது மற்றவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டாலே சட்டப்படி செல்லத்தக்கது ஆகிவிடும். ஆனால், இச்சிறப்பு சட்டத்திருத்தம், தமிழ்நாடு வாழ் இந்து மதத்தைச் சார்ந்த காதலர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


இதே இந்திய அரசமைப்பின் சிறப்பு அனுமதியின் பேரில்தான், மும்பையில் சிவப்பு விளக்கு பகுதி வெளிப்படையாகவே செயல்படுகிறது என்பது கொசுறு தகவல். தகவலா? இல்லையில்லை, இதுவே உண்மை.


இச்சீர்த்திருத்த விடயத்தில், முக்கியமான விடயம் என்னவென்றால், இதற்கான சட்ட முன் வரைவை சட்ட வல்லுனர்கள் குழு தயார் செய்ததில், பெரியார் நிச்சயம் பிழை திருத்தம் செய்வார் என்ற கருத்தில் காண்பிக்கப்பட்டது.


என்ன இருந்தாலும் பெரியார் பெரியார்தானே..! அவருக்கு நிகர் அவர்தானே..?


And என்ற ஒரேயொரு மூன்றெழுத்து வார்த்தையை எடுத்து விட்டு அந்த இடத்தில், Or என்ற இரண்டெழுத்து வார்த்தையை போட வேண்டும் எனச் சொல்லி அவரே திருத்தியும் கொடுத்தாராம். அப்படியானால், சட்ட வரைவுக்குழு அடிப்படையில் என்ன தவறு செய்திருக்கிறது என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா..?


அடிப்படையில் என்ன நோக்கத்திற்காக சடங்கு, சம்பிரதாயங்களில் இருந்து சீர்த்திருத்த திருமணத்தை முன் வரைவு செய்தார்களோ, அது அந்த நோக்கத்தை நிறைவு செய்யவில்லை என்பதோடு, சீர்த்திருத்த திருமணம் என்ற பெயரில், மறைமுகமாக முன்பு இருந்த சம்பிரதாய சடங்கு திருமணத்தையே அல்லது புதியதொரு சீர்த்திருத்த சம்பிரதாய சடங்குச் சட்டமாகவே இருந்தது. அதாவது, திருமணம் நடைபெற்றதைக் குறிக்கும் வகையில், “விருப்பத்திற்கு ஏற்ப மோதிரம் அணிவித்தல் அல்லது தாலி கட்டுதல்” என்பதற்குப் பதிலாக “மோதிரம் அணிவித்தல் மற்றும் தாலி கட்டுதல்” என ஆங்கிலத்தில் சட்ட முன் வரைவு செய்திருக்கிறார்கள் மெத்தப்படித்த மேதாவிகள். மொத்தத்தில் சீர்த்திருத்தத்தைச் சீர்குலைப்பதாக அச்சட்டத்திருத்தம் இருந்திருக்கிறது.


இவ்விடத்தில், அறிஞர் என்று அழைக்கப்பட்ட, மூன்று முதுநிலைப் பட்டம் பெற்ற அண்ணாவின் சட்டத்திறன் மற்றும் ஆங்கிலத்திறன் என்ன என்பது, ஆறாவது மட்டுமே படித்த பெரியாரால், நமக்கெல்லாம் இப்போதும், எப்போதும் வெட்ட வெளிச்சம்.


இத்தவறுக்கான அடிப்படை காரணம் என்ன? தனக்கே உரிய பொறுப்புணர்வு இன்மையும், கடமையுணர்வு இன்மையும், அதனால் பலனடையப் போவதோ அல்லது பாழாகப் போவதோ நாமில்லை என்ற நாட்டமின்மையும் தானே?


எனவே, தந்தைப் பெரியாரைப் போல, சட்டத்தால் பலனடையப் போகும் நாம்தான், அதன் மீது பொறுப்புணர்வோடு, கடமையுணர்வோடு நாட்டம் கொள்ள வேண்டும். இல்லையேல், நட்டத்தைதான் சந்திக்க வேண்டும் என்பதை இப்போது சிந்திக்க முடிகிறதுதானே..?!


சிந்தித்தால், மூளை தேய்ந்து விடும் என்ற தொற்றுநோய், பரவலாகவே பலருக்கும் இருக்கும் போல..! அதனால் சிந்திப்பதேயில்லை அல்லது சிந்திக்க சிரமப்படுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.


உண்மையில், சிந்தனை ஒன்றும் சிரத்தையோடுஉளியால் கருங்கல்லில் சித்திரச் சிலை செதுக்குவது போன்று கடுமையானதல்ல. மாறாகவேறாகஏன் இப்படி நடக்கிறது என்ற சிறு பொறிதான்! இதுவேசிறப்பான சிந்தனைக்கான,இப்படியெல்லாம் எளிமையாகச் சிந்திக்க தூண்டும் வகையில் எழுதுவதற்கான ஏணிப்படி! (ஏன் இப்படி?)


அடுத்ததாக, சட்டத்துறையின் கடிதத்தில், “தங்களது கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களும் ஆவணங்களும் இத்துறையில் பராமரிக்கப் படுவதில்லை” என்று அளித்திருந்த பதில் குறித்து ஆராய்வோம்.


நாட்டில் மொத்தம் எத்தனை சட்டங்கள் அமலில் இருக்கின்றன என்ற எனது கேள்விக்குதான் இப்பதில். சட்டத்துறையிலேயே அது தொடர்பான ஆவணங்களைப் பராமரிக்கவில்லை எனில், வேறு யார்தான் பராமரிப்பது? இதை வேறு வெட்கமில்லாமல் எழுத்து மூலமாகவே சொல்கிறார்கள் என்றால், நாட்டில் சட்டம் மற்றும் சட்டதுறையின் அவலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஆனாலும், நான் ஏற்கனவே சொன்னது போல, தங்களது தவறை மறைப்பதற்காக “தொடர்புடைய நிர்வாகத் துறைகளை அணுகி பெற்றுக் கொள்க” எனவும் தெரிவித்து இருக்கிறார்கள் அல்லவா? அப்படியானால், சட்டத்துறை நிர்வாகத்துறை இல்லையா? நிர்வாகத்துறை இல்லையென்றால், செயல்துறையா அல்லது நீதித்துறையா என்றால், நிச்சயமாக நீதித்துறை கிடையவே கிடையாது.


சரி, செயல்துறையே என்று தர்க்கத்துக்கு எடுத்துக் கொண்டாலும் கூட, சட்டப்படி எதையெதைச் செய்ய வேண்டுமோ அதை செயல்படுத்துவதுதானே செயல்துறை என்று பார்த்தாலும், சட்டம் தொடர்பான ஆவணங்கள் அவசியம் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டுமே..! ஏன், பராமரிக்கவில்லை? நிச்சயமாக இனிமேலும் பராமரிக்க முடியாது.


ஏனெனில், மக்கள் தொகையைக் கணக்கிட முடியாதபடி, எப்படி மக்கள் தொகை இருக்கிறதோ அதற்கு ஈடாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இயற்றப்பட்ட சட்டங்களும் இருக்கின்றன. இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் என்ன?


ஒவ்வொரு ஆட்சியாளரும் அடுத்தும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்க அக்கறையில் என்னென்ன சட்டங்கள் அமலில் இருக்கின்றன என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், புதிது புதிதாக சட்டங்களை இயற்றி மக்களை மயக்குவதுதான். இப்படி இயற்றிய சட்ட திருத்தங்கள் பல திரும்பவும் இந்த அரசாலோ அல்லது அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாலோ (தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதைப் போல) அல்லது நாட்டில் உள்ள இருபத்தியோரு உயர்நீதிமன்றங்களாலோ அல்லது உச்சநீதிமன்றத்தாலோ ரத்து செய்யப்பட்டிருக்கும்.


இதிலும், கூடுதல் கூத்து என்னவென்றால், உயர்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கும் என்பதோடு, உச்சநீதிமன்றம் தான் பிறப்பித்த உத்தரவை மீண்டும் தானே ரத்து செய்திருக்கும். என்ன கிறுகிறுன்னு தலைய சுற்றுகிறதா அல்லது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கிறதா..!?


அப்படி எதாவது நடந்தால், அந்தப் பாவம் எனக்கு வேண்டாம். தயவு செய்து இந்த விவகாரத்தை மட்டும் இத்தோடு விட்டு விடுங்கள். போகப் போகப் புரிந்து கொள்வீர்கள். யார் யாரோ செய்வதை அக்குவேறு ஆணிவேறாக எடுத்துச் சொல்லி புரியவைப்பதற்குப் புண்ணியமாக போகும்.


இந்தக் கூத்துக்களால், மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட யாருக்குமே எவ்வளவு சட்டங்கள் நம் நாட்டில் உள்ளன என தெரியாது. எனக்கும்தான் என்பதும் திண்ணம்.


அடுத்ததாக, நான் செய்த தவறை நானே உணரும் போது, அதனைத் தயங்காமல் உங்களுக்கும் எடுத்துச் சொல்வேன் என்பது குறித்து பார்ப்போமா?


அடிப்படையில் தகவல் பெறும் உரிமைச் சட்ட எதிர்ப்பாளன் ஆன நான், கொள்கையை நிலைநாட்ட தகவல் கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்கப் போய், உங்களுக்கெல்லாம் இத்தறுதலை சட்டத்தைப் பரப்பி விட்ட பாவத்திற்கு பரிகாரம் எதையும் பண்ண வேண்டாமா?


இதற்காகத்தான்,


அரசு, தனது குடிமகனுக்குத் தேவையான தகவலைத் தருவது என்பது,
தாய்தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது போன்றதாகும்.


என்ற தத்துவத்தை மையப்படுத்தி,


தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005


2ஆவது சுதந்திரமாஅரசின் தந்திரமா?”


என்ற தலைப்பில், சிறு ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளேன்.


இதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் எப்படி நாட்டில் அமலில் உள்ள அடிப்படை சட்டங்களுக்கெல்லாம் எதிராக இருக்கிறது, தாய்மொழி உரிமையை எப்படி பறிக்கிறது என்பது குறித்த மிகவும் விரிவானதொரு பட்டியலைத் தொகுத்துள்ளதோடு, அவை குறித்த சட்ட விளக்கத்தை விளக்கியும் உள்ளேன்.


மேலும், கட்டணக் குறைப்புக்கு காரணமான சான்று நகல் கோரும் மனு, சான்று நகலைத் தராத போது அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய வழிவகைகள் என்பது உட்பட பல்வேறு விடயங்களைத் தொகுத்து உள்ளேன். இதன் பிரதியை நன்கொடை செலுத்தி பெற விரும்புவோர்


திரு.அய்யப்பன்: +919150109189, +919842909190 அல்லது 09842399880


ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


இந்தத் தறுதலை தகவல் சட்டத்தைப் பற்றி அலசப்போக, எவ்வளவோ சட்ட சங்கதிகள் (விடய விடைகள்) அறிவுக்குப் புலப்பட்டிருக்கிறது அல்லவா?

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, July 2, 2014

லட்சாதிபதியும், பிச்சாதிபதியும்!


காந்தி தாத்தா போட்டோ போட்டு அச்சடிச்சி உட்டாங்க...
அழகழகா பொம்ம போட்டு ஜோடிச்சித்தான் வச்சாங்க...
விதம் விதமா நம்பரெல்லாம் வக்கணையா போட்டாங்க...
மொத்தத்துல சைபர் என்னும் நெஜத்த மறச்சி புட்டாங்க...


கட்டு கட்டா காகிதத்த அச்சடிச்சி வீசுறான்...
வயிறு காய உழைக்கிறவன் அதுக்கு மதிப்பு கொடுக்கிறான்...
அச்சடிச்சவன் ஆளறான். உழைக்கிறவன் வாடுறான்...
குரங்கு கையில் அப்பம் தந்த பூனைப் போல ஏங்குறான்...


நீயும் நானும் அச்சடிச்சா கள்ளபணம்...
ரிசர்வ் பேங்கும், அரசும் சேர்ந்தடிச்சா நல்ல பணம்...
பித்தலாட்டம் மர்மமான கலர் காதிதம்...
உலகத்த தன் பிடியில் வச்ச வெத்து காகிதம்...


இது புரியாமல் பணமிருந்தால் பத்தும் செய்யலாம், லட்சமிருந்தால் எந்த லட்சியமும் இல்லாமல் வாழலாமென என்கிற எண்ணத்தில், வாழ்க்கையை அலட்சியம் செய்து விதிமீறல்களை தெரிந்தே செய்கிறார்கள். இதனால், நம் வாழ்க்கை எவ்விதத்திலம் பாதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள்.


அடுத்தடுத்து என்ன செய்யலாமெனவும் திட்டந்தீட்டுகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களது வாரிசுகளுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக அத்திருட்டு திட்டத்தில் தங்களது வாரிசுகளையுஞ் சேர்த்துக்கொள்கிறார்கள்.


உன்னுடைய திருட்டில் என்னை சேர்க்காதே என எந்த வாரிசும் சொல்வதில்லை. மாறாக, தந்தையே சேர்க்காவிட்டால் கூட, தகராறு செய்யும் வாரிசுகளாகவும், தேவைப்பட்டால் தீர்த்துக்கட்டவும் தயங்குவதில்லை. இவர்களுக்கு தெரியாது சொத்துக்காக கொலை செய்தால், வாரிசு உரிமையை இழந்து விடுவோம் என்பதோடு, சட்டப்படி சொத்தும் கிடைக்காது என்பது!


கோடிகோடிக்கு அதிபதியாக இருந்தவர், நொடிப்பொழுதில் பிச்சைகாரன் ஆனார் என்பதோடு, விதிமீறல்களில் ஈடுபட்ட கேடியாகவும் ஆக்கப்பட்டு விட்டார், சென்னை மௌலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளரும், அவரது வாரிசும்.


இவர்கள் அடுத்து எங்கு வலைத்துப்போடலாம் என்பது உட்பட எத்தனையெத்தனை திட்டங்களைத்தீட்டி, எத்தனையெத்தனை வண்ணக் கனவுகளோடு இருந்திருப்பார்கள்? எல்லாம் ஒருநொடிப்பொழுதில் நாசமாகி விட்டது. இந்த நாசத்தில் இருந்து இரண்டு மூன்று தலைமுறைகள் மீறுவதே (கு, க)ஷ்டமப்பா!


இதற்காகவே இந்நேரம் பல பிணந்தின்னிப் பொய்யர்கள் உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறேன் என அவர்களை நோக்கி படையெடுத்திருப்பார்கள்; இந்த வழக்கு நம்மிடம் விசாரணைக்கு வராதா என நிதிபதிகள் கணக்குப்போட்டு காத்துக்கொண்டிருப்பார்கள்!!


என்ன விதிமீறல் இருந்தால் நமக்கென்ன? நமக்கு இடம் கிடைத்தால் போதுமென அவ்வடுக்குமாடி குடியிருப்பில் இடம் வாங்கியவர்கள், கட்டடத்தை கட்ட ஒப்புக்கொண்டவர்கள் என எத்தனையெத்தனை பேர் பெரும் இழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்?


இவர்களில் யாராவது ரமணா திரைப்படத்தை பார்க்காமலா இருந்திருப்பார்களா என்றால், வெளிமாநிலத்தில் இருந்து கூலிவேலைக்கு வந்தவர்களைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் நிச்சயமாக பார்த்திருப்பார்கள். அப்படியிருந்தும் எப்படி துணிந்தார்கள்?


இதையெல்லாம் தட்டிக்கேட்க நிஜத்தில் ரமணா வரமாட்டாரென சந்தடிச்சாக்கில் நக்கலடிக்கிறார்கள். சிலர், இவ்விடம் குறித்த பதிவுத்துறை வரைபடத்தை வலைப்பக்கத்திலிருந்து எடுத்து தங்களுக்கு தெரிந்ததைச் சொல்கிறார்கள்.


ஆவணப்பதிவேடுகளாக இருப்பதையே தங்களுக்கு பாதிப்பென வரும்போது திருத்தும் அயோக்கியர்களான அரசூழியர்களுக்கு, இணைய வலைப்பக்கத்தில் இருப்பதை மாற்ற எத்தனை நிமிடங்கள் ஆகும்? கட்டிடம் இடிந்தது என தெரியவந்த அடுத்த நொடியே நிச்சயம் இதைத்தாம் செய்திருப்பார்கள்.


இவ்வளவு ஏன், பிரபல தனியார் தொழிற்நிறுவனமான டி.வி.எஸ் கூட, இதைத்தாம் செய்தது என்பதை பதிவு செய்துள்ள கட்டுரை விபரங்களை இங்கு சொடுக்கிப் படித்தறியலாம்.


நாங்களெல்லாம் மீட்பு பணியில் ஈடுபட்டோமெனவும், எங்களுக்கு சிலர் உணவுப்பொருட்களை வழங்கியதாகவும் பதிவு செய்கிறார்கள். இவர்கள் உண்மையில், மனிதாபிமானம் என்கிற வகையில், மெய்மறந்து இதுபோன்ற மீட்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.


இதனை தார்மீக கடமையென்று கருதுகிறார்கள். கடமையை மடமையாகவும், மடமையை கடமையாகவும் செய்பவர்களே ஏராளம். இதில், அரசின் பங்கு அதிகம்.


இது பொய்யர்கள் செய்யும் தொழில்போல!


ஆம், விதிமீறல் செய்யாதோர், இதுபோன்ற விதிமீறல்களில் சிக்கமாட்டார்கள் என்பதை கருத்தில்கொண்டு, ஒரேயொருமுறை மீட்புப்பணிகளில் ஈடுபடாமல் விட்டால் மட்டுமே, வேண்டுமென்றே விதிமீறலில் ஈடுபடுவோரையும், இதற்கு துணைபோவோரையும் கொஞ்சமாவது யோசிக்கச் செய்யமுடியும்.


இல்லாவிட்டால், இதற்கு முன்பாக இதுபோன்று எத்தனையோ இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்திருந்துங்கூட, இது நடந்திருக்குமா அல்லது இனியாவது நடக்காமல்தாம் இருக்குமா?


இதுபற்றி மேலோட்டமாக மேயாமல், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படுவதன் நீதிமுறை அடிப்படை நோக்கமுங்கூட, இதுதாம் என்பது புரியும்!


ஆனால், இந்நீதிமுறையுங்கூட, பணத்தால் விதிமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு நெடுங்காலமாகி விட்டதன் விளைவே, இதுபோன்ற சர்வ சாதாரணமான ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அடிப்படை காரணமாகிவிட்டது.


எனவே, முதலில் நீதிமுறையை ஒழுங்குபடுத்தால், எந்த விதிமீறலையுமம் தடுக்கமுடியாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டிய தருனமிது. செயல்பட வேண்டியது தர்மம்.


idஇந்த வகையில், நியாயந்தான் சட்டம் என்பதை அடிப்படை தத்துவமாக எடுத்துக்கொண்டு, எனது சட்ட ஆலோசனைகளை ஆரம்பத்திலிருந்தே ஒழுங்குபடுத்த ஆரம்பித்ததன் விளைவே, எடுத்துக்கொண்ட கொள்கையில் கொஞ்சஞ்கொஞ்சமாக முன்னேற முடிந்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக, உங்க கருத்தென்ன என்பதை இதுவரை பதிவு செய்யவில்லையே என சில அன்பர்கள் வம்படியாக கேட்கிறார்கள். இப்படி உண்மையை எழுதி பலபேர்கிட்ட நான் திட்டுவாங்க வேண்டுமென்பதே, எனது கருத்தின்மீது அளவுகடந்த அன்புகொண்ட வம்பர்களது ஆக்கப்பூர்வமான ஆர்வமாக இருக்கிறது.


ஆமாம், ரமணா படத்தில் வருவதுபோன்று எல்லோரும் குடியேறிய பிறகு இச்சம்பவம் நடந்திருந்தால், விதிமீறலில் துணிந்து ஈடுபடுவோருக்கும், அதற்கு துணைநிற்போருக்கும் நல்லதொரு பாடமாக இருந்திருக்கும். 


ஆனால் பாவம், இதையெல்லாம் அறியாத எங்கிருந்தோ வந்த பற்பல அப்பாவி தொழிலாளர்கள் வாழ்வை இழந்து விட்டனர். நாமும் விசாரணையில் சிக்குவோமென, இத்தொழிலாளர்களை அழைத்து வந்தவர்கள் கூட, மக்கி மண்ணாகி விடட்டும் என்று, அன்று எத்தனைபேர் வேலை செய்தார்கள் என சொல்லமாட்டார்கள். அடையாளங்காட்ட பயந்து அநாதையாக விட்டு விடுவார்களே?!


(இ, உ)றுதியாக, இப்படியொரு தலையங்கமெழுதும்  இவன் எவ்வளவு கேவலமானவனா, வக்கிரபுத்தியுடையவனா இருப்பான் என இப்போது நீங்கள் நினைத்தால், அடுத்து இதுபோன்றதொரு சம்பவம் நடக்கும்போது, இதிலுள்ள உண்மையை உணர்வீர்கள்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)