No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, September 25, 2013

கிராமத்தில் ஓர் உச்சநீதிமன்றம்!


adjust-747319மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என நினைப்பது தவறு. தங்களின் தகறாறுகளை, மக்கள் தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எவ்வித ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது.


மேலும், எது நியாயம் என்பது தகறாரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே, அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமாக இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம் என்று, தாத்தா காந்தி 1909 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார்.


தாத்தாவின் ரத்தின சுருக்கமான இந்த வரிகள் எத்தனை எத்தனையோ விவகாரங்களை உள்ளடக்கியவை என்பதை இந்த ஆக்கம் கொஞ்சமேனும் தெளிவுபடுத்தும்.


மதுரைக்கு அருகில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாலமேடு கிராமத்தில், “பாலமேடு கிராமப் பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி” என்ற பெயரில், பதிவு செய்யப்பட்ட சங்கம் செயல்படுகிறது.


மும்மதங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் இக்கிராமத்தில் பிராமணர் தவிர, பதினெட்டு சாதிப்பிரிவு மக்கள் வசிக்கின்றனர். பதினோரு பேர் கொண்ட கமிட்டியில் அரசுப்பணி அல்லது அரசியல் சாராதவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


தலைவர், செயலாளர், பொருளாளர் மட்டும், முறையே கவுண்டர், தலித், நாடார் என்று சாதி அடிப்படையில் நியமிக்கப்பட, மற்ற எட்டு உறுப்பினர்களும் பிற சாதிகளில் இருந்து மறு சுழற்சி அடிப்படையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு முறை வாய்ப்பு கிடைக்காத சாதிக்கு, மறுமுறை நிச்சயம் வாய்ப்பு உண்டு.


இது தவிர, அந்தந்தச் சாதிக்கென சங்கங்கள் உண்டு. அச்சங்கம், அச்சாதியினருக்குள் நடக்கும் பிரச்சினைகளை மட்டும் தீர்க்கவேண்டும். வெவ்வேறு சாதிகளுக்குள் சண்டை எழுந்தால், இவ்விரு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துபேசி, சுமூகமான முடிவை எட்டுவார்கள்.


அப்படி எட்ட முடியாதபோது, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தீர்வுக்கு விடப்படும். அதன் தீர்வே இறுதியானது.


இதற்கு கட்டுப்பட்டு நடக்காவிட்டால், இக்கமிட்டியே சட்டப்படியான புகாரைக் கொண்டு செல்லும். நல்ல வேளையாக, அப்படியரு துரதிருஷ்டவசமான சம்பவம் இதுவரை நடக்கவில்லை.


சாதி, மதமல்லாத பொதுவானதொரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால், ஆன்றோர், சான்றோர், பெருமக்கள் என அனைவரும் அழைக்கப்படுகின்றனர். இவ்வூரைச் சுற்றியுள்ள இருபத்து ஒன்பது கிராமங்களில் இருந்தும் பிரச்சினை தீர்த்து வைக்க ஒப்படைத்தால், தீர்த்து வைக்கின்றனர்.


இக்கிராமத்தில் 05-10-1998 இல், காவல் நிலையமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மற்ற கிராம வழக்குகள்தாம் பதிவாகின்றவே தவிர, இக்கிராமத்து வழக்கெதுவும் பதிவாவதில்லை.


பிரபல அரசியல் தலைவர்கள் இறந்துவிட்டால், அக்கட்சியின் கொடி மட்டுமே அரைக்கம்பத்தில் நாடு முழுவதும் பறக்க விடப்படும். ஆனால், இக்கிராமத்தில் மட்டும் அனைத்து கட்சிக் கொடியும், அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். இது அக்கிராம மக்களின் அரசியல் ஒற்றுமையை குறிக்கிறது.


இதேபோல, உள் ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாத ஒரே சுடுகாடு. அதற்குப் பெயரும், சமத்துவச் சுடுகாடு. இவற்றையெல்லாம் 20-02-2009 அன்று, நானே நேரடியாக சென்று அறிந்தேன்.


மகாத்மாவின் கூற்று, எந்த அளவிற்கு உண்மையானது என்பது பாலமேடு கிராம மக்களிடம் இருந்து, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சங்கதியாகும்.


இவைகள் எல்லாம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்றாலும் யாரும் பொறிக்கவில்லை. போகிற போக்கில் நாமாவது பொறிக்கலாம் என்பதாலேயே இப்பதிவு.


மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் 2010 ஆம் ஆண்டில் வெளியான  நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற நூலிலிருந்து... 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)