சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொய்யரை கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் மீது, நீதிமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்ததாக பொய்யர்களின் தலைவர் மோகனகிருஷ்ணன் பதிவாளரிடம் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.
தாங்கள் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, சட்டப்படி வழக்கு பதிவு செய்து தனிப்படைக்கு தலைமை ஏற்று கைது செய்ய முயன்ற சக காவல் ஊழியரை, காவல்துறையே கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
பொதுவாக காவல்துறைக்கும், பொய்யர்களுக்கும் தீராத பகையும், பழிவாங்கும் படலமும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில், பொய்யர்களே காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். காரணம், காவல்துறை ஊழியர்களின் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால், அவர்களும் அரசுப் பொய்யர்களையே நம்பி இருக்க வேண்டி உள்ளதுதான்.
நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள் என்கிற மகாத்மா காந்தியின் கருத்து அரசுப் பொய்யர்களுக்கு முற்றிலும் பொருந்தாது.
ஏனெனில், இவர்கள் நீதிபதிகளின் மாமாக்கள். இந்த மாமாக்கள் மனது வைத்து ஒத்துழைக்கவில்லை என்றால், குற்றவியல் வழக்குகளில் நீதிபதிகள் சட்டத்துக்குப் புறம்பாக எதுவுமே செய்ய முடியாது.
இதனால், காவல்துறை தொடுக்கும் உண்மையான வழக்குகளில் கூட, குற்றவாளிகள் நீதிபதிகளின் மாமாக்கள் ஆன அரசுப் பொய்யர்களை சரிகட்டி விடுதலையாகி விடுகிறார்கள்.
காவல் ஊழியர்களுக்கு சட்ட விழிப்பறிவுணர்வு ஏற்பட்டால், அரசுப் பொய்யர்கள் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தாங்கள் பதிவு செய்யும் குற்ற வழங்குகளை தாங்களே ஏற்று நடத்தலாம். தக்க தண்டனையை வாங்கித் தரலாம். தவறு செய்யும் நீதிபதிகளை நம்மைப் போல வறு, வறு என வறுத்தெடுக்கலாம்.
இதற்கு குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 302(1) இன்படி, உதவி ஆய்வாளர் நிலைக்கு குறையாத உயர்நிலை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. 302(2) இன்படி, இதனை புகார் கொடுத்தவரே (பொதுமக்கள் எவரும்) அரசுப் பொய்யரை நீக்கி விட்டு, நமது பாணியில் வழக்கை நடத்த முடியும்.
கரூரைச் சேர்ந்த மருத்துவர் சுபா சுந்தரம் என்கிற நீதியைத்தேடி... வாசகர் 2001 ஆம் ஆண்டிலேயே, தனது கணவனுக்கு எதிரான தான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்த வரதட்சனை வழக்கை, சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடத்தி இருக்கிறார்.
இப்படி செய்ததற்கு முக்கிய காரணம், இவரது கணவரின் சகோதரர் அந்நீதிமன்றத்தில் கூலிக்கு மாரடிக்கும் ஒரு பொய்யர் என்பதால், அரசுப் பொய்யரை சரி கட்ட முயற்சித்ததே!
நீதிமன்ற வளாகத்திற்குள் யாரையும் கைது செய்யக் கூடாது என்று பொய்யர்களும், கொள்ளையர்களும் தங்களது இல்லாத சட்ட மற்றும் இஷ்ட நடைமுறையை வைத்திருக்கிறார்கள்.
ஏனெனில், இவைகள்தானே இவர்களின் / குற்றவாளிகளின் புகலிடம். இதே அற்ப காரணத்தை 2009 ஆம் ஆண்டில், உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறையின் தடியடியின் போதும் பொய்யர்கள் சொன்னார்கள்.
இதற்கு அடிப்படை காரணம் தாங்கள் பொதுமக்களின் கூலிக்கும், வரிக்கும் மாரடிப்பவர்கள் என்பதை உணர கூட போதிய பொது அறிவில்லாமல், நீதிமன்ற வளாகமும், நீதிமன்றமும் தங்களது பாட்டன், முப்பாட்டன் சொத்து என்று கருதுவதுதான்.
உண்மையில், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 77 இன்படி, கைது செய்வதற்கான பிடியாணையை, இந்தியாவின் எந்த இடத்திலும் நிறைவேற்றலாம் என்று சட்ட விதி தெளிவாக அறிவுறுத்தும் போது, பிடியாணையே தேவையில்லாமல் கைது செய்வதற்குரிய குற்றத்தை புரிந்த ஒருவருக்கும் பொருந்தும்.
மேலும், விதி 44 (2) இன்படி, நடுவரின் முன்னிலையில் உள்ள ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கலாம் என்கிற சூழ்நிலை இருந்தாலே அவரை தாமே நேரடியாக கைது செய்யலாம் அல்லது கைது செய்யுமாறு பணிக்கலாம்.
மொத்தத்தில், நீதிமன்றமோ அல்லது அதன் வளாகமோ கைது செய்வதற்கு தடை விதிக்கும் இடமல்ல. மாறாக, தாராளமாக அனுமதி வழங்குமிடம்.
ஆனால், நீதிமன்ற (மா, கோ)மாக்களோ நீதிமன்றங்கள் இந்தியாவின் எல்லைக்குள் இல்லை என்று கருதுகிறார்கள் போலும்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
பலி வாங்கும் படலம் நிறைவேறும் இடமே நீதிமன்றம். இதுவே குற்றவாளிகள் பதுங்கும் கூடாரமும்!
ReplyDelete