No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, September 24, 2013

விருதுகளின் விழுதுகளும்! பழுதுகளும்!!


விருதுகளின்  பழுதுகள்இந்தியத் தமிழன் ஒருவர் ஆஸ்கார் என்று சொல்லக் கூடிய உலகளாவிய அயல்நாட்டு விருதை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார் என்று சாதி, இன, மத பாகுபாடு இன்றி நாடே போற்றிக் கொண்டாடியது.


இந்தியர்கள் எல்லா துறையிலும் எந்த நாட்டவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை விஞ்ஞானம் இல்லாத அகஞானம், இம்சை தராத அகிம்சை என காலம் காலமாக உலகிற்கே நிரூபித்து வரும் நிலையில், ‘‘ஆஸ்கார் விருதை அரசு உட்பட அனைவரும் உயர்வாக நினைப்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை’’.


இந்தியாவில் மக்களின் மனதைக் கவராத இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என யாரும் இல்லை. சாதாரணமாக காமெடி நடிகர் நடிகைகளுக்கு கூட மக்களின் அமோக ஆதரவு இருக்கிறது.


சினிமாவைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒவ்வொரும் சாதிக்க வேண்டிய காலத்தில் சாதித்து சென்று இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு ஆதரவு தருகிறார்கள் என்பதாலேயே, பிறமொழிப் படங்களைக் கூட தத்தமது மொழிகளில் தயாரிக்கிறார்கள், நடிக்கிறார்கள்.


தத்தமது பழைய படங்களை கூட, புதிய தொழில் நுட்பத்தில் வடிவமைப்பு செய்கிறார்கள். ஆங்கிலப் படங்களை தத்தமது மொழிக்கு டப்பிங் செய்கிறார்கள். இதில், அந்தந்த மக்களின் புழங்கு மொழிகளை புகுத்துகிறார்கள்.
இவைகள் அவர்களின் திறமைக்கு மாற்று மொழிபேசும் மக்கள் கொடுக்கும் அங்கீகார விருது. இந்த வகையில், ஆங்கில மொழிப் படங்களுக்கு, இந்திய அரசு விருது கொடுக்கவில்லை என்றாலும், இந்திய மக்கள் கொடுத்துக் கொண்டுதாம் இருக்கிறார்கள்.


ஆனால், அயல்நாட்டு மக்கள் இப்படி இந்திய மொழிப்படங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை. இதற்கு காரணம், எதிலும் நாமே மேலானவர்கள் என்கிற எண்ணமே.


நமது சினிமாக்களுக்கு பெரும்பா(லா, ழா)ன மக்களின் அங்கீகாரத்தைப் பொறுத்துதாம் விருதுகள் முடிவு செய்யப்படுகின்றன என்பதால், மக்களே விருதுகளின் விழுதுகள்.


ஆலமரம் விழாமல் தாங்கி நிற்கும் விழுதுகளை தாங்க, விழுதுகள் தேவையில்லை. தேவைப்பட்டால் உண்மையில் அதற்கு பெயர் விழுதல்ல, பழுது!


எனவே, மக்களின் உடனடி அங்கீகாரமே ஆல்போல் வளர்ந்து விட்ட உங்களின் திறமைக்கு விருது. இதன் பிறகு அரசு மட்டுமல்லாது எவர் தரும் விருதுகளும், பழுதுகளே!!


ஏனெனில், விருது தரும் அரசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற அமைப்பே. இப்படி அங்கீகாரம் வழங்கியதில் நீங்களும் ஒருவரே என்னும் போது, அவ்விருதை ஏற்பது எப்படி புகழ்ச்சியாகும் என சிந்திக்க வேண்டாமா?


மருது சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்து சாதித்தது போல,


ஒற்றுமையாக இருக்கும் போது, இவர்கள் அவர்களுக்கு விருது கொடுப்பதும், சில காலங்கள் கழித்து அவர்கள் இவர்களுக்கு மறுவிருது கொடுப்பதும்,


பின் இவர்களுக்குள் சச்சரவு ஏதும் ஏற்பட்டு விட்டால் விருது வாங்கியது தவறு என உணரும் வெகுசிலர் திருப்பி தந்து விடுவேன் என திருப்பித்தர மனமில்லாமல் சொல்வதும்,


கொடுத்தவர்களும் வெளிப்படையாக கொடு என கேட்க முடியாமல், உனக்கெல்லாம் என் தலைவன் பெயரில் விருது கொடுத்தேன் பார் என மனம் குமுறுவதும், அவ்வப்போது நிகழும் (வா, வே)டிக்கையான விசயங்களாகி விட்டன.


உண்மையில் தன்னிகரில்லாத தலைவர்கள் எவரும் தன் புகழைப் பாடச் சொல்லவோ, தன் பெயரில் விருது கொடுக்கவோ சொல்லவில்லை. மாறாக, தான் ஆற்றிய சமூகப்பணியை ஆற்றுங்கள் என்றே சொன்னார்கள்.


உங்களுக்கு தெரிந்து விருது கொடுக்குறவங்க யாராவது இருந்தா எனக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்யுங்கள் என சிறிதும் வெட்கமில்லாமல் என்னிடம் கேட்டவர்களும் உண்டு.


பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது பழமொழி.


ஆக, பூ தனியாக இருந்தாலும் மணக்கவே செய்யும். ஆனால், நார் மணக்காது. இந்த எதார்த்த உண்மையை, ‘நாரோடு சேராத பூ மணக்காது என்று குதர்க்கம் பேசும் வகையில், விருது வாங்கவில்லை என்றால் நம் திறமைக்கு மதிப்பில்லை’ என்கிற குறுகிய நோக்கில் யார் கை, காலை பிடித்தாவது குறைந்தது பத்து விருதுகள் வாங்கி விட வேண்டுமென அலைகிறார்கள்.


இதனால், தங்களின் தனித்துவத்தால் இயல்பாகவே பூவாக விளங்குபவர்கள் கூட,


விருது என்னும் நாருடன் சேர்ந்தால் இன்னும் அலங்காரமாக மணக்கலாம் எனக்கருதி,


நாரால் கட்டப்பட்ட பூ இறுதிவரை அந்நாருக்கு அடிமையாகி பல்வேறு காரியங்களில் பயன்படுத்தப் படுவதால் நாறி விடுவது போல,


விருதுக்கு ஆசைப்பட்டவர்கள் அவ்விருதுக்கும், அவ்விருதை வழங்கிய அண்ணாருக்கும் அடிமையாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்பட்டு,


இதில், நீயா நானா என சச்சரவு வரும் போது, என்னை விழாவிற்கு அழைக்க வில்லை, என் பெயரை எதிலும் சேர்க்க வில்லை, விழாவில் மதிக்க வில்லை, முன் வரிசையில் அமர அனுமதிக்கவில்லை என பல்வேறு விதங்களில் நாறி விடுகிறார்கள்.


இவைகள், பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதன், உண்மையான கருப்பொருள் என்ன என்பதை ஆராயாமல், அப்படியே அர்த்தம் எடுத்துக் கொண்டதால் வந்த வினையே, இந்நாற்றங்கள்!


எக்குணத்தவர்களோடு சேர்கிறோமோ, நாமும் அப்படியே ஆவோம் என பூவுக்கும், நாருக்கும் உள்ள உண்மைப் பொருளை விளங்கி கொண்டிருந்தால், விருது என்றால் என்னவென்பது விளங்கியிருக்கும்.


தன் ஒவ்வொரு படைப்பிலும், சிறப்பு கவனம் செலுத்தி ஆராய்ந்து படைத்திருப்பதாக சொல்லும் படைப்பாளிகள் கூட, விருது விசயத்தில் மட்டும் விலகிப் போவது, ஏனோ... தானே என்கிற எண்ணமோ!


இன்று மணப்பது, நிச்சயம் ஒருநாள் நாறும். இது இயற்கையின் விதியல்ல; செயற்கை மற்றும் சேர்க்கையின் விதி என்பதை இனியாவது ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)