நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, September 30, 2013

வாசகர்களை வறுத்தெடுப்பது எப்படி?


albert-einstein5வாசகர்களில் (வெகு சிலர்) சும்மாவே நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என பீலா விடுபவர், சாதனையை செய்து விட்டு சொல்பவர், செய்த சாதனையை கூட சொல்லாதவர் என மூன்றாக பிரிக்கலாம். 


இதில் பெரும்பாலும், மூன்றாவது வகையினரை தவிர, மற்ற இரு வகையினரும், நான் இவ்வளவு தூரம் சாதனை புரிய காரணமே நீங்கதாம், உங்க சட்ட விழிப்பறிவுணர்வுதாம் என்பார்கள். இதிலும், பீலா பார்ட்டிகளோட தொல்லை தாங்க முடியாது.


அவர்களுக்கு ஒரே வார்த்தையில் நான் சொல்வது, ‘எல்லா வாசகர்களும் சாதித்து விடுவதில்லை. அப்படியரு சூழ்நிலை வரும்போது, அதற்கு நான் பொறுப்பேற்க தயார். மற்றபடி, நீங்கள் நிகழ்த்திய சாதனைகளுக்கெல்லாம் நீங்களே பொறுப்பு’ என்பதே!


படிக்கும் எல்லா வாசகரும் பக்குவப்பட்டு விடுவதில்லை என்பதும், பக்குவப்பட்டவர்களே பலனை அடைகிறார்கள் என்பதுதானே எதார்த்த உண்மை!


நமது சட்ட விழிப்பறிவுணர்வு எந்த அளவிற்கு வாசகர்களிடம் சென்றிருக்கிறது, சட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து முடிவை அறிவிக்க வேண்டும் என நினைத்தோம்.


பொதுவாக கருத்துக்கணிப்பு என்பது வெளிப்படையாக நடத்தப்படுவதால் மிகமிக துள்ளியமானதாக, உண்மை நிலையை உணர முடியாமல் போய் விடுகிறது. ஆதலால், இக்கருத்துக் கணிப்பை மாற்று முறையில் செய்ய வேண்டும் என எண்ணினோம்.


புகழ் பெற்ற தமிழ் திரைப்படங்களில் ஒன்று திருவிளையாடல். மனிதனின் வாழ்க்கைக்கு அவசியத் தேவை எது ‘‘கல்வியா, செல்வமா, வீரமா’’ என போட்டி வைத்து இம்மூன்றுமே அவசியத் தேவை என்பதை உணர்த்துவார்கள்.


வாசகர்களை வறுத்தெடுத்து, பன்படுத்தும் சட்டத் திருவிளையாடலுக்கு ‘‘கடமையா!! உடமையா! மடமையா?’’


2009 எப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்களின் தினம்.


இதற்கு முந்தைய வாரம்தான், சேலத்து பொய்யர்களை வறுத்தெடுத்திருந்தோம். இதனை இன்று உண்மையாக்கி, வாசகர்களின் சட்டத்தெளிவை பரிசோதித்து விடுவது என்று முடிவு செய்தோம்.


ஆதலால், ‘சேலத்து பொய்யர்கள் கொடுத்த புகாரின் பேரில், என்னை சென்னையில் கைது செய்து, சேலத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும், ஆதலால் என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், தொடர்பு கொண்டால் நீங்களும் விசாரணைக்கு ஆளாக நேரிடும்’ என்ற குறுஞ்செய்தியை தேர்வு செய்திருந்த பத்து வாசக பெருமக்களுக்கு அனுப்பினோம்.


அவ்வளவுதான், கைது விசயம் நல்லாவே பத்திகிச்சு.


முதலில் தொடர்பு கொண்டது தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த இன்பம். நானும் காவலரைப் போல் மாற்றுக்குரலில் ஏடாகூடமாகவும், மரியாதை இல்லாமலும் பேச தயாரானேன்.


இன்பம்: இனிய காலை வணக்கத்தை உரித்தாக்கி கொள்வது இன்பம்.


வாபா: உனக்கு யாரு வேணும்?


இன்பம்: நீங்க வாரண்ட் பாலா சார்தான?


வாபா: இல்லை. அவரை விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். நீ என்ன அவனோட நண்பனா?


இன்பம்: இந்த நம்பர் கும்பகோணம் இல்லியா? சாரி சார். ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார்.


என்ன இன்பம்... சட்ட விழிப்பறிவுணர்வால் ஊர்ல அதைச் செய்தேன், இதைச் செய்தேன்னு சொல்லுவீங்க. என்னாத்த செய்திங்களோ...


அடுத்து திருவண்ணாமலையில் இருந்து கந்தசாமி... வணக்கம் சார்.


வாபா: சொல்லுயா, நீ எந்த ஊர்லேந்து பேசுற. உன்பேர் என்ன? அட்ரச சொல்லு...


சாமி: பாலா சார் இல்லிங்களா?


வாபா: நீ என்ன அவனோட கூட்டாளியோ? உன் அட்ரச சொல்லு, முதல்ல...


சாமி: இல்லிங்க சார் என்று கூறி விட்டு தன்னோட பேரு, ஊரு எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொல்றார்.


வாபா: என்ன பேர மாத்தி சொல்லுற? செல்லுல உம்பேரு கந்தசாமின்னுல்ல வந்தது என்றதுமே கட்.


என்ன கந்தசாமி... தெரிந்த தகவலை வேண்டுமென்றே மாற்றி சொல்வது சட்டப்படி குற்றம் இல்லையா... என்னாத்த சட்டம் படிக்கிறீங்களோ?


அடுத்ததாக சேலத்தில் இருந்து இரண்டு மனோகர்கள். முதலில் மனித உரிமைகள் பேசும் மனோகர்...


மனோ: வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?


வாபா: பாலா விசாரணையில இருக்காரு. நீ எந்த ஊர்லேந்து பேசுர? அட்ரச சொல்லு?


மனோ: யோசித்து யோசித்து தவறான சென்னை முகவரி ஒன்றை சொல்கிறார்.


அடுத்ததாக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் மனோகர்...


மனோ: வாரண்ட் பாலா சார் இருக்காங்களா? (நான் கைதாகிட்டேன் கன்ஃபார்ம் பன்னிட்டார்)


வாபா: நீ என்ன அவனோட நெருங்கிய கூட்டாளியா?


மனோ: ஆமாம், இல்ல இல்ல... சும்மா தெரியும்.


வாபா: எங்கேந்து பேசுற?


மனோ: சேலத்தில் இருந்து... அத்தோடு கட்.


அடுத்ததாக நாமக்கல்லில் இருந்து மனித உரிமை மதியழகன்... (நான் உண்மையிலேயே கைதாகியிருக்கேன்னு நினைத்து... அப்படி போடுங்க, இப்படியும் நடக்கும்னு நம்பனும்)


மதி: வாரண்ட் பாலா சார்கிட்ட பேசனும்.


வாபா: நீ யாரு, எங்கே இருந்து பேசுற?


மதி: மனித உரிமை இயக்கம் நாமக்கல்லில் இருந்து பேசுறேன்.


வாபா: யோவ், நீ யாரா இருந்தா எனக்கென்ன?


மதி: என்ன சார் மரியாதை இல்லாம பேசுறீங்க? (அட, தைரியம் பரவாயில்லியே)


வாபா: என்ன மரியாதையா பேசுங்குற... உன் பேரு என்னான்னுதான கேட்டேன்?


(உண்மையில், பேர மட்டும்தான் சொல்லனும், என்ன பண்ணுறீங்கன்னு கேட்டாதான், பண்ணுற வேலைய சொல்லனும்) 


மதி: மதி, நாமக்கல்லில் இருந்து பேசுறேன். (இப்ப சரியாயிடுச்சி பாருங்க!)


வாபா: சரி, விசாரிச்சிகிட்டு இருக்கோம். நீ அப்புறமா பேசு...


இதுக்கு மேல என்ன பொய் பேசுறதுன்னு தெரியல. வார்த்த வேற வர மாட்டேன்னு அடம்பிடிக்குது. தொண்ட வேற வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி. பழக்கம் இல்லாததுதான் காரணம்.


ஆனால், நான் எதிர்பார்த்தபடி சட்டக் கடமையை ஆற்றும் இந்திய குடிமகன் பேசுரேன்னு சொல்லி கதிகலங்க வைப்பாங்கன்னு பார்த்தா, ஒருத்தர் கூட சொல்லல.


இப்படி தொடர்பு கொண்டவர்களின் பலரது தொடர்பை, மரியாதைக் குறைவாக பேச வேண்டிய காரணத்தினாலேயே ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம், சூழ்நிலைக்கு தக்கவாறு மரியாதைக் குறைவாக பேசியதை பொறுத்துக் கொள்ள கூடியவர்கள்.


இப்படி ஒரு பக்கம் தொடர்பு கொள்ளாதீர்கள் என்று சொல்லியிருந்தும் கூட, விசாரணைக்கு பயப்படாமல் பலர் தொடர்பு கொண்டது அவர்களின் சட்டக் கடமையை உணர்த்தியது.


அழைப்பை எடுத்ததுமே குரலை மாத்தி பேசி எல்லோரையும் ஏமாத்துற மாதிரி என்னை ஏமாற்ற முடியாது என்றது, சேலம் கதிர்வேல். ( அட்ரா சக்க... இவர் ஒரு தொழிற்சங்கவாதி) 


முட்டாள் தினம் அதுவுமா ஏமாற தயார் என்றாலும், வாரண்ட் பாலா கைது என்று ஏமாற தயாரில்லை என்று பலர் கூறியுள்ளனர். சபாஷ்! ஆனாலும், ரொம்ப ஓவர் கான்பிடன்ட்!! 


அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரு கைது செய்ய என்றது ஓசூர் நாகஜோதி பாபு. (சரிதான்!)


கைது செய்த காவலர்கள் இவர்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடுறாங்களோ... நமக்கு பார்க்க கொடுத்து வைக்கலியே என்பது நாமக்கல் தனம். (அய்யோ பாவம்!)


இவரைப்பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்.


ஒருசிலர், மூன்று வாரண்டை ஐந்து வருடமாக வச்சிகிட்டு அலையுற அவர இந்த காலத்துல மட்டுமில்ல எந்த காலத்திலேயும் கைது செய்ய முடியாது. அப்படி செய்தால் நீதிபதிகளுக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம்.


சரிதான், எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?


காந்தி சொன்னதைத்தான் நான் சொன்னேன் என்பதால் காந்திதான் முதல் குற்றவாளி. முதலில் அவரை கைது செய்து விட்டு, என்னை கைது செய்ய வா என்பார் என்பது போடி ராஜசேகரன்.


சாட்சியத்தோட பேசுரதுல ரொம்பவே தெளிவாயிருக்காரு பாருங்க...


ஒருவேளை கைது செய்திருந்தால் என் சொத்து அத்தனையையும் சூரிட்டியா கொடுத்து பிணையில எடுப்பேன் என்றது ஈரோடு போக்குவரத்து கழக தொழிற்சங்கவாதி குணசேகரன்.


சபாஷ்! இப்படித்தான், எதுவானாலும் பரவாயில்லைன்னு தெளிவா இருக்கோணும்.


சரி, வாசகர்கள் இப்படி இருக்கும் போது, வாசகர் மற்றும் வாசகரில்லா பொய்யர்கள் எப்படி இருக்காங்க என்கிற சோதனையில்...


வாசகர்: வாரண்ட் பாலாவ கைது பண்ணிட்டாங்க பெயில்ல எடுக்கனும்...


பொய்யர்: கவலைப்படாதிங்க. பெயில்ல எடுத்துடலாம். என்ன.. கூடுதல் செலவாகும்.


இதுதான், சந்துல சிந்து பாடுறதுங்கிறது... ஏமாத்துறதுல என்னா திறம!


வாசகர்: அதுக்கென்ன பிளாங் செக்கே தர்றேன். நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்குங்க... ஆனா, இன்னைக்கே வாரண்ட் பாலாவ பெயில்ல எடுத்தாகனும்னு ஒத்தக்காலில் நிக்க...


நம்மைப்பற்றி நன்றாக அறிந்த பொய்யரின், கூட்டாளி பொய்யர்...


கூபொ: அவன் நம்மளைப்பத்தி எவ்வளவு மோசமா எழுதுறான். அவன பெயில்ல எடுப்பியா நீன்னு கேட்க, யாரு எது செஞ்சாலும் அத ஆதரிக்கிறதுதானே நம் தொழிலுன்னு சொல்லி ரெண்டு பேரும் மல்லுக்கு நிக்கிறாங்க...


பொய்யர்கள் நினைக்கிறபடி இவ்வளவு மோசமா எழுதுற நம்மகிட்டையே நடந்துகிற யோக்கியதை இதுன்னா, நீங்க மாட்டினா... யோசிச்சு பாருங்க!


இடையில் நாரதராக வந்த சேர்ந்த நம் வாசகியான பெண் பொய்யர்


பெபொ: ஏம்பா தேவையில்லாம நீங்க சண்டப் போட்டுக்குறீங்க... ஜாமீன் எடுப்பது எப்படின்னு புத்தகம் எழுதின அவரு, எல்லோரையும் ஜாமீன்ல எடுப்பாரு... 


ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க... நல்லாத்தான் சொல்லுறீங்க... ஆனா, அந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆளாக விரும்பல.


பெபொ: அவங்களோட புத்தகத்தை விக்கிறத்துக்காக புரளிய கிளப்பி விட்டுகிட்டு அலையுறாங்க... என்பது கும்பகோணத்தில் மூன்று பொய்யர்கள் மற்றும் வதந்தியை கிளப்பி விட்ட வாசகருக்கு இடையில் நடந்த உரையாடல்.


அதான பார்த்தேன். போயும் போயும் யார, யாரை ஏமாத்தப் பாக்குறீங்க... ஊர்ல ஆரம்பிச்சு உலகத்தையே பொய்திறமையில ஏமாத்திகிட்டு இருக்கிற எங்களையே ஏமாத்த பாக்குறீங்களா...


பொய்யர்கள் புத்தகத்த விக்க கிளப்பி விட்ட புரளி போலன்னு, நீங்க யாராவது நினைத்தால், அதற்கு நாங்க பொறுப்பல்ல.


வாசகரரோட, பொய்யர்களோட நிலைகளை பாத்தாச்சு, போலீசோட நிலை என்னான்னு பார்க்க வேண்டாமா...


தான் காவல்துறையில் பணியாற்றிய போது, தனக்கு கீழ் பணியாற்றி பின் சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்தவரை பிடித்து பல விதங்களில் லெப்ட் ரைட் வாங்கி விட்டார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுற்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீ.செ.கருப்பண்ணன்.


இவர், உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக உயர்ந்தவர். தான் தொடுக்கும் வழக்குகளில் அரசுப் பொய்யர்கள் மற்றும் கொள்ளையர்கள் ஏடா கூடமாக எதாவது செய்தால், அவர்களை ஒருவழி பண்ணிவிடுவார். நமது நீதியைத்தேடி... நூல்களை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து வருபவர்.
கொடுமையிலும், கொடுமை என்னான்னா, காந்தியின் இந்தியத் தன்னாட்சி நூலை வைத்திருப்பதே குற்றம் போல என்று நினைத்த ஒரு வாசகர், அதனை தீயிட்டு எரித்தே விட்டார் என்பதுதாம்.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, September 29, 2013

வக்கீல்களை வறுத்தெடுப்பது எப்படி?


2009 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் இந்திய சுயராஜ்யம் நூலுக்கு நூற்றாண்டு விழா. பலருக்கும் தெரியாமல் இருந்த வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து காந்தியின் வெறுப்பு கருத்துக்களை நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் பரபரப்பாக பரப்பிய நேரம். 

அதாவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொது நூலகங்கள், காவல் நிலையங்கள், சிறைசாலைகள் மட்டுமில்லாது, நீதிபதிகள் அத்தனை பேருக்கும் பல புண்ணிவாவாங்க கொடுத்த பங்களிப்பு நிதியில நன்கொடையாகவே கொடுத்தாச்சு!  [caption id="attachment_390" align="alignleft" width="219"]நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்[/caption]
சேலத்தில் பி.ஆர்.ஜெயராஜன் அப்படீன்னு ஒரு சட்டப்புளி. சண்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான குப்பை நூல்களை தீர்ப்புகளில் இருந்து காப்பியடித்து எழுதுபவர். ஆதலால், இவரைத் தெரியாத பொய்யர்களே, வக்கீல் தொழில்ல இருக்க முடியாது.

இவரது வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகள் என்கிற புத்தகத்தில், "வக்கீல்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகள் (என்னமோ கெவுருமண்டு கூலி வாங்குறாப்புல, கௌரவப் பேரு) என்றும், வக்கீல்கள் இல்லையென்றால் எதுவுமே நடக்காது (உண்மைதான், நீங்க இல்லேன்னா நாட்டுல எந்த குற்றமும் நடக்காது) என்பன போன்று பல பீலாக்கலை அவிழ்த்து விட்டிருப்பார்".

எல்லா வக்கீல்களுமே பேச்சளவில் பீலா பார்ட்டிகள்தாம். அதனால்தாம், பொய்யர்கள் என்கிறேன். மகாத்மாக்கள் தொழில் ரீதியாக விபச்சாரிகள், ஈனப்பிறவிகள் என்கிறார்கள். ஆனால், இவரோட பீலா சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும்.

இதைப் படிக்கும் சண்டக் கல்லூரி மாணவர்களுக்கு, நாம்தாம் உலகத்தையே உருட்டி, பெறட்டி கொண்டு இருக்கிறோம் (அவ்வப்போது அவங்களுக்குள்ளியே உருட்டு கட்டையால உருட்டி, பெறட்டி அடிச்சிக்கிறாங்கல்ல... அத மனதுல வச்சிதான் சொல்றாரு) இல்லையென்றால் எதுவுமே நடக்காது (நீங்க இல்லேன்னா என் பொழப்பு நடக்காது) என்று, எதிர்கால பொய்யர்களுக்கு (எ, வெ)றியூட்டுவார்.

இவரு (எ, வெ)றியூட்டுறத நிப்பாட்டனும்னா, மொதல்ல இவருக்கு நம்ம பாணியில (எ, வெ)றியூட்டனும் இல்லியா... அதனால, இவருக்கு சட்ட அறிவுக்களஞ்சியம் நூல் ஒன்றை வாசகர் ஒருவர் அனுப்பி வைத்து, காந்தி இப்படி சொல்லியிருக்காரா என (நா, தே)டிப்பிடித்து பார்த்து வறுத்தெடுக்க ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி...

அய்யா, நான் உங்களின் தீவிர வாசகன். உங்க புத்தகங்கள படிச்சிதான், ஓரளவுக்கு சட்டத்தையே தெரிஞ்சிகிட்டேன் என்பதால் உங்கமேல, எனக்கு அவ்வளவு மதிப்பு மரியாதை உண்டு.  ரொம்பத்தான்! 

‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்கிற புத்தகத்துல மகாத்மா காந்தி வக்கீல் தொழிலப்பத்தி ரொம்ப கேவலமா சொல்லியிருக்கார்னு எழுதியிருந்துது.

அதப்படிச்ச எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்ததுடுச்சி...

நீங்க எவ்வளவோ புத்தகம் எழுதியிருக்கீங்களே... உங்களுக்கு தெரியாம இருக்காது.

அதான் உண்மை என்னான்னு உங்களை கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு அந்த புத்தகத்தையே நேத்து அனுப்பி வச்சேன்.

படிச்சிங்களான்னு’ நல்லாவே (எ, வெ)றியூட்டிட்டார். 

பத்த வச்சிட்டியே பரட்ட... 

பீலா பார்ட்டிக்கே பீலா விடுறதுங்கிறது இதுதாம் போல...

அதைப் படித்ததும் டென்சனாகி, "காந்தி மகான் தான் எங்களுக்கெல்லாம் வழிகாட்டும் தெய்வம். அவரு சத்திய சோதனைன்னுதானே புத்தகம் எழுதுயிருக்கார்". மற்றபடி, அவரு இப்படியெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.

காந்தி போர்பந்தர் என்னும் சிற்றூரில் பிறந்தார். அரிச்சந்திரா நாடகம் பார்த்தார். அன்று முதல் பொய் பேசுவதில்லை என்று முடிவெடுத்து, பொய்யரானார் (வக்கீலானார்). சுதந்திரம் வாங்கித்தந்தார். அவ்வளவுதானே நாம அவரப்பத்தி நம்ம பாழாப்போன கல்வித் திட்டத்துல படிச்சது. இததானே அவரும் படிச்சிருப்பார்.

போர் பந்தர் என்பது, நூறு வீடுகள் உள்ள சிற்றூர் அல்ல. அந்த காலத்திலேயே பல்லாயிரம் மாட மாளிகைகளை கொண்ட, போர்பந்தர் ஸ்டேட். அதாங்க இப்போ மாநிலம்னு சொல்லுறது போல, அப்ப மாகாணம். துறைமுகம் இருக்குன்னா பார்த்துக்கோங்க.

போர் பந்தரில் பிறந்த காந்தி, "போரே கூடாது (போரால் அழிக்க முடியுமே ஒழிய சேர்க்க முடியாது) என்றார்".

பொய் பேசக் கூடாது என்று முடிவெடுத்து, "பொய்யர்களின் தொழிலிலும் உண்மையே பேசினார்".

தவறு செய்தவர்கள் தன் கட்சிகாரர்களாகவே இருந்தாலும், "அதனை நீதிபதியிடம் எடுத்துரைத்து தண்டனை வாங்கி தந்தார்". 

இதற்கு இலக்கணமாக அவமானம் என்பது, ‘‘குற்றம் புரிவதில்தாம் இருக்க வேண்டுமே தவிர, அக்குற்றத்துக்கான தண்டனையை அனுபவிப்பதில் இருக்க கூடாது’’ என்றார்.

இதுபோன்ற மகத்தான செயல்களாலேயே, "மகாத்மா என்று மக்களால் அழைக்கப்பட்டார்".

ஆங்கிலேயர்களின் சட்டத்தை, அவர்களது நாட்டுக் சென்று படித்து, "அச்சட்டத்தின் வழி நின்று அகிம்சை முறையில் ஆங்கிலேயர்களுக்கு இம்சை கொடுத்ததால், அவர்கள் இந்தியாவை விட்டு விட்டு, இரவோடு இரவாக தப்பியோடி விட்டனர்" என்கிற எதார்த்த உண்மையை எழுத வேண்டும்.

 சரி, நம்ம வறுவல் விசயத்துக்கு வருவோம்.

இப்படியெல்லாம் எழுதின வாரண்ட் பாலா மேல வழக்கு போட்டு, அவன உண்டு இல்லைன்னு பண்ணுறேன்னு சொல்ல...

வாசகரோ இந்திய சுயராஜ்யம் நூலில் 11 வது கட்டுரைன்னு கடைசியில சொல்றாரே, அதப் பாத்திங்கன்னா உண்மை தெரிஞ்சிரும்ல என்று மீண்டும் உசுப்பேத்தவே, சரி என்று கூறி விட்டு, தனது கன்று குட்டிகளை (பயிற்சிக்கு வந்துள்ள பொய்யர்களை) விட்டு, புத்தகத்தை அலுவலம் முழுவதும் தேடியும் அகப்படல.

தெய்வத்தோட புக்க வாங்கி வெச்சிருந்தாதானே அகப்பட...

மறுநாள், சேலத்து பொய்யர்களுக்கெல்லாம் இந்த தகவல் பத்திக்கிச்சு. ஒரு பொய்யர் கூட, காந்தி சொன்னதாக சொல்லுறத நம்பல. சேலத்து சட்டப்புளியே நம்பாத போது, எலிகள் எல்லாம், எளிதில் நம்பிடுமா என்ன?

உண்மையை நம்புவதா அவுங்க தொழிலு தர்மம்...

இந்தியாவுல இருக்கிற வக்கீல்கள், நீதிபதிகள் மற்றும் காந்தியவாதிகள் உட்பட யாருக்கும் தெரியாது இருந்த ரகசியம் (தெரிந்தவர்கள் யாராவது இருந்திருந்தா, பரப்பாமல் பாதுகாத்ததாலும் கூட ரகசியமே) வெளி வந்ததாலேயும் நம்ப முடியல.

அடுத்த நாள் சனிக்கிழமை, கோர்ட்டு வேற லீவா போச்சு. சுயராஜ்யம் நூலை சேலத்தில் எங்கு தேடியும் கிடைக்கல. ஆனாலும் அதுக்குள்ள, என்னைய இப்படிப் பண்ணலாம், அப்படி பண்ணலாம்னு, ஆளாளுக்கு கூட்டம் கூட்டமா ரூம் போட்டு (யோ, பே)சிக்கிறாங்க. தெருவுலியோ, வீட்டுலியோ நின்னு பேசினா, எல்லோருக்கும் வதந்தியாகி, வக்கீல் தொழிலே வாந்தியாயிடுமே?

சரி, சட்ட அறிவுக்களஞ்சியத்துல சொல்லியிருக்கிற மதுரை காந்திய இலக்கிய சங்கத்திற்கே போய் வாங்கிடலாம்னு (எங்கும் கிடைக்காதுன்னு நன்னா தெரிஞ்சிதான் நானே காந்திய இலக்கிய சங்கத்தை குறிப்பிட்டுள்ளேன்) பார்த்தா, அடுத்த நாள் ஞாயிறா போச்சு.

அதனால என்ன, வாரண்ட் பாலா புலி வால புடிச்சிட்டான். இருக்கிற வால புடிச்சிருந்தா கூட பரவாயில்லை. இல்லாத வால புடிச்சிட்டான். எப்படி இருந்தாலும், திங்க கெழம நூலை வாங்கினதும் அவன் கதை சேலத்துல நாற போகுதுன்னு, ‘நானென்னவோ நடிகை குஷ்பு போல அழகா இருப்பேன், வர வச்சு பக்கத்துலியே பார்க்கலாம்கிற விபரீத ஆசையில' என்மீது வழக்கு போட ஆளாளுக்கு மனு தயாரிச்சிட்டாங்க?

என்னமோ உத்திர புத்திரன் தொழில் போல, நம்ம தொழிலுக்கு இப்படியரு கேவலமா என்று மூணு நாளா டென்சனாகி, ஒழுங்காக சாப்பிட முடியாம, டென்சன குறைக்க அப்பப்ப டீய, டீய குடிச்சி தூக்கம் கெட்டு, நைட்டோட நைட்டா ரெண்டு பேரு மதுரைக்கு போயி, விபச்சார கவலைய மறக்க லாட்ஜில லைட்டா சரக்கு போட்டும், தூங்க முடியாம, காலையிலேயே காந்திய இலக்கிய சங்கத்துல, எப்படா கதவ திறப்பாங்கன்னு காத்து கிட, வாங்கி படிச்சா...

பாலா, நம்மல போல பீலா உடல... அவரு சொன்னத தில்லாவும், தூளாவும் தெளிவா தொகுத்து ஒழுங்குபடுத்தி சொல்லியிருக்கான்னு தெரிஞ்சதும், அவங்களோட அத்தனை பில்டப்பும் புஸ்வானம் போல, ஓரிரு நிமிடங்களில் எல்லாம் புஸ்சுன்னு போயிடுச்சி.

இவ்வளவு வெறியையும் சட்டம் படிக்கிறதுல காட்டியிருக்கனும். நாம என்ன தொழில் செய்யிறோம் அப்படீன்னு கொஞ்சம் யோசித்து பார்த்தா, உலகிற்கே தெரிகிற உண்மை உங்களுக்கு விளங்காதா... பொய்யிலேயே ஊறிப்போய், நாறி நாற்றமெடுத்து கிடந்தா இப்படித்தாம் எதையுமே நம்ப முடியாது.  ஆனாலும், இப்படித்தாம் அற்ப விசயத்துக்கு கூட அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம்னு பெரிசா பில்டப் காட்டிட்டு, யாரும் எதிர்பார்க்காத வகையில் கை விட்டுடுவாங்க.  அவுங்கல மட்டும் சொல்லல.

உங்களையும் சேர்த்துதாம் கைவிட்டுடுவாங்கன்னு சொல்லுறேன். ஆனா, அதுக்குல்ல உங்க கிட்டேந்து சம்பாதிக்க வேண்டியத சம்பாதிச்சி புடுவாங்க (பிடுங்கி புடுவாங்க).

இவ்வளவு நடந்தத்துக்கு அப்புறமும், தொழில் நெறிமுறைகள் நூல்ல விட்டிருந்த பீலாக்கலை எல்லாம்  திருத்தி எழுதினாரான்னு தெரியாது. ஆனால், ஒவ்வொரு முறை படிக்கும் போதும், மனது உறுத்தும்ல...

தாத்தாவோட இந்திய சுயராஜியத்துக்கு இப்பேல்லாம் ரொம்பவே மதிப்பு அதிகமாகிடுச்சி.

2004 ஆண்டுல அச்சடிச்ச ஆயிரம் புத்தகம் கூட 2008 வரை, விற்பனையில் இருந்திச்சு. ஆனா, 2009 நூற்றாண்டு விழாவுல இருந்து இரண்டாயிரம், இரண்டாயிரமா அச்சிட்டாலும் கூட, ஆறு மாதத்துகுள்ள காலியாகிற அளவுக்கு, யாரோ ஒரு சிலர்தாம் ஒன்னு, ரெண்டு வாங்குறாங்களாம். மத்தவங்க எல்லாம் மொத்தமாகத்தாம் வாங்குறாங்களாம்.

அதனால, அப்பப்ப அச்சடிக்கிறோம். திடீர்னு ஏனிப்படின்னு தெரியல அப்படீன்னார், அப்பாவியாக அதன் நிர்வாகிகளில் ஒருவரான திரு.ராமதாஸ். அப்புறம்தான், எல்லா தாத்தாவும் பேரனுக்கு பணத்த சம்பாதிச்சு வெச்சிட்டு போவாங்க. அதனால, அது அவங்க குடும்பத்தோட நின்னு போயிடும்.

ஆனா, காந்தியோ நமக்கு தேவையான கருத்துக்களை வெதச்சி வச்சிட்டு, இதவச்சி சுயமா பொழச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிருக்கார். அதனாலதானோ என்னவோ, நாம அவருக்கு பணம் சம்பாதிச்சி கொடுக்குற நெலம ஆயிடுச்சுன்னு, நடந்ததை எல்லாம் விளக்கமா எடுத்துச் சொன்னேன்.

கேர் சொசைட்டியில இருந்து கூட நீதியைத்தேடி... புத்தகங்களை வாங்குற ஒவ்வொருவருக்கும் இதன் ஒரு தமிழ் பிரதிய சேர்த்து அனுப்புவாங்க. இதோட ஆங்கில பதிப்பு தேவைப்படுறவங்க  இங்கு சொடுக்கினால்  தரவிரக்கி கொள்ளலாம்

இறுதியா, நம்ம வாசகரு சேலத்து சட்டப்புளிய தொடர்பு கொண்டு கேட்டத்துக்கு, ‘‘அந்த கிறுக்குப்பய (வேற யாரு, வழிகாட்டியும் தெய்வமும் ஆன காந்திதாம்) நூறு வருசத்துக்கு முன்னாடி சொன்னத, இந்த கிறுக்கு பய (வேற யாரு, நாந்தேன்) இப்போ, எதுக்கு எல்லோருக்கும் எடுத்து சொல்லிக் கிட்டு இருக்கான்னு தெரியலன்னு முடிச்சிட்டாராம்’’.

ஆகா, என்ன கண்டு பிடிப்பு பாருங்க.

காந்தி உங்களப்பத்தி இப்படியெல்லாம் சொல்லி இருக்கார்னு 2008 இல் தெரியும். ஆனால், 2000 ஆம் ஆண்டில், சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கியதற்கு காரணமே, உங்களுக்கு எல்லாம், சட்டத்தைப் பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாது என்பதை உணர்ந்துதாம், 2010 ஐ இலக்காக வைத்து இறங்கி, முடித்தும் இருக்கிறேன்.

உங்கமேல உள்ள, ஊரரிந்த உண்மைய சொல்லுறத்துக்கே இப்படியெல்லாம் பாடாபடுறீங்களே... மக்களோட உண்மைய பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் திரிக்குறீங்களோ, உங்க நாறின பிழைப்புக்காக திருட்டுத்தனம் பண்ணி தீர்ப்ப வாங்குறீங்களே... அப்போ, அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு இப்பவாவது புரியுதா? புரியலேன்னா எப்படி புரிய வைக்கனுமோ அப்படி புரிய வைக்கிறதுதான், எங்களோட வாசகர்களோட வேலையே!

ஏற்கனவே, நீதிபதிகளை வறுத்தெடுப்பது பற்றி படிச்சிருப்பிங்க... 

இப்ப பொய்யர்களை பத்தியும் படிச்சிட்டிங்க... இப்படி நான் மட்டுமல்ல பல வாசகர்கள், பல பொய்யர்களையும், நீதிபதிகளையும் வறுத்தெடுத்திருக்கிறார்கள். அதையெல்லாம் பின்னால ஒவ்வொன்னா பார்ப்போம்.

அதுக்கு முன்னாடி, அடுத்த வறுவல் பதிவு யாரைப் பற்றின்னு கரெக்ட்டா சொல்லுங்க பார்க்கலாம்...
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, September 28, 2013

பங்களிப்பீர் - CONTRIBUTE


சட்டம் இல்லையேல் வாழ்க்கையில்லை. சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள். 
நமது கேர் சொசைட்டி சட்ட விழிப்பறிவுணர்வு வரிசையில், திரு.வாரண்ட் பாலா அவர்களின் ''கடமையைச் செய்! பலன் கிடைக்கும்'' என்கிற ஆறாவது நூலை வெளியிட்ட பெறும் முயற்சி மேற்கொண்டுள்ளது.


இந்நூலை வெளியிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொது நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கிட, நமது மத்திய சட்ட அமைச்சகம் ரூ.25, 000 நிதி பங்களிப்பு வழங்கியுள்ளது.


ஆனால், இதன் ஒட்டுமொத்த செலவு ரூ. 2 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.


இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை செய்திடுமாறு தங்களையும், தங்களைப் போன்ற நல்லுள்ளங்களையும் கோருகிறோம். பங்களிப்பை செலுத்தியவர்கள் அதுகுறித்த விபரத்தையும் எங்களுக்கு தெரிவிக்கவும்.


கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர் - 635109


உலாப்பேசி சரவணன் 9789488105 மற்றும் நடராஜ் 9842399880
Name of the Account  :  CARE Society

Acount Type                   :  Savings 

Ac.No.                               : 768307417

Branch                              :  Indian Bank, Hosur-635109

IFSC code                         : IDIB000H011* அனைத்து நன்கொடைகளுக்கும் வருமான வரிச் சட்டம் பிரிவு 80 ஜி இன்படி, வரிவிலக்கு உண்டு.
No law, no life.  Know law, know life!  

 

Our CARE Society is in the effort of releasing the book titled as “Do Your Duty! Enjoy the Right’s”as the 6th book in the legal consciousness series authored by Mr.Warrant Balaw.  

 

Our CENTRAL LAW MINISTRY has extended its support with a conrtibution of Rs. 25,000 for publishing & donating the books to all public libraries in Thamizh naadu & Puducherry. 

 

But the total cost of publishing works out of turn of 2 lak rupees.

 

We appeal to you and all the good hearted people to contribute generously to complete the project successfully. 

 

CARE Society, # 53 Tank street, Hosur - 635109. 


Mobile:  A.Saravanan  9789488105 & R.Natraj  9842399880 
Name of the Account  :  CARE Society

Acount Type                 :  Savings 

Ac.No.                            : 768307417

Branch                           :  Indian Bank, Hosur-635109

IFSC code                      : IDIB000H011


* All monetary contributions will be exempted as per 80 G income tax act 1961.
இதுவரை பங்களிப்பு நிதி வழங்கியுள்ளோர் பற்றிய விபரம்


 
மத்திய சட்ட அமைச்சகம் புதுடில்லி ரூ. 25, 000

திருமதி. சுகுனா ஓசூர் ரூ. 1000

திருமதி. மல்லிகை சென்னை ரூ 1000

திருமதி. ஆர்த்தீஸ்வரி சென்னை ரூ 1000

திருமதி. வேலம்மாள் மார்க்கம்பட்டி ரூ 1000

திரு. காளியண்ணன் நாமக்கல் ரூ. 1000

திரு. ராஜா செங்கல்பட்டு ரூ. 1000

திரு. சங்கர் தேனி ரூ. 2500

திரு. ரமேஷ் விழுப்புரம் ரூ. 1000

திரு. ராஜசேகர் போடி ரூ. 1000

திரு. திருமுருகன் எடப்பாடி ரூ. 1000 

திரு. ஞானசுந்தரம் தஞ்சாவூர் ரூ. 2000 

திரு. செய்யது இப்ராஹிம் பரமகுடி ரூ. 1000 

திரு. நாகசுப்பிரமணியன் அம்பாசமுத்திரம் ரூ. 2000

திரு. சரவணன் பாப்பாரப்பட்டி ரூ. 1000

திரு. நடராஜ் ஓசூர் ரூ. 1000

திரு. காளத்தி பிரபு திருப்பத்தூர் ரூ. 1000

திரு. அய்யப்பன் ஏரிவயல் ரூ. 1000

திரு. ராமகிருஷ்ணன் உடுமலை ரூ. 1000

திரு. ஞானசேகரன் சென்னை ரூ. 1000

திரு. முருகவேல் குளித்தலை  ரூ. 1000

திரு. அல்லா பகேஷ் சென்னை ரூ. 5000

திரு. ராஜகோபால் சென்னை ரூ. 1000

திரு. ஜெயராஜ பிரகாஷ் பேரளம் ரூ. 2000

திரு. ரவீந்திரன் சென்னை ரூ. 1000

திரு. மனேகரன் அம்பை ரூ. 1000

திரு. ஹரிகுமார் சென்னை ரூ 1000

திரு. சின்னசாமி நிலக்கோட்டை ரூ 1000

திரு. குமார் சென்னை ரூ 1000

திரு. பெரியசாமி கரூர் ரூ 1000

திரு. குப்புசாமி நாமக்கல் ரூ 1000

திரு. மனமோகன் காரைக்கால் ரூ 1000

திரு. மோகனவேலு திருத்தனி ரூ 1000

திரு. விஜயகுமார் போடி ரூ 1000

திரு. சுதாகர் சென்னை ரூ 1000

திரு. பாலசுப்பிரமணியன் சென்னை ரூ 1000

திரு. வெங்கட்ராமன் சென்னை ரூ 1000

திரு. சங்கர் சென்னை ரூ 1000

திரு. தனசேகரன் சென்னை ரூ. 2000

திரு. அருன்குமார் ஆண்டிப்பட்டி ரூ. 1000

திரு. ஆனந்து பாபநாசம் ரூ. 1000

திரு. செல்வகுமார் ஆலங்குளம் ரூ 2000

திரு. பார்த்தசாரதி சென்னை ரூ 1100

திரு. செந்தில்குமார் நாமக்கல் ரூ 1000

திரு. ஜமால் பத்தமடை ரூ 3000

திரு. மாணிக்கம் திருத்தனி ரூ 1000

திரு. ராஜாராம் பிரசாந்த் பண்ருட்டி  ரூ 1000

திரு. கணேசன் ராமநாதபுரம் ரூ 5000

திரு. முருகேஷ் பரமத்தி வேலூர் ரூ 1000

திரு. கதிர்வேல் சேலம் ரூ 1000

திரு. கண்ணா கோவை ரூ 5000

திரு. வேங்கடபதி சுதாகர் சென்னை ரூ 2000

திரு. ரமேஷ் பரமத்தி வேலூர் ரூ 2000

திரு. ராமச்சந்திர ராவ் அருப்புக்கோட்டை ரூ 1000

திரு. ரவிச்சந்திரன் சிக்கல் ரூ 1000

திரு. சிவகுருநாதன் ராமநாதபுரம் ரூ 1000

திரு. சிவதாசன் கும்பகோணம் ரூ 1000

திரு. சுப்ரமணி நாமக்கல்  ரூ. 2000

 

பங்களிப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து விரிவாக விளக்கும்,  நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம்! அதிகாரம்!! கட்டுரையை படிக்கவும்.

கடமை குறித்து காந்தியின் நல்லுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.


முக்கிய குறிப்பு: மேற்கண்ட நிதியளிப்பு பட்டியலைப் பார்த்த சில வாசகர்கள் உலாப்பேசியில் தொடர்பு கொண்டு, பங்களிப்பு நிதி ஆயிரத்திற்கு குறைந்து கொடுக்க கூடாதா என கேட்கிறார்கள்.


மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நீதியைத்தேடி... நூல்களுக்கு நன்கொடை வழங்கிய வாசகர்கள். சட்ட விழிப்பறிவுணர்வால் பயன் அடைந்தவர்கள் அல்லது சமுதாயம் அடையும் என நம்புபவர்கள்.


ஆதலால், ஆயிரக்கணக்கில் கொடுக்கிறார்கள். மேலும், 1000 க்கு மேலான பங்களிப்புகள் வெளியிடப்படும் நூலிலும் இடம் பெறும். குறைவான தொகைகள் ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்டு சேர்க்கப்படும். அவ்வளவே.


பங்களிப்பு என்பது தாங்களாகவே விரும்பி செய்வதே ஒழிய நாங்கள் கேட்டுப் பெறுவது அன்று. எனவே உங்களின் பங்களிப்பு என்னவோ அதனை தாராளமாக கொடுக்கலாம்.


நாங்கள் விரும்புவது கூட, இத்தளத்திற்கு வருகை தருவோர் ஒவ்வொருவரது பங்கும் இருக்க வேண்டும் என்பதுதாம்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, September 26, 2013

மதிக்கப்பட வேண்டிய மனித உரிமைகள்


ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர் என்று தந்தைப் பெரியார் 1931 இல் கூறியுள்ளார்.


மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என நினைப்பது தவறு. தங்களின் தகறாறுகளை, மக்கள் தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எவ்வித ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது.


மேலும், எது நியாயம் என்பது தகறாரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே, அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமாக இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம் என்று, தாத்தா காந்தி 1909 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார்.


மகான்களின் ரத்தின சுருக்கமான இந்த வரிகள் எத்தனை எத்தனை விவகாரங்களை உள்ளடங்கியதுன்னு, சற்றேனும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்!


மதிக்கப்பட வேண்டிய மனிதர்களின் உரிமைகள் எல்லாம் காலம் காலமாகவே மிதிக்கப்படுகிறது என்பதாலேயே மனித உரிமை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. மனிதர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் தவறிய அரசு மற்றும் பொது ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான சட்டப்பிரிவுகள் இருக்கின்றன.  


இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை விட, இவ்வூழியர்கள் நமக்கான சட்ட கடமையை ஆற்றுவதற்காகவே, சிறப்பு அடிமைத் தகுதிகள் மற்றும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, சட்ட ஊழியத்தில் நியமிக்கப்பட்டு, நமது வரிப்பணத்தில் இருந்து தாராள கூலியும், ஏராள சலுகையும் கொடுக்கப்படுகிறது.


இதன்படி, கடமையைச் செய்ய நியமிக்கப்படாத நம்மை விட, சட்டப்படி கடமையைச் செய்ய நியமிக்கப்பட்ட அடிமை ஊழியர்கள், அக்கடமையைச் செய்ய தவறும் போது அதிகபட்ச சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.


இதுவே, நியாயம்தாம் சட்டம் என்பதற்கு ஒப்பானது. அரசு மக்களால் தேர்வு செய்யப்படுவதற்கான மிக முக்கிய காரண காரணிகளில் இதுவும் ஒன்று.


ஆனால், பொது மக்களையோ அல்லது தனியார் நிறுவன நிர்வாகிகளையோ குற்றம் புரிந்தாய் என கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரும் அரசும், அடைக்கும் நீதித்துறையும் தங்களது அடிமை ஊழியர்கள் குற்றம் புரியும்போது மட்டும் கைது செய்து சிறையில் அடைக்காமல், துறை விசாரணை என்கிற பெயரில், அவர்களை துரையாக வழி நடத்தி, தனக்கு ஏதோவொரு வகையில் சகாயமானவர்களை அல்லது இனி விசுவாசமாக நடந்து கொள்வேன் என்பவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்றி, ஊழியத்தில் நீடிக்கச் செய்து மீண்டும், மீண்டும் குற்றம் புரிய தூண்டுகிறது.


அரிதிலும், அரிதாக எதற்கும் இணங்க மறுக்கும் கொள்கை ஊழியர்கள் எவராவது இருப்பின், அவர்களுக்கு நியாயம் இருந்தாலும் காத்திருப்பு பட்டியல், பணி நீக்கம், சிறையில் அடைத்தல், சிறையில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு கொடுமையாக நடத்துதல், இவைகளுக்கும் மசியாதவர்களை அவர்களின் உற்றார், உறவினர், நண்பர்களை துன்புறுத்துவதன் மூலம் மசிய வைப்பது என அனைத்து அவலங்களையும், எனக்கு நீ, உனக்கு நான் ஆதரவு என்கிற வகையில் தனித்து செயல்பட வேண்டிய பொய்யர்களும், கொள்ளையர்களும் செயல்படுவது போலவே, அரசும் நீதித்துறையும் கூட கைகோர்த்து அரங்கேற்றி வருகிறது.


இப்படித்தாம் 15-07-2006 அன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற உடமைகளை அடித்து உடைத்து, கலாட்டா செய்ததால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்கிற செய்தியை படித்த போதே இதில், நான் சொல்லும் மேற்சொன்ன கொள்கை அவலம் அரங்கேறி இருக்கின்றன என நினைத்தேன்.


ஆனால், அடுத்த ஆண்டே சிறையில் அடைக்கப்பட்ட அவரை, சில குற்றச்சாற்றுகளின் பேரில் தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த அவருக்கு, சிதம்பரம் கூடுதல் மாவட்ட முன்சீப் ஆக பணி வழங்கப்பட்டது என்கிற செய்தி 21-07-2007 அன்று நாளிதழில் வெளியானது. இதுதாம் அவரைப்பற்றி வெளி உலகிற்கு தெரிவிக்கப்பட்ட செய்தி.


நீதிமன்ற உடமைகளை அடித்து உடைத்ததற்காக சிறையில் அடைத்தது சரி என்றால், அவருக்கு மீண்டும் சட்டப்படி வேலை தந்திருக்க கூடாது. மீண்டும் வேலை தந்தார்கள் என்றால் சிறையில் அடைக்கப்பட்டது சட்டப்படி தவறு. உண்மையில் நீதித்துறையில் என்ன நடக்கிறது...


இதுபற்றி ஆராய்ந்து உண்மையை விரிவாக எழுத வேண்டும் என மனம் இருந்தாலும், நேரமில்லாமல் போயிற்று. அதனால், 2007 ஆம் ஆண்டில் திருத்தி வெளியிட்ட நீதியைத்தேடி... பிணை எடுப்பது எப்படி நூலில், நீதிபதிகள் திருந்த என்ன செய்யனும்! என்கிற தலைப்பில் இவ்விவகாரம் குறித்து எழுதி இருந்தேன்.


OLYMPUS DIGITAL CAMERA2008 ஆம் ஆண்டில், என்னை உலாப்பேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், இந்நூலில் இத்தலைப்பை படித்ததாகவும், தனக்கு தெரிய ஒரேயொரு வழிதாம் இருக்கிறது என்றும், சொல்லலாமா என்றும் அனுமதி கேட்டு தன் பேச்சை நிறுத்தினார். சொல்லுங்கள் என்றேன். சொன்னதும் அதிர்ச்சியடைந்தேன்.


ஆம்! நீதிபதிகள் திருந்த அவர்களை செறுப்பால் அடிப்பதை தவிர வேறு வழியேயில்லை என்றார்.


நீதிபதிகளால் பாதிக்கப்பட்டு, பல்வேறு வகைகளில் புலம்பும் மக்களில் ஒருவராக இவரும் இருப்பார். அதனால்தாம், இப்படி விரக்தியில் பேசுகிறார் என நினைத்து, இயல்பாகவே நீங்க யார் என கேட்டேன்.


சத்தியத்திற்கு என்றுமே சாவில்லை என்பதை நிரூபிப்பது போல, ‘‘நீங்கள் எந்த நீதிபதியைப் பற்றி நியாயமான கேள்வியை எழுப்பி எழுதி உள்ளீர்களோ, அந்த நீதிபதியே நான்தான்’’ என்றதால், மேலும் அதிர்ந்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.


ஏனெனில், நீதிபதிகள் தங்களை தண்டிக்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்பது தெரிந்து வைத்திருக்கும் கைதிகளே, அவர்கள் மீது துணிந்து செறுப்பை வீசியிருக்கிறார்கள். வழக்கு நடத்திய ஒரு பெண்மணி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது செறுப்பை வீசியிருக்கிறார்.


ஆனால், ஒரு நீதிபதியே, நீதிபதிகளை திருத்த செறுப்பால் அடிப்பதை தவிர, வேறு வழியில்லை என்கிறாரே என்பதுதாம். இந்த அளவிற்கு நீதிபதிகள் சுய மரியாதையை இழந்து கேவலப்பட்டு கிடக்கிறார்கள்.


இப்படியொரு கேவலமான நிலமை ஆங்கிலேய அடிமை ஆட்சியில் கூட இருந்ததில்லை என்பதற்கு, ‘‘வெள்ளைக்கார வக்கீல்களிடமும், வெள்ளைக்கார அதிகாரிகளிடமும் காண முடியாத அநேக ஒழுக்கக் குறைவுகளும், நாணயக் குறைவுகளும், நடுநிலையற்ற தன்மையும், நம் வக்கீல்களிடமும், அரசு ஊழியர்களிடமும் தாராளமாய் இருந்து வருகின்றன’’ என இந்த கொள்ளைக்காரர்களை விட, கொள்கையுடன் இருந்த வெள்ளைக்காரனே மேல் என 1931 ஆம் ஆண்டே எழுதிய தந்தைப் பெரியாரின் கூற்றே சான்றாக இருக்கிறது.


ஆனால், நான் எப்போதுமே பொய்யர்களையும், கொள்ளையர்களையும் மட்டுமே இலக்காக வைத்து தாக்குகிறேன் எனவும், அவர்களின் செயல்பாடுகளில் குற்றம் கண்டு பிடிப்பதை தவிர, எனக்கு வேறு வேலையே கிடையாது எனவும், இவ்வுண்மைகளைப் பற்றி அறியாத மிககுறுகிய மனமும், அளவற்ற அறிவு வறுமையும் கொண்ட அன்பர்கள் வெகுசிலர் நினைக்கிறார்கள். இதில், வருங்கால பொய்யர்களும் அடங்குவர்.


எனக்கு நீதி மீது மட்டுமே அதீத அக்கறை உண்டு.


ஆம்! நீதி சரியாகி விட்டால், மீதி எல்லாம் தானாகவே சரியாகி விடும். நீதி சரியாக விட்டால், எதுவுமே சரியாகாது என்பதோடு, கிடைப்பது எதுவுமே நீதியாக இருக்காது. நீதியில் மீதியாகத்தாம் இருக்கும்.


இது இயற்கையின் நீதியல்ல! இயலாதவர்களின் (அ)நீதி!!


ஆமாம்! நியாயம் கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றவர்கள் எவருக்குமே, சரியான நீதி கிடைத்ததில்லை என்பது என் கருத்து.


அதெப்படிங்க ஒவ்வொரு வழக்குலேயும், யாரோ ஒருத்தருக்கு சாதகமா தீர்ப்பு சொல்லுறாங்களே என நீங்கள் நினைக்கலாம்.


சாதகமான தீர்ப்பு மட்டுமே நீதியாகாது; பாதகமான தீர்ப்பு தண்டனையும் ஆகாது. ஏனெனில், இவைகள் இரண்டிலும் சமநீதிக்கான கோட்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை. ஆதலால், நீதிக்கு சமாதிதாம் கட்டப்பட்டு வருகிறது.


இதனால்தாம், ஒவ்வொருவரும் எனக்கு சாதகமா அல்லது பாதகமா தீர்ப்பு கிடைச்சுதுன்னு சொல்லிக்கிறாங்க. மறந்தும் கூட யாரும் எனக்கு நீதி கிடைத்தது என்று சொல்வதில்லை. வெகுசிலர் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் கூட, அது இது மீதி, எது நீதி என்பன பற்றிய அவர்களது அறியாமை.


ஆனால், சமநீதி கிடைச்சுதுன்னு யாரும் சொன்னதேயில்லை.


அதனாலேயே, அ(ந்)நீதியால் பாதிக்கப்பட்டவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் வக்கீல்களாக, நீதிபதிகளாகவே இருந்தாலும் கூட, அவர்களுக்கு நியாயமாக என்ன ஆலோசனை வழங்க முடியுமோ அதை வழங்குகிறேன். என் வாசகர்களின் நியாயமற்ற செயல்பாடுகளை விமர்சித்து எழுதவும் தவறியதில்லை. இந்த அக்கறை ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.


சரி, நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்...


இந்த வகையில் பல கொள்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, நீதித்துறையில் ஓகோவென்று இல்லா விடினும் கூட, ஓரளவாவது கொள்கையோடு இருக்க வேண்டும் என நினைத்து கடமையாற்றிய திரு.ராமராஜ் என்கிற நடுவரை (குற்றவியல் நீதிபதியை) வக்கீல்கள் முதல் நீதிபதிகள் வகை எப்படியெல்லாம் சிறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தி, பின் எப்படி பணி உயர்வு கொடுத்து, பணி நீக்கம் செய்தார்கள் என்பது தொடர்பான ஆவணங்களை எல்லாம் பரிசீலனை செய்தேன்.


ஆம்! சட்டப்படி பணி நீக்க உத்தரவை எழுத்து மூலமாக கொடுக்க முடியாது. சிறையில் அடைத்த வழக்கை விசாரணை செய்து தண்டனை கொடுக்கலாம் என முயன்றாலும் முடியாது. மாறாக, சிறையில் சித்திரவதை செய்த நம் கதை நாறிவிடும் என எதையும் செய்ய இயலாமல் போகவே, ‘‘இனி உனக்கு வேலையும் கிடையாது, ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித பலாபலனையும் கொடுக்க முடியாது, போய் வா என தினக்கூலி செய்பவரை, பண்ணையார்கள் துரத்தி விடுவது போல துரத்தி விட்டு, அவர் பணியாற்றிய இடத்தில் வேறொரு கொள்ளையரை பணியில் அமர்த்தி விட்டார்கள்’’.


இப்ப சொல்லுங்க! இந்த இடத்துல நீங்க இருந்தீங்கன்னா, நீதிபதிகளை செறுப்பால் அடிக்க வேண்டும் நினைத்து இருக்கமாட்டிங்களா... அடித்தே இருப்பீர்கள்தானே?


என்ன, நம்ம நாட்டில இப்படியெல்லாம் கூட நடக்குதா, அதுவும் நீதிவழங்கும் நீதித்துறையிலேயே இப்படி நடக்குதா என தலை சுத்துதா... இப்பதான் விசயத்தையே ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் எவ்வளவோ இருக்கு... அதுக்குள்ளேயே தல சுத்துதூன்னா எப்படி?


இவைகளை எல்லாம் ஆராய்ந்து கதை, வசனம், இயக்கம் என எதுவுமே இல்லாமல், வித்தியமாசமான பாடமாக தயாரித்து தில்லோடு வெளியிட எனக்கு எப்படி சுத்தியிருக்கனும். இக்கொடுமைகளை நேரடியாக அனுபவித்த நீதிபதி எந்த நிலைக்கு போயி உயிருக்கு போராடி இருக்கனும்.


அதுவும் சிறையில் அவருக்கு நடத்தப்பட்ட சொன்ன மிகக் கேவலான கொடுமைகளை இங்கு விவரிப்பது நாகரீகமாக இருக்காது என தவி(க், ர்)கிறேன்.


இதையெல்லாம் கைவசமிருந்த ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்த்த பின்னரே, 2010 ஆம் ஆண்டில், மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோடு வெளியிட்ட நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற நூலுடன் சேர்த்து நீதியா! அநீதியா? நீதிக்குச் சமாதியா?! என்கிற தலைப்பில் அவரேயே பேசும்படி செய்து, ஒளி ஒலி (காணொலி) குறுந்தகடாக வெளியிட்டு உள்ளோம்.


சும்மா சொல்லக்கூடாது... 


நாம் நீதித்துறையில் என்னென்ன அவலங்கள் அரங்கேறுகின்றன என சொல்லுகிறோமோ அவைகள் அனைத்தும் உண்மை என்பதை அப்படியே ஆதாரப்பூர்வமாக வழிமொழிந்துள்ளார் என்பதை விட, வெளியில் இருந்து கொண்டு ஆராய்வதால் நீதித்துறையில் நடக்கும் பல்வேறு உள் விவகாரங்களில் ஒருசில நமக்கு புலப்படாமல் போய் விடுகின்றன. அவைகளையும் கூட புட்டுப்புட்டு வைத்துள்ளார்.


இவர் பல்வேறு வழிகளில், பலமுறை கேட்ட சில முக்கிய ஆவணங்களை உயர்நீதிமன்றம் கொடுக்க மறுக்கவே, பாம்பின் கால் பாம்பரியும் என்பதற்கு இணங்க, நீதிபதிகள் எதற்கு மசிவார்கள் என்பதை தெரிந்து வைத்திருந்த இவர், அப்படிப்பட்ட தொடர்பில் இருக்கும் ஒரு நடிகையைப் பிடித்து அந்த ஆவணங்களை கைப்பற்றி தனக்கு வலுசேர்த்து கொண்டு விட்டார். இதற்காக இவர் நடிகைக்கு செலவிட்ட தொகை ஐயாயிரம் மட்டுமே.


இது எவ்வளவு கேவலம்... நீதிமன்ற கோமாளிகளுக்கு ஏது கேவலம்?


இவரது மனைவி கைநாட்டு என்பதும், விவசாய வேலை பார்த்து வருபவர் என்பதும், இவர் எந்த அளவிற்கு நீதிக்கொள்கையில் உறுதியாக இருந்திருப்பார் என்பதை பறைச் சாற்றுகின்றன.


இவர் விசயத்தில் சதி செய்யும் சாதி வெறியும், மதம் பிடித்த மத வெறியும் கூட, அரசுப் பொய்யர்களாலும், கொள்ளையர்களால் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.


இது குறித்து  2011 ஆம் ஆண்டில் நீதியைத்தேடி வாசகரான, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கான ஓய்வுற்ற குற்றவியல் துறை இயக்குனரை விசாரித்த போது திட்டவட்டமாகவும், தெளிவாகவும் பதில் அளிக்க முடியவில்லை என்பதோடு, கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வில்லை (அடிபணிந்து ஏற்றுக் கொள்ளவில்லை) என்றார்.


தனக்கு மீண்டும் வேலையும், பிற பலன்களையும் கொடு. இல்லையென்றால் திறந்த நீதிமன்றத்தில் உங்களை செறுப்பால் அடிக்காமல் விடமாட்டேன் என்கிற புலம்பலோடு பொய்யர்கள் பாணியில் உயர்நீதிமன்றத்தோடு மல்லுக்கு நின்று கொண்டு இருந்தவரை, என்னை சட்டப்படி விசாரணை செய்து சிறையில் அடை என நமது கொள்கை பாணியில் போராட திருப்பி விட்டதை ஏற்றுக் கொண்டார். உண்மையில் நீதிபதிகளுக்கு தில் இருந்தால், இவரது வழக்கை விசாரித்துப் பார்க்கட்டும்.


இப்படி ஒவ்வொரு ஊழியர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப்படி எடுக்க வேண்டிய அரசும், பொதுத்துறையும் ‘இப்படி எடுக்க ஆரம்பித்தால், அத்துறைகளுக்கு தலைமைப் பொறுப்பு தாங்களே என, நாமும் ஒருநாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும், சிறை தண்டனைக்கும் கூட உள்ளாக நேரிடும் என கணக்கு போட்டே அரசு மாற்று வழிமுறையாக மனித உரிமைகள் போன்று புதுப்புதுப் பெயரில் சட்டங்களை அமல்படுத்துகிறது.


இதனாலேயே, எத்தனை சட்டங்கள் வந்தாலும், அது தொடர்பான குற்றங்கள் குறையாமல், அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்னும் போது, உண்மையில் இதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட கட்டமைப்புகளும், அதில் கூலிக்கு மாரடிக்கும் ஊழியர்களும் எதற்கு என்பதே கேள்வி?


இவைகளின் செலவுகளுக்காகவும், கூலிக்காகவும் நாம் உழைப்பை ஏன் வரியாக செலுத்த வேண்டும்... என ஆங்கிலேயனைப் பார்த்து கேள்வி கேட்ட வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல, இந்திய அரசுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் குடியரசுத் தலைவரை, ஒவ்வொரு இந்திய குடிமகனும் கேட்க வேண்டிய சூழ்நிலையும் வந்து விட்டது.


ஆனாலும், அரசு கொண்டு வரும் நுகர்வோர், மனித உரிமை, தகவல் பெறும் உரிமை ஆகிய சட்டங்களை வைத்து பணம் சம்பாதிப்பதற்கு என்றே, பல்வேறு தன்னார்வ நுகர்வோர், மனித உரிமை, தகவல் உரிமை அமைப்புகள், லட்சங்களுக்காக தனித்தனியாகவும், கோடிகளுக்காக கூட்டமைப்புகளாகவும் இயங்குகின்றனவே தவிர, உண்மையான நுகர்வோர் உரிமையை பேனவும், மனித உரிமையை காக்கவும், ஊழல் முறைகேடுகளை களையெடுப்பதற்கும் இல்லவே இல்லை.


நம் நாட்டில் எது எதைக் காப்பாற்ற வேண்டுமோ அதுதான் அதனை சீரழித்துக் கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத வரலாறாகவே இன்று வரை இருக்கிறது.


நுகர்வோர், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் தகவல் பெறும் உரிமை அமைப்புகளை தொடங்குவது என்பது கால நேரத்துக்கு தக்கபடி, தன்னார்வ கேடிகள் லட்சத்திலும் கோடியிலும் பணம் புரலும் வியாபாரம் ஆகி விட்டது. இந்த வகையில் அடுத்து வரப்போகும் சட்டம் எதுவோ?


மனித உரிமை ஆணையம் என்பது மட்டுமே மாநில அல்லது மத்திய அரசின் அதிகாரத்தோடு இயங்கும் அமைப்பு. மற்றபடி எல்லா அமைப்புகளும் தனி நபர்களின் சங்கமே என்ற விபரம் கூட தெரியாமல் அரசு ஊழியர்கள் கூட, மனித உரிமை சங்கப் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என்றால் விபரமறியா மக்கள் எம்மாத்திரம்?


சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் சிலர் மீது, நான் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அதனை கைவிட வேண்டும் என, சர்வதேச மனித உரிமை கழகத்தை சேர்ந்த ஒரு தறுதலை, என்னிடமே கட்டப்பஞ்சாயத்து செய்ய முயற்சித்து இருக்கிறார் என்றால், சட்ட விழிப்பறிவுணர்வில்லா மக்கள் எம்மாத்திரம்?


Mathi பொதுவாக மனித உரிமை மீறல் என்றாலே காவல்துறையின் மீறல் மட்டுமே என்ற தவறான கருத்து சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிற இந்த காலகட்டத்தில் ‘‘நீதித்துறையும் & மனித உரிமை மீறலும்’’ என்ற தலைப்பை தேர்ந்து எடுக்கவே ஒரு தில் வேண்டும். தில்லுக்கு சட்ட விழிப்பறிவுணர்வு வேண்டும்.


நாமக்கல்லைச் சேர்ந்த நீதியைத்தேடி... வாசகர் மதி சட்ட விழிப்பறிவுணர்விலும் மதியானவர் என்பதால், இத்தலைப்பை தில்லோடு தேர்ந்தெடுத்து என்னை சிறப்புரையாற்ற அழைத்ததன் பேரில் சென்றிருந்தேன். அக்கூட்டம் நடந்த கூடம் முழுவதும் சட்ட விழிப்பறிவுணர்வு குறித்த பதாகைகளைப் (பேனர்கள்) பார்த்து வியந்தேன்.


குறிப்பாக, நமக்காக நாமே வாதாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலில் வக்கீல் தொழிலுடன் ஒப்பிட்டு கொடுத்துள்ள வேறுபாடு விபரப்பட்டியலைப் அப்படியே போடாமல், வக்கீல் பகுதியை நீக்கி விட்டு போட்டிருந்தார்.


வக்கீல்கள் இப்படித்தாம் ஒழுங்கீனமாக தொழில் செய்வார்கள் என்பதை வெளிப் படையாக பட்டியல் போட்டு காட்டுவது கூட, பொய்யர்களின் தொழிலுக்கு செய்யும் உரிமை மீறல் என நினைத்தார் போலும்!


காவல்துறை, நீதித்துறை மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் மனித உரிமை மீறல் நடப்பதற்கு சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத நாமே அடிப்படை காரணம் என்பது நான் உங்களுக்குச் சொல்லும் அனுபவ ஆய்வுச் செய்தி.


சட்ட விழிப்பறிவுணர்வு என்றால் அனைத்து விதமான சட்டங்களையும் கரைத்து குடித்திருக்க என நினைக்கிறீர்கள். இது தவறு.


சுதந்திரம் எப்படி குற்றமாகும், உரிமை எப்படி பிரச்சினையாகும் என்பதற்கு தெளிவானதொரு விளக்கத்தை தெரிந்து கொள்வதுதான் ஆதி முதல் அந்தம் வரையிலான அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு.


அதாவது, நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சுதந்திரமாக இருப்பது உங்களின் (சு)தந்திரம். ஆனால், உங்களின் இந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை எவ்விதத்திலும் பறிப்பதாக இருக்க கூடாது. அப்படி பறித்தால், அது குற்றமாகி விடும்.


அதேபோல, எவ்வளவுக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு உரிமையையும் எடுத்துக் கொள்வது உங்களின் உரிமையே. ஆனால், உங்களுக்கு உள்ள உரிமை அடுத்தவருக்கு இல்லை என எந்த நிமிடத்தில் நினைக்கிறீர்களோ, அந்நிமிடமே பிரச்சினையின் ஆரம்பம்.


இப்போது யோசித்து பாருங்கள். இதற்கு மேல் சட்ட விழிப்பறிவுணர்வு என்று சொல்ல என்ன இருக்கிறது. இந்த அடிப்படை கோட்பாடுகளை மட்டும் கடைப்பிடித்து வாழக் கற்றுக் கொண்டாலே, நாம் எந்த குற்றத்திலும், பிரச்சினையிலும் தெரிந்தே ஈடுபடமாட்டோம். நாம் ஈடுபடவில்லை என்றாலே, நம்மிடமும் யாரும் ஈடுபடமாட்டார்கள்.


ஒருவேளை நம்மிடம் யாராவது வம்புதும்பில் ஈடுபட்டால் கூட, நான் சொல்வதை நீங்கள் கேட்பது போல, அவர்களுக்கு இவ்விரு இலக்கணங்களையும் தக்க அறிவுரைகளாக எடுத்துக் கூறி, நீங்களும் அவர்களை கேட்க வைக்க முடியும்.


இப்படி ஒவ்வொருவரையும் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு கொண்டு வந்து விட்டால் காவல்துறை, நீதித்துறை மட்டுமல்ல; எந்த து(றை, ரை)யையும் நாம் யாரும் நாட வேண்டியிருக்காது. யாருக்கும் மனித உரிமை மீறலும் நடக்காது.


ஒருவேளை எவரையாவது உங்களது அ(ற, றி)வுரைக்கு கொண்டு வர முடியா விட்டாலும் கூட, வக்கீல்களையும், நீதிபதிகளையும் வறு, வறு என வறுத்தெடுப்பது போல, அவர்களையும் வேறு யாரிடமும் வாலாட்டாத வகையில் வறுத்தெடுத்து விடலாம்.


இப்படி நீதியைத்தேடி... வாசகர்கள் பலரும், வக்கீல்கள், நீதிபதிகள் மட்டுமல்லாது, பலரையும் வறுத்தெடுத்திருக்கிறார்கள். இதுதாம், சட்ட விழிப்பறிவுணர்வின் சாகசம்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, September 25, 2013

கிராமத்தில் ஓர் உச்சநீதிமன்றம்!


adjust-747319மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என நினைப்பது தவறு. தங்களின் தகறாறுகளை, மக்கள் தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எவ்வித ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது.


மேலும், எது நியாயம் என்பது தகறாரில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே, அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமாக இருந்து விடப் போவதில்லை என்பது நிச்சயம் என்று, தாத்தா காந்தி 1909 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார்.


தாத்தாவின் ரத்தின சுருக்கமான இந்த வரிகள் எத்தனை எத்தனையோ விவகாரங்களை உள்ளடக்கியவை என்பதை இந்த ஆக்கம் கொஞ்சமேனும் தெளிவுபடுத்தும்.


மதுரைக்கு அருகில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாலமேடு கிராமத்தில், “பாலமேடு கிராமப் பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி” என்ற பெயரில், பதிவு செய்யப்பட்ட சங்கம் செயல்படுகிறது.


மும்மதங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் இக்கிராமத்தில் பிராமணர் தவிர, பதினெட்டு சாதிப்பிரிவு மக்கள் வசிக்கின்றனர். பதினோரு பேர் கொண்ட கமிட்டியில் அரசுப்பணி அல்லது அரசியல் சாராதவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


தலைவர், செயலாளர், பொருளாளர் மட்டும், முறையே கவுண்டர், தலித், நாடார் என்று சாதி அடிப்படையில் நியமிக்கப்பட, மற்ற எட்டு உறுப்பினர்களும் பிற சாதிகளில் இருந்து மறு சுழற்சி அடிப்படையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு முறை வாய்ப்பு கிடைக்காத சாதிக்கு, மறுமுறை நிச்சயம் வாய்ப்பு உண்டு.


இது தவிர, அந்தந்தச் சாதிக்கென சங்கங்கள் உண்டு. அச்சங்கம், அச்சாதியினருக்குள் நடக்கும் பிரச்சினைகளை மட்டும் தீர்க்கவேண்டும். வெவ்வேறு சாதிகளுக்குள் சண்டை எழுந்தால், இவ்விரு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துபேசி, சுமூகமான முடிவை எட்டுவார்கள்.


அப்படி எட்ட முடியாதபோது, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தீர்வுக்கு விடப்படும். அதன் தீர்வே இறுதியானது.


இதற்கு கட்டுப்பட்டு நடக்காவிட்டால், இக்கமிட்டியே சட்டப்படியான புகாரைக் கொண்டு செல்லும். நல்ல வேளையாக, அப்படியரு துரதிருஷ்டவசமான சம்பவம் இதுவரை நடக்கவில்லை.


சாதி, மதமல்லாத பொதுவானதொரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால், ஆன்றோர், சான்றோர், பெருமக்கள் என அனைவரும் அழைக்கப்படுகின்றனர். இவ்வூரைச் சுற்றியுள்ள இருபத்து ஒன்பது கிராமங்களில் இருந்தும் பிரச்சினை தீர்த்து வைக்க ஒப்படைத்தால், தீர்த்து வைக்கின்றனர்.


இக்கிராமத்தில் 05-10-1998 இல், காவல் நிலையமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மற்ற கிராம வழக்குகள்தாம் பதிவாகின்றவே தவிர, இக்கிராமத்து வழக்கெதுவும் பதிவாவதில்லை.


பிரபல அரசியல் தலைவர்கள் இறந்துவிட்டால், அக்கட்சியின் கொடி மட்டுமே அரைக்கம்பத்தில் நாடு முழுவதும் பறக்க விடப்படும். ஆனால், இக்கிராமத்தில் மட்டும் அனைத்து கட்சிக் கொடியும், அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். இது அக்கிராம மக்களின் அரசியல் ஒற்றுமையை குறிக்கிறது.


இதேபோல, உள் ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாத ஒரே சுடுகாடு. அதற்குப் பெயரும், சமத்துவச் சுடுகாடு. இவற்றையெல்லாம் 20-02-2009 அன்று, நானே நேரடியாக சென்று அறிந்தேன்.


மகாத்மாவின் கூற்று, எந்த அளவிற்கு உண்மையானது என்பது பாலமேடு கிராம மக்களிடம் இருந்து, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சங்கதியாகும்.


இவைகள் எல்லாம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்றாலும் யாரும் பொறிக்கவில்லை. போகிற போக்கில் நாமாவது பொறிக்கலாம் என்பதாலேயே இப்பதிவு.


மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் 2010 ஆம் ஆண்டில் வெளியான  நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற நூலிலிருந்து... 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, September 24, 2013

விருதுகளின் விழுதுகளும்! பழுதுகளும்!!


விருதுகளின்  பழுதுகள்இந்தியத் தமிழன் ஒருவர் ஆஸ்கார் என்று சொல்லக் கூடிய உலகளாவிய அயல்நாட்டு விருதை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார் என்று சாதி, இன, மத பாகுபாடு இன்றி நாடே போற்றிக் கொண்டாடியது.


இந்தியர்கள் எல்லா துறையிலும் எந்த நாட்டவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை விஞ்ஞானம் இல்லாத அகஞானம், இம்சை தராத அகிம்சை என காலம் காலமாக உலகிற்கே நிரூபித்து வரும் நிலையில், ‘‘ஆஸ்கார் விருதை அரசு உட்பட அனைவரும் உயர்வாக நினைப்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை’’.


இந்தியாவில் மக்களின் மனதைக் கவராத இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என யாரும் இல்லை. சாதாரணமாக காமெடி நடிகர் நடிகைகளுக்கு கூட மக்களின் அமோக ஆதரவு இருக்கிறது.


சினிமாவைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒவ்வொரும் சாதிக்க வேண்டிய காலத்தில் சாதித்து சென்று இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு ஆதரவு தருகிறார்கள் என்பதாலேயே, பிறமொழிப் படங்களைக் கூட தத்தமது மொழிகளில் தயாரிக்கிறார்கள், நடிக்கிறார்கள்.


தத்தமது பழைய படங்களை கூட, புதிய தொழில் நுட்பத்தில் வடிவமைப்பு செய்கிறார்கள். ஆங்கிலப் படங்களை தத்தமது மொழிக்கு டப்பிங் செய்கிறார்கள். இதில், அந்தந்த மக்களின் புழங்கு மொழிகளை புகுத்துகிறார்கள்.
இவைகள் அவர்களின் திறமைக்கு மாற்று மொழிபேசும் மக்கள் கொடுக்கும் அங்கீகார விருது. இந்த வகையில், ஆங்கில மொழிப் படங்களுக்கு, இந்திய அரசு விருது கொடுக்கவில்லை என்றாலும், இந்திய மக்கள் கொடுத்துக் கொண்டுதாம் இருக்கிறார்கள்.


ஆனால், அயல்நாட்டு மக்கள் இப்படி இந்திய மொழிப்படங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை. இதற்கு காரணம், எதிலும் நாமே மேலானவர்கள் என்கிற எண்ணமே.


நமது சினிமாக்களுக்கு பெரும்பா(லா, ழா)ன மக்களின் அங்கீகாரத்தைப் பொறுத்துதாம் விருதுகள் முடிவு செய்யப்படுகின்றன என்பதால், மக்களே விருதுகளின் விழுதுகள்.


ஆலமரம் விழாமல் தாங்கி நிற்கும் விழுதுகளை தாங்க, விழுதுகள் தேவையில்லை. தேவைப்பட்டால் உண்மையில் அதற்கு பெயர் விழுதல்ல, பழுது!


எனவே, மக்களின் உடனடி அங்கீகாரமே ஆல்போல் வளர்ந்து விட்ட உங்களின் திறமைக்கு விருது. இதன் பிறகு அரசு மட்டுமல்லாது எவர் தரும் விருதுகளும், பழுதுகளே!!


ஏனெனில், விருது தரும் அரசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற அமைப்பே. இப்படி அங்கீகாரம் வழங்கியதில் நீங்களும் ஒருவரே என்னும் போது, அவ்விருதை ஏற்பது எப்படி புகழ்ச்சியாகும் என சிந்திக்க வேண்டாமா?


மருது சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்து சாதித்தது போல,


ஒற்றுமையாக இருக்கும் போது, இவர்கள் அவர்களுக்கு விருது கொடுப்பதும், சில காலங்கள் கழித்து அவர்கள் இவர்களுக்கு மறுவிருது கொடுப்பதும்,


பின் இவர்களுக்குள் சச்சரவு ஏதும் ஏற்பட்டு விட்டால் விருது வாங்கியது தவறு என உணரும் வெகுசிலர் திருப்பி தந்து விடுவேன் என திருப்பித்தர மனமில்லாமல் சொல்வதும்,


கொடுத்தவர்களும் வெளிப்படையாக கொடு என கேட்க முடியாமல், உனக்கெல்லாம் என் தலைவன் பெயரில் விருது கொடுத்தேன் பார் என மனம் குமுறுவதும், அவ்வப்போது நிகழும் (வா, வே)டிக்கையான விசயங்களாகி விட்டன.


உண்மையில் தன்னிகரில்லாத தலைவர்கள் எவரும் தன் புகழைப் பாடச் சொல்லவோ, தன் பெயரில் விருது கொடுக்கவோ சொல்லவில்லை. மாறாக, தான் ஆற்றிய சமூகப்பணியை ஆற்றுங்கள் என்றே சொன்னார்கள்.


உங்களுக்கு தெரிந்து விருது கொடுக்குறவங்க யாராவது இருந்தா எனக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்யுங்கள் என சிறிதும் வெட்கமில்லாமல் என்னிடம் கேட்டவர்களும் உண்டு.


பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது பழமொழி.


ஆக, பூ தனியாக இருந்தாலும் மணக்கவே செய்யும். ஆனால், நார் மணக்காது. இந்த எதார்த்த உண்மையை, ‘நாரோடு சேராத பூ மணக்காது என்று குதர்க்கம் பேசும் வகையில், விருது வாங்கவில்லை என்றால் நம் திறமைக்கு மதிப்பில்லை’ என்கிற குறுகிய நோக்கில் யார் கை, காலை பிடித்தாவது குறைந்தது பத்து விருதுகள் வாங்கி விட வேண்டுமென அலைகிறார்கள்.


இதனால், தங்களின் தனித்துவத்தால் இயல்பாகவே பூவாக விளங்குபவர்கள் கூட,


விருது என்னும் நாருடன் சேர்ந்தால் இன்னும் அலங்காரமாக மணக்கலாம் எனக்கருதி,


நாரால் கட்டப்பட்ட பூ இறுதிவரை அந்நாருக்கு அடிமையாகி பல்வேறு காரியங்களில் பயன்படுத்தப் படுவதால் நாறி விடுவது போல,


விருதுக்கு ஆசைப்பட்டவர்கள் அவ்விருதுக்கும், அவ்விருதை வழங்கிய அண்ணாருக்கும் அடிமையாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்பட்டு,


இதில், நீயா நானா என சச்சரவு வரும் போது, என்னை விழாவிற்கு அழைக்க வில்லை, என் பெயரை எதிலும் சேர்க்க வில்லை, விழாவில் மதிக்க வில்லை, முன் வரிசையில் அமர அனுமதிக்கவில்லை என பல்வேறு விதங்களில் நாறி விடுகிறார்கள்.


இவைகள், பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதன், உண்மையான கருப்பொருள் என்ன என்பதை ஆராயாமல், அப்படியே அர்த்தம் எடுத்துக் கொண்டதால் வந்த வினையே, இந்நாற்றங்கள்!


எக்குணத்தவர்களோடு சேர்கிறோமோ, நாமும் அப்படியே ஆவோம் என பூவுக்கும், நாருக்கும் உள்ள உண்மைப் பொருளை விளங்கி கொண்டிருந்தால், விருது என்றால் என்னவென்பது விளங்கியிருக்கும்.


தன் ஒவ்வொரு படைப்பிலும், சிறப்பு கவனம் செலுத்தி ஆராய்ந்து படைத்திருப்பதாக சொல்லும் படைப்பாளிகள் கூட, விருது விசயத்தில் மட்டும் விலகிப் போவது, ஏனோ... தானே என்கிற எண்ணமோ!


இன்று மணப்பது, நிச்சயம் ஒருநாள் நாறும். இது இயற்கையின் விதியல்ல; செயற்கை மற்றும் சேர்க்கையின் விதி என்பதை இனியாவது ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, September 18, 2013

நீதிமன்ற (மா, கோ)மாக்கள்


sangara narayanan siசென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொய்யரை கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் மீது, நீதிமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்ததாக பொய்யர்களின் தலைவர் மோகனகிருஷ்ணன் பதிவாளரிடம் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.


தாங்கள் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, சட்டப்படி வழக்கு பதிவு செய்து தனிப்படைக்கு தலைமை ஏற்று கைது செய்ய முயன்ற சக காவல் ஊழியரை, காவல்துறையே கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.


பொதுவாக காவல்துறைக்கும், பொய்யர்களுக்கும் தீராத பகையும், பழிவாங்கும் படலமும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில், பொய்யர்களே காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். காரணம், காவல்துறை ஊழியர்களின் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால், அவர்களும் அரசுப் பொய்யர்களையே நம்பி இருக்க வேண்டி உள்ளதுதான்.


நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள் என்கிற மகாத்மா காந்தியின் கருத்து அரசுப் பொய்யர்களுக்கு முற்றிலும் பொருந்தாது.


ஏனெனில், இவர்கள் நீதிபதிகளின் மாமாக்கள். இந்த மாமாக்கள் மனது வைத்து ஒத்துழைக்கவில்லை என்றால், குற்றவியல் வழக்குகளில் நீதிபதிகள் சட்டத்துக்குப் புறம்பாக எதுவுமே செய்ய முடியாது.


இதனால், காவல்துறை தொடுக்கும் உண்மையான வழக்குகளில் கூட, குற்றவாளிகள் நீதிபதிகளின் மாமாக்கள் ஆன அரசுப் பொய்யர்களை சரிகட்டி விடுதலையாகி விடுகிறார்கள்.


காவல் ஊழியர்களுக்கு சட்ட விழிப்பறிவுணர்வு ஏற்பட்டால், அரசுப் பொய்யர்கள் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தாங்கள் பதிவு செய்யும் குற்ற வழங்குகளை தாங்களே ஏற்று நடத்தலாம். தக்க தண்டனையை வாங்கித் தரலாம். தவறு செய்யும் நீதிபதிகளை நம்மைப் போல வறு, வறு என வறுத்தெடுக்கலாம்.


இதற்கு குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 302(1) இன்படி, உதவி ஆய்வாளர் நிலைக்கு குறையாத உயர்நிலை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. 302(2) இன்படி, இதனை புகார் கொடுத்தவரே (பொதுமக்கள் எவரும்) அரசுப் பொய்யரை நீக்கி விட்டு, நமது பாணியில் வழக்கை நடத்த முடியும்.


கரூரைச் சேர்ந்த மருத்துவர் சுபா சுந்தரம் என்கிற நீதியைத்தேடி... வாசகர் 2001 ஆம் ஆண்டிலேயே, தனது கணவனுக்கு எதிரான தான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்த வரதட்சனை வழக்கை, சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடத்தி இருக்கிறார்.


இப்படி செய்ததற்கு முக்கிய காரணம், இவரது கணவரின் சகோதரர் அந்நீதிமன்றத்தில் கூலிக்கு மாரடிக்கும் ஒரு பொய்யர் என்பதால், அரசுப் பொய்யரை சரி கட்ட முயற்சித்ததே!


நீதிமன்ற வளாகத்திற்குள் யாரையும் கைது செய்யக் கூடாது என்று பொய்யர்களும், கொள்ளையர்களும் தங்களது இல்லாத சட்ட மற்றும் இஷ்ட நடைமுறையை வைத்திருக்கிறார்கள்.


ஏனெனில், இவைகள்தானே இவர்களின் / குற்றவாளிகளின் புகலிடம். இதே அற்ப காரணத்தை 2009 ஆம் ஆண்டில், உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த காவல்துறையின் தடியடியின் போதும் பொய்யர்கள் சொன்னார்கள்.


இதற்கு அடிப்படை காரணம் தாங்கள் பொதுமக்களின் கூலிக்கும், வரிக்கும் மாரடிப்பவர்கள் என்பதை உணர கூட போதிய பொது அறிவில்லாமல், நீதிமன்ற வளாகமும், நீதிமன்றமும் தங்களது பாட்டன், முப்பாட்டன் சொத்து என்று கருதுவதுதான்.


உண்மையில், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 77 இன்படி, கைது செய்வதற்கான பிடியாணையை, இந்தியாவின் எந்த இடத்திலும் நிறைவேற்றலாம் என்று சட்ட விதி தெளிவாக அறிவுறுத்தும் போது, பிடியாணையே தேவையில்லாமல் கைது செய்வதற்குரிய குற்றத்தை புரிந்த ஒருவருக்கும் பொருந்தும்.


மேலும், விதி 44 (2) இன்படி, நடுவரின் முன்னிலையில் உள்ள ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கலாம் என்கிற சூழ்நிலை இருந்தாலே அவரை தாமே நேரடியாக கைது செய்யலாம் அல்லது கைது செய்யுமாறு பணிக்கலாம்.


மொத்தத்தில், நீதிமன்றமோ அல்லது அதன் வளாகமோ கைது செய்வதற்கு தடை விதிக்கும் இடமல்ல. மாறாக, தாராளமாக அனுமதி வழங்குமிடம்.


ஆனால், நீதிமன்ற (மா, கோ)மாக்களோ நீதிமன்றங்கள் இந்தியாவின் எல்லைக்குள் இல்லை என்று கருதுகிறார்கள் போலும்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

சட்டத்தை கையில் எடுத்தால்?


கோல் எடுத்தால் குரங்கு ஆடும் என்பது பழமொழி.


சட்டத்தை கையில் எடுத்தால், அரசு ஊழியர்கள் ஆடுவார்கள் என்பது புதுமொழி. 


நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள் நூலில் தன்மீது விருதுநகர் மாவட்டம், சிவகாசி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, அவ்வழக்கில் வீட்டில் இருந்தபடியே அஞ்சல் மூலம் பதிலுரை தாக்கல் செய்து தள்ளுபடி செய்ததாக ஆசிரியர் வாரண்ட் பாலா தெரிவித்து இருந்தார்.


அவருக்கு சாத்தியப்பட்ட சட்டம் நமக்கு மட்டும் எப்படி சாத்தியமில்லாமல் போகும்? முயன்றால் தானே முடியும்? முடியும் என்பது என் அனுபவம்.


பொதுவாக வாடகைக்கு வீடு கொடுப்பவர்கள் கேட்பவரின் தராதரம் பார்த்துதான் கொடுப்பாங்க. கொஞ்சம் அப்படி இப்படி என எதிர்கேள்வி கேட்பான் என்று தெரிந்தால் கூட, வில்லங்கமான பேர்வழி என்று கூறி வீடு கொடுக்க மாட்டார்கள்.


அதிலும், வக்கீல், போலீசுக்கு கொடுக்கவே மாட்டார்கள்.


ஆனால், ‘‘நமக்குதான் சட்ட விழிப்பறிவுணர்வு இருக்கிறதே! நம்மிடம் சட்டத்துக்கு புறம்பாக யார் என்ன செய்து விட முடியும்?’’ என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் எனது மனைவி பெயரில் உள்ள வீட்டின் கீழ்தளத்தை கடலூர் மாவட்ட காவல் துறை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு வாடகைக்கு விட்டிருந்தேன்.


கீழ்தளம் அவர்களுக்கு விடப்பட்டதால் காவல்துறையினரின் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த பெரும் பகுதியை உபயோகித்து வந்தார்கள். எனது ஒரே மோட்டார் சைக்கிளையும் அங்குதான் நிறுத்த வேண்டும்.


இதற்காக ஐம்பது சதவிகித வாடகையை கழித்து கொண்டார்கள். பல வாகனங்களை நிறுத்துவதற்கும் ஒரே ஒரு வாகனத்தை நிறுத்துவதற்கும் சம அளவில் வாடகை என்பது எப்படி நியாயமாகும்?


கட்டிடத்திற்கான வாடகை ஆண்டு ஒன்றுக்கு ஐந்து சதம் வீதம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பதினைந்து சதவிகித தொகை உயர்த்தி தரப்பட வேண்டும் என்பது அரசாணை. இப்படி உயர்த்தப்படும் போது கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ரூ 604 கூடும்.


ஆனால், நமக்கான சட்டப்படியான கூடுதல் வாடகைக்கு கூட பிச்சை போட்டால்தான் கொடுப்பார்கள். நமக்குத்தான் பிச்சை போடும் பழக்கம் அறவே கிடையாதே. மாறாக, சட்டப்படி அறிவிப்பு அனுப்புவதுதானே பழக்க வழக்கம்.


இந்த வகையில் முதலில் வாடகை உயர்வை பரிசீலிக்க கோரி சாதாரண முறையில் கடிதம் அனுப்பினேன். அதனை பரிசீலனை செய்த பொதுப்பணித்துறை வழங்க இயலாது என பதில் அனுப்பவே நமது ஆயுதமான சாட்சிய சட்டம் உறுபு 76 கையில் எடுக்க வேண்டியதாயிற்று.


சும்மாவா சொன்னாங்க, ‘‘கோல் எடுத்தால் குரங்கும் ஆடும்னு’’. இதுபோல, நாம் சட்டத்தை கையில் எடுத்தால்தான் அரசு ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தங்களின் கடமையைச் செய்யிறாங்க.


முதலில் சாதாரணமாக சாட்சிய சட்டம் 76 இன் கீழ் சான்று நகல் கோரிய போது கண்டு கொள்ளவே இல்லை என்பதால் மீண்டும் ஒருமுறை சான்று நகல் அனுப்ப வேண்டியதாயிற்று.


இந்த முறை கொஞ்சம் புத்திசாலித்தனமாக சான்று நகலின் நகலை உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் விதி 90 இன் கீழ், மாவட்ட நீதிபதிக்கு சமர்ப்பித்தேன். இதனால் மிரண்டு போன பொதுப்பணித்துறை எனது சான்று நகல் கோரிய மனுவிற்கு பதில் அளித்தது. அதுவும் எப்படி?


நான் என்னென்ன கேள்வி கேட்டிருந்தேனே அதைக் குறிப்பிட்டு அதற்கு கீழே பதில் என்ற வகையில். கூடவே கேட்டிருந்த ஆதாரங்களை எல்லாம் இணைத்திருந்தார்கள்.


ஆனாலும், ‘‘குப்பற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை’’ என்கிற கதையா விளக்கம் தந்தாங்களே ஒழிய வாடகையை கூட்டவில்லை.


மாறாக, உயர் அதிகாரிக்கு விளக்கத்தின் நகலை அவர்களே அனுப்பியிருந்தார்கள். ‘‘பொறுத்தது போதும், பொங்கி எழு’’ என்ற வகையில் உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் விதி 80 இன் கீழ் சட்டப்படியான எனது உரிமையைப் பெற பொதுப் பணித்துறை மீது உரிமையியல் வழக்கு தொடுக்க போகிறேன் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவிப்பு அனுப்பி அதன் நகலை பொதுப்பணித்துறைக்கு சமர்ப்பித்தேன்.


உடனே வாடகையை உயர்த்தி பொதுப்பணித்துறையால் முறையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடவே வாகனங்கள் நிறுத்துவதற்கு அவர்களின் பங்காக 90 சதவிகிதமும் கிடைத்தது.


இவைகள் எல்லாம் ஓரிரு மாதங்களில் நடந்து முடிந்தது.


இதையே பொய்யர்களிடம் கொண்டு சென்றிருந்தால், வாடகை உயர்வை இந்த ஜென்மத்தில் வாங்கியிருக்க முடியாது என்பதோடு, அப்பொய்யர்களுக்கு கூலி கொடுக்க அவ்வீட்டையே விற்று இருக்க வேண்டும். 


எப்படி நம்ம நீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு!


உங்களின் அறிவார்ந்த கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ள உலாபேசி எண் இராஜ.அப்பாஜி  9444516741


மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின், வாசகர்களின் (மெ, பொ)ய்யறிவும் பகுதியில் இருந்து...

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, September 4, 2013

சண்டக் கல்லூரியும், பல்களை கலகங்களும்!


நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஒரு நல்ல குடும்பத்தை பல்கலைக் கழகத்திற்கு இணையாக ஒப்பிடப்படும் போது, அப்பல்கலைக் கழகங்கள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லத் தேவையில்லை.


ஆனால், மெத்தப்படித்த மேதாவிகள் மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்ற மூதேவிகள் அடிமைகளாக, அடிமைப்பாடம் நடத்தி பல்வேறு வகையான கொத்தடிமைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதால், உழைக்காமலே கொழுத்துக்கு கொண்டிருக்கும் பண முதலைகள், அடிமைப் பள்ளி முதல் பல்களை கலகங்கள் வரை நடத்தி வருகின்றனர். ஏனிந்த அவல நிலை என்பது குறித்து நாம் அவசியம் சிந்திக்க வேண்டி உள்ளது.


ஆம்! 2009 ஆம் ஆண்டு ஜனவரி 19 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாங்க ரவுடிகளான காவல்துறைக்கும், நீதித்துறை ரவுடிகளான வக்கீல்களுக்கும் நடந்த சண்டைக் காட்சிகள் மற்றும் சண்டக் கல்லூரியின் மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டைக் காட்சிகளை பார்த்து, பிரம்மாண்டத்துக்கு பெயர் போன ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களே நடுநடுங்கி இருப்பார்கள்.


அப்படியிரு அவலங்களை வரலாற்றில் அரங்கேறியதுடன் நில்லாமல், அதற்கு அடிப்படையில் காரணமா(ன, ண)வர்கள் இணைந்து அதனை வெட்கமில்லாமல் வருடா வருடம் கருப்பு தினமாக அனுசரித்தும் வருகிறார்கள்.


பொதுவாக நாட்டில் பல்வேறு துறைச் சார்ந்த பல்களை கலகங்கள் இருந்தாலும், அவைகளில் அங்கொன்றும், இங்கொன்றும் ஆக சிற்சில சண்டை சச்சரவுகள் இருந்து வந்தாலும் கூட, பிரபல ரவுடிகளுக்கே கைவந்த களையாக விளங்கும் கல் வீச்சு, அடிதடி, உருட்டு கட்டையடி, வெட்டுகுத்து என சகலக் காட்சிகளும் அடிக்கடி அரங்கேறுவது, இதெல்லாம் குற்றம் என போதிக்கப்படும் சண்டக் கல்லூரிகளிலும், தண்டனை கொடுக்கப்படும் அ(ந்தந்த)நீதிமன்றங்களிலுமே!


இப்படிப்பட்ட குற்ற நிகழ்வுகளில், தவறு செய்தவர்கள் தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, அவரவர்களின் தரப்பில் இருந்து சாதிச்சாயம் பூசுகிறார்கள். சமூக ஆர்வலர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரும் பல்வேறு காரணங்களை சொல்லிக் கொள்கிறார்களே ஒழிய, ஒழித்தொழிப்பதற்கான அடிப்படை மூலக் கூறுகளைப் பற்றி யோசிக்கவில்லை.


நம் குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோரோ, உற்றார் உறவினரோ நம்மைப்பார்த்து, ‘‘நீ டாக்டராகப் போறியா, இஞ்சினியராகப் போறியா, இல்ல வக்கீலாகப் போறியா என பெருமையாக கேட்(டா, பா)ர்கள். இதில், தற்போது தகவல் தொழில் நுட்பமும் சேர்ந்து விட்டது’’.


அவர்களோ, நாமோ நினைப்பது போல், உண்மையில் இம்மூன்று தொழில்களும் பெருமைக்கு உ(ய)ரியன அல்ல. மாறாக, மற்றவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும், ஏமாற்றும் மற்றும் மோசடி செய்யும் கேவலமான தொழில்களே! இதைத்தான் திருடர்களும், கொள்ளையர்களும் செய்கிறார்கள்!!


மெக்காலேஇதற்கு முன்பாக நாம் எப்படி கௌரவத்தோடு வாழ்ந்தோம் என்பதற்கான வரலாற்று சான்றாவணம் இதோ!


‘‘நான் இந்தியாவில் குறுக்கும், மறுக்குமாக நான்காண்டுகள் பயணம் செய்த போது, பிச்சைக்காரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை. அத்தகையது அந்த நாட்டின் செல்வவளவும், உயர்நியாய உணர்வுகளும். அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உடைத்து எறியாத வரை, நாம் ஒருபோதும் அந்த நாட்டை வெல்ல முடியாது.


ஆகவே, வெளிநாட்டில் இருந்து வருகிற எல்லாமே ............ ஆங்கிலமாக இருக்கிற எல்லாமே ................ தன்னுடையதை விட உயர்ந்தது எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்ற வேண்டும். இந்தியாவை அடிக்கி ஆளும் ஒருநாடாக மாற்ற, அந்த நாட்டின் பாரம்பரிய விவசாய முறைகளையும், பாரம்பரிய கல்வி முறைகளையும் மாற்றியமைக்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன்’’.


இது லார்டு மெக்காலே என்கிற ஆங்கிலேயர், நமது (அ, பெ)ருமைகளைப் பற்றி எடுத்துரைத்து, ஒவ்வொன்றிலும் நமக்குள் எப்படி போட்டி, பொறாமை, உயர்வு, தாழ்வு எண்ணங்களை உருவாக்கி, சண்டை சச்சரவில் ஈடுபட வைத்து, நாம் எப்படி சமாதான தூதுவராகி தீர்த்து வைப்பதன் மூலம், நம்மை எப்படி அடிமைப்படுத்தி வைப்பது என்பது பற்றி 02--02-1835 இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய மிகச் சிறிய ஆனால், சீரிய சதித்திட்டத்திற்கு வித்திட்ட உரை.


இச்சதித் திட்டத்தின்படி புகுத்தப்பட்டதே இன்றைய நமது அனைத்து கல்வி முறைகளும் என்பதை இன்றும் கூட நம்மில் ஓரிருவரை தவிர, பெரும்பாலானோர் புரிந்து கொள்ள முடியாத வகையில் அறிவு முதிர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு இக்கள்ளக் கல்வித் திட்டமே காரணம் என்று எவ்வளவுதாம் விளக்கமாக எடுத்துச் சொன்னாலும் கூட, விளங்கிக் கொள்ளவோ, மனமார ஏற்றுக் கொள்ளவோ முடியாத அளவிற்கு, நம்மை பல்வேறு விதங்களில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.


ஆம்! நமது பாரம்பரியமிக்க குலக்கல்வி, குருகுலக்கல்லி முறை, விவசாயம் ஆகியவற்றை ஒழித்து, ஆங்கிலேயனின் கள்ளத் தகுதியான எதிலும் கல்வி மற்றும் தேர்வு முறையாக புகுந்து, (இ, எ)திலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிற சி(ரி/ற)ப்பு நிலைக்கு நம்மை தரம் தாழ்த்தி, கொத்தடிமையின் உச்சத்திற்கு கொண்டுச் சென்று விட்டது. எப்படி?


ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திக் கொடுத்த கள்ளக்கல்வி மூலம் நாம் அரசிடமும், தனியாரிடமும், அதே ஆங்கிலேயர்களிடம் மட்டுமல்லாது, அனைத்து நாட்டவரிடமும் கூட, எழுத்துத் தேர்வு, போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மனநிலைத் தேர்வு என பற்பல தேர்வுகளை சந்திக்கிறோம்.


இவைகளில் தேரவில்லை என்று சொல்லி விட்டால், இறுதியில் இருக்கவே இருக்கிறது லஞ்சத் தேர்வு என அத்தேர்வில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற்று அடிமையாக அல்லது கொத்தடிமையாக வேலை பார்த்தே ஆக வேண்டும் என்று வேலை வாய்ப்பில் இருந்த சூழல் படிப்படியாக (பி, மு)ன்னேறி, இன்று இரண்டு வயது மழலையின் ஆரம்பக் கல்வியிலேயே அடிமைக்கான அச்சாணியாக போடப்பட்டு விட்டது.


இதில் போட்டி போடும் அளவிற்கு தனக்கு தகுதியில்லாமல் போய் விட்டதே என தகுதியிழந்தவர்கள் மனச் சோர்வுற்று தற்கொலை செய்யும் அளவிற்கு அறிவுவறுமை பெருக்கெடுத்து வருகிறதென்றால், ‘‘என்ன காரியம் பண்ணப் பார்த்த நீ (ஓரு நிமிடத்துல விடுதலையாகிடலாம்னு நினைத்தாயா), உனக்கிருக்கும் திறமை, உனக்கு தெரியவில்லை (என்னைபோல, பலரை அடிமையாக உருவாக்கும் திறமைசாலி நீ), நீ இல்லையென்றால், அது உன் வீட்டிற்கும், நம் நாட்டிற்கும் பேரிழப்பு (அடிமையில்லை என்கிற பேர் இழப்பு)’’. அதனால், எங்களைப் போன்றே நீயும் கட்டாயம் அடிமையாகவோ, கொத்தடிமையாகவோ வாழ்ந்தே ஆக வேண்டும்.


அதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் நாங்கள் இலவசமாகவே வழங்குகிறோம் என்று தப்பித்தவறி அங்கொன்றும், இங்கொன்றுமாக தற்கொலை முடிவெடுப்பவர்களை கூட தடுக்கிறோம் என, சில தற்கொலைத் தடுப்பு தன்னார்வ தொண்டு நிறுவன அடிமைகளும், அதில் உள்ள பல கொத்தடிமை தொண்டர்களும் சொல்கிறார்கள். ஆனால், அடிப்படை உண்மை இதுவன்று.


அப்படியானால், தற்கொலையை ஆதரிக்கிறார்களா என நீங்கள் கேட்கலாம். தற்கொலையை யாரும் ஆதரிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோலவே, தற்கொலை செய்து கொள்ளும் தைரியம் உள்ளவர்களை யாரும் தடுக்கவும் முடியாது. இது எனது ஆராய்ச்சி அன்று. இயற்கை நியதி.


ஆம்! நம் எல்லோரையுமே, ‘‘யாரோ ஒருவர் எங்காவது போய் சாவு’’ என்று எதோ ஒரு காலகட்டத்திலாவது சொல்லியிருக்கிறார்கள். அதற்காக நம்மில் வெகுசிலரைத் தவிர, எல்லோரும் செத்து விடவில்லையே!


எனவே, தற்கொலைக்கு முயலும் கோழைகள், அத்தற்கொலை முயற்சியிலும் கோழைகளே என்கிற வகையில், தானாக தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவ்வளவே! யார் தடுக்கா விட்டாலும் கூட, அவர்கள் தற்கொலை செய்து கொள்ள போவதில்லை.


ஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது போலவும், நாமே அவர்களை தக்க சமயத்தில் தடுத்து (நிறு, திரு)த்தியது போலவும், கற்பனையை வளர்த்துக் கொள்கிறோம். உண்மையில் தற்கொலையில் தப்பித்த நீங்கள், அச்சமயத்தில் உங்களை காப்பாற்றியது யார் என்று யோசித்துப் பாருங்கள். இந்த எதார்த்த உண்மை விளங்கும். இந்த கற்பனைக்கு அடிப்படை காரணம், அவர் நம்மால்தாம் பயனடைந்தார். ஆதலால், அவர் நமக்கு அடிமை என்கிற எண்ணமே.


நீதியைத்தேடி... வாசகர்கள் சிலர் தங்களது நீதிமன்றச் சாதனைகளை என்னிடம் சொல்லி விட்டு, இறுதியாக இதற்கெல்லாம் காரணம் நீங்கதான் என்பார்கள். அதாவது, உங்களின் அடிமையாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, என்மீதான ஆதிக்கத்தை நீங்கள் ஆலோசனையாக செலுத்தலாம் என்பது உட்பொருள்.


ஆனாலும், நாம் சொல்லும் அத்தனை ஆலோசனைகளையும் ஏற்று நடக்க எல்லோராலும் இயலாது. அவர்களது தேவைக்கு ஏற்ப பொய்யர்களைப் போல, என்னால் ஆலோசனை வழங்க முடியாது. இவ்விரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே, ஆலோசனை சொல்வதை அறவே தவிர்த்து விட்டு, முன்னோர்கள் சொன்னபடி கற்றுணர்ந்து அடங்கு என்பதோடு நில்லாமல், அடக்கு என்றும் சொல்லி வருகிறேன்.


மேலும், இவர் எனது வாசகர், திறமையானவர். இவரும் எனது வாசகர்தாம். ஆனால் திறமையற்றவர் என்று தரம் பிரித்து சொல்லக்கூடிய திறம் இருப்பதால்தாம், வாசகர்களின் (மெ, பொ)ய்யறிவும் என ஒரு அத்தியாயத்தையே இந்நூலில் சேர்த்துள்ளேன்.


எனவே, உண்மையில் நீங்க சொல்வது போல, நீதிமன்ற சாதனைக்கு நான்தான் காரணம் என்றால், உங்களுக்கு சாத்தியமானது, நீதியைத்தேடி... வாசகர்கள் அனைவருக்கும் சாத்தியமாகாமல் போனது ஏன் என எதிர்கேள்வியை தொடுத்து, அனைவருக்கும் சாத்தியம் என்கிற நிலை வரும்போது, நானே காரணம் என்பதை ஏற்க தயாராக இருக்கிறேன்.


அதுவரை, உங்களது சாதனைகளுக்கு முழுக்கமுழுக்க நீங்களேதாம் காரணம் என்பேன். இதுதான், யாரையும் சார்ந்திராத சான்றோர் நிலை. இதனை ஆங்கிலத்தில் "டிப்பெண்டன்ட் இல்லாத இன்டிபெண்டன்ட்" எனலாம்.


ஆனால், சமுதாய அடிமை ஆதிக்கமோ, பிரபலமான சாதனையாளர்களாக பார்த்து, அச்சாதனை யாளர்களே தன்னை முன்னிலைப்படுத்தவில்லை என்றாலும் கூட, அவர் எனது மகன் என்கிற பெற்றோரும், மாணவர் என்கிற ஆசிரியரும், அவரது பெயரை நான் மாற்றியதாலேயே புகழடைந்தார் என்கிற சோதிடரும், அவர் எனது சிஷ்யர் என்கிற குருவும், அவருக்கு நான்தான் வாதாடி வெற்றியை தேடித்தந்தவர் என்கிற பொய்யரும்...
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ அற்பக் காரணங்களை சொல்லி,


‘‘சாதனையாளர்களது புகழ்ச்சியில் பல்வேறு விதங்களில் பங்கு போட முன்வருபவர்கள் யாராவது, பிரச்சினைக்குரிய வேதனையாளர்களான லஞ்ச ஊழல் முதலைகள், நம்பிக்கை மோசடியாளர்கள், திருடர்கள், கொள்ளையர்கள், வன்புணர்வாளர்கள் மற்றும் கொலைகாரர்களது இகழ்ச்சியில் பங்கு போட முன்வந்திருக்கிறார்களா அல்லது இனியாவதுதான் வருவார்களா?!’’.


பெற்றெடுத்த பெற்றோரே கூட, தங்கள் மக(ன, ள)து புகழ்ச்சியைப் பார்த்து பரவசப்படலாமே ஒழிய பங்கு போட முடியாது என்கிற கருத்தில்தாம், ‘‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்டத் தாய்’’ என உலக மக்கள் யாவருக்கும், நீதிநெறி சொல்லும் திருவள்ளுவர் கூட சொல்லியுள்ளார், போலும்.


கடமையாளர்கள் எல்லோரும் கடமையாளர்களே அல்ல. பெரும்பாலும் கடைமையாளர்களே என்பதை விட, கடைந்தெடுத்த கொடுமையாளர்கள் என்றே சொல்லுவேன். கொடுமைக்கு விடை கொடுக்கும் கடமையாளர்கள் வெகுசிலரால், நமது ஆளுமைக்கும், வளர்ச்சிக்கும் கிடைக்க வேண்டிய பல அடிமைகள் கிடைக்காமலும், போய் விடுகின்றனர் என்று நினைத்தவர்கள், அக்கடமையாளரை கையகப்படுத்தி, தனது ஆளுமையை மையப்படுத்திக் கொள்ளவே பாராட்டுப் பத்திரங்களை வாரி வழங்கும் பாராட்டு விழாக்கள்.


ஆனால், பல்களை கலகங்களோ மேலே ஒருபடி யோசித்து, சேவை செய்வது எப்படி என்பதற்கான முதுகலை பட்டத்தை (எம்.எஸ்.டபிள்யூவை) தனது அடிமைக் கள்ளக்கல்வி திட்டத்தில் புகுத்தி, கொத்தடிமைகளை உருவாக்கும் வல்லுநருக்கான அடிமை அடையாள மற்றும் அங்கீகார வெற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்புகின்றன.


இதை மூலதனமாகக் கொண்டு வெளிநாட்டில் இருந்து ஃபண்டு பெறுவது எப்படி, இதன் மூலம் பல்வேறு தரப்பட்ட கொத்தடிமைகளை தன்னகத்தே தக்க வைத்துக் கொள்வது

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

மருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்திஒரு நூலாசிரியர், இக்கால வைத்திய முறை முழுவதையும் உபாஸ் மரத்திற்கு ஒப்பிட்டிருக்கிறார். பிறரை உறிஞ்சி வாழும் வக்கீல் தொழிலையும், வைத்தியத் தொழிலையும் அம்மரத்தின் கிளைகளோடு ஒப்பிட்டிருக்கிறார்.

உபாஸ் என்பது, ஜாவா பகுதியிலுள்ள ஒரு நச்சுமரம். அதில் வரும் பாலை எடுத்து காட்டு மக்கள் அம்புகளின் முனையில் தடவுவார்கள். அந்த அம்புபட்டவர்கள் கட்டாயம் இறந்து போவார்கள். அதன் நிழலில் எந்தச் செடியும் நசிந்து போகும். அவ்வளவு கொடியது அம்மரத்தின் விஷம்.

வைத்தியத் தொழிலைக் குறித்து எனக்கு ஒரு சமயம் ஆர்வம் இருந்தது. நாட்டின் நன்மைக்காக ஒரு டாக்டராக வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அந்த எண்ணம் இப்போது எனக்கு கிடையாது.

நம் வைத்தியர்கள் ஏன் கௌரவமான அந்தஸ்தை அடைவதில்லை என்பதை நான் இப்போது அறிகிறேன். நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு ஆங்கிலேயர்கள், வைத்தியத் தொழிலை சரியானபடி உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நம்மை முற்றிலும் நிலை தவறி போகும்படி செய்து விட்டனர்.

நம் உடம்பைப் பற்றி, நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. கெட்ட செயல்களில் ஈடுபட்டு விட்டோம். இதனால், நமக்கு நோய் ஏற்படுகிறது. நம்மை ஆதரிக்கும் வகையில் டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து உதவி செய்வதால்தான் மீண்டும், மீண்டும் அதுபோன்ற கெட்ட செயல்களில் ஈடுபட்டு மருந்தை உட்கொண்டதன் மூலமாக உடல் சிரமமின்றி இருந்தாலும், மனம் பலவீனப்பட்டு விடுவதால், அதனை அடக்கும் திறனை இழந்து விடுகிறோம்.

இவர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து உதவவில்லை என்றால், இயற்கை தன்னுடைய வேலையைச் செய்யும். ஆதலால், அதற்கான தண்டனையை அனுபவிப்போம். இதனால், நம்மை நாமே அடக்கியாளும் ஆற்றலும் கிடைத்து, கெட்ட காரியங்களில் இருந்து விடுபட்டு ஆனந்தமாய் இருந்திருப்போம்.

இவர்கள் உபயோகிக்கும் மருந்துகள் பலவற்றில் மிருகக் கொழுப்போ அல்லது மதுத்திரவங்களோ கலந்திருக்கின்றன. பா(ப, வ)ங்களைப் பரப்பும் ஸ்தாபனங்களே ஆஸ்பத்திரிகள்.

நாம் நாகரீகம் அடைந்திருப்பதாக பாசாங்கு செய்து, தடுக்கப்பட்டிருப்பவைகளை மூட நம்பிக்கைகள் என்று புறங்கூறி, நமக்கு இஷ்டமானவைகளில் ஈடுபட டாக்டர்கள் தூண்டுகிறார்கள். இதனால், நமக்குள்ள புலன்களை அடக்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. ஆண்மையற்றவர்களாகவும் ஆகி விடுவதால், நாட்டிற்கு தொண்டு செய்ய தகுதியற்றவர்கள் ஆகிறோம்.

ஆங்கில வைத்திய முறையை கற்றுக் கொள்வது, நமது அடிமைத்தனத்தை பலப்படுத்துவதாகும். இம்மருத்துவம் மனித வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக அன்று. மாறாக, கௌரவம் மற்றும் செல்வம் சேர்ப்பதற்காகவே என்பதால், நமக்குத் தீமையே.

ஆங்கில மருத்துவர்கள் தங்களை அறிவு மிக்கவர்கள் என்பது போல் காட்டி, ரூபாய் கணக்கில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர். அம்மருந்துகள் உண்மையில் சில தம்படிகளே (ஒரு ரூபாய்க்கு 192 பைசாக்கள். ஆகையால், தம்படிக்கு சில நயா பைசாக்கள் என்று பொருள்) பெறுமானவை.

ஆனாலும் நீங்களோ, உங்களின் அறியாமையினாலும், ஏதோ நோய் நீங்கும் என்ற நம்பிக்கையினாலும், உங்களை ஏமாற்ற வாய்ப்பு தருகிறீர்கள். எல்லோரிலும் படுமோசமானவர்கள் ஆங்கில மருத்துவர்கள்.

பெரிய பட்டங்களை பெற்ற டாக்டர்களை விட, போலி வைத்தியர்களே மேல் என்று சில சமயங்களில் எண்ணுகிறேன். மனித வர்க்கத்திடம் அன்பு காட்டுவது போன்று வேஷம் போடும் டாக்டர்களை விட, நாம் நன்கு அறிந்த அரைகுறை வைத்தியர்களே மேல் அல்லவா?

மகாத்மா காந்தி 1909 ஆம் ஆண்டில், தனது 40 வது வயதில் எழுதிய இந்திய சுயராஜ்யம் நூலின் 12 வது கட்டுரையில் இருந்து கருத்து மாறாமல், தேவைக்கு ஏற்ப சுருக்கி ஒருங்கிணைத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)