No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, August 18, 2013

‘மரு’ அம்மா ஆக வேண்டிய மாமி ‘யார்’இன்றைய சமுதாயம் பல வழிகளில் முன்னேற்றத்தைக் கண்டு வந்தாலும், சில வழிகளில் மிக மோசமான விளைவுகளை சந்தித்த படியே உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற நிலை மாறிப்பல காலம் ஆகிப் போச்சு. இன்றைய நிலையில் பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறு பக்கம் வேறு விதமாக அல்லவா இருக்கிறது? ஒரு பெண் சரியாக இருந்தால், அந்த குடும்பமே நல்வழிப்படும் என்பார்கள். குடும்ப தலைவி என்பவள் அத்தகைய சக்திகள் படைத்தவளே! ஆனால், எத்தனை குடும்பத் தலைவிகள் செவ்வனே செய்கிறார்கள்?

பெண் என்பவள் மண்ணுக்கு நிகர் அன்றோ! மண்ணை நாம் எவ்வளவுதான் வெட்டினாலும், கொத்தினாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு நமக்கு நன்மையை மட்டுமே அல்லவா செய்கிறது. அதுபோல்தானே பெண்களும் தன்னை வருத்திக் கொண்டு மனித சந்ததிகளை வளர்க்கிறார்கள்.

ஆனால், சில பெண்களோ சுயநலம் என்ற நெருப்பை தன்னைச் சுற்றி எறிய விட்டு தன்னையும் அழித்துக் கொண்டு, தன் உற்றார் உறவினர்களையும் அல்லவா அழிக்கிறார்கள்.

நேற்றைய மருமகள்தான் இன்றைய மாமியார் என்பது சில பெண்களுக்கு மறந்தே போகிறது.

திருமணத்திற்கு முன் ஒரு பெண் தன் தாய் வீட்டில் பொறுப்புகள் அதிகமின்றி சுதந்திர பறவையாக சுற்றித் திரிகிறாள். ஆனால், மணமானபின் நிறைய பொறுப்புகள் கூட குடும்பத்தலைவி என்னும் புதிய பதவியை ஏற்கிறாள்.

இங்குதான் சிக்கல் ஆரம்பம் ஆகிறது. தன்தாய் வீட்டில் சற்றி திரிந்த போது என்ன திட்டினாலும், ஏசினாலும் அதை அமுத மொழியாக தாங்கி கொண்டவள், மாமியார் வார்த்தைகளை மட்டும் இடி தாங்கி போல் தாங்கி கொள்ள மறுக்கிறாள்.

தன் வாழ்க்கையில் இணைந்த தனது கணவனை, குழந்தை முதல் குமரன் வரை தாலாட்டி, பாலூட்டி, நோய் நொடிகளில் காப்பாற்றி அவனுக்காக கண் விழித்து, கண்ணீர் வடித்து வளர்த்து, தனக்கு கல்யாணம் செய்து வைத்த மாமியார், இவள் மருமகளாக வந்து நுழைந்த அடுத்த நிமிடமே மாமியார் தன் பொறுப்புகளையும், ஏன் பாசத்தையும் கூட மறந்து ஒரு மூலையில் முடங்கி கிடக்க வேண்டும் என நினைக்கிறார்களே!

இது எந்த வகையில் நியாயம்?

சற்றே சிந்தியுங்கள்... விட்டுக் கொடுப்பதற்கு தாய்ப்பாசம் என்ன வாடகைத்தாய் வியாபாரமில்லையே!

உங்களுக்கு கணவனை திருமணம் செய்து கொண்ட அன்றுதான் தெரியும். ஆனால் உங்கள் மாமியாருக்கோ கருவிலேயே தெரியும். என்னடா எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று ஏதோ ஒரு பக்கமாகவே பேசுகிறேனே என்று நினைக்காதீர்கள்.

ஒரு வீட்டில் மகளாக இருக்கிற நீங்க மறு வீட்டுக்கு போகும் போது ‘மரு’ மகள் என்று, மாமியார் உட்பட ஊர் உலகமே சொல்லுது. அதேபோல நீங்க திருமணமாகி போகிற வீட்டுல, உங்க வீட்டுல அம்மான்னு கூப்பிட்ட மாதிரி ‘மரு’ அம்மா என்றுதானே கூப்பிட வேண்டும்?

ஆனால், நீங்க ஏன் ‘மாமி’யார் என்று கூப்பிட்டு, “நான் எதைச் செய்தாலும், அதைக் கேட்க மாமி ‘நீ’ யார் என அவங்க கூட மல்லுக்கு நிக்குறீங்க; மத்தவங்க நிம்மதிய கெடுக்குறீங்க?”

ஒரு விசயம் தெரியமா உங்களுக்கு!

பிறப்பால் ஆண்களாக பிறக்கிற வெகுசிலர் தனது வாலிப வயதை நெருங்கும் போது குரோமோசோம் குறைபாட்டால், மனதளவில் பெண்களுக்கு உரிய மனோபாவம் வளர்ந்து, பெண்களைப் போலவே நடை, உடை, பாவனை என செயல்கள் மாறுபடும்.

அப்போது, “அவ(னை, ளை) பெற்றெடுத்த அம்மாவே தாய்ப்பாசத்தை மறந்து வெறுத்து ஒதுக்குகின்ற நிலையில் அவ(னு, ளு)க்குத் தேவையான அன்பையும், ஆதரவையும் தந்து காப்பது, தாயம்மாவே!’’.

மரபணு குறைபாட்டால் திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மாறிய பாலினத்தவர்களின் மூத்த மூதாதையர்கள் தான், இந்த தாயம்மாக்கள்!!

இப்படி மாறிய பாலினத்தவர்களான திருநங்கைகள் தம்மைப் போலவே மாறிய மூதாதையர்களை தாய்க்கு நிகரான அம்மாக்களாக ஏற்றுக் கொள்ளும் போது, “தனது மகன்களுக்கு உங்களை திருமணம் செய்து வைத்து, ‘மரு’மகளாக ஏற்றுக் கொள்ளும் மாமியாரை, மாமியார் என அழைக்காமல் ‘மரு’ அம்மா என ஏற்றுக் கொண்டு அழைக்கக் கூடாது?”

இது போன்ற உங்களின் நல்ல சீர்த்திருத்த வார்த்தைகள்தாம், நீங்கள் ‘மரு’ மகளாக சென்றுள்ள வீட்டில், வரதட்சினையில் ஆரம்பித்து ஸ்டவ் வெடிப்பதை கூட நிப்பாட்டும் வல்லமை கொண்டது என்பதோடு, காலங்காலமாக இருந்து வரும் இந்திய கூட்டுக் குடும்ப பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றும்.

ஆம்! ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதை பெண்கள் உணர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள உயிர்களை வாழ வைக்கும் மண் போலவே, ஒவ்வொரு ‘மரு’ மகளும் உங்கள் சுற்றமும் செழித்து வளர அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், மருமகள் வந்தால் நம் நிலைமை தலைகீழாய் மாறி விடும் என நினைத்து, எந்த தாயும் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பதில்லை. மாறாக, இதனை உணர்ந்து மகனே திருமணத்தை மறுத்தாலும் வற்புறுத்தி செய்து வைக்காமல் விடுவதில்லை.

அம்மாக்களின் இச்செயல்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் மாக்களின் செயல் அன்று.

மாறாக, ‘நம் சுற்றம் உங்களால் வளரும் என்ற நம்பிக்கையே’ என்கிற எதார்த்த நிலையில், மாமியார் கொடுமைன்னு எல்லோரும் ஒரு தரப்பாகவே சொல்வது ‘மரு’மகள்கள், மாமி ‘நீ’ யார் என தனக்குத்தானே மனதால் எண்ணியும், தனது எண்ணத்தை வெளிப்படுத்தி தம்மனதையும் பிறர் மனதையும் சொற்கொடுமை செய்தால் எழும் எண்ண விளைவுகளே அன்றி, வேறில்லை.

இது இப்போது உங்களுக்கு புரியாவிட்டால், நீங்கள் மாமியாராகும் போது நிச்சயம் புரிந்தே தீரும்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)