No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, August 14, 2013

நீங்க என்ன படிச்சிருக்கிங்க!
என்ன திடீர்னு வாரண்ட் பாலா, நம்மை எல்லாம் இண்டர்வியூவுல கேள்வி கேட்கிற மாதிரி கேள்வி கேட்கிறாரு... எதாவது வேலை வாங்கி தரப்போறாரா என சந்தோசப்படாதிங்க.

அவரே கிடைக்கிற வெளிநாட்டு வேலையெல்லாம் கூட வேண்டாம்னு விட்டுவிட்டு, நமக்காக சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டிக்கிட்டு இருக்காரு. அவரு எங்க உங்களுக்கு வேலை வாங்கி தர்றது?

அப்படீன்னா நீங்க வாரண்ட் பாலா இல்லையான்னு கேட்காதிங்க. நிச்சயமா இல்ல... நான் யாரு என்பதை பின்னால தெரிஞ்சிக்கலாம். என்னோட சட்ட அனுபவத்தை தொடர்ந்து படிங்க...

முன்பெல்லாம் வேலை தேடி நேர்முகத்தேர்வுக்கு செல்கிறவர்களை பார்த்து தேர்வு நடத்துபவர்கள், என்ன படிச்சிருக்கிங்க என்று கேட்டாங்க.

ஆனா இப்போ இந்த கேள்விய நேர்முகத்தேர்வுல கேட்கிறாங்ளோ இல்லியோ, வாரண்ட் பாலாவின் வழிகாட்டுதலில் நீதிமன்றத்துல வாதாட போறவங்கள நீதிபதிகள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த அளவிற்கு நாம பேசுர சட்டத்தால புல்லரித்து போயிடுறாங்க.

ஊர்ப்புறங்களில் எதாவது நியாயமா பேசினா, ‘‘என்ன சட்டம்லா பேசுற’’ அப்படீன்னு கேள்வி கேட்பாங்க.

நீதிமன்றத்துல நாம பேசுற ‘‘நியாயம்தான் சட்டம்’’ அப்படீங்குற தத்துவத்துல வக்கீல்களும், நீதிபதிகளும் இதே நிலைமையிலதான் இருக்காங்க. இதுக்கு என்ன அர்த்தம்? கிராமத்துகாரங்களை போலவே, அவங்க பார்வையிலேயும் சட்டம் பேசினா தப்புங்கிறதான்.

ஆனா, சட்டம் படிச்ச அவங்களுக்கு, நம்மகிட்ட சட்டம் எதுவும் பேச தெரியலையே, பேச மாட்டேங்கிறாங்களே என்பது நம்மளோட ஆதங்கம்.

ஆம், நாம் சட்டம் பேச ஆரம்பித்தால், “பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி வாயில ஈ போறது கூட தெரியாத அளவிற்கு நீதிபதிகளும், வக்கீல்களும் வாயை பிளக்குறாங்க...” என்னடா நமக்கு தெரியாத சட்டத்தையும், விதியையும் தெரிஞ்சி வச்சியிருக்கானே அப்படீன்னு.

இப்பெல்லாம் பட்டிக்காட்டான் மட்டுமல்ல படிச்சவங்களும் பல விசயங்களில் வாய்பிளக்குறாங்க. அதிலேயும் சட்ட விசயத்துல சட்டம் படித்த வக்கீல்களும், நீதிபதிகளுமே வாயை பிளக்கும் போது மற்ற படிப்பு படித்தவர்கள் எம்மாத்திரம்?

அது எப்படிங்க வக்கீலுக்கு படிக்காம சட்டம் பேசமுடியுது... நீதிமன்றத்துல வாதாட முடியுது என்பது பலருக்கும் ஆச்சரியமான விசயமாகவே உள்ளது.

பாரத் சஞ்சார் நிகாம் லிட் தொலை தொடர்பு நிறுவனம் (தொல்லை தொடர்பு நிறுவனம்) என் வீட்டு தொலைபேசியை சரி செய்து தராததால், அதன் மீது திருவள்ளுர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற வழக்கு எண் 57/2005 பதிவு செய்து வழக்கை தானே நடத்தி வந்தேன்.

நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவரு, எல்லா நீதிபதிகளையும் போலவே எப்படி எவ்வளவு நாட்களுக்குள் வழக்கை நடத்தி முடிக்கனும் என்று தெரியாம வாய்தா போட்டுக்கிட்டே இருந்தாரு.

இது எனக்கு அத்ர்ச்சியளிக்கவே, பொருக்கமுடியாம ஒரு நாள் நுகர்வோர் பாதுகாப்பு உட்பட எனக்கு தெரிந்த அனைத்து சட்டத்தையும் பேச ஆரம்பிச்சிட்டேன்.

நான் பகுத்தறிவு கொள்கை உடையவன் என்பதால, அவ்வப்போது கருப்பு சட்டையும் போடுவேன். சட்டம் பேச நேர்ந்த அன்னைக்குன்னு பார்த்து கருப்பு சட்டை போட்டிருந்ததால, ‘‘என்ன இவரு என்னைக்குமே இல்லாம இன்னைக்கு இவ்வளவு சட்டம் பேசுறானேன்னு...’’

ஒருவேளை நம்ம சாதி வக்கீலா இருப்பானோன்னு நினைத்து விட்டார் போலும்!

உடனே, ‘‘நீங்க என்ன படிச்சிருக்கிங்கன்னு’’ பொறுக்க முடியாம தலைவரு, அதாங்க நீதிபதி கேட்டே விட்டார்.

வழக்காட வந்த நமக்கென்ன வேலையா போட்டுத்தர போறாங்க... இப்படி கேள்வி கேட்குறாங்க...

இப்படியொரு கேள்வியை, அதாவது நீங்க சட்டம் படிச்சிருக்கிங்களா என நீதிபதி உங்களை கேள்வி கேட்டால், ‘‘சமைக்க தெரியாம சாப்பிடும் உரிமை உங்களுக்கு எப்படி இருக்கிறதோ, அதுபோலவே சட்டம் படிக்காம வாதாட எனக்கு உரிமை இருக்கிறது’’ என சட்டென பதில் சொல்ல அடிப்படையில் சொல்லிக் கொடுத்திருக்கார், வாரண்ட் பாலா!

ஆனாலும், இப்படி உங்களுக்கு தெரிந்து வகையில் எதை வேண்டுமானாலும் பேசி மடக்குங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்துவார்.

நான் பகுத்தறிவு வாதி ஆயிற்றே... சிந்திக்காமல் இருப்பேனா?

உடனே நானும், “பெரியாரின் விடுதலை படிச்சிருக்கேன், அண்ணாவின் திராவிட நாடு படிச்சிருக்கேன், இப்போ நீதியைத்தேடி... கடமையைச் செய்! படிச்சிக்கிட்டு இருக்கேன் என்றேன்”.

உடனே, ‘‘அடடா அவனா நீ’’ என, நான் யாருன்னு அவருக்கு புரிஞ்சு போச்சு! கூடவே, கருப்பு சட்டை போட்டிருந்ததால வக்கீலா இருப்பிங்களோ அப்படின்னு சந்தேகம் வந்தாலும், எந்த வக்கீலு சட்டம் பேசுறாங்கங்னு கொஞ்சம் யோசிக்காம கேள்வி கேட்டது நம்ம தப்புதான்னும் புரிஞ்சி போச்சு!

நீங்க தப்பா எடுத்துக்காம, நட்பு அடிப்படையில நீங்க என்னென்ன படிச்சிருக்கிங்கன்னு எனக்கு கொஞ்சம் சொல்லுறீங்களா? நீங்க படிக்கிறத நானும் படிச்சிகிட்டா எப்போதாவது, யாராவது எடக்கு மடக்கா கேள்வி கேட்டா, இப்படி பொருத்தமா பதில் சொல்ல உதவும் இல்லியா?

(மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் விரைவில் வெளிவர உள்ள கடமையைச் செய்! பலன் கிடைக்கும் இதழின் தொகுப்பு நூலில் இருந்து...)

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)