No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, August 26, 2013

பட்டுப்போகும் பாரம்பரியம்!நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! என்ற நமது சட்ட விழிப்பறிவுணர்வு நூல், பாதிக்கப் பட்டவர்களுக்கு வரப்பிரசாதம் என்ற நிலைமாறி எல்லா தரப்பினருமே விரும்பி படிக்கக்கூடிய ஒரு நூலாக இருக்கிறது. 

இந்நூல்கள் குறிப்பாக சட்டம் தொடர்பான அதிகாரங்களைத் செலுத்துகிற காவல் துறையினர், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகளின் நீதிக்குப் புறம்பான செயல்பாடுகளை தோலுரித்து காட்டுகிறது.

படிக்கிற பாமரர்கள் முதல் மெத்தப்படித்த மேதாவிகள் வரை என்னிடம் தவறாமல் கேட்கிற கேள்வி, ஒவ்வொருத்தரும் வாதாடலாம் என்கிற போது, ‘‘எதுக்குங்க வக்கீல்கள் எல்லாம் வக்கீலுக்கு படிக்கிறாங்க..?’’

வக்கீலுக்கு படிக்கிற அந்தந்த பொய்யர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியை, படிக்காத என்னை கேட்டால், ‘நேர்மையான தொழிலைச் செய்ய வக்கில்லாமதான், வக்கீலுக்கு படிக்கிறாங்க...’ என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல முடியும்?

பொதுவாக ஒரு தொழில் செய்பவர்களைப் பற்றி விமர்சித்தால், அவர்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற வகையில் கோபம் கொள்ளத்தான் செய்வார்கள்.

ஆனால், இதிலிருந்து முற்றிலும் விதி விலக்காக கீழ்நிலைக் காவலர்கள் முதல் மேல்நிலைக் காவல் ஊழியர்கள் வரை படித்து விழிப்பறிவுணர்வு பெற்றுள்ளோம் என்றும், அதில் எங்களைப்பற்றி எதுவும் தவறாக சொல்ல வில்லை என்றும், உண்மையை தவறு செய்தவர்களை 100% ஆதாரப்பூர்வமாக, அனுபவப்பூர்வமாக புகைப் படங்கள் மற்றும் வழக்கு எண்களுடன் கூட விமர்சித்து இருக்கிறீர்கள் என சொல்லி மகிழ்கிறார்கள்.

மறுபக்கமோ வக்கீல்கள் முதல் நீதிபதிகள் வரை படித்து தெரிந்து கொள்கிறார்கள் என்பது வாசகர்கள் மற்றும் வக்கீல்கள் மூலமாகவே அவ்வப்போது தெரிய வருகிறது. நீதிமன்றங்களுக்கு நன்கொடையாக கொடுத்து விடுவதால் நீதிபதிகளும், நீதிமன்ற ஊழியர்களும் படிப்பது எளிதாகி விடுகிறது. ஊழியர்கள் படித்தால், நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்து சில நீதிபதிகள் வீட்டுக்கு எடுத்துச் சென்று வைத்துக் கொள்கிறார்கள் என்பது அ(ந்)நீதிமன்ற ஊழியர்கள் மூலம் தெரிகிறது.

அ(ந்)நீதிமன்ற ஊழியர்கள் படித்தால் கூட, அ(ந்)நீதிபதிகள் (அந்நீதி, அப்பீதி, அப்பேதி)மன்றத்தின் தலைமை ஊழியர்கள் என்பதற்காக மதித்தாக வேண்டும். ஆனால், வீட்டில் பொண்டாட்டி புள்ளைங்க படிச்சா, உங்க மேல இருக்கிற கோவத்துல, ‘‘இவ்வளவு ஃபிராடு பண்ணுற நீயெல்லாம் ஒரு நீதிபதியான்னு’’ கேட்டு தூக்கிப் போட்டு மிதிச்சாலும் மிதிப்பாங்க...

அப்படியேதும் அசம்பாவிதம் நடந்து, படக்கூடாத இடத்துல பட்டு, உங்க உயிருக்கு ஏடா கூடமா எதாவது ஆகிப்போச்சுன்னா, கோர்ட்டுக்குன்னு கொடுத்தத, திருட்டுத்தனமா வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போனது, ஐ.பி.சி ..... (யுவர் ஆனர், நீதியைத்தேடி... படிச்ச உங்களுக்கு தெரியாத சட்டமில்ல. அதனால அந்த கேப்புல என்னன்ன பிரிவுகள் வருமோ அதெல்லாம் கேர்(ஃ, பு)ல்லா போட்டுக்குங்க - வடிவேலு) இன்படி, உங்க தப்பேங்கிற வகையில், நாங்க பொறுப்பாக மாட்டோம்.

உங்க கூட்டு கொள்ளையர் சந்துரு வேற, மதுரையில தாலி கட்டிய கணவன் வேலி தாண்டாதே என்று சொல்லி தடுத்ததற்காக, பெற்ற மகளையே கற்பழிக்க முயற்சித்தார், ஆதலால் நானே அடித்து கொண்டு விட்டேன் என திட்டம் போட்டு, கூலிப்படை வைத்து, கொடூர ஆயுதங்களைக் கொண்டு, கொலை செய்ய தூண்டியும், துணை நின்று மனைவி செய்த கொலையையே, தப்பில்லை; தற்காப்பு! என தாண்தோன்றித் தனமாக தீர்ப்பு சொல்லி உள்ளதால், இதைச் சொல்லியே உங்களது மனைவியும், துணைவியும் தப்பிக்க வசதி செய்து கொடுத்திருக்கிறார்...

அதனால, உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்திக் கொள்வது என்னான்னா, அந்த தீர்ப்புரையை நாங்க ரத்து செய்து, அம்மனைவியை ஜெயிலுக்கு அனுப்புற வரைக்குமாவது, வீட்டுல நல்ல புள்ளையா, பொண்டாட்டி புள்ளைங்க சொல்லுறத கேட்டுகிட்டு, பொட்டிப் பாம்பா, அடங்கி ஒடுங்கி பத்திரமா இருந்துக்கோங்க...

நீதியைத்தேடி... நூலைகளை வாங்க நினைக்கிற வக்கீல்கள் எங்களை தொடர்பு கொள்ளும் போது, இந்நூல்கள் உங்களின் தொழிலுக்கு நேரெதிரான கொள்கை கொண்டது, வக்கீல்களையும், நீதிபதிகளையும் தீ(தி)ட்டி எழுதியிருப்போம், ஆதலால் தேவையில்லாமல் காசை செலவு செய்து, வாங்கி படித்து விட்டு டென்ஷன் ஆகாதீர்கள் என்போம்.

ஒருசிலர், நாமளே சட்ட ரவுடிகள்... நம்மள திட்டுற அளவுக்கு யாருக்கு தைரியம் என யோசிப்பார்கள். ஆனாலும், அப்படி என்னதான் சொல்லியிருக்கீங்கன்னு பார்க்கனும் என்பார்கள்.

ஒருசில பொய்யர்களோ இல்லையில்லை, எங்களின் நீதிபதி அதை மறைத்து வைத்து (படி, பார்)த்துதான் தீர்ப்பு சொல்கிறார். அதனால், நாங்களும் படித்துக் கொண்டால், தீர்ப்பை பெற உதவியாய் இருக்கும். அதனால்தாம் கேட்கிறோம் என கெஞ்சியே கேட்கிறார்கள்.

வாங்கி படித்து விட்டு, உண்மையத்தானே உடைச்சி சொல்லியிருக்கோம் என நினைக்கிற பொய்யர்கள், ‘சார் அவரு எங்கள திட்டல... எங்களோட அறியாமையதான திட்டுறாரு’ என சொல்லி நட்பு உறவாடுகிறார்கள்.
பதிலுக்கு நாமும் உறவாடினால், நீதிமன்றத்துல நீதிபதி முதல் யார் யார் என்னென்ன தில்லுமுல்லு செய்யிறாங்க.. எப்படிச் செய்யிறாங்க... எந்தெந்த கேசுக்கு, யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறோம் அப்படீன்னு நமது கருத்தை ஆதரித்து, பகிரங்க பட்டியல் போடுறாங்க...

ஆனாலும், அப்பொய்யர்கள் சொன்னது உண்மை என நம்பி, அப்படியே வெளியில சொல்ல முடியாது. ஏன்னா, வாங்குற கூலிக்கு பொய் சொல்றதே, அவங்க தொழில் தர்மமாக இருக்கும் போது, நாம கொடுக்காத கூலிக்கு சொல்லுறது மட்டும் எப்படி உண்மைன்னு ஏத்துக்க முடியும்!

ஒருவேளை உண்மையாகவே இருந்தாலும் கூட, எல்லா பொய்யர்களும், கொள்ளையர்களும் சேர்ந்து செய்யிற திருட்டு விபச்சார செயலுக்கு, ஓரிரு பொய்யர்களை மட்டும் எதுக்கு தர்ம அடி வாங்க வைக்கோனும்?

இவர்களே, முதலில் சலுகை விலையில் எங்களுக்கு 500 செட் புத்தகங்களை கொடுங்கள். பிறகு 5000 செட்டுக்கு ஆர்டர் கொடுக்கிறோம். தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொரு வக்கீலுக்கும், நீதிபதிக்கும் கொடுத்து படிக்கச் சொல்லனும் என்று வியாபாரத்தில் இறங்க முயற்சிக்கிறார்கள்.

பொதுவுடைமை என்பதால், உங்களது பெயரிலேயே அல்லது உங்களது வழக்கறிஞர் சங்கப் பெயரிலேயே, நீதியைத்தேடி... நூல்களை அச்சடித்து தருகிறோம் என்றால், வக்கீல் ரவுடிகளிடம் யார் தர்ம அடி வாங்குவது என்கிற எண்ணத்தில், அய்யோ வேண்டவே வேண்டாம் என்று அலறுகிறார்கள்.

உன் நண்பர் யார் என்று சொல்; உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பதற்கு இணங்க வக்கீலின் உதவியாளர்கள் வழக்கில் சிக்கிக் கொண்டால், நம்புவது அவ்வக்கீலை அல்ல. நீதியைத்தேடி... நூல்களைத்தான். 

நீதித்துறையால் பழிவாங்கப்பட்ட நீதிபதி (நடுவர்) நம்புவதும் நீதியைத்தேடி... நூல்களைத்தான். 

தப்பித்தவறி சட்டப்படிப்பு படிக்கின்ற யோக்கியமாணவர்கள் எவராவது இருந்து படித்து விட்டால், படிப்பை பாதியிலேயே கை விட்டுட்டு, விபச்சாரத்தை மூடி மறைக்க உதவும் கருப்பு கோட்டையும் கை விட்டுட்டு, நீதியைத்தேடி... குறித்த கருத்துப் பிரச்சாரத்தில் இறங்கி விடுகிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும், கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள். தனக்காக தானே வாதாடலாம் என தெரியாமலும், எப்படி போராடுவது என புரியாமல் போராடி, பொய் வழக்குகளால் சிறைக்கு சென்று, குடும்பம் பாதிக்கப்பட்டு, வக்கீல்களால் வஞ்சிக்கப்பட்டு, நான் சொல்வது போலவே, பாதுகாப்புக்காக வக்கீலுக்கு படித்து, இதுவும் பயனில்லை என நீதியைத்தேடி... படித்தப்பின் முடிவெடுத்தவர்கள்.

படித்து முடித்து வக்கீல் தொழிலுக்குள் இறங்கிய இளைஞரோ, “You made me hate my advocacy profession... Really I never read the law in my five year college life but your five books makes it so.... Really your work is very honour.. Hats off you....” என பகிரங்கமாக முகநூலில் நூல் விட்டுட்டு, வேறு வேலை தேடுவதாகவும், தன்னால் இயற்ற நிதி பங்களிப்பை செய்வதாகவும் சொல்கிறார்.

நீதிபதியாகலாம் என்கிற எண்ணத்தில் இருந்த ஒருவர், நீதிபதிகளை வறுத்தெடுப்பது எப்படி கட்டுரையை படித்தப்பின், “ya very good, let us all follow this. but sure i will not become a judge anymore” என பின்னூட்டம் இடுகிறார்.

இந்தியாவின் 25 வது தலைமை நீதிபதி நீதியைத்தேடி... நூல் குறித்து என்ன கருத்து சொன்னார் என்று அடுத்தப்பதிவில் பார்ப்போம்.  மொத்தத்தில், பொய்யர்களின் பாரம்பரியம் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, August 19, 2013

பிச்சைகள் பலவிதம்!லஞ்சம் என்பதற்கு சுத்த தமிழில் கையூட்டு என்கிறார்கள். இதை விட பிச்சை என்று சொல்வதே மிகவும் சரியானதாக இருக்கும். ஏன், எப்படி, எதற்காக என்று பார்ப்போம்.

பொதுவாக, நாம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் உணவு மற்றும் உடமைகள் கேட்டு வருபவர்களை தான் பிச்சைக் காரர்கள் என்கிறோம். இவர்களுக்கு அரசு அங்கீகாரமாக, ‘‘வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்’’ என்று பெருமையாக சான்றிதழும் கொடுக்கிறது.

ஆனால், உண்மையில் பார்க்கப்போனால் நாட்டில் பலவேறு விதங்களில் பிச்சைக்காரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்பிச்சைக் காரர்களுக்கு நீங்கள் பிச்சைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று நான் சொன்னால், ‘இல்லையில்லை. நான் பிச்சை போடுவதே இல்லை’ என்று விவாதம் செய்ய விரும்புபவர்கள் எப்படியெல்லாம் பல்வேறு மாறுபட்ட விதங்களில் பிச்சைப் போடுகிறீர்கள் என்பதை பார்ப்போம்.

தெருவோர, சாலையோர மற்றும் வீடு தேடிவரும் பிச்சைக்காரர்கள் தவிர, ‘‘அனுதினமும் மக்களை சந்திக்கும் பிச்சைக்காரர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள்தாம்’’.

போக்குவரத்துறை என்று எடுத்துக் கொண்டால் சொந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு பணப்பிச்சை போடுகிறார்கள். வாகன ஒட்டிகள் அல்லாத பிற பயணிகள் சில்லரையை கொடுக்க விரும்பாத நடத்துனர்களுக்கும், கொண்டு செல்லும் சுமைக்கு கட்டணம் அல்லாது கூடுதல் பணம் கேட்கும் நடத்துனருக்கும், இவரின் மூலமாக ஓட்டுனருக்கும் பணப்பிச்சை போடுகிறார்கள்.

நெடுந்தொலைவு பயணத்தில் வழியோர உணவகங்களில் அப்பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதன் மூலமாக அப்பேருந்தின் நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் உணவுப்பிச்சை போடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் கண்டும் காணாத மாதிரி இருக்கும் அப்போக்கு வரத்து கழக நிர்வாகிகளுக்கு எந்த விதத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களால் பிச்சைப் போடப்படுகிறது என்பது தெரிய வில்லை.

மொத்தத்தில், அரசு வரி என்கிற பெயரில் குடிமக்களிடம் நம்மிடம் இருந்து பிச்சையை சட்டப்பூர்வமான கட்டாயமாக்கி (பிடுங்கி) தனது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்காக தன் ஊழியர்களுக்கு பல்வேறு வகைகளில் வாரி வழங்குகிறது.

இதில் அரசையும், அது சார்ந்த ஊழியர்களை மட்டும் குறை சொல்வது என்பது நடுநிலையான சிந்தனையாக இருக்காது. மாறாக, பல்வேறு தரப்பட்ட மக்கள் எப்படி எல்லாம் அதிநுட்பமான முறையில் பிச்சை எடுக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் தங்களின் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தி பல்வேறு விதங்களில், விதங்களில் பிச்சை எடுக்கின்றன.

லஞ்சப் பிச்சையை ஒழிப்பதற்காக புறப்பட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஆண்டுச் சந்தா அல்லது ஆயுள் சந்தா என்ற பெயரில் பிச்சை எடுக்கின்றன.

சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள் அவர்களை மூலதனமாக வைத்து விவரிக்க இயலாத வகையில் பல்வேறு விதங்களில் பிச்சை எடுக்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளிகளை ஏமாற்றி விட்டு முதலாளிகளோடு கை கோர்த்து விடுகின்றன.

மொத்தத்தில், தொண்டு (செய்வதற்காக புறப்பட்ட) நிறுவனங்கள் எல்லாம் ஃபண்டு நிறுவனங்கள் ஆகி விட்டன. தொண்டு நிறுவனங்களை சல்லடை போட்டு சலித்தாலும் கிடைப்பதில்லை என்பதைப்பற்றி பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும், லஞ்சப் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்பதுதானே முக்கியம்.

லஞ்சம், கையூட்டு என்பது ஒரு கேவலமான வார்த்தையல்ல. மாறாக, புனிதமான வார்த்தைகள் என்றாகி விட்ட இன்றைய கால கட்டத்தில் ‘‘பிச்சை’’ என்ற வார்த்தை மட்டும் கொஞ்சம் அருவருக்கத்தக்க சொல்லாக கருதப்படுகிறது.

எனவே, இனி யாராவது எந்த விதத்திலாவது லஞ்சம் கேட்டால், ‘‘அதற்கு பதிலாக எனக்கு பிச்சை போட்டு பழக்கமில்லை. பிச்சை போடுபவர்களாக பார்த்து கேளுங்கள்’’ என்றோ அல்லது ‘‘பிச்சைக் காரர்களுக்கு பிச்சை போடுவது தர்மம். ஆனால், உங்களுக்கு போடுவது அதர்மம்’’ என்றோ பலர் அறிய பகிரங்கமாக ஒருமுறைச் சொல்லிப் பாருங்களேன்.

தனது மானம், மரியாதை, கௌரவம் என எல்லாம் ஏற்கனவே இருந்தது போலவும் ஆனால், தற்போது போய் விட்டது போலவும் கருதி, அதனை மீட்டெடுக்கும் விதமாக உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ கூட உங்களிடம் இருந்து பிடுங்கிய லஞ்ச பணத்தை கூட, பலர் அறிய திரும்ப கொடுத்து விடுவார்கள் என்பது எனக்கு பலவிதங்களில் கிடைத்த சுவரசியமான அனுபவம்.

அதோடு, வேறு யாரிடமும் கூட இது போன்று பிச்சை எடுக்க வெட்கப்படுவார்கள்.

ஆம்! மனம் விரும்பி கொடுப்பது மட்டுமே தருமம். கேட்டு கொடுப்பது பிச்சையேதான் என்பதால் இந்தச் சொல்லும் அனைத்து சூழ்நிலையிலும், அனைத்து இடங்களிலும், உங்களின் லஞ்சப் பணத்தை காப்பாற்றி லஞ்சத்தை ஒழிக்க ஒரு சிறந்த வழியாக இருக்கும் என நம்புகிறேன்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, August 18, 2013

‘மரு’ அம்மா ஆக வேண்டிய மாமி ‘யார்’இன்றைய சமுதாயம் பல வழிகளில் முன்னேற்றத்தைக் கண்டு வந்தாலும், சில வழிகளில் மிக மோசமான விளைவுகளை சந்தித்த படியே உள்ளது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்ற நிலை மாறிப்பல காலம் ஆகிப் போச்சு. இன்றைய நிலையில் பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறு பக்கம் வேறு விதமாக அல்லவா இருக்கிறது? ஒரு பெண் சரியாக இருந்தால், அந்த குடும்பமே நல்வழிப்படும் என்பார்கள். குடும்ப தலைவி என்பவள் அத்தகைய சக்திகள் படைத்தவளே! ஆனால், எத்தனை குடும்பத் தலைவிகள் செவ்வனே செய்கிறார்கள்?

பெண் என்பவள் மண்ணுக்கு நிகர் அன்றோ! மண்ணை நாம் எவ்வளவுதான் வெட்டினாலும், கொத்தினாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு நமக்கு நன்மையை மட்டுமே அல்லவா செய்கிறது. அதுபோல்தானே பெண்களும் தன்னை வருத்திக் கொண்டு மனித சந்ததிகளை வளர்க்கிறார்கள்.

ஆனால், சில பெண்களோ சுயநலம் என்ற நெருப்பை தன்னைச் சுற்றி எறிய விட்டு தன்னையும் அழித்துக் கொண்டு, தன் உற்றார் உறவினர்களையும் அல்லவா அழிக்கிறார்கள்.

நேற்றைய மருமகள்தான் இன்றைய மாமியார் என்பது சில பெண்களுக்கு மறந்தே போகிறது.

திருமணத்திற்கு முன் ஒரு பெண் தன் தாய் வீட்டில் பொறுப்புகள் அதிகமின்றி சுதந்திர பறவையாக சுற்றித் திரிகிறாள். ஆனால், மணமானபின் நிறைய பொறுப்புகள் கூட குடும்பத்தலைவி என்னும் புதிய பதவியை ஏற்கிறாள்.

இங்குதான் சிக்கல் ஆரம்பம் ஆகிறது. தன்தாய் வீட்டில் சற்றி திரிந்த போது என்ன திட்டினாலும், ஏசினாலும் அதை அமுத மொழியாக தாங்கி கொண்டவள், மாமியார் வார்த்தைகளை மட்டும் இடி தாங்கி போல் தாங்கி கொள்ள மறுக்கிறாள்.

தன் வாழ்க்கையில் இணைந்த தனது கணவனை, குழந்தை முதல் குமரன் வரை தாலாட்டி, பாலூட்டி, நோய் நொடிகளில் காப்பாற்றி அவனுக்காக கண் விழித்து, கண்ணீர் வடித்து வளர்த்து, தனக்கு கல்யாணம் செய்து வைத்த மாமியார், இவள் மருமகளாக வந்து நுழைந்த அடுத்த நிமிடமே மாமியார் தன் பொறுப்புகளையும், ஏன் பாசத்தையும் கூட மறந்து ஒரு மூலையில் முடங்கி கிடக்க வேண்டும் என நினைக்கிறார்களே!

இது எந்த வகையில் நியாயம்?

சற்றே சிந்தியுங்கள்... விட்டுக் கொடுப்பதற்கு தாய்ப்பாசம் என்ன வாடகைத்தாய் வியாபாரமில்லையே!

உங்களுக்கு கணவனை திருமணம் செய்து கொண்ட அன்றுதான் தெரியும். ஆனால் உங்கள் மாமியாருக்கோ கருவிலேயே தெரியும். என்னடா எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று ஏதோ ஒரு பக்கமாகவே பேசுகிறேனே என்று நினைக்காதீர்கள்.

ஒரு வீட்டில் மகளாக இருக்கிற நீங்க மறு வீட்டுக்கு போகும் போது ‘மரு’ மகள் என்று, மாமியார் உட்பட ஊர் உலகமே சொல்லுது. அதேபோல நீங்க திருமணமாகி போகிற வீட்டுல, உங்க வீட்டுல அம்மான்னு கூப்பிட்ட மாதிரி ‘மரு’ அம்மா என்றுதானே கூப்பிட வேண்டும்?

ஆனால், நீங்க ஏன் ‘மாமி’யார் என்று கூப்பிட்டு, “நான் எதைச் செய்தாலும், அதைக் கேட்க மாமி ‘நீ’ யார் என அவங்க கூட மல்லுக்கு நிக்குறீங்க; மத்தவங்க நிம்மதிய கெடுக்குறீங்க?”

ஒரு விசயம் தெரியமா உங்களுக்கு!

பிறப்பால் ஆண்களாக பிறக்கிற வெகுசிலர் தனது வாலிப வயதை நெருங்கும் போது குரோமோசோம் குறைபாட்டால், மனதளவில் பெண்களுக்கு உரிய மனோபாவம் வளர்ந்து, பெண்களைப் போலவே நடை, உடை, பாவனை என செயல்கள் மாறுபடும்.

அப்போது, “அவ(னை, ளை) பெற்றெடுத்த அம்மாவே தாய்ப்பாசத்தை மறந்து வெறுத்து ஒதுக்குகின்ற நிலையில் அவ(னு, ளு)க்குத் தேவையான அன்பையும், ஆதரவையும் தந்து காப்பது, தாயம்மாவே!’’.

மரபணு குறைபாட்டால் திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மாறிய பாலினத்தவர்களின் மூத்த மூதாதையர்கள் தான், இந்த தாயம்மாக்கள்!!

இப்படி மாறிய பாலினத்தவர்களான திருநங்கைகள் தம்மைப் போலவே மாறிய மூதாதையர்களை தாய்க்கு நிகரான அம்மாக்களாக ஏற்றுக் கொள்ளும் போது, “தனது மகன்களுக்கு உங்களை திருமணம் செய்து வைத்து, ‘மரு’மகளாக ஏற்றுக் கொள்ளும் மாமியாரை, மாமியார் என அழைக்காமல் ‘மரு’ அம்மா என ஏற்றுக் கொண்டு அழைக்கக் கூடாது?”

இது போன்ற உங்களின் நல்ல சீர்த்திருத்த வார்த்தைகள்தாம், நீங்கள் ‘மரு’ மகளாக சென்றுள்ள வீட்டில், வரதட்சினையில் ஆரம்பித்து ஸ்டவ் வெடிப்பதை கூட நிப்பாட்டும் வல்லமை கொண்டது என்பதோடு, காலங்காலமாக இருந்து வரும் இந்திய கூட்டுக் குடும்ப பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றும்.

ஆம்! ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பதை பெண்கள் உணர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள உயிர்களை வாழ வைக்கும் மண் போலவே, ஒவ்வொரு ‘மரு’ மகளும் உங்கள் சுற்றமும் செழித்து வளர அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், மருமகள் வந்தால் நம் நிலைமை தலைகீழாய் மாறி விடும் என நினைத்து, எந்த தாயும் தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பதில்லை. மாறாக, இதனை உணர்ந்து மகனே திருமணத்தை மறுத்தாலும் வற்புறுத்தி செய்து வைக்காமல் விடுவதில்லை.

அம்மாக்களின் இச்செயல்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் மாக்களின் செயல் அன்று.

மாறாக, ‘நம் சுற்றம் உங்களால் வளரும் என்ற நம்பிக்கையே’ என்கிற எதார்த்த நிலையில், மாமியார் கொடுமைன்னு எல்லோரும் ஒரு தரப்பாகவே சொல்வது ‘மரு’மகள்கள், மாமி ‘நீ’ யார் என தனக்குத்தானே மனதால் எண்ணியும், தனது எண்ணத்தை வெளிப்படுத்தி தம்மனதையும் பிறர் மனதையும் சொற்கொடுமை செய்தால் எழும் எண்ண விளைவுகளே அன்றி, வேறில்லை.

இது இப்போது உங்களுக்கு புரியாவிட்டால், நீங்கள் மாமியாராகும் போது நிச்சயம் புரிந்தே தீரும்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, August 14, 2013

நீங்க என்ன படிச்சிருக்கிங்க!
என்ன திடீர்னு வாரண்ட் பாலா, நம்மை எல்லாம் இண்டர்வியூவுல கேள்வி கேட்கிற மாதிரி கேள்வி கேட்கிறாரு... எதாவது வேலை வாங்கி தரப்போறாரா என சந்தோசப்படாதிங்க.

அவரே கிடைக்கிற வெளிநாட்டு வேலையெல்லாம் கூட வேண்டாம்னு விட்டுவிட்டு, நமக்காக சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டிக்கிட்டு இருக்காரு. அவரு எங்க உங்களுக்கு வேலை வாங்கி தர்றது?

அப்படீன்னா நீங்க வாரண்ட் பாலா இல்லையான்னு கேட்காதிங்க. நிச்சயமா இல்ல... நான் யாரு என்பதை பின்னால தெரிஞ்சிக்கலாம். என்னோட சட்ட அனுபவத்தை தொடர்ந்து படிங்க...

முன்பெல்லாம் வேலை தேடி நேர்முகத்தேர்வுக்கு செல்கிறவர்களை பார்த்து தேர்வு நடத்துபவர்கள், என்ன படிச்சிருக்கிங்க என்று கேட்டாங்க.

ஆனா இப்போ இந்த கேள்விய நேர்முகத்தேர்வுல கேட்கிறாங்ளோ இல்லியோ, வாரண்ட் பாலாவின் வழிகாட்டுதலில் நீதிமன்றத்துல வாதாட போறவங்கள நீதிபதிகள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த அளவிற்கு நாம பேசுர சட்டத்தால புல்லரித்து போயிடுறாங்க.

ஊர்ப்புறங்களில் எதாவது நியாயமா பேசினா, ‘‘என்ன சட்டம்லா பேசுற’’ அப்படீன்னு கேள்வி கேட்பாங்க.

நீதிமன்றத்துல நாம பேசுற ‘‘நியாயம்தான் சட்டம்’’ அப்படீங்குற தத்துவத்துல வக்கீல்களும், நீதிபதிகளும் இதே நிலைமையிலதான் இருக்காங்க. இதுக்கு என்ன அர்த்தம்? கிராமத்துகாரங்களை போலவே, அவங்க பார்வையிலேயும் சட்டம் பேசினா தப்புங்கிறதான்.

ஆனா, சட்டம் படிச்ச அவங்களுக்கு, நம்மகிட்ட சட்டம் எதுவும் பேச தெரியலையே, பேச மாட்டேங்கிறாங்களே என்பது நம்மளோட ஆதங்கம்.

ஆம், நாம் சட்டம் பேச ஆரம்பித்தால், “பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி வாயில ஈ போறது கூட தெரியாத அளவிற்கு நீதிபதிகளும், வக்கீல்களும் வாயை பிளக்குறாங்க...” என்னடா நமக்கு தெரியாத சட்டத்தையும், விதியையும் தெரிஞ்சி வச்சியிருக்கானே அப்படீன்னு.

இப்பெல்லாம் பட்டிக்காட்டான் மட்டுமல்ல படிச்சவங்களும் பல விசயங்களில் வாய்பிளக்குறாங்க. அதிலேயும் சட்ட விசயத்துல சட்டம் படித்த வக்கீல்களும், நீதிபதிகளுமே வாயை பிளக்கும் போது மற்ற படிப்பு படித்தவர்கள் எம்மாத்திரம்?

அது எப்படிங்க வக்கீலுக்கு படிக்காம சட்டம் பேசமுடியுது... நீதிமன்றத்துல வாதாட முடியுது என்பது பலருக்கும் ஆச்சரியமான விசயமாகவே உள்ளது.

பாரத் சஞ்சார் நிகாம் லிட் தொலை தொடர்பு நிறுவனம் (தொல்லை தொடர்பு நிறுவனம்) என் வீட்டு தொலைபேசியை சரி செய்து தராததால், அதன் மீது திருவள்ளுர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற வழக்கு எண் 57/2005 பதிவு செய்து வழக்கை தானே நடத்தி வந்தேன்.

நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவரு, எல்லா நீதிபதிகளையும் போலவே எப்படி எவ்வளவு நாட்களுக்குள் வழக்கை நடத்தி முடிக்கனும் என்று தெரியாம வாய்தா போட்டுக்கிட்டே இருந்தாரு.

இது எனக்கு அத்ர்ச்சியளிக்கவே, பொருக்கமுடியாம ஒரு நாள் நுகர்வோர் பாதுகாப்பு உட்பட எனக்கு தெரிந்த அனைத்து சட்டத்தையும் பேச ஆரம்பிச்சிட்டேன்.

நான் பகுத்தறிவு கொள்கை உடையவன் என்பதால, அவ்வப்போது கருப்பு சட்டையும் போடுவேன். சட்டம் பேச நேர்ந்த அன்னைக்குன்னு பார்த்து கருப்பு சட்டை போட்டிருந்ததால, ‘‘என்ன இவரு என்னைக்குமே இல்லாம இன்னைக்கு இவ்வளவு சட்டம் பேசுறானேன்னு...’’

ஒருவேளை நம்ம சாதி வக்கீலா இருப்பானோன்னு நினைத்து விட்டார் போலும்!

உடனே, ‘‘நீங்க என்ன படிச்சிருக்கிங்கன்னு’’ பொறுக்க முடியாம தலைவரு, அதாங்க நீதிபதி கேட்டே விட்டார்.

வழக்காட வந்த நமக்கென்ன வேலையா போட்டுத்தர போறாங்க... இப்படி கேள்வி கேட்குறாங்க...

இப்படியொரு கேள்வியை, அதாவது நீங்க சட்டம் படிச்சிருக்கிங்களா என நீதிபதி உங்களை கேள்வி கேட்டால், ‘‘சமைக்க தெரியாம சாப்பிடும் உரிமை உங்களுக்கு எப்படி இருக்கிறதோ, அதுபோலவே சட்டம் படிக்காம வாதாட எனக்கு உரிமை இருக்கிறது’’ என சட்டென பதில் சொல்ல அடிப்படையில் சொல்லிக் கொடுத்திருக்கார், வாரண்ட் பாலா!

ஆனாலும், இப்படி உங்களுக்கு தெரிந்து வகையில் எதை வேண்டுமானாலும் பேசி மடக்குங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்துவார்.

நான் பகுத்தறிவு வாதி ஆயிற்றே... சிந்திக்காமல் இருப்பேனா?

உடனே நானும், “பெரியாரின் விடுதலை படிச்சிருக்கேன், அண்ணாவின் திராவிட நாடு படிச்சிருக்கேன், இப்போ நீதியைத்தேடி... கடமையைச் செய்! படிச்சிக்கிட்டு இருக்கேன் என்றேன்”.

உடனே, ‘‘அடடா அவனா நீ’’ என, நான் யாருன்னு அவருக்கு புரிஞ்சு போச்சு! கூடவே, கருப்பு சட்டை போட்டிருந்ததால வக்கீலா இருப்பிங்களோ அப்படின்னு சந்தேகம் வந்தாலும், எந்த வக்கீலு சட்டம் பேசுறாங்கங்னு கொஞ்சம் யோசிக்காம கேள்வி கேட்டது நம்ம தப்புதான்னும் புரிஞ்சி போச்சு!

நீங்க தப்பா எடுத்துக்காம, நட்பு அடிப்படையில நீங்க என்னென்ன படிச்சிருக்கிங்கன்னு எனக்கு கொஞ்சம் சொல்லுறீங்களா? நீங்க படிக்கிறத நானும் படிச்சிகிட்டா எப்போதாவது, யாராவது எடக்கு மடக்கா கேள்வி கேட்டா, இப்படி பொருத்தமா பதில் சொல்ல உதவும் இல்லியா?

(மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் விரைவில் வெளிவர உள்ள கடமையைச் செய்! பலன் கிடைக்கும் இதழின் தொகுப்பு நூலில் இருந்து...)

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)