No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, July 27, 2013

நம் கடமையை ஏற்பதே, நமக்கான அங்கீகாரம்! அதிகாரம் !!கடமையைச் செய்! என்றாலே வாங்கிய கடனை திரும்ப கேட்கும் போது, போதிய பணமிருந்தாலும், மனமில்லாமல் எப்படி திருப்பிக் கொடுக்க கஷ்டப்படுவார்களோ அதுபோலவே, ‘நாம் ஏன் கடமையைச் செய்ய வேண்டும்; நமக்கு பதில் வேறு யாராவது செய்யட்டுமே அல்லது நாம் செய்யா விட்டாலும் வேறு யாராவது செய்யத்தானே போகிறார்கள்’ என்றே பெரும்பாலும் எண்ணுகிறார்கள்.

கடமை என்பது, நாம் யார் யாருக்கோ தீர்க்க வேண்டிய கடன் அன்று. மாறாக நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக, இயற்கை நிதியதிப்படியும், நியாயப்படியும் செலுத்த வேண்டிய (நல், உட)லுழைப்பே!

இந்த உழைப்பை முறையாக செலுத்தினால் மட்டுமே, நமக்கான உரிமை தாமாக நம்மைதேடி வந்து சேரும். இப்படி தானாக வருவதை மட்டுமே என்றும் இன்புற அனுபவிக்கலாம், நிம்மதியாகவும் வாழலாம்!!

மாறாக, ‘வேறு ஒருவருடைய உழைப்பினால் நமக்கு வரும் பலனானது, நாம் வாங்கிய கடனுக்கு ஈடானதே என்பதால், என்றாவது ஒருநாள் நாம் அதனை வட்டியும், முதலுமாக ஈடுசெய்தே ஆக வேண்டும்’.

இது இயற்கையின் நிய(தி)யரி என்பதால், ஈடு செய்வதில் இருந்து யாரும் எவ்விதத்திலும் தப்பவே முடியாது. நம்மிடம் போதிய பணம், பொருள் இல்லையென்றாலும் கூட, வேறு ஏதாவதொரு வகையில் செலுத்தத்தாம் வேண்டும்.

இதற்காக அசையும், அசையாச் சொத்துக்களைப் பற்றுகை செய்து ஏலத்தில் விற்றல் மற்றும் சொத்தில்லாத நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தல் ஆகிய விதிமுறைகள் நமது உரிமையியல் விசாரணை முறை விதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

‘நாட்டில் நடக்கும் போராட்டங்கள் எல்லாம் உரிமைகளுக்காகத்தான் நடக்கின்றனவே ஒழிய, ஒருபோதும் கடமையைச் செய்வதற்காக நடப்பதில்லை’.

இதில் விசித்திரம் என்னவென்றால், ‘அறவே சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாதவர்கள் கூட, உரிமையை நிலை நாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால், கடமையை மட்டும் கண்டும் காணாதது போல் தவிர்த்து விடுகின்றனர்’.

ஒருவர் நமக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்ய மறுக்கிறார். ஆதலால், அவருக்கு எதிராக, நமது உரிமைக்காக, நாம் போராட வேண்டியிருக்கிறது. ஆதலால்,  1. நாமும் நம் கடமையைச் செய்ய வேண்டும் என்பதும்,

  2. உரிமைக்காக நாம் பிறரிடம் போராடுவது போல், நம் கடமையைச் செய்வதற்காக யாரிடமும் அ(வ்வ)ளவாகவோ போராட வேண்டிய அவசியமில்லை என்பதும்,

  3. இப்படி ஒவ்வொருவரும் தத்தமது கடமையைச் செய்யும் போது, உரிமைக்காக யாரும், யாரிடமும் போராட வேண்டிய அவசியம் இருக்காது என்பதோடு, உரிமைகளுக்கு பஞ்சமும் இருக்காது என்பது மட்டும் ஏன் எவருக்கும் அ(வ்வ)ளவாகவோ விளங்குவதில்லை?

ஆம், பொதுமக்கள் செய்யும் குற்றங்களை விட, அதை தடுப்பதற்கான கடமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளும், அரசு ஊழியர்களும் செய்யும் குற்றங்களே அதிகம் என்றும், இவர்கள் மட்டும் தங்களின் கடமையைச் செய்வனே செய்து விட்டால், நாட்டில் 90% பிரச்சினையே இல்லை என்றும், 2006 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட குற்ற விசாரணைகள் என்கிற முதல் நூலிலேயே குற்றம் சாற்றியிருந்தேன்.

அப்போது, இதே கருத்தை மகா(த்மா, தாத்தா)க்கள் காந்தியும், பெரியாரும் கூறியுள்ளனர் என்பது எனக்கு தெரியாது. எனக்கு மட்டுமல்ல; அவர்களின் சீடர்களுக்கே தெரியவில்லை என்பதே உண்மை!

ஆம், நான் எழுதியதைப் படித்துப் பார்த்த பலரும், அடிமையாக இருந்த போதே இப்படியெல்லாம் கூட உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்களா என வியந்தவர்களே அதிகம்.

ஆனாலும், உலகின் மிகப்பெரும் குடியரசில் வாழும் நாமோ, பொய்யர்களிடமும், கொள்ளையர்களிடமும் இவைகள் குறித்து எடுத்துரைக்க மட்டுமல்ல; சக மனிதர்களிடமும், சுக உற்றார், உறவினர், நண்பர்களிடம் கூட அசை போட ஆசைப்படுவதற்கு பதிலாக அச்சப்படுகிறோம். அதனாலேயே அவர்களாலும் அல்லல் படுகிறோம்.

‘காரல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் தோழர்கள் கூட நீதித்துறையில் நிலவும் சீர்கேடுகளைப்பற்றி பதிணெட்டாம் நூற்றாண்டிலேயே (கொ, க)டுமையாக விமர்சித்து உள்ளனர்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இதுவரை அவைகள் எனது புலன்களுக்கு புலப்படவில்லை. ஆதலால், அறிவுக்கும் அகப்படவில்லை.

இதில் வேற்றுமையில் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் மூவருமே முறையே ஆன்மீகம், பகுத்தறிவு, கம்யூனிசம் என வெவ்வேறு மற்றும் எதிரும், புதிருமான கொள்கைகளைச் சார்ந்தவர்கள்.

அடிப்படை கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும், உண்மைகள் ஒன்றே என்பது அவர்களது சித்தாந்தங்களுக்கு பொருந்தியதோ இல்லியோ, சட்ட விடயத்தில் சாலப்பொருந்தி விட்டது என்பது, இதுவரை எவருக்கும் எட்டா(த, வது) உலக அதிசயம்தானே!

காந்தியார் முறையாக பாரிஸ்டர் பட்டம் பெற்ற வக்கீல் என்பதோடு இந்தியா, இங்கிலாந்து, தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் நீதிமன்றங்களில் வாதாடியவர் என்கிற முறையில் ‘‘நம் நாட்டில் வக்கீல் தொழில் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தில் ஆரம்பித்து, அதன் விளைவாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சீர்(செய்ய வேண்டிய)கேடுகள் அனைத்தையும் அடுக்கடுக்கான ஆணித்தரமான குற்றச்சாற்றுகளாகவே பதிவு செய்துள்ளார்’’.

இறுதியாக, ‘‘வக்கீல் தொழிலை விபச்சார தொழில் என்றும், அதனை வக்கீல்கள் கை விட்டால் ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும் என்றும், வக்கீல்களைப் பற்றி நான் கூறியன அனைத்தும் நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்றும், நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்; வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்; ஒருவருக்கொருவர் பக்கபலமாய் இருப்பவர்கள்’’ என்றும் தனது முதல் நூலும், தத்துவ நூலுமான இந்திய சுயராஜ்யம் நூலில், 11 வது கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

இக்கருத்து ஆங்கிலேய அடிமை காலத்தில் சொல்லப்பட்டது ஆயிற்றே; இது இப்போதும் பொருந்துமா என உங்களில் ஒரு சிலர் தவறா(து, க) நினைக்கலாம்.

ஆங்கிலேய மன்னர் ஆட்சியிலிருந்து நாம் விடுதலைப் பெற்று குடியரசு ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆட்சி மாற்றத்தை கண்ணால் காண முடிகிறதே தவிர, பெரும்பாலும் காட்சி மாற்றங்கள் எதுவும் பெரிதாக நடந்ததாக உணர முடியவில்லை. மாறாக, கட்சி ஆட்சி மாற்றங்களே பெரிதும் அரங்கேறி உள்ளன என்பதை மட்டுமே உணர முடிகிறது.

ஆமாம், உண்மையாக ஆங்கிலேயர்கள் நம் ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிட்டு அடிப்படையில் திணித்த வெற்றுச்சடங்கு கல்வி முறையும், உச்சகட்டமான பொய்யர்களின் படிப்பும், தொழிலும், கொள்ளையர்களின் நீதிமுறை விசாரணைகளும், இன்றும் எவ்வித மாற்றமோ, சீர்த்திருத்தமோ இல்லாமல் அப்படியேதாம் செயல்பாட்டில் இருக்கின்றன.

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.

வக்கீல் தொழிலை விபச்சாரம் என்று குறை கூறும் காந்தியார், எப்படி அத்தொழிலை செய்தார் என்ற கேள்வி உங்களைப் போலவே, எனக்கும் எழுந்த போதுதாம், ‘மிகுந்த சமூக அக்கறையோடும், சுமூக பொறுப்புணர்வோடும் செய்து, இதுவே உண்மையான வக்கீல்களின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்’ என்பதை அவரது சுயசரிதையை ஆராய்ந்தறிந்து அதைப்பற்றியும் தொகுத்துள்ளேன்.

காந்தியின் தொண்டனாய் இருந்து, பின் கருத்து வேறுபாட்டால் பகுத்தறிவாளராக மாறிய பெரியாரோ முறையாக சட்டப்படிப்பு பயிலாமல் அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து அனுபவத்தின் அடிப்படையில், ‘‘யோக்கியர்கள் இப்பதவிகளுக்கு தகுதியற்றவர்கள்’’ என குறிப்பிட்டுள்ளதன் மூலம், இத்தகைய தொழில்களை செய்பவர்கள், ‘அயோக்கியர்களே’ என பகுத்து (அறி, ஆராய்)ந்து கூறியுள்ளார்.

ஒரு பகுத்தறிவாளராக சாதியில் சமத்துவத்தையும், தொழிலில் சகோரத்துவத்தையும் நிலைநாட்ட முற்பட்டவரே, ‘‘இம்மூன்று தொழிலையும் ஈனத்தொழில்கள் (மனித இனம் செய்ய கூடாத தொழில்கள்)’’ என்று 10-05-1931 தேதிய குடியரசு வார இதழில், அதுவும் தலையங்கமாகவே எழுதியுள்ளார் என்றால் யோசித்துப் பாருங்கள்.

இதுமட்டுமல்லாமல், இத்தொழில்களில் பொதிந்துள்ள உள் அர்த்தங்களை, தனக்கே உ(ய)ரிய நகைச்சுவை பாணியில் பற்பல சமயங்களில் இதழ்களிலும், நூல்களிலும் எழுதியுள்ளதோடு சொற்பொழிவு ஆற்றியும் உள்ளார்.

இதற்கேற்றவாறு, ‘இவரது வக்கீல்களே நமக்கு நியாயம் கிடைக்காது என்று அவநம்பிக்கை கொண்டிருந்த பல்வேறு வழக்குகளில், தனக்குத்தானே வாதாடி தனது நியாயத்தை நிலைநாட்டி உள்ளார்’. இதையேத்தான் நானும், ‘உங்க பிரச்சினைய (உண்மைய, நியாயத்த) உங்களைத் தவிர வேறு யாராலும் சரியாக சொல்ல முடியாது’ என்று நீதியைத்தேடி... நூல்களுக்கான மையத்தத்துவமாக முன்மொழிந்துள்ளேன்.

இப்படி பல வழக்குகளில் வாதாடியுள்ளார் என்றும், இதிலும் உண்மையாக ஒரு முறை கூட தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படவில்லை என்றும், மாறாக, ஈனப்பிறவிகள் நீதிமன்றம் களையும் வரை தண்டனை என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் தண்டனை அறிவிக்கப்பட்டும், ஆனால் வயோதிகத்தை காரணம் காட்டி சிறையில் அடைக்காமல் விட்டு விட்டார்கள் என்றும் அவரது தொண்டர்கள் சொல்கிறார்கள்.

இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என நானும் நம்புகிறேன். ஆனாலும் இது குறித்த சரியான புள்ளி விபரங்களை ஆதாரங்களோடு கோரி சேகரிக்க முயன்று வருகிறேன்.

இதன் மூலம், எந்த அளவிற்கு உண்மையை, தனது தரப்பு நியாயத்தை பெரியார் எடுத்து வைத்திருப்பார் என்பதை அனுமானிக்கும் போது, ஈனப்பிறவிகளால் அவரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியவில்லை என்பதே சரி!

இதன் அடிப்படையில், பெரும்பா(லா, ழா)ன சமூகமே பெரியாரை முரண்பாட்டாளராக கருதுகிற நிலையில், அன்றே அவரது தரப்பிலும் நியாயம் இருக்கிறது என்பதை நிலைநாட்டி, ‘‘சமூகத்தின் பாதையில் போகிறவன் சாதாரண மனிதன். சமூகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பவனே சாதனை மனிதன்’’ என்கிற யுகமொழிக்கு ஏற்ப தனது வாழ்க்கையை வாழ்ந்தும், வழக்கை வாதாடி வென்றும் காட்டியுள்ளார்.

இவர் ஆங்கிலேய விபச்சாரிகளிடம் போராடியதை விட, நம் ஈனப்பிறவிகளிடம் போராடியதே அதிகம். தனது நியாயப் போராட்டத்தின் உச்சகட்டமாக, ‘‘நீதி கெட்டது யாரால்?’’ என்கிற அனுபவ நூலையும் எழுதியுள்ளார்.

இவருக்கு சட்டம் மட்டும் சரியாக தெரிந்திருந்தால், தனது கொள்கையில் இன்னும் சாதித்திருப்பார் என்பதும், தனது பகுத்தறிவு கொள்கைக்கு சட்டத்தை மையமாக வைத்து சமாதி கட்ட முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து தானே வாதாடியது போலவும், எது ஒன்றையும் பகுத்து ஆராய சமூகத்திற்கு அறிவுறுத்தியது போலவும், சட்ட விழிப்பறிவுணர்வுக்கும் அறிவுறுத்தி இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஆனாலும் இயற்கையின் நியாய விதிப்படி, தேவையான போது, தேவையான சமூக காரியங்களை செய்வதற்காக என்றே சமுதாயத்தில் ஒருவரோ அல்லது சிலரோ தோண்றுவார்கள் என்கிற எதார்த்த உண்மையை உணர்ந்து, அவ்வப்போதைய சமுதாய தேவையை பெரியார் உட்பட ஒவ்வொரு மகான்களும் உணர்ந்து நிறைவேற்றி உள்ளனர் என்றே நாம் மனநிறைவு கொள்ள வேண்டும்.

ஆம், சமூக சீர்த்திருத்த மகான்கள் எல்லாம், ‘ஒரு நிலையில் மட்டுமல்லாது, பற்பல நிலைகளை கடந்து அதன் உச்சத்திற்கே சென்று தனது உணர்வை, அச்சமின்றி வெளிப்படுத்துபவர்கள்’ என்பதால், இந்நிலையை எல்லோராலும் அனுபவபூர்வமாக உணர முடியாது என்பது சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள வேண்டிய விடயமே. ஆதலால், மகான்களின் உணர்வை ஒவ்வொருவரும் அப்படியே உணர வேண்டும் என்கிற (அ)வசியமும் கிடையாது. உணரவும் முடியாது.

ஆனாலும், முதலில் அவர்களது அனுபவங்களை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள முன்வருவதே, உணர்தலுக்கான (முத, வாயி)ற்படி. ஆதலால்தாம், இம்மகான்களின் அனுபவ உணர்தல்களை முக்கியத்துவம் கருதி இத்தளத்தின் ஆரம்பத்திலேயே தொகுத்தளித்து உள்ளேன்.

இவர்கள் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து சொல்ல வரும் கருத்துக்கள் பெரும்பாலும் ஒன்றுபோலவே இருந்தாலும், பார்வைகளும், கோணங்களும், அனுபவங்களும், காலங்களும் வெவ்வேறு.

இதுபோலவேதான் எனது கருத்துக்களும் என்பதோடு, அக்கருத்தைச் சொல்லும் விதமும், இக்கருத்துக்கள் செல்லுபடியாகும் விதமும், முற்றிலும் வேறுபட்டவையே என்பதோடு, இவைகள் விளக்க வேண்டிய விதத்தில் விவரித்து விளக்கியும் உள்ளேன்.

குறிப்பாக அம்மகான்கள் இதற்கு மாற்றுத் தீர்வாக நாமே வாதாடலாம் என்பதை வலியுறுத்தி அதற்கான அடித்தளத்தை அமைக்கவில்லை என்பதோடு வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கு அடிப்படை சட்ட அறிவு கூட கிடையாது என (ஆதார, அனுபவ)ங்களோடும் எடுத்துச் சொன்னதாக தெரியவில்லை.

இவைகள் அனைத்தையும், நீங்களும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டியவையே என்பதோடு, இதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளும் ஏதோவொரு விதத்தில், உங்களுக்கு கிடைக்க கூடியதே!

மேலும், மிகமிக முக்கியமாக நிதிக்கான நடைமுறைகளை களைந்து, அப்படியே நீதியை முறைப்படுத்திக் காட்டி கொண்டும், இப்படி நீங்களும் முறைப்படுத்த முயலுங்கள் என்று நமக்கான சட்ட அதிகார கருத்துக்களை சொல்லும் நான், ‘உங்களோடு தற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனே, சாதாரண மனிதனேயன்றி; அசாதாரண மனிதன் என்றோ அல்லது சாதனை மனிதன் என்றோ கற்பனையில் கூட கரு(து, கு)வதற்கு ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை’ என நினைத்தால், நீங்களும் எளிதாக செய்யக் கூடியதே!!

ஆம், மகான்கள் சொன்னதையே கேட்காத நீங்கள், சாதாரண, சக மனிதனாக நான் சொல்வதையா கேட்கப் போகிறார்கள் என நினைக்கவில்லை.

மாறாக, கேட்க வேண்டிய அத்தனை நிர்பந்தங்களும் (நீர், நிலம், சொந்தபந்தங்களே நிர்பந்தங்கள் ஆகும். சொந்தபந்தங்கள் என்பது நாம் நினைப்பது போல் உற்றார், உறவினர்கள் மட்டுமல்ல; நம்மோடு ஏதோவொரு வகையில், ஏதோவொரு விதத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உறவு வைத்துள்ள ஒவ்வொரு நபரையும் குறிக்கும்) உங்களுக்கு ஏற்பட்டுள்ளன.

ஆதலால், இயக்க ஆற்றல் விதிப்படி இனி சட்ட விழிப்பறிவுணர்வை பெற்று, கடமையாற்றுவதை தவிர, உங்களுக்கு வேறு வழியேயில்லை என்பதை உணர்ந்து நீங்களும் செயல்பட ஏதுவாக, இக்கடமைப் பொறுப்பு அதிகாரத்தை உங்களிடமும் ஒப்படைக்கிறேன். இதன் விளைவே இக்கடமை தொகுப்பு நூல்.

நாம் பல்லாண்டு காலம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடக்கவும், ஒழுக்கத்தில் கெட்டுப் போவதற்கும் எப்படி வக்கீல்களும், நீதிபதிகளுமே காரணம் என்று தாத்தாக்கள் சொன்னார்களோ, அதுபோலவே தற்போதைய சுதந்திர மற்றும் உலகின் மிகப்பெரிய குடியரசு இந்தியாவிலும், ‘தமது வேலைக்காரர்களான அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்களிடம், நாம் அடிமைப்பட்டு கிடக்க பொய்யர்களே முழுக்க முழுக்க காரணம் என்று இனியும் சொல்ல இயலாது. மாறாக, வக்கீல்களுக்கு இதில் சரிநிகர் சமபங்குண்டு என்பேன்’.

வக்கீல்களுக்கு சரிநிகர் சமபங்கு மட்டுமே உண்டு என்பதன் மூலம் (தாத்தா, மகாத்மா)க்களின் கருத்துக்களில் சிலவற்றை மறுக்கிறேன் என்றோ அல்லது அதிலிருந்து முரண்படுகிறேன் என்றோ அர்த்தமல்ல.

மாறாக, முற்றிலும் உடன்பட்டு அவைகளுக்கு வலுவூட்டுவதோடு, நமக்கான நீதியில் நமது கடமையை உணர்ந்து நாமே (தனக்காக தானே) வாதாட வேண்டும் என முயலாமல், கடைமையாளர்களான பொய்யர்களை நாடுவதால், நீதியில் மீதியை மட்டுமே, கொள்ளையர்களிடம் இருந்து நம்மால் பெற முடிகிறது. இதுவும் கூட, அரிதிலும் அரிதாகத்தான் என்பதால், சரி பங்கிற்கு பொய்யர்களை நாடும், ஒவ்வொருவரும் பொறுப்பாகி(றீ, றா)ர்கள்.

‘கடமை’ என்பது மிகவும் உயர்தரமான செயலையும், ‘கடைமை’ என்பது மிகவும் கீழ்தரமான செயலையும் குறிக்கும்.

ஆம்! (தாத்தா, மகாத்மா)க்கள் சொன்ன 1909 மற்றும் 1931 ஆம் ஆண்டில் கல்வி என்பது வெகு சிலருக்கு மட்டுமே எட்டும் கனியாகவும், பலருக்கும் எட்டாக் கனியாகவுமே இருந்தது. சாதாரண கல்வியே இப்படியென்றால், சட்டக் கல்வியோ பலருக்கும் புரியாத புதிராக இருந்ததோடு, அதனை ஆங்கிலத்தில் படித்து, பட்டயம் பெற வேண்டும்.

இப்படி பட்டயம் பெற்றவர்கள், பார் கவுண்சில் எனப்படும் பொய்யர்களின் குழுமத்தில், தங்களை ஒரு தகுதி வாய்ந்த பொய்யராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதாம் அடுத்தவருக்காக நீதிமன்றத்தில் பொய்ப் பேச (வக்காலத்து வாங்க) முடியும் என்கிற மாயைகள் தோற்றுவிக்கப் பட்டிருந்தன.

இதற்கு மேலும் வலுவூட்ட, ‘பொய்யர்கள் அல்லது கொள்ளையர்கள் மீதான வழக்கில் கூட, வேறொரு பொய்யரே பொய்ப்பேச (வக்காலத்து வாங்க) முடியும் என்கிற தொனியில், (மக், மனிதர்)களின் அடிப்படை உரிமைகளில் முதலும், மூலதனமும் ஆன பேச்சுரிமை அதாவது, அவரவர் வழக்கில் அவர்களே வாதாடலாம் என்கிற உரிமை ரகசியமாகவும், கட்டுக் கோப்பாகவும் காலங்காலமாகவும் காக்கப்பட்டு வந்தன’.

ஆனால், 2000 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், ‘நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம்! அதிகாரம்!!’ என்கிற தத்துவத்திற்கு இணங்க நம்மால் கடமையாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி அனுபவ சட்ட ஆராய்ச்சியின் விளைவாக,

‘நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவது போல்தான்!

நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்!

கடமையைச் செய்தால், பலனை அடையலாம்!

நியாயம்தான் சட்டம். அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்!

வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!’

என்கிற பற்பல எதார்த்த உண்மைகள் பொதிந்துள்ள தத்துவங்களை முன்னிருத்தியும், மையக்கருவாக கொண்டும் மொத்தத்தில், இவைகள் அனைத்தையும் மிக சுருக்கமாக No law, no life. Know law, know life! என்று சட்டத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியதன் கடமைப் பொறுப்பை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள

நீதியைத்தேடி... நூல்கள் மூலம் சட்டம், போலீசு, அரஸ்டு, ஜெயிலு, பெயிலு, வக்கீலு, நீதிபதி என்பன உட்பட அனைத்து சட்டம் சார்ந்த மாயைகளும், அனுபவ ஆதாரங்களோடு முற்றிலுமாக (தா, தகர்)க்கப்பட்டும் தவிடு பொடியாக்கப்பட்டும் விட்டன.

இதனை அந்நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய, ‘தினமணி, துக்ளக், இந்தியா டுடே, தினமலர், தீக்கதிர், விடுதலை, உண்மை’ என ஆன்மீகம், பகுத்தறிவு, கம்யூனிசம் உள்ளிட்ட வெவ்வேறு கொள்ளைகளைச் சார்ந்த பல்வேறு இதழ்களும் மதிப்புரைகளாக எடுத்துரைத்துள்ளன என்பதோடு அந்நூல்களைப் படித்த ஒவ்வொருவரும் கூட ஒப்புக் கொள்கின்றனர்.

ஆன்மீகவாதி, பகுத்தறிவாதி, கம்யூனிசவாதி என எதாவது ஒரு நிலையில் இருந்து அல்லது அதில் ஈடுபாடுடைய எவருடைய கருத்தையாவது நூலில் மேற்கோள்காட்டி எழுதும் போது அதுகுறித்து, அக்குறிப்பிட்ட கொள்கையைச் சார்ந்த இதழ்கள் சிறப்பான மதிப்புரைகளை தானே முன்வந்து வழங்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இங்கு இதைச் சொல்லவேண்டிய (அ)வசியம் என்ன இருக்கிறது என நீங்கள் நினைத்தால், ‘‘காந்தியின் கூற்றுகளை முதன் முதலில் ஆராய்ந்து எழுதியதே 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீபதியைத்தேடி... கட்ட அறிவுக்களஞ்சியம் நூலில்தாம்.

ஆனால், சட்டத்தையும், சட்டத்தைக் கொண்டு அரசு ஊழியர்கள், பொய்யர்கள் மற்றும் கொள்ளையர்களின் அட்டகாச(ங்களை, கமாக) விளக்கி 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் என்கிற முதல் நூலுக்கே, மேற்சொன்ன இதழ்களின் மதிப்புரைகள் ஆரம்பமாகி விட்டன என்பதேயாகும்!’’

ஆகவே, சட்டத்தில் சிற்சில (வே, மா)றுபாடுகள் இருந்தாலும் கூட தர்மம், நீதி, நியாயம் ஆகியன எக்கொள்கை சார்ந்தவருக்கும் ஒன்றுதாமே ஒழிய, கொள்கைக்கு தகுந்தார்போல் மாறுபடுவதில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

எனக்கு தெரிய இம்முதல் நூலுக்கு மட்டும் 18 இதழ்கள் மதிப்புரை வழங்கியுள்ளன. இப்படி ஒவ்வொரு நூலுக்கும் வழங்கப்பட்ட இதழ்களின் மதிப்புரைகள் எல்லாம் அந்தந்த நூல்களின் மறுபதிப்பில் சேர்க்கப்(பட்டு, படவு)ம் உள்ளன.

இதுதவிர, எனக்கு தெரிந்த மற்றும் என்னை நன்றாகவே அறிந்த முக்கியஸ்தர்களிடம் எந்தவொரு உரையையும் வலிய கேட்டு வாங்குவதில்லை. அவர்களே முன்வந்து தந்தாலும் கூட பிரசுரிப்பதில்லை. இப்படிச் செய்வது பொய்ப் பிரச்சாரமாகும்.

குறிப்பாக துக்ளக் இதழில், ‘‘இந்நூலாசிரியர் மிக எளிமையாக, பாமரர்கள் கூட சட்டத்தையும், நீதிமன்ற நடவடிக்கையையும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்’’ என்றும்,

தந்தைப் பெரியார் வழி பகுத்தறிவு நாளேடான விடுதலையில், ‘‘மும்முனை (முறிந்த)த் தாக்குதல்!’’ என்று தலைப்பிட்டும், உண்மை இதழில், ‘‘நீங்களே வாதாடலாம்!’’ என்று தலைப்பிட்டும் எழுதியுள்ள மதிப்புரையில், ‘‘ஆசிரியருடைய முயற்சி மிகவும் பயனுள்ள முயற்சி. இதற்காக ஆசிரியரை பாராட்டுவதுடன் மேலும் சட்ட விழிப்புணர்வு குறித்த புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவிக்கிறோம்’’ எனவும்,

கம்யூனிச சிந்தனை கொண்ட தீக்கதிர் நாளேட்டில், ‘‘நமக்காக நாம்தான் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமே அன்றி பிறரை நம்பி பலனில்லை’’ என்கிற அனுபவ வெளிச்சத்தில், சாதாரண சட்ட நடைமுறைகளை, எளிய தமிழில் உரிய விளக்கங்களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப்படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம் எனவும்,

இப்படியே ஒவ்வொரு இதழும் வெவ்வேறு நிலைப்பாட்டில் கருத்து தெரிவித்துள்ளனவே தவிர ஒரு இதழ் கூட, நான் குறிப்பிட்ட மகான்களின் மேற்கோள்களையோ அல்லது தங்களது கொள்கைக்கேற்ற மகான்களை முன்வைத்தோ மதிப்புரை வழங்கவுமில்லை, இதுபோலவே நம் கொள்கைக்கு விரோதமானவரின் கருத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறதே என குறை கூறவோ அல்லது மதிப்புரையை தவிர்க்கவோ வில்லை.

உண்மையில், இப்படி பாராட்டுவதற்கோ அல்லது இப்பாராட்டை நினைத்து எனது உற்றார், உறவினர்கள் மட்டுமல்லாது, அரசுத்துறை, காவல்துறை, வக்கீல்கள் மற்றும் நீதிபதி நண்பர்கள் பெருமைப்படுவது போல நானோ, (மற்ற, அ)வர்களோ பெருமைப்பட ஒன்றுமே இல்லை.

மாறாக, இதனை முன்னெடுத்துச் (செ, சொ)ல்லவுமே (அ, பெ)ரும்பாடுபட வேண்டும்.

ஏனெனில், சமுதாயத்தில் சட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன... ஆனால், சட்டத்தால் சமுதாயமும், அதன் கட்டமைப்பும் எந்த அளவிற்கு (தாக்கப், தகர்க்கப்)பட்டிருக்கிறது... இதற்கு யார் காரணம், எப்படி காரணம் என்பது, ஏனோ எனக்கு நன்றாகவே புரிந்தது.

அதனால்தாம், சட்ட ஆராய்ச்சி மற்றும் விழிப்பறிவுணர்வு முயற்சிகள் தொடங்கி முடிக்கப்பட்டும் உள்ளது. இவைகள் அனைத்தும் நூல்களாகவும் அரங்கேறியுள்ளன. ஆகவே, இயக்க ஆற்றல் விதிப்படி, இவ்விட(ய)த்தில் நானொரு கருவியே அன்றி வேறில்லை.

இது உங்களுக்கு புரிந்திருந்தாலும் / புரிந்தாலும், நீங்களும் இதையேதாம் செய்திருப்பீர்கள் / செய்வீர்கள். வெகுசிலர் ஏதோவொரு விடயத்தில் செய்து கொண்டுந்தாம் இருக்கி(றா, றீ)ர்கள்.

இவ்வளவு ஏன்... சமூக சீர்த்திருத்த மகான்களுக்கு புரிந்ததால்தாம், அவர்களும் இதுகுறித்து (எழுதி, சொல்லி)யுள்ளார்கள். இதற்காக அவர்களை பாராட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ஆதலால், அவர்களை ஒரு இடத்தில் கூட பாராட்டி (எழுத, பேச)வும்மில்லை.

மாறாக, அவர்களது நோக்கத்தின்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனக்கு தெரிந்த வழிவகைகளில் எல்லாம் உ(ய)ரிய சட்ட காரண காரியங்களோடு, அவைகள் குறித்து எடுத்துரைத்து உங்களுக்கு எச்சரிக்கிறேன். அவ்வளவே!

இப்படி எச்சரிக்கும் போது ஏற்படும் எரிச்சலில், ‘எங்களை எச்சரிக்க, நீ என்ன பெரிய ...... ’ என்கிற எண்ணம் தப்பித்தவறி கூட உங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், எனது ஆணித்தரமான கூற்றுகளுக்கு கூடுதல் வலுவூட்டவுமே, அம்மகான்களது எச்சரிக்கை கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளேன். அவ்வளவே!

இவ்வெச்சரிப்புக் கடமையை நிறைவேற்றுவதற்கு முறையே 15, 30, 40, 30, மற்றும் 60 ஆயிரங்கள் என மத்திய சட்ட அமைச்சகமும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஐந்து நூல்களுக்கும் நிதியுதவி செய்துள்ளது.

இவ்வைந்து நூல்களும் சாதி, இன, மத, மொழி, பேதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே, ‘‘மகாத்மாக்கள் காந்தியும், பெரியாரும் தங்களின் நூல்களை வெளியிடும் உரிமையை குஜராத்தில் இயங்கும் நவஜீவன் மற்றும் சென்னையில் இயங்கும் திராவிடர் கழகத்திற்கு சொந்தமாக்கியது போல், நான் ஓசூரில் இயங்கும் கேர் சொசைட்டிக்கு மட்டும் சொந்தமாக்கவில்லை’’.

மாறாக, ‘இந்த சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு இந்நூல்களை வெளியிட்டு விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, எல்லா நூல்களின் வெளியீட்டு உரிமையை சட்டப்படியே பொதுவுடைமை என குடிமக்களுக்கான பொதுச்சொத்தாக அறிவித்துள்ளேன்’.

ஆனால், இதுவரை எந்தவொரு பதிப்பகமோ அல்லது தன்னார்வ அமைப்புகளோ அல்லது தனி மனிதர்களோ மட்டுமல்லாது, ‘நீதியைத்தேடி... கடமையைச் செய்ய வேண்டிய வாசகர்களே கூட, வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முன்வரவில்லை’.

நான் ஓர் ஆள் அல்லது ஒரு சில நண்பர்கள் மட்டும் சேர்ந்து எப்படி இதைச் செய்ய முடியும் என வாசகர்களில் எவரேனும் நினைத்திருந்தால் கூட, ‘நான் ஆராய்ச்சியில் இருந்த போது எப்படி தங்களது பங்களிப்பை செய்தார்களோ அதுபோலவே, ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை கேர் சொசைட்டிக்கு அனுப்பி வைத்து, தங்களுக்கு கிடைத்த இந்த சட்ட விழிப்பறிவுணர்வு மற்ற மக்களுக்கும் கிடைக்கும்படி, காலா காலத்திற்கும் செய்து கொண்டே இருக்க வலியுறுத்தி இருக்க வேண்டும்.

இப்படி நாங்கள் நினைத்ததால்தான் உங்களுக்கு இந்த சட்ட விழிப்பறிவுணர்வு கிடைத்தது. இனியாவது வருகிறார்களா என பார்ப்போம்’.

இப்படி செய்திருந்தால் 2011 ஆம் ஆண்டில், முதல் நூலில் இருந்து தொடங்கி இந்தாண்டு வரை மூன்று நூல்களை பொது நூலகங்களுக்கு கொடுத்திருக்க முடியும். ஆனால், இதுவரை ஒருவர் கூட செய்யவில்லை. கேர் சொசைட்டி அங்கத்தினர்களை வலியுறுத்தவில்லை. இப்படியொரு நூல் இருக்கிறது என பிறருக்கு சொல்லக் கூட முன்வரவில்லை.

மாறாக, இலவச சட்ட விழிப்புணர்வு செய்கிறோம் என்று வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளைப் போலவே, நீதியைத்தேடி... கருத்துக்களை திருடியும், தங்களுக்குள்ளேயே கூட்டுச் சேர்ந்தும், ஆளுக்கு ஆள், மூலைக்கு மூலை போட்டிப் போட்டுக் கொண்டும், போட்டிக் கூட்டம் போட்டுக் கொண்டும், கூட்டத்தை சேர்த்துக் கொண்டும், கூட்டத்தைச் சேர்க்க மாநில மாநாடுகளை நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் நிதியைத்தேடி... விபச்சாரிகளாகவும், ஈனப்பிறவிகளாகவும், பொய்யர்களாகவும், இடைத்தரகர்களாகவும் தங்களது பிழைப்பை தமிழகம் முழுவதும் கடைமை உணர்வோடு ஆற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களோ பொய்யர்களும் கூட்டு சேர்ந்து கொண்டு ஆங்காங்கே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள், முன்னின்று நடத்துகிறார்கள், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்நாள் பிழைப்புக்கான கொத்தடிமைகளை (கட்சிக்காரர்களை) பிடிக்கிறார்கள் என்பது ‘அதில் நாமே வாதாடலாம் என்கிற ஆர்வத்தில் ஆதரவுதேடி அக்கூட்டங்களுக்குச் சென்றப்பின், ஆள்பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அறிந்து, எங்களை தொடர்பு கொள்ளும் ஆர்வலர்கள் மூலம் தெரிகிறது’.

இந்திய சமூகத்தில் இருந்து எத்தொழிலை வேரறுக்க வேண்டும் என மகான்கள் சொன்னார்களோ, அதை எப்படிச் செய்ய வேண்டும் என வாசகர்களுக்கு வழிகாட்டி அறிவுறுத்தினேனோ, அதைச் செம்மையாக செய்யாவிட்டாலே கடமையைச் செய்யவில்லை என்கிற நிலையில், அதற்கு நேர்மாறாக அப்பொய்யர்களோடு கூட்டுச் சேர்ந்தும், தனித்தனியாகவும் கூத்தடிக்கும் கயமை கடைமையாளர்களை காலம் ஒருபோதும் மன்னிக்காது.

என் இனம், என் சாதி என பொய்யர்களும், கொள்ளையர்களும் கூட்டுசேர்ந்து இயற்கை வளங்களையும், நாட்டையும், மக்களையும் எப்படியெல்லாம் கொள்ளையடித்து கூத்தடிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது போலவே, வாசகர்கள் தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து செய்த (அ)நீதியான செயல்களை எல்லாம், உங்களின் தெளிவிற்காக சுட்டிக் காட்டியுள்ளேன்.

ஆம், வாசகர்கள் என்பதற்காக, யாரையும் விதிவிலக்காக விட்டுவிட முடியாது. இதுவரை அப்படி விட்டதுமில்லை; அப்படி விட்டுவிட யாரும் எவ்விதத்திலும் உயர்ந்தவர்களும் அல்ல; சட்டத்தின் முன் சமமானவர்களே! இதில் நானும் ஒருவனே!!

அதனால், அடிப்படை சட்டங்களுக்கு உட்பட்டு, நற்செயல் எனக்கருதி நான் செய்த ஒரு செயல் எப்படி நேரெதிர் தன்மை கொண்ட (நற், துற்)ச்செயலாகவும் மாறின என்பது குறித்த நிகழ்வையும் விளக்கி உள்ளேன்.

எனவே, நீதியைத்தேடி... கடமையைச் செய்ய வேண்டிய ஆனால், ‘நிதியைத்தேடி... கடைமை’யைச் செய்து கொண்டிருக்கும் வாசகர்கள் உட்பட யாருடைய வலையிலும் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் ஒதுங்கியிருக்கவே இவைகளையெல்லாம் சொல்(லு)கிறேன்!

இந்த சூழ்நிலையில்தாம், நமது சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தையும், இதில் தனது கடமையையும் உணர்ந்துள்ள மத்திய சட்ட அமைச்சகம், ‘நம்மை உலாப்பேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம் இருந்து, கடந்த இரண்டு வருடங்களாக சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களை வெளியிட நிதி கேட்டு விண்ணப்பம் வருவதில்லையே...! எதாவதொரு நூலை வெளியிட உடனே விண்ணப்பம் செய்யுங்கள்; நிதி ஒதுக்குகிறோம்’ என்று கோரவே,

சுருக்கமாக யோசித்து, நீதியைத்தேடி... போலவே நம்மால் இருமாத இதழாக வெளியிடப்பட்ட ‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும் இதழ்களை எல்லாம், நூலாக தொகுத்து, அதே பெயரில் வெளியிடுவது’ என முடிவு செய்து, இரவோடு இரவாக விண்ணப்பத்தை தயார் செய்து அடுத்த நாளே அனுப்பி வைத்தோம்.

அதனை அன்றே பரிசீலனை செய்த மத்திய சட்ட அமைச்சகம், தனது பங்களிப்பாக ரூ.25 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளது! இதுதாம் கடமையைச் செய்வது என்பது!! இதைத்தாம் நாம், நம் சமுதாயத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஐந்து முறை நாம் நிதி கேட்டதிலும், ஆறாவது முறையாக நமக்கு நிதி கிடைத்ததிலும் உட்பொதிந்துள்ள எதார்த்தமான (வே, ஒ)ற்றுமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதியைத்தேடி... நூல்கள் ஐந்தும் உரிமை கோரிக்கையைச் சார்ந்தவை. ஆதலால், மத்திய சட்ட அமைச்சகத்தை 2006 முதல் 2010 வரை வருடா வருடம் நாமே அனுகி நிதியை கோரி வாங்கினோம்.

2008 ஆம் ஆண்டில் நேரடியாகவே சட்ட அமைச்சகத்திற்கு சென்று கூடுதல் நிதி கேட்டோம். தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுக்கும் சேர்த்து ஒதுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த நிதியில், நமக்குதாம் (தமிழுக்குதாம்) அதிகபட்ச நிதி ஒதுக்கப்படுகிறது என்பது, அப்போதுதாம் தெரிந்தது.

ஆனால், கடமையைச் செய்வது என்பது, பலன்கள் சார்ந்த விசயம் என்பதால், தற்போது சட்ட அமைச்சகமே நம்மை அழைத்து தனது பங்களிப்பை கொடுத்துள்ளது. இதுவே நாம் செய்துள்ள சட்ட விழிப்பறிவுணர்வு என்னும் கடமைக்கு கிடைத்த பல(னும், மும்) ஆகும்.

இனி கடமையைச் செய்! பலன் கிடைக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள உங்கள் ஊர் நூலகம், நீதிமன்றம், காவல் நிலையம், சிறைச் சாலைகளுக்கு தர என எட்டாயிரம் பிரதிகளை அச்சிட வேண்டும்.

பொதுமக்கள் படிக்க பொது நூலகங்களுக்கும், அதிகபட்சம் சிறைச்சாலைகளுக்கும் கொடுத்தாலே போதுமே... எதற்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால்... நீங்கள் படிப்பதால் மட்டுமே பலனில்லை.

மிகமிக முக்கியமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறை மற்றும் நீதித்துறை ஊழியர்கள் படிக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களுக்கான இந்த சட்ட விழிப்பறிவுணர்வு அவர்களுக்கும் ஏற்பட்டு, உங்களின் நியாய கோரிக்கைகள் நிறைவேறும். இது (வெ, பெ)றும் நம்பிக்கை மட்டுமல்ல; நடந்து கொண்டிருக்கிற உண்மையும்!

ஆம், இதனை வாசகர்கள் மற்றும் வக்கீல்கள் சிலரே தங்களுக்கு நீதிமன்றத்தில் கிடைத்த அனுபவமாக பதிவு செய்துள்ளனர் என்பதோடு, எங்களுக்கு கூடுதல் நூல்களை கொடுங்கள் என கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து நமக்கு கடிதம் அனுப்பியும் உள்ளனர். இப்படி நீதிமன்ற கீழ்நிலை ஊழியர்கள் சிலரும் நூலை வரவேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை வாசகி ஒருவர் அவரது தோழி வீட்டில் படித்தேன் என்று சொன்னார். தோழியின் அப்பா நீதிபதியாம். தோழியின் நட்பு கருதி மற்ற விபரங்களை சொல்ல அறவே மறுத்து விட்டார். நீதிமன்றத்துக்கு கொடுத்தது, வீடு வரை சென்றிருக்கிறதே; இது, ப(டி, து)க்கவா என்ற ஐயம் ஏற்பட்ட போது, பதுக்க என்றால் வாசகி எளிதாக எடுத்து படிக்கும் அளவிற்கு அவரின் மேஜை மீது இருந்திருக்காதே!

மொத்தத்தில் நமது சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமை செல்ல வேண்டிய அதிகார மன்றத்தையும் தாண்டி, கடமை தவறினால் அதிகாரம் பறிபோய் விடும் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய வீடுவரை சென்றடைந்திருக்கிறது. இதெல்லாம் நமக்கு தெரிந்(த)து; தெரியாதது எத்தனை, எத்தனையோ...!

எனவே, நீங்கள் செய்ய வேண்டிய கடமை, உங்களின் பங்களிப்பை எங்களுக்கு செய்ய வேண்டியது மட்டுமே. ஏனெனில், இதற்கான ஒட்டுமொத்த செலவு இரண்டு லட்ச ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்களிப்பு என்றால், நிதி மட்டுமல்லாது பேப்பர் தருதல், அச்சிட்டு தருதல் உட்பட நூலை வெளிக் கொண்டு வர தேவையான, நீங்கள் விரும்பும் எந்தவொரு (தே, சே)வையையும் செய்யலாம்.

ஆஹா, கொடுக்க மனம் இருந்தும்; கையில் பணம், பொருள் இல்லையே என்ற கவலையே வேண்டாம்!

ஆம், கடமையைச் செய்ய என மூன்று வழிகள் உண்டு.

1. நாமே நேரடியாக களத்தில் இறங்கி தமக்கான கடமையைச் செய்வது.

2. நம்மால் முடியாத போது, அப்படி களத்தில் இறங்கி கடமை ஆற்றுபவருக்கு தேவையான தேவைகளுக்கு இயன்ற உதவிகளை புரிவது.

3. இவ்விரண்டுமே சாத்தியப்படாதவர்கள் தங்களது உற்றார், உறவினர், நண்பர்களிடம் அதுகுறித்து தெரிவித்து அவர்களின் உதவியை பெற்றுத்தருவது.

இவற்றில் உங்களுக்கு உகந்தது எதுவோ, அதனை நீங்களே தேர்ந்தெடுத்து செய்யலாம். இதற்கு வசதியாகவே இத்திறந்த கோரிக்கையின் எழுத்துருமாறா கோப்பை இங்கு இணைத்துள்ளேன். தேவைக்கு ஏற்ப இங்கு சொடுக்கி நகலெடுத்துக் கொள்ளலாம்.

இந்நூலை வெளியிட்டு அதன் பிரதிகளோடு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், செப்டம்பர் முதல் வாரத்தில் நூலை அச்சிடும் பணியை தொடங்க உள்ளோம். எனவே அதற்குள்ளாக தங்களின் பங்களிப்பை செய்திடவும், தெரிவித்திடவும் கோருகிறோம்.

நிதி பங்களிப்பை செய்ய விரும்புபவர்கள், ‘கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர் - 635109’ என்கிற முகவரியில் நேரடியாக, பண அஞ்சலாக, காசோலையாக, வரைவோலையாக செலுத்தலாம். வங்கியில் நேரடியாக அல்லது இணையம் வழியாக (ஆன் லைன்) செலுத்த விரும்புபவர்கள்,

Name of the Account : CARE Society

Account Type : Savings Ac.No. 768307417

Branch Code : IFSC code: IDIB000H001

Branch : Indian Bank, Hosur Branch, Hosur-635109

என்கிற கணக்கில் செலுத்தலாம்.

நிதி செலுத்திய பின்னும் அல்லது நிதி அல்லாது செய்ய இருக்கிற வேறு பங்களிப்பு குறித்தும் மேற்கண்ட முகவரிக்கோ அல்லது caresociety.org@gmail.com or/and careayyappan@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது +919842909190, +919842399880, +919150109189 ஆகிய உலாப்பேசி எண்களிலோ தெரிவித்திட கோருகிறோம்.

ஏனெனில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பங்களிப்பு விபரங்கள் இதிலும், வெளிவரும் நூலிலும் பதிவு செய்யப்படும். இதேபோல், தகவல் தெரிவிக்கப்படாத தொகையும், ஆயிரத்துக்கு குறைவான தொகையும் ஒட்டு மொத்தமாக கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்படும். வெளியிடப்பட்ட நூலின் பிரதி ஒன்றும், பங்களிப்பாக உங்களின் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.


பங்களிப்பு நிதி வழங்கியவர்கள் பற்றிய விபரத்தை அறிய இங்கு சொடுக்கவும்

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)