நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, May 13, 2013

கூத்துப் பார்க்க கோர்ட்டுக்கு போங்க!


தெரிந்தோ, தெரியாமலோ சிலபேர் நீதிமன்றத்தையே மிதிக்க கூடாது என்கிற கொள்கையோடும், அதற்கேற்ற ஒழுக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றனர்.


பல பேர் சினிமாவில்தான் நீதிமன்றத்தை பார்த்தவர்களாக இருக்கிறார்கள். ஆதலால், நீதிமன்றம் என்றாலே, அப்படித்தான் இருக்குமோ என்கிற கற்பனையிலேயே வாழ்கிறார்கள்.


சட்ட ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன்பு, உங்களில் பலரைப் போலவே நானும் நீதிமன்றம் என்றால், சினிமாவில் வருவது போல்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.  


உண்மையில் சினிமா நீதிமன்றத்துக்கும், நிஜ நீதிமன்றத்துக்கும் நேர் எதிர் தன்மை கொண்ட வேறுபாடுகளே அதிகம். ஏனெனில், சினிமா என்பது வெறும் நடிப்பு.


ஆனால், நிஜம் என்பது பெறும் அனுபவ படிப்பு. ஆதலால், இந்த ஆராய்ச்சிக்காக பத்து வருடங்களை செலவிட்டுள்ளேன். இதில் சுமார் மூன்று மாதங்களை சிறையில் செலவிட்டுள்ளேன்.


இதில், சில வருடங்கள் நீதிமன்றத்தில் நடக்கும் செயல்களை ஆராய்ச்சி செய்து, உண்மை என்ன என்பதை கண்டு பிடிப்பதற்காக கண்காணித்து, ஆராய்ச்சி முடிவுகளை நீதியைத்தேடி... நூல்களிலும், கடமையைச் செய்! பலன் கிடைக்கும் இதழ்களிலும் பதிவு செய்துள்ளேன்.


இப்பதிவுகள் ஒரே நீதிமன்றத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் பொய்யர்கள் அல்லது ஒரே விதமான வழக்குகளையே விசாரணை செய்து கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகளுக்குமே பொக்கிஷமாய் இருக்கிறது என்றால், பாமர மக்களுக்கும், சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத நபர்களுக்கும் எப்படி பயன்படும் என்பதைப் பற்றி சொல்லவே தேவையில்லை.


சினிமாவில் காட்டப்படும் நீதிமன்ற காட்சிகளில் உண்மையான ஒரு விடயம், பார்வையாளர் பகுதி என அமைக்கப்பட்டு, அதில் பல பேர் அமர்ந்து விசாரணையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.


இது உண்மையில் நடைபெறும் நீதிமன்ற விசாரணைகளில் இருக்க வேண்டிய ஒன்று.


ஆனால், உண்மையில் செயல்படும் நீதிமன்றங்கள் பல மாட்டுத் தொழுவங்களைப் போன்றே இருக்கின்றன. நிறைந்த இடவசதி கொண்ட நீதிமன்றங்களில் கூட, அங்கு கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகளுக்கும், பொய்யர்களுக்கும் மட்டுமே இடமுண்டு என்று நீதிமன்ற (மா)மாக்கள் (ஊழியர்கள்) சொல்லி, வழக்கு விசாரணைக்கு வந்திருக்கும் மனுதாரர், எதிர்மனுதாரர், சாட்சி என எவரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்.


வக்கீல்களும், நீதிபதிகளுமே அடிப்படை சட்ட அறிவே இல்லாத முட்டாள்களாக, விபச்சாரிகளாக, ஈனப்பிறவிகளாக இருக்கும் போது, அவர்களுக்கெல்லாம் (மா)மாக்களாக திகழும் ஊழியர்கள் என்ன சட்ட அறிவுத்தகுதியில் இருப்பார்கள் என்பதை விளக்கத்தான் வேண்டுமா?


தீர்ப்புகளின் இறுதியில், "இத்தீர்ப்பு திறந்த நீதிமன்றத்தில் பலர் அறிய பகரப்பட்டது என்று சொல்லப் பட்டிருக்கும். இதற்கு அடிப்படையான சட்ட காரணமே, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளை பலரும் பார்வையிட்டார்கள். அதேபோல, இந்த தீர்ப்புரை வாசித்த போது, பலரும் இருந்தார்கள் என்பதை சட்டப்படி உறுதி செய்து,


ஆதலால் நான், தவறே செய்யாமல், சட்ட முறைப்படி விசாரணையை செய்து முடித்துள்ளேன் என தங்களுக்கு தாங்களே நற்சான்று வழங்கி கொள்கிறார்களாம்!"


கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகளாக விளங்கும் நீதிபதிகளின் தவறுகளை கண்டு பிடித்து நம்மைப் போலவே சட்டப்படியும், தங்களின் இஷ்டப்படியும் விமர்சிப்பவர்கள் அதிகரிகத்துக் கொண்டே இருக்கிறார்கள்.


இதனால், அவர்களுக்கு அறவே இல்லாத மானம், வெட்கம், சூடு, சொரனை எல்லாம் கப்பலேறுவதாகவும், ஆதலால் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கற்பனையான அற்ப நோக்கில், பாதுகாப்பு என்கிற போர்வையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற வளகத்திற்குள் வழக்கு இல்லாத நபர்கள் செல்ல அனுமதிப்பது இல்லை.


வழக்குக்காக செல்வேருக்கு கூட, அது குறித்த விபரங்களை படிவம் ஒன்றில் எழுதச் சொல்லி, மேலொப்பம், சோதனை என எல்லா வெற்றுச் சடங்குகளும் செய்தே உள்ளே அனுப்புகிறார்கள்.


வக்கீல்களை விட, பெரிய ரவுடிகள் யாருமே கிடையாது என்பதை 2009 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பொய்யர்களால் நடத்தப்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் சண்டக் கல்லூரியில் நடந்த வன்முறைகளே காலத்தால் அழிக்க முடியாத அத்தாட்சிகளாக இருக்கும் போது,


இந்த ரவுடிகளில் இருந்து நீதிபதி ரவுடிகள் என்கிற இடத்திற்கு சென்றுள்ளவர்கள் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி, அதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பது கேலிக் கூத்துதானே?


இதிலும், நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தவர்கள், நீதிமன்ற விசாரணை அறைக்குள் நுழைந்து, ரகசிய விசாரணையை கண்காணிப்பதை தடுக்க வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தோடு, அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று, தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார் ஜே.ஆர்.மிர்தா என்கிற ஆண் நிதிபதி.


06_05_2013_009_028ஆனால், சக மற்றும் அமர்வுக்கான பொறுப்பு நீதிபதியான கீதா மிட்டல் என்கிற பெண் நீதிபதியோ அதெல்லாம் கூடாது என சட்டத்துக்கு உட்பட்ட வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இது தொடர்பாக எங்களின் ஆட்சேபனையை கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளோம். இதன் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துருமாறா கோப்பை தரவிரக்க Judge JMR print setup.


விருப்பமும், வாய்ப்பும் இருந்தால், நீங்களும் தில்லி உயர்நீதிமன்ற பொதுப் பதிவாளர் அவர்களுக்கு பதிவு செய்யவும். தேவைப் பட்டால், எங்களது கடித எண்ணையே மேற்கோள் காட்டிக் கொள்ளுங்கள்.


அப்படியே, கூத்து பார்க்க கோர்ட்டுக்கு போக என்னென்ன சட்ட பிரிவுன்னு தெரிஞ்சிக்குங்க.


உச்சநீதிமன்ற விசாரணை என்றால், இந்திய அரசமைப்பு கோட்பாடு 145(4)


உயர்நீதிமன்றம் மற்றும் அதற்கு கீழான நீதிமன்றங்களில் நடக்கும் குற்றவியல் விசாரணை என்றால், குற்ற விசாரணை முறை விதிகள் 327


உயர்நீதிமன்றம் மற்றும் அதற்கு கீழான நீதிமன்றங்களில் நடக்கும் உரிமையியல் விசாரணை என்றால், உரிமையியல் விசாரணை முறை விதிகள் 153ஆ.


முக்கிய குறிப்பு: குடும்பம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பாலியல் தொடர்பான விசாரணைகள் பலர் அறிய நடத்தப்படாது. ஒரு வழக்கில் உள்ள பல சாட்களில், நீங்களும் ஒரு சாட்சியாக நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல சென்றிருந்தால், மற்றவர்கள் சாட்சியம் அளிக்கும் போது, நீங்கள் உள்ளே இருக்க முடியாது.


மற்ற எல்லா சூழ்நிலையிலும் எவர் ஒருவரும் நீதிமன்ற விசாரணையை பார்வையிட தகுதி உள்ளவர்களே! தவறு செய்யும் அல்லது தவறாக விசாரணை செய்யும் நீதிபதிளிடம் உரிய மனுக்களை கொடுத்து, நியாயமான தீர்ப்புகளை எழுத வைக்க நம் ஒவ்வொருவராலும் முடியும். இதற்கு தேவை கொஞ்சம் தைரியமும், விசாலமான சட்ட விழிப்பறிவுணர்வும்தாம்.


இது குறித்த விரிவான விபரங்களை நீதியைத்தேடி... நூல்களில் தொகுத்துள்ளேன். இந்நூல்கள் உள்கள் பகுதி நூலகத்திலேயே கூட படிக்க கிடைக்கும்.


Geetha mittalபெறுதல்Mirtha
நீதிபதி. கீதா மிட்டல் மற்றும் ஜே.ஆர்.மிர்தா அவர்கள்
டில்லி உயர்நீதிமன்றம், புதுடில்லி.


பொருள்: நீதிமன்ற விசாரணை அறையில் பொதுமக்கள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ள தங்களின் அடிமுட்டாள் தனத்திற்கு சட்ட விளக்கம் அளிப்பது தொடர்பாக...
   
நீதிபதி. கீதா மிட்டல் மற்றும் ஜே.ஆர்.மிர்தா அவர்களுக்கு வணக்கம்.


நீதிமன்ற விசாரணை அறையில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்க கூடாது என்று தங்களுடன் பணியாற்றும் சக நீதிபதியான கீதா மிட்டல் அவர்களுடன், ‘‘தாங்கள் நேர் எதிரான கருத்து வேறுபாடு கொண்டு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதாகவும்’’,


ஆதலால் உள்துறை, உளவுத்துறை, தேசிய விசாரணை அமைப்பு மற்றும் டில்லி போலீஸ் ஆகியோரைக் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்து, அக்குழவை 16-05-2013 க்குள் அறிக்கை அளிக்குமாறு நீதிபதி கீதா மிட்டல் கேட்டுள்ளதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
      
பொதுவாக நீதிபதிகள் பிறப்பிக்கும் தீர்ப்புகளின் இறுதியில், ‘‘இத்தீர்ப்பு திறந்த நீதிமன்றத்தில் பலர் அறிய பகரப்பட்டது’’ என்று வெற்றுச் சடங்காக சொல்லப்பட்டிருக்கும். ஆனால், ஊடகங்கள் கவனிக்கும், சமூகம் கண்காணிக்கும் ஒருசில பிரபல வழக்கின் தீர்ப்புகளைத் தவிர,


‘மற்ற தீர்ப்புகள் அனைத்தும் திறந்த நீதிமன்றத்தில் பலர் அறிய படிக்கப்படாமல் இரகசியமாகவே எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன’ என்பதை சட்ட விழிப்பறிவுணர்வு உள்ள குடிமக்களாகிய நாங்கள் நன்றாகவே அறிவோம்.


இப்படி தீர்ப்புகள் திறந்த நீதிமன்றத்தில் பலர் அறிய பகரப்பட்டது என்று சொல்வதற்கு அடிப்படை காரணமே, ‘‘உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்ற விசாரணைகளையும் பொதுமக்கள் பார்வையிட இந்திய அரசமைப்பு, உரிமையியல் விசாரணை முறை விதிகள் மற்றும் குற்ற விசாரணை விதிகள் உட்பட அந்தந்த சட்டங்களிலும் அனுமதிக்கபட்டு உள்ளது என்பதோடு, அதே சட்டங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே தீர்ப்புகள் உரைக்கப்பட வேண்டும்’’ என்று நீதிபதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டக் கட்டுப்பாடுகளுமே காரணமாகும்!


ஒருவேளை, இதனையும் தாங்கள் முட்டாள்தனமாக மறுப்பதாக இருந்தால், ‘‘இதுவரை உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை திறந்த நீதிமன்றத்தில் பகரப்பட்டதாக குறிப்பிடப்பட்ட தீர்ப்புகள் எல்லாம் சட்டத்துக்கு புறம்பானவைகள் என்றே அர்த்தமாகும்’’.


எனவே, பொதுமக்கள் விசாரணை நீதிமன்றத்துக்குள் அடையாள அட்டையில்லாமல் வரக் கூடாது என தான்தோன்றித்தனமாக, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அரசமைப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் சட்டக் கட்டுப்பாடுகளை மீறி, தாங்கள் உத்தரவு பிறப்பித்திருப்பது, தங்களுக்கு அடிப்படை சட்ட அறிவு கூட அறவே இல்லை என்பதையே பறைச்சாற்றுகிறது.
 
தங்களுக்கு மட்டுமல்ல, ‘‘இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிபதிக்குமே அடிப்படை சட்ட அறிவு கிடையாது’’ என்பதை நிரூபிக்க, நாங்கள் எப்பொழுதுமே தயாராய் இருக்கிறோம்.
 
இது தொடர்பாக, நாங்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு சற்றே விளக்கமாக எழுதிய எங்களது கேர் / நிர் / 2-2012 தேதி 18-01-2012 என்கிற 11 பக்க ஆங்கில ஆவணத்தை, தாங்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடே இத்தோடு இணைத்துள்ளோம்.


நீதிபதிகளின் அடிப்படை சட்ட அறிவில்லாத அநீதியான தீர்ப்புகளால், மக்கள்தாம் பாதிக்கப் படுகிறார்களே ஒழிய, மக்களால் நீதிபதிகள் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை என்பதே வரலாற்று இமாலய உண்மையாக இருக்க, மக்களால் பாதிப்பு என்பது போன்ற போலியானதொரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்.


இதற்கு அடிப்படை காரணமாக நாங்கள் கருதுவது, மகாத்மா காந்தியின் இந்திய சுயராஜ்ய நூலின் 11 வது கட்டுரையின் கருத்துப்படி, ‘‘நீதியை விபச்சார தொழிலாக செய்யும் நீங்கள், அதில் மக்களின் இடைஞ்சல் எதுவும் இருக்க கூடாது’’ என்பதற்காகவே இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை முன்மொழிவதாகவே நாங்கள் கருதுகிறோம்.


ஆதலால், ‘தங்களின் உத்தரவு இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 78 இன்படி, நல்லெண்ணத்தோடு பிறப்பிக்கப்பட்டது அன்று’, என்று ஏற்க மறுத்து, குடிமக்களின் சார்பாக எங்களின் ஆட்சேபனையை பதிவு செய்கிறோம்.


இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 இன்படி, இக்கடிதத்தை எங்களது தாய்மொழியான தமிழிலேயே தங்களுக்கு சமர்ப்பிக்க முடியும் என்றாலும் கூட, அடிப்படை சட்டத்திலேயே அறிவு வறுமையில் உள்ள உங்களுக்கு இதையும் கூட, எளிதாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த உ(ய)ரிய சட்ட ஆவணத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கிறோம்.
    
இதற்கு இந்திய குடிமகன் என்ற தார்மீக பொறுப்பிலும், அரசமைப்பின்படி ஏற்றுக் கொண்ட சத்திய பிரமாணத்தி வாயிலாகவும், நீதிபதிக்கு உரிய உச்சபட்ச நேர்மையுடனும் தக்க பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது.


இது குறித்து தாங்கள் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எதையும் எடுப்பதாக இருந்தால், அதற்கு தார்மீக அனுமதி அளித்தும், வெற்றி பெற வாழ்த்தியும் வரவேற்கிறோம். இப்படியொரு உயரிய சட்ட ஆவணத்தை எழுத உற்ற துனையாக இருந்த தங்களின் முட்டாள் தனத்திற்கும் நன்றி!


ஒப்பம் -கேர் சொசைட்டிக்காக


உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்.


(என 21 நபர்கள் கையொப்பமிட்டுள்ளார்கள்)


நகல் சமர்ப்பிக்கப்படுகிறது.


1. இந்திய அரசமைப்பு கோட்பாடு 51அ - இன்கீழ், குடிமக்கள் ஒவ்வொருவரும் 16-05-2013 க்குள் தங்களின் ஆட்சேபனையை கடமையாக பதிவு செய்ய கோரி அகில உலக இந்திய குடிமக்களுக்கு இணையம் வழியாக...


2. இந்திய அரசமைப்பு கோட்பாடு 143 இன் கீழான நோக்கத்திற்காகவும், நடவடிக்கைக்காகவும் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள், இந்திய குடியரசுத் தலைவர், புதுதில்லி-1


3. இந்திய அரசமைப்பு கோட்பாடு 51அ - இன்கீழான கூட்டு முயற்சி கடமைக்காக பொதுப் பதிவாளர் அவர்கள், தில்லி உயர்நீதிமன்றம், புதுதில்லி-1.


இணைப்பு: கேர் / நிர் / 2-2012 தேதி 18-01-2012 என்கிற 11 பக்க ஆங்கில ஆவணம்

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

2 comments:

  1. I appreciate ur bravery letter to d justice!!!! best of luck for ur work!!!!

    ReplyDelete
  2. அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்June 30, 2013 at 2:04 PM

    மருத்துவத்துறை அளவுக்கு மோசடி நிறைந்த துறை வேறு எதுவும் இல்லை என்றும், மருத்துவர்கள் தான் உலகிலேயே சிறந்த பொய்யர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதையும் மிஞ்சும் சட்டத்துறை குறித்த உங்கள் விழிப்பறிவுணர்வுப் பணி சிறக்கட்டும். மக்களின் அடிப்படை அறிவுகளில் ஒன்றாக மருத்துவமும், சட்டமும் சென்று சேரட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)