No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, April 1, 2013

நிதிபதிகளை வறுத்தெடுப்பது எப்படி?யாருக்கு எப்போது சட்ட வடிவில் சனியன் பிடிக்கும் என்று சொல்லுவதற்கில்லை. ஆகவே, No law, no life. Know law, know life! என்று, ‘‘சட்டமில்லாமல் வாழ்க்கையில்லை. சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள்’’ என நான் எவ்வளவுதான் சொன்னாலும், அவ்வளவாக யாரும் காது கொடுத்து கேட்பதில்லை.

உன்னிப்பாக கேட்டு, உண்மையை உணர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள், சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சனியன்கள் நீதிபதிகளாகவே இருந்தாலும் கூட, அவர்களை ஒருபோதும் வறுத்தெடுக்காமல் விடுவதில்லை.

சாதாரண மாக்கள், நாம் சட்டத்தை தெரிந்து கொண்டு, என்னாத்த கிழிக்க போகிறோம் என்கிற மன நிலையில் இருக்கிறார்கள் என்றால், பிரபலங்கள் மாக்களுக்கெல்லாம் மாக்கள் அல்லவா? அதனால், நான் யாரு... என்னைய யாரு, என்ன செய்து விட முடியும் என்ற இறுமாப்பில்தான் இருக்கிறார்கள். ஆதலால், சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சனியன்களிடம் இருந்து அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடிவதில்லை.  

நந்தனம் அப்போல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தினத்தந்தி நாளிதழின் அதிபர் சிவந்தி ஆதித்தனை, முதல்வர் ஜெயலலிதா சந்திக்க சென்ற போது, ஜெயலலிதாவின் அரசியல் எதிரியான கருணாநிதி என்கிற பெயரில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூத்த மற்றும் எழுபது வயது முதிய மருத்துவர்,

‘‘தீவிர சிகிச்சைப் பிரிவின் உள்ளே நுழைந்த ஜெயலலிதாவைப் பார்த்து, காலனியை கழற்றி விட்டு உள்ளே வாருங்கள் என்று சொன்னதன் பின்னனியில், அம்மூத்த மற்றும் முதிய மருத்துவர், முதல்வரின் பாதுகாப்புக்கு காவலர்களை கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, நடுவர் முன்பாக நேர் நிறுத்தப்பட்டு, சிறையில் அடைக்க நடுவரால் உத்தரவிடப்பட்டதன் பேரில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அடுத்த நாள் காலையிலேயே பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்’’

புகழ்பெற்ற அப்போல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் நமக்கு இப்படியொரு நிலைமை வரும் என கருணாநிதி கனவிலும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

எனது பெயரை வைத்திருப்பதாலேயே அம்மருத்துவர் இப்படியெல்லாம் ஜெயலலிதாவால், பழிவாங்கப் பட்டுள்ளார் என்று ஜெயலலிதாவின் அரசியல் எதிரியான மு.கருணாநிதி கண்டன அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வலைப்பதிவர்கள் சிலரும், முகநூலில் பலரும் என தங்களின் புலம்பல்களை எப்போதும் போல், பதிவு செய்துள்ளனர்.

ஒரு தலையங்கமோ அல்லது கட்டுரையோ அல்லது கருத்துப் பதிவோ, நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டுமே தவிர, பிரச்சினைகளை மட்டுமே புலம்பக் கூடாது. ஆனால், 99.99% புலம்பலாகத்தான் இருக்கின்றன.

சரி, இப்படிப்பட்ட சட்ட விரோத கை(தி, து)களுக்கு என்ன தீர்வு என்பதைப் பற்றி பார்ப்போம்.

நீதியைத்தேடி... வாசகர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் கூட, வெகு சிலரே சட்டத்தை தவறாக பயன்படுத்தும் நீதிபதிகளை வறு, வறு என வறுத்தெடுப்பவர்கள்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள திரு.ராஜேந்திரன் என்கிற வாசகரை 2009 ஆம் ஆண்டில் ராஜபாளையம் போலீஸ் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து, நடுவர் முன்பாக நேர் நிறுத்துகிறது.

வாசகரோ இது பொய் வழக்கு என நடுவரிடம் கூற, நீ என்ன சொல்வது... நான் என்ன கேட்பது என்கிற வாடிக்கையான திமிரில் நடுவர், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 167(2)(அ) இன்படி, பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்க உத்தர விடுகிறார்.

உடனே, வாசகரோ இச்சட்ட விரோத சிறையடைப்பை எதிர்த்து இப்போதே உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன் என பகிரங்களாகவே நடுவருக்கு அறிவிக்க, உன்னால் என்ன புடுங்க முடியுமோ புடிங்கிக்கோ என்கிற அர்த்தத்தில் கண்டும் காணாமல் விட்டு விடுகிறார். விளைவு?

நம்மை சிறையில் அடைக்க உத்தரவிடும் போது, எதற்காக அடைக்கப்பட்டுள்ளோம் என்பதை எழுத்து மூலம் நடுவர்கள் பதிவு செய்ய வேண்டும். இப்படி பதிவு செய்யப்பட்ட காரணம் நமக்கு தெரிவிக்கப் பட்டது என்பதை பறைச்சாற்ற அவ்விளக்க குறிப்பின் கீழ் விதி 167(2)(ஆ) இன்கீழ் நமது கையொப்பத்தை பெற வேண்டும்.

இப்படி பெற வேண்டும் என்பது பல நடுவர்களுக்கு கூட தெரிவதில்லை. தெரிந்து கேட்டாலும், இதற்காகத்தான் கேட்கிறார்கள் என்கிற விபரம் தெரியாமல் கைதிகள் பலரும் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்தை போட்டு விடுகின்றனர். ஆனால், சட்ட விழிப்பறிவுணர்வுள்ள நம் வாசகரோ போட முடியாது என்று மறுத்து விட்டார்.

நீ கையொப்பம் போட மறுத்து விட்டேன் என நானே எழுதிக் கொள்கிறேன் போ என, பின்னால் உருவாக இருக்கும் சட்ட சிக்கலை உணரும் திறன் இல்லாமல் நடுவரும் இராஜபாளையம் கிளை சிறைக்கு வழியனுப்பி வைத்து விட்டார்.

கிளைச் சிறைக்கு சென்ற வாசகர், ‘‘நடுவரின் சட்ட விரோத சிறையடைப்பை எதிர்த்து உண்ணா விரதத்தை ஆரம்பித்துள்ளேன் மற்றும் கையொப்பமிடவில்லை. இதனை பதிவு செய்து என்னை சிறைக்குள் எடுத்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்துகிறார்’’.

சிறை ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல், வெளியிலேயே நீங்கள் உண்ணா விரதத்தை தொடங்கி விட்டதால், உங்களை எங்கள் வசம் எடுத்துக் கொள்ள முடியாது என மறுத்து, மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்ல, கைது செய்த கொண்டுச் சென்ற காவலர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

அங்கே கொண்டு சென்ற போது இரவு மணி பதினொன்று. அங்கேயும் இதையே பதிவு செய்ய சொல்ல அவர்களும் மறுத்து, மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தவே, வேறு வழியின் கைது செய்த காவலர்களும், வாசகரை கொண்டு செல்கின்றனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவ ஊழியர்களுக்கு இதெல்லாம் புதுசுதானே! உண்ணாவிரதம் இருப்பதால், வேறு வழியின்றி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்துக் கொள்ள வேண்டியது, அவர்களின் கடமையாகி விட்டதால், சேர்த்துக் கொண்டார்கள்.

வாசகருக்கோ இந்தச் சிறை, அந்தச் சிறை என அலைந்து திரிந்து, எப்படியோ மருத்துவமனையில் நோக்கம் நிறைவேறி விட்ட ஆத்ம மகிழ்ச்சியில் பெட்டில் ஜாலியாக படுத்துக் கொண்டார். அவருக்கு தொடர்ச்சியாக நாட்கணக்கில் போடப்பட்ட டிரிப்ஸ்ஸையும் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறார். இதில் என்ன சந்தோசம் என்கிறீர்களா?

இவர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைக்க நடுவரின் உத்தரவைப் பெற்று வந்த காவலர்கள் மூவரும் இவரது பாதுகாப்பிற்காக ஒரு வாரம், இவரது படுக்கைக்கு அருகேயே காவலுக்காக உட்கார வைத்து இருந்ததுதான், அவர்களுக்கு இவர் கொடுத்த சரியான தண்டனை.

இவரது வில்லங்கத்தில் நாம் சிக்கி கொள்ள கூடாது என மற்ற காவலர்கள் யாரும் இவரை பாதுகாக்கும் பணிக்கு பொறுப்பேற்க முன்வரவில்லை. இந்த விடயம் சிறையில் அடைக்க உத்தரவிட்ட முட்டாள் நடுவருக்கு செல்கிறது. என்ன செய்வது என்று புரியாமல், ‘‘இவர் மனு போடாமலே, இவரை பிணையில் விடுவிக்க உத்தரவு போட்டு காவலர்களிடம் கொடுத்து அனுப்புகிறார்’’.

முட்டாள் காவலர்கள் அப்பாடா நம்ம பிரச்சினை முடிஞ்சிதடா என ஏகப் பெருமூச்சி விடுகிறார்கள். பிணைக்கான உத்தரவை இவரிடம் கொண்டு வந்து கொடுத்து கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு, வீட்டுக்குச் செல்ல அழாத குறையாக மன்றாடுகிறார்கள்.

ஆனால் இவரோ, ‘‘நான் எப்போது கைது செய்யப்பட்டேன்; கைதுக்கு சட்டப்படி கையெழுத்து போட வில்லையே! நான் எதற்காக பிணையில் போக வேண்டும்... எதற்காக கையெழுத்துப் போட வேண்டும் என கூலாக கேட்க காவலர்களுக்கு அழுகையே வந்து விட்டது’’.

பின்ன எத்தனை நாள்தான் இவர் பெட்டில் படுத்துக் கொண்டும், சட்டப் புத்தகங்களை  படித்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும் மற்றவர்களோடு அடிக்கும் லூட்டியை இரவு பகலாக எவ்வளவு நாள்தான் கண் விழித்துப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்? ஏடா கூடமாக எதையாவது செய்து கொண்டால், இவர்கள்தானே பதில் சொல்ல வேண்டும், பொறுப்பேற்க வேண்டும்?

இந்த நாட்களில் இவர்களுக்கு கிடைக்கும் ஓசி சாப்பாடு, லஞ்சப் பிச்சை எல்லாம் வேறு பறி போய் விட்டதே. பொண்டாட்டி இல்லாம வேறு இருக்க முடியாதே! இந்த விபரம் தெரிஞ்சா பொண்டாட்டி வேற மொத்து மொத்துன்னு மொத்துவாளே!  

சிறையில் ஒப்படைத்திருந்தால் இதெல்லாம், சிறை ஊழியர்களின் பாடாகி போயிருக்கும். இவர்கள் ஜாலியாக காவல் நிலையத்துக்கு போய், தங்களின் மற்ற பொய் வழக்குகளை தொடர்ந்திருப்பார்கள். ஆனால், நம்ம ஆராய்ச்சி சட்ட விதி யாரை வறுத்தெடுக்காமல் விட்டது... இவர்களை மட்டும் விட்டு விட..?

இவர்களது கெட்ட நேரம், நம் சட்ட விதியில் இவர்கள் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

கைதியான வாசகர் கையெழுத்து போட மறுக்கும் விபரங்களை மீண்டும் முட்டாள் நடுவருக்கு தெரிவிக்கிறார்கள். அவருக்கும் மண்ட குடைச்சல் ஆகி, தான் தப்பிக்கனுமே என்பதற்காக, அடிமைகளான காவல் நிலைய ஆய்வு ஊழியரை ‘‘இதுபோன்ற கிறுக்கு பயல்களை எல்லாம் எதுக்குயா பொய் வழக்கு போட்டு கைது பண்ணுனீங்கங்னு’’ டோஸ் விடுகிறார். என்ன பண்றது என புரியாமல் யார் யாரையோ ஆலோசனை கேட்கிறார்.

பின்னர், நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது. இதுல கையெழுத்து வாங்கிட்டு, கைதிய வெளியில அனுப்பு. இதனை எனக்கு காவலர்கள் மூலம் கொடுத்து அனுப்பு என இராஜாஜி மருத்துவ மனையின் டீனுக்கு பிணை உத்தரவை விடுக்கிறார்.

காவலர்களை பிடித்திருந்த சனியின் பார்வை டீனுக்கு திரும்பி விட்டது. டீனும் சாதாரணமாக இவரிடம் பேசிப் பார்க்கிறார். இவரோ, இம்மியும் அசைந்து கொடுக்கவில்லை. உடனே இவரது ஆதரவாளராக மாறி, உண்மையில் உங்களை நான் பாராட்டுகிறேன். தப்பு செய்வது நீதிபதியே ஆயினும் சும்மா விடக் கூடாது. இப்படித்தான் போராடனும்.

ஆனால், தொடர்ந்து போராடுவதற்கு உடம்பில் வலு வேண்டுமே! அதற்காகவேனாலும் நல்ல சத்துள்ள உணவா சாப்பிட வேண்டாமா? இப்படி நாள் கணக்கில் உண்ணாவிரதம் இருந்தால், உடம்பில் தெம்பு குறைந்து போராட முடியாமல் போய் விடுமே என என்னென்னவோ சொல்லி கையெழுத்து வாங்க முயற்சிக்கிறார்.

ஆனால், இவரோ என்மீது அதிக அக்கரை இருக்கப் போய்தானே டிரிப்ஸ் ஏத்துறீங்க. அதேபோல, இன்னும் சத்துள்ள என்னென்ன இருக்கோ அத்தனையும் ஏத்துங்க! நான் என்ன வேண்டாம்னா சொன்னேன் என்று படு கூலாகச் சொல்ல, டீனுக்கு தலைச் சுற்றல் வந்து விட்டது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், அவருக்கு அல்லவா ஆப்பு வைப்பார்கள்! இந்த அபாயத்தை உணர்ந்த டீன், இவருக்கு தெரியாமல், இவரது மனைவியை அழைத்து மூளைச் சலவை செய்து, ‘‘எனது கணவரை என்னிடம் நல்ல முறையில் ஒப்படைத்தார்கள் என எழுதி கையெழுத்து வாங்கி கொண்டு விட்டபடியால், இவரும் வேறு வழியின்றி வெளியேற நேர்ந்து விட்டது’’.

இந்தியாவில் இப்படி யாராவது, சிறையில் அடைக்க உத்தவிட்ட நடுவரை வறு, வறு என வறுத்தெடுத்ததுண்டா? தெரிந்தால் சொல்லுங்கள். இப்படி இன்னும் சில சுவரசியமான வறுத்தெடுப்புகள் நடந்துள்ளன.

எனது வறுத்தெடுப்பில் சிக்கிய வி.எஸ்.குமரேசன் என்கிற சென்னை ஜார்ஜ் டவுன் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர், இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவராக பணியிறக்கம் செய்யப்பட்டு தற்போது செங்கல்பட்டு இரண்டாவது நீதித்துறை நடுவராக உள்ளார். இவரது நண்பர்கள் பலர் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று விட்டனர். இதுபற்றிய சி(ரி, ற)ப்பான விபரங்களை சமயம் வரும் போது சொல்கிறேன்.

பிணையில் வருவதற்கு எத்தனை பிரிவுகள் உள்ள என உங்களுக்கு தெரிந்த வக்கீல் பொய்யர்களைக் (நண்பர்களை) கேட்டுப் பாருங்கள். 436, 437, 438 மற்றும் 439 என அவர்களுக்கு தெரிந்த நான்கு விதிகளை மட்டுமே சொல்லுவார்கள்.

ஆனால் நானோ, நீதியைத்தேடி... பிணை எடுப்பது எப்படி? என்கிற இரண்டாவது நூலில் சூழ்நிலைக்கு ஏற்ப பிணையில் வருவதற்கென்று கூடுதலாகவும், வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் தெரியாமல் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட விதிகளைப் பற்றிய விளக்கத்தை கொடுத்துள்ளேன்.

இதனை 2005 ஆம் ஆண்டிலேயே படித்து, பிணையில் வந்த மகேந்திரன் என்கிற விசாரணை கைதி ஒருவர், சிறையில் இருந்து எனக்கு எழுதிய கடிதத்தையும், இதன் பின் பக்கத்தில் அக்கடிதத்தை தணிக்கை செய்த சிறை ஊழியர், ‘‘சட்டம் தெரிந்ததால் பதிவு தபால் செலவில் உத்தரவு வாங்கியாகி விட்டது என்பதை ரசனையோடு படித்து அடிக்கோடிட்டு இருப்பதையும் நீங்களே படித்துதான் பாருங்களேன்’’.மக்கள் மருத்துவர் கருணாநிதி போன்று சட்டத்தில் மாக்களாகவே இருக்க விரும்புவதால், நம் நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? நூலைப் பொய்யர்கள் பயன்படுத்தி பணம் பண்ணுவதற்கே பயன்பட்டு வருகின்றன. 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

5 comments:

 1. வாசகர்களின் வறுத்தெடுக்கும் பயணம் தொடரட்டும்!

  ReplyDelete
 2. very useful and valuable site.

  ReplyDelete
 3. ya very good, let us all follow this. but sure i will not become a judge anymore.

  ReplyDelete
 4. இனியவன்September 8, 2013 at 6:13 AM

  சூப்பர்.சட்ட கல்லூரி படிக்கும்போதே நான் உங்களின் வாசகன்...தற்போது வழக்கறிஞராக என்னால் முடிந்த மனித நேய பணிகளை செய்து வருகிறேன்.தொடரட்டும் உங்கள் பணிகள்.ஜைனுல் ஆபிதீன் ,வழக்குரைஞர் உயர்நீதி மன்றம்.

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)