No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, March 20, 2013

அமெரிக்க நாட்டா(ண்)மை!


ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாடுகளின் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே கிளர்ச்சி எழுந்துள்ளது.

இதன் முதற்கட்டமாக கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதலால், கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் அனைத்துமே காலவரையின்றி மூடப்பட்டு விட்டன.

கடந்த வாரம் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆராய்ச்சிக்காக வந்த புத்த மத துறவி ஒருவரும், நேற்று 18-03-2013 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கிய புத்த மத துறவி ஒருவரும், ஈழத் தமிழ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த காணொலி காட்சிகளை ஒளி ஊடகங்கள் பெருமையோடு பரப்பியதில், மொழி தெரியாத இடத்திற்கு சென்றுள்ள நம்மை ஒரு கும்பல் திடீரென சூழ்ந்து கொண்டு தாக்கினால், நமக்கு என்ன நிலைமை ஏற்படும் என்பதை உணரும் தன்மையுள்ள அகில உலக மனிதாபிமானிகளை கொதிப்படைய செய்துள்ளது.

இதற்கிடையில், இன்று 19-03-2013 காலையில், இதுவரை (சுமார் கடந்த ஒன்பது ஆண்டுகளாக) மத்திய அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை விலக்கி கொள்வதாகவும், 21-03-2012 க்குள் இது குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் என்று செய்தியாளர்களை கூட்டி விளக்கி, திருவாய் மலர்ந்து உள்ளார், திரு.கருணாநிதி.

இவைகள் எல்லாம் ஒருவன் வாழும் போது தண்ணீர் கொடுக்காதவர்கள், அதன் செத்த பிறகு பாலூற்றி, வாய்க்கு அரிசி போடும் வெற்றுச் சம்பிரதாய சடங்குகளாகவே உள்ளது. இதனை மத்திய அரசும் தங்களது ஆட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

உண்மையில் மத்திய அரசுக்கான ஆதரவை திரு.கருணாநிதி போர் குற்றங்கள் நடைபெற்ற அந்த கால கட்டங்களிலேயே செய்திருக்க வேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த போது செய்யாமல், தனது முதல்வர் பதவிக்கும், சொந்த பந்தங்களின் மத்திய அமைச்சர் பதவிக்கும் ஆசைப்பட்டு, பல லட்சம் பேரை ஈவிறக்கமின்றி கொலை செய்ய அனுமதித்து விட்டு, அடிக்க வேண்டிய கோடிகளை கொள்ளையடித்து விட்டு, தற்போது ஆதரவை விலக்கி கொள்கிறேன் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதால், படுகொலை செய்யப்பட்ட தொப்புள் கொடி உறவுத் தமிழர்கள் எல்லாம் உயிரோடு வந்து விடுவார்களா என்ன?

ஏனிந்த ஆதரவு விலகல் கபட நாடகம் என்பதும் கூட போகப்போக புரிந்து விடும். அதுவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சரி, ஈழத்தமிழ்கள் என் தொப்புள் கொடி உறவுகள் என சொல்லிக் கொள்பவர்கள், உலகில் பல கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்களில் எவருமே தமிழர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியற்றவர்கள் போலவும், ஆதலால், தங்களைத் தாங்களே தமிழனத் தலைவர்கள் என அறிவித்துக் கொண்ட அற்பர்கள், போரின் போது தன் உயிரை துறந்தாகிளும் காத்திருக்க வேண்டிய ஈழத் தமிழர்களை, தற்போது அற்பமானதாக தெரியும் மத்திய அமைச்சர் பதவியை துறந்து கூட காப்பாற்ற முன்வரவில்லையே ஏன் என்று யோசித்தீர்களா?

அப்படி காக்கப் போய், ஒருவேளை தமிழ் ஈழம் மலர்ந்து விட்டால், உலகத் தமிழர்களுக்கெல்லாம் மாவீரன் பிரபாகரன் தலைவனாகி விடுவான், நாற்பதாண்டு காலமாக தமிழ்நாட்டில், தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாமும், நம் பரம்பரையும் டம்மியாகி விடுவோம் என்கிற ஆதிக்கப்பதவி ஆசை வெறியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

ஆனால், பதவி ஒருபோதும் நிரந்தரமல்ல; பட்டமே நிரந்தரமானது என்பதற்கு இணங்க, ‘‘தமிழின துரோகி’’ என்கிற பட்டமல்லவா கொடுக்கப்பட்டு விட்டது!

எதிர்கால தூண்களான மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில், சட்டத்துக்கு உட்படாத தவறான போராட்ட முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் விபரீத விளைவுகளை எதிர்காலத்தில் அம்மாணவர்களும், நாமுமேதாம் சேர்ந்து அறுவடை செய்ய வேண்டியிருக்கும். எச்சரிக்கை!

தங்களை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என சொல்லிக் கொண்டு அடிதடியில் இறங்கும், தங்களை வீரனாக காட்டிக் கொள்ள விரும்பும் அடாவடி அடிதடி தமிழர்கள், நம்மை நம்பி அப்பாவியாய் வரும் சிங்கள இனத்தவரையோ அல்லது புத்த மத துறவிகளையோ தாக்குவது என்பது அநாகரீகமான மனித உரிமையை மீறிய செயல்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் இங்கு தாக்க போய், நம்மைப் போலவே சிங்களத்தவர்களும் இலங்கையில் தாக்க ஆரம்பித்தால், அதிகமாக பாதிக்கப்பட போவது, ‘‘பிய்ந்து போன சதை பிண்டங்களுடன், குத்துயிரும், கொலை உயிருமாய், நமக்கு எப்படி சாவு வரும் என சாவை எதிர் நோக்கி வாழ்ந்து வரும் மீதமுள்ள ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நம் அப்பாவி தமிழர்களே!’’ என்பதை உணர வேண்டும்.

மேலும், தமிழினப் படுகொலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாய் இருந்த, இருந்து வருகின்ற, நம்மோடே வசித்து வருகின்ற தன் இன துரோகி தமிழர்களிடமும், தமிழின துரோகி இந்தியர்களிடமும் முடிந்தால், மாவீரன் பிரபாகரனைப் போன்று இலங்கைக்கே சென்று கொலைக்கார ராஜபக்ஷேவுடனும், சிங்கள ராணுவத்திடமும்தாம் நேரடியாக மோத வேண்டுமே தவிர, நம்மை நம்பி வரும் சிங்கள அப்பாவிகளிடம் அல்லவே அல்ல.

அப்படி மோதுவது உலக சமுதாயத்தில், நமக்குநாமே  தேடிக் கொள்ளும் காலத்தால் அழிக்க முடியாத இழுக்கேயாகும்.

மொத்தத்தில் அறிவுப்பூர்வமாக பொங்கி எழ வேண்டுமே தவிர, உணர்ச்சி பூர்வமாக பொங்கி எழ கூடாது. அப்படி எழுந்தால் இறுதியில் நாம்தான் அடங்க வேண்டியிருக்கும். இப்படி பல முறை எழுத்ததன் பயனாய்தான், தனித்து எதையுமே செய்ய இயலாத நிலையிலும், முடிவெடுக்க முடியாத நிலையிலும், இன்றும் அடிமைப்பட்டு, மற்றவர்களின் ஆதரவுக்கு கையேந்தி நிற்கிறோம்.

நாம் எப்போது அறிவுப்பூர்வமாக பொங்கி எழுகிறோமோ அப்போது மட்டுமே, அமெரிக்காவைப் போல எவரையும் ஆட்டிப் படைக்க முடியும் என்பதோடு, நாட்டா(ண்)மை செய்யும் வல்லமையையும் பெற முடியும்.  

ஆம்! போர் நடந்த போது, கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்து, தமிழர்களை குன்றுபோல் கொன்று குவித்து போட்ட போது, போரை நிறுத்து என்று இலங்கையை எச்சரிக்காது, மௌனியாய் இருந்த அமெரிக்காவுக்கு, இப்போது மட்டும் மனித உரிமை மீறல் குறித்து தீர்மானம் கொண்டு வர என்ன யோக்கியதையும், அக்கறையும் இருக்கிறது என்பதைப் பற்றி நாம் சற்றேனும் சிந்திக்க வேண்டாமா?

அமெரிக்காவின் ஏகாதிபத்திய மற்றும் எதேச்சை அதிகார எதிர்பாளர்களான, பெரும்பாலான தமிழ் இன உணர்வாளர்களே, அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை தீர்மானத்தின் உண்மையான சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சி வயப்பட்டும், மதி இழந்தும், ராஜபக்ஷே மீது கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கூப்பாடு போடுவதேன்?

ராஜபக்ஷே செய்த போர் குற்ற படுகொலைகளுக்கு ஆயுதங்கள் வழங்கியும், சிங்கள இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தும் ஊக்குவித்த தமிழின துரோகி இந்தியர்களையும், இவ்விந்தியர்களுக்கு அரசியல் ரீதியாக ஆதரவுக்கரம் நீட்டிய தன் இன, தமிழ் துரோகிகளையும் அப்படுகொலை போர் குற்றத்தில் சேர்த்து விசாரணை செய்ய வேண்டும் என கோராதது ஏன்?

எதிரிகளை கூட மன்னிக்கலாம். ஏனெனில், அவன் தன்னை எதிரி என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறான். ஆனால், நான் உன் இனம், நீ என் இரத்த சொந்தம், தொப்புள் கொடி உறவு என்றெல்லாம் வியாக்கியானம் பேசி கூடவே இருந்து குழி பறித்த, நம்ப வைத்து கழுத்தறுத்த தமிழின துரோகிகளை மன்னிக்கலாமா?

இப்படியொரு மனித உரிமை மீறல் தீர்மானத்தை அமெரிக்கா மட்டும்தாம் கொண்டு வர முடியுமா... ஐநாவில் அங்கம் வகிக்கும் மற்ற எந்த நாடும் கொண்டு வர முடியாதா... அந்நாடுகளை கொண்டு வாருங்கள் என நாம் கோர முடியாதா... ஐக்கிய நாடுகள் சபையே சுய விருப்ப அடிப்படையில் கொண்டு வர கோரிக்கை விடுக்க முடியாதா என்பதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். ஏன் தெரியுமா?

நுண்ணறிவு இல்லாத நூல்கள் என்கிற தலைப்பு கட்டுரையில், எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்களது நூல் வெளிவருவதற்கு எனது அறிவுப்பூர்வமான ஒத்துழைப்பை கேட்டார்கள். நானும் சமுதாயத்திற்கு இரண்டு நல்ல நூல்கள் வெளிவருகிறதே என்ற ஆர்வத்தில் உதவி செய்தேன். ஆனால், “ஒருவரோ இருக்க கூடாத பொய்யான விசயங்கள் இருக்க வேண்டும் என்றார். மற்றவரோ, நூலின் மையக்கருவே, நூலில் இருக்க வேண்டாம்” என்றார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?

இதில் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நூலில், ‘‘ஒப்பற்ற நாடகம்’’ என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள....

‘‘அமெரிக்கர்கள் எந்த நாட்டை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பினாலும், அந்த நாட்டின் தேவைகளை, அவர்களே பட்டியலிட்டு, மனிதாபிமானம் என்ற போர்வையில், வலியச் சென்று உதவிகளை செய்து கொண்டே, குழப்பங்களையும் உருவாக்குவார்கள். அக்குழப்பத்தை போக்க அவர்களே மத்தியஸ்தர்களாக வந்து, அப்பிரச்சினைகளை தீர்த்தும் வைப்பார்கள்.

இதற்கு பிரதி பலனாக அந்த நாட்டில் இருந்து தொடர்ந்து வருமானம் வரக் கூடிய ஒரு வழியையும், அந்நாட்டவர்களே செய்து தரும்படி செய்து கொள்வதுதாம், அவர்களது ராஜதந்திரம்.

இதுபோன்று மக்களை அடிமைப்படுத்தும் அவர்களுடைய செயல்களுக்கு பேருதவியாய் இருப்பது, மக்களிடம் உள்ள இறை தன்மை பற்றிய அறியாமையும், புகழ் போதையுமேதாம்!’’

என்கிற இக்கருத்தையே இத்தலையங்கத்தின் மூலக் கருத்தாக பதிவு செய்கிறேன்.

தற்போது இலங்கை மீது மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ள அமெரிக்க நாட்டா(ண்)மையின் கணக்கு, இக்கருத்தோடு ஒத்துப் போகிறதா என்பதை சரி பார்த்து, அறிவுப்பூர்வமாக முடிவை மேற்கொள்ளுங்கள், அன்புத் தமிழர்களே! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, March 5, 2013

திரித்து எழுதப்படும் தீர்ப்புகள்!


தற்காப்பும், தனது கைக்கே காப்பும்! என்ற ஆக்கத்திற்குப் பிறகு, இக்கட்டுரையைப் படிக்கவும். 

விதிவிலக்கு என்றொரு வார்த்தை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு, ‘‘அதனதன் இயல்பான தன்மையில் இருந்து மாறுபடுதல்’’ என சுருக்கமாகச் சொல்லலாம்.

உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் இயல்பானதொரு குணம் உண்டு. அக்குணத்தில் இருந்து அவ்வுயிரினங்களில், ஏதாவதொரு உயிரினம் சற்றே மாறுபடும் போது, அவ்வுயிரினம் விதிவிலக்கு என்ற இலக்கணத்திற்குள் வந்து விடுகிறது.

ஆனால், மனிதனோ மற்ற உயிரினங்கள் அனைத்திலும் இருந்தும் விதிவிலக்கானவன். ஆம்! அனைத்து உயிர்களுக்கும் மகானாக இருக்க வேண்டிய மனிதன், எப்போது, எப்படி குணம் மாறுவான் என்பதை யாராலும் சொல்ல முடிவதில்லை.

மனிதன் என்கிற மகத்தான நிலையிலேயே இந்த அவல நிலை என்றால், தனக்குதானே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்பவர்கள் நிச்சயம் இயல்பான மனிதனாகவும், அதில் விதிவிலக்கானவனாகவும் எப்படி இருக்க முடியும்! ஒருபோதும் இருக்கவே முடியாது.

குடிமக்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே சட்டப் பயிற்சி வகுப்புகளை நடத்திய போது, ‘‘இந்த பயிற்சியின் பிரதாண நோக்கம் உங்களுக்காக நீங்களே வாதாட வேண்டும் என்பதுதாம் என வலியுறுத்தும் போது, வெகு சிலர் எனது நண்பன், அப்பா, அண்ணன், மாமா, மச்சான் என யாராவது ஒருவர் வக்கீலாக இருப்பதாகவும், அவர்களிடம் கூட, நமது வழக்கை ஒப்படைக்க கூடாதா’’ என வினவுவார்கள்.

அதற்கு, ‘‘நான் சொல்லும் சட்ட விசயங்களை வக்கீல்கள் மட்டுமல்ல, நீதிபதிகள் கூட ஒருபோதும் அப்படியே செயல்படுத்தி விட முடியாது. அப்படி செயல்படுத்த நினைத்தாலே, அதுதான் அவர்களது இறுதி வழக்காக இருக்கும்’’ என்பேன்.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டில்தாம், வக்கீல் தொழில் பற்றிய அவலங்கள் குறித்து மகாத்மா காந்தி கூறிய கருத்துக்கள் எனக்கு தெரிய வந்தது.

அக்கருத்துக்களில் மிகவும் முக்கியமாக, ‘‘வக்கீல்களால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்கிறீர்களா என வாசகர் ஒருவர் எழுப்பும் கேள்விக்கு, நிச்சயமாக இல்லை என்றும், அப்படி ஏதாவது நன்மை செய்திருப்பதாக இருந்தால், அது அவர்கள் சாதாரண மனிதர்கள் என்ற நிலையில் இருந்து செய்ததே அன்றி, வக்கீலாக அறவே அன்று என்பார்’’.

இப்போது நான் வாசகர்களுக்கு சொன்ன கருத்தையும், காந்தி வாசகருக்கு சொன்ன கருத்தையும் ஒப்பிட்டு யோசித்து பாருங்கள். விளக்கம்தாம் வேறே ஒழிய, கருத்து ஒன்றுதாம் என்பது விளங்கும். இது விரிவாகச் சொல்லி புரிய வைக்க வேண்டிய விசயம் என்பதால், நம் தளத்தில் முகப்பில் வெளியிடப்பட்டவில்லை.

வக்கீல் தொழிலை விபச்சார தொழில் என்று கூறிய மகாத்மா காந்தியும் வக்கீல் தொழில்தானே செய்தார் என்று பலரும் நினைக்கலாம்.

ஆனால், ‘‘அவரோ வழக்கு தரப்பினர்களிடம் நட்பு கொண்டு, பிளவுபட்டிருக்கும் அவர்களை ஒன்றாக்கி சமரசம் செய்து வைப்பதுதாம் உண்மையான வக்கீலின் கடமை என்றும், இதைத்தாம் தான் இருபது வருடங்கள் செய்ததாகவும் சத்திய சோதனையில் குறிப்பிட்டுள்ளார்’’.

ஆனால், மகாத்மாவை தவிர, மற்ற வக்கீல்களோ, எதிர்தரப்பினர்களை அல்லது அவர்களது வக்கீல்களை தொடர்பு கொண்டு, தனது கட்சிகாரரின் நியாயங்களையும், ஆதாரங்களையும் அல்லவா விற்கிறார்கள். உலகப்புகழ் 2ஜி ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு துறையின் வக்கீல் ஏ.கே.சிங் கூட இதைத்தானே செய்தார்.

மதிப்பும், மரியாதையும் மிக்க மத்திய புலனாய்வுத்துறையில் இருக்கும் வக்கீலே இப்படி விலை போகிறார் என்றால், இன்றைய டீ, காபி, சாப்பாட்டு செலவுக்கு எந்த இளிச்சவாயனாவது சிக்க மாட்டானா என்று, நீதிமன்ற வளாகங்களில் கருப்பு அங்கியை மாட்டிக் அலையும் வக்கீல்கள் முதல் அவரவர்களின் பணத்தேவைக்காகவே அலையும் அடுத்தடுத்த கட்ட வக்கீல்களின் நிலையில், நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று உங்களையே வக்கீலாக கற்பனை செய்து பாருங்கள், உண்மைகள் விளங்கும்.

இந்த எதார்தத்தின் அடிப்படையில்தாம், வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்ற தத்துவத்தை முன் மொழிந்துள்ளேன். இதனை படித்ததும், என்னைப்பற்றி அறியாத அப்பாவி வக்கீல்களில் வெகுசிலர் வானத்துக்கும், பூமிக்கும் குதிப்பார்கள். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று ஏகத்துக்கும் எகிறுவார்கள்.

இதிலும் சிலர் அவர்களுக்கு என்னமோ மானம், வெட்கம், சூடு, சொரணை என எல்லாம் இருப்பது போல, மானநஷ்ட வழக்கு போடுவேன், குறைந்தது லட்சக்கணக்கில் பணம் புடுங்குவேன் என பூச்சாண்டி அறிவிப்பெல்லாம் அனுப்பி ரொம்பவே பொறுமையை சோதிப்பாங்க.

வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்பது வெளிப்படையான தத்துவமே. அது நானாகவே இருந்தாலும் அப்படித்தாம் என்பது உள்ளார்ந்த தத்துவம். இதையும் வெளிப்படையாகவே சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற ஐந்தாவது நூலில் எழுதியுள்ளேன்.

ஆதலால், நானும் (பொறு, பெரு)மையாக என்னிடமிருந்து நீங்கள் புடுங்குவதற்கு, உங்களின் அத்துனை கயவாளித்தனங்களும், கூடவே மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் சொன்ன அவலங்களுமே இருக்கின்றன.

எனவே, என் மீது வழக்கு போட்டால், உங்களிடம் இல்லாத மற்றும் என்னிடம் இருக்கிற, உங்களைப் பற்றிய (அசிங், அவலங்)கங்களை தாம் புடுங்க முடியுமே தவிர, வேறு எதையம் புடுங்க முடியாது என பதில் (அனுப்பு, சொல்லு)வேன். அத்தோடு எல்லாத்தையும் பொத்திக்கிட்டு போயிடுவாங்க.  

இதேபோல, வாசகர்களும் கூட, அவ்வப்போது வக்கீல்களின் பூச்சாண்டிகளுக்கு, வேப்பில்லை அடிக்க ஆரம்பிச்சி தெளிய வைக்கிறாங்க! இங்க எப்படி வேப்பில்லை அடிச்சிருக்காங்கன்னு நீங்களும் படித்து பாருங்க! உங்களுக்கும் ஒருநாள் உபயோகப்படலாம்.

ஒரு சட்டத்தைக் கூட ஒழுங்காக தெரிந்து வைத்திருக்காமலும், ஒரு பக்கம் கூட ஒழுங்காக எழுத முடியாதவர்களும் வக்கீல்களாகவும், நீதிபதிகளாக இருக்கும் போது, எவ்வளவோ சட்ட விசயங்களை எழுதியுள்ள எனக்கு வக்கீலாவதோ, நீதிபதியாவதோ இமயமலையில் ஏறுவது போன்ற கடினமான காரியமா என்ன?

ச்சீ, ச்சீ... (என, நம)க்கு வேண்டாம் அந்த (அபச், விபச்)சாரத் தொழில்...

சரி, நாம விட்டு விட்ட விதிவிலக்கைப்பற்றி தொடரவோம்.

நான் யோக்கியமான வக்கீல் என்று ஊரறிய சொல்லக் கொள்ள வக்கீல்களுக்கு அவ்வளவாக வழி கிடையாது. ஆனால், நீதிபதிகள் தாங்கள் எழுதும், தீர்ப்பின் மூலம் தன்னைத்தானே உலகரிய செய்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட நீதிபதிகள் வரவர அதிகரித்து வருகிறார்கள்.

சமீப காலங்களில் இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நிதிபதி.சந்துரு! இவர் தனது முற்போக்கான சிந்தனையால், தான் நீதிமன்ற அறைக்கு வரும் போது, பிரத்தியோக பணியாளர் உஷ், உஷ் என்று பாம்பு போல சீறி பயமுறுத்தக் கூடாது, வக்கீல்கள் மை லாட் என்று ஐஸ் வைத்து, என்னால் தர முடியாத நீதியை தப்பித்தவறி கூட கேட்க கூடாது என ஆரம்பித்து பிரபலமான இவர், தனது ஓய்வை முன்னிட்டு தனக்கு பாராட்டு விழா நடத்தக் கூடாது என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி, அதை ஊடகங்களுக்கும் கொடுத்து பிரபலமாகி உள்ளார்.

இவரை நீதிமான் என்றால் என்னவென்று அர்த்தம் தெரியாது வர்ணிக்கும் ஊடகங்களும் உண்டு. இப்படிப்பட்ட முற்போக்கு சிந்தனை கொண்ட நீதிமானை, நாமும் பாராட்டாமல் இருந்தால் நல்லாவா இருக்கும் என நினைத்து, அவருக்கு பிரியா விடை கொடுத்து எழுதிய மடலை, நீங்களும் படித்துதான் பாருங்களேன்!

கேர் / நிர் / 33-2013       நேராக / பதிவஞ்சலாக / மின்னஞ்சலாக சார்பு   தேதி: 27-02-2013 


பெறுதல்
இந்திய அரசமைப்பு கோட்பாடு
51அ-இன் கீழான கடமை நோக்கத்திற்காக,
திரு.சந்துரு அவர்கள்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
உயர்நீதிமன்றம், சென்னை - 104

இல்லம்: பவழ மல்லி பங்களா
41, கிரீன்வேஸ் ரோடு, இராஜா அண்ணாமலை புரம், சென்னை - 28

இந்திய அரசமைப்பு கோட்பாடு
51அ-இன் கீழான கடமை தகவலுக்காக,
இந்திய மற்றும் உலக அளவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு!
பொருள்: நீதிபேராணை 1971 / 2012 மீது தாங்கள் வாங்கிய / வழங்கிய உத்தரவுகள் குறித்து, இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 76 இன் கீழ் சான்று நகல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கெடுக்க கோருதல் தொடர்பாக...

     பார்வை: மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபேராணை 1971 / 2012 இன் தீர்ப்புரை தேதி 05-09-2012 மற்றும் இது தொடர்பாக தாங்கள் பரிசீலித்த ஆவணங்கள்.

திரு.சந்துரு அவர்களுக்கு வணக்கம்.

இந்த ஆவணத்தில் வரும் சங்கதிகள் மற்றும் சங்கதிகளில் வரும் ஆவணங்கள் யாவும் இந்திய சாட்சிய சட்டம் 1872-இன் உறுபு 74-இன்படி, பொது ஆவணமாகும்.

இதனை இச்சட்டத்தின் உறுபு 76-இன்கீழ், சான்று நகலாக பெறவும், தவறாக பயன் படுத்தப்படும் இந்திய அரசமைப்பு மற்றும் மற்ற சட்டங்களை பற்றி அறிவுறுத்த, எங்களது வரிப்பணத்தில் இருந்து, உங்களுக்கு கூலி கொடுக்கும் முதலாளிகள் (குடிமகன்கள்) என்கிற முறையில், எங்களுக்கு உரிமை இருக்கிறது.

1. நீங்கள் நீதித்துறையை சீர்த்திருத்த வந்த சீர்திருத்தவாதி போல், அவ்வப்போது எதையாவது செய்து, அதனை தாங்களே பெரிய செய்தியாக்கி, தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறீர்கள்.

(அ, ஆ)ண்மையில் ‘கடமை’யைத்தான் செய்தேன்; எனக்கு எதற்கு பிரிவு (உப, விப)ச்சார பாராட்டு விழா என தலைமை நிதிபதிக்கு கடிதம் எழுதி அதனை ஊடகங்களுக்கு கொடுத்து ‘கடைமை’யைச் செய்துள்ளீர்கள் என்பதால், நாங்களும் உங்களின் க‘டை’மைச் செயலை எப்படி பாராட்ட வேண்டும் என்பதை உணர்ந்தே,  அதற்கேற்ப பின்வருமாறு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

2. மதுரையில் கடந்த 09-02-2012 அன்று மது அருந்திய போதையில், தாங்கள் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கணவன் ஜோதிபாசுவை உஷாராணி என்கிற அவரது மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்ததும், இது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 100 இன்படி, ‘‘தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலை என்பதால் குற்றமல்ல’’ என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையாளராக இருந்த அஸ்ரா கார்க் அவர்களால் விடுவிக்கப்பட்டது முற்றிலும் தவறு.

எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை முதண்மைச் செயலாளர் திரு.ராஜகோபாலன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சகாயம் அனுப்பிய 30.04.2012 தேதியிட்ட அறிக்கையை அடிப்படை ஆதாரமாக கொண்டு தொடுக்கப்பட மேற்படி பார்வை வழக்கை தாங்கள் விசாரணை செய்து தள்ளுபடி செய்து உள்ளீர்கள்.

3. எனவே, தற்காப்பு என்றால் என்ன, அதனை உபயோகிக்க வேண்டிய எல்லை என்ன என்பது பற்றிய அடிப்படை அறிவே உங்களுக்கு இல்லை என்று தெரிகிறது. இல்லை இல்லை எனக்கு எல்லா சட்ட அறிவும் உண்டு என சொல்ல தெரிந்தால், கூடவே தெரிந்தும், ஏன் தெரியாதது போல உத்தரவை வழங்கினீர்கள் அல்லது வாங்கினார்கள்  என்பதையும் சான்று நகலாக விளக்குங்கள்.

4. கொலை குற்றம் சாற்றப்பட்ட உஷாராணி, அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறைக்கு கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், அதிலும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த (சரணடைய வைத்த) சத்திரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மதிவானனும் மற்றும் லட்சுமனசாமி என்ற ஆதரவான இரண்டு சாட்சிகளின் முன்னிலையில், அவ்விரண்டு சாட்சிகளும், கொலையாளி உஷாராணியும் கையெப்பமிட்டுள்ள எழுத்து மூலமாகவும், மூலதனமாகவும் இருக்கிற வாக்கு மூலத்தில்,

‘‘........ மயங்கிய நிலையில் இருந்து மீண்டும் எழ முயன்ற போது, அவரது பிறப்புறுப்பு கொட்டையை கையால் பிடித்து பலம் கொண்ட மட்டும் இழுத்து நசுக்கினேன். சிறிது நேரத்தில் இறந்து விட்டார். மூக்கைப் பிடித்து அமுக்கி பார்த்தேன்.

சத்தம் இல்லை என்பதால், இறந்து விட்டார் என்பதை உறுதி செய்து கொண்டு, நான், கோகிலப்பிரியா, அம்மா வேலம்மாள் உடன் வெளியே வந்து பார்த்தோம். யாரும் பார்க்கவில்லை. எனது மகளின் கற்பை சூறையாட வந்த எனது கணவரை கொலை செய்து விட்டோம்.

நம்மை போலீஸ் பிடித்து விடும் என்று நடந்து பேங்க் காலனியில் உள்ள எனது அப்பா வீட்டிற்கு போய் தங்கினோம்.......’’ என்று கொலை வெறிக்கான வரிகள் முன்னும் பின்னுமாக நீள்கிறது.

இதனையே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறும் மகள் கோகிலப் பிரியாவும், கொலை நடந்த போது கூடவே இருந்த கோகிலப்பிரியாவின் பாட்டியும், கொலையாளி உஷாராணியின் அம்மாவும் ஆகிய வேலம்மாளும் வழிமொழிந்து வாக்கு மூலம் கொடுத்து கையெப்பமிட்டுள்ளனர். இம்மூவரது வாக்கு மூலத்திலும், ஆதரவு சாட்சிகள் இருவரும் அவரவர்களின் சுய வாக்கு மூலத்தை உறுதி செய்து மேலொப்பம் இட்டுள்ளனர்.

ஆதார ஆவண உண்மைகள் இப்படியிருக்க, நீங்களோ தீர்ப்புரை பத்தி 8 இன் இறுதியில், ‘‘அவர் கீழே விழுந்து விட்டார். அவர்கள் தண்ணீரை முகத்தில் தெளித்து உதவினார்கள். அதே சமயத்தில், 108 ஆம்புலண்சும் உஷாராணியால் அழைக்கப்பட்டது’’ என உண்மையான, எழுத்து மூலமான, வாக்கு மூலத்தில் இல்லாத ஒன்றை தன் இஷ்டம் போல் திரித்து எழுதி, ‘கயிறுக்கு அடுத்தபடியாக திரிக்கப்படுவது நாங்கள் எழுதும் தீர்ப்புகள்தாம்’ என்பதை தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.

தானே முன் வந்து, கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ள கொலைகாரி உஷாராணியை, சிபிசிஐடி விசாரணையில் இருந்து காப்பாற்ற, இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி தீர்ப்பையே திரித்து எழுதும் அளவிற்கு அவரின் மீது உங்களுக்கு என்ன அக்கறையான ஈர்ப்பு?

உஷாராணி பல ஆண்களுடன் தவறான பாலியல் உறவு வைத்திருப்பவர் என்கிற கொலை செய்யப்பட்ட அவரது கணவர் ஜோதிபாசுவின் கூற்றும், அதனை வழிமொழியும் அவரது தந்தை சமயமுத்துவின் கூற்றில், தாங்களும் ஒருவராக இருப்பீர்களோ என்று உஷாராணிக்கு சாதகமாக இதில் குறிப்பிட்டுள்ளபடியான தங்களின் பரிந்துரைகள்  எங்களை சந்தேகிக்க வைக்கிறது.

இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய தார்மீக கடமை தங்களுக்கே இருக்கிறது.

5. தீர்ப்புரை பத்தி 14 இல், ‘‘உடற்கூறு அமிலப் பரிசோதனையில், ஐந்து உள்ளுறுப்புகளில் குறைந்தது 92 மில்லி முதல் அதிகபட்சம் 220 மில்லி மது வயிற்றில் இருந்ததை பிர(தாண, மாத)மாக குறிப்பிட்டு உள்ளீர்கள்’’.

ஆனால், ‘‘முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், வயிற்றில் 200 கிராம் சமைத்த உணவு மட்டுமே இருந்ததாக தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், வயிற்றில் 220 மில்லி உட்பட உள்ளுறுப்புகள் ஐந்திலும் மொத்தம் 814 மில்லி மது, எப்படி உடற்கூறு அமிலப் பரிசோதனையில் தானாகவே வந்த சேர்ந்து கொண்டது’’ எப்படி என்பதை, வழக்கை விசாரித்து திரித்து தீர்ப்பெழுதிய நீங்கள்தான் விளக்க வேண்டும்.

6. மேலும் அதே பத்தி 14 இல், ‘‘முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அறவே இல்லாது, உடற்கூறு ஆய்வில் எப்படியோ வந்து சேர்ந்து கொண்ட 814 மில்லி மதுவிற்கு முக்கியம் கொடுத்தது உள்ளீர்களே தவிர, முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், ஜோதிபாசுவின் சாவுக்கு முதல் காரணமாக குறிப்பிடப் பட்டுள்ள உள்ள மூலை சிதைக்கப்பட்டது, உயிர் நாடியாக விளங்கும் பிறப்பு உறுப்பு கொட்டையில் ரத்தக்கசிவு, தலை, காது மற்றும் முகம் முழுவதும்  உள்ள சுமார் 13 (பெருங், கொடுங்)காயங்களைப் பற்றி எதையுமே குறிப்பிடவில்லையே!’’ ஏன்?

அப்பெருங்காயங்கள் எல்லாம், நாம் திருட்டுத்தனமாக திரட்டி, புரட்டி எழுதும் தீர்ப்பில் கடலில் கரைத்த பெருங்காயம் போல் ஆகி விடும் என்கிற தீர்க்கமான மமதையா?

7. தீர்ப்புரை பத்தி 17 இல், ‘‘மாவட்ட ஆட்சியர் சகாயம் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை என்பதால், அவர் அனுப்பிய அறிக்கைகள் குறித்து, அவரை அழைத்து விசாரணை செய்ய முடிய வில்லை’’ என குறிப்பிட்டு உள்ளீர்கள்.

ஆனால், இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 165 ஆனது,‘தொடர்புள்ள சங்கதிகளை கண்டு பிடிப்பதற்காக அல்லது அதுபற்றிய முழுமையான நிரூபனத்தை பெறுவதற்காக, தொடர்பு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் கூட எந்த சாட்சியையும், எந்த தரப்பினரையும், எந்த நேரத்திலும், எந்த வடிவத்திலும் தாம் விரும்புகின்ற கேள்வியை கேட்கலாம்’’ என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் உங்களின் மேற்படி தீர்ப்புரை கருத்துக்கு, உண்மையில் உங்களுக்கு இந்த சட்டப்பிரிவு தெரியவில்லை என்றோ அல்லது சகாயத்தை அழைத்து விசாரித்தால், நாங்கள் எப்படி இப்போது கேள்வி கேட்கிறோமோ, இதுபோலவே, அவரும் உங்களை கேள்வி கேட்டு, பின்னி பெடலெடுத்து விடுவார் என்கிற பயம் ஆகியவற்றைத் தவிர, வேறு காரணம் எதுவுமே இருக்க முடியாது.

நீங்கள் இவ்விரண்டில் எது ஒன்றையாவது ஒப்புக் கொள்ளப் போறீங்களா அல்லது இரண்டையுமே ஒப்புக் கொள்ளப் போறீங்களா அல்லது வேறு ஏதாவது புது விளக்கத்தை சொல்லப் போறீங்களா?

8. தீர்ப்புரை பத்தி 18 இல், ‘‘09-02-2012 அன்று மனுதாரரான சமயமுத்து எதிர்மனுதாரர் ஐந்து ஆன காவல் ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டு குற்ற விசாரணை முறை விதிகள் 164 இன் கீழ் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டு உள்ளீர்கள்.

ஆனால், உண்மையில் குற்ற விசாரணை முறை விதிகள் 164 இன் கீழ், வாக்கு மூலம் பதிவு செய்யும் அதிகாரம் நீதித்துறை நடுவருக்கே இருக்கிறது. நீதித்துறை நடுவர் செய்ய வேண்டிய வாக்குமூலத்தை காவல்துறை எப்படி பதிவு செய்ய முடியும்? நீங்கள் எப்படி அதனை ஏற்க முடியும்?

மனுதாரர் புலன் விசாரணை அதிகாரியிடம் கொடுத்த வாக்கு மூலத்தை அவரே மறுக்கிறார் என்பதன் மூலம், நிதிபதியாகிய நீங்கள் 161 என்பதற்கு பதிலாக 164 என முட்டாள்தனமாக சட்ட விதியை மாற்றி எழுதியுள்ளீர்களே, ஏன்?

சட்ட விதி 161 இன் கீழ் காவலர்களால் பதியப்படும் வாக்குமூலம், உண்மையில் காவல் துறையாலேயே கதை, வசனமாக பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணைக் கோப்பில் வைத்துக் கொள்ளப்படும் என்பது கூட தெரியாத அளவிற்கு முட்டாளா நீங்கள்?

9. தீர்ப்புரை பத்தி 18 இல், ‘‘மனுதாரருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும், தனது வழக்குக்கு ஆதாரமாக ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தியை இணைத்துள்ளார் என குறிப்பிட்டு உள்ளீர்கள்’’

உண்மையில் மனுதாரருக்கு தாய்மொழி தமிழ் கூட எழுத படிக்க தெரியாது. பேச மட்டுமே தெரியும் என்பது உங்களுக்கு தெரியாதது. ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் ஆங்கில ஆதாரங்களை வழக்கில் வைக்க வேண்டும் என எதாவது சட்டம் இருக்கிறதா? அச்சட்டத்தைப் படித்த (மேதா, மூதே)வியான நீங்களே சொல்லி, உங்களது கூற்றை வெல்லுங்கள், பார்க்கலாம்!

அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்கிற உங்களது (அ, ஆ)ரிய கண்டுபிடிப்பு, உங்களது தனித்திறமையை உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் எடுத்துக் காட்டுகிறது என்னும் போது, நாம் ஆங்கிலத்தில் எழுதும் தீர்ப்பை அவரால் புரிந்து கொள்ள முடியாதே என்கிற அறிவு மட்டும் உங்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

10. தீர்ப்புரை பத்தி 19 இல், ‘‘மாவட்ட ஆட்சியரின் அறிக்கை வெவ்வேறு தினசரிகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அமைந்துள்ளது’’ என குறை கூறியுள்ள தாங்கள், அம்மாவட்ட ஆட்சியரின் அதே அறிக்கையில், ‘‘இவ்வழக்கு சம்பந்தமாக தான் ஊமச்சிகுளம் காவல் நிலைய ஆய்வாளரை விபரங்கள் கேட்டதாகவும், ஆனால் அவ்விபரங்கள் தனக்கு தரப்பட வில்லை என்றும், குறிப்பிட்டுள்ளதை கண்டு கொள்ளாமல் விட்டதும், அது குறித்து ஆய்வாளரை கேள்வி எதுவும் கேட்காமல் தீர்ப்புரையில் விட்டது ஏன்?’’

இவ்வரிகளை படிக்கும் போது, உங்களின் இரு கண்களும் குருடாகி விட்டதோ!

11. மேலும், அவரது கோரிக்கையான சிபிசிஐடி விசாரணைக்கான அறிக்கையில் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு எதிர்தரப்பினர்கள் எவ்விடத்திலும் மறுப்பு சொல்லி பொய்ப்பிக்காத போது, அவைகளுக் கெல்லாம் தாங்களே ‘‘மாவட்ட ஆட்சியரின் அறிக்கை வெவ்வேறு தினசரிகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அமைந்துள்ளது’’ என்று ஒரே வரியில் வரிந்து கட்டிக் கொண்டு தீர்ப்புரையில் பதில் சொல்ல, நீங்கள் என்ன அரசுத் தரப்பு எதிர்தரப்பினர் ஆறு பேரின் பொய்யரா? அல்லது உஷாராணிக்காக ஆஜரான பொய்யர் நிர்மலா ராணியின் சீனியர் பொய்யரா?

12. உங்களின் ஓய்வை அடுத்து நிதித்துறையில் ஏற்படும் வெற்றிடத்தில், பொய்யர் நிர்மலா ராணியை நிதிபதியாக பரிந்துரை செய்வதற்காகவே தொடர்ந்து அவர் ஆஜராகும் வழக்குகளில் எல்லாம் இப்படி தீர்ப்பு எழுதுவதாக சொல்லும் சக பொய்யர்களின் கூற்று, பொறைமை கொண்ட கூற்றா அல்லது தங்களால் பொய்ப்பிக்க முடியும் கூற்றா?

13. தீர்ப்புரை பத்தி 20 இல், ‘‘கொலை குற்றம் சாற்றப்பட்டுள்ள உஷாராணிக்கு குற்றத்தை ஒப்புக்கொள் என கூற அடிப்படை உரிமை தடை விதிப்பதாகவும், ஆதலால் அவர் குற்ற விசாரணை முறை விதி 100(2) இன்கீழ், தான் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கை குறித்து தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என கூறி உள்ளீர்கள்’’.

ஆனால், உண்மையில் இந்திய அரசமைப்புக் கோட்பாடு 20(3) இல், ‘‘குற்றம் சாற்றப்பட்ட ஒருவரை, அவருக்கு எதிராக அவரையே சாட்சி சொல் என கட்டாயப்படுத்தக் கூடாது’’ என்றுதான் அறிவுறுத்தப் பட்டுள்ளதே ஒழிய, ‘‘அவராகவே முன்வந்து சொல்லும் தகவலையோ அல்லது ஒப்புதலையோ பரிசீலிக்க அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடாது’’ என சொல்லவே இல்லை.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் சொல்லியிருந்தால், இதுவரை இந்தியாவில் எந்த ஒரு எதிரியையும் காவல்துறை விசாரணை செய்திருக்க முடியாது. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்க முடியாது. நீதித்துறை நடுவர் குற்றப்பத்திரிகையை சீர்தூக்கி பார்த்து, இருதரப்பையும் கேள்வி கேட்டு, குற்றச்சாற்றை வனைவதா அல்லது விடுவிப்பதா என்கிற  முடிவுக்கு வர முடியாது.

மேலும், குற்றச்சாற்றை வனைந்து குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என கேள்வி கேட்கவோ, தொடர்ந்து விசாரணை செய்யவோ முடியாது.  இவ்வளவு ஏன், விசாரணைகள், வாதங்கள் அனைத்தும் முடிந்து, நீங்கள் குற்றவாளி என நீதிமன்றம் கருதுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என தண்டனை கொடுப்பதற்கு முன்பாக கேட்கும் இறுதி வாய்ப்பை கூட கேட்க முடியாது.

இப்படி எதையுமே செய்ய முடியாது என்னும் போது, பின் எதற்காக இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், காவல்துறை, நீதித்துறை, அதில் உங்களைப் போன்ற கடைமையாளர் களுக்கு வேலை கொடுத்து, எங்களின் வரிப்பணத்தில் இருந்து கூலி கொடுக்கப்படுகிறது.

இதுவரை வாங்கின கூலிக்கு இப்படி எத்தனையோ குற்ற வழக்குகளை விசாரித்து இருப்பீர்கள், தண்டனை அல்லது விடுதலை கொடுத்திருப்பீர்கள். நீங்கள் விசாரித்த எந்த குற்ற வழக்கிலாவது இதுபோன்றதொரு கருத்தை பதிவு செய்து இருக்கிறீர்களா? பதிவு செய்திருந்தால் அதுபற்றிய விபரங்களை தரவும்.

பதிவு செய்யவில்லை என்றால், தாங்கள் விசாரித்த எந்தவொரு குற்ற வழக்குக்கும் பொருந்தாத மேற்படி கருத்து, உஷாராணிக்கு எதிரான வழக்கில் மட்டும் எப்படி பொருந்தியது என்று விளக்கவும்.

உஷாராணிக்காக பொருந்தியதா அல்லது உஷாராணிக்காக வாதாடிய பொய்யனி நிர்மலா ராணிக்காக பொருந்தியதா அல்லது இவ்விருவருக்கு அல்லது ஒருவருக்கு சட்டத்தை அமல்படுத்திய அரசமைப்பு நிர்ணய சபை சிறப்பான அனுமதி எதையும் வழங்கியிருக்கிறதா?

காவல்துறையால் கைது செய்யப்படாத கொலைகாரி உஷாராணி எந்த துன்புருத்தலும் இல்லாமல், நிர்மலா ராணி என்கிற பொய்யனியின் ஆலோசனையோடு ஆர அமர தாயார் செய்யப்பட்டு, உஷாராணியால் சரிபார்க்கப்பட்டு ஏக மனதோடு உங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண வாக்குமூலத்தை,

‘துன்புருத்தலின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதால் பரிசீலனைக்கு ஏற்கவில்லை என சகாயம் உட்பட, உங்களுக்கு வேண்டாதவர் யார் மீதாவது பழியைப் போட்டிருந்தால் கூட, நீங்கள் கொலைகாரி உஷாராணிக்காக, வக்காலத்து வாங்கி தீர்ப்பு எழுதியது தெள்ளத் தெளிவாக தெரியாமல் போயிருக்கும்’.

எவ்வளவோ உண்மைகளை திரித்தும், திருட்டுதனம் பண்ணியும், தீர்ப்பு எழுதின நீங்க, கடைசியில இதுல மட்டும் கோட்டை விட்டிட்டிங்களே, எப்படி தல?!

உஷாராணி தாக்கல் செய்துள்ள தற்காப்பு பிரமாண பத்திரத்தை பரிசீலனைக்கே ஏற்க வில்லை என தீர்ப்புரையில் வியாக்கியானம் கூறும் நீங்கள், அவ்வியாக்கியானம் உண்மை என்பதை நிரூபிக்க, ‘‘அதனை தாக்கல் செய்த போதே, இதனை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் கொலையாளி உஷாராணிக்கு சட்டப்படி இல்லை என்று, மேற்குறிப்பு எழுதி திருப்பி தந்திருக்கலாமே!’’

அந்த குப்பைய வேற, எதுக்கு வழக்குல கோப்புல தேவையே இல்லாமல் முட்டாள் தனமாக சேர்க்கனும்... தீர்ப்புரையில் வேற ஏன் குறிப்பிடனும்... இப்படிப்பட்ட கேள்விக்கு ஏன் ஆளாகனும்?

14. உஷாராணி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், நீங்கள் தீர்ப்புரை பத்தி 20 இல் கூறியுள்ளது போன்று, ‘‘குற்ற விசாரணை முறை விதி 100(2) இன்கீழ், நான் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கை குறித்தே இப்பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்கிறேன்’’ என எந்த இடத்திலும் சொல்லாத நிலையில், அப்படி சொன்னதாக வியாக்கியானம் கூறி நீங்களே கருத்தில் எடுத்துக் கொண்டதன் ரகசியம் என்ன... மர்மம் என்ன...

உண்மையில், நீங்கள் தீர்ப்புரை பத்தி 20 இல் கூறியுள்ள ‘‘குற்ற விசாரணை முறை விதி 100(2) என்பது, காவலர்கள் ஓரிடத்தை சோதனை செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றியதாகும்’’ என்பதால் இதற்கும் தற்காப்புக்கும் சம்பந்தமே கிடையாது.

எந்த சட்டம், எது எதற்கு வருகிறது என்பதைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத நீங்கள் எல்லாம் நீதிபதியானது, நீதிக்கு ஏற்பட்ட அநீதிதானே? அநீதி இல்லை என்றால் எப்படி என விளக்குங்கள்.

இந்திய தண்டனைச் சட்டம் 100 என்பதற்கு பதில், குற்ற விசாரணை முறை விதி 100 என சட்டத்தின் பெயரை மாற்றியும், 100 இன் உட்பிரிவு 2 எனவும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்றால், தாங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவரே என்றே எண்ணத் தோண்றுகிறது.

இப்படித்தாம், காரைக்கால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒரு ஊழியர் சதா எரிந்து விழுவார். அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்த திரு.மனமோகன் என்கிற நண்பர், ‘‘அவ்வூழியரின் செயல், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது, உண்மையா என்று உயர் ஊழியர்களிடம் கேள்வி எழுப்ப, அவர்கள் விசாரணை செய்த போதுதாம், உண்மையிலேயே அவர் அப்படித்தாம் என தெரிய வந்தது’’.

எனவே, இவ்விசயத்தில் உங்களின் நிலை என்ன என்பது, இக்கேள்விகளுக்கு நீங்கள் தக்க ஆதாரங்களுடன் சொல்லும் பதில்தாம் இருக்கிறது. எதிர்வரும் எட்டாம் தேதியோடு ஓய்வு வேறு பெற்று விடுவதால், உங்களின் உயர் ஊழியர்களிடம் கூட கேட்டு, சோதனை செய்ய சொல்ல இயலாது.

மொத்தத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 100(2) ‘‘ஒருவரின் செயலால், நமக்கு கொடுங்காயம் ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்படும் போது, அவரை தற்காப்புக்காக தாக்குவதில், அந்நபருக்கு மரணம் ஏற்பட்டாலும் குற்றமில்லை என்கிறது’’ என்று சொல்கிறது.

இதனை தாங்கள் விரிவாக சொல்லாமல் சட்டப்பிரிவை குறிப்பிட்டு சொல்வதன் மூலம், ‘‘ஏற்கனவே உஷாராணியால் சொல்லப்பட்ட, தான் பெற்ற மகளையே கற்பழிக்க முயற்சித்ததார். ஆதலால் அடித்துக் கொன்றேன்’’ என்பதற்கு முற்றிலும் மாறாக...

தற்போது, ‘‘அவரது கணவரின் செயலால், அவருக்கு கொடுங்காயம் ஏற்படும் என்கிற அச்ச உணர்வினாலேயே உஷாராணி அடித்து கொலை செய்தார்’’ என ஏற்கனவே நடந்த நாடக சம்பவத்தை, அப்படியே முழுமையாக மற்றொரு நாடகமாக மாற்றியுள்ள உங்களின் கபட நாடகத்திறமை எங்களை மட்டுமல்ல, இதனை படிக்கும் ஒவ்வொருவரையும் நிச்சயம் மெய் சிலிர்க்க வைக்கும்.

இக்கபட நாடகத்திற்காகவே உங்களுக்கு ஆஸ்கர் அவார்டும், நாடகத்திற்கு ஏற்றவாறு தீர்ப்பெழுதும் திறமைக்கு நோபல் பரிசும் ஒருசேர கொடுத்து உலக சாதனையாளராக அறிவிக்கலாம். ஆனால், உங்களின் துரதிருஷ்டம், இவ்விரண்டு பரிசுகளையும் கொடுக்கும் உரிமை எங்களிடம் இல்லாமல் போய் விட்டது.

ஆதலால்தாம், ஏதோ எங்களால் முடிந்த, உங்களின் செயல் விளக்க கடிதத்தையே உங்களுக்கு கொடுத்து கௌரவிக்கிறோம். மறுக்காமல் ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை என்றும் நம்புகிறோம். நீங்க, என்ன சொல்றீங்க தல!?

எங்கே திருட்டுத் திறமை எல்லாவற்றையும் பயன்படுத்தி இவை எல்லாத்துக்கும் பொருத்தமாக பதில் சொல்லுங்கள் பார்ப்போம். (எ, ஏ)துவாக இருந்தாலும் சொல்லுங்கள், பரவாயில்லை. ஒன்றும் வருத்தப் படவே மாட்டோம்!

மாறாக, நீதிபதிகளைப் பற்றிய எங்களின் சட்ட ஆராய்ச்சிக்கு பேருதவியாகவே எடுத்துக் கொ(ள், ல்)வோம்.

15. இந்திய அரசமைப்பு கோட்பாடு 21 இன்படி, ‘‘சட்டப்படியான விசாரணை முறையில்லாமல், எந்த ஒரு குடிமகனின் உயிரையும், உரிமையையும் பறிக்க கூடாது’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தாம், நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உரிமைகளும், குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனைகளும் தக்க நிவாரணங்களாக  வழங்கப்படுகின்றன.

இதனை மட்டும் மேலோட்டமாக பார்க்காமல் உள்ளார்ந்து சிந்தித்தால், ‘சட்ட முறையான விசாரணை முறையில்லாமல், குற்றம் புரிந்தவர்கள் எவரும் விடுவிக்கப்பட கூடாது’’ என்று சொல்லப்படாத இன்னொரு விசயமும் புலப்படும். அப்படி புலப்பட்டு, பல்வேறு குற்ற வழக்குகளை நடத்தியுள்ள தங்களுக்கு, உஷாராணி வழக்கில் மட்டும் புலப்படாமல் போனது என்ன மாயமோ அல்லது (ம, த)ந்திரமோ அல்லது மறதி நோயோ அல்லது மனநிலை சரியில்லாத நோயோ?

ஏதாவது ஒரு திருட்டுதனத்தை செய்தால், இதுதான் காரணம் என்று சொல்லி விடலாம். எல்லா திருட்டு தனத்தையும் ஒருங்கே செய்யும் போது, எது காரணமென்று யாரால் சொல்ல முடியும்? பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல, உங்களாலேயே சொல்ல முடியுமா என்று பாருங்கள். உங்களால் முடியாது என்றே நாங்கள் (உ, இ)றுதியாக நம்புகிறோம்.

16. உங்களுக்கு வழக்கு விசாரணைக்கு தேவையான உ(ய)ரிய எல்லா ஆவணங்களும், கொடுக்கப்பட்டே, ஒரு நீதிபேராணை வழக்கில், நிதியரசர் ஆகிய நீங்களே இப்படி தப்பும், தவறாகவும், தறுதலைதனமாகவும், பைத்தியக்காரதனமாகவும், திருட்டுத்தனமாகவும், கடைமையாகவும் உண்மைகளை மறைத்தும், திரித்தும் தீர்ப்பு எழுதியிருக்கும் போது,

‘‘காவல்துறையின் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாமலேயே மிகுந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உணர்வோடு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டத்துக்கு கட்டுப்பட்டு, பலரையும் கேட்டறிந்து, ஆதாரங்களை தனக்கே உரித்தான தனிப்பட்ட திறனால், ஆராய்ந்தறிந்து மாவட்ட ஆட்சியர் சகாயம் மிகவும் தெளிவாக எழுதி தமிழக உள்துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கை வெள்ளை அறிக்கையாகவே எங்களது புலன் ஆய்வில் புலப்படுகிறது’’.

17. தங்களின் செயல்கள், வக்கீல் தொழிலும், நீதிபதி தொழிலும் விபச்சாரம் என்று மகாத்மா காந்தி எழுதியுள்ளதும், இத்தொழிலை செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்று தந்தைப் பெரியார் எழுதியுள்ளதும், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தெரிந்தால், கழுதை கூட அந்த காகிதத்தை தின்னாது என்று சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா எழுதியுள்ளதும் அப்பழுக்கற்ற உண்மையே என்கிற கருத்து எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் மேன்மேலும் வலுப்படுத்துகின்றன.

மேலும்,
கேட்காமல் கொடுப்பது, நீதி!

கேட்டப்பின் கொடுப்பது, அநீதி?

கேட்டப்பின்னும் கொடுக்க மறுப்பது, நீதிக்குச் சமாதி...

என்பது சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள் நீதிக்கு வகுத்துள்ள இலக்கண தத்துவம் ஆகும். இதை விட எளிமையானதொரு தத்தவம் வேறு யாராலும் சொல்லப்படவில்லை. இனியும் சொல்ல முடியாது என்றே நம்புகிறோம்.

இதனால், ‘‘கொலைகாரி உஷாராணியை தற்காப்பு கொலை என காரணம் கூறி, விடுவிக்கும் அதிகாரம் இல்லாத காவல்துறை விடுவித்த போதே, சுய விருப்ப வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதி வழங்கியிருக்க வேண்டும்’’.

ஆனால், அப்படி செய்யாததோடு, அறவே எழுதப் படிக்க தெரியாத சுமார் எழுபது வயது முதியவர், அவரது மகனின் திட்டமிட்ட படுகொலைக்கு (திட்டமிட்ட படுகொலை என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்களும், அதற்கேற்ற சட்ட அறிவும் எங்கள் வசம் உள்ளன) நியாயம் கேட்டு வழக்கு தொடுத்த பின்னரும் கூட,

‘‘நீங்கள் என்னமோ ஆங்கிலேயனுக்குப் பிறந்து, ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர் போலவும், அம்முதியவரை ஆங்கிலம் அறியாதவர் என அவமானப்படுத்தி, அதில் உங்களின் அற்பத்தனமான ஆங்கில கயவாளிதனத்தை எல்லாம் தீர்ப்புரையாக எழுதி வழக்கை தள்ளுபடி செய்திருப்பதன் மூலம்’’

கேட்காமல் கொடுக்க வேண்டிய நீதியை, கேட்டப்பின் கொடுப்பது அநீதி என்பதையும் தாண்டி, கேட்ட பின்னும் கொடுக்காமல், ‘‘கண்ணிருந்தும் குருடராய்... காதிருந்தும் செவிடராய்... வாயிருந்தும் ஊமையாய்... மெத்தப்படித்திருந்தும் மூதேவியாய்... மொத்தத்தில் உயிருள்ள ஒரு பிணமாய்... நீதிக்கே சமாதி கட்ட முட்டாள் தனமாய் முயற்சித்து உள்ளீர்கள்’’.

18. எங்களது இக்கூற்றைப் பொய்ப்பிக்க முடியும் என்று நீங்கள் கருதினால், அதுபற்றி மேற்குறிப்பு ஆதார ஆவணங்களின் அடிப்படையில் விளக்கவும். இல்லையில்லை, நான் நீதிக்கே அரசர் என்பதால் நீதியரசர்! என்னையே எதிர்த்து கேள்விகள் கேட்டு அவமதித்து கடிதம் எழுதுகிறீர்களா? அதற்கு நான் எதற்கு விளக்கமளிக்க வேண்டும்!

அதற்காகதானே வைத்து உள்ளோம், நீதிமன்ற அவமதிப்பு என்கிற அற்பச் சட்ட ஆயுதத்தை...

அதைக் கொண்டு உங்களை என்ன செய்கிறேன் பார் என்று கர்ஜிக்க நினைத்தால், அப்படி செய்யுங்கள் என்றும், கூடவே அவதூறு அடிப்படையில் கூட நடவடிக்கை எடுக்கவும், அதில் தாங்களே வெற்றி பெறவும் மனதார வாழ்த்துகிறோம்.

இப்படி செய்யாமல், என்னால் முடிந்த அளவிற்கு ‘கடைமை’யைச் செய்து விட்டு, இக்‘கடைமை’யில் இருந்து ஓய்வு பெற்று, எனக்கு தெரிந்த இந்த சட்ட விழிப்புணர்வு ‘கடைமை’களை மாக்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்க எண்ணியுள்ளேனே!

இந்த நேரத்தில் வலிய வந்து சட்டப்படி விளக்கம் கொடுங்கள் அல்லது சட்டப்படி வழக்கு போடுங்கள் என ‘கடமை’யைச் செய்ய சொல்லி வம்புக்கு இழுக்கிறீர்களே...

எனது திருட்டுத்தனங்களை இவ்வளவு விரிவாக தெரிந்து வைத்திருக்கும் உங்கள் மீது நான் வழக்கு போட முடியுமா... தெரிந்திருந்தும் வழக்கு போடுங்கள், வெற்றி பெறுங்கள் என வாழ்த்துவதெல்லாம் உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா...

மகாத்மா காந்தி மற்றும் தந்தைப் பெரியாரை விட, நான் என்ன அறிவாளியா...

அம்மகான்கள் சொன்ன, "நீதிபதிகள் விபச்சாரிகள் மற்றும் ஈனப்பிறவிகள் உண்மையில்லை என்று மறுப்பதற்கு" என்று நினைத்தால்...

‘‘கடமையைத்தான் செய்தேன்; ஆதனால் பணியை முடித்து வழக்கம் போல் வீட்டிற்கு செல்லவே விரும்புகிறேன்; பாராட்டு விழாவெல்லாம் எனக்கு வேண்டாம்’’ என்று உண்மையை ஊடகங்களுக்கு திரித்து சொல்லி, தங்களுக்கு தாங்களே தேடிக் கொண்ட சுய விளம்பரத்தை...

தற்போதாவது நாங்கள் சொல்வதுபடி, ‘நாம் கடைமையைதானே செய்திருக்கிறோம்; இதற்காகவே பாரம்பரியமாகவும், பிரத்தியோகமாகவும், சக கடைமையாளர்களால் நடத்தப்படும் பாராட்டு விழாவை வேண்டாம் என்றது, வஞ்சிப் புகழ்ச்சி அணிக்கே ஏற்படுத்தி விட்ட இழுக்கல்லவா...

இனி நான் ஏன் பணி முடித்து வீட்டிற்கு செல்ல வேண்டும்...

நாம் நீதிக்கு செய்த துரோகத்திற்கு, உண்மையில் செல்ல வேண்டிய இடம் (சுடு, இடு)காடு அல்லவா என்பதை உணர்ந்து, அவ்வாறே சென்று விடுங்கள்’.

இதுவே நீதிக்கு நீங்கள் செலுத்தும் உண்மையான இறுதி மரியாதையாக இருக்கும்! இருக்கட்டும்!! மோட்சம் கிடைக்கட்டும்!!! என்று மனதார வாழ்த்தி உங்களுக்கு பிரியா விடை கொடுக்கிறோம்.    

ஒப்பம்
கேர் சொசைட்டிக்காக
அதன் நிர்வாக, செயற்குழு, உறுப்பினர்கள் மற்றும் குடிமக்கள் என மொத்தம் 138 கடமையாளர்களால் கையொப்பமிட்டு இன்று 04-03-2013 அன்று விரைவு அஞ்சல் எண்  ET 673636324 IN மூலம் அனுப்பப் பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)