No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, February 13, 2013

நான் சொன்னால், சொன்னதுதான்!2 ஜி வழக்கில் சி.பி.ஐ சார்பாக வாதாடி வரும் அரசு வக்கீல் ஏ.கே.சிங், யுனிடெக் நிறுவனத்¬தின் நிர்வாக இயக்குநருடன் அவர் மீதான வழக்கை எதிர் கொள்வது எப்படி என்று ஆலோசனை வழங்கியதான டேப் விவகாரம் வெளியானதை அடுத்து, அரசு வக்கீல் பதிவியில் இருந்து, ஏ.கே.சிங் நீக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

டேப்பில் பதிவு செய்து சி.பி.ஐக்கு யார் என்பது தெரியவில்லை என்று கூறப்பட்டாலும், தெளிவாக நாம் பரிந்து கொள் வேண்டிய ஒரே விடயம், 2ஜி வழக்கின் மீது அக்கறை கொண்ட ஒரு நபரே இந்த நல்ல வேலையைச் செய்திருக்க வேண்டும்.

இந்தியா மட்டுமல்லாது, உலகையே உலுக்கி ஊழல் என்று சொல்லப்படும் 2ஜி வழக்கிலேயே சி.பி.ஐ வக்கீலின் யோக்கியதை என்ன டேப் செய்து வெளி உலகிற்கு வெளியிட்ட முகம் தெரியாத அவருக்கு புண்ணியமாய் போகட்டும்!

பொய்யர்(வக்கீல்)களின் ஒழுங்கீனங்கள், ரவுடிதனங்கள், திருட்டுத்தனங்கள் என இது போன்ற எத்தனை செய்திகள் வெளி வந்தாலும் நமது மாக்கள் வேலைக்கார வக்கீலை வைத்து வழக்கை நடத்தி, அவ்வேலைக் காரர்களிடம் கை கட்டி வாய் பொத்தி நிற்காமல், நம் வழக்கை நாமே வாதாடலாம், நமக்கான நியாயத்தை எளிதாகப் பெறலாம் என எல்லோரும் முன்வரப் போவதில்லை.

வக்கீல் என்கிற ஒரு தொழிலை ஒழித்து விட்டால், நாட்டில் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பதோடு, புதுப்புது பிரச்சினைகள் உருவாவதும் தடுக்கப்படும். வக்கீலுக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுத்தால் எப்படியும் காப்பாற்றுவான் என்ற தைரியத்தில்தான், மாக்கள் துணிந்து குற்றம் செய்கிறார்கள். முன்பாகவே வக்கீலிடம் ஆலோசனை கேட்டு செய்பவர்களும் இருக்கிறார்கள்.   

பதினான்கு  வருட சட்ட ஆராய்ச்சியில் ஆறு தத்துவங்களை முன்மொழிந்துள்ளேன். இதில் ஒன்று மட்டும் ஆங்கிலம். மற்ற ஐந்தும் தமிழ். இவைகள் ஐந்தும், நான் எழுதியுள்ள ஐந்து நூல்களின் முகப்பு அட்டையிலேயே அச்சிடப்பட்டிருக்கும் என்பதோடு, அந்நூல்களின் கருத்துக்களும் அதற்கு ஏற்றவாறே ஆதாரப்பூர்வமாக சொல்லப்பட்டிருக்கும்.
 1. No law, no life. Know law, know life!

 2. நீதிமன்றத்தில் வாதாடுவது, அப்பா அம்மாவிடம் பேசுவது போல்தான்.

 3. நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்!

 4. கடமையைச் செய்! பலன் கிடைக்கும்.

 5. நியாயம்தான் சட்டம்! அதற்கு தேவை(யே)யில்லை வக்கீல் பட்டம்.

 6. வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

நீதியைத்தேடி... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற ஐந்தாவது நூலில் இடம் பெற்றுள்ளதே, வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்கிற தத்துவம்.

அரசு வக்கீல்களுக்கு, நீதிபதிகளின் (மா)மாக்கள் மற்றும் நீதிபதிகள் கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகள் என்கிற கூடுதல் சிறப்பு பெயர்களையும் தக்க விளக்கத்துடன் தலைப்புகளாகவே நூலில் பதிவு செய்துள்ளேன்.

2010 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இவ்வைந்தாவது நூல் வெளியீட்டு விழாவிற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், மூத்த வக்கீல் காந்தி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் வழக்கறிஞர் அவை (பார் கவுண்சில்) தலைவர் சந்திரமோகன் உள்பட பல வக்கீல்களும், காவல்துறை ஊழியர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். ஏனெனில், அவர்களின் அவலங்களைப் பற்றியதுதானே, அந்நூல்!?

அவர்களைப் பற்றி அவர்களே நன்றாக அறிந்திருந்தாலும் கூட, நமது சூழ்ச்சிகள், விபச்சார யுக்திகள் மக்களுக்கு தெரியாது என்றல்லவா, வக்கீல் மற்றும் நீதிபதி மாக்கள் நினைக்கிறார்கள். மக்களுக்கும் தெரியும். தெரியாத மக்களுக்கு, தெரிந்த மக்கள்  நூல்கள் வாயிலாக எடுத்துச் சொல்லி விதமாக பதிவு செய்து வருகிறார்கள்.

இப்பதிவுகள் நாளை நம்மைப் பற்றிய வரலாறாக மாறும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா... அதற்காகவே அழைக்கப்பட்டனர்.


காந்தியவாதியாக கதராடையில் வெள்ளையும் சள்ளையுமாக, வந்திருந்த மூத்த வக்கீல் காந்தி, நூலின் அட்டையில் தத்துவமாக அச்சிடப்பட்டிருந்த, "வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்கிற தத்துவத்தை பார்த்ததும், கோபம் பொங்கி எழவே, விழாவில் இருந்து வெளியேறி விட்டார்".

காந்தியவாதி என்று சொல்லிக் கொண்டு கதராடையை உடுத்திக் கொள்வதாலோ அல்லது காந்தி என்று பெயரை வைத்துக் கொள்வதாலோ மட்டுமே காந்தியவாதியாகி விட முடியாது. மாறாக, அவரின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத மூத்த வக்கீல் காந்தியின் அறியாமையை என்னவென்று சொல்வது?

அப்பட்டமான உண்மைச் சொன்னதற்காக, உணர்ச்சி வசப்பட்டு விழாவில் இருந்து வெளியேறிய அவர், வக்கீல் தொழில் விபச்சார தொழில் என மகாத்மா காந்தியின் உண்மையை ஏற்று, வக்கீல் தொழிலில் இருந்து வெளியேறவில்லை.

நீதிபதி வள்ளிநாயகம் உண்மையைச் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் ஓரிரு நிமிடங்களிலேயே உரையை முடித்துக் கொண்டார்.

ஆனால், தமிழ்நாடு வழக்கறிஞர் அவையின் தலைவர் சந்திரமோகனோ, உண்மை வலியது என்பதை உணர மறுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள எழுபதாயிரம் வக்கீல்களுக்கு தலைவராக இருக்கும் நான், "வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்கிற வாரண்ட் பாலாவின் கூற்றை மறுக்கிறேன்" என்று, அத்தனை பொய்யர்களுக்கு தலைவராக இருக்க எவ்வளவு திறமையாக பொய்யைப் பேச வேண்டுமோ அப்படியே அப்பட்டமாக பேசினார். ஆனால், உண்மை சும்மா விடுமா?

அப்படி பேசிச் சென்ற சரியாக ஐம்பத்தி இரண்டாவது நாள், மத்திய 2ஜி ஊழல் அமைச்சர் ராஜாவின் குடும்ப நண்பர்களுக்கு பிணை (ஜாமீன்) வழங்க வேண்டும் என நீதிபதி ரகுபதியிடம் இடைத்தரகு செய்த குற்றச்சாற்றின் பேரில், "தமிழ்நாடு வழக்கறிஞர் அவையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது அவர் வக்கீலே கிடையாது".


இதையே சாதாரண மக்கள் செய்திருந்தால், நீதிமன்ற அவமதிப்பு என மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அபச்சாரமாக சிறையில் அடைத்திருப்பார்கள், நீதியை விபச்சாரம் செய்யும் நீதிபதிகள். இது நீதிபதிகளின் சுத்த கூட்டுக் களவானித் தனம்தானே! ஆதலால்தாம், வக்கீல்களைப் பற்றி நான் குறிப்பிடுவன யாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்றார், மகாத்மா காந்தி.

மகாத்மா காந்தியின் நூல் என்றாலே அனைவருக்கும் தெரிவது, அவரின் சுய சரிதையான சத்திய சோதனை மட்டுமே! எப்படி இருக்க வேண்டிய இந்தியா, ஏன் இப்படி கேவலமாக அடிமைப்பட்டு கிடக்கிறது என்பதை விவரிக்கும் காந்தியின் முதல் நூலே, ‘‘இந்திய சுயராஜ்யம்’’. இதுவே, நாட்டைப் பற்றி மகாத்மா கண்ட கனவும் என்பதால், இதனை காந்தி இந்திய குடிமக்களுக்கு தந்த அரசமைப்பு என்று கூட சொல்லலாம்.

இந்நூலை 1909 ஆம் ஆண்டு தனது நாற்பதாவது வயதில் எழுதியுள்ளார். இது ஒரு தத்துவ நூல். தத்துவம் என்றால், அது எல்லோருக்கும் சாலப் பொருந்தும். அதில் இருந்து யாரும் தப்பவே முடியாது. இது தத்துவத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. நூற்றாண்டுகளை கடந்து விட்ட இந்நூலை, நூற்று இருபது கோடியை தாண்டி விட்ட இந்தியர்களில் ஒருகோடி பேராவது படித்திருப்பார்களா என்பதும் சந்தேகமே!

இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது காந்தி உயிரோடு இருந்திருந்தால், இந்திய சுயராஜ்யம் நூலில் சொல்லப்பட்டுள்ள குற்றம், குறைகள் எல்லாம் களையப்பட்டிருக்கும். மக்களை வெகுவாக கவர்ந்திழுத்து, உயிர் மற்றும் உரிமை என்னும் மாய வலையில் சிக்க வைக்கும் ஆங்கில மருத்துவமும், வக்கீல் தொழிலும் நிச்சயமாக ஒழிக்கப்பட்டு, மக்கள் நிம்மதியாக வாழ்ந்திருப்பர்.

வெள்ளைக்காரனே வெட்கி தலை குனிந்து, இனி அவரை ஒன்றும் செய்ய முடியாது என்று, நம்மிடமே பத்திரமாக ஒப்படைத்துச் சென்ற மகாத்மாவை நாமல்லவா கொன்றோம்! இக்கொடுஞ் செயல்களுக்காக மகாத்மாவே சபிக்கவில்லை என்றாலும் கூட, அம்மகா பாவமே நம்மை, சபிக்காமல் சும்மா விடுமா என்ன?

வக்கீல்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் இப்படியெல்லாம் எழுதுறீங்களே... இதனால், உங்களுக்கு பிரச்சினையே வரவில்லையா என என்னை தவறாது, தவறாக கேட்பவர்கள் தாம் மிகமிக அதிகம். நான் என்ன இல்லாததையா சொல்லுறேன். உண்மையத்தானே சொல்லுறேன்.

பொய் சொன்னாதானே பிரச்சனை வரும். உண்மைக்கு ஒருபோதும் பிரச்சினை வராதே... அப்படியே வந்தாலும் அது, பிரச்சினைக்கே பிரச்சனையாக அல்லவா மாறும். உண்மையை சந்திக்க பொய்யர்களுக்கு தைரியம் இருக்கிறதா என்ன?

ஆதலால்தான், அவர்கள் வாழ்க்கை முழுவதும், வழக்கு முழுவதிலும் பொய்யையே பேசுகின்றனர். பொய்யையே சந்திக்கின்றனர். பொய்யர்களாகவே வாழ்ந்து மடிகின்றனர். வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளில் ஒருவரிடமாவது உண்மை இருந்து, இனியும் யாருக்காவது இருந்தால், என்மீது வழக்கு போடட்டும், நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம். அப்பொய்யர்களின் (ச, க)தி சந்தி சிரித்து விடும்.   

அகப்பட்ட 2 ஜி வக்கீல் மட்டுமல்ல. எல்லா வக்கீல்களும், நீதிபதிகளும் இதைத்தான் செய்கின்றனர் என்பது எனது தீர்க்கமான ஆய்வு. தீர்க்கமான ஆய்வு முடிவுகளுக்கு ஆயுள் நிர்ணயமே கிடையாது. வேண்டுமானால், ஒட்டுக் கேட்டு பாருங்கள். உண்மை புரியும்.

அரசு எப்படி அதிகாரத்தை பயன்படுத்தி ஏ.கே.சிங்கை வழக்கில் இருந்து நீக்கி விட்டு, வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறதோ, அப்படித்தானே அனைத்து வக்கீல்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். அப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால், இந்நேரம் எல்லா வக்கீல்களும், நீதிபதிகளும் சிறையில்தானே இருந்திருப்பார்கள்.

அரசுக்கு ஒரு நீதி! அரசை உருவாக்கும் குடிமக்களுக்கு ஒரு நீதியா? இதையெல்லாம் தட்டிக் கேட்ட வேறு நாதிகளே இல்லையா!? இருக்கிறார்கள்! யார் அது என கேட்காதீர்கள். அது நீங்களே!!

ஆம், இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபுகள் 126 முதல் 129 வரை சொல்லப்பட்டுள்ள சட்ட அறிவுறுத்தல்களை வக்கீல்களுக்கு எதிராக கையிலெடுத்தால், உங்களது நியாயத்திற்கு என்றுமே சாவில்லை.

வக்கீல் தொழிலை விபச்சாரம் என்றும், அத்தொழில் செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்றும் கூறிய மகாத்மா காந்தி மற்றும் பெரியாரை விட, பொய்யர்களான வக்கீல்கள் அதிபுத்திசாலிகள் என்று எண்ணி, அவர்களிடம் தங்களையே அடிமையாக ஒப்படைக்கிற மாக்கள் இருக்கும் வரை, பொய்யர்கள் மற்றும் கொள்ளையர்களின் வாழ்வில் ஒரு குறையும் இருக்காது. ஒட்டுமொத்த குறையும் சமூகத்திற்குதாம்!

ஆமாம், நான் சொன்னால், சொன்னதுதான்!

இது இறுமாப்பு அல்ல; சமூக நீதியின் மீது அக்கறை கொண்ட ஈர்ப்பும், எதிர்பார்ப்புமே!!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

1 comment:

 1. how to get these books? kindly advise. thank.

  ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)