No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, February 7, 2013

சட்டவியல்


சட்டத்தின் சாம்ராஜியம்!

நாட்டில் நடக்கும் அத்துனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட வரையறையே சட்டமாகும். உலகலாவிய அளவில்  ஒவ்வொரு நாடும் இச்சட்ட வரையறைகளை தங்களின் தனித்தன்மைக்கு ஏற்ப பெரும்பாலும் எழுத்தாலும், மற்றபடி கருத்துருவாலும் வரையறுத்துக் கொள்கின்றன.

ஆனாலும், சட்டம் குறித்த கல்வியானது பல்வேறு நாடுகளில் அடிப்படைக் கல்வியில் இல்லாமல் போனதால் ஏற்பட்ட வெற்றிட அறியாமையால் சட்டமானது சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு சங்கதியாகவே அனைவருக்கும் புலப்படுகிறது. ‘‘சட்டம் தங்களை தண்டிப்பதற்கே என்ற அதிருப்தி உலகமெங்கும் பரவலாக நிலவுகிறது’’.

சட்டத்தின் உன்னத நோக்கம்:

உண்மையில் விதிவிலக்கான ஒருசில சமயங்கள் தவிர, மற்றபடி முழுவதும் சட்டத்திலிருந்து விதிவிலக்கானவர்கள் என ஒவ்வொரு நாட்டில் மட்டுமல்ல உலகில் கூட எவருமே இருக்க முடியாது. இதிலும், விதி விலக்கென்பது விளக்காக பிரகாசிக்கத்தான் இருக்குமே தவிர, ‘‘ஒருவர் தான் விரும்பியபடியெல்லாம் வாழ்ந்திட இடங்கொடுக்காது’’.

சட்டத்தின் இந்த உன்னதமான நோக்கத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான், ‘‘ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டிலேயே உயர்பதவி வகிப்பவரால் கையொப்பமிடப்பட்டு சட்டவிதிகள் அமல்படுத்தப் படுகிறன’’.

சட்ட விதிகளின் தேவைதான் என்ன?

இயற்கையோடு ஒத்து வாழும் போது மனிதனுக்கு மட்டுமல்ல; உலகில் உள்ள எந்த உயிரினங்களுக்குமே துன்பம் கிடையாது. இதனை பகுத்துணர்ந்து வாழ வேண்டிய மனிதகுலம் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன. இயற்கை தனக்கென விதித்த உணவுப் பொருட்களை உண்டு நோய்வாய்ப்படாமல் மிகவும் ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்து மடிகின்றன.

ஆனால், மனித குலமோ, தனது பகுத்தறியும் தன்மையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல், இயற்கையை மிஞ்சி மனம் போன போக்கில் வசதியாக வாழ எண்ணித்து கண்டுபிடித்த, உணவு வகைகள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் உலகை அழிவுப் பாதைக்கே இன்று வரை கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

இயற்கையின் இருமுகங்கள்!

‘‘தன்னைப் படைத்த இயற்கை தன்னை விட வலியது; தேவை ஏற்பட்டால் தனது கோர முகத்தையும் கூட காட்டி தண்டிக்கும் தன்மையுடையது’’ என்பதை மனித குலம் பலமுறை உணர்ந்திருந்தும், அனுபவத்திருந்தும் கூட இவைகளை உணர்வுபூர்வமாக ஏற்க மறந்து விட்ட காரணத்தால்தான் அவ்வப்போது மனிதகுலம் இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகி பல லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான உயிர்களை இழந்து கொண்டு இருக்கிறது.

இவ்விழப்பை மனிதகுலம் தற்போது ஒட்டுமொத்த உலக இழப்பாகவே எதிர்நோக்கி உள்ளது.

ஆம்! அறிவியல் வளர வளர உலகம் அனைத்து விதத்திலும் அழிவைநோக்கி அதிவிரைவாக சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு நல்லதொரு உண்மையே ‘‘புவி வெப்பமடைதல் நிகழ்வு’’.

தஞ்சம் தந்த பஞ்ச பூதங்களுக்கே பஞ்சமா?!

மனித குலம் மட்டுமல்லாது, மற்ற உயிரினங்களும் உயிர் வாழ அவசிய, அல்ல அல்ல அத்தியாவசிய அடிப்படை தேவையான நீர், நிலம் நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியே வெப்பத்தால் வேதனைப்படும் சூழல் உருவானால் அதனால், பூமியில் ஓர் அங்கமாய் இருந்தாலும் ஒய்யாரமாய் உயிர் வாழும் உயிரினங்களுக்குத் தானே பஞ்சமும் பாதிப்பும்?!

மனித குலம் தனது பகுத்தறியும் தன்மையால் தனக்குத் தேவையானவற்றை எப்படியும் உற்பத்தி செய்து விட முடியும் என்ற இமாலய இருமாப்பில் இருந்து கொண்டிருக்கிறது. பஞ்ச பூதங்களுக்கு பஞ்சம் வந்தால் பகுத்தறிவு பயன்படாது என்பதை எப்போது மனித குலம் உணர ஆரம்பிக்கிறதோ, அப்போதே ஒட்டுமொத்த உலகிற்கே விடிவு. எப்படி உணர்த்துவது?

இருவகை சட்டங்கள்

‘‘இயற்கைச் சட்டம், இயற்றப்பட்ட சட்டம்’’ என சட்டத்தில் இருவகையே உண்டு.

இயற்கையானது தனக்கெனவொரு தனிச் சட்டத்தை வரையறுத்துக் கொண்டு, தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட வரையறையின் கீழ் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறது. ஆனால், மனிதகுலமோ இயற்கை நீதி கோட்பாடுகளை துட்சமென கருதி செயல்படுவதால்தான் துன்பத்தில் சிக்குண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இயற்கை நீதிக்கோட்பாட்டை மதிக்காத மனிதகுலம், இயற்கை தனக்கு வழங்கியுள்ள உரிமைகளை வாழ்நாள் முழுவதும் நிலைநாட்டிக் கொள்ளவும், இயற்கையின் கட்டமைப்பை கடைசி வரை காக்க தனக்கான கட்டுப்பாட்டு சட்டத்தை இயற்றிக் கொள்கிறது.  

ஆனால், மிகவும் துரதிருஷ்டவசமாக இயற்கை நீதிக்கோட்பாடு போலவே இதிலும் எந்த நோக்கத்திற்காக, யார் யாருக்காக யார் சட்டத்தை இயற்றுகிறார்களோ அவர்கள் அனைவருமே சட்டத்தை கடைப்பிடிக்காமல் மற்றவர்களுக்காகத்தான் சட்டமேயொழிய, தங்களுக்காக அல்ல என்று எண்ணுகின்றனர்.

இவ்வெண்ணம் உலகளவில் ஒட்டுமொத்தமாகவே இருக்கிறது என்பதால்தான்,  உலகளாவிய அளவில் உள்ள வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி அடையா நாடுகள் என ஒவ்வொரு நாடும் ஒருவருக்கொருவர் குற்றம் குறை கூறிக் கொள்கின்றன என்பது மட்டும் புவி வெப்பமடைதல் விசயத்தில் வெட்ட வெளிச்சம். உலக அளவில் ஒருங்கிணைந்த சட்டம் தேவை:

இப்படி ஒருவருக்கொருவர் புறம் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் புவி வெப்பமடைதல் நிகழ்விற்கு புவியில் சிறு சிறு அங்கமாக உள்ள ஏதோவொரு நாடுதான் காரணம் என்று கூற முடியாது.

புவியில் உள்ள ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு தனி நபருமே முழுப்பொறுப்பு என்பதால், புவி வெப்பமடைதலுக்கு மட்டுமல்ல; இயற்கையை காக்க இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் கூட உலகலாவிய அளவில் ஒருங்கிணைந்து இயற்றப்படுதலும், ஏற்கப்படுதலும் ஒவ்வொரு நபராலும் வரவேற்கப்பட்டு, கடமையுணர்வோடு நடைமுறைப்படுத்தப்பட்டு காக்கப்படுதல் வேண்டும்.

கடமையின் உள்ளடக்கமே உரிமை!

உண்மையில், ‘‘கடமையில் இருந்துதான் உரிமைகள் பிறக்கின்றன’’.

கடமை என்பது சமைப்பது. உரிமை என்பது சாப்பிடுவது. சமைக்காமல் சாப்பாடு கிடைக்குமா? கிடைக்காது தானே? ஆனாலும், கடமையாற்றாமல் உரிமை கிடைக்கும் என கண்மூடித்தனமாக நம்புவதால் தான் உரிமைக்காக போராடும் மனிதகுலம், கடமையை கடனாக, கனவிலும் கூட நினைத்து பார்ப்பதில்லை.

நமது இந்தியாவை பொருத்தமட்டில், இயற்கை வளங்களான நிலம், நீர், காடு போன்ற பல இயற்கை வளங்களை காப்பது ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை கடமை என்பது இந்திய சாசன கோட்பாடு 51அ-இன் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே கடமை ஒவ்வொரு நாட்டின் சாசனத்திலும் விதிக்கப் பட்டிருக்கும் என உறுதியாக நம்பலாம்.

கடமையைக் கடனாக நினைக்காமல், அதிகாரமாக நினைத்தால், அதன் மீதான பொறுப்பு அதிகரித்து உயிர்வாழத் தேவையான உரிமைகளுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்விடும்.  

உயிர்கள் இயற்கையின் கையில்:

இயற்கை மட்டுமே அனைத்து உயிர்களுக்கும் இன்பத்தைத் தரும் வல்லமை பொருந்தியது. மனித குலத்தின் இயற்கைக்கு எதிரான செயல்களால், மனிதகுலம் உள்ளிட்ட தாவரங்கள் விலங்குகள் போன்ற அனைத்து உயிர்களும், இயற்கைச் சீற்றம், பருவநிலை மாற்றம் மற்றும் புதுப்புது நோயில் சிக்குண்டு (இரு) (இற)க்கின்றன.

மற்ற உயிரினங்களின் உரிமைகளைப் பற்றி அக்கரை கொள்ளாத மனிதகுலம், தனது உரிமையை மட்டும் நிரந்தரமாக நிலை நிறுத்திக் கொள்ளும் முன் முயற்சியாக உலகலாவிய மனித உரிமைப் பிரகடணத்தைச் சட்டமாகவே இயற்றி, கேள்விக்குறியாக விட்ட வாழ்க்கையில், வசதியாக வாழ்வது எப்படி? என்பதற்கான திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறது.

உயிர் இல்லாத அல்லது இனம் காண இயலாத நோய்வாய்ப்பட்ட உடலுக்கு உரிமை இருந்து என்ன பயன் என்பதை, மானிடம் மறந்தது ஏனோ?

உயிரை உருவாக்கும் ஆற்றல் படைத்த ஒரே சக்தியான இயற்கையின் நலனை கருத்தில் கொள்ளாமல் போனது விந்தையிலும் விந்தை எனச் சொல்ல இயலாது. ஏனெனில், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மாறாக, அதிர்ச்சியோடு உண்மை நிலையை அலசி  ஆராய்ந்து சிந்தித்து, செயல்படுத்த வேண்டிய தருனமிது. அல்ல அல்ல. ‘‘இயற்கைக்கு நன்றிக்கடனாக செய்ய வேண்டிய தார்மீக தர்மமிது’’

இயற்கையின் இயல்புத்தன்மைக்கு இடைஞ்சல்:

பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியானது மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பெற்றது. இந்நிலத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு தூய காற்றுக்காக காடுகளால் சூழப்பெற்றது. இது இயற்கை வடிவமைத்துக் கொடுத்த சமநிலை கோட்பாடு.

இக்கோட்பாட்டை மதிக்காமல், மனிதகுலத்தின் பெருக்கம் மற்றும் வசதியான வாழ்க்கைக்கு ஏற்ப, எளிதாக அழிக்க முடிவது காடுகள் மட்டுமே என்பதால் ஒருபுறம் மரங்கள் வெட்டப்பட்டு மாட மாளிகைகளின் அலங்காரப் பொருட்களாக உருமாற, மறுபுறமோ இவ்வலங்கார பொருட்களை தாங்கி நிற்கும் பீடங்களான வானலாவிய கட்டிடங்கள் எல்லாம் வயல்வெளி போன்ற இடங்களில் கட்டப்படுகின்றன. அளவிற்கு அதிகமான அழிவில்லா பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மருத்துவ கழிவுகளால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்தும், விசத்தன்மை கொண்டதுமாக மாறியும் விட்டது.

இதனால், உயிரினங்கள் உயிர்வாழத் தேவையான தூய காற்று மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து, நோய்வாய்கள் பல்கிப்பெருகி அயல்நாடுகளின் ஆற்றலில் அடிமைப்பட வேண்டிய அவல நிலை ஒவ்வொரு நாட்டுக்குமே இருக்கிறது.

இயற்கை வழங்கியுள்ள சமநிலை கோட்பாட்டின்படி, பஞ்ச பூதங்கள் சமநிலையோடு இருந்தால் மட்டுமே, மனித குலம் தனது தேவைக்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் உற்பத்தி செய்து உயிர்வாழ முடியும். ‘‘பஞ்சபூதங்களுக்கே பஞ்சம் என்றால் எப்படி உயிரினங்கள் உயிர்வாழ முடியும்? எங்கே போய் தஞ்சமடைய முடியும்?’’

மேலும், அறிவியல் தொழில்நுட்பத்தால் வாகனங்கள், தொழிற்சாலைகள் என பலவும் பலவாறாக பல்கிப்பெருகி அதனால் வெளியாகும் வெட்பமோ, புவியின் இயல்பான தட்பவெட்ப மற்றும் பருவ நிலையையே மாற்றி அமைத்து விட்டது என்பதன் அங்க அடையாளமே தற்போது உலகமே பெருங்கவலையோடு எதிர் நோக்கியிருக்கும் ‘‘புவி வெப்பமடைந்து வருதல் நிகழ்வு’’  

விதையும் அறுவடையும்:

மனித குலத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் பிடியில் இருந்து மனித குலம் எம்முறையிலாவது தப்பித்துக் கொள்ள வழியுண்டு.

ஆனால், ‘‘இயற்கையின் சட்டத்திலிருந்து யாரும், எவ்விதத்திலும் தப்பமுடியாது என்ற உண்மையை, உலகலாவிய அளவில் மனித குலம் உணர்ந்து, இயற்கையோடு இயைந்து வசதியாக வாழ அதிவிரைவாக வழிவகை காணும் வகையில் அடிப்படைக் கல்வியில் அக்கப்பூர்வமான கல்வியை கொணர வேண்டும்’’.

பூமி நமது பொழுதுபோக்கு இடமல்ல. நமக்காகவும், நமது சந்ததிகளுக்காகவும் பொறுப்புடன் பராமரிக்க, பாதுகாக்க வேண்டிய இடம். மேலும், தனிமனித ஒழுக்கமே சமுதாயத்தின் ஒழுக்கம் என்பது அடிப்படைப் பண்பு. பொது ஒழுக்கமே நாம் இயற்கைக்கும், இயற்கை நமக்கும் காட்டும் அன்பு மற்றும் மேம்பாட்டிற்கான மாண்பு.

சட்டக்கல்வியால் சாதிக்கலாம்!

கல்வி என்பது அறிவுக்கண்ணை திறந்து, சிந்தனை ஆற்றலை பெருக்கும் ஈடு இணையில்லாத மாபெரும் மகத்துவ சக்தி. ஆனால், அக்கல்வி எதைச் சார்ந்திருக்கிறதோ அதை மட்டுமே பிரதிபலிக்கும் தன்மை கொண்டது என்பதற்கு இணங்கவே, இன்றைய கல்வி முறை ஆக்கப்பூர்வமானவற்றை அழிக்கவும், ஆக்கக் கூடாததை ஆக்கவும், அதை வியாபாரமாக்கவுமே பயன்படுகிறது.

ஆனால், சட்டக்கல்வி அப்படிப்பட்ட தன்மை கொண்டதல்ல என்றாலும் கூட, அதுவும் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளின் வியாபாரத்தில் எப்படியெல்லாம் அகப்பட்டு விட்டது என்பதையே, 1909 ஆம் ஆண்டில், தனது 40-வது வயதில் எழுதிய முதல் நூலான இந்திய சுயராஜ்யம் என்ற நூலில், 11-வது கட்டுரையில், ‘‘வக்கீல்களின் நிலைமை’’ குறித்து அகில உலகமும் போற்றும் அஹிம்சையின் தந்தை மகாத்மா காந்தியே மிகக்கடுமையாக, கொடூரங்களை எடுத்துரைத்துச் சாடியுள்ளார் என்றால் வக்கீல் தொழில் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை எவரும் எளிதாக உணரலாம்.

நூற்றாண்டு கண்ட மகாத்மா காந்தியின் கருத்தில் முன்னேற்றமில்லாமலா போகும்?

காந்தியின் காலத்திற்கு பிறகு வக்கீல் தொழில் எப்படியெல்லாம் மு(பி)ன்னேறி இருக்கிறது என்பதை எடுத்துரைத்து, ‘‘உங்களின் பிரச்சினையை உங்களைத் தவிர வேறு யாரும் நன்கு அறியார் என்ற அடிப்படை தத்துவத்தையும், நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா, அம்மாவிடம் பேசுவது போல்தான் என்ற அடிப்படை உரிமையையும், நியாயம்தான் சட்டம் அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் என்ற அடிப்படை கடமையை எடுத்துரைத்தும், நீதியைத்தேடி... நீங்களே வாதாடுங்கள்!’’ என்ற எனது பத்து வருட கொள்கை திட்டமான அனைவருக்கும் சட்டக்கல்வி இவ்வாண்டு நிறைவுறும் தருவாயில் இவ்வாய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதில் மகிழ்கின்றேன்.  

இதே திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கடந்தாண்டு கையிலெடுக்க, வக்கீல்களின் வக்கிரகமான, வருமான எதிர்பார்ப்பு எதிர்ப்பால், கிடப்பில் உள்ளது.

ஆய்வுத் தீர்வுரை:

சட்டத்திற்கு அப்பாற்பட்ட சங்கதி என மனித குலம் உலகில் செயல் எதையுமே செய்யவோ, சொல்லவோ, பேசவோ முடியாது என்பதால், ஒட்டுமொத்த உலகலாவிய அடிப்படை சட்டக்கல்வியால் மட்டுமே, சுதந்திரத்தின் சூத்திரம், தலையாய தத்துவம், கடமையின் கட்டாயம் மற்றும் உரிமையை உணர வைத்து, இயற்கையின் அற்புத படைப்பில் உருவான மனித குலம் உள்ளிட்ட மற்ற உயிரினங்களும் சந்தோசமாக வாழ வழிகோல முடியும்.

குறிப்பு: இந்த சட்டவியல் ஆய்வுக் கட்டுரையானது, 2010 ஆம் ஆண்டில், தமிழக அறிவியல் பேரவையின் சார்பாக மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் நடத்தப் பெற்ற, பூமிப்பந்து வெந்திடல் நியாயமோ? என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையாகும்.  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)