No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, January 30, 2013

தற்காப்புக் கொலை(கள்)...! சகாயம் யாருக்கு...?


மதுரையில் கடந்த 9-2-2012 அன்று மது அருந்திய போதையில், தாங்கள் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிபாசு கணவனை உஷாராணி என்கிற அவரது மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்ததும், இது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 100 இன்படி, ‘‘தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலை என்பதால் குற்றமல்ல’’ என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையாளராக இருந்த அஸ்ரா கார்க் அவர்களால் விடுவிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

இம்முன்னுதாரண சம்பவத்திற்கு அடுத்தடுத்த நாட்களிலேயே 11-2-2012 மதுரை ஒத்தக்கடையை அடுத்த மாங்குளத்தில் நித்யா என்கிற விதவை மகள் தந்தை பாண்டி தன்னிடம் பாலியல் ரீதியாக நடக்க முயன்றார் என வெட்டி கொலை செய்ததோடு, தீயிட்டும் எரித்துள்ளார். ஆனால், அப்பெண்மணியை அஸ்ரா கார்க் தற்காப்பு கொலையின் கீழ் விடுவிக்காமல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

13-2-012 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ராமகிருஷ்ணன் என்கிற குடிகார கணவனை, தமிழரசி என்கிற மனைவி, மணிமொழி என்கிற அவர்களது மகளிடம், குடித்து விட்டு வந்து கலாட்டா செய்த காரணத்திற்காக, கணவனை கீழே தள்ளி கையையும், காலையும் கட்டி கிணற்றிப் போட்டு விட்டதால் இறந்து போனார்.

இது குறித்து தமிழரசியே காவல் நிலையம் சென்று குற்றத்தை ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது பிணையில் வந்து வழக்கை சந்திக்க காத்திருக்கிறார்.

இப்படி குடித்து விட்டு வந்து பற்பல தொல்லைகளை கணவன்கள் கொடுக்கிறார்கள் என்கிற தற்காப்பு காரணத்தின் பேரில் கொலை செய்ய ஆரம்பித்தால், குறைந்தது ஐம்பது விழுக்காடு கணவன்களை, அவர்களின் மனைவிகள் கொலை செய்ய வேண்டியிருக்கும்.

இப்படி ஆண்கள் நடந்து கொள்வதாக கூறப்படும் குற்றச்சாற்றுகளில் எல்லாம், அவர்கள் மது அருந்தி இருந்தார்கள் என்பது பிரதாணமாக முன்னிலைப் படுத்தப்படுகிறது.

ஆனால், பெண்களோ நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த போராடாமல், குடிகார கணவன்களுடன் அனுதினமும் போராடி, இப்படிப்பட்ட கொலை சர்ச்சைகளில் அல்லது வழக்கில் சிக்கி வாழ்க்கையை இழப்பது சரிதானா என்பதை பெண்கள் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய தக்க தருனமிது.

மதுரை கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட உஷாராணிக்காக வக்காலத்து வாங்கும் பெண்ணியவாதிகள் பலரும், அதே மதுரை நித்தியாவையும், பேராவூரணி தமிழரசியையும்  கண்டு கொள்ளவே இல்லை. இது என்ன நியாயமோ? பெண்ணியவாதிகளுக்கே வெட்ட வெளிச்சம்.

மதுரை கொலைச் சம்பவத்தில் மகனை இழந்த தந்தை, தனது மகனை திட்டமிட்டு கொலை செய்த மருமகள் மீது சட்டப்படி நீதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றங்களில் வழக்குக்கு மேல் வழக்கு எனப் போட்டு, நிதிபதிகளிடம் போராடிக் கொண்டு இருக்கிறார்.

இதற்காக, உன் நீதிப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, சட்டப்படி எங்களுக்கு சேர வேண்டிய  நிதிகளை / சொத்துக்களை ஒப்படைக்கவில்லை என்றால், நீயும் கொலை செய்யப்படுவாய் என்கிற எதிர்தரப்பினரின் அநீதியான மிரட்டல்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார், அறவே எழுதப்படிக்க தெரியாத எழுபது வயதான கொலைச் செய்யப்பட்ட ஜோதிபாசுவின் தந்தை சமயமுத்து.

முன்பாக, இவரது மனுவை விசாரணை செய்த சகாயமோ, இவரது போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்பதை எடுத்துரை ப்பதாகவே, இக்கொலைச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதாக மதுரையின் ஆட்சித் தலைவராக இருந்த போது தமிழக அரசின் உள்துறைக்கு அனுப்பிய 30.04.2012 தேதியிட்ட முதல் அறிக்கை இருக்கிறது.

இந்த அறிக்கையில் எந்த வித நியாயமும் இல்லை என்ற வகையில், தமயந்தி என்பவரால் 31-8-2012 தேதிய தினமணி நாளிதழில் எழுதப்பட்ட, ‘‘புண்படும் பெண்மனம்’’ என்கிற தலைப்பிலான நடுப்பக்க கட்டுரையில் கூடவே, சகாயத்தின் உண்மை, நேர்மை, திறன் குறித்து பற்பல குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டிருந்தன.

இக்கட்டுரையை விரிவாக படித்தப்பின், இதனை தொடர்வது உங்களின் புரிதலுக்கு எளிதாக இருக்கும் என்பதால், படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

அவைகளில் மிக முக்கியமாக,
‘‘ஆட்சியர் சகாயத்திற்கே உரித்தான தனிப்பட்ட திறன்கள்’’,

‘‘கொலையைச் செய்த உஷாராணிக்கு, வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக, அவர்  ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததான குற்றச்சாற்று’’,

‘‘பொறுப்பான பதவியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், பொறுப்பற்றத்தனமாக, எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்மீது வீண்பழி சுமத்துவதை இந்த ஆணாதிக்க சமுதாயம் பார்த்துக் கொண்டிருக்கலாம். பெண்மைக்குப் பாதுகாப்பளிக்கும் பெண்மணி முதல்வராக இருக்கும் ஆட்சி எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது’’  என்றும்,

‘‘மர்ம உறுப்பை அழுத்திக் கொலைச் செய்தது தற்காப்பு ஆகாது என்று சொல்லியவர், தற்காப்புக்காக எங்கெங்கு தாக்க வேண்டும் என்று விளக்காதது மற்றும் தற்காப்புக்காக போராடும் பெண், ஆணை எங்கெங்கு தாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது மாவட்ட ஆட்சியரின் பெருந்தன்மையும், புரிந்துணர்வும் பிரமிக்க வைக்கிறது!’’ என்கிற முன்னுக்குப் பின் முரணான உளரல்கள்,

‘‘இப்போது கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் பிரச்னைகளை ஒரு ஆணின் பார்வை எத்தனை மலிவானதாக எடைபோடும் என்பது மேலே குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் மூலம் தெளிவாகிறது’’ என்றும்,

"உஷாராணியை விடுதலை செய்யும் உரிமை அவருக்கில்லை'' என்றும், "அரசு ஒருவரது அடிப்படை உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று சகாயம் அவர்கள் உள்துறைக்கு எழுதிய கருத்து, காவல்துறை கண்காணிப்பாளர் உடனான தனிப்பட்ட பேதங்களை பஞ்சாயத்து செய்து கொள்வதுதான் என்பது தெளிவாகிறது'' என்றும்,

இவைகளின் உச்சகட்டமாக, ‘‘தன்னிடம் வந்த புகாரை விசாரித்தவர், அறிக்கை சமர்ப்பித்தவர், ஏன் உஷாராணியை அழைத்து விசாரிக்கவில்லை’’ என்கிற கேள்வியையும்,

கட்டுரையின் இறுதியில், ‘‘சொல்லக் கூடாதுதான். ஆனால், சொல்லாமலும் இருக்க இயலவில்லை. உங்கள் தாய் ஒரு பெண். உங்கள் சகோதரி ஒரு பெண். உங்கள் மனைவி ஒரு பெண். உங்கள் குழந்தைகளில் ஒருவர் பெண் என்று புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். பெண் மனதைப் புண்படுத்துவதற்கு முன் சற்று யோசித்துச் செயல்படுங்கள். அது சராசரி ஆணாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் சரி...!’’ என்றும்,

இவைகளை எல்லாம் தான் மட்டுமே அறிந்தவர் என்ற உலகமறியா உண்மையைப் போட்டு உடைத்துள்ளதாக ஆட்சியருக்கு எதிரான போர்வையில், ஆண்கள் சமுதாயத்தை  அறிவு வறுமையோடு அங்கலாய்த்திருந்தார்.

ஒருவர் குற்றமே செய்திருந்தாலும் கூட, அவர் குற்றவாளி அல்ல என்று மறுத்து வாதாட வேண்டியது எங்களின் சட்டக் கடமை என்று பொய்யர்கள், அவர்களின் நியாயமற்ற செயல்களுக்கு, அவர்களே வக்காலத்து வாங்கி கொள்வார்கள்.

சரிங்க, நீங்கள் சொல்லுவது போல் எந்த சட்டத்தில், எந்தப் பிரிவில் சொல்லப்படிருக்கிறது என்று, அவர்களிடம் ஒரு குறுக்கு கேள்வியைப் போட்டால், அவர்களால் பதில் சொல்லவே முடியாது. ஏனெனில், உண்மையில் அப்படியொரு சட்டப்பிரிவே கிடையாது. அப்படியொரு சட்டப்பிரிவு இருக்க முடியுமா என்ன?

ஆனாலும், மக்களின் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையைப் பயன்படுத்தி, அவர்களின் தொழிலை நியாயப்படுத்துவற்காக அவர்கள் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்றே! இதுவே பொய்யர்களின் தொழிலுக்கு மூலதன, மூலாதாரப் பொய்!!

நியாயமான வழக்குகளை மட்டுமே நடத்துவது என்கிற கொள்கையில் தொழில் செய்த  ஒரு வக்கீலிடம், தனக்கு நியாயம் இல்லை என தெரிந்தும் வழக்கை ஒப்படைக்கிறார். கட்சிகாரரின் சூட்சமத்தை அறியாத அவ்வக்கீல் அக்கட்சிக்காரருக்காக வாதாடுகிறார்.

குறுக்கு விசாரணையின் போது, தன் கட்சிக்காரரால் பதில் சொல்ல முடியாததை கண்ட அவ்வக்கீல், தனது கட்சிக்காரர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, நீதிபதிக்கு அதை எடுத்துச் சொல்லி தகுந்த தண்டனை பெற்றுத்தந்ததாக தனது சத்திய சோதனையில் சமுதாயத்திற்கான போதனையாக குறிப்பிட்டுள்ளார்.

அடடே! உலகில் இப்படியும் கூட ஒரு வக்கீல் இருந்தாரா என்று வியப்பாக இருக்கிறது அல்லவா?

இப்படி இருந்ததால்தாம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியானவர், பின்னர் மக்களால் ‘‘மகாத்மா காந்தி’’ ஆனார். இப்படி தன் கட்சிக்காரருக்கே தண்டனை வாங்கி கொடுத்த யோக்கியமான, கண்ணியமான, உண்மையான வக்கீல், உலகத்தில் மகாத்மாவைத் தவிர வேறு எவருமே இருந்ததாக தெரியவில்லை. தெரிந்தால் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.

எங்களது சட்டக்கடமை என்று குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதுதான் என வக்கீல்கள் எவ்வளவு தான் வக்காலத்து வாங்கினாலும், ‘‘இறுதியில் தங்களுக்கு தண்டனை உறுதியாவதை குற்றம் புரிந்தவர்கள் முதலில் மறந்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பது போல, தங்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சீர்த்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும், தங்களது வக்காலத்து மூலம், குற்றவாளிகளை மறைக்க முயன்று, அவர்களையும் அறியாமல் வசமாக சிக்க வைத்து விடுகின்றனர்’’.

ஆம்! தற்காப்பு என்கிற பெயரில் மதுரையில் நடைப்பெற்ற இக்கொலை விடயத்தில் நிச்சயம் சிபிசிஐடி விசாரணை போதாது. சிபிஐயின் விரிவான விசாரணையே தேவை. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்யுங்கள் என, தனது புண்படும் பெண்மனம் கட்டுரை மூலம் நமது கவனத்தை செலுத்த வைத்து விட்டார், கட்டுரையாளர் தமயந்தி.

இக்கொலை உண்மையில் தற்காப்புக்காக உஷாராணியால் மட்டுமே எதார்த்தமாக நடத்தப்பட்டதுதாம் என்றால், அதற்காக மதுரை காவல் கண்காணிப்பாளரது விசாரணையை மிக எளிதாக எதிர்கொண்டது போல், மாநில குற்றப்புலனாய்வு அல்லது மத்திய குற்றப் புலனாய்வு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே என்கிற நியாயமான கேள்வி முதன் முதலில் எழுகிறது.

ஒருவேளை, இப்புலனாய்வு அமைப்புகளும் கூட தன்னை கொலைக் குற்றவாளியாக சித்தரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் கூட, அதனை எதிர்கொள்வதில் துணிந்து தற்காப்புக் கொலை செய்த உஷாராணிக்கு என்ன சிரமம் இருக்க முடியும்? இதற்காக, வக்கீல் அல்லாத மற்றும் அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வே இல்லாத தமயந்தி ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?

பெண்ணியவாதிகள் தவிர, சராசரி ஆண்களும், பெண்களும் பேசவே வெட்கப்படுகின்ற வார்த்தைகளை, அதாவது ‘‘இந்தூரில் கணவனால் பிறப்புறுப்பில் பூட்டு போட்டுக் கொண்ட பெண் என்பன உட்பட பல்வேறு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை, அர்த்தமற்ற அற்பத்தனமான வசனங்களை கட்டுரையில் எழுதி’’, தமயந்தி தனது அறியாமையை இந்த அளவிற்கு வெளிச்சம் போட்டு காட்டி, என்னை களமிறக்கி பலரையும் மாட்டி விட்டிருக்க வேண்டாம்.

ஆனாலும், இவரது அறியாமைகளை மறைக்க நினைத்து, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் நபராக தனது சொத்து விபரங்களை தாமாகவே முன்வந்து வெளியிட்ட, ‘‘முதல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், கடந்த காலங்களில் பற்பல விடயங்களில் நேர்மைக்கு பெயர் போன மற்றும் தற்போது தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கிற மதுரை ஒத்தமலை ஊழல்கள் வெளிவரக் காரணமான மதுரை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் சகாயத்தை வேறு சகட்டுமேனிக்கு சாடி இருக்கிறார்’’.

இப்பொய்ப் புரட்டுச் சாடல்களை எல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய மனோபலம் கொண்டவர்தான் சகாயம் என்பதை நான் அறிவேன். மேலும், இது குறித்த எனது நேரடி கேள்விக்கான பதிலின் மூலமும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

கட்டுரையின் கருத்துக்கள் குறித்து பெருந்தன்மையோடு அவர் சொன்னது என்ன தெரியுமா? ‘‘நான் நல்லவன்... நேர்மையானவன்... என்று சலைக்காமல், சமுதாயத்திற்கு சொல்லிக் கொண்டிருந்தால், மக்களுக்கே என்மீது சலிப்பு வந்து விடாதா? ஆதலால், சகாயத்திற்கு இப்படியும் ஒருமுகம் இருக்கிறது என்று அவர்களின் விளம்பரத்திற்காக, பொய்ச் சொல்லி விட்டு போகட்டுமே! அதனால், எனக்கென்ன நட்டமிருக்கிறது?

உங்களைப் போன்றோருக்கு, எனது அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்கிற உண்மை வெளிப்படையாக தெரிகிறதுல்ல; அது போதும் எனக்கு’’ என்று, அவருக்கே உரித்தான பண்பான, இன்முகத்தோடு முடித்துக் கொண்டார்.

உண்மையில், உஷாராணிக்கு கள்ளத் தொடர்புகள் இருப்பதாக அவ்வறிக்கையில் சகாயம் குறிப்பிட்டு இருப்பது, உஷாராணியின் மாமனார், சமயமுத்து தனது மனுவில் கூறியுள்ள புகார்களே தவிர, கட்டுரையாளர் தமயந்தி திட்டமிட்டு சொன்னது போல சகாயத்தின் அனுமான கருத்தோ, சொந்தக் கருத்தோ அல்ல.

இதுபற்றி விளக்கி கட்டுரையாளர் தமயந்தியிடம் உலாப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஓ அப்படியா! தவறாக எழுதி விட்டேனா? அந்த அறிக்கையின் நகலை கொடுங்கள். நீங்கள் சொல்வதுபோல் சரியாக இருப்பின் அதற்கான மறுப்பை நானே பத்திரிகைக்கு தெரிவித்து விடுகிறேன் அல்லது சகாயம் அவர்களிடமே நேரடியாக மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால், அது மாபெரும் தவறு.

உண்மையில் இதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். செய்திருக்க வேண்டும். ஆனால், என்ன சொன்னார் தெரியுமா?

சகாயத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாதாம்.  ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதினாராம். எனக்கு தெரிய அப்படிப்பட்ட செய்திகள் ஏதும் ஊடகங்களில் வரவில்லையே என்றும், நீங்கள் சொல்வதை சரி பார்க்க, அதன் நகலை அனுப்புங்கள் என்றால் முடியாதாம். மேலும், இப்படியெல்லாம் அவர் பொறுப்பற்ற பதிலைச் சொன்னதாக நான் எழுதக் கூடாதாம்!

ஏனெனில், அவருக்கு இருக்கிற பொய்யான எழுத்து சுதந்திரம், சட்டப்படியான ஆவணங்களை / அறிக்கைகளை ஆராய்ந்தும் இரு தரப்பையும் (சகாயத்தையும், தமயந்தியையும்) கேட்டறிந்து உண்மையை எழுதுவதற்கு எனக்கு உரிமையில்லை என ஆங்கிலேயர் போல், டஸ் புஸ்; டாட் பூட் என ஆங்கிலத்தில் கத்த ஆரம்பித்து விட்டார்.

ஆங்கிலமும் தமிழைப் போன்றதொரு மொழிதானே தவிர, அறிவு அல்ல! என்ற சிற்றறிவு கூட இல்லாத தமயந்தி போன்றவர்களிடம், இனி பேசி பலனில்லை என்று, "நான் எழுதுவதை எழுதுகிறேன். நீங்கள் செய்வதை செய்யுங்கள்" எனச் சொல்லி முடித்துக் கொண்டேன்.

என்ன கயவாளித்தனம், கூத்தாடித்தனம் பாருங்கள்! யாராக இருந்தாலும், உண்மை சுடத்தானே செய்யும். அதற்காக நாம் அலசி ஆராய்ந்து எழுதாமல் விட்டுவிட முடியுமா என்ன?

இதுதான் மிகுந்த பொறுப்புணர்வோடு அறிக்கையை தயார் செய்த மாவட்ட ஆட்சியர் சகாயத்திற்கும், சிறிதும் பொறுப்பற்ற முறையில் கட்டுரை எழுதிய தமயந்தி போன்றோருக்கும் உள்ள நேரெதிர் தன்மை கொண்ட வேறுபாடு.

உண்மையில் தமயந்தியின் பொய்ப்புரட்டு கட்டுரையால், ஆட்சியராக இருந்த சகாயத்திற்கு அவர் சொல்வது போல் எவ்விதத்திலும் நட்டம் இல்லை; கெட்ட பெயரும் இல்லை. ஏனெனில், அவரைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள் யாரும், அக்கட்டுரையின் கருத்துக்களை நம்பவில்லை என்பதை, தினமணி வாசக நண்பர்கள் பலரிடமும் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் அறிந்தேன்.

மேலும், எப்படி இப்படியொரு மோசமான கட்டுரையை, அதன் உண்மை தன்மையை ஆராயாமல் வெளியிட்டார்கள் என்பது புரியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள். இதுவரையிலும், இணையத்தில் அக்கட்டுரைக்கு ஒருவர் கூட பின்னூட்ட மிடாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

இந்திய ஆட்சிப் பணிக்கு படித்துள்ள பலருக்கும், அத்துபடியாக சட்டம் தெரியாது. அரசு வக்கீல்களைத் தான் ஆலோசனை கேட்பார்கள். ஆனால், சகாயம் அப்படியல்ல. சட்டத்தில் மிகவும் தெளிவானவர். ஆதலால், தான் எடுக்கும் எந்தவொரு முடிவிலும் உறுதியானவர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த போதும் சரி, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போதும் சரி, இந்தியாவில் எந்த மாவட்ட ஆட்சியர்களும் செய்யாத வகையில் பொது மக்களுக்கு தேவையான பற்பல நல்ல திட்டங்களை இங்கு விவரிக்க இயலாத அளவிற்கு செய்தவர்.

ம்மாவட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட போது, மாற்றக் கூடாது என மக்கள் போராடும் அளவிற்கு தனது திறமையான செயல்களாலும், நேர்மையாலும் சாமான்யர்களின் மனதில் இடம் பிடித்தவர்.  

இதில், சாதாரண பாமர குடிமகனும் தனது வசிப்பிடத்தில் இருந்து கொண்டே, தங்களது முறையீடுகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் வண்ணம், அதற்காக பிரத்தியோக இணையதள வடிவமைப் பாளர்களை தேடிக் கண்டு பிடித்து உருவாக்கிய ‘‘தொடுவானம் திட்டம்’’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இதேபோல், மாவட்டத்தில் மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்களது பணிகளில் தெளிவானதொரு முடிவெடுக்கும் திறனைப் பெற, சட்டம் குறித்த விழிப்பறிவுணர்வு தேவை என்று வலியுறுத்தி வாரந்தோரும் அவர்களை அலுவலகத்திற்கு அழைத்து சொல்லிக் கொடுத்தவர். இவ்வளவு ஏன்?

நம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, ‘‘திருமங்கலம் யுக்தி’’ என்ற வகையில் அத்தேர்தல் மாறி விடக்கூடாது என்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்த தேர்தல் ஆணையத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை தமிழ் நாட்டவர்கள் உட்பட, அக்கரையுள்ள அண்டை மாநிலத்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

அப்படியொரு இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலையில், மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிப்பதற்கு சகாயம் மட்டுமே தகுதியுடையவர் என்று கருதிய தேர்தல் ஆணையம், தனது சுய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை நேரடியாக நியமித்தது.

இதனால் பீதியானவர்கள், சகாயத்தின் மீது பற்பல குற்றச் சாற்றுகளை கூறி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில், சகாயமே தனக்கிருக்கும் சட்டப் புலமையில் அடிப்படையில், தேர்தல் பணிகளுக்கு இடையிலும், உ(ய)ரிய பதில்களை தாக்கல் செய்து, தனது தரப்பு நியாயத்தை நிலை நிறுத்தினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தோடு இணைந்து, மதுரை மாவட்டத்தில் பணநாயகமில்லாத, ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டி முத்திரை பதித்தார் என்பதையும் நாடே அறியும்.


இதிலும், தனது அரசியல் சார்பின்மையை நிறுபிக்கவும், தனது மீதான பொய்ப் புகார்களை பொய்ப்பிக்கவும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நண்பர் களை எல்லாம் கேட்ட றிந்தும், அவர்கள் புரிந்துரைத்த பற்பல தகவல் தொழில் நுட்ப சாதனங் களை தேடிக் கண்டு பிடித்தும் பயன் படுத்தினார் என்பதும் எங்களைப் போன்ற விசாரணையில் களமிறங்கும் வெகு சிலருக்கே தெரியும்.

சகாயத்தின் நேர்மைக்கும், சவாலான சட்டப் புலமைக்கும், பன்முக திறனுக்கும் இதை விட வேறென்ன அக்மார்க் முத்திரை இருக்க முடியும்?

நாட்டில் பணியாற்றும் ஆயிரமாயிரம்  இந்திய ஆட்சிப் பணியாளர் களில், விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சிலரே தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படும் மக்கள் நல விரும்பிகளாகவும், நேர்மையாளர்களாகவும்  இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் அறிக்கையில் சொல்லாத ஒரு சங்கதியை, தங்களின் வசதிக்காக பொய்யாக திரித்துக் கூறி, பிரச்சினையை திசை திருப்ப முயல்வது அவரவர்களின் முட்டாள்தனமே. இது ஒருபோதும் சமுதாய நலனுக்கோ அல்லது அவர்கள் வக்காலத்து வாங்குபவர்களுக்கோ  உதவாது.

மாறாக, அவதூறு என்ற குற்றத்தின் அடிப்படையில் தண்டிக்கத்தக்கதே! ஆனாலும், சகாயத்தைப் பொறுத்தவரை, பொய்ப்புரட்டு கட்டுரையாளர் தமயந்தியின் கருத்துக்களை பெயரளவிற்கு கூட பொருட்படுத்தவில்லை என்றும், பொருட்படுத்த ஒன்றும் இல்லை என்றும்தான் சொல்லுவேன். சுய அறிவும், தெளிவும் உள்ள எவரும் நம்மைப் பார்த்து தெரு நாய் குரைக்கிறதே என்று, திருப்பி குரைக்க மாட்டார்கள்தானே?

இப்புரட்டுக் கட்டுரை குறித்து தமிழக அரசுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், ஏனோ கண்டு கொண்டதாக தெரியவே இல்லை. தேர்தல் ஆணைய நியமனத்தின் மூலம், திறமையாக திருமங்கலம் யுக்தியை முறியடித்து, மதுரையில் நியாயமான தேர்தலை நடத்திக் காட்டிய தனது ஊழியனுக்கு, அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா?

ஒருவேளை அரசின் கவணத்திற்கு வராதது உண்மையாய் இருந்தால், இனியாவது உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என நம்புவோம். ஆனாலும், இக்கட்டுரை மூலம் நான் சொல்ல விரும்புவதெல்லாம், இம்முன்னுதாரண தற்காப்புக் கொலை விவகாரத்தில் எழுந்துள்ள,
 • தற்காப்பு என்றால் என்ன?

 • அதனை உபயோகிக்க வேண்டிய எல்லை என்ன?

 • ஜோதிபாசுவுக்கும், உஷாராணிக்கும் குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து சட்டப்படி செல்லுமா அல்லது செல்லாதா? 

 • ஜோதிபாசு கொலை செய்யப்பட்ட போது, அவரும் உஷாராணியும் சட்டப்படி கணவன் மனைவியா?

 • இதில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படும் மகளின் பங்கு என்ன? 

 • உஷாராணி செய்தது தற்காப்பு கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா?

 • தற்காப்பு கொலை என்றால் எப்படி?

 • திட்டமிட்ட கொலை என்றால் எப்படி?

 • திட்டமிட்ட கொலை என்றால், ஒப்புதல் மற்றும் ரகசிய வாக்கு மூல ஆவணங்கள்  அடிப்படையில் வேறு என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?

 • இதற்கான அடிப்படை ஆதாரங்கள் என்னென்ன?

 • குற்றம் சாற்றப்பட்டவர்கள் காவல்துறையில் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலங்கள் என்னென்ன? அதில் உள்ள முரண்பாடுகள் என்னென்ன? 

 • குற்றம் சாற்றப்பட்டவர்கள் நீதித்துறையில் கொடுத்துள்ள ரகசிய வாக்கு மூலங்கள் என்னென்ன? அதில் உள்ள முரண்பாடுகள் என்னென்ன?  

 • இவ்விருவாக்கு மூலப்பதிவிலும் நடந்துள்ள சட்ட மீறல்கள் என்னென்ன? 

 • குற்றம் புரிந்தவர்களை தற்காப்புக் குற்றம் என்ற பெயரில் காவல்துறை விடுவிக்க அதிகாரம் இருக்கிறதா?

 • ஜோதிபாசுவின் கொலை குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வது என்னென்ன?

 • ஜோதிபாசுவின் உடல் குறித்த புகைப்படங்கள் நமக்கு தெளிவாக உணர்த்தப் போவது என்ன?

 • இதில் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள் என்னென்ன?

 • சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டுள்ள சகாயத்தின் அறிவிக்கை எந்த அளவிற்கு சரியானது அல்லது தவறானது?

 • சரியானது எனில், முறையே எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

 • தவறானது எனில், அப்பொய் அறிக்கைக்காக சகாயத்திற்கு சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய தண்டனை கள் என்னென்ன?

 • இறுதியாக, இவ்வழக்கு குறித்து சமூக அக்கறை கொண்ட நாம், சட்டத்தை அமல்படுத்தி, அது சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள குடியரசுத் தலைவருக்கு இவ்விவகாரத்தில் / இக்கொலை விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புரிந்துரைக்கப் போகும் விடயங்கள் என்னென்ன?

என்பன பற்றியெல்லாம் திரட்டப்பட்டுள்ள ஆதார ஆவணங்களின் அடிப்படையில், ‘‘வக்கீல்களாலும், நீதிபதிகளாலும் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்றன’’ என்கிற மகாத்மா காந்தி அவர்களின் கூற்று இம்முன்னுதாரண தற்காப்பு கொலைகளில் எப்படியெல்லாம் நிதர்சனமாகி இருக்கிறது என்பதையும், இதனை நமக்கான தக்கதொரு பாடமாக எடுத்துக் கொள்வது குறித்தும், அடுத்தடுத்த தொடர்களில் மிகவும் விரிவாகவே அலசி ஆராய்வோம்... காத்திருங்கள்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)