No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, January 30, 2013

தற்காப்புக் கொலை(கள்)...! சகாயம் யாருக்கு...?


மதுரையில் கடந்த 9-2-2012 அன்று மது அருந்திய போதையில், தாங்கள் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஜோதிபாசு கணவனை உஷாராணி என்கிற அவரது மனைவியே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்ததும், இது இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 100 இன்படி, ‘‘தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலை என்பதால் குற்றமல்ல’’ என்று மதுரை மாவட்ட காவல்துறை ஆணையாளராக இருந்த அஸ்ரா கார்க் அவர்களால் விடுவிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

இம்முன்னுதாரண சம்பவத்திற்கு அடுத்தடுத்த நாட்களிலேயே 11-2-2012 மதுரை ஒத்தக்கடையை அடுத்த மாங்குளத்தில் நித்யா என்கிற விதவை மகள் தந்தை பாண்டி தன்னிடம் பாலியல் ரீதியாக நடக்க முயன்றார் என வெட்டி கொலை செய்ததோடு, தீயிட்டும் எரித்துள்ளார். ஆனால், அப்பெண்மணியை அஸ்ரா கார்க் தற்காப்பு கொலையின் கீழ் விடுவிக்காமல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

13-2-012 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ராமகிருஷ்ணன் என்கிற குடிகார கணவனை, தமிழரசி என்கிற மனைவி, மணிமொழி என்கிற அவர்களது மகளிடம், குடித்து விட்டு வந்து கலாட்டா செய்த காரணத்திற்காக, கணவனை கீழே தள்ளி கையையும், காலையும் கட்டி கிணற்றிப் போட்டு விட்டதால் இறந்து போனார்.

இது குறித்து தமிழரசியே காவல் நிலையம் சென்று குற்றத்தை ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது பிணையில் வந்து வழக்கை சந்திக்க காத்திருக்கிறார்.

இப்படி குடித்து விட்டு வந்து பற்பல தொல்லைகளை கணவன்கள் கொடுக்கிறார்கள் என்கிற தற்காப்பு காரணத்தின் பேரில் கொலை செய்ய ஆரம்பித்தால், குறைந்தது ஐம்பது விழுக்காடு கணவன்களை, அவர்களின் மனைவிகள் கொலை செய்ய வேண்டியிருக்கும்.

இப்படி ஆண்கள் நடந்து கொள்வதாக கூறப்படும் குற்றச்சாற்றுகளில் எல்லாம், அவர்கள் மது அருந்தி இருந்தார்கள் என்பது பிரதாணமாக முன்னிலைப் படுத்தப்படுகிறது.

ஆனால், பெண்களோ நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த போராடாமல், குடிகார கணவன்களுடன் அனுதினமும் போராடி, இப்படிப்பட்ட கொலை சர்ச்சைகளில் அல்லது வழக்கில் சிக்கி வாழ்க்கையை இழப்பது சரிதானா என்பதை பெண்கள் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய தக்க தருனமிது.

மதுரை கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட உஷாராணிக்காக வக்காலத்து வாங்கும் பெண்ணியவாதிகள் பலரும், அதே மதுரை நித்தியாவையும், பேராவூரணி தமிழரசியையும்  கண்டு கொள்ளவே இல்லை. இது என்ன நியாயமோ? பெண்ணியவாதிகளுக்கே வெட்ட வெளிச்சம்.

மதுரை கொலைச் சம்பவத்தில் மகனை இழந்த தந்தை, தனது மகனை திட்டமிட்டு கொலை செய்த மருமகள் மீது சட்டப்படி நீதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றங்களில் வழக்குக்கு மேல் வழக்கு எனப் போட்டு, நிதிபதிகளிடம் போராடிக் கொண்டு இருக்கிறார்.

இதற்காக, உன் நீதிப் போராட்டத்தை கைவிட்டு விட்டு, சட்டப்படி எங்களுக்கு சேர வேண்டிய  நிதிகளை / சொத்துக்களை ஒப்படைக்கவில்லை என்றால், நீயும் கொலை செய்யப்படுவாய் என்கிற எதிர்தரப்பினரின் அநீதியான மிரட்டல்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார், அறவே எழுதப்படிக்க தெரியாத எழுபது வயதான கொலைச் செய்யப்பட்ட ஜோதிபாசுவின் தந்தை சமயமுத்து.

முன்பாக, இவரது மனுவை விசாரணை செய்த சகாயமோ, இவரது போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்பதை எடுத்துரை ப்பதாகவே, இக்கொலைச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதாக மதுரையின் ஆட்சித் தலைவராக இருந்த போது தமிழக அரசின் உள்துறைக்கு அனுப்பிய 30.04.2012 தேதியிட்ட முதல் அறிக்கை இருக்கிறது.

இந்த அறிக்கையில் எந்த வித நியாயமும் இல்லை என்ற வகையில், தமயந்தி என்பவரால் 31-8-2012 தேதிய தினமணி நாளிதழில் எழுதப்பட்ட, ‘‘புண்படும் பெண்மனம்’’ என்கிற தலைப்பிலான நடுப்பக்க கட்டுரையில் கூடவே, சகாயத்தின் உண்மை, நேர்மை, திறன் குறித்து பற்பல குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டிருந்தன.

இக்கட்டுரையை விரிவாக படித்தப்பின், இதனை தொடர்வது உங்களின் புரிதலுக்கு எளிதாக இருக்கும் என்பதால், படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

அவைகளில் மிக முக்கியமாக,
‘‘ஆட்சியர் சகாயத்திற்கே உரித்தான தனிப்பட்ட திறன்கள்’’,

‘‘கொலையைச் செய்த உஷாராணிக்கு, வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக, அவர்  ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததான குற்றச்சாற்று’’,

‘‘பொறுப்பான பதவியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், பொறுப்பற்றத்தனமாக, எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு பெண்மீது வீண்பழி சுமத்துவதை இந்த ஆணாதிக்க சமுதாயம் பார்த்துக் கொண்டிருக்கலாம். பெண்மைக்குப் பாதுகாப்பளிக்கும் பெண்மணி முதல்வராக இருக்கும் ஆட்சி எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது’’  என்றும்,

‘‘மர்ம உறுப்பை அழுத்திக் கொலைச் செய்தது தற்காப்பு ஆகாது என்று சொல்லியவர், தற்காப்புக்காக எங்கெங்கு தாக்க வேண்டும் என்று விளக்காதது மற்றும் தற்காப்புக்காக போராடும் பெண், ஆணை எங்கெங்கு தாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது மாவட்ட ஆட்சியரின் பெருந்தன்மையும், புரிந்துணர்வும் பிரமிக்க வைக்கிறது!’’ என்கிற முன்னுக்குப் பின் முரணான உளரல்கள்,

‘‘இப்போது கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் பிரச்னைகளை ஒரு ஆணின் பார்வை எத்தனை மலிவானதாக எடைபோடும் என்பது மேலே குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் மூலம் தெளிவாகிறது’’ என்றும்,

"உஷாராணியை விடுதலை செய்யும் உரிமை அவருக்கில்லை'' என்றும், "அரசு ஒருவரது அடிப்படை உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கக் கூடாது என்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று சகாயம் அவர்கள் உள்துறைக்கு எழுதிய கருத்து, காவல்துறை கண்காணிப்பாளர் உடனான தனிப்பட்ட பேதங்களை பஞ்சாயத்து செய்து கொள்வதுதான் என்பது தெளிவாகிறது'' என்றும்,

இவைகளின் உச்சகட்டமாக, ‘‘தன்னிடம் வந்த புகாரை விசாரித்தவர், அறிக்கை சமர்ப்பித்தவர், ஏன் உஷாராணியை அழைத்து விசாரிக்கவில்லை’’ என்கிற கேள்வியையும்,

கட்டுரையின் இறுதியில், ‘‘சொல்லக் கூடாதுதான். ஆனால், சொல்லாமலும் இருக்க இயலவில்லை. உங்கள் தாய் ஒரு பெண். உங்கள் சகோதரி ஒரு பெண். உங்கள் மனைவி ஒரு பெண். உங்கள் குழந்தைகளில் ஒருவர் பெண் என்று புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். பெண் மனதைப் புண்படுத்துவதற்கு முன் சற்று யோசித்துச் செயல்படுங்கள். அது சராசரி ஆணாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் சரி...!’’ என்றும்,

இவைகளை எல்லாம் தான் மட்டுமே அறிந்தவர் என்ற உலகமறியா உண்மையைப் போட்டு உடைத்துள்ளதாக ஆட்சியருக்கு எதிரான போர்வையில், ஆண்கள் சமுதாயத்தை  அறிவு வறுமையோடு அங்கலாய்த்திருந்தார்.

ஒருவர் குற்றமே செய்திருந்தாலும் கூட, அவர் குற்றவாளி அல்ல என்று மறுத்து வாதாட வேண்டியது எங்களின் சட்டக் கடமை என்று பொய்யர்கள், அவர்களின் நியாயமற்ற செயல்களுக்கு, அவர்களே வக்காலத்து வாங்கி கொள்வார்கள்.

சரிங்க, நீங்கள் சொல்லுவது போல் எந்த சட்டத்தில், எந்தப் பிரிவில் சொல்லப்படிருக்கிறது என்று, அவர்களிடம் ஒரு குறுக்கு கேள்வியைப் போட்டால், அவர்களால் பதில் சொல்லவே முடியாது. ஏனெனில், உண்மையில் அப்படியொரு சட்டப்பிரிவே கிடையாது. அப்படியொரு சட்டப்பிரிவு இருக்க முடியுமா என்ன?

ஆனாலும், மக்களின் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையைப் பயன்படுத்தி, அவர்களின் தொழிலை நியாயப்படுத்துவற்காக அவர்கள் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்றே! இதுவே பொய்யர்களின் தொழிலுக்கு மூலதன, மூலாதாரப் பொய்!!

நியாயமான வழக்குகளை மட்டுமே நடத்துவது என்கிற கொள்கையில் தொழில் செய்த  ஒரு வக்கீலிடம், தனக்கு நியாயம் இல்லை என தெரிந்தும் வழக்கை ஒப்படைக்கிறார். கட்சிகாரரின் சூட்சமத்தை அறியாத அவ்வக்கீல் அக்கட்சிக்காரருக்காக வாதாடுகிறார்.

குறுக்கு விசாரணையின் போது, தன் கட்சிக்காரரால் பதில் சொல்ல முடியாததை கண்ட அவ்வக்கீல், தனது கட்சிக்காரர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, நீதிபதிக்கு அதை எடுத்துச் சொல்லி தகுந்த தண்டனை பெற்றுத்தந்ததாக தனது சத்திய சோதனையில் சமுதாயத்திற்கான போதனையாக குறிப்பிட்டுள்ளார்.

அடடே! உலகில் இப்படியும் கூட ஒரு வக்கீல் இருந்தாரா என்று வியப்பாக இருக்கிறது அல்லவா?

இப்படி இருந்ததால்தாம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியானவர், பின்னர் மக்களால் ‘‘மகாத்மா காந்தி’’ ஆனார். இப்படி தன் கட்சிக்காரருக்கே தண்டனை வாங்கி கொடுத்த யோக்கியமான, கண்ணியமான, உண்மையான வக்கீல், உலகத்தில் மகாத்மாவைத் தவிர வேறு எவருமே இருந்ததாக தெரியவில்லை. தெரிந்தால் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.

எங்களது சட்டக்கடமை என்று குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதுதான் என வக்கீல்கள் எவ்வளவு தான் வக்காலத்து வாங்கினாலும், ‘‘இறுதியில் தங்களுக்கு தண்டனை உறுதியாவதை குற்றம் புரிந்தவர்கள் முதலில் மறந்து, குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பது போல, தங்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சீர்த்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும், தங்களது வக்காலத்து மூலம், குற்றவாளிகளை மறைக்க முயன்று, அவர்களையும் அறியாமல் வசமாக சிக்க வைத்து விடுகின்றனர்’’.

ஆம்! தற்காப்பு என்கிற பெயரில் மதுரையில் நடைப்பெற்ற இக்கொலை விடயத்தில் நிச்சயம் சிபிசிஐடி விசாரணை போதாது. சிபிஐயின் விரிவான விசாரணையே தேவை. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்யுங்கள் என, தனது புண்படும் பெண்மனம் கட்டுரை மூலம் நமது கவனத்தை செலுத்த வைத்து விட்டார், கட்டுரையாளர் தமயந்தி.

இக்கொலை உண்மையில் தற்காப்புக்காக உஷாராணியால் மட்டுமே எதார்த்தமாக நடத்தப்பட்டதுதாம் என்றால், அதற்காக மதுரை காவல் கண்காணிப்பாளரது விசாரணையை மிக எளிதாக எதிர்கொண்டது போல், மாநில குற்றப்புலனாய்வு அல்லது மத்திய குற்றப் புலனாய்வு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே என்கிற நியாயமான கேள்வி முதன் முதலில் எழுகிறது.

ஒருவேளை, இப்புலனாய்வு அமைப்புகளும் கூட தன்னை கொலைக் குற்றவாளியாக சித்தரித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் கூட, அதனை எதிர்கொள்வதில் துணிந்து தற்காப்புக் கொலை செய்த உஷாராணிக்கு என்ன சிரமம் இருக்க முடியும்? இதற்காக, வக்கீல் அல்லாத மற்றும் அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வே இல்லாத தமயந்தி ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?

பெண்ணியவாதிகள் தவிர, சராசரி ஆண்களும், பெண்களும் பேசவே வெட்கப்படுகின்ற வார்த்தைகளை, அதாவது ‘‘இந்தூரில் கணவனால் பிறப்புறுப்பில் பூட்டு போட்டுக் கொண்ட பெண் என்பன உட்பட பல்வேறு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை, அர்த்தமற்ற அற்பத்தனமான வசனங்களை கட்டுரையில் எழுதி’’, தமயந்தி தனது அறியாமையை இந்த அளவிற்கு வெளிச்சம் போட்டு காட்டி, என்னை களமிறக்கி பலரையும் மாட்டி விட்டிருக்க வேண்டாம்.

ஆனாலும், இவரது அறியாமைகளை மறைக்க நினைத்து, தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, இந்தியாவிலேயே முதல் நபராக தனது சொத்து விபரங்களை தாமாகவே முன்வந்து வெளியிட்ட, ‘‘முதல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், கடந்த காலங்களில் பற்பல விடயங்களில் நேர்மைக்கு பெயர் போன மற்றும் தற்போது தமிழகத்தையே உலுக்கி கொண்டிருக்கிற மதுரை ஒத்தமலை ஊழல்கள் வெளிவரக் காரணமான மதுரை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் சகாயத்தை வேறு சகட்டுமேனிக்கு சாடி இருக்கிறார்’’.

இப்பொய்ப் புரட்டுச் சாடல்களை எல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய மனோபலம் கொண்டவர்தான் சகாயம் என்பதை நான் அறிவேன். மேலும், இது குறித்த எனது நேரடி கேள்விக்கான பதிலின் மூலமும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

கட்டுரையின் கருத்துக்கள் குறித்து பெருந்தன்மையோடு அவர் சொன்னது என்ன தெரியுமா? ‘‘நான் நல்லவன்... நேர்மையானவன்... என்று சலைக்காமல், சமுதாயத்திற்கு சொல்லிக் கொண்டிருந்தால், மக்களுக்கே என்மீது சலிப்பு வந்து விடாதா? ஆதலால், சகாயத்திற்கு இப்படியும் ஒருமுகம் இருக்கிறது என்று அவர்களின் விளம்பரத்திற்காக, பொய்ச் சொல்லி விட்டு போகட்டுமே! அதனால், எனக்கென்ன நட்டமிருக்கிறது?

உங்களைப் போன்றோருக்கு, எனது அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்கிற உண்மை வெளிப்படையாக தெரிகிறதுல்ல; அது போதும் எனக்கு’’ என்று, அவருக்கே உரித்தான பண்பான, இன்முகத்தோடு முடித்துக் கொண்டார்.

உண்மையில், உஷாராணிக்கு கள்ளத் தொடர்புகள் இருப்பதாக அவ்வறிக்கையில் சகாயம் குறிப்பிட்டு இருப்பது, உஷாராணியின் மாமனார், சமயமுத்து தனது மனுவில் கூறியுள்ள புகார்களே தவிர, கட்டுரையாளர் தமயந்தி திட்டமிட்டு சொன்னது போல சகாயத்தின் அனுமான கருத்தோ, சொந்தக் கருத்தோ அல்ல.

இதுபற்றி விளக்கி கட்டுரையாளர் தமயந்தியிடம் உலாப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ஓ அப்படியா! தவறாக எழுதி விட்டேனா? அந்த அறிக்கையின் நகலை கொடுங்கள். நீங்கள் சொல்வதுபோல் சரியாக இருப்பின் அதற்கான மறுப்பை நானே பத்திரிகைக்கு தெரிவித்து விடுகிறேன் அல்லது சகாயம் அவர்களிடமே நேரடியாக மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால், அது மாபெரும் தவறு.

உண்மையில் இதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். செய்திருக்க வேண்டும். ஆனால், என்ன சொன்னார் தெரியுமா?

சகாயத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாதாம்.  ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதினாராம். எனக்கு தெரிய அப்படிப்பட்ட செய்திகள் ஏதும் ஊடகங்களில் வரவில்லையே என்றும், நீங்கள் சொல்வதை சரி பார்க்க, அதன் நகலை அனுப்புங்கள் என்றால் முடியாதாம். மேலும், இப்படியெல்லாம் அவர் பொறுப்பற்ற பதிலைச் சொன்னதாக நான் எழுதக் கூடாதாம்!

ஏனெனில், அவருக்கு இருக்கிற பொய்யான எழுத்து சுதந்திரம், சட்டப்படியான ஆவணங்களை / அறிக்கைகளை ஆராய்ந்தும் இரு தரப்பையும் (சகாயத்தையும், தமயந்தியையும்) கேட்டறிந்து உண்மையை எழுதுவதற்கு எனக்கு உரிமையில்லை என ஆங்கிலேயர் போல், டஸ் புஸ்; டாட் பூட் என ஆங்கிலத்தில் கத்த ஆரம்பித்து விட்டார்.

ஆங்கிலமும் தமிழைப் போன்றதொரு மொழிதானே தவிர, அறிவு அல்ல! என்ற சிற்றறிவு கூட இல்லாத தமயந்தி போன்றவர்களிடம், இனி பேசி பலனில்லை என்று, "நான் எழுதுவதை எழுதுகிறேன். நீங்கள் செய்வதை செய்யுங்கள்" எனச் சொல்லி முடித்துக் கொண்டேன்.

என்ன கயவாளித்தனம், கூத்தாடித்தனம் பாருங்கள்! யாராக இருந்தாலும், உண்மை சுடத்தானே செய்யும். அதற்காக நாம் அலசி ஆராய்ந்து எழுதாமல் விட்டுவிட முடியுமா என்ன?

இதுதான் மிகுந்த பொறுப்புணர்வோடு அறிக்கையை தயார் செய்த மாவட்ட ஆட்சியர் சகாயத்திற்கும், சிறிதும் பொறுப்பற்ற முறையில் கட்டுரை எழுதிய தமயந்தி போன்றோருக்கும் உள்ள நேரெதிர் தன்மை கொண்ட வேறுபாடு.

உண்மையில் தமயந்தியின் பொய்ப்புரட்டு கட்டுரையால், ஆட்சியராக இருந்த சகாயத்திற்கு அவர் சொல்வது போல் எவ்விதத்திலும் நட்டம் இல்லை; கெட்ட பெயரும் இல்லை. ஏனெனில், அவரைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள் யாரும், அக்கட்டுரையின் கருத்துக்களை நம்பவில்லை என்பதை, தினமணி வாசக நண்பர்கள் பலரிடமும் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் அறிந்தேன்.

மேலும், எப்படி இப்படியொரு மோசமான கட்டுரையை, அதன் உண்மை தன்மையை ஆராயாமல் வெளியிட்டார்கள் என்பது புரியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள். இதுவரையிலும், இணையத்தில் அக்கட்டுரைக்கு ஒருவர் கூட பின்னூட்ட மிடாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

இந்திய ஆட்சிப் பணிக்கு படித்துள்ள பலருக்கும், அத்துபடியாக சட்டம் தெரியாது. அரசு வக்கீல்களைத் தான் ஆலோசனை கேட்பார்கள். ஆனால், சகாயம் அப்படியல்ல. சட்டத்தில் மிகவும் தெளிவானவர். ஆதலால், தான் எடுக்கும் எந்தவொரு முடிவிலும் உறுதியானவர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த போதும் சரி, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போதும் சரி, இந்தியாவில் எந்த மாவட்ட ஆட்சியர்களும் செய்யாத வகையில் பொது மக்களுக்கு தேவையான பற்பல நல்ல திட்டங்களை இங்கு விவரிக்க இயலாத அளவிற்கு செய்தவர்.

ம்மாவட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட போது, மாற்றக் கூடாது என மக்கள் போராடும் அளவிற்கு தனது திறமையான செயல்களாலும், நேர்மையாலும் சாமான்யர்களின் மனதில் இடம் பிடித்தவர்.  

இதில், சாதாரண பாமர குடிமகனும் தனது வசிப்பிடத்தில் இருந்து கொண்டே, தங்களது முறையீடுகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் வண்ணம், அதற்காக பிரத்தியோக இணையதள வடிவமைப் பாளர்களை தேடிக் கண்டு பிடித்து உருவாக்கிய ‘‘தொடுவானம் திட்டம்’’ மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இதேபோல், மாவட்டத்தில் மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்களது பணிகளில் தெளிவானதொரு முடிவெடுக்கும் திறனைப் பெற, சட்டம் குறித்த விழிப்பறிவுணர்வு தேவை என்று வலியுறுத்தி வாரந்தோரும் அவர்களை அலுவலகத்திற்கு அழைத்து சொல்லிக் கொடுத்தவர். இவ்வளவு ஏன்?

நம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, ‘‘திருமங்கலம் யுக்தி’’ என்ற வகையில் அத்தேர்தல் மாறி விடக்கூடாது என்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்த தேர்தல் ஆணையத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை தமிழ் நாட்டவர்கள் உட்பட, அக்கரையுள்ள அண்டை மாநிலத்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

அப்படியொரு இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலையில், மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிப்பதற்கு சகாயம் மட்டுமே தகுதியுடையவர் என்று கருதிய தேர்தல் ஆணையம், தனது சுய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை நேரடியாக நியமித்தது.

இதனால் பீதியானவர்கள், சகாயத்தின் மீது பற்பல குற்றச் சாற்றுகளை கூறி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில், சகாயமே தனக்கிருக்கும் சட்டப் புலமையில் அடிப்படையில், தேர்தல் பணிகளுக்கு இடையிலும், உ(ய)ரிய பதில்களை தாக்கல் செய்து, தனது தரப்பு நியாயத்தை நிலை நிறுத்தினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தோடு இணைந்து, மதுரை மாவட்டத்தில் பணநாயகமில்லாத, ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டி முத்திரை பதித்தார் என்பதையும் நாடே அறியும்.


இதிலும், தனது அரசியல் சார்பின்மையை நிறுபிக்கவும், தனது மீதான பொய்ப் புகார்களை பொய்ப்பிக்கவும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நண்பர் களை எல்லாம் கேட்ட றிந்தும், அவர்கள் புரிந்துரைத்த பற்பல தகவல் தொழில் நுட்ப சாதனங் களை தேடிக் கண்டு பிடித்தும் பயன் படுத்தினார் என்பதும் எங்களைப் போன்ற விசாரணையில் களமிறங்கும் வெகு சிலருக்கே தெரியும்.

சகாயத்தின் நேர்மைக்கும், சவாலான சட்டப் புலமைக்கும், பன்முக திறனுக்கும் இதை விட வேறென்ன அக்மார்க் முத்திரை இருக்க முடியும்?

நாட்டில் பணியாற்றும் ஆயிரமாயிரம்  இந்திய ஆட்சிப் பணியாளர் களில், விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சிலரே தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படும் மக்கள் நல விரும்பிகளாகவும், நேர்மையாளர்களாகவும்  இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் அறிக்கையில் சொல்லாத ஒரு சங்கதியை, தங்களின் வசதிக்காக பொய்யாக திரித்துக் கூறி, பிரச்சினையை திசை திருப்ப முயல்வது அவரவர்களின் முட்டாள்தனமே. இது ஒருபோதும் சமுதாய நலனுக்கோ அல்லது அவர்கள் வக்காலத்து வாங்குபவர்களுக்கோ  உதவாது.

மாறாக, அவதூறு என்ற குற்றத்தின் அடிப்படையில் தண்டிக்கத்தக்கதே! ஆனாலும், சகாயத்தைப் பொறுத்தவரை, பொய்ப்புரட்டு கட்டுரையாளர் தமயந்தியின் கருத்துக்களை பெயரளவிற்கு கூட பொருட்படுத்தவில்லை என்றும், பொருட்படுத்த ஒன்றும் இல்லை என்றும்தான் சொல்லுவேன். சுய அறிவும், தெளிவும் உள்ள எவரும் நம்மைப் பார்த்து தெரு நாய் குரைக்கிறதே என்று, திருப்பி குரைக்க மாட்டார்கள்தானே?

இப்புரட்டுக் கட்டுரை குறித்து தமிழக அரசுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், ஏனோ கண்டு கொண்டதாக தெரியவே இல்லை. தேர்தல் ஆணைய நியமனத்தின் மூலம், திறமையாக திருமங்கலம் யுக்தியை முறியடித்து, மதுரையில் நியாயமான தேர்தலை நடத்திக் காட்டிய தனது ஊழியனுக்கு, அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா?

ஒருவேளை அரசின் கவணத்திற்கு வராதது உண்மையாய் இருந்தால், இனியாவது உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என நம்புவோம். ஆனாலும், இக்கட்டுரை மூலம் நான் சொல்ல விரும்புவதெல்லாம், இம்முன்னுதாரண தற்காப்புக் கொலை விவகாரத்தில் எழுந்துள்ள,
 • தற்காப்பு என்றால் என்ன?

 • அதனை உபயோகிக்க வேண்டிய எல்லை என்ன?

 • ஜோதிபாசுவுக்கும், உஷாராணிக்கும் குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து சட்டப்படி செல்லுமா அல்லது செல்லாதா? 

 • ஜோதிபாசு கொலை செய்யப்பட்ட போது, அவரும் உஷாராணியும் சட்டப்படி கணவன் மனைவியா?

 • இதில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படும் மகளின் பங்கு என்ன? 

 • உஷாராணி செய்தது தற்காப்பு கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா?

 • தற்காப்பு கொலை என்றால் எப்படி?

 • திட்டமிட்ட கொலை என்றால் எப்படி?

 • திட்டமிட்ட கொலை என்றால், ஒப்புதல் மற்றும் ரகசிய வாக்கு மூல ஆவணங்கள்  அடிப்படையில் வேறு என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?

 • இதற்கான அடிப்படை ஆதாரங்கள் என்னென்ன?

 • குற்றம் சாற்றப்பட்டவர்கள் காவல்துறையில் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலங்கள் என்னென்ன? அதில் உள்ள முரண்பாடுகள் என்னென்ன? 

 • குற்றம் சாற்றப்பட்டவர்கள் நீதித்துறையில் கொடுத்துள்ள ரகசிய வாக்கு மூலங்கள் என்னென்ன? அதில் உள்ள முரண்பாடுகள் என்னென்ன?  

 • இவ்விருவாக்கு மூலப்பதிவிலும் நடந்துள்ள சட்ட மீறல்கள் என்னென்ன? 

 • குற்றம் புரிந்தவர்களை தற்காப்புக் குற்றம் என்ற பெயரில் காவல்துறை விடுவிக்க அதிகாரம் இருக்கிறதா?

 • ஜோதிபாசுவின் கொலை குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வது என்னென்ன?

 • ஜோதிபாசுவின் உடல் குறித்த புகைப்படங்கள் நமக்கு தெளிவாக உணர்த்தப் போவது என்ன?

 • இதில் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகள் என்னென்ன?

 • சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டுள்ள சகாயத்தின் அறிவிக்கை எந்த அளவிற்கு சரியானது அல்லது தவறானது?

 • சரியானது எனில், முறையே எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

 • தவறானது எனில், அப்பொய் அறிக்கைக்காக சகாயத்திற்கு சட்டப்படி கொடுக்கப்பட வேண்டிய தண்டனை கள் என்னென்ன?

 • இறுதியாக, இவ்வழக்கு குறித்து சமூக அக்கறை கொண்ட நாம், சட்டத்தை அமல்படுத்தி, அது சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள குடியரசுத் தலைவருக்கு இவ்விவகாரத்தில் / இக்கொலை விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புரிந்துரைக்கப் போகும் விடயங்கள் என்னென்ன?

என்பன பற்றியெல்லாம் திரட்டப்பட்டுள்ள ஆதார ஆவணங்களின் அடிப்படையில், ‘‘வக்கீல்களாலும், நீதிபதிகளாலும் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்றன’’ என்கிற மகாத்மா காந்தி அவர்களின் கூற்று இம்முன்னுதாரண தற்காப்பு கொலைகளில் எப்படியெல்லாம் நிதர்சனமாகி இருக்கிறது என்பதையும், இதனை நமக்கான தக்கதொரு பாடமாக எடுத்துக் கொள்வது குறித்தும், அடுத்தடுத்த தொடர்களில் மிகவும் விரிவாகவே அலசி ஆராய்வோம்... காத்திருங்கள்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, January 26, 2013

குடியரசுக் கொண்டாட்டம்!உலகில் பல குடியரசு நாடுகள் உள்ளன. அவைகளில் பல தாங்களுக்கு தாங்களே மிகப்பெரிய குடியரசு நாடு என சொல்லிக் கொள்கின்றன. நாமும் அப்படித்தாம்.  

2000 ஆம் ஆண்டில் சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய போது, நமது நாடு எப்படி உலகிலேயே மிகப்பெரிய குடியரசாக இருக்க முடியும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அதற்கான விடை கிடைக்க சுமார் ஆறு வருடங்களானது.

ஏனெனில், எனக்கு தெரிய குடியரசு என்பதற்கான விளக்கம் என்ன என்பது எந்த சட்டத்திலும், பள்ளிக்கல்வி பாட திட்டத்திலும் கூட இல்லை. இது குடியரசு நாட்டில், குடியரசுக்கு கிடைத்த (அவ)மரியாதையே!

மக்களாட்சி என்று சொல்லப்படும் குடியரசு என்பதற்கு, ‘‘மக்கள் தங்களைத் தாங்களே  ஆள்பதற்காக, தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கப்படுவதே’’ என்ற கருத்தே பரவலாக இருக்கிறது. நம் நாட்டில் மட்டுமல்ல; எல்லா நாட்டிலும் குடிமக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். மாறாக, ஆடு, மாடுகள் அரசை தேர்ந்தெடுப்பது இல்லை.  

தனி மனிதரான நாம், நமக்காக நாமே சில கொள்கைகளை, கட்டுப்பாடுகளை, நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறோம் அல்லவா? அதுபோல, வெள்ளையர்களின் அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதும், இந்திய குடி மக்களாகிய நாம், நமது அடிப்படை உரிமை, சம உரிமை, சமய உரிமை, வழிபாட்டு உரிமை மற்றும் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை உட்பட, பலவற்றை உள்ளடக்கி வரையறை செய்து கொண்ட, ‘‘உறுதிமொழி கடப்பாட்டு ஆவணமே இந்திய அரசமைப்பு!’’.

இதனை ஆங்கிலத்தில் Indian Constitution என்கிறோம். இதனை தமிழில் மொழி பெயர்க்கும் போது, ‘‘இந்திய அரசியலமைப்பு’’ என்பதே அதிகாரப்பூர்வமான மொழி பெயர்ப்பு என்கிறது இந்திய குடியரசு.

இதனைத்தான் நாம் வழக்கத்தில் ஆட்சியாளர்களான அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரித்தான சட்டம் என்பது போல, ‘‘இந்திய அரசியல் சட்டம்’’ என நாம் தவறாக சொல்கிறோம். காரணம், சினிமா உட்பட பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவைகளினாலேயே இது அரசியல்வாதிகளின் நல்வாழ்வுக்கான சட்டம் என்கிற தவறான முடிவுக்கும் வந்து விட்டோம்.

உண்மையில் இதில் நமது நாட்டில் என்னென்ன துறைகள் இருக்க வேண்டும், அத்துறைகள் எப்படி எப்படி எல்லாம் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்கான அனைத்து விடயங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இதனை ‘‘இந்திய சாசனம் அல்லது இந்திய உறுதிமொழி ஆவணம்’’ என்று சொல்வதே மிகச் சரியானதாக இருக்கும்.   

இதில் வரையறை செய்யப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு, சாதாரண குடிமக்கள் முதல் குடியரசுத் தலைவர் வரை கட்டுப்பட்டே ஆக வேண்டும். அதாவது, இதற்கு உட்பட்டுதான், நமது இந்தியத் தாய்த்திருநாட்டை நாம் இயக்க வேண்டும்.

ஆனால், பல விடயங்களில் இயக்கிக் கொண்டிருப்பது இதற்கு புறம்பாகத்தான். இதற்கான காரணம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும், நாம் இதுபற்றிய விழிப்பறிவுணர்வு இல்லாமல் இருப்பதுமே ஆகும்.

இதில் சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் உள்ள முக்கியமான இரண்டு வித்தியாசங்கள் பலருக்கும் புரிவதில்லை. எனக்கும் கூட சட்ட ஆராய்ச்சியில் இறங்கிய பின்னரே தெரிய வந்தது. இதில், ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலை பெற்ற நாளைத்தாம், சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிகிறது.

ஆனால், நாம் இந்திய சாசனம் என்கிற இந்திய அரசமைப்பு செயலுக்கு வந்த நாளைத்தாம், ‘‘நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை’’.

மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசுகளின் சார்பாக, டில்லி செங்கோட்டையில் அல்லது அந்தந்த மாநில சட்ட மன்றங்களில் யார் தேசியக்கொடியை ஏற்றுகிறார்கள் என்பதில் பலருக்கும் தெரிவதில்லை.

சுதந்திர தினத்தன்று முறையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தலைவரான பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களாலும், குடியரசுத் தினத்தன்று மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் பெற்றவர்களான குடியரத்தலைவர் மற்றும் அந்தந்த மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்பது கூட நமக்கு தெரிவிக்கப்படாமலும், தெரியாமலும், தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அறவே இல்லாமலும் இருக்கிறோம்.  

26-01-2013 ஆன இன்று, நமது 64-வது மூத்தக் குடியரசைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வரிய தருனத்திலாவது, இந்திய அரசமைப்பைப் பற்றி தெள்ளத்தெளிவாக தெ(ளி)(ரி)ந்து கொள்வோம்.

இந்த அரசமைப்பில், குறிப்பிட்ட காலம் நாட்டை ஆட்சி செய்யத் தேவையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் என்ற கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றவர்களை குடியரசாக ஆள பொறுப்பேற்கச் செய்வது, முதல் கடமை!

இப்படி, குடிமக்களால், மக்களால், ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பவதையே முறையே குடியரசு, மக்களாட்சி, ஜனநாயகம் என பல்வேறு பெயர்களில் சொல்கிறோம்!

இந்த அரசின் மூலம் மக்களின் உரிமைகளை, தேவைகளை பூர்த்தி செய்யும் சட்ட திட்டங்களை வகுத்து, அதனை செயல்படுத்துவதற்கு தேவையான ஊழியர்களை நியமிப்பது, சட்ட திட்டங்களை குடிமக்கள் மீறும் போது அல்லது ஊழியர்கள் செயல்படுத்தாத போது ஏற்படும் உரிமை மீறல் அல்லது கடமை தவறுதல் ஆகிய குற்றங்கள் மேன்மேலும், நடை பெறாத வண்ணம் தடுத்து நிறுத்தி, நியாயத்தை நிலைநாட்ட தேவையான நீதித்துறை என்ற கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவைகள் அரசின் பிரதான கடமைகள்.

சகோதரத்துவம், சமத்துவம், சமநீதி ஆகியவற்றை காக்க, உண்மையை கக்க வைக்க வேண்டியதும், கண்டறிய வேண்டியதும் நீதித்துறையின் பிரதான கடமையாகும்.

இவைகள் எல்லாம் சரியாக நடக்க தேவையான சட்டங்களை அமல்படுத்தி,  கண்காணித்து, கலந்து ஆலோசித்து, சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான முடிவை எடுக்க வேண்டிய பிரதாண கடமை குடியரசுத் தலைவருடையது. தேவைப்பட்டால் நெருக்கடி நிலையை கூட அமல்படுத்தும் அதிகாரமும் இவருக்கு இருக்கிறது.

எனவேதான், அவர் குடியரசின் முதல் குடிமகன்(ள்) என்று அழைக்கப்படுகிறார். இவரைத்தவிர மற்றவர்கள் எவருக்குமே தாங்கள் எத்தனையாவது குடிமகன்கள் அல்லது குடிமகள்கள் என யாருக்கும் எதுவும் தெரியாது. இனியும் தெரிய வாய்ப்பில்லை.

மொத்தத்தில், எவரும் தனது அதிகாரத்தை, துஷ்பிரயோகம் செய்ய முடியாத வகையிலும், அப்படியே செய்தாலும் அதனை மற்றவர்கள் சரி செய்து விடும் நிலையிலேயே பின்னிப் பிணைத்து இந்திய அரசமைப்பில் அதிகாரங்கள் பகரப்பட்டுள்ளன.

இதனை ரத்தினச்சுருக்கமாக ‘‘பரவலா க்கப்பட்ட அதிகாரம்’’ எனலாம்.

அதாவது சட்டமானது தனது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து வைக்காமல் நிர்வாகம், செயல், நீதி மற்றும் மக்கள் என நாலாபுறமும் பிரித்து கொடுத்துள்ளது.

இதில் அதிகாரத்தில் இல்லாத குடிமக்களின் பங்கு மிகவும் அலாதியானது என்றே சொல்வேன். ஏனெனில், மற்ற முத்துறைகளிலும் உள்ளவர்கள் அவ்வவ்துறைகளில் மட்டுமே கடமையை ஆற்ற முடியும். மீறினால், குறுக்கீடு இருக்கிறது என்ற குற்றச்சாற்று எழும். அப்படி எழுந்தால் நியாயமான குறுக்கீடு கூட, அடங்கிப் போகும்.

ஆனால், மக்களாகிய நாம் அப்படியல்ல. நமது தகுதியை, திறமையைப் பொறுத்து முத்துறையையுமோ அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றிரண்டில் நமக்கான கடமையை அதிகாரமாக செலுத்தி, முத்துறையையும் முறைப்படுத்த முடியும்.  

இப்படிப்பட்ட நாட்டின் கட்டமைப்பை நாம் புரிந்து கொள்வதென்பது மிக மிக எளிது.

நாட்டில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு அம்மா என்ற பெயரை வழங்குவது அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையே! அம்மாதான் அக்குழந்தைக்கு தந்தை யார் என்பதை அடையாளம் காட்டுகிறாள். இதுதான் குடும்பத்தின் கட்டமைப்பு. இதுபோலவேதான், நாட்டின் கட்டமைப்பும்.

மக்கள் அரசை தேர்ந்தெடுக்கிறார்கள். அரசு தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற பல்வேறு அதிகார பீடங்களை ஏற்படுத்துகிறது. அரசிடம் வேலைபார்ப்பவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர். அதிகார பீடங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அரசின் அதிகாரம் பெற்ற ஊழியர்கள் ஆவர்.

பொதுவாக இவ்விரண்டு வகையான ஊழியர்களையும்தாம், ‘‘பொது ஊழியர்கள்’’ என்கிறோம். குடிமக்களின் வரிப்பணத்தில் இருந்து கூலி பெறும் கடைநிலை ஊழியர்களான தோட்டிகள் முதல் குடியரசுத் தலைவர் வரை அனைவருமே மக்களுக்கான, பொது ஊழியர்கள்தாம். ஊழியர்கள் என்றால் கேவலமானவர்கள் அல்ல. எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஊழியர்கள்தாம்.

ஆனால், அயோக்கிய ஆங்கிலேயர்கள் தங்களுக்கு தாங்களே பில்டப் கொடுத்துக் கொண்டது போல, நமது பொது ஊழியர்களும் தங்களுக்கு தாங்களே பெருமை தேடிக் கொள்ளும் விதமாக ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து வந்த அதிகாரி, அலுவலர், ஆளுநர், நீதிபதி, நீதியரசர், குடியரசுத் தலைவர் போன்ற பல்வேறு பெயர்களை கௌரவமாக சூட்டிக் கொண்டுள்ளனர்.

இது போதாதென்று, அவர்களாகவே மாண்புமிகு வேறு போட்டுக் கொள்கின்றனர். இவர்களுக்கு மாண்பு என்பது, தங்களது பண்பான நடத்தைகளுக்காக மற்றவர்கள் தரும் மரியாதையே அன்றி, தாங்களே போட்டுக் கொள்வதல்ல என்கிற இங்கிதம் தெரியாதவர்கள். இவைகளினாலேயே இவர்களையெல்லாம், ‘‘தான் என்கின்ற அகங்காரம் குடிகொள்கிறது’’.  

இதனாலேயே, யோக்கியர்கள் இதுபோன்ற ஊழியங்களுக்கு போட்டி போடுவதுமில்லை; போவதுமில்லை; அப்படியே போட்டிப் போட்டு போனாலும் கூட போட்டுக் கொள்வதில்லை.  மாறாக, மக்களை போட வைக்கிறார்கள். இவர்களே உண்மையான பொது ஊழியர்கள்.

ஆங்கிலேயர் அடிமை ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்த இவ்வங்கார பழக்க வழக்கம் குடியரசு நாட்டிலும் நீடித்துக் கொண்டுதான் இருப்பதும், அதற்கு நாம் காரியம் சாதிக்க வேண்டும் என்பதற்காக துணை நிற்பதும் கொடுமையிலும் கொடுமை.

இதனை தகர்க்கும் முயற்சியாக நான் இவர்களில் எவருக்காவது கடிதம் எழுத வேண்டியிருந்தால், மரியாதைக்குரிய பொது ஊழியரே என்றுதான் எழுதுகிறேன். நீங்களும் எழுதிப் (பழகு) (பாரு)ங்கள். 

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 21 இன்படி, நமக்கான ஊழியர்களை எல்லாம் பொது ஊழியர்கள் என்றே சொல்ல வேண்டும் என்பதால், இப்படி எழுதுவதில் சட்டப்படியே எந்த தவறும் இல்லை என்பதை நீங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டால், நமக்கான பொது ஊழியர்களைப் பார்த்து நாம் பயப்படவோ, அவர்களின் ஆங்கிலேய அகங்காரத்திற்கு அடிபணியவோ வேண்டியதில்லை.  

மாறாக, அவர்கள் உங்களின் சட்ட அறிவைக் கண்டு கடமையைச் செவ்வனே செய்வார்கள்; செய்யவில்லை என்றாலும் செய்ய வைக்க முடியும். செய்வீர்களா என்பதே எனது கேள்வி.

சரி, உலகிலேயே நாமே மிகப்பெரிய குடியரசு என்கிற விசயத்திற்கு வருவோம்!

நான் இந்தியன் என்பதற்காக நமது சட்டங்களை புகழ்ந்து பேசுபவன் அல்ல. மாறாக, நியாயத்துக்கு புறம்பான சட்டங்களை சாடுவதும் உண்டு. எனது 13 வருட சட்ட ஆராய்ச்சியில், ''உலகில் நாமே மிகப்பெரிய குடியரசு'' என்கிற முடிவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டேன்.

ஏனெனில், உரிமையைப் பொறுத்த வரையில், ஒருவர் எந்த நாட்டை, மதத்தை, இனத்தை, மொழியை சார்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு அவர்களின் தாய்த்திரு நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ, அவைகளை, உலகில் உள்ள பல குடியரசு நாடுகளில், அப்படியே வழங்கும் ஒரேநாடு, நமது இந்தியா மட்டுமேதாம்!

சரி! உரிமையில் அவரவர்களது அதே உரிமை என்றால், தண்டனையில் அவரவர்களது தண்டனையா என்றால் இல்லை. மாறாக, யாவருக்கும் பொதுவான தண்டனையே என்பது மிகப்பெரிய குடியரசுக்கு மேலும் கூடுதல் வலுசேர்க்கிறது.  

இது குறித்த அடிப்படையான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத ஒரே காரணத்தினாலேயே, நாம் நமது மாபெரும் குடியரசின் மகிமையை உணராமல் இருக்கிறோம்.

குடியரசை இன்றொரு நாள் மட்டும், தங்களைத் தாங்களே மாண்பானவர்களாக கருதும் மாண்புமிகுக்கள் உலக சம்பிரதாயத்திற்காக கொண்டாடுவது, குடியரசுக் கொண்டாட்டமல்ல.  

மாறாக, நாம் இன்று அவர்களுக்கு ஊழியத்தின் பேரில் கொடுத்திருக்கும் நல்வாய்ப்பே!

நமக்கு, இந்திய சாசனம் அறிவுறுத்தியுள்ள சட்டப்படியான (ச/சு)மூக கடமை உணர்வோடும், உரிமை உணர்வோடும் ஒவ்வொரு நாளும் உறவாடுவதே, உலகின் மாபெரும் குடியரசில் உங்களுக்கான உண்மையான கொண்டாட்டமாக இருக்கும்.

இந்திய குடிமக்களாகிய உங்கள் அனைவருக்கும், குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, January 13, 2013

நுண்ணறிவு இல்லாத நூல்கள்!
புத்தகங்களே நம்மோடு சண்டைப் போடாத நண்பர்கள். வாசிக்கும் பழக்கமே அறிவை (அபி)விருத்தி செய்யும் என்பன போன்ற அறிவார்த்த எழுத்தாளர்களின் தத்துவங்களை மனதில் கொண்டு, புத்தகங்களை வாங்கி குவிப்போர் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களில் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதில், ஒவ்வொரு வருடமும் இவ்வளவு நூல்களை விற்க வேண்டும் என பதிப்பகங்களால் இலக்கு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு கிட்டத்தட்ட வெற்றியும் பெறப்படுகின்றது. இதற்காகவே பல்வேறு புத்தகங்களை, புத்தக கண்காட்சிகளின் போது வெளிக் கொண்டு வருவார்கள்.

கண்காட்சி என்றப் பெயரிலேயே, ‘‘கண்ணுக்குதான் காட்சியே ஒழிய, அறிவுக்கு அல்ல’’ என அவர்களே சொல்கிறார்கள் போலும்!

நாம் புத்தகம் எழுதினால், அதற்காக மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என்பதற்காக நூல்களை எழுதாத பேரறிஞர்கள் பலர் வாழ்ந்த காலம் மலையேறிப் போய், இப்போது அறிவு வறிஞர்கள் பலரும் கூட, நூல்கள் எழுதுவதை தொழிலாக வைத்திருக்கின்றனர்.

பணபலம் படைத்த வறிஞர்கள், பணத்தால் வறுமையாகவும் அறிவால் அறிஞராகவும் உள்ளவர்களை மடக்கி விலை கொடுத்து வாங்கி தன் பெயரில் நூலாக போட்டுக் கொள்வார்கள். அப்படி போடும் அளவிற்கு தகுதியில்லாதவர்கள் பதிப்பாசிரியர் என்று உள்ளே நுழைந்து விடுவார்கள். இப்பணபலம் படைத்த வறிஞர்களிடம் பல மகான்கள் கூட ஏமாந்து போய், தங்களின் கொள்கைகளுக்கு, அவர்களே சமாதி கட்டிவிட்டு சென்று உள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடியாது.

ஆனால், உண்மை இதுதான். இதுபற்றி மகான்களின் மகிமையும்; மடத்தனமும் என்று நீதியைத்தேடி... வரிசையில் ஐந்தாவது நூலான சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற நூலில் எழுதியுள்ளேன்.

இம்மகான்களின் வரிசையில் கடைசியாக சிக்கியவர், சுமார் பத்து லட்சம் அன்பர்களை தன்பக்கம் கவர்ந்திழுத்து மெய்ஞான கருத்துக்களை போதித்தும், ஒரு மகான் எப்படி அமைதியாக சாமாதி நிலையை அடைய வேண்டுமோ அதற்கு நேர் மாறாக, தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக சாகடிக்கப்பட்ட அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியே! சிக்க வைத்தவர் ஈரோட்டைச் சேர்ந்த மயிலானந்தம் என்கிற பிரபல தமிழ் பிசினஸ் கொள்ளையரே!

எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்களது நூல் வெளிவருவதற்கு எனது அறிவுப்பூர்வமான ஒத்துழைப்பை கேட்டார்கள். நானும் சமுதாயத்திற்கு இரண்டு நல்ல நூல்கள் வெளிவருகிறதே என்ற ஆர்வத்தில் உதவி செய்தேன். ஆனால், "ஒருவரோ இருக்க கூடாத பொய்யான விசயங்கள் இருக்க வேண்டும் என்றார். மற்றவரோ, நூலின் மையக்கருவே, நூலில் இருக்க வேண்டாம்" என்றார்.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால், இதையெல்லாம் நான் ஆதரித்து எழுத முடியாது என்று சொல்லி விட்டேன். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் வருமானம் வந்திருக்கும்; சமுதாயத்திற்கு பயன்படும் அந்நூல்களில் எனது பெயரும் வந்திருக்கும்; கூடவே சமுதாயத்திற்கு பொய்யான தகவலும், முழுமையில்லாத தகவலும் வந்திருக்கும். தவறான செயல்களுக்கு நாம் காரணமாக இருக்க கூடாது என்பதாலேயே விலகி கொண்டேன். கடந்த 15-08-2012 அன்றே வெளிவந்திருக்க வேண்டிய அவ்விரண்டு நூல்களும் இன்னும் வெளிவரவில்லை; இனியும் வருமா என்பது சந்தேகம்தாம். 

ஏதோ ஒரு விதத்தில் புகழ்பெற்ற ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர, மற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் வறுமையில் வாடுபவர்கள்தாம். பேச்சாளர்களாவது, சமயத்துக்கு தக்கவாறு பேசும் சமயப் பேச்சாளராக மாறி வறுமையின் கோரப் பிடியில் இருந்து தப்பித்து விடலாம்.

ஆனால் எழுத்தாளர்களால், அவ்வளவு சீக்கிரம் மாறி விட முடியாது. அதனால், வறுமையில்தாம் வாடுவார்கள். இவ்வகை எழுத்தாளர்களே கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர்கள். இதனால் தற்கொலை செய்து கொண்ட கவரிமான் எழுத்தாளர்களும் உண்டு. இவர்களது எண்ணங்கள் எழுத்து மூலமாக பதிவு செய்யப்பட்டு விடுவதால்தாம், சமுதாயத்தில் எழுத்தாளர்களுக்கு என்றென்றும் மதிப்பு இருக்கிறது.

ஆனால், கொள்கைப்பிடிப்பு இல்லாத பேச்சாளர்கள், தமது பேச்சில் இருந்து பல்டி அடித்து விடுவார்கள் என்பதற்கு நாட்டில் ஏராளமான பேச்சாள தலைவர்களை பார்த்து இருப்பீர்கள். இனியும் பார்ப்பீர்கள்.

ஒரு நூலை எழுதி விட்டாலே நூலாசிரியர், ஆண்டுக்கு ஓரிரு இதழ்களை வெளியிட்டாலே பத்திரிகையாளர் என்கிற சிறப்பு அந்தஸ்து வந்து விடுவதாகவும் கற்பனையில் பலபேர் இத்துறைக்கு வருகிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கையெழுத்து பத்திரிகையை நம்மவர்கள் நடத்தினார்கள்.  அதாவது ஒரு பத்திரிகை கார்பன் பேப்பர்களின் மூலம் ஐந்து முதல் பத்து வரையில் தயாரித்து, அதை முக்கியஸ்தர்களிடம் கொடுத்து, ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல் அவ்வூர் மக்களைக் ஓரிடத்தில் கூட்டிப் படிக்கச் சொல்லி, ஆங்காங்கே விடுதலை உணர்வை ஊட்டினார்கள். ஆனால், இக்கணினி யுகத்தில் இதழை தட்டச்சு செய்து அதிகபட்சம் நூறு நகல்களை எடுத்து பத்திரிகை நடத்துவதாக சொல்லிக் கொள்கிறார்கள்.   

உணவுப் பொருட்களை விளைவிப்பவனுக்கும், அதனை சந்தையில் வாங்குபவனுக்கும் இடையில் எப்படி தரகர்கள், முதலாளிகள் பெறும் பங்கு பணத்தை இரண்டு பக்கங்களில் இருந்தும் சுரண்டுகிறார்களோ, இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கேட்கும் வழக்கு தரப்பினர்களிடம் இருந்து வக்கீல்களும், நிதிபதிகளும் எப்படி நிதியை தி(ரு)(ரட்)டுகிறார்களோ, அதுபோலவே ஒரு புத்தகத்தை எழுதுபவருக்கும், வாங்கும் வாசகர்களுக்கும் இடையில் பதிப்பக முதலாளிகள்தாம் அதிகமாக கொள்ளையடிக்கிறார்கள்.

இதனை உணர்ந்து கொண்ட வெகு சில எழுத்தாளர்கள், தாங்களே புதிதாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து தாங்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு, தெரிந்தவர்கள் மூலம் விற்றுக் கொள்கிறார்கள்.  

பதிப்பாளர்கள் தங்களை சமுதாயத்தில் போட்டிப் போட்டு நிலை நிறுத்திக் கொள்ள, மறைமுகமாக என்னென்ன வேலைகளை செய்கிறார்கள் என்பது, உங்களுக்கு நன்றாக தெரிந்தால், அவர்கள் மீது எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே, உங்களுக்கும் வெளிப்படும்.

எனக்கு தெரிந்த வரையில் நூல் எழுதுவதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அடிப்படை கல்விக்கான நூல். மற்றொன்று வாழ்க்கை கல்விக்கான நூல். இவ்விரண்டுக்கும் படிப்புக்கும், அனுபவத்திற்கும் உள்ள நேர்ரெதிர் தன்மை உண்டு. இதனை விளங்கிக் கொள்வது எப்படி என்பதற்கு, எனது தொழில் பாணியில் ஒரு சிறு விளக்கம்.

கல்வி கற்று தேர்ந்துள்ள ஒருவரிடம், நான்கு மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பியை ஒரு மீட்டர் நீளமுள்ள துண்டுகளாக, மிகச் சரியாக வெட்டினால் எத்தனை கிடைக்கும் என்றால் நான்கு கிடைக்கும் என்பார். இதையே கல்வி கற்காத ஆனால், அவ்வேலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கேட்டால் மூன்றுதாம் கிடைக்கும் என்பார்.

உடனே நாம், என்ன இருந்தாலும் படிச்சவன், படிச்சவன்தான்! என்னதான் படிக்கவில்லை என்றாலும், இந்த சிறு விபரமே தெரியாதவர் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவார் என்றே நினைப்போம். ஆனால் உண்மை என்ன?

படித்தவர் போட்டது கல்விக் கூடத்தில் போட்ட மனக் கணக்கு. படிக்காதவர் போட்டது, தன் வாழ்வில் நடைமுறைப்படுத்திய அனுபவ கணக்கு. அதாவது இரும்பு கம்பியை உட்ட ஏதாவது ஒரு உபகரணத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும் அல்லவா?

இதில் சிறந்த உபகரணம் என்று ஹாக்சா பிளேடை எடுத்துக் கொண்டால் கூட, அதன் கனம் ஒரு மில்லி மீட்டர் என்று கொண்டால், மூன்று முறை அறுத்தால், குறைந்தது மூன்று மில்லிமீட்டர் காணாமல் போய் விடும். இதுமட்டுமல்லாமல், மேலும் சில விசயங்கள் உண்டு என்பதை இதற்கு மேல் நீங்களே புரிந்து கொள்ள முடியும்.  

இப்படிப்பட்ட வேறுபாட்டை களையும் ஒரு முயற்சியாக படித்த அறிவு வறுமைவாதிகள் கொண்டு வந்த திட்டமே, ‘‘ஆங்கிலத்தில் டாக்டரேட் என்று சொல்லப்படும் முனைவர் பட்டம்’’. இப்போது இப்பட்டமானது பல்கலைக் கழகங்களால் கூவி கூவி விற்கப்படுவதால், பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள், அதனை வாங்கவும் அலைமேதுகிறார்கள்.

இவர்கள் மேற்கொள்ளும் சுய(நல)க்கள ஆய்வு மற்றும் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் எல்லாம் கூட, நான் முன்னர் சொன்ன எழுத்தாளர்களைப் போன்றதே என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கல்விக்கான நூல் என்பது ஆரம்ப நிலை என்பதால் எளிதான விசயங்களாகவே இருக்கும். ஆனால், வாழ்க்கைக்கான நூல் என்பது கரடுமுரடாண பாதைகளை கடந்து சென்று, வெற்றியை நிலை நாட்டுவதற்கான நூல் என்பதால், அதில் கரடுமுரடாண சங்கதிகள் கூட கனகட்சிதமாக சொல்லப்பட வேண்டும். இதற்கு சொந்த அனுபவமே பெரிதும் உதவும்.

ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வி நூல்களும், வாழ்க்கைக் கல்வி நூல்களும் ஒன்றையொன்று காப்பியடித்து எழுதப்படுகிறது. இதுவும் எதைப் பார்த்து எழுதப்படுகிறது என்றால், காப்பியடித்து எழுதப்படும் ஆராய்ச்சி நூல்களைப் பார்த்து, காப்பிடியடித்து எழுதப்படுகிறது. இக்காப்பித் திருட்டுக்கான உரிமை ஆசிரியருக்கே அல்லது பதிப்பகத்தாருக்கே என்பது  அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொள்ளும் முத்திரை.

ஆனால், காப்பியடிக்கவில்லை; சொந்த அனுபவத்தில் எழுவது போன்ற ஒரு மாயை, திருட்டில் திறமையான அவ்வெழுத்தாளரால், அவரது முன்னுரையில் அல்லது என்னுரையில் மட்டுமல்லாத அதற்காக புகழ் மிக்கவர்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கப்படும் அத்துனை உரைகளிலும் இருக்கும். ஏனெனில், இவைகளைப் பார்த்துதானே, நாம் நூல்களை வாங்குகிறோம்.

ஆம்! ஒரு நூலுக்கான அணிந்துரையை, ‘‘அந்நூலின் ஆசிரியர் அல்லது பதிப்பாளர் தனக்கு நன்கு பரிச்சயமான அன்பர்கள் அல்லது நண்பர்கள் மற்றும் பிரபலங்களிடம்தாம், வாங்குவார்கள்’’.

ஆதலால், அவ்வன்பர்கள் மற்றும் நண்பர்கள், தனது நண்பரின் நூலைப்பற்றி, ஏதாவதொரு பெயரில், வெகுவாக பாராட்டித்தாம் உரையை அளிக்க முடியும் என்கிற கட்டாயம் ஏற்படுகிறது.  மேலும், இதில் உள்ள சில வெற்றுச் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் இங்கு விவரிக்க முடியாத அளவிற்கு அசிங்கமானவை என்பதை மேற்கோள் சங்கதிகள் மூலம் நீங்களே புரிந்து கொள்ள முயல வேண்டும்.  

எத்தனை நூல்கள் வாங்கினீர்கள், அதன் மூலம் என்னென்ன அறிவை வளர்த்துக் கொண்டீர்கள், அதனை பயன்படுத்தி என்ன சாதித்தீர்கள் என சிந்தித்தால், நான் சொல்லும்  இந்த உண்மைகள் எல்லாம் புரியும் என்பதை விட, உங்களின் இயல்பான சிந்தனை திறன் கூட மழுங்கியிருக்கிறது என்பதும் உங்களுக்கு புரிய வரும். எப்படி மழுங்காமல் இருக்கும் என்பது நான் கூடுதலாக உங்களுக்கு தொடுக்கும் கேள்வியும் ஆகும்.

இக்கேள்விக்கான பதிலை விளக்க பதிப்பாளர்களின் கொள்கையில்லா கொள்ளையை, புத்தக கண்காட்சிகளில் நீங்களே கண்கூடாக பார்க்கும் விசயத்தை முன்னிருத்திச் சொன்னாலே போதும் என நினைக்கிறேன்.

புத்தக கண்காட்சிகளின் முக்கிய நோக்கம், அறிவுத் தேடல் இருப்பவர்களை, அலைய விடாமல் ஒரே இடத்தில் அவர்களின் தேடலுக்கு விடை கிடைக்கச் செய்யத்தானே! இத்தேடல் எந்த நூலில் வேண்டுமானாலும் கிடைக்கலாம் அல்லவா?

ஆனால், புத்தக கண்காட்சியை நடத்தும் வெளியீட்டாளர்கள், தங்களின் பண பலத்தால், காவல்துறையை சரி கட்டி, அப்புத்தக கண்காட்சி நடத்தும் இடத்திற்கு வெளியே விற்கப்படும்  பழைய நூல் விற்பனையாளர்களை எல்லாம், தங்களின் விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி விரட்டியடித்து விடுகிறார்கள்.

இதுபோன்ற செயல்பாடுகளில் இறக்கும் பதிப்பாளர்களுக்கும், காவல்துறைக்கும் வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அடிப்படை அறிவே இல்லை என்று சொல்லுவது மிகவும் சாலப் பொருத்தமாக இருக்கும்.

பதிப்பாளர்களின் உண்மையான நோக்கம் உங்களின் அறிவுக்கான தேடலே; மாறாக, அவர்களுக்கான பணத்தேடலே அல்ல என்றால், அவர்கள் பழைய புத்தகங்களை விற்பவர்களுக்குதானே முன்னுரிமை தர வேண்டும்? நீங்கள் தேடும் நூல் பழைய நூல் கடையில் கிடைக்காத போது, உள்ளே வந்து புது நூல்களை வாங்கிச் செல்லுங்கள் என்றல்லவா கடைகளை கட்டமைக்க வேண்டும்??

ஆம்! பழைய நூல்கள் எல்லாம் யாருடையது?

நிச்சயமாக அதனை விற்பனை செய்யும், அவ்வியாபாரிகளுடையது அல்லவே!

மாறாக, இதே பதிப்பாளர்களால் முன்னர் அச்சடிக்கப்பட்டு, விற்கப்பட்டு பணம் பண்ணப்பட்டதும், பார்க்கப்பட்டதும், படிக்கப்பட்டதும் வேண்டாம் என தூக்கியெறியப் பட்டது தானே?

இப்படி, ஏற்கனவே அச்சிட்ட விற்ற அந்நூல்களே குப்பையில் கிடக்க மேன்மேலும் அதே நூல்களை அல்லது அவைகளில் இருந்து காப்பியடிக்கப்பட்ட நூல்களை அல்லது  புதிது புதிதாக நூல்களை வெளியிட வேண்டிய வெளியிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

இந்நூல்கள் உபயோகமற்றது என்கிற நிலையில், நீங்கள் தூக்கிப் போடும் அல்லது எடைக்கு போடும் நூல்களை, கொஞ்சமாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சுயநலம் கலந்த  பொதுநல அக்கறையில், அவைகளை தூசு தட்டி, கிழிசல்களை ஒட்டி, பல மாதங்கள், வருடங்கள் பாதுகாத்தும், சுமந்தும் விற்பனை செய்து, எழுத்தாளர்களின் / பதிப்பாளர்களின் படைப்புகளுக்கு மறு உயிரோட்டம் கொடுப்பதை தடுக்க பதிப்பகத்தார்களுக்கு என்ன அறுகதை இருக்கிறது? என்பதை அந்நூல்களின் வாசகர்களாகிய நீங்களே நினைத்துப் பார்க்க வேண்டும். 

அதனால்தான், நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்கள் உங்களுக்கு பயன்படாத போது, அதனை அப்படியே திருப்பி அனுப்பி விட்டு, செலுத்திய நன்கொடையைப் பெற்றுக் கொள்ள அறிவுருத்தி உள்ளோம். ஆயினும், ஒருவர் கூட அப்படிச் செய்யவில்லை. இதுதான் நூல்களின் வெற்றி தவிர,  இத்தனை கோடிக்கு நூல்களை விற்றோம் என்பதே அல்ல!  

இப்படி எந்தவொரு பதிப்பகமாவது துணிந்து சொல்ல முடியுமா?? சொல்ல வேண்டும் அல்லது வேறு தேவையான நூல்களை மாற்றி எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இதற்கான சட்ட விதிகள் எல்லாம் கொண்டு வரப்பட வேண்டும். 

இப்பழைய புத்தக விற்பனையில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம், கனிசமான மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டு, இயற்கையும், சுற்றுப்புறச் சூழலும், உயிரினங்களின் ஆரோக்கியம் சிறிதாவது காக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

இவைகளை எல்லாம் சிந்திக்காத இப்பதிப்பாள மடையர்கள் வெளியிடும் நூல்கள் எப்படி உங்களின் அறிவை வளர்க்க உதவும். மாறாக, அவர்களுக்கு மழுங்கியிருப்பதைப் போன்றே மழுங்கத்தானே செய்யும்?

நான் மரம் நடுகிறேன் பாருங்கள் என்று யாரோ வெட்டிய குழியில், வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, யாரோ வளர்த்து கொடுத்த செடியை நோவாமல் நட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை ஊடகங்களில் பார்த்து இருப்பீர்கள்.

நாம் நடுவது மரமல்ல; பிற்காலத்தில் மரமாக வளர்வதற்கான செடியே என்பது கூட தெரியாமல், அதனை மரம் நடுவிழா என்கிறார்கள்.  இதேபோன்றே நீங்களும் ஆளுக்கொரு மரம் வளருங்கள் என்று பிரச்சாரம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், அதில் பிரபல எழுத்தாளர்களின் பங்கும், அச்சு ஊடகங்களின் பங்கும் மிகமிக அதிகமாக இருக்கும்.

ஏனெனில், நீங்கள் நட்டு வளர்த்தால்தான், அவர்கள் அதனை வெட்டிச் செய்யும் வெட்டி வேளையில் கூட, உங்களிடம் இருந்தும் சுரண்ட முடியும். ஆனால், இந்த சூட்சம ரகசியம் புரியாமல் பலரும், இதற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். அந்தோ பாவம்!

தனது எழுத்துக்கள் மூலம் சமூதாயத்தை சீர்த்திருத்த வேண்டிய, மிக முக்கியப் பங்கில் உள்ள கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர்கள் தங்களின் ராயல்டி மற்றும் இன்ன பிற காரண காரியங்களுக்காக இதுபோன்ற சமுதாய அவலக் கூத்துக்களை கண்டும், காணாமல் இருப்பது எப்படி நியாயமாகும். இவர்கள் எப்படி சமூக சீர்த்திருத்தவாதிகள் ஆவார்கள் என்கிற கேள்விகள் தான் இயல்பாக எழுகின்றது.

இறுதியாக, பதிப்பாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட இயற்கை வளம் மற்றும் உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, மறு கொள்ளைக்கான மூலதன முயற்சியே அவ்வப்போதும், ஆண்டுதோறும், ஆரம்பரமாகவும் நடத்தப்படும் புத்தக கண்காட்சிகள்.

இது ஒருபோதும் உண்மையாகாது என்றால், இவர்களின் ஆரம்பர அரங்குகளுக்கு முன்பாகவே, இவர்களின் புத்தகங்களை பாதுகாக்கும் பழைய புத்தக வியாபாரிகளுக்கென்று தனியாக அரங்கம் அமைத்து கொடுக்கட்டும். இங்கு கிடைக்காத புத்தகங்களை, இவர்களின் புது அரங்குகளில் மக்கள் வாங்கி கொள்ளட்டுமே! இதை யார் தடுக்க முடியும்?

எவ்வளவுக்கு எவ்வளவு பழைய நூல்களை தேடிப்பிடித்து படிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அந்நூலின் மற்றும் உங்களது தேடலின் அசல் கருத்துக்களை படிக்கிறீர்கள் என்பது, நுட்பமான வாசகர்களுக்கு மட்டுமே புரியும்.  

இப்பொழுது அவரவர்களே (நானுந்தான்!) எழுதுவது போல, 60 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அவர்களே எழுதமாட்டார்கள். அவர்களின் திறன் அறிந்து பல ஒன்றாக கூடிச் சென்று எழுத வலியுறுத்துவார்களாம்.

அதன் பின்னரே அவரும் தன் திறன் அறிந்து எழுதுவாராம். ஏனெனில், இப்போது பரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்வதுபோல, அப்போது நூல்களையும் அதுபற்றி நன்கு அறிந்தோர் முன்னிலையில் சபையில் அரங்கேற்றம் செய்ய வேண்டுமாம்.

அப்போது அந்த நூலில் உள்ள செய்திகளைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது இயற்றியவரின் (எழுதியவர்) பொறுப்பு. ஆகையால், மிகுந்தப் பொறுப்புணர்வோடும், உண்மையோடும் நூல்களை எழுதி இருக்கிறார்கள்.

இந்த விவரங்களை எல்லாம் 60 வருடத்துக்கு முந்தைய நூல்களில் அச்சிடப்பட்டு இருக்கும். ஆகையால் நீங்களே படித்தாலும் அறியலாம்.

இப்பொழுது இதெல்லாம் கிடையாது என்பதால், யார் வேண்டுமானாலும், என்ன குப்பையை வேண்டுமானாலும் திருடி தொகுத்து நூலாக்கி விடலாம். இப்படித்தான் பெரும்பாழான நூல்கள் வெளி வருகின்றன.

இதெல்லாம் சரிங்க, சிறந்த நூல்களை தேர்ந்தெடுக்க வழி என்ன என்கிறீர்களா?

ஒரு நூல் நம் தேடலுக்கான விடைத்தருமா என்பதை, இரத்தினச் சுருக்கமாக விளக்குவதே அந்நூலின் ஆசிரியர் உரை. ஆகையால், ஆசிரியரின் உரையைப் படித்து, அந்த நூலை அவரெழுத தேவையான அனுபவம் இருக்கிறதா என்பதை யோசித்து வாங்குங்கள்.

நூலை தேர்ந்தெடுத்து வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், அந்நூல் சொந்தமாக எழுதப்பட்டதா அல்லது பல நூல்களில் இருந்து திருடப்பட்டதா என்பதை சரி பார்க்க வேண்டும். இதில் மேற்கோள் காட்டுவதற்காக சொல்லப்படும் சங்கதிகள் ஒருபோதும் திருட்டில் அடங்காது என்பதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனை சரிபார்ப்பது மிகமிக எளிது. அந்நூலின் இறுதி பக்கத்திற்கு சென்றால், இந்நூலை எழுத உதவிய நூல்கள் என குறைந்தது பத்து, பதினைந்து நூல்களின் பட்டியல் இடப்பட்டிருக்கும். அப்படி இருந்தால், எடுத்த எடுப்பிலேயே இது பல்வேறு நூல்களில் இருந்து திருடி எழுதப்பட்டது என்பதை புரிந்து கொண்டு, வேண்டாம் என ஒதுக்கி விட வேண்டும்.

இதுபோன்ற பட்டியலிடப்பட்ட நூல்கள் பெரும்பாலும், கூடங்குளம் அணு உலை, ராமர் பாலம் போன்ற, பொதுமக்களால் எது உண்மையென எளிதில் உணர முடியாத சர்ச்சைக்கு உரிய சங்கதிகளில்தாம் இருக்கும். ஆதலால், ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு தரப்புக்குமே லாபம்தான்.  

இவ்வளவு வெளிப்படையாகவே பட்டியல் போடுகிறார்கள் என்றால், ‘‘எளிதில் கண்டு பிடித்து விடுவோம் என்பது தெரியாமலா போடுகிறார்கள்’’ என நீங்கள் நினைத்தால், பலருக்கும் இதுபற்றி தெரியாது என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் அந்நூலால் பிரச்சினை ஏதும் எழுந்தால் அல்லது யாராவது கேள்விகள் கேட்டால், பட்டியலிடப்பட்டுள்ள நூலில் இருந்ததைத்தான் நான் சொன்னேனே தவிர, ‘நானாக எதுவும் சொல்லவில்லையே’ என தப்பிக்கவும் வழியுண்டு தானே? 

இதைத்தான் கவிப் பொய்யர் வைரமுத்துவும் செய்துள்ளார் என்பதற்கான செய்தியை ஆதாரமாக கொடுத்து உள்ளேன். 

கவிப் பொய்யர் வைரமுத்து வாசித்த, ‘‘தமிழை ஆண்டாள்’’ கட்டுரை விமர்சனத்துக்கு உள்ளானது.

கட்டுரை என்பது சுயமாக எழுதப்பட்டதாகவே இருக்க வேண்டும். தன் கருத்துக்கு வலுவூட்ட மேற்க்கோள் காட்டுவதாக இருந்தால், அது தன்னைவிட உயர்ந்தவர்களுடையதாக இருக்க வேண்டும். 

ஆனால், இதுகூட தெரியாத கவிப் பொய்யர், ஆண்டாளின் சிறப்பை சொல்வதாக சொல்லிவிட்டு, ஆண்டாளைப் பற்றி அமெரிக்க ஆய்வு நூல் ஒன்றில் எதிர்மறையாகச் சொல்லப்பட கருத்தை முட்டாள் தனமாக கட்டுரையில் எழுதி விட்டார்.


இக்கருத்து, கவிப் பொய்யர் தனது வருத்தத்தில் குறிப்பிட்டு இருப்பதுபோல, ‘‘எப்படி ஆண்டாளின் பெருமையைச் சொல்வதாகும்?!’’ மாறாக, எதற்கு எதை மேற்க்கோள் காட்ட வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாத அடிமுட்டாளே ஆகும்!!

இப்படி வருத்தம் தெரிவித்ததற்கு காரணங்கூட, இப்பிரபலங்களின் எதிர்ப்புதான்! கவிப் பொய்யரின் ஒப்புதல் நமக்கு வாக்குமூலம். அவருக்கு மற்றவர்களிடம் இருந்து தப்பிக்கனுமே!!

இதோடு, அக்கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழின் சார்பாகவும் மன்னிப்பு கோரப்பட்டு உள்ளது.


திருடி எழுதப்பட்ட ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நூல்களில், உதவிய நூல்கள் பட்டியலை ஒருபோதும் பார்க்கவே முடியாது. காரணம், இதெல்லாம் நான் உணர்ந்து எழுதியது என்றும், உங்களுக்கு அந்த ஞானம் வரும் போது இது புரியும் என்று ஒரேயடியாக புளுகி விடுவார்கள்.

இப்படி எத்தனையோ வகையான புத்தகங்கள் வெளி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இப்போது இணையத்தில் எதைப்பற்றி தட்டினாலும், அது தொடர்பான பல்வேறு விபரங்களை எவ்வித அலைச்சலும் இன்றி, எளிதாக எடுத்து விட முடிகிறது என்பதால் திருட்டு எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இவைகள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக உங்களுக்கு சொல்ல இயலாது என்பதால் நீங்கள்தாம் எச்சரிக்கையோடு நூல்களை தேர்வு செய்து வாங்க வேண்டும்.   

எனது விழிப்பறிவுணர்வுகள் எல்லாம் திருட்டு எழுத்தாளர்களில் உலகமகா திருடர்களாக முன்னிலை வகிப்பவர்கள், அறிவு வறுமையிலும் பெருமை தேடும் வக்கீல்களும்; நிதிபதிகளைப் பற்றியதுமே ஆகும்! பதிப்பகங்களுக்கு இவர்களே சட்ட ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும், நீங்கள் இந்நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

சமுதாய நலன்களுக்காக மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு மொழிகளில் கொண்டு வரப்படும் மக்களுக்கான சட்டங்களை, அப்படியே காப்பியடித்தும், தத்தமது தாய்மொழிகளில் அப்படியே மொழி பெயர்த்து எழுதுவார்கள். கூடவே, தேவைப்படும் இடங்களில் தங்களுக்கு தெரிந்த, நிதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளின் சுருக்கத்தை குறிப்பிட்டு விடுவார்கள்.  

அதாவது, ‘‘ஐ அம் ரீடிங் தி புக்ஸ் நீதியைத்தேடி... ஆர்த்தர் ஆப் வாரண்ட் பாலா!’’ என்று ஆங்கிலத்தில் ஒரு சட்ட வாக்கியம் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் இதனை, ‘‘நான், வாரண்ட் பாலா எழுதிய நீதியைத்தேடி... நூல்களைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்!’’ என்றுதானே மொழி பெயர்க்க வேண்டும்.

ஆனால் இவர்களோ, ‘நான் படித்துக் கொண்டு இருக்கிறேன், நீதியைத்தேடி... நூல்களை, வாரண்ட் பாலா எழுதியது என்றோ அல்லது நான் படித்துக் கொண்டு இருக்கிறேன், வாரண்ட் பாலா எழுதியுள்ள நீதியைத்தேடி... நூல்களை’ என்றோ அவர்களுக்கே புரியாமலும், அப்படியே புரிந்தாலும் கூட, வாசகர்கள் யாருக்கும் எளிதாக புரிந்து, சட்ட விழிப்பறிவுணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்கிற உள்நோக்கத்தோடே எழுதுவார்கள்.

இதுபற்றி விளக்கம் கேட்டால், சட்டத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல் இருக்குங்க... அதெல்லாம் உங்களுக்கு புரியாது... சட்டத்தில் போட வேண்டிய இடத்தில் முற்றுப்புள்ளி, கமா போன்றவைகளை போடாமல், மாற்றி போட்டு விட்டால் அர்த்தம் அடியோடு மாறி விடும் எனவும், என்னமோ இவர்களே இம்மியும் பிறழாது சட்டத்தை மதித்து நடப்பது போலவும், காப்பது போலவும் அங்கலாய்ப்பார்கள்.

சட்ட நூலே இப்படியென்றால், நிதிபதிகள் வழங்கும் செல்லாத தீர்ப்புகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  மொழி பெயர்ப்பில் தவறு நேர்ந்து விட்டால், நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என பயங்கர பீலாவெல்லாம் விடுவார்கள். பீலாவிட இவர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? அதெல்லாம் ரத்தத்திலேயே ஊ(நா)றிப்போன ஒன்றுதானே!

ஒரு வக்கீல் பிறமொழிகளில் இருந்து தமது தாய்மொழியில் மொழி பெயர்த்து எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே மொழியில் வேறு ஒருவரும் எழுதினால், முதல் திருடரிடம் இருந்து முற்றிலும் திருடப்பட்டதுதாம் இது என்பது தெரியாமல் இருக்க, ‘‘ஒருவர் ‘சென்றான்’ என்று எழுதியிருக்கும் இடங்களில் எல்லாம் மற்றவர், ‘போனான்’ என்று எழுதுவார்’’. அவ்வளவே. இது ஒரு உதாரணத்துக்கு தான்.

இப்படிப்பட்ட கூத்துகள் பெரும்பாலும் சட்டத்தை வரச் செய்யும் வக்கீல்களின் வரைவுக் குழுவில் ஆரம்பித்து, தீர்ப்பு வரை தொடர்வதால்தாம், சட்டம் அவர்கள் உட்பட எல்லோருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதெல்லாம் எனக்கு எப்படி புரிகிறது என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

அரசு இயற்றிய சட்டத்திற்கும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும், அதை அப்படியே அல்லது மொழி பெயர்ப்பை நூலாக எழுதியவர்கள் அல்லது வெளியிடுபவர்கள் எப்படி காப்புரிமை கொண்டாட முடியும். ஆனாலும், நம்மை கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்கிற எண்ணத்தில் காப்புரிமை தங்களுக்கே என போட்டுக் கொள்கிறார்கள், பொய்யர்கள்.

சரி, இனி சட்ட நூல்களை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.

சட்டம் குறித்த நூல்கள் அல்லது மொழி பெயர்ப்பு நூல்கள் என்றால், ஒன்று முதல் பிரிவுகள் வரிசையாக இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதை சோதித்து அறிந்த பின்னரே, வாங்க வேண்டும். ஏனெனில், சட்ட நூல்களை எழுதும் வக்கீல்களும், நீதிபதிகளும் தங்களுக்கு பாதகமான, குறிப்பாக தாங்கள் வாதாட தடை விதிக்கப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளை எழுதாமல் மறைத்து விடுகிறார்கள்.

உண்மையானதொரு உதாரணமாக சொல்லப் போனால், என்னைப் போன்ற சட்டப்படிப்பு படிக்காத, பார் கவுண்சிலில் பொய்யராக பதிவு செய்து கொள்ளாத, ஆனால் சட்டத்தில் புலமையுள்ள நபர்களை மற்றவர்களுக்காக வாதாட அனுமதிக்க வேண்டும் என்கிற வழக்கறிஞர்கள் சட்டம் 1961 இன் பிரிவு 32 ஆனதும் பொய்யர்களால் எழுதப்படும் நூல்களில் இருக்காது.

தொழிற்தகறாறு சட்டம் 1947 இன் பிரிவு 36 இல் நான்கு உட்பிரிவுகள் உண்டு. இதில் மூன்றாவது உட்பிரிவு, ‘‘வக்கீல்கள் தொழிலாளர் தொடர்பான வழக்குகளில் வாதாட தடை விதிக்கிறது. நான்காவது உட்பிரிவின்படி, வழக்கு தொடுக்கும் தொழிலாளி, எதிர்தரப்பில் வக்கீல் ஆஜராக ஆட்சேபனை செய்யாவிட்டால், நீதிமன்றம் அனுமதிக்கலாம் என்று உள்ளது’’. இதனை எனது தொழிற்தகறாறு வழக்கொன்றில் நிலைநிறுத்தினேன்.

ஆனால், பொய்யை மூலதனமாகவும், திருட்டை தொழிலாகவும் செய்யும் வக்கீல்களும் நீதிபதிகளும் இவைகளை நூல்களில் எழுதாமல் மறைத்து விடுகிறார்கள். தொழிலாளிகளின் முதலாளிகளான தொழிற்சங்க பிரதிநிதிகளும் கூட கண்டு கொள்வதில்லை. நீங்கள் விழிப்பறிவுணர்வோடு  இருந்தால்தாம். இல்லையென்றால் எல்லோருமே கூட்டு களவானித்தனம்தான் செய்கிறார்கள்.

இதேபோல, குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13 இன்படி, ‘‘கணவன் மற்றும் மனைவி இருவருமே வக்கீல் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. விதிவிலக்காக நீதியின் நலனை முன்னிட்டு, நிதிபதி தனது உதவிக்காக தேவைப்பட்டால் ஒரு வக்கீலை அமர்த்திக் கொள்ளலாம்’’.

இதுவும் அந்நீதிமன்றத்திற்கு வருகின்ற அத்துனை வழக்குகளிலும், ‘‘கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே வக்கீலைத்தான் நியமிக்க முடியுமே தவிர, தனித்தனியாக நியமிக்க முடியாது. இப்படி நியமிக்கப்படும் வக்கீலுக்கு மாநில அரசே கூலி வழங்க வேண்டும்’’ என  சட்டப்பிரிவு 23(2)(ஈ) இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், குடும்ப நீதிமன்றங்களில் துக்கத்திற்காக கூடும், காக்காய்கள் போல வக்கீல்கள் கூட்டத்தை காலையில் பார்க்கிறோம். ஆனால், காக்கா கூட்டத்தில் கல் எறிந்தது போல, இந்த காக்காய்கள் நீதிமன்றம் ஆரம்பித்த அரை மணி நேரத்திற்கெல்லாம் வாய்தா வாங்கி கொண்டு கலைந்து விடுகின்றன என்பதையும் பார்க்கிறோம்.

எனது சட்ட ஆராய்ச்சியில், வக்கீல்கள் எந்தவொரு வழக்கிலுமே சட்டப்படி வாதாட முடியாத அளவிற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தடையிருக்கிறது. ஆனால், ‘‘பொதுமக்களிடம் போதுமான சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால், வக்கீல்களின்பாடு படுகொண்டாட்டம் ஆகவும், சமுதாயத்தின்பாடு படுதிண்டாட்டம் ஆகவுமாக, நெடுங்காலமாக இருந்து வருகிறது’’.

இதனை என்னால் முடிந்த அளவு சீர்த்திருத்த முயன்றுள்ளேன். ஆனால், இச்சீர்த் திருத்தங்கள் எல்லாம் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்கிற பழமொழி போல, வக்கீல்களும் நிதிபதிகளும் நவீன திருடர்களாக மாறி வருகின்றனர்.  குடும்ப நீதிமன்றங்களில் இது கண்கூடாகவே தெரிகிறது.

இதுவும், நமக்கு கிடைத்த வெற்றியே! ஆராய்ச்சியின் வெற்றி மைல் கல்லே!! என்றாலும், வக்கீல் படிப்பை ஒழித்துகட்டும் வரை சமுதாயத்திற்கு ஓய்வு கிடையாது. வெற்றியாகவும் கருதக்கூடாது.

ஏனெனில், வக்கீல்கள் எப்படி தங்களின் பிழைப்புக்கு தக்கவாறு சட்ட விதிகளை மறைத்து எழுதும் அவலம் நடக்கிறதோ, அதுபோலவே இந்திய அரசும், தங்களின் பிழைப்புக்காக இந்திய அரசமைப்பில் சேர்த்து எழுதும் அவலமும் அறங்கேற்றப்பட்டது. அது என்ன, என்ன ஆனது என்பதுபற்றியும் சமூகம் இனியும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் கஷ்டப்பட போவது, நாம் மட்டுமல்ல; முச்சந்தியில் நிற்கப்போவது நமது சந்ததிகளும்தாம் என்பது பற்றி, திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்...? என்கிற தலைப்பில் கட்டுரை விரைவில் வெளிவரும்.  

சட்டப்பிரிவுகள் வரிசையாக சொல்லப்பட வேண்டும் என்பது ஒருபோதும் சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களுக்கு நிச்சயம் பொருந்தாது.

ஏனெனில், இது சட்டத்தின் அம்சங்களைப் பற்றி சிறப்பான முறையில், நன்றாக புரியும்படி தத்தமது பாணியில், மேற்சொன்ன தொழிலாளர் மற்றும் குடும்ப நீதிமன்றத்தில் வக்கீல்களின் பங்கு பற்றி சொல்லியுள்ளது போல, சட்டத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்து நிறைகுறைகளை ஆதரித்தும், விமர்சித்தும் எடுத்துரைப்பதாகுமே தவிர, சட்டத்தை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக எழுதுவது கிடையாது.

மேலும், ஒன்றுக்கும் உதவாத உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளை சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களில் மேற்குறிப்பாக காட்டியிருக்க கூடாது. ஏனெனில், விதிவிலக்கான ஓரிரு சமயங்கள் தவிர மற்றபடி, சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு சொல்லப்படுகிறதே தவிர, தீர்ப்பின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப் படுவதில்லை.

ஆனால், நியாயம்தான் சட்டம் என்கிற கோட்பாட்டிற்கு இணங்க அமலில் இருக்கும் சட்டத்துக்கு புறம்பாக, நீதிமன்றங்களால் தீர்ப்புரைக்கப்பட்டால், அதுபற்றி அவசியம் விளக்க  வேண்டும். அப்போதுதான் நிதிபதிகளின் அநீதிகள் வாசகர்களுக்கு நன்கு புரியும்.

இறுதியாக சரிங்க, உங்களைப் போல இத்தவறுகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்து, விலைக்கு வாங்க எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டுமே... இதெல்லாம் சாத்தியமா...

ஆதலால், இது போன்ற முறைகேடுகளை தடுக்க சட்டப்படி என்ன செய்யலாம் என்று கேள்வி உங்களுக்கு எழுந்தால், நாம் வாங்கும் பொருட்கள் எப்படி தரம் குறைவானதாகவோ அல்லது குறைபாடு உள்ளதாகவோ இருக்கும் போது, அதனை திருப்பித் தந்து பணத்தை பெறுகிறோமோ அல்லது வேறு மாற்றிக் கொள்கிறோமோ அதுபோல நூல்களையும் செய்யும் நிலை வரவேண்டும். பதிப்பாளர்கள் ஏற்காத போது, சேவை குறைபாடு என வழக்கு தொடக்க வேண்டும்.

ஆனால், இவ்விரண்டு நிலைகளும் இதுவரை வந்தாக தெரியவில்லை. இரண்டாவது நிலை வரும் போது, நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் கருப்பு அங்கி (கோட்டு) சாதியினரான பொய்யர்களையும், கொள்ளையர்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆக, போகப்போக சட்டத்தை தெரிந்து கொள்வதில் இருந்து நீங்கள் தப்பவே முடியாது. தவறினால், நீங்களே தவறி விட்ட (உயிரோடு இருந்தும் இல்லாத) நிலைதாம்! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, January 10, 2013

அவரவர் கடமையும்; கடைமையும்...


இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிதான் ஒழிக்கப்பட்டுள்ளதே ஒழிய, அவர்களின் பழக்க வழக்கங்களும், அடிமைத் தனமும் அப்படியேத்தான் இருக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆங்கிலேய அடிமை அரசு என்கிற நிலையில் இருந்து, இந்திய குடியரசு என்று அரசியல் கட்சிகள் மூலமாக ஆட்சிதான் மாறி இருக்கிறதே ஒழிய, காட்சிகள் பலவும் மாறவில்லை.

ஆங்கிலேயன் தனது அடிமை அரசாங்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஏதுவாக, அவனது ஊழியர்களுக்கு சட்டத்தில் இருந்து சலுகை காட்டினான். அதாவது 1860 ஆம் ஆண்டு ஆங்கிலேயனால் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தில் அரசு ஊழியர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் பற்பல கொண்டு வரப்பட்டிருந்தாலும், அவைகளை எல்லாம் அவ்வளவாக நடைமுறைப்படுத்தியது இல்லை.

இதையேத்தான் நமது மத்திய மாநில அரசுகள் செய்கிறது என்றால், ஆங்கிலேய அரசுக்கும், இந்திய குடியரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

நாட்டில் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதில் மக்களாகிய நமக்கு ஊதியமில்லாத கடமையாக இருக்கிறது என இந்திய அரசமைப்பு கோட்பாடு 51அ வலியுறுத்துகிறது.

ஆனால், இக்கடமையை செய்வதற்காக நமக்கு அரசாங்கம் கூலியாக எதை தரும், எதை தராது என ஆராயப் போனால் அதற்காக ஒரு கட்டுரையே எழுத வேண்டியிருக்கும். ரத்தின சுருக்கமாக சொல்லப் போனால், உண்மையான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாது, ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றினால், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும்.

வழக்கில் சிக்கிச் சீரழிந்து, சின்னாபின்னமாகி, மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, விபச்சார வக்கீல்களிடமும், நீதிபதிகளிடமும் போராடி விடுதலையாகி வெளியில் வரும் போது அறுபது வயதை கடந்திருந்தால், உங்களது விலை மதிப்பு மிக்க உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு முதியோர் உதவித் தொகை என்கிற பெயரில் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதிலும், இதை கொடுக்க வரும் அஞ்சல் ஊழியருக்கு லஞ்சப் பிச்சை போட வேண்டும்.

ஆனால், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரம் பெற்ற பொது ஊழியர்கள் மற்றும் நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் என அனைவருக்கும் கடைமையைச் செய்வதற்காக சம்பளம் என்கிற பெயரில் நமது வரிப்பணத்தில் இருந்து கூலியும், அதிகபட்டமாக எத்தனை வருடங்கள் உட்கார்ந்து நாற்காலியைத் தேய்த்தார்களோ, லஞ்சப்பிச்சை எடுத்து, எடுத்து உழைத்து களைத்தார்களோ, அரசுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஜால்ரா போட்டார்களோ அத்தகுதிக்கு தக்கவாறு பணி நீட்டிப்பும், இதற்கு உ(ய)ரிய மதிப்பு ஊதியமும் கொடுப்பார்கள்.

அப்படியில்லாத போது அரசுக்கு ஜால்ரா அடிக்க லாயக்கற்றவர் என்கிற தகுதிக் குறைப்பாட்டின் கீழ் ஓய்வு கொடுத்து இறுதியாக வாங்கிய கூலிக்கு தக்கவாறு ஓய்வூதியம் என்கிற பெயரில் நம் வரிப்பணத்தில் இருந்து மாதாமாதம் ஆயிரக்கணக்கில் பிச்சை போடுவார்கள். வருடத்திற்கு ஓரிரு முறை, விஷேச நாட்களில் கூடுதல் சலுகைப் பிச்சை கிடைக்கவும் வாய்ப்புண்டு. அதேபோல், அமலில் உள்ள அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்கிறதோ அப்போதெல்லாம், இவர்களுக்கான பிச்சை தொகையும் உயர்த்தப்படும்.

இதுமட்டுமல்ல, நாட்டுக்காக இப்படியெல்லாம் கடைமையை ஆற்றிய அவ்வரசு ஊழியர் இறந்து விட்டால், அவரது குடும்பம் நடுத்தெருவில் பிச்சை எடுக்க கூடாது அல்லவா... இதற்காகவே அவ்வூழியரது மனைவிக்கும், அதற்குப்பின் அவர்களது திருமணமாகாத மகளுக்கும் நம் வரிப்பணம் ஓய்வூதியம் என்கிற பெயரில் பிச்சைப் போடப்படுகிறது.

இதனாலேயே, (நோவாமல் நோம்பெடுக்கலாம் என்பதாலேயே) அரசு ஊழியத்திற்கு, தந்தைப் பெரியாரின் கூற்றுப்படி சொல்லப் போனால், ‘‘ஈனத்தொழிலுக்கு’’ கடும் போட்டா போட்டியும், போட்டிக்கு தக்கவாறு அதிகபட்ச லஞ்சப் பிச்சையும் வாங்கப்படுகிறது.

உண்மையில், நாட்டில் அமலில் உள்ள சட்டங்களின்படி, இதிலும் குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பொது ஊழியத்திற்கு வந்தால், எப்படியெல்லாம் தனது கடமையைச் செய்ய வேண்டும், அப்படி செய்யாது போனால் கிடைக்கும் சிறை தண்டனை என்ன என்பது தெரிந்தால், அரசு கோடி கோடியாக கூலி கொடுக்கிறோம் என்று கூவி கூவி கூப்பிட்டாலும் வர மாட்டார்கள்.

ஆம்! அந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரம் பெற்ற ஊழியர்களுக்கான சட்டக் கட்டுப்பாடுகள் மிக கடுமையானதாக இருக்கின்றன என்று நான் சொன்னால், போதிய சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால், உங்களால் நம்ப முடியாது. ஆனால் இதுதான் உண்மை என்பதற்கு உதாரணமாக குறைந்தபட்சம் இந்திய தண்டனைச் சட்டத்தின் ஐந்து பிரிவுகளின் அறிவுறுத்தல்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

1. சட்டப்பிரிவு 119 இன்படி,  குற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் கடமையுள்ள பொது ஊழியர், அக்கடமையில் இருந்து தவறியதால் குற்றம் நடைபெற்றால்,  அந்த குற்றத்துக்கு உரிய அதிகபட்ச தண்டனையில் பாதி தண்டனை விதிக்கப்படும். நடைபெற்ற குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கத்தக்கதாக  பத்தாண்டுகளுக்கு மேற்படாத சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப் படும்.

ஒருவேளை அந்த குற்ற முயற்சி தோல்வியுற்றாலும், அக்குற்றத்துக்கு உரிய உச்சபட்ச தண்டனையில் நான்கில் ஒருபங்கை சிறைவாசமாக அல்லது அபராதமாக அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப் படும்.  

2. சட்டப்பிரிவு 166 இன்படி, பொது ஊழியர் கடமையாற்றும் போது, சட்டப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடக்காமல் போனால், ஓர் ஆண்டு வரை வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

3. சட்டப்பிரிவு 167 இன்படி, பொது ஊழியர் சட்டப்படி உருவாக்க வேண்டிய ஓர் ஆவணத்தை தவறாக உருவாக்கினால், மூன்று ஆண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

4. சட்டப்பிரிவு 168 இன்படி, பொது ஊழியர் எந்த வியாபாரத்திலும், தொழிலிலும் ஈடுபட்டால், ஓர் ஆண்டு வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.  

5. சட்டப்பிரிவு 169 இன்படி, பொது ஊழியர் தனியாகவோ, கூட்டாகவோ எந்த சொத்தையும் வாங்க கூடாது. ஏலம் கேட்க கூடாது. தவறினால், இரண்டு ஆண்டுகளுக்கு  உட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.  வாங்கிய சொத்தும் பறிமுதல் செய்யப்படும்.

இவைகள் இல்லாமல் மேலும் பற்பல சட்ட அறிவுறுத்தல்கள் இருக்கின்றன. இவ்வைந்து பிரிவுகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே பொது ஊழியத்திற்கு சுயநலம் மிக்கவர்கள், சொத்து சேர்க்க நினைப்பவர்கள், ஊழல் செய்வோர் உட்பட பலரும் வரமாட்டார்கள்.

மாறாக, தன்மானமிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் போன்று, நாட்டுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அயராது உழைக்க கூடிய தியாகிகள் மட்டுமேதாம் பொது ஊழியத்திற்கு வருவார்கள். நாடும் குற்றங் குறைகள் இல்லாத, பசி பட்டினி, பிணிகள் இல்லாத சொர்க்க நாடாய் இருக்கும்.  

இதுவரை நாட்டில் நடந்துள்ள கோடான கோடி வழக்குகளில், குறைந்தது பத்து வழக்குகளில் மேற்கண்ட ஐந்து பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆதாரப்பூர்வமாக சொல்ல முடியுமா என்பதே இந்திய நீதித்துறைக்கு நான் விடுக்கும் சவாலான கேள்வி. எடுக்கப்படவில்லை என்றால், என்ன அர்த்தம்?

மகாத்மாவின் கூற்றான ‘‘வக்கீல் தொழிலும், நீதிபதி தொழிலும் விபச்சாரத் தொழில்கள்!’’, தந்தைப் பெரியாரின் கூற்றான, ‘‘பொது ஊழியத்திற்கு வருவோர் மற்றும் வக்கீல்கள் ஈனப்பிறவிகள்!’’ மற்றும் எனது கூற்றான, ‘‘இந்தியாவில் யாருக்கும் அடிப்படையான ஐந்து சட்டங்களே தெரியாது’’ என்பவைகள் முழுக்க முழுக்க உண்மைகள்தானே?

சட்டப்படியான கூலிக்கு மாரடிக்கும் சட்டப் பொறுப்பில் இல்லாத குடிமக்கள், குற்றங்களை புரியும் போது, அதற்காக இந்திய தண்டனைச் சட்டப்படி குற்ற நடவடிக்கையை எடுக்கும் மத்திய மாநில அரசுகள், ‘‘சட்டப்படியான கூலிக்கு, சட்டப்படி மாரடிக்கும் பொறுப்பில் உள்ள பொது ஊழியர்கள், அதற்கு மாறாக குற்றம் புரியும் போது, அவர்கள் மீது சட்டப்படியான குற்ற நடவடிக்கையை எடுக்காமல், துறை ரீதியான நடவடிக்கை என்பது அரசின் கடைமைச் செயல்தானே தவிர, ஒருபோதும் கடமையான செயல் அல்லவே அல்ல’’.

இவைகளைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல், நாங்களும் செயல்படுகிறோம் என்பதை உலகறியச் செய்வதற்காக மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாது போனால், பணியிடை நீக்கம் செய்வது என்பதெல்லாம் வெற்றுச் சம்பிரதாய சடங்குகளே!

ஆனாலும், பொது ஊழியர்களின் கடமை தவறிய செயல்களால், நடைப்பெற்ற கடைமை குற்றத்துக்கான நீதி விசாரணையில், பொதுமக்களாகிய நாம் மேற்கண்ட ஐந்து சட்டப் பிரிவுகளையும் கையில் எடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

கடமை என்பது மிகவும் உயர்வான செயலையும், கடைமை என்பது மிகவும் கீழ்த்தரமான செயலையும் குறிப்பதால் நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய தக்க தருனமிது. 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, January 3, 2013

ஆங்கிலேயனுக்கு பிறந்த நிதிபதிகள்!?ஆங்கிலேயன் நம்மை விட்டுச் சென்று அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், ஆங்கிலேயனின் பழக்க வழக்கங்களை இந்தியர்களான நம்மை விட்டு, அதிலும் குறிப்பாக தமிழர்களை விட்டுப் போவதாய் இல்லை. இல்லையில்லை, தமிழர்கள், புலி வாலை பிடித்த கதையாக, உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு விடுவதாய் இல்லை.

தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா! என்கிற தன்மானச் சொல்லாடல், தமிழன் என்று சொல்லாதேடா; தலை நிமிர்ந்து நிக்காதேடா! என்ற தன்னலமிக்க சொல்லாடலாக மாறி விட்டது. இப்படி சொல்பவன் ஆங்கிலேயனோ, அடுத்த மொழிக்காரர்களோ அல்ல. மாறாக, தமிழர்களே! நீதி வழங்கும் தமிழனே என்பதுதான் தமிழர்களின் தலையெழுத்து!!

மதராஸ் என்பது சென்னை என்று பெயர் மாற்றம் பெற்ற மாநகரமாகி விட்டது. ஆனால், மதராஸ் உயர்நீதிமன்றம் என்பது மட்டும், இன்னும் சென்னை உயர்நீதிமன்றமாக மாறவில்லை.

இம்மன்ற வளாகத்தில், நீதிக்கு இலக்கணமாகவும், நீதியை லட்சியமாகவும் கொண்ட மனுநீதிச் சோழனின் உருவச்சிலையை வைத்துள்ளார்கள். மனுநீதிச் சோழனது வரலாற்றில், கன்றை இழந்த பசு நீதி கேட்க, அதற்கு நீதி வழங்கப்பட்டது என்பது வரலாறு என்பது தமிழர்கள் மட்டுமல்லாது, மற்ற மொழி ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் அறிந்ததே.

மனுநீதிச் சோழனது சிலையை உயர்நீதிமன்றத்தில் நிறுவியதன் நோக்கம், இதேபோல இவ்வுயர் நீதிமன்றமம் நீதிவழங்கும் என்பதை சொல்லாமல் சொல்லுவதற்குதான் என நீங்கள் நினைத்தால், அது மாபெறும் மடத்தனம். 

மாறாக, தமிழனின் பாரம்பரிய மிக்க நீதி வரலாற்றை எடுத்துரைத்து பெருமை பேசிக் கொள்ளத்தான் என நீங்கள் நினைத்தால், இதுவே புத்திசாலித்தனம் என்று நான் சொல்லவில்லை. நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள் சொல்கிறார்கள்.   

ஆங்கிலேயன் உட்பட அனைத்து மொழிக்காரர்களும் தமிழுக்கு அடிமையாகி, பெருமைமிக்க தமிழ்க் காவியங்கள், செய்யுள்கள், திருக்குறள்கள் என அனைத்தையும் தத்தமது மொழிகளில் மொழி பெயர்பதற்காகவே தமிழைக்கற்று, மொழிப்பெயர்த்த காலங்கள் மாறி, இப்போது அவர்களது அற்பமான, அபத்தமான, ஆபத்தான, ஆபாசமான விடயங்களை எல்லாம் பெருமையோடு தமிழில் மொழிப் பெயர்க்கத் தொடங்கி விட்டான், தன்னலத் தமிழன். விளைவு?  

மதம் பிடித்த மதத்தில், சதி செய்யும் சாதியில், ‘‘உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இருப்பது போல, மொழியிலும் வந்து விட்டது. தமிழைப் படித்தவன், படிப்பவன் எல்லாம் தாழ்த்தப்பட்டவன் என்கிற தொனி பற்பல தரப்பிராலும் பரவலாக காணப்பட்டு, தற்போது நீதி வழங்கும் நீதிபதிகளிடம் கூட, எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது’’.

ஆம்! பசு தன் கண்ணீரால் பேசியதையே மனுவாக ஏற்று, தன் மகனை, தானே தேர்காலில் இட்டு, மாட்டுக்கும் & மனிதனுக்கும் சமநீதிதான் என, நீதியை நிலைநாட்டிய மனுநீதிச் சோழன் சிலை அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில், நேற்றைய வழக்கு விசாரணையின் போது, சிவகுமார் என்கிற அடிப்படை சட்ட அறிவு அறவேயில்லாத, கூலிக்கு மாரடிக்கும் அரைவேக்காட்டுத் தமிழ் நிதிபதி, நான் ஒருபோதும் தமிழில் வழக்கை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்றும், இதற்கு காரணமாக இந்திய அரசமைப்பில் இதற்கு வழியில்லை என்றும், ஆதலால், இந்த விவகாரத்தில் மேலும் தேவையற்ற சர்ச்சை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வேறு எந்த நீதிபதியிடமாவது விசாரணை செய்ய கொடுங்கள் என தலைமை நிதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், "நீதி வழங்க மனுவே தேவையில்லை; மாட்டின் கண்ணீரே போதுமானது என்று, தமிழர்களின் தலையாய நீதி முறைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய தமிழனுக்கும், தமிழர்களுக்கும், தாய்மொழி தமிழுக்கும், தன்னலத்திற்காகவே தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறார்'', அறிவு வறுமை மிக்க நிதிபதி சிவக்குமார்.

இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 இன்படி, ‘‘இந்திய குடிமகனாக உள்ள ஒருவர், தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளில் தங்களது தாய் மொழி எதுவோ, அம்மொழியிலேயே மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளிடம் அல்லது அரசின் அதிகாரம் பெற்றவர்களிடம் மனு கொடுக்க உரிமையுண்டு’’.

எனது இக்கோட்பாட்டுக் கூற்றில், உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், மத்திய சட்ட அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ள இந்திய அரசமைப்பின் ஆங்கில ஆக்கத்தினை படித்து அறிந்து கொள்ள, இங்கே சொடுக்கவும்.

இக்கோட்பாட்டின் கீழ் கொடுக்கப்படும் மனு என்ன மொழியில் கொடுக்கப்படுகிறதோ, அம்மொழியிலேயே பதிலும் தரப்பட வேண்டும் என்பதும் உள் அர்த்தமாகும் என்பதோடு, "இக்கோட்பாடு சிறப்பான நெறிமுறைகளின் கீழ் வருவதால், உச்சநீதிமன்றத்தில் கூட, தத்தமது தாய்மொழிலேயே மனு கொடுக்க முடியும்".

ஆனால், இவைகள் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களும், இடைத்தரகர்களும் ஆன வக்கீல்களுக்கும், வக்கீல்களாய் இருந்து நீதிபதிகளான நிதிபதிகளுக்கும் தெரியாது. இவ்வளவு ஏன்?

குடியரசு தலைவருக்கு கூட தெரியாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. ஆனால், இதுதான் உண்மை. ஆதலால்தான், நான் குடியரசுத் தலைவருக்கு தமிழில் அனுப்பிய கடிதத்திற்கு, ஆங்கிலத்தில் பதில் கொடுக்க, அதனை சட்டப்படி ஏற்க முடியாது என அறிவித்ததும் தமிழில் தந்தார்கள். இவ்விரு சங்கதிகளையும் 2004 ஆண்டே நடைமுறைப்படுத்தி உள்ளேன்.

அப்படியானால், அறிவு வறுமை நிதிபதி சிவக்குமாருக்கு,
1. இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 என்ன சொல்கிறது என்பது தெரியாது என்கிறாரா?
2. தமிழ்மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை என்கிறாரா?
3. இவர் இந்திய அரசு அதிகாரத்தின் கீழ் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்கிறாரா?
என்பதுதே, நான் விடுக்கும் கேள்வி. பதில் சொல்வாரா அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நீதிமன்ற அவமதிப்பு என்று நடவடிக்கை எடுப்பாரா... எது வந்தாலும் வரவேற்க நான் தயார்!

இந்திய அரசமைப்பின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆங்கிலத்தைப் போன்றே, தமிழும் சர்ச்சையில்லாத அங்கீகரிக்கப்பட்ட வழக்கு மொழியாக என்ன செய்ய வேண்டும், தமிழை கொண்டு வர வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் தயங்குகிறார்கள், இதில் அவர்களுக்கு உள்ள லாபமென்ன என்பது பற்றிய பற்பல திடுக்கிடும் தகவல்களை
விரைவில் கட்டுரையாக வடிக்க முயல்கின்றேன்.


இவ்விபச்சார தொழிலுக்கு தக்கதொரு விபச்சாரியாக ஆங்கிலத்தை வைத்துக் கொண்டுள்ளனர் நம் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆன ஆனால், ஆங்கிலேயனுக்கு பிறந்து, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்தது போன்ற கற்பனையில் வாழும், நமது ஈனப்பிறவி வக்கீல்களும், நீதிபதிகளும்!

வக்கீல்களையும், வக்கீல்களில் இருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதும் ஒழிக்கப்படும் வரை, நீதிக்கு அநீதியே... சமாதியே... சாபக்கேடே...
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

 • 1. இந்திய சாசனம் 1950
 • 2. நீதிமன்ற சாசனம் 1872
 • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
 • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
 • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)