No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, December 31, 2013

நம்மாழ்வார் நம்மோடே இருக்கிறார்!


Namazhvarஒருவர் வாழும் போது தவித்த வாய்க்கு தண்ணி கொடுக்காதவர்கள், அவர் இறந்தப்பின் வாய்க்கரிசி போட்ட கதையாக, உண்மையான கடமையாளர்களை, அவர்கள் வாழும் போது, சமூகம் அ(வ்வ)ளவாக கண்டு கொள்வதில்லை. ஆனால், அவர்கள் போய் சேர்ந்தப்பின், சகல மரியாதைகளும் வழங்கப்படுகிறது.


இதனால், யாருக்கென்ன பயன் என்கிற கேள்வியும், கூடவே, இக்கடமையாளர்கள் மட்டும் உலகம் உள்ளவரை வாழ இயற்கை வழி செய்யக் கூடாதா... ஆனால், அற்பர்களுக்கு தரும் வாழ்நாளை கூட, இயற்கை கடமையாளர்களுக்கு தராமல், காரியம் கைகூடி வரும் வேளையில் அழைத்துக் கொள்கிறதே என்கிற ஏக்கமும், எண்ணமும் மனதில் நேற்றுவரை இருந்தது. இதே மனநிலையில் உங்களில் பலரும் இருக்கலாம்.  

இந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்த 30-12-2013 அன்றுதாம், இயற்கை விவசாய கடமையாளர் நம்மாழ்வாரும்  இயற்கை எய்தினார். இந்த நூலை எழுதி முடித்த பிறகு, முதல் வேளையாக அவரை சந்திக்க வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, மேற்படி எனது எண்ணங்கள் தீவிரமானது.


அதேசமயம், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற தத்துவத்தின்படி ஆராய்ந்து பார்த்தால், நமது எண்ணங்கள் இயற்கைக்கு முரணாக இருக்கின்றனவே என்றும் தோன்றின. இறுதியில்,


‘நீ செய்ய வேண்டிய கடமைகளை செய்வனே செய்து விட்டாய்; உன்னைப் போலவும், மேலாகவும் இன்னும் பலர் தத்தமது கடமையை ஆற்ற வேண்டியிருக்கிறது. நீ அவர்களுடன் இருந்தால் அவர்கள் களமிறங்கி கடமையை ஆற்ற மாட்டார்கள். உன்னையே நம்பியிருப்பார்கள்.


ஆதலால், நீ என்னிடம் வந்து இளைப்பாறிக் கொள், ஓய்வெடுத்துக் கொள் மகனே. உன்னை நினைத்தே, நீ விட்டு வந்த கடமையை அவர்கள் தொடரட்டும். தேவை ஏற்பட்டால், வேறொரு இளைஞராக உன்னையே (நம்மாழ்வாரையே) கூட, இளமையாக அனுப்பி வைக்கலாம் என்பதே எனது (இயற்கையின்) எண்ணம்.


ஏனெனில், காலம் உள்ளவரை கடமையைச் செய்வதென்பது, என்னைத் தவிர வேறு யாராலும் இயலாததே. இதுவே, நான் உயிரினங்கள் அனைத்திற்கும் வகுத்துள்ள பொது நியதி.


நான் கடமை தவறினால், என்னையே நான் அழித்துக் கொள்கிறேன் என்று, உனக்கு தெரிந்தது எனக்கு தெரியாதா... என்னை காக்க அரும்பாடுபட்டவரை, நானே அரவனைத்துக் கொள்வதில், நீ என்ன அநியாயத்தை கண்டாய்? அற்பர்களுக்கு தரும் வாழ்நாளை கூட, கடமையாளர்களுக்கு தர மறுக்கிறேன் என எண்ணுகிறாயே!


எப்படி வாழக் கூடாது என்பதற்கு அத்தாட்சியாகவே அற்பர்களை உங்களின் கண்முன் வைத்து, அற்புதமான கடமையாளர்களை உங்களின் மனதில் நிறுத்துகிறேன். இப்போது சொல் என்னால், யாருக்கு எ(ண்ண, ன்ன) நட்டம்...’


இதனை இந்நூலில் தெளிவுபடுத்த வேண்டிய நீயே ஏன் இப்படியெல்லாம்.... என்கிற தெளிவானதொரு உதயம், துயிலெழுந்ததுமே தோன்றிற்று. எனவே, நம்மாழ்வார் மட்டுமன்று; ஒவ்வொரு கடமையாளரும் நம்மோடே இருக்கிறார்கள் என்று எனது எழுத்துக் கடமையில் மீண்டும் மூழ்கி விட்டேன்.


வெளிவர இருக்கிற கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலின், கடமையாளர்கள் ஓர் சிறப்பு ஆய்வுக் கோர்வை அத்தியாயத்தில் இருந்து...


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, December 12, 2013

திருநங்கைகள் பற்றி தெள்ளத்தெளிவோம்!
திருநங்கைகள் என்றாலே பலருக்கும் பலவிதமாகவே எண்ணத் தோன்றுகின்றன. ஆனால், அப்படிப்பட்ட எண்ணத்தில் ஒருபோதும் உண்மையில்லாமலும் இல்லை. இந்த அவல நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியது, அவர்களைப் புறத்தே ஒதுக்கி வைத்துள்ள சமுதாயமும், தங்களை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அறுவெருக்கத்தக்க முறையில் நடந்து கொண்ட திருநங்கைகளும்தான்.

காலம் காலமாக கோசா, ஒன்பது, அலி, அரவாணி என்று பல்வேறு தரப்பட்ட அறுவெருக்கத்தக்க பட்டப்பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தவர்கள், திரு = ஆண்மகன், நங்கை = பெண்மகள் என்ற பொருளில் பொருத்தமானதொரு நற்பெயரை வடிவமைத்து தந்துள்ளனர் சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர்கள்.

திருநங்கைகளைப்பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டுமென்றால், ‘‘பிறப்பால் ஆணாக பிறந்து, பாலின உணர்வைப் பெறும் வயதில் குரோமோசோம் குறைப்பாட்டால் மனதளவில் மட்டும் பெண்ணாக உணர்ச்சி மாற்றம் அடைபவர்களே திருநங்கைகள்!’’.

திருநங்கைகளைப் பற்றி தற்போது உங்களுக்கு என்ன வெறுப்பு இருக்கிறதோ அதே நிலையில்தான் நானும் இருந்தேன். அவர்களோடு நெருங்கிப்பழகும் நல்லதொரு வாய்ப்பு சென்னையில் இயங்கி வரும் சமூக தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை மையத்திற்குச் சட்ட விழிப்புணர்வு குறித்து பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக 2006 ஆம் ஆண்டில் சென்ற போது ஏற்பட்டது.

இந்த அரிய வாய்ப்பில் இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் விட்டிடுவேனா?

யானை பலம் என்று பலத்திற்கு உண்மையான உதாரணமாக திகழும் யானைக்குத் தனது பலம் பற்றிய தெளிவானதொரு அறிவு இருந்தால், பாகனின் கட்டளைக்குப் பணியுமா அல்லது மனிதனிடம் பிச்சைதான் எடுக்குமா?

அதுபோலவேதான் திருநங்கைகளுக்கும் தனது பலம் என்ன என்பது தெரியாமல் போய், பலவீனம் என்ன என்பது மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்திருக்கிறது.

வெகு சிலராகவே உள்ள திருநங்கைகளில் வெகுசிலரிடமே உள்ள சமூக சேவையாற்றல், எழுத்தாற்றல், பரத நாட்டிய ஆற்றல், ஊடகங்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஆற்றல் என பல்வேறு பிரபலங்கள் கூட, அப்படியில்லாத தங்களைப் போன்றவர்களின் பலம் என்ன என்பதை ஆராய்ச்சி செய்து, அவர்களின் நல்வாழ்விற்காக அரசுக்குப் பரிந்துரைக்காதது மிகவும் துரதிருஷ்டமான ஒன்றே!

அவர்களுக்கே அவர்கள் மீது அக்கறை இல்லாத போது, நாம் எதற்காக அவர்களைப்பற்றி பேச வேண்டும் என்று தோன்றினால் அது தவறு. ஒவ்வொருவரின் பலவீனம் என்னென்ன என்பது அவர்களுக்குத் தானாகவே தெரியவரும். ஆனால், பலத்தை மற்றவர்கள் சொல்லும் போதுதான் அவர்களே உணர முடியும்.

அதுபோலவே, எனது ஆக்கப்பூர்வமான திருநங்கைகளைப்பற்றிய இவ்வாராய்ச்சியின் முடிவில், திருநங்கைகளால் இம்மானிட சமுதாயத்திற்கு மாபெரும் நன்மையும் காத்திருக்கிறது என்பதனையும் ஆனால், இந்நன்மையை நடைமுறைப்படுத்துவது அரசின் பொறுப்பில்தான் உள்ளது என்பதையும் நீங்கள் உணர முடியும்! உங்களைப் போலவேதான் அரசாங்கமும் உணர முடியும்!!

ஆம்! தற்போது தமிழக அரசு பாலியல் தொழிலை ஒழிப்பது குறித்த ஆலோசனைகளை பொது மக்களிடம் இருந்து கோரியுள்ளது. உங்களுக்கு விருப்பமிருந்தால் panelonsexworkers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்றால், பொதுவாக பெண்களைத்தான் குறிப்பிடுவார்கள். இது தவறு. ஆண்களின் பங்கேற்பு இல்லாமல் பாலியல் தொழில் நடக்க வாய்ப்பே இல்லை. அறிந்தோ அறியாமலோ பெண்களுக்கு மாற்றாக திருநங்கைகளைத் தேடும் ஆண்களும் பரவலாக இருக்கவேதான் செய்கிறார்கள்.

திருநங்கைகள் என்றால், கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் மட்டுமே என்றிருந்த சமூக அவலநிலையை மதிப்புமிக்கதொரு நிலையாக மாற்றி அவர்களுக்கும் -சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சம நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே மனதில் தோன்றியது.

இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களில் ஒரு சிலரையாவது நமது பாணியில் சட்ட ஆராய்ச்சியாளராக்க ஊக்குவித்தேன். ஆனால், பலன் இல்லை.

இவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றத்துக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு விழுப்புரம் கூவாகம் திருவிழாவையொட்டி நடைப்பெற்ற திருநங்கைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவை சட்ட விழிப்புணர்வா? சமூக விழிப்புணர்வா? என்ற பட்டிமன்றத்தில், ‘‘சட்ட விழிப்புணர்வே’’ என்ற அணிக்கு தலைமைப் பொறுப்பேற்று வாதாடினேன்.

அதாவது, நாங்களும் உங்களைப் போன்றே மனிதர்கள்தாம். ஆதலால், எங்களையும் ஆண்கள், பெண்களைப் போலவே மதித்து வாடகைக்கு வீடு கொடுங்கள். வயிற்றுப் பிழைப்புக்கு வேலை கொடுங்கள் என்று சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டிருப்பது என்பது இயலாத காரியம்.

அப்படியே கேட்டும் கிடைக்கவில்லை என்றால் என்ன தீர்வு என்பது கேள்விக்குறிதான். இவைகளுக்கான சட்டத்தைக் கொண்டு வந்து விட்டால், எல்லாமே எளிதாகி விடும் என்ற ஆணித்தரமான வாதத்தை முன் வைத்தேன்.

அதே சமயம் எனக்கு சரி நிகர் சமமாக எதிர் அணியில் பேச நண்பர் திரு.வீ.செ.கருப்பண்ணன் என்கிற ஓய்வு பெற்ற மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் ஆர்வத்துடன், திருநங்கைகளைப் பற்றிய தகவல்களை இணையத்தில் இருந்து சேகரிக்க, ஏற்கனவே நான் வைத்திருந்த ஆய்வு முடிவுடன் புது தகவல்களையும் ஒன்றிணைத்து ஆய்வு செய்து தீர்க்கமான முடிவுக்கு வந்தோம்.

இப்படி செய்ததற்கு மேலும் ஒரு முக்கிய காரணமும் உண்டு. சட்ட ஆராய்ச்சியாளர் என்ற முறையில் நான் வாதாடுவது ஒருபுறம் இருக்க, காவல்துறை அதிகாரி என்ற பொறுப்புணர்வோடு பேசினால் அது குறித்த செய்தி அரசுக்குப் போகும். அரசும் பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கையில், ‘‘சமூக விழிப்புணர்வு’’ என்ற தலைப்பில் அவரையே பேச வலியுறுத்தினேன்.

அவரும் சிறப்பாக பேசினார். திருநங்கைகள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. அதுவும், அத்தோடு சரி! அதன் பின்னர் அவர்களே கூட அக்கருத்துக்களை ஏறெடுத்தும் பார்க்க வில்லை.

இறுதியில், சமுதாயத்திற்காகத்தான் சட்டம்; சட்டமில்லாமல் சமுதாயமும் இல்லை என்று தீர்ப்பும் திருநங்கைகளைப் போலவே இரண்டும் கெட்டான் தனமாகவே எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி நடுவரால் சொல்லப்பட்டது. இதை சொல்வதற்கு ஒரு பட்டிமன்றமா? அதற்கு ஒரு நடுவர் தேவையா?

சமுதாயத்தின் பழுதை நீக்கவல்ல, தீர்க்கவல்ல பாரம்பரியம் மிக்க பட்டிமன்றங்கள் எல்லாம் பொழுது போக்கும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தேடும்,  கூலிக்கு மாரடிக்கும் வெட்டி மன்றங்களாகி விட்டன.

சமுதாயத்தில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்களும் மனிதர்களே, மதிக்கப்பட வேண்டியவர்களே என்ற நிலை மாறி, ‘‘போகப் பொருளாகவும், கேலிக்குரிய நபர்களாகவும், ஆண்களின் பாலியல் உணர்வுகளுக்கு, வித்தியாசமான முறையில் விதம் விதமாக விருந்தளிக்கும் நபர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்’’.

அந்த அளவிற்கு அச்சு மற்றும் ஒளி&ஒலி ஊடகங்கள், தங்களின் அறியாமையாலும், விற்பனைக்காகவும் திருநங்கைகளைப் பற்றி கண்ணும் காதும் வைத்து படிக்கப் படிக்க இனிக்கும் வகையில் முன்சொன்னபடியெல்லாம் அவர்களிடம் நாமும் தவறாக நடந்து கொள்ளலாம் என்கின்ற அளவில் தவறான செய்திகளை துணிந்து வெளியிடுகின்றன.

இதற்கு முக்கிய காரணம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு இருக்கும் திருநங்கைகளால் நம்மை என்ன செய்து விட முடியும்? என்ற மனிதாபிமானம் இல்லாத செயல் என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் அப்படி எழுதுவதெல்லாம் உண்மையா? என்று நீங்கள் திருநங்கைகளிடமே கூட வெளிப்படையாக கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாத மற்றும் தங்களின் சுயநலத்தால் அவர்களே கூட, அதுபற்றி வெளிப்படையாக சொல்ல இயலாத அவல நிலையுமே இன்று வரையிலும் உள்ளது.

திருநங்கைகள் குறித்த எனது ஆய்வில் நானறிந்த உண்மைகள்:

* பிறப்பால் ஆண் மகனாக பிறந்து, குரோமோசோம் குறைப்பாட்டால் பாலின உணர்வைப் பெறும் வயதில், மனதளவில் பெண்ணாக பருவமாற்றம் அடையும் போது அவர்களின் பிறப்பு உறுப்பு மீதே வெறுப்பு உண்டாகி, பின் முறையான ஆங்கில மருத்துவ அறுவை சிகிச்சை அல்லது முன்னோர் அனுபவத்தின் மூலம் உறுப்பை நீக்கி விடுவார்கள்.

* உண்மையான ஆணுக்கு உறுப்பை நீக்கி விட்டால், அவருக்கு அத்தோடு சங்கூதிவிட வேண்டியதுதான். ஆனால், இவர்களுக்கு இவ்விடயத்தில் இறப்பு விதிவிலக்காக இருக்கிறது.

* மனதளவில் பெண்ணுக்குரிய ஆசைகள் இயல்பாகவே வந்து விடுவதால், பெண்களைப் போலவே ஆடை, அலங்காரம் ஆகியவற்றை செய்து கொள்வார்கள். பொதுவாக பெண்கள் ஆடை அலங்காரத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.

* திருநங்கைகளோ ஆண் என்ற உடம்பில், பெண்ணுக்குரிய உணர்வுகளை அடக்கி வைத்திருந்து, அதிலிருந்து விடுதலையடைந்து சுதந்திரமாக பெண் தன்மையை பிரதிபலிப்பதால், ஆடை, அலங்காரங்கள் ரொம்பவே ஓவராக இருக்கும். நாம் பார்க்க அருவெறுப்பாகவும், அகங்காரம் கொண்டவர்களாகவுமே தோன்றும்.

* சமுதாயத்தின் புறக்கணிப்பில் வயிற்று பிழைப்புக்கும், தனது காம உணர்வுக்கும் பாலியல் தொழில்தான் என்று முடிவு செய்து விடும் திருநங்கைகள், அதற்கு வசதியாக தனது ஆணுறுப்பை அகற்றிய அதே இடத்தில் பெண்ணினத்திற்கே உரிய அலங்கார தொனியில் மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணுறுப்பு போல ஜோடித்துக் கொள்வார்கள். அவ்வளவுதான்.

இதனாலேயே இவர்கள் பெண்ணாக மாறி விட்டதாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளது கொடுமையிலும், கொடுமை. இதுபோலவே, திருநங்கைகளின் தொண்டைக்குள் முடி முளைக்கிறது. அதற்காக அவர்கள் ......... என்ற செய்திகள் எல்லாம் அதீத கற்பனையே.

* இந்த விபரம் தெரியாது அவர்கள் மீது ஆசையுள்ள ஒரு சில ஆண்கள்தான், பாலியலுறவுக்கு அழைப்பார்கள். ஆக, இதுவும் ஒரு ஹோமோ செக்ஸ் முறைதான்.

* பல ஆண்களுக்கு இதுபற்றிய விபரம் மிகத்தெளிவாக தெரியாது குழப்பத்தில் இருப்பதால், திருநங்கைகளுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தாலும், பயத்தில் நமக்கேன் வீண் வம்பு என்று கண்டும் காணாமல் போய் விடுவார்கள்.

பெண் தன்மை குடி கொண்டிருப்பதால், இயல்பாகவே இவர்களின் மார்பகமும் பருவ வயது பெண்களைப் போலவே கொஞ்சம் பெரிதாகி விடும். அப்படியே ஆகவில்லை என்றாலும் கூட, மருத்துவ முறையில் குறிப்பிட்ட அளவிற்கு பெரிதாக்கி விடுகிறார்கள். எக்காரணம் கொண்டும் பெண்களுக்கு இருப்பது போன்று சராசரியாகவோ அல்லது கண்டபடியெல்லாமோ பெரிதாக்க முடியாது.

மனதளவில் பெண் தன்மை குடி கொண்டிருப்பதால் எதிர்பாலினமான ஆண்களின் ஆதரவுதான் அவர்களுக்குத் தேவைப்படும் என்பதால்தான், ஆண்களைச் சீண்டுவார்கள்.

* பெண்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். பெண்ணாக பிறப்பவர்கள் எவரும் ஒருபோதும் திருநங்கையாக மாறுவதில்லை.

*  இது புரியாத பெண்கள், தங்களைச் சீண்டாததை கருத்தில் கொண்டும் அவர்களின் வளர்ச்சி அடைந்த மார்பகத்தை மனதில் கொண்டும், திருநங்கைகள் பெண்ணினத்தைச் சார்ந்தவர்கள் என நினைப்பதும் உண்டு. இதுவும் ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைதான்.

* திருநங்கைகளால் பெண்களின் கற்புக்கு எந்த வித ஆபத்தும் கிடையாது. ஆனால், ஆண்களின் கற்புக்கும், பாலியல் உணர்வுகளுக்கும் திருநங்கைகளாலும், திருநங்கைகளின் கற்புக்கும்,  பாலியல் உணர்வுகளுக்கும் ஆண்களாலும் ஆபத்து உண்டு.

*  பெண்களைப் போலவே, திருநங்கைகள் ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஊடகச் செய்தியைக் கொண்டு பலரும் நினைக்கிறீர்கள். இது முற்றிலும் தவறு.

* திருமணத்தின் முக்கிய நோக்கமே ஆணுக்கும், பெண்ணுக்கும் சட்டப்படியான உடலுறவு மற்றும் பெண்ணுக்கு குழந்தைப் பேறு என்பதுதான். பிறப்பால் ஆண் மகனான திருநங்கைக்கு, பெண்களைப் போல் கர்ப்பப்பை கிடையாது. அதனால், இவர்கள் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்ற பேச்சுக்கும் இடமில்லை.

* இவர்கள் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள சட்டப்படியான வழிமுறைகள் ஏதும் இல்லை. அப்படி திருமணம் செய்து கொண்டால் அது ஒன்று ஹோமோ அல்லது லெஸ்பியன் அல்லது மனித இனம் மிருக இனத்துடன் கொள்ளும் உடற்புணர்ச்சி என்ற வகை பாலியல் உறவாக கருதியே, இச்செயலை இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 377 இன்கீழ், இயற்கைக்கு மாறான புணர்ச்சி என்ற வகையில் தண்டிக்கத்தக்க குற்றமாக அறிவுறுத்துகிறார்கள்.

*  ஆனாலும், பாலியல் ஆர்வத்தாலும், திருநங்கைகளின் உடற்கூறு பற்றிய உண்மைகள் தெரியாமல் ஊடகச் செய்திகளை நம்பி இளைஞர்கள் பலர் திருநங்கைகளைத் திருமணம் செய்து கொள்ள  முனைகிறார்கள். ஒரு சிலர் இப்படிச் செய்வதை சாதனையாகவும் கருதுவது உண்டு. எது எப்படி இருந்தாலும், இம்முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் கூட, பாலியல் ரீதியாக எதுவுமே நம்மால் செய்ய முடியாது எனத் தெரிந்ததும் கை விட்டு விட்டு ஓடி விடுவார்கள்.

* தாங்கள் பிறப்பால் ஆண் என்பதை மறந்து பாலியலுக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்புக்கு ஆணைத்தேடும் திருநங்கைளின் பலவீனத்தால், இவர்களின் உழைப்பில் உண்டு களித்து, குடித்து கும்மாளமிடும் கொழுத்த ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சினிமா என்ற கற்பனை உலகில் காலடி எடுத்து வைக்க நினைத்து ஊரை விட்டு ஓடி வந்தவர்கள்.

திருநங்கைகள் இயற்கையாக எவ்வளவு பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள் என்பதை இப்போது உணர்ந்திருப்பீர்கள். உடற்கூறில்தான் இப்படியென்றால், குடியிருப்பு, வேலை வாய்ப்பு என எதைத் தொட்டாலும் அவர்களுக்குப் பிரச்சினைதான்.

இந்த அவலம் அடிப்படையில் மாற்றப்பட வேண்டும் என்றால், முதலில் அரசாங்கமே அவர்களைச் சமூகம் அங்கீகரிக்கும் வகையில் அரசுப்பணியில் அமர்த்த வேண்டும். இதிலும் காவல்துறை பணியே  மிகமிகச் சரியானதாகும். ஏன்? எப்படி?

ஆண் காவலர்களால், பெண்களுக்கு ஏற்படும், பாலியல் ரீதியான பிரச்சனைகளைக் களைய கொண்டு வரப்பட்டதே பெண் காவலர்கள் பணி நியமனம். ஆனாலும், ஆங்காங்கே ஆண் காவலர்களால் பெண்களின் கற்பு சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பெண் காவலர்களின் ஒத்துழைப்பும் தாராளமாகவே இருக்கிறது.

மேலும், இக்கற்பு சூறையாடல் ஆண், பெண் காவலர்களுக்கு உள்ளேயே ரகசியமாக ஒருபுறம் நடந்தேறிக் கொண்டும்தான் இருக்கிறது. ஆனால், அவை பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளிப்படுவது இல்லை.

இதற்கிடையிலும், பெண் காவலழகி காமக்காதலியை நிரந்தரமாக கைப்பிடிக்க போவது யார் என்ற போட்டா போட்டி சச்சரவில், ஆண் காவலர்கள் நாயைப் போல தெருவில் அடித்துக் கொண்டு கட்டிப்புரண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இச்சம்பவத்தால் அவமானமுற்ற ஆண் காவலர்களின் மனைவியோ அல்லது பெண் காவலர்களோ தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிறையவே இருக்கின்றன.

இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டும், மறைமுகமாக ஒத்துக் கொண்டும் பணியில் பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க தனி விசாரணைக் குழுவை நியமித்தது; புகார்தாரர்களை கூவிக்கூவி அழைத்தது. ஆனாலும், புகார் தர பெண் காவலர்கள் முன்வரவில்லை. காரணம், உங்களுக்கு தெரிந்ததுதான்..!

மேலும், பெண்களின் புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய விசாரணைக்கு அழைக்கப்படும் ஆண்களின் கற்புக்கும், சுய மரியாதைக்கும் உத்திரவாதம் ஏதும் இல்லை என்பதை நானே சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் கண்கூடாக பார்த்தும் உள்ளேன்.

பெண்களின் பாதுகாப்பிற்காக காவல் பணியில் ஈடுபடும் பெண்காவலர்களுக்கு மத்தியில், ஆங்காங்கே ஆண் காவலர்களும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இது ஏன் என்பது குறித்து யோசனை செய்திருக்க மாட்டீர்கள். பணியில் ஈடுபட்டுள்ள மூன்று பெண் காவலர்களின் பாதுகாப்பிற்காகவே ஒரு ஆண் காவலர் பணியில் அமர்த்தப்பட வேண்டிய கொடுமையும் உள்ளது.

எனவே, காவல் பணியில் பெண்களை அமர்த்திய திட்டத்தால் பிரச்சினை பலவாறாக கூடியுள்ளதே ஒழிய குறையவில்லை. காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் ஆசா பாசங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட தியாகியாக இருக்க வேண்டும். அப்போதுதான், எதற்கும் பயப்படாமல் எந்த அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஆனால் இவர்களோ, ‘‘பொண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி, பணம், பாசம், போதை என எத்துனை விதமான ஆசா பாசங்கள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் ஆசைப்படும் அல்பமாக, அடிமைகளாக அல்லவா இருக்கிறார்கள்?’’

இத்தனை ஆசா பாசங்களையும் அனுபவிக்க பொருளாதாரத்திற்கு எங்கே போவார்கள்? அதற்காகத்தான் மக்களிடம் கையேந்தி லஞ்சப்பிச்சை எடுக்கிறார்கள். அதிகாரத்தின் அநாவசிய மிரட்டலுக்கு அடிபணிகிறார்கள். பயப்படுகிறார்கள்.

காக்க வேண்டியவர்களைக் காயப்படுத்தி, காவலில் அடைக்கிறார்கள். மாறாக, அப்படி செய்ய வேண்டியவர்களின் காலில் விழுந்தும் கிடக்கிறார்கள்.

மற்றவர்களைப் போல, பிரச்சினைகளை சொல்வது, புலம்புவது நமது தொழில் அல்ல. மாறாக, அதை எப்படி களையலாம் என ஆராய்ச்சியின் அடிப்படையில் தீர்வு சொல்வதுதான் நமது கடமை.

அந்த வகையில் காவல் பணிக்கு சிறப்பான தகுதியுடையவர்கள் திருநங்கைகளே என்ற முடிவுக்கு வந்து, பணி நியமணம் செய்திட அரசுக்குப் புரிந்துரை செய்கிறேன்.

திருநங்கைகளின் சிறப்பு தகுதிகள்!

பிறப்பால் ஆண் என்பதால் உடல் வலிமை மிக்கவர்கள்.

மனதளவில் பெண்களின் குணம் என்பதால் ஓரளவுக்காவது இரக்கக்குணம் இருக்கும்.

காவல் பணியில் உள்ளோருக்கு ஆணைப் போல உடல் வலிமையும், பெண்ணைப் போலவே இரக்கக் குணமும் அவசியம்தானே!

தகுதியின் அடிப்படையில் அனைத்து திருநங்கைகளுக்கும் காவல் பணி என்னும் போது வாரிசு, சொந்த பந்தங்களுக்காக வருவாய்க்கு மிஞ்சிய சொத்தைக் கையேந்தி பிச்சை எடுத்து சேர்க்க வேண்டிய அவசியமேதும் இல்லை.

இதனால், பணத்தைக் கொடுத்து அல்லது பாசத்தைக் காட்டி பணிய வைப்பதும் சாத்தியமல்ல.

திருநங்கைகளுக்கு ஆண், பெண்ணுக்குரிய குடும்ப பொறுப்பு என்னும் சுமை இல்லாததால், காவல் கடமையில் முழு கவனமாய், திறம்பட செயல்பட முடியும்.

சாதி, மத உணர்வுகள் இருக்காது. இன உணர்வு இருக்கும். ஆனாலும், அதனால் ஆபத்து  எதுவும் இல்லை.

காவல்துறை உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி. இல்லையென்றால்...?

பெண் காவலர்களைப் போல, இவர்களைப் பாதுகாக்க ஆண் காவலர்கள் தேவையில்லை.

மனைவி, வாரிசு போன்ற பந்தங்கள் இல்லாததால், திருநங்கைகளின் இறப்புக்குப் பிறகு பெருமளவிலான ஓய்வூதியம் அரசுக்கு மிச்சம்.

காவலர் என்பதால் சட்ட அங்கீகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைத்து விடும். பணத்திற்காக பாலியல் தொழிலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை.

இதனால், திருநங்கைகளால் ஏற்படும் பாலியல் தொழில் முற்றிலும் ஒழிந்து விடும். ஒட்டு மொத்தத்தில் பாலியல் தொழில் உடனடியாக பாதியாக குறைந்து விடும்.

அடேங்கப்பா, திருநங்கைகள் விசயத்தில் அவர்களுக்கே தெரியாத இவ்வளவு பலமான சமாச்சாரங்களா? என பெருமூச்சு விட்டு சோர்ந்து விடாதீர்கள். ஆராய்ச்சியின் அடிப்படையில் மறுக்க முடியாத சான்றுகளைத் திரட்டுதல் என்றால் எப்படி ஆணித்தரமானதாக திரட்ட வேண்டுமென உணர்ந்து கொள்ளுங்கள்.

பிற்சேர்க்கை நாள் 15-07-2018

clip

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

இயக்கிய இனப்படுகொலை


//இலங்கையில் நடந்த படுகொலை தொடர்பாக விசாரணை செய்ய ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் நடந்தது போர் குற்றமன்று. திட்டமிட்ட இனப்படுகொலை என உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


இது உலக நாடுகளின் சம்மதம் இல்லாமல் நடக்கவில்லை என்றும், அமெரிக்காவும் கூட இராணுவ ஒத்துழைப்பு அளித்திருக்கிறது என்றும், சர்வதேச மனித உரிமைகள் நாளான 10-12-2013 அன்று தெரிவித்திருக்கிறது.


இந்நிலையில் அமெரிக்க நாட்டா(ண்)மை என்கிற தலைப்பில் நான் வெளியிட்ட இக்கட்டுரையை நினைவு கூர்ந்து மீள்பதிவு செய்கிறேன்.//


ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாடுகளின் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே கிளர்ச்சி எழுந்துள்ளது.


இதன் முதற்கட்டமாக கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதலால், கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் அனைத்துமே காலவரையின்றி மூடப்பட்டு விட்டன.


கடந்த வாரம் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆராய்ச்சிக்காக வந்த புத்த மத துறவி ஒருவரும், நேற்று 18-03-2013 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கிய புத்த மத துறவி ஒருவரும், ஈழத் தமிழ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.


இது குறித்த காணொலி காட்சிகளை ஒளி ஊடகங்கள் பெருமையோடு பரப்பியதில், மொழி தெரியாத இடத்திற்கு சென்றுள்ள நம்மை ஒரு கும்பல் திடீரென சூழ்ந்து கொண்டு தாக்கினால், நமக்கு என்ன நிலைமை ஏற்படும் என்பதை உணரும் தன்மையுள்ள அகில உலக மனிதாபிமானிகளை கொதிப்படைய செய்துள்ளது.


இதற்கிடையில், இன்று 19-03-2013 காலையில், இதுவரை (சுமார் கடந்த ஒன்பது ஆண்டுகளாக) மத்திய அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை விலக்கி கொள்வதாகவும், 21-03-2012 க்குள் இது குறித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் என்று செய்தியாளர்களை கூட்டி விளக்கி, திருவாய் மலர்ந்து உள்ளார், திரு.கருணாநிதி.


இவைகள் எல்லாம் ஒருவன் வாழும் போது தண்ணீர் கொடுக்காதவர்கள், அதன் செத்த பிறகு பாலூற்றி, வாய்க்கு அரிசி போடும் வெற்றுச் சம்பிரதாய சடங்குகளாகவே உள்ளது. இதனை மத்திய அரசும் தங்களது ஆட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.


உண்மையில் மத்திய அரசுக்கான ஆதரவை திரு.கருணாநிதி போர் குற்றங்கள் நடைபெற்ற அந்த கால கட்டங்களிலேயே செய்திருக்க வேண்டும்.


மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த போது செய்யாமல், தனது முதல்வர் பதவிக்கும், சொந்த பந்தங்களின் மத்திய அமைச்சர் பதவிக்கும் ஆசைப்பட்டு, பல லட்சம் பேரை ஈவிறக்கமின்றி கொலை செய்ய அனுமதித்து விட்டு, அடிக்க வேண்டிய கோடிகளை கொள்ளையடித்து விட்டு, தற்போது ஆதரவை விலக்கி கொள்கிறேன் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதால், படுகொலை செய்யப்பட்ட தொப்புள் கொடி உறவுத் தமிழர்கள் எல்லாம் உயிரோடு வந்து விடுவார்களா என்ன?


ஏனிந்த ஆதரவு விலகல் கபட நாடகம் என்பதும் கூட போகப்போக புரிந்து விடும். அதுவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


சரி, ஈழத்தமிழ்கள் என் தொப்புள் கொடி உறவுகள் என சொல்லிக் கொள்பவர்கள், உலகில் பல கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்களில் எவருமே தமிழர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியற்றவர்கள் போலவும், ஆதலால், தங்களைத் தாங்களே தமிழனத் தலைவர்கள் என அறிவித்துக் கொண்ட அற்பர்கள், போரின் போது தன் உயிரை துறந்தாகிளும் காத்திருக்க வேண்டிய ஈழத் தமிழர்களை, தற்போது அற்பமானதாக தெரியும் மத்திய அமைச்சர் பதவியை துறந்து கூட காப்பாற்ற முன்வரவில்லையே ஏன் என்று யோசித்தீர்களா?


அப்படி காக்கப் போய், ஒருவேளை தமிழ் ஈழம் மலர்ந்து விட்டால், உலகத் தமிழர்களுக்கெல்லாம் மாவீரன் பிரபாகரன் தலைவனாகி விடுவான், நாற்பதாண்டு காலமாக தமிழ்நாட்டில், தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நாமும், நம் பரம்பரையும் டம்மியாகி விடுவோம் என்கிற ஆதிக்கப்பதவி ஆசை வெறியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?


ஆனால், பதவி ஒருபோதும் நிரந்தரமல்ல; பட்டமே நிரந்தரமானது என்பதற்கு இணங்க, ‘‘தமிழின துரோகி’’ என்கிற பட்டமல்லவா கொடுக்கப்பட்டு விட்டது!


எதிர்கால தூண்களான மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில், சட்டத்துக்கு உட்படாத தவறான போராட்ட முறைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் விபரீத விளைவுகளை எதிர்காலத்தில் அம்மாணவர்களும், நாமுமேதாம் சேர்ந்து அறுவடை செய்ய வேண்டியிருக்கும். எச்சரிக்கை!


தங்களை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என சொல்லிக் கொண்டு அடிதடியில் இறங்கும், தங்களை வீரனாக காட்டிக் கொள்ள விரும்பும் அடாவடி அடிதடி தமிழர்கள், நம்மை நம்பி அப்பாவியாய் வரும் சிங்கள இனத்தவரையோ அல்லது புத்த மத துறவிகளையோ தாக்குவது என்பது அநாகரீகமான மனித உரிமையை மீறிய செயல்.


அப்படிப்பட்ட ஒருவரை நாம் இங்கு தாக்க போய், நம்மைப் போலவே சிங்களத்தவர்களும் இலங்கையில் தாக்க ஆரம்பித்தால், அதிகமாக பாதிக்கப்பட போவது, ‘‘பிய்ந்து போன சதை பிண்டங்களுடன், குத்துயிரும், கொலை உயிருமாய், நமக்கு எப்படி சாவு வரும் என சாவை எதிர் நோக்கி வாழ்ந்து வரும் மீதமுள்ள ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நம் அப்பாவி தமிழர்களே!’’ என்பதை உணர வேண்டும்.


மேலும், தமிழினப் படுகொலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாய் இருந்த, இருந்து வருகின்ற, நம்மோடே வசித்து வருகின்ற தன் இன துரோகி தமிழர்களிடமும், தமிழின துரோகி இந்தியர்களிடமும் முடிந்தால், மாவீரன் பிரபாகரனைப் போன்று இலங்கைக்கே சென்று கொலைக்கார ராஜபக்ஷேவுடனும், சிங்கள ராணுவத்திடமும்தாம் நேரடியாக மோத வேண்டுமே தவிர, நம்மை நம்பி வரும் சிங்கள அப்பாவிகளிடம் அல்லவே அல்ல.


அப்படி மோதுவது உலக சமுதாயத்தில், நமக்குநாமே  தேடிக் கொள்ளும் காலத்தால் அழிக்க முடியாத இழுக்கேயாகும்.


மொத்தத்தில் அறிவுப்பூர்வமாக பொங்கி எழ வேண்டுமே தவிர, உணர்ச்சி பூர்வமாக பொங்கி எழ கூடாது. அப்படி எழுந்தால் இறுதியில் நாம்தான் அடங்க வேண்டியிருக்கும். இப்படி பல முறை எழுத்ததன் பயனாய்தான், தனித்து எதையுமே செய்ய இயலாத நிலையிலும், முடிவெடுக்க முடியாத நிலையிலும், இன்றும் அடிமைப்பட்டு, மற்றவர்களின் ஆதரவுக்கு கையேந்தி நிற்கிறோம்.


நாம் எப்போது அறிவுப்பூர்வமாக பொங்கி எழுகிறோமோ அப்போது மட்டுமே, அமெரிக்காவைப் போல எவரையும் ஆட்டிப் படைக்க முடியும் என்பதோடு, நாட்டா(ண்)மை செய்யும் வல்லமையையும் பெற முடியும்.


ஆம்! போர் நடந்த போது, கொத்து கொத்தாக குண்டு மழை பொழிந்து, தமிழர்களை குன்றுபோல் கொன்று குவித்து போட்ட போது, போரை நிறுத்து என்று இலங்கையை எச்சரிக்காது, மௌனியாய் இருந்த அமெரிக்காவுக்கு, இப்போது மட்டும் மனித உரிமை மீறல் குறித்து தீர்மானம் கொண்டு வர என்ன யோக்கியதையும், அக்கறையும் இருக்கிறது என்பதைப் பற்றி நாம் சற்றேனும் சிந்திக்க வேண்டாமா?


அமெரிக்காவின் ஏகாதிபத்திய மற்றும் எதேச்சை அதிகார எதிர்பாளர்களான, பெரும்பாலான தமிழ் இன உணர்வாளர்களே, அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை தீர்மானத்தின் உண்மையான சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சி வயப்பட்டும், மதி இழந்தும், ராஜபக்ஷே மீது கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கூப்பாடு போடுவதேன்?


ராஜபக்ஷே செய்த போர் குற்ற படுகொலைகளுக்கு ஆயுதங்கள் வழங்கியும், சிங்கள இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தும் ஊக்குவித்த தமிழின துரோகி இந்தியர்களையும், இவ்விந்தியர்களுக்கு அரசியல் ரீதியாக ஆதரவுக்கரம் நீட்டிய தன் இன, தமிழ் துரோகிகளையும் அப்படுகொலை போர் குற்றத்தில் சேர்த்து விசாரணை செய்ய வேண்டும் என கோராதது ஏன்?


எதிரிகளை கூட மன்னிக்கலாம். ஏனெனில், அவன் தன்னை எதிரி என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறான். ஆனால், நான் உன் இனம், நீ என் இரத்த சொந்தம், தொப்புள் கொடி உறவு என்றெல்லாம் வியாக்கியானம் பேசி கூடவே இருந்து குழி பறித்த, நம்ப வைத்து கழுத்தறுத்த தமிழின துரோகிகளை மன்னிக்கலாமா?


இப்படியொரு மனித உரிமை மீறல் தீர்மானத்தை அமெரிக்கா மட்டும்தாம் கொண்டு வர முடியுமா... ஐநாவில் அங்கம் வகிக்கும் மற்ற எந்த நாடும் கொண்டு வர முடியாதா... அந்நாடுகளை கொண்டு வாருங்கள் என நாம் கோர முடியாதா... ஐக்கிய நாடுகள் சபையே சுய விருப்ப அடிப்படையில் கொண்டு வர கோரிக்கை விடுக்க முடியாதா என்பதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். ஏன் தெரியுமா?


நுண்ணறிவு இல்லாத நூல்கள் என்கிற தலைப்பு கட்டுரையில், எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்களது நூல் வெளிவருவதற்கு எனது அறிவுப்பூர்வமான ஒத்துழைப்பை கேட்டார்கள். நானும் சமுதாயத்திற்கு இரண்டு நல்ல நூல்கள் வெளிவருகிறதே என்ற ஆர்வத்தில் உதவி செய்தேன். ஆனால், “ஒருவரோ இருக்க கூடாத பொய்யான விசயங்கள் இருக்க வேண்டும் என்றார். மற்றவரோ, நூலின் மையக்கருவே, நூலில் இருக்க வேண்டாம்” என்றார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?


இதில் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நூலில், ‘‘ஒப்பற்ற நாடகம்’’ என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள....


‘‘அமெரிக்கர்கள் எந்த நாட்டை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பினாலும், அந்த நாட்டின் தேவைகளை, அவர்களே பட்டியலிட்டு, மனிதாபிமானம் என்ற போர்வையில், வலியச் சென்று உதவிகளை செய்து கொண்டே, குழப்பங்களையும் உருவாக்குவார்கள். அக்குழப்பத்தை போக்க அவர்களே மத்தியஸ்தர்களாக வந்து, அப்பிரச்சினைகளை தீர்த்தும் வைப்பார்கள்.


இதற்கு பிரதி பலனாக அந்த நாட்டில் இருந்து தொடர்ந்து வருமானம் வரக் கூடிய ஒரு வழியையும், அந்நாட்டவர்களே செய்து தரும்படி செய்து கொள்வதுதாம், அவர்களது ராஜதந்திரம்.


இதுபோன்று மக்களை அடிமைப்படுத்தும் அவர்களுடைய செயல்களுக்கு பேருதவியாய் இருப்பது, மக்களிடம் உள்ள இறை தன்மை பற்றிய அறியாமையும், புகழ் போதையுமேதாம்!’’


என்கிற இக்கருத்தையே இத்தலையங்கத்தின் மூலக் கருத்தாக பதிவு செய்கிறேன்.


தற்போது இலங்கை மீது மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ள அமெரிக்க நாட்டா(ண்)மையின் கணக்கு, இக்கருத்தோடு ஒத்துப் போகிறதா என்பதை சரி பார்த்து, அறிவுப்பூர்வமாக முடிவை மேற்கொள்ளுங்கள், அன்புத் தமிழர்களே!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, December 10, 2013

மண்ணை (நோ, சா)கடிக்கும் மனிதர்கள்!


Maravalli handஇனம் இனத்தோடுதாம் சேறும் என்பது ஒவ்வொரு நபருக்கும், உயிரினத்திற்கும் சாலப் பொருந்தும் போல் இருக்கிறது.

ஆம்! நான் சட்ட ஆராய்ச்சியை விட்டு வெளியில் வந்து எட்டிப்பார்த்தால், கிடைக்கும் நட்புகளில் ஆராய்ச்சியாளர்களே அதிகமாக கிடைக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் என்றால், எல்லோரும் முனைவர் பட்டம் பெற்ற முட்டாள்கள் என நினைக்காதீர்கள்.


என்னைப் போன்ற பள்ளிப்படிப்பையும், தொழிற்படிப்பையும் முடித்தவர்களே!


படிப்பிற்கும் செய்யும் ஆராய்ச்சிக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்களே!!

நான் எப்படி நீதித்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு என்று தெளிவாக குறிப்பிடுகிறேனோ, இதுபோலவே அவரவர்கள் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசும் போது, இவர்களின் பேச்சும், செயல்பாடும் அத்துறையில் நடக்கின்ற எல்லாமே தவறு, பித்தலாட்டம் என்றே தோண்றுகிறது.


நாங்கள் சொல்வது உண்மை என அவ்வப்போது நிரூபித்து காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்பேல்லாம் யாரப்பாத்தாலும், ஆரோக்கியமா இருக்கனும்னா, சத்தான உணவ சாப்பிடனும். ஆனால், உணவுலியே சத்து இல்லியே. அப்புறம் நமக்கு எப்படி சத்து கிடைக்கும் என புலம்பித் தள்ளுகிறார்கள்.

இப்புலம்பலை முதலீடாக வைத்தே, சத்தான உணவு வகைகள், சத்து மாவுகள் என எல்லா பொருட்களின் உள்ளே இருந்த சத்துக்கள் யாவும், சந்தடி சத்தமில்லாமல் பெயருக்கு முன்னால் சேர்க்கப்பட்டு, கொள்ளை லாபத்தில் விற்கப்படுகிறது.

உணவுக்கான அடிப்படை மூலக்கூறு பொருட்கள் எதற்குமே கால நிர்ணயம் இருக்காது. அரிசியை எடுத்துக் கொண்டால், அது பழகபழக சாதத்தின் கொள்ளளவு அதிகமாக கிடைக்கும் என்று, அடுத்த வருடத்துக்கு தேவையானதை இவ்வருடமே தயார் செய்து வைத்திருப்பார்கள்.

குற்றவாளிகளை சிறையில் அடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக (நோ, சா)கடிப்பது போல, இப்போது எல்லா பொருட்களையுமே பொட்டலங்களில் அடைத்து விடுகிறார்கள். இப்பொருட்களின் உயிர்ப்பு தன்மை இவ்வளவு நாட்கள்தான் என முத்திரை வேறு குத்தி விடுகிறார்கள்.

விரைவில் கெட்டுப் போகும் தன்மையுள்ள பொருட்களில் சிறிது உப்பை கலந்து வைத்தால் கெட்டுப்போகாது என கலந்து வைப்பார்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதில் இதுவும் பொதிந்துள்ளது போலவே தெரிகிறது.

அந்த உப்பில் என்ன எழவ கலக்குறாங்களோ தெரியல, உப்பு பாக்கெட்ல கூட காலாவதி தேதியை முத்திரை குத்திடுறாங்க. எனக்கு தெரிஞ்சி இதுக்குதான், அதிகபட்ச கால வரையறை, இரண்டு வருடம்.

நாங்கெல்லாம் ரொம்பவே விழிப்பறிவுணர்வு உள்ளவங்க என்று சொல்லிக் கொள்பவர்கள், காலாவதி தேதி நேற்றோடு முடிந்திருந்தால், அதே சத்து மாவோ அல்லது வேறு எதுவோ விஷ மாவாகி அல்லது விஷப்பொருளாகி உயிரே போய் விடுவது போல வாங்க மறுக்கும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.

காலையில் செய்தது மாலையில் வீணாகி விடும் என்றால் அதற்கு மணி கணக்கு. இன்று செய்தது நாளை அல்லது ஓரிரு நாட்களில் வீனாகி விடும் என்றால் அதற்கு நாட்கள் கணக்கு. இப்படித்தான் வாரக்கணக்கு, மாதக்கணக்கு, வருடக்கணக்கு எல்லாமே.


ஆகவே, ஒரு வாரம்தான் காலக்கெடு என்றால், இரண்டு மூன்று வாரங்களுக்கு சாப்பிடலாம். மாதக்கணக்கில்தான் வைத்திருக்க கூடாது. இப்படி ஒவ்வொன்றுக்கும் காலக்கெடுவை கணக்கிட்டு நாமே நீட்டித்துக் கொள்ளலாம்.

இதில் உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால், ஒரே பொருளில் இரண்டு பொட்டலங்களை வாங்குங்கள். ஒன்றை காக்கெடுவுக்கு முன் சாப்பிட்டு பாருங்கள். மற்றதை நீங்களே நீட்டித்த காலக்கெடுவுக்குப் பின் சாப்பிட்டு பாருங்கள். ஒன்றும் ஆகாது.

என் உடம்பு என்ன சோதனைச் சாலையா, எல்லாப் பரிசோதனைகளையும் செய்வதற்கு என எண்ணிலாம், மருத்துவர்களிடம், இதிலும் குறிப்பாக ஆங்கில மருத்துவர்களிடம் சோதனை சாலையாகத்தான் உடம்பை ஒப்படைக்கிறீர்கள் என்பதை ஒருபுறம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மறுபுறம், காலக்கெடு முடிந்த பொருளை அதனை தயார் செய்தவர்கள் அழித்து விடுவார்கள் என எண்ணுகிறீர்களா... அவர்களுக்கு பொருட்களால் வரும் கொள்ளை லாபம் முக்கியமா அல்லது உங்களது உடல் நலத்திற்காக, பொருள் நட்டத்தை விரும்புவார்களா... காலக்கெடு முடிந்த பொருட்களை மீண்டும் புதிதாக பொட்டலம் போட்டு அனுப்பி விடுவார்கள். அவ்வளவே!

இந்த ரகசியத்தை எல்லாம், பொட்டலப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களை நைசா போட்டு வாங்குனிங்கனா தெரிஞ்சிக்கலாம்.

சரி, நம்ம விட்ட விசயத்தை திரும்பவும் ஆரம்பிப்போம்.


விளையும் பொருட்களிலேயே சத்து இல்லை என்றால், மண்ணில் சத்துக்கள் இல்லை என்றுதானே அர்த்தம். ஒரு விதை போட்டால், பல்லாயிரம் விதைகளாக பெருக்கித்தரும் ஆற்றல் கொண்ட மண்ணில் இருந்த சத்துக்கள் எல்லாம் எங்கே போயிற்று?

இதில் விதையில்லா ரகம் வேறு வந்து விட்டது. விதையோட எடை குறையுமே, விதைகளை நீக்கவேண்டிய அவசியம் இல்லியே என அதை விரும்பி சாப்பிடுபவர்களும் உண்டு.


இப்படி சாப்பிடுபவர்களை நான் கேட்கும் கேள்வி, நீங்கள் சாப்பிடும் விதையில்லாத பழம், எப்படி தன் வாரிசுகளை உருவாக்க இயலாதோ, அதுபோல நீங்களும் உங்களது வாரிசை உருவாக்க முடியாமல் போகலாம் இல்லியா?


வாரிசு இல்லாதவர்கள், தாங்கள் உட்கொள்ளும் உணவு முறை குறித்து பரிசீலனை செய்யவும்.

நாம் மருந்துகளை சாப்பிட்டு சாப்பிட்டு, நோஞ்சானக ஆனது போல, மண்ணும் நாம் போடும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு சாப்பிட்டு நோஞ்சானாகி விட்டது. ஆதலால் மண்ணைக் காக்காமல், நாம் நம்மை காக்க முடியாது. நாம் மண்ணைக் காத்தால், மண் நம்மை காக்கும் என்றார்கள், இந்த விவசாய ஆராய்ச்சியாளர்கள்.


Radishஉர வகைகளை பயன்படுத்தாமல், சான வகைகளையும் இதர பொருட்களையும் உரமாக பயன்படுத்துகிறார்கள். பூச்சிக்கொல்லியை அடித்து பூச்சை கொலல்லாமல், பூச்சி விரட்டியை தெளித்து விரட்டுகிறார்கள். இவைகள் எல்லாம் இவர்களது சொந்த தயாரிப்புகளே!

வேதங்களில் இதுபற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லும் இவர்கள், திரு. தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களில் இருந்து இவர்களுக்கு எடுத்துச் சொல்வதாக சொல்கிறார்கள்.

இவர்களைப் பற்றி ஏற்கனவே ஆ! முள்ளங்கி...!! என்கிற தலைப்பில் எழுதி உள்ளேன். இது ஓர் அதிசய முள்ளங்கி!

இதேபோன்று, தற்போது மரவல்லி கிழங்கை பயிர் செய்து எடுத்து, சுற்று வட்டார மக்களை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். மேலும், அந்த சுற்று வட்டாரத்தில் இவர்கள் விவசாயம் செய்யும் இடம் மட்டுமே, பச்சை பசேல் என இருக்கிறது.

ஆ முள்ளங்கி கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளபடி, இவர்கள் சொல்லும் முறையில் விவசாயம் செய்தால், இந்தியா மட்டுமன்று, சோமாலியா மட்டுமன்று, உலகிற்கே இந்தியா உணவு கொடுக்க முடியும் என்பதை யாராலும் மறுக்க முடியாது போலும்.

ஆம்! இந்த மரவல்லி கிழங்கு 1.5 அடி சுற்றளவும், 2.5 அடி உயரமும், 5.4 கிலோ கிராம் எடை கொண்டதாகவும் இருக்கிறது.  Maravalli sit

எல்லோரும் பசி, பட்டிணி, பஞ்சம் என பேசிக் கொண்டிருக்க, இவர்களோ இப்பிணிகளைப் போக்க என்னென்ன செய்யலாம் என யோசித்து, அதன்படி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.


சொந்தமாக விவசாய நிலம் இல்லாதவர்கள் இப்படியெல்லாம் பாடுபடும் போது, ஏக்கர் கணக்கில் வைத்துள்ள நீங்களெல்லாம் என்ன செய்யப் போறிங்க என்பதே என் கேள்வி?

இவர்களின் வழிகாட்டுதல்களை பெற விரும்புபவர்கள் திரு.ராமானுஜம் +919444425801, திரு.குமார் +918453557193 ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாமே!

யார் எந்த இனமாக இருந்தாலும், இனம் இனத்தோடு சேர்ந்தாலும், எல்லா இனங்களும் இறுதியில் மண்ணுக்குள்தாம் போக வேண்டும். ஆனால், அம்மண்ணுக்கே மருந்தடித்து மருந்தடித்து, நம்மை செறிக்கும் தன்னை இல்லாமல் செய்து, புழுபுழுத்துப் போகச் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே... அந்தோ கொடுமை...

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, December 8, 2013

அதிகாரத்தை அலட்சியப்படுத்து; லட்சியத்தை நிலைப்படுத்து!


சமுதாயத்தில் நிலவக்கூடிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்குமே உண்டு என்றாலும் கூட, ‘‘அதற்கென பிரத்தியோகமாக கடமை ஆற்றுபவர்களுக்குதான் அதிக பொறுப்பு உண்டு. இந்த காரணத்திற்காகத்தான் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கூலியானது சம்பளம் என்ற கௌரவ பெயரில் கொடுக்கப்படுகிறது’’.


ஆனால், மிகவும் துரதிருஷ்டவசமாக அப்பொறுப்பு மிக்கவர்கள்தான் பொறுப்பு இல்லாத்தனத்தோடும், பொறுக்கியாகவும் நடந்து கொள்கிறார்கள்.


பொதுவாக பொறுப்பில்லாமலும், பொறுக்கியாகவும் நடந்து கொள்ளும் சக நபர்களைக்கூட அலட்சியப்படுத்தும் நீங்கள், மிகவும் பிரத்தியோகமாக இப்படி அலட்சியப்படுத்த கடமைப்பட்டுள்ள நபர்களை மட்டும், ‘‘தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், கொண்டாட வேண்டியவர்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதும் அன்றாடம் நடக்கும் அவலங்கள் ஆகிவிட்டன’’.


இதனால்தான் திருந்த வேண்டிய அதிகார வர்க்க கடமையாளர்கள் கூட திருந்த மறுக்கிறார்கள். இவர்களை  திருத்துகிறேன் என்று களம் இறங்கும் கடமையாளர்கள் கூட, உண்மை நிலையை உணர முடியாமல் கூடிய விரைவிலேயே மதி மயங்கி அவர்கள் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள்.


இதன் விளைவு ஒட்டு மொத்த அதிகார வர்க்கங்களும் குட்டிச்சுவராகி விட்டன. இதிலிருந்து நமக்கு விடிவே கிடையாது என்ற அவநம்பிக்கையில்தான் அவரவர்களும் புலம்பலுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள். இப்படி புலம்புவதற்காக செலவிடும் நேரத்தை, சீரிய சிந்தனைக்கு பயன்படுத்தி இருந்தால் எப்போதோ நமக்கு விடிந்திருக்கும். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...


உண்மையில் அரசு ஊழியர் ஒருவருக்கு பிச்சை (லஞ்சம்) போடப்படுகிறது என்றால், ‘‘அவருக்கு உள்ள அற்பச் சொற்ப அதிகாரத்திற்காகவே கொடுக்கப்படுகிறதே ஒழிய, நிச்சயமாக அசடுவழியும் அந்த மூஞ்சிகளுக்காக கொடுக்கப்படுவதில்லை’’.


இது போலவேதான் மதிப்பும், மரியாதையும் என்றாலும் கூட, அதிகாரத்தில் இல்லாத நபர்களுக்கும் இவைகள் வழங்கப்படுவதற்கு காரணம், ‘‘அவர்களிடம் உள்ள தனித்திறமைதான்’’.


அதிகாரமோ அல்லது தனித்திறனோ போய் விட்டால், பின் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போலத்தான் இவர்கள் என்பதால், ‘‘அதிகார போதையிலாடும் அதிகார வர்க்கங்களுக்கு, இவைகளை எடுத்துச் சொன்னாலே போதும். ஆடியவர்கள் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவார்கள்’’.


அப்படியும் அடங்கவில்லையா... கவலையே வேண்டாம்!


முள்ளை முள்ளால் எடுப்பது போல, சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை, சட்டத்தைக் கொண்டே எளிமையாக பறிப்பதோடு, கூடுதலாக மதிப்பையும், மரியாதையும் இழக்கச் செய்து விடலாம்.


சொந்த தொழில் செய்பவர்கள் சமயத்துக்கு தக்கவாறு, தனது சுய தொழிலை மாற்றிக் கொண்டு பிழைத்து விடுவார்கள். வேறொரு நபரிடம் வேலை பார்ப்பவர்களுக்கு கூட, பெரும்பாலும் இந்த தகுதி இருக்கிறது. மிப்பெரிய தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு சுய தொழில் திறன் என்பது மிக குறைவு.


ஆனால், அரசு ஊழியர்களுக்கு சுய தொழில் திறன் மிக மிக குறைவு என்பதால், அவர்களது வேலை பறிபோய் விட்டால், அவர்களின் பிழைப்பு நாறி விடும். வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து எடுபடி வேலைகளைச் செய்ய வேண்டும் அல்லது குடும்பத்தோடோ, தனியாகவோ தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும். சாலைப் பணியாளர்கள் பணி நீக்கத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களே இதற்கு அத்தாட்சி.


இவ்வளவு ஏங்க, நான் எழுப்பிய சட்டப் பிரச்சினைகளில் சிக்கிய முதல் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் இருவர், இரண்டாம் வகுப்பு நடுவராக பணியிரக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது, எனக்கே நன்றாக தெரியும். தெரியாமல் எத்தனை பேரோ, யார் கண்டது. எனக்கு தானாகவே தெரியவந்தாலே அன்றி, இதையெல்லாம், நானே தெரிந்து கொள்ள முயல்வதில்லை.  


இவர்களுடைய சமகால நடுவர்கள் சார்பு நீதிபதிகளாக விட்டனர் என்று பணியிறக்கம் செய்யப்பட்ட அவ்விரண்டு நடுவர்களும், நீதியைத்தேடி... வாசகர்களாக உள்ள பொய்யர்களிடம் புலம்பித்தள்ளி உள்ளனர்.


இந்நடுவர்களது பணியிறக்கம் பற்றி விபரம் அறிந்த பொய்யர்கள், இவர்களை சற்றும் மதிப்பதில்லையாம்.  இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சரியா சொல்லியிருக்கீங்கன்னு எனக்கு சான்றிதழ் வேறு தர்றாங்க. நான் எதுக்கு அவங்களப்பத்தி தப்பா சொல்லப் போறேன்?


இதில், ஒரு நடுவர் மிகுந்த மன உலைச்சலில், வேறு வேலைக்கும் போக முடியாம, எப்படா பதவி உயர்வு வரும்னு காத்துக்கிடக்க காத்துதான் வருதே ஒழிய, உயர்நீதிமன்ற உத்தரவு வரல.


இதில் ஒருவர், நீதியைத்தேடி... வாசகர் சட்டக் கோவிந்தனது வழக்கு விசாரணை நாளன்று, நான் சட்டக் கோவிந்தனோடு பேசிக் கொண்டிருப்பதை கவனித்து விட்டார். என்மீது இருக்கும் கோபத்தை அவர்மீது காட்டி விடுவாரோ என்கிற பயம் கோவிந்தனுக்கு.


பின் குற்றம்சாற்றப்பட்ட நபராக தனக்குதானே வாதாடிய கோவிந்தனை அழைத்து விபரம் கேட்டுள்ளார்.  கோவிந்தனும், பொய் வழக்கு என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் நான்தான் புலனாய்வு செய்து திரட்டி தந்துள்ளேன் என சொன்னதும், நடுவருக்கு பேதியாகி, அவர் மீது இருந்த அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்து விட்டார்.


அதெப்படி, பின்ன தீர்ப்ப தப்பா எழுதினா, சட்டப்படி அவரிடமே சீராய்வு மனு போட்டு தோலை உரித்து தொங்க விட்டுவோம், பின்னி எடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவோங்கிற பயம் இருக்கனும்ல...


இந்த தகவல் எல்லாம் கிட்டத்தட்ட அவரது வழக்கை விசாரணை செய்த அத்தனை நடுவர்களுக்கும் தெரிஞ்சிருக்கும் போல... எல்லோரும் ஒரே குடியிருப்பில் இருந்து கொண்டு, ஒரே கூண்டு வண்டியிலதானே வேலைக்கு வர்றாங்க, போறாங்க... அதனால, இப்படிப்பட்ட தகவல்கள் எல்லாம் மற்றவர்களுக்கும் நுண்ணுயிரிகள் போல சர்வ சாதாரணமா பரவி விடும். அதனால, எல்லோருமே அலர்ட் ஆகிடுவாங்க.


இதனால, விசாரணை கைதி சட்ட கோவிந்தனுக்கு, சிறையை விட நடுவர்கள் மத்தியில் மரியாதை ரொம்பவே கூடிப்போச்சு. அத்தோடு, அவர் மீது பொய் வழக்கு போட்ட காவலர்களை அழைத்து, நாலு ஏத்து ஏத்தியிருப்பாங்க போல... பின்ன, ‘ஏன்யா வேலில போறத எடுத்து, என் கோ(ர்)ட்டுக்குள்ல விட்டேன்னு’ ஏத்தாம என்ன பண்ணுவாங்க?


இதே கோவிந்தனுக்காக மிகப்பிரபலமான பொய்யர்கள் வாதாடி இருந்தா, ‘என்ன ரொம்ப ஓவரா பரிந்து பேசுர; உன் குடுமி என் கையில; அதனால அடுத்தடுத்த வழக்குல வாதாடவே அனுமதிக்க மாட்டேன். அப்புறம் உன் பொழப்பு நாறிப்போயிரும்’ என ஒரே ஏத்துல எல்லாவற்றையும் ஏத்தி, வாழ்நாள் முழுவதும் அடக்கி வெச்சிருவாங்க.  இப்படித்தாம், பொய்யர்களை நம்புகிற உங்க பொழப்பும், பொய்யர்களின் பிழைப்புக்காக நாறிகிட்டு இருக்கு என்பதை புரிஞ்சிக்குங்க.


நடுவர் ஏத்துன ஏத்துல, ‘பொய் வழக்கு போட்ட காவலர்கள் என்கிட்ட வந்து, கோவிந்தன் உங்களப் போல நல்லவர் கிடையாது. உண்மையான குற்றவாளிதான்’ என ஏதேதோ சமாதானம் பேசினார்கள். நீங்க அவர் கேசுல சேர்த்திருக்கிற சாட்சிகள் எல்லாம் பொய் என்று என் புலன் விசாரணையில் நான் சொல்ல வில்லை. மத்திய அரசின் அஞ்சல்துறை சொல்கிறது. எனவே, நீங்க அங்க போயி சமாதானம் பேசுங்கன்னு சொல்லி, போகச் சொல்லிட்டேன்.


அதாவது, குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்த அரசுத்தரப்பு சாட்சிகளை நேரில் சந்தித்து, உண்மை அறியலாம் என அந்தந்த முகவரியைத் தேடிப் போனால், பெரும்பாலும் அப்படியொரு தெருவே இல்லை. தெருவே இல்லாத போது, அதில் எப்படி விடு, சாட்சி இருப்பார்கள். வாங்கும் கூலிக்கு இப்படியெல்லாம் நம்ம வேலையச் செய்யனும் என்று பொய்யர்களுக்கும் அறிவில்லை.


சாட்சிகள் பொய் என்பதை, ஆவணங்களின் வழி நிரூபிக்க சிறப்பான ஒரே அஞ்சல்துறையே என முடிவு செய்து, எல்லா முகவரிக்கும் அஞ்சல் அட்டை அனுப்பினேன். அப்படியொரு முகவரியே இல்லை என்கிற மேற்குறிப்போடு திரும்பி வந்தது. இதை வைத்துதான், நடுவர்களை சுளுக்கெடுக்க பார்த்தேன். சுதாரித்துக் கொண்டு தப்பி விட்டார்கள்.


ஆம்! வெறும் ஏழாம் வகுப்பே படித்த எதிரி கோவிந்தன், சிறையில் இருந்தபடியே பதினோரு வழக்குகளில் வாதாடாமலே விடுதலையாகி விட்டார்.


ஆனால், எனக்கு தெரியாமல் ஓர் அமர்வு நீதிமன்ற வழக்கை பொய்யர் ஒருவரிடம் ஒப்படைக்க, அப்பொய்யரோ தனது திறமைக்கு ஏற்றபடி ரொம்பவே சிறப்பாக வாதாடி, ஏழு வருடம் தண்டனை வாங்கி கொடுத்து விட்டார்.


இப்படித்தான், சொல்றத கேட்காத பலபேர் நாசமா போய்கிட்டு இருக்காங்க...


கோல் எடுத்தால் குரங்கு ஆடும் என்பது பழமொழி.


ஆனால், சட்டத்தை கையில் எடுத்தால், ஆடுபவர்களை அடக்கி விடலாம். அடக்க நினைப்பவர்களை ஆட்டிவித்து விடலாம் என்பது நான் உங்களுக்கு சொல்லும் ‘புதுமொழியும், அனுபவ வழியும்’ ஆகும்.


எனவே, சட்டத்தின் அதிகார மகிமையை உணர்ந்து, கவனமாக கையாள கற்றுக் கொள்வதன் மூலம்,   அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அதிகார வர்க்கங்களை அலட்சியப்படுத்தி உங்களின் லட்சியத்தை நிறைவேற்றுங்கள்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, December 5, 2013

கடமை குறித்து காந்தி!


About Duty தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையின் தேவைகளைப் பெறுவதற்கு உரிமையுண்டு. ஆனால், ஒவ்வொரு உரிமையும் அதனோடு இணைந்த கடமையைச் செய்வதனால் மட்டுமே, தாமாக வந்து சேரும் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


உரிமைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த எந்த மக்களும் முன்னேறியதில்லை. கடமைகளில் கருத்தாய் இருந்தவர்களே மேன்மையை அடைந்திருக்கிறார்கள். ஏனெனில், தம் கடமையை உணர்ந்து அதனை இயல்பாக  செய்பவர்கள், இயல்பாகவே உரிமைகளைப் பெற்று விடுகிறார்கள்.


உரிமையைப்பற்றி கவலைப்படாமல் கடமையைச் செய்பவருக்கு, உரிமைகள் தானே கிடைக்க, உரிமைப்பற்றியே எண்ணியவர் அதனை முற்றிலுமாக இழந்து விடுகிறார். ஆகையால், நாம் எல்லோரும் நம் கடமைகளைச் சரியாக நிறைவேற்றினால், உரிமைகளைப் பெறப் பாடுபட வேண்டியதே இல்லை.


நாம் நம் கடமைகளைச் செய்யாமல் உரிமைகளைத்தேடி அலைகையில், அவைகள் நம் கையில் சிக்காமல் நம்மை ஏமாற்றி விட்டுப் போய்விடுகின்றன. அவைகளை நாம் ஒடிப்பிடிக்க முயற்சித்தால், அவைகள் நமக்கு (பய, பற, மறை, மற)ந்தும் விடுகின்றன.


நம்மைநாமே அல்லது தன்னைத்தானே அடக்கியாள விரும்பும் நமக்கு, நமது உரிமைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், நம் கடமைகள் குறித்து அவசியம் அறிந்துகொண்டு அதனை நிறைவேற்றுவதன் விளைவாக, நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அனைத்தும் நம்மிடம் தானாகவே வந்தடையும்.


இப்படி நம்மிடம் தானாகவே வந்தடையும் உரிமைகளே உண்மையானவை. இவைகளை மட்டுமே நாம் ஆண்டு அனுபவிக்க முடியும். மற்ற உரிமைகள் எல்லாம், ஏதோவொரு வகையில் சுரண்டிப் பெறப்பட்ட உரிமைகளே என்பதால், அனுபவிக்க இயலாத அளவிற்கு இம்சை இருக்கவே செய்யும்.


நாம் எந்த உரிமையையும் (கே, கெ)ட்டு பெற்றிட கூடாது. நம் கடமையைச் செய்வதன் மூலம், நமக்கு வேண்டியதை நாமே நல்லதாய் எடுத்துக் கொள்ள முடியும். கடமையைச் செய்வதனால் கிடைக்கும் சக்தி, சத்தியாகிரக வழியில் கிடைக்கப் பெற்ற சக்தியாதலால், இச்சக்திக்கு நிகர் வேறெதுவும் இல்லை.


நாம் நம் கடமையைச் செய்வதற்கு எந்த தடையும் இல்லை; எல்லா உரிமையும் இருக்கிறது. இதற்காகவே நாம் வாழ்கிறோம்; சாகவும் தயாராய் இருக்கிறோம் என்றால், அதிலேயே நியாயமான நமது எல்லா உரிமைகளும் அடங்கி விடுவதால், அவ்வுரிமைகள் நம்மிடம் தானாகவே தஞ்சமடைந்து விடுகின்றன.   


ஆகையால், நாம் ஒவ்வொருவரும் உரிமைகளை வற்புறுத்தாமல், தத்தமது கடமைகளை மட்டும் செய்தோமானால், நமது உரிமைகள் நம்மிடம் தாமாகவே தஞ்சமடைவதோடு, சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் நம் கூடவே குடியிருந்து நிச்சயம் நம்மை காக்கும்.


இதுவரையில் நாம் எல்லோரும், நம் குடும்ப நலனுக்காகவே பாடுபட்டு வருகிறோம். இனி நம்நோக்கை  இன்னும் விரிவாக்கிக் கொண்டு, நாட்டு மக்கள் அனைவரின் நலனையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இதுவே, மக்களாட்சியில் நம் கடமைகள் குறித்து நான், உங்களுக்கு கூற விரும்பும் நல்லுரை.


ஆதாரம்: ஜனநாயகம் - உண்மையும், போலியும் என்கிற நூலின், ஜனநாயகத்தில் உரிமைகளும், கடமைகளும் பகுதியில் இருந்து, கருத்து மாறாமல் தேவைக்கு ஏற்ப சுருக்கியும், விவரித்தும் ஒருங்கிணைத்து தொகுத்தவர், சட்டக்கடமையாளர் வாரண்ட் பாலா.


தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை - 625020.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, October 8, 2013

கல்வி குறித்து மகாத்மா காந்தி
ஏழு மொழிகளில் காந்தியின் கையொப்பம்
எழுத்தறிவு என்பதே கல்வியின் சாதாரண பொருள். இது ஒரு கருவி மாத்திரமே. ஒரு கருவியை நல்வழியிலும் பயன்படுத்தலாம். தீய வழியிலும் உபயோகிக்கலாம். எழுத்தறிவும் அப்படியே ஆகலாம்.

கல்வியை பலர் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதையும், மிகச் சிலரே நல்வழியில் உபயோகிக்கின்றனர் என்பதையும் நாம் தினமும் காண்கிறோம். இதனால், நன்மையை விட தீமையே அதிகம் செய்யப்பட்டிருக்கிறது.

கல்வியறிவு இல்லாத ஒரு விவசாயி யோக்கியமாக சம்பாதித்து பிழைக்கிறார். உலகத்தைப் பற்றிய சாதாரண ஞானமே அவருக்கு உண்டு. தன்னுடைய பெற்றோர்கள், தன் மனைவி, குழந்தைகள், கிராமத்தில் உள்ள மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிகிறது. ஒழுக்க நியதிகளை அறிவதோடு அதனை அனுசரிக்கவும் செய்கிறார்.

ஆனால், தன் பெயரைக் கூட அவருக்கு எழுத தெரியாது. அவருக்கு எழுத்தறிவை அளித்து அவரது இன்பத்தை கொஞ்சமாவது அதிகரித்து விட முடியுமா என்றால் முடியாது. மாறாக, அவரது நிலை குறித்தும், குடிசை குறித்தும் அதிருப்தியைதான் ஏற்படுத்த முடியும். இதற்கு அவருக்கு எதற்கு கல்வி?

நாம் மேனாட்டு சிந்தனை வெள்ளத்தில் மிதப்பதால் எது அனுகூலம், எது பிரதிகூலம் என்பதை கூட சீர்தூக்கி பார்க்க முடியாத கல்வியை கற்கிறோம், கற்றுக் கொடுக்கிறோம்.

ஆகையால் ஆரம்பக்கல்வியும், மேல்படிப்பும் முக்கியமான காரியத்தை செய்வதற்கு வேண்டியதே இல்லை. இவை நம்மை மனிதர்கள் ஆக்குவதில்லை. நாம் நம் கடமையைச் செய்வதற்கு உதவியாக இல்லை.

நீங்களும் நானும் பொய்யானதொரு படிப்பின் தீமையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அத்தீமையில் இருந்து நான் விடுபட்டு விட்டதாக கூறிக் கொள்கிறேன். என்னுடைய அனுபவத்தின் பலனை உங்களுக்கு அளிக்க முயற்சி செய்வதோடு, இதற்காக இப்படிப்பின் ஊழலையும் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

கல்வியை நாம் பிரமாதப்படுத்தக் கூடாது என்று சொல்கிறேனே ஒழிய, எல்லா சந்தர்ப்பங்களிலும் கூடாது என்று சொல்லவில்லை. கல்வி காமதேனு அன்று. கல்வி விசயத்தில் கல்வி பயன் உள்ளதாய் இருக்கக்கூடும்.

நம் உணர்ச்சிகளை அடக்கி, நம் கோட்பாட்டையும் நாம் உறுதியான முறையில் அமைத்துக் கொண்டபின் கிடைக்கும் கல்வியை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஓர் ஆபரணத்தைப் போல், நம்மை அழகுபடுத்தவும் கூடும்.

ஆகையால், கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை.நமது பழங்கால பள்ளிக்கூட முறையே போதுமானது. ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கே அதில் முதல் இடம்; அதுதான் (ஒழுக்கமே) ஆரம்பக் கல்வி. அந்த அடிப்படையின் மீது கட்டப்படும் கட்டிடம் நீடித்தும் இருக்கும்.


ஆங்கிலப் படிப்பை தேர்ந்தெடுப்பது, நம்மை அடிமைப்படுத்திக் கொள்வதாகும். படிப்புக்கு மெக்காலே போட்ட அடித்தளம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது. அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும், பலன் அடிமை என்பதே. சுய ஆட்சியைப் பற்றி சுய மொழியில் பேசாமல் அந்நிய மொழியில் பேச வேண்டியுள்ளது வருந்தத்தக்கதே.

ஐரோப்பியர்கள் வெறுத்துத் தள்ளிய முறைகளையே நாம் அனுசரிக்கிறோம். அவர்கள் உதறித்தள்ளி விட்ட முறைகளை எல்லாம் நாம், அறியாமையோடு பின்பற்றி வருகிறோம்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மொழிகளின் மதிப்பை உயர்த்த அந்நாட்டு அறிஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இங்கிலாந்தின் ஒரு சிறிய பகுதியே வேல்ஸ். வேல்ஸ்காரர்களிடையே வேல்ஸ் மொழியறிவை திரும்பவும் உயிர்ப்பிக்க பெரு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகள் வேல்ஸ் மொழியிலேயே பேசும்படி செய்வதற்கான இயக்கத்தில், லிபரல் கட்சியின் தலைவரும், பிரிட்டீஷின் பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீ லாயிட் ஜார்ஜ் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.

ஆனால், நாம் ஒருவருக்கொருவர் தவறான ஆங்கிலத்தில் எழுதிக் கொள்கிறோம். நம் சிறந்த எண்ணங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே எடுத்துக் கூறப்படுகின்றன. நம் சிறந்த செய்திப் பத்திரிகைகள் ஆங்கிலத்திலேயே பிரசுரமாகின்றன. இதே நிலைமை நீண்ட காலத்திற்கு நீடிப்பதாயின், எதிர்காலம் நம்மை கண்டித்துச் சபிக்கும்.ஆங்கிலக் கல்வியை பெற்றதால், நாட்டை நாம் அடிமைப்படுத்தி விட்டோம். நயவஞ்சகம் கொடுமை ஆகியன அதிகரித்து விட்டன. ஆங்கிலம் அறிந்த இந்தியர் மக்களை ஏமாற்றி, மிரட்டுவதற்குத் தயங்குவதேயில்லை. இப்போது நாம் மக்களுக்கு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறோம் என்றால், அவர்களுக்குரிய கடனில், ஒரு சிறு பாகத்தை மாத்திரம் செலுத்தி வருகிறோம்.


நான் நீதிமன்றத்துக்கு போக வேண்டுமென்றால், அங்கே ஆங்கில மொழியையே உபயோகிக்க வேண்டும். நான் பாரிஸ்டர் ஆனதும், என் தாய்மொழியில் பேச முடிவதில்லை. நான் கூறுவதை என் மொழியிலேயே கூற முடியாமல், இன்னொருவருக்காக மொழி பெயர்க்க வேண்டும் என்பது வெட்கக் கேடானது. இது அடிமைதனத்திற்கான அடையாளம்.இதற்கு நான் ஆங்கிலத்தின் மீது எப்படி குற்றங்குறை கூற முடியும். ஆங்கிலம் அறிந்த இந்தியராகிய நாமே, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதால், நாட்டின் சாபம் நம்மீதுதான் விழுமேயன்றி, ஆங்கிலத்தின் மீதன்று.


நாகரீகம் என்ற நோயினால் நாம் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டதால், ஆங்கிலப் படிப்பு இல்லாமல் நாம் முற்றிலும் இருந்து விடமுடியாது. அதுவரை ஆங்கில அறிவை பெற்றிருப்பவர்கள், ஆங்கில மக்களிடம் தொடர்பு கொள்வதற்கும், அவர்களது நாகரீகத்தைப் பற்றி அவர்கள் எவ்வளவு வெறுப்படைந்து இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்களுடைய குழந்தைகளுக்கு, தங்களது தாய்மொழி மூலம் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும். மற்றோர் இந்திய மொழியையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்தப்பின் ஆங்கிலம் தேவை என விரும்பினால், கற்றுக் கொள்ளட்டும். ஆனால், தேவையில்லை என்பதே முடிவான நோக்கமாக இருக்கட்டும்.

ஆங்கிலத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பது என்பதையும் விட்டு விட வேண்டும். குறிப்பிட்ட அளவிற்கு ஆங்கிலம் கற்க வேண்டியிருந்தால், அதில் கூட கற்றுக் கொள்ள வேண்டியது என்ன, வேண்டாதது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலப் படிப்பையும், பட்டங்களையும் மதிப்பதை நாம் விட்டு விட்டாலே ஆளுவோர் விழித்துக் கொள்வார்கள்.

நம் எல்லா மொழிகளையும் விருத்தி செய்ய வேண்டும். சிறந்த ஆங்கிலப் புத்தகங்களை பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். மந்திரங்களை கற்றுக் கொள்வதான நடிப்பை கைவிட்டு, ஒழுக்கம் சம்பந்தமான படிப்புக்கு முதலிடம் அளிக்க வேண்டும்.படித்த ஒவ்வொரு இந்தியரும், தம்தாய் மொழியுடன் இந்துவாக இருந்தால், சமஸ்கிருதத்தையும், இஸ்லாமியராக இருந்தால் அரபியையும், பார்ஸியானால் பாரசீகத்தையும், எல்லோருமே இந்தியையும் கற்க வேண்டும். சில இந்துக்கள் அரபு, பாரசீக மொழிகளை அறிய வேண்டும். சில இஸ்லாமியரும், பார்ஸியரும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும்.

வட நாட்டினரும், மேற்கு பிரதேசத்தவர் பலரும் தமிழ் கற்க வேண்டும். இந்தியா முழுமைக்கும் இந்தியே பொது மொழியாய் இருப்பதோடு, அதை இஷ்டம் போல் பாரசிக அல்லது நாகரி லிபியில் எழுத வேண்டும்.


இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதை முன்னிட்டு இவ்விரு லிபிகளையும் அறிந்திருப்பது அவசியம். இதை நாம் செய்ய முடிந்தால், ஆங்கிலத்தை சிறிது காலத்திலேயே விரட்டி விட முடியும். ஆங்கில அடிமைகளாகிய நமக்கு இவையெல்லாம் அவசியம்.நமது அடிமைத்தனத்தினால் நாடே ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது. நாம் பெறும் சுதந்திரமே நாட்டின் சுதந்திரம்.


இந்தியா தெய்வத் தன்மையற்றதாக என்றுமே இராது. அசல் நாஸ்திகம் இந்நாட்டில் ஓங்காது. மதக்கல்வியைப் பற்றிச் சிந்திக்கும் போது எனக்குத் தலை சுற்றுகிறது.

நம் மத போதகர்கள், நயவஞ்சகர்களாகவும், சுய நலமிகளாகவும் இருக்கின்றனர் என்றே அவர்களை அணுக வேண்டியிருக்கிறது. முல்லாக்கள், தஸ்தூர்கள், பிராமணர்களின் கையிலிருக்கிறது விசை. இவர்களுக்கு நல்ல புத்தி இல்லாமல் போகுமானால், ஆங்கிலப் படிப்பினால் நாம் பெற்றிருக்கும் சக்தியை மதப்படிப்புக்காக நாம் உபயோகிக்க வேண்டும். இது அதிகக் கஷ்டமானதன்று.

சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே அசுத்தமாகி இருக்கிறது. அந்தச் சிறு பகுதிக்குள் இருப்பனவற்றை மாத்திரமே சுத்தப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ரகத்தை சேர்ந்த நாம் - நான் சொல்லுவது கோடிக்கணக்கானவர்களுக்குப் பொருந்தாது. ஆகையால் நம்மைக் கூட சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.பழமையாக இருந்த நிலையை இந்தியா அடையும்படி செய்வதற்கு நாமும் அதற்கு திரும்ப வேண்டும். நமக்குச் சொந்தமான நாகரீகத்தில் ஏற்றம், தாழ்வு, சீர்திருத்தங்கள், விளைவுகள் ஆகியன இயற்கையாகவே இருக்கும். ஆனால், ஒரு முயற்சி தேவை. அதுதான், மேல்நாட்டு நாகரிகத்தை துரத்துவது; மற்றவை எல்லாம் தொடர்ந்து தாமே வரும்.


* மகாத்மா காந்தி 1909 ஆம் ஆண்டு எழுதிய இந்தியத் தன்னாட்சி என்கிற நூலின் கல்வி என்கிற தலைப்பில் இருந்து கருத்து மாறாமல், தேவைக்கு ஏற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர் வாரண்ட் பாலா.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, October 2, 2013

இப்ப என்னா பண்ணுவ?


பரவலாக்கப்பட்ட அதிகார முறையை புரிந்து கொள்ளாமல், ‘நீ பெரியவனா, நான் பெரியவனா பார்த்துடலாம் ஒரு கை’ என மத்திய ஆட்சியாளர்களும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மீண்டும் மல்லுக்கு நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இலவசங்களை அறிவித்து ஓட்டு கேட்க கூடாது, ஊழல்வாதிகள் அரசியலில் பங்கேற்க கூடாது என நான் தீர்ப்பு சொன்னா, அதை முறியடிக்க நீ அவசரச் சட்டம் போடுறியா?

இப்ப என்ன பண்ணுவன்னு பார்க்கிறேன் என்கிற வகையில்,"வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு" என்று, இதுவரை யாருக்குமே தெரியாது இருந்த ரகசியத்தை தெரிவித்திருப்பது போல, ஒன்பது வருடமாக தீர்ப்புரைக்க தில் இல்லாமல் நிலுவையில் வைத்திருந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் மூன்று அறிவாளிகள், தூசி தட்டி எடுத்து 51 பக்கத்தில் தீர்ப்பு எழுதி உள்ளனர்.

"49 ஓ" முதலில் எப்போது தெரியவந்தது... என்னென்ன நிலைகளை கடந்து வந்து இந்நிலையை எட்டியுள்ளது என்பதைப் பற்றி ஒவ்வொரும் நினைவு கூற வேண்டிய தருனம் இது.

இது என்னமோ குதிரைக்கு கொம்பு முளைத்தது போல எல்லோருக்கும் அதிசயமாகவே தெரிகிறது. நீங்கெல்லாம், ‘49 ஓ’ குரூப்பா என்பது போல வித்தியாசமாகவே பார்க்கிறார்கள். '49 ஓ' என்கிற வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை என்பது 1961 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் வந்ததுதாம். 

ஆம், வேட்பாளரை ஆதரித்து வாக்கு செலுத்தும் நாம், எச்சட்ட விதியின்படி அதனை செலுத்துகிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்கு பதிலா, தத்தமது தலை விதியின்படியே செலுத்துவதாக எண்ணுகிறோம். இந்த மானோபாவத்தால்தானோ என்னவோ, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நல்ல வாழ்வளிக்க வக்கில்லாமல் மகாபாவமே செய்கிறது.

சரிங்க நீங்க சொல்றது போல, "சட்ட விதி தெரிந்தால் எல்லோரது தலைவிதியும் மாறி விடுமா என் கேட்டால், நிச்சயம் மாறும்". இதனை (நி, தீ)ர்மானிப்பதுதாம் சட்டத்தின் மதி.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரித்து வாக்களிப்பது ‘49ஓ’ என்றால், எதாவது ஒரு வேட்பாளரை ஆதரித்து வாக்கு செலுத்துவது, அதே தேர்தல் நடத்தை விதி ‘49எல்’. பார்வையற்றோர் அல்லது வேறு வகையில் வாக்கை செலுத்த இயலாதோருக்கு ‘49என்’. அதாவது, இவர்கள் தங்களின் வாக்கை பதிவு செய்வதற்காக 18 வயதுக்கு குறையாத ஒருவரை உதவிக்கு வைத்துக் கொள்ள முடியும். ‘49எம்’ இன்படி, வாக்குப்பதிவு ரகசியம். அவ்வளவே. 

இதை புரிந்து கொண்டால் ‘49ஓ’ வாக்கை வித்தியாசமான அல்லது வில்லங்கமான வாக்கவோ நினைக்க மாட்டீர்கள். எண்களோடு இருப்பது எல்லாமே ஆங்கில எழுத்துக்கள்.

நீங்க எல்லாம் கத்துகுட்டியாக ‘எல்’ போர்டு வைத்துக் கொண்டு மோட்டார் வாகனங்களை ஒட்டும்போது, நன்றாக ஓட்ட பழக்கப்பட்டவர்கள் உங்களை ஓவர்டேக் பண்றவங்க, நாமும் ஒருகாலத்தில் இப்படித்தானே இருந்தோம் என்பதை மறந்து விட்டு, கேவலமா பார்க்கிற மாதிரி, ‘ஓ’ இல் ஓட்டு போடுறவங்க எல்லாம், கேவலத்திலும் ரொம்பவே ஓவரா போய்க்கொண்டு இருந்த வேட்பாளர்களது அங்கீகார உரிமங்களை பிடுங்கி ஓரங்கட்டுறதுல கத்து குட்டியா இருந்து, இனி நீங்களும் அத்துபடியா  'ஓ' போடுற  அளவிற்கு வழியமைத்து கொடுத்திருக்கிறோம். 

எனக்கு தெரிய இப்படியொரு நிராகரிக்கும் வாக்குரிமை சட்டப்படியே இருப்பது 2001 இல் நடக்க இருந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலை ஒட்டிய தன்னார்வலர்களின் ஆராய்ச்சியில்தாம் தெரிய வந்தது.

இதுவும் எனது சட்ட ஆராய்ச்சியில் என்று தவறாக நினைக்காதீர்கள். என்னா, அப்போ நான் களமிறங்கி ஒருவருடம் தான் ஆச்சு!

ஆனாலும், அதன்படி ஆர்வலர்கள் வாக்களிக்க முடியாமல் போனது. நானும்தான்.

ஏனெனில், அதற்கான பிரத்தியோக படிவம் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று, தேர்தலை முன்னின்று நடத்திய ஊழியர்கள் தெரிவித்ததே. பிரத்தியோக படிவம் என்பது வாக்களிக்கும் ரகசிய உரிமைக்கு எதிரானது என்கிற கூக்குரலோடு இவ்விவகாரம் அடங்கி போனது

மீண்டும் 2004 ஆம் ஆண்டில், பாராளுமன்ற தேர்தல் வந்த போது உயிர்ப்பெற்றது. அப்போதும், மெத்தப்படித்த மேதாவிகளும், ஆர்வலர்களும் '49 ஓ ' குறித்து விழிப்பறிவுணர்வு இல்லாத பிரச்சாரத்தை விழிப்புணர்வு என்கிற பெயரில் செய்தனர்.

ஆம்! "49 ஓ" இல் ஒட்டு போட விரும்புபவர்கள் அதற்கென தனியாக கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என்றே பிரச்சாரம் செய்தனர். இதனால், வெகுசில ஆர்வலர்களை தவிர, மற்ற ஆர்வலர்கள் அதிருப்தி வாக்கை பதிவு செய்ய இயலாமல் போனது. இவர்களுக்கு என்னப் பிரத்தியோகப் படிவம் கொடுக்கப்பட்டது என்பதும், அப்படிவங்கள் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

சில ஆர்வலர்கள், இப்படி பதிவு செய்வதால் வாக்குப்பதிவு வெளிப்படையாகி விடுகிறது என்றும், அதனால் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஏதேதோ காரணங்களின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆனால், 49 ஓ இன்படி வாக்களிக்க தனிப்பட்ட படிவம் எதுவும் கிடையாது என்பதை சட்ட ஆராய்ச்சி முறையில் ஆராய்ந்து அறிந்திருந்ததால், '49 ஓ' இல் வாக்குபதிவை எளிதாக முதல் முறையாக வெற்றிகரமாக செலுத்தினேன்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இப்பிரச்சினைக்கு என்ன பெரிய ஆராய்ச்சி வேண்டி கிடக்கு என அத்தோடு விட்டு விட்டேன். 

மீண்டும் 2006 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்க தொடங்கிய போதும், ஆர்வலர்கள் அறிவு வறுமையில் தனிப்படிவம் என்றே பிதற்றி வந்தனர். தனி பொத்தான் வேண்டுமென வழக்கும் போட்டனர். 

நாங்களும் எங்களது பாணியில், சென்னை மாவட்ட நீதிமன்றத்திலேயே வழக்கு பதிவு செய்தோம். மத்திய அரசை மாவட்ட நீதிபதி கேள்வி கேட்டால், கிழித்து தொங்க விட்டுவாங்க இல்லியா... அதனால வழக்க விசாரணைக்கு எடுத்துக்கல. இதுவும் ஒரு ஆராய்ச்சி சோதனைக்குதாம்.

இதே நேரத்தில், சில வாசகர்களின் உதவியுடன், ‘‘உங்கள் பார்வையில் தேர்தல்...’’ என்கிற தலைப்பில், ‘‘ஓட்டுரிமை வந்தது எப்படி என்பதில் ஆரம்பித்து 49 ஓ இன்படி ஓட்டுப்பதிவு செய்வது எப்படி என்பது வரை 18 நிமிட கேள்வி பதில் முறையிலான குறும்படத்தை இரவு பகல் பாராமல், இரண்டு நாட்கள் உண்ணாமல் உறங்காமல் தயார் செய்து, தவறான கருத்துக்களை பரப்பி வந்த, மேலும் எப்படி பரப்புவது என்று விவாதித்துக் கொண்டிருந்த மெத்தப்படித்த மேதாவிகள் நிறைந்த அரங்கில் அவர்களை வைத்தே வெளியிட்டு உண்மையை உணர்த்திய பிறகே தூங்கினேன்’’.

இம்முயற்சியில் வியப்படைந்த, வின் தொலைக்காட்சியில் செய்தியும், அதன் மறுபக்கமும் என்கிற தலைப்பில் எதையும் தில்லாக விமர்சிக்கும் தோழர் டி.எஸ்.எஸ்.மணி அவர்கள் முக்கிய பங்காற்றினார்.

இதனையெல்லாம் இங்கு சொடுக்கி குறும்படத்தில் காணலாம்.

ஆனாலும், நீதியைத்தேடி... வாசகர்கள் போட்ட ஓட்டையும் சேர்த்து அதிகபட்சமாக 100 கூட 49 ஓ ஓட்டு விழுந்திருக்காது. வாசகர்கள் பலரும் கூட போட முடியாமல் ஏமாந்தனர்.

2008 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட நீதியைத்தேடி... சட்ட அறிவுகளஞ்சியம் நூலில், எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையா என்கிற தலைப்பில் இதுகுறித்து விரிவாக தெளிவுபடுத்தி இருந்தேன்.

இதனை படித்த கரூரைச் சேர்ந்த ஆனந்தன் என்கிற நண்பர் 2009 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தத்தமது வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிப்பது போல, ‘‘யார் வேண்டுமானாலும் 49 ஓ ஓட்டுக்கு வாக்கு சேகரிக்கலாம் என்கிற உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றார்’’.

தமிழ்நாடு முழுவதும் தீவிர கருத்துப் பிரச்சாரத்தில் இறங்கினோம். 27-04-2013 அன்று விஜய் தொலைக் காட்சியில் இது குறித்த விழிப்பறிவுணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்றோம்.

இதற்கு முன்பாகவே, இவைகள் குறித்து நான் தெளிவாகவும், விரிவாகவும் எழுதிய கட்டுரையை தினமணி நாளிதழ் நடுப்பக்க கட்டுரையாக 10-04-2009 அன்றே வெளியிட்டு விட்டதால், இதுகுறித்த விழிப்பறிவுணர்வு பல வகையிலும் பரவலானது. இதனைப்படித்த வாசகர்கள் பெறும் உற்சாகம் அடைந்தனர். காரணம்.


இக்கட்டுரையில் மிக முக்கியமாக வாக்காளர்களுக்கு இருந்த அச்சங்களான, ‘‘49 ஓ ஓட்டுக்கு தனிப்படிவம் எதுவும் கிடையாது, எல்லோரும் ஓட்டு போடும் அதே படிவமேதாம் மற்றும் வெளிப்படையாக ஓட்டு போடுவதால் எந்த பிரச்சினையும் வராது, அப்படி பிரச்சினை வந்தால் தனிப் பொத்தான் வந்து விடும்’’ என்கிற தெளிவையும், துணிச்சலையும் வாசகர்களுக்கு ஏற்படுத்தியது".

இக்கட்டுரையை ஆங்காங்கே இருந்த ஆர்வலர்கள், வாசகர்கள் என பலரும் அப்படியே பேனராக வைத்ததோடு, வாக்குப்பதிவு நாள் அன்று தனிப்படிவம் என்று குழப்பும் தேர்தல் ஊழியர்களுக்கு தெளிவுபடுத்த கையோடு நகலெடுத்து சென்று அதிருத்தி வாக்கை பதிவு செய்தார்கள்.

இதனால், இவ்விழிப்பறிவுணர்வு வாக்கு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் எகிறியது. இது குறித்த எண்ணிக்கை, விதிகளுக்கு புறம்பாக வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை, வெளியிடப்படவும் இல்லை. தேர்தல் ஆணைய இணையப்பக்கத்தில் இப்போது கூட கிடைப்பதாக தெரியவில்லை.

இதில் கொடுமை என்னவென்றால், மாநில தேர்தல் ஆணையராக இருந்த திரு.நரேஷ் கும்தாவும், ஆர்வலர்களோடு கூட சேர்ந்து "49 ஓ" ஓட்டுக்கு தனிப்படிவம் என ஓய்வு பெறும் வர கூத்தடித்ததுதாம்.

2011 ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தலின் போதுதாம், "49 ஓ" ஓட்டுக்கு தனிப்படிவம் கிடையாது என்று இந்திய தேர்தல் ஆணையமே தெளிவிற்கு வந்ததோடு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஐந்து மாநில தேர்தல் ஆணையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

இந்த ஆங்கில சுற்றறிக்கையை இந்திய தேர்தல் ஆணைய தளத்தில் இருந்து தரவிறக்க இங்கு சொடுக்கவும்இவ்வறிக்கையின் தமிழாக்கத்தை இத்தளத்தில் இருந்து பெற இங்கு சொடுக்கவும்

நான் தினமணி கட்டுரையில என்ன படிவம், அதை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என சொல்லியிக்கிறேனோ அது போலவே, தேர்தல் ஆணையமும் சொல்லியிருக்கா... 2009 ஆம் ஆண்டுல தேர்தல் அலுவலர்கென பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்டுள்ள கையேட்டின், 23 வது அத்தியாயத்துல இதைப்பத்தி சொல்லியிருக்கோம்னு, சொல்லி இருக்காங்களா...

ஆனால், தனியொரு மனிதனாக நான் இதையெல்லாம் ஆராய்ந்தறிந்து, 2004 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே வாக்கு பதிவு செய்து விட்டேன் என்கிற நிலையில், இந்திய தேர்தல் ஆணையமோ 2009 ஆண்டுதான் தெளிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், இன்னும் தெளியவில்லை. எப்படி என்பதை பின்னால் பார்ப்போம்.

இதெல்லாம் வெளிப்படையாவும், தெளிவாகவும் எனக்கு நன்றாக புரிவதால்தாம், ‘நம்ம நாட்டில் யாருக்கும் சரியா சட்டம் தெரியாது; அதுவும் யார் எந்த சட்டக் கடமையை செய்ய நியமிக்கப்படுகிறார்களோ, முதலில் அவர்களுக்கே அது குறித்த சட்ட விழிப்பறிவுணர்வு கிடையாது’ என்று துணிந்து சொல்ல முடிகிறதே ஒழிய, வெற்றுச் சம்பிரதாய பெருமைகளுக்காக சொல்வதில்லை.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை அடுத்து, இது குறித்த விளம்பரங்களை மாநில தேர்தல் ஆணையம் நாளிதழ்களில் வெளியிட்டது. ஆனாலும், வழக்கம்போல் தேர்தல் ஊழியர்கள் விழிப்பறிவுணர்வு இல்லாமல், புண்ணாக்காகவே இருந்தனர்.

எது எப்படி இருந்தாலும், எங்களது அதிருப்தியை பதிவு செய்தே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்ட வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் 24859 அதிருப்தி வாக்கை பதிவு செய்துள்ளனர். சென்னையில் மட்டுமே அதிகபட்சமாக 3107 பேர் பதிவு செய்து உள்ளனர். கோவை இரண்டாம் இடத்தில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்த ஆணையத்தின் அதிகாரபூர்வ சான்றை தரவிறக்க TNLA2011_49O.

தமிழ்நாட்டை தவிர, வேறு எந்த மாநிலத்திலும் "49 ஓ" பற்றிய விழிப்பறிவுணர்வு வாக்காளர்களுக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்தியாவிலேயே அதிக அதிருப்தி வாக்காளர்களை கொண்ட மாநிலமாக தமிழகமே விளங்குகிறது.

இதற்காக பலபேர், பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறார்கள் என்பதால், இந்தியாவிற்கே தமிழ்நாடு விடிவெள்ளியாக இருக்கப் போகிறது.

ஆனால், உழைக்காமல் உண்டு கொழுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, தீர்ப்பை தான்தோண்றித்தனமாக தாமதப்படுத்தியதன் மூலம், மக்களின் இரத்தத்தை அட்டைப் பூச்சியாய் உறிஞ்சி, மக்களாட்சி மலரவும், வலுப்பெறவும் பெறும் தடையாக இருந்துள்ளனர்.

இப்படியொரு ஓட்டைப் பதிவு செய்து என்ன ஆகப்போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்படியரு ஓட்டு விழுந்தாலே தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என யாருக்குமே எனது வாக்கைப் பெற தகுதியில்லை என்று சொல்லும் திருவாக்கு ஆகும்.

திருவாக்கு என்றால், மேன்மையான ஆணை (ஆட்சியை அமை) என்று பொருள்.

ஒவ்வொரு வாக்கும் மேன்மையானதுதான். ஆனால், அதனை இலவசம் என்னும் லஞ்சம், நேரடி லஞ்சம், போதையுடன் கூடிய (ப ல)ஞ்ச பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்காக வக்கற்றவர்களும், வாக்கு அற்றவர்களும் செலுத்திடும் போது அம்மேன்மைக்கு தொண்மை இல்லாமல் போயிற்று.

இதில், ஆணையம் வாக்கு அற்றவர்களிடம் இருந்து முழுமையாக இல்லா விடினும் கூட, பெருமளவு மீட்டெடுக்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள வக்கற்றவர்களை மீட்டெடுக்கும் தலையாய கடமை பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமுமே உள்ளது.

ஒருவாக்கல்ல... இருவாக்கல்ல... 24859 திருவாக்குகள் விழுந்த பின்னும் கூட, (வ, தி)ருந்தி இருக்க வேண்டிய அரசியில்வாதிகள் (வ, தி)ருந்தவில்லை. மாறாக, தோழமை கூட்டணி முறிந்த கோபத்தில் எனது ஓட்டும், என் கட்சிக்காரர்கள் ஓட்டும் "49 ஓ" க்கே என வெளிப்படையாக அறிக்கைகளை விட்டு பேசினாலும், ஒரு ஓட்டு கூட போட்டதாக தெரியவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்புதாம், ‘வேட்பாளரை நிராகரிப்பது அடிப்படை உரிமை என, அளவற்ற அறிவு வறுமையும், இவ்வறிவு வறுமையிலும் தங்களைத் தாங்களே நீதியரசர்கள் என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மெத்தப் படித்த மூதேவிகளான உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கே தெரியவந்திருக்கிறது’ என்னும் போது 2014 இல் நடக்க இருக்கிற பாராளுமன்ற தேர்தலில், இது எத்தனை குடிமக்களுக்கு தெரியப் போகிறதோ...

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தாம் அதிகபட்ச "49 ஓ" லட்சிய ஓட்டுகள் லட்சக் கணக்கில் விழும் எனவும், ஆதரவு வேட்பாளர்களை விட அதிருப்தி வேட்பாளரான "49 ஓ" பல தொகுதிகளை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் ஆனால், அவதிப்படுவதற்கு நிறையவே இருக்கிறது என்றும் நம்பலாம்.

ஆம்! இந்திய குடியரசில் இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் யாரும் உண்மையில், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே அல்ல; சிறுபான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்று சொன்னால், உங்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாகத்தாம் இருக்கும்.

ஆனால், இதுதாம் உண்மை. உண்மையாக, தேர்தல் நடத்தை விதிகள் 1961 இன் விதி  "49 ஓ" இன்படி, வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வழங்கப்படாத எந்த தேர்தலும், எப்படி நியாயமான தேர்தல் என்றும், மக்களாட்சிக்கான தேர்தல் என்றும் சொல்லமுடியும். சரி, இப்போதுதாம் நிராகரிப்பு உரிமையை வழங்கி விட்டார்களே...

எனவே, அடுத்த தேர்தல் முதல் மக்கள் ஆட்சி உறுதிதானே என்றால் அதுவும் கிடையாது. இன்னும் எத்தனை எத்தனையோ சங்கதிகள் இருக்கின்றன. இவைகள் அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கப் போவது, இந்நிராகரிப்பு உரிமைதாம்.

இது குறித்து மகத்தான மக்களாட்சி மலர... என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்று விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதனை படிக்க இங்கு சொடுக்கவும்.

இங்கு மிக முக்கியமாக மேலே குறிப்பிட்ட சிறுபான்மை மக்கள் என்பதற்கு சாதி, மத ரீதியாகவோ அல்லது தங்களை தாங்களே சிறுபான்மையினர் என பெருமையாக குறிப்பிட்டுக் கொள்ளும் மக்கள் என்றோ தவறாக பொருள் கொள்ள கூடாது.

குழந்தைகளுக்குள் பிடிக்காத சம்பவம் எதாவது நடந்து விட்டால், அதனால் பாதிக்கப்பட்ட குழந்தை வேறு ஏதோவொரு விதத்தில், வீம்புக்காக ஏடாகூடமாக எதையாவது செய்து மடக்கி விட்டு, இப்ப என்ன பண்ணுவ என்று கேட்கும். இதில், மற்ற குழந்தைகளும் மாட்டிக் கொள்ளும்.

"49 ஓ" குறித்து காலம் கடந்த உச்சநீதிமன்றத்தின் (து, த)ப்பில்லாத தீர்ப்பு, நம்மைப் (மக்களைப்) பொருத்தவரை   இப்படித்தான் இருக்கப் போகிறது.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, September 30, 2013

வாசகர்களை வறுத்தெடுப்பது எப்படி?


albert-einstein5வாசகர்களில் (வெகு சிலர்) சும்மாவே நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என பீலா விடுபவர், சாதனையை செய்து விட்டு சொல்பவர், செய்த சாதனையை கூட சொல்லாதவர் என மூன்றாக பிரிக்கலாம். 


இதில் பெரும்பாலும், மூன்றாவது வகையினரை தவிர, மற்ற இரு வகையினரும், நான் இவ்வளவு தூரம் சாதனை புரிய காரணமே நீங்கதாம், உங்க சட்ட விழிப்பறிவுணர்வுதாம் என்பார்கள். இதிலும், பீலா பார்ட்டிகளோட தொல்லை தாங்க முடியாது.


அவர்களுக்கு ஒரே வார்த்தையில் நான் சொல்வது, ‘எல்லா வாசகர்களும் சாதித்து விடுவதில்லை. அப்படியரு சூழ்நிலை வரும்போது, அதற்கு நான் பொறுப்பேற்க தயார். மற்றபடி, நீங்கள் நிகழ்த்திய சாதனைகளுக்கெல்லாம் நீங்களே பொறுப்பு’ என்பதே!


படிக்கும் எல்லா வாசகரும் பக்குவப்பட்டு விடுவதில்லை என்பதும், பக்குவப்பட்டவர்களே பலனை அடைகிறார்கள் என்பதுதானே எதார்த்த உண்மை!


நமது சட்ட விழிப்பறிவுணர்வு எந்த அளவிற்கு வாசகர்களிடம் சென்றிருக்கிறது, சட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து முடிவை அறிவிக்க வேண்டும் என நினைத்தோம்.


பொதுவாக கருத்துக்கணிப்பு என்பது வெளிப்படையாக நடத்தப்படுவதால் மிகமிக துள்ளியமானதாக, உண்மை நிலையை உணர முடியாமல் போய் விடுகிறது. ஆதலால், இக்கருத்துக் கணிப்பை மாற்று முறையில் செய்ய வேண்டும் என எண்ணினோம்.


புகழ் பெற்ற தமிழ் திரைப்படங்களில் ஒன்று திருவிளையாடல். மனிதனின் வாழ்க்கைக்கு அவசியத் தேவை எது ‘‘கல்வியா, செல்வமா, வீரமா’’ என போட்டி வைத்து இம்மூன்றுமே அவசியத் தேவை என்பதை உணர்த்துவார்கள்.


வாசகர்களை வறுத்தெடுத்து, பன்படுத்தும் சட்டத் திருவிளையாடலுக்கு ‘‘கடமையா!! உடமையா! மடமையா?’’


2009 எப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்களின் தினம்.


இதற்கு முந்தைய வாரம்தான், சேலத்து பொய்யர்களை வறுத்தெடுத்திருந்தோம். இதனை இன்று உண்மையாக்கி, வாசகர்களின் சட்டத்தெளிவை பரிசோதித்து விடுவது என்று முடிவு செய்தோம்.


ஆதலால், ‘சேலத்து பொய்யர்கள் கொடுத்த புகாரின் பேரில், என்னை சென்னையில் கைது செய்து, சேலத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும், ஆதலால் என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், தொடர்பு கொண்டால் நீங்களும் விசாரணைக்கு ஆளாக நேரிடும்’ என்ற குறுஞ்செய்தியை தேர்வு செய்திருந்த பத்து வாசக பெருமக்களுக்கு அனுப்பினோம்.


அவ்வளவுதான், கைது விசயம் நல்லாவே பத்திகிச்சு.


முதலில் தொடர்பு கொண்டது தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த இன்பம். நானும் காவலரைப் போல் மாற்றுக்குரலில் ஏடாகூடமாகவும், மரியாதை இல்லாமலும் பேச தயாரானேன்.


இன்பம்: இனிய காலை வணக்கத்தை உரித்தாக்கி கொள்வது இன்பம்.


வாபா: உனக்கு யாரு வேணும்?


இன்பம்: நீங்க வாரண்ட் பாலா சார்தான?


வாபா: இல்லை. அவரை விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். நீ என்ன அவனோட நண்பனா?


இன்பம்: இந்த நம்பர் கும்பகோணம் இல்லியா? சாரி சார். ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார்.


என்ன இன்பம்... சட்ட விழிப்பறிவுணர்வால் ஊர்ல அதைச் செய்தேன், இதைச் செய்தேன்னு சொல்லுவீங்க. என்னாத்த செய்திங்களோ...


அடுத்து திருவண்ணாமலையில் இருந்து கந்தசாமி... வணக்கம் சார்.


வாபா: சொல்லுயா, நீ எந்த ஊர்லேந்து பேசுற. உன்பேர் என்ன? அட்ரச சொல்லு...


சாமி: பாலா சார் இல்லிங்களா?


வாபா: நீ என்ன அவனோட கூட்டாளியோ? உன் அட்ரச சொல்லு, முதல்ல...


சாமி: இல்லிங்க சார் என்று கூறி விட்டு தன்னோட பேரு, ஊரு எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொல்றார்.


வாபா: என்ன பேர மாத்தி சொல்லுற? செல்லுல உம்பேரு கந்தசாமின்னுல்ல வந்தது என்றதுமே கட்.


என்ன கந்தசாமி... தெரிந்த தகவலை வேண்டுமென்றே மாற்றி சொல்வது சட்டப்படி குற்றம் இல்லையா... என்னாத்த சட்டம் படிக்கிறீங்களோ?


அடுத்ததாக சேலத்தில் இருந்து இரண்டு மனோகர்கள். முதலில் மனித உரிமைகள் பேசும் மனோகர்...


மனோ: வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?


வாபா: பாலா விசாரணையில இருக்காரு. நீ எந்த ஊர்லேந்து பேசுர? அட்ரச சொல்லு?


மனோ: யோசித்து யோசித்து தவறான சென்னை முகவரி ஒன்றை சொல்கிறார்.


அடுத்ததாக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் மனோகர்...


மனோ: வாரண்ட் பாலா சார் இருக்காங்களா? (நான் கைதாகிட்டேன் கன்ஃபார்ம் பன்னிட்டார்)


வாபா: நீ என்ன அவனோட நெருங்கிய கூட்டாளியா?


மனோ: ஆமாம், இல்ல இல்ல... சும்மா தெரியும்.


வாபா: எங்கேந்து பேசுற?


மனோ: சேலத்தில் இருந்து... அத்தோடு கட்.


அடுத்ததாக நாமக்கல்லில் இருந்து மனித உரிமை மதியழகன்... (நான் உண்மையிலேயே கைதாகியிருக்கேன்னு நினைத்து... அப்படி போடுங்க, இப்படியும் நடக்கும்னு நம்பனும்)


மதி: வாரண்ட் பாலா சார்கிட்ட பேசனும்.


வாபா: நீ யாரு, எங்கே இருந்து பேசுற?


மதி: மனித உரிமை இயக்கம் நாமக்கல்லில் இருந்து பேசுறேன்.


வாபா: யோவ், நீ யாரா இருந்தா எனக்கென்ன?


மதி: என்ன சார் மரியாதை இல்லாம பேசுறீங்க? (அட, தைரியம் பரவாயில்லியே)


வாபா: என்ன மரியாதையா பேசுங்குற... உன் பேரு என்னான்னுதான கேட்டேன்?


(உண்மையில், பேர மட்டும்தான் சொல்லனும், என்ன பண்ணுறீங்கன்னு கேட்டாதான், பண்ணுற வேலைய சொல்லனும்) 


மதி: மதி, நாமக்கல்லில் இருந்து பேசுறேன். (இப்ப சரியாயிடுச்சி பாருங்க!)


வாபா: சரி, விசாரிச்சிகிட்டு இருக்கோம். நீ அப்புறமா பேசு...


இதுக்கு மேல என்ன பொய் பேசுறதுன்னு தெரியல. வார்த்த வேற வர மாட்டேன்னு அடம்பிடிக்குது. தொண்ட வேற வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி. பழக்கம் இல்லாததுதான் காரணம்.


ஆனால், நான் எதிர்பார்த்தபடி சட்டக் கடமையை ஆற்றும் இந்திய குடிமகன் பேசுரேன்னு சொல்லி கதிகலங்க வைப்பாங்கன்னு பார்த்தா, ஒருத்தர் கூட சொல்லல.


இப்படி தொடர்பு கொண்டவர்களின் பலரது தொடர்பை, மரியாதைக் குறைவாக பேச வேண்டிய காரணத்தினாலேயே ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம், சூழ்நிலைக்கு தக்கவாறு மரியாதைக் குறைவாக பேசியதை பொறுத்துக் கொள்ள கூடியவர்கள்.


இப்படி ஒரு பக்கம் தொடர்பு கொள்ளாதீர்கள் என்று சொல்லியிருந்தும் கூட, விசாரணைக்கு பயப்படாமல் பலர் தொடர்பு கொண்டது அவர்களின் சட்டக் கடமையை உணர்த்தியது.


அழைப்பை எடுத்ததுமே குரலை மாத்தி பேசி எல்லோரையும் ஏமாத்துற மாதிரி என்னை ஏமாற்ற முடியாது என்றது, சேலம் கதிர்வேல். ( அட்ரா சக்க... இவர் ஒரு தொழிற்சங்கவாதி) 


முட்டாள் தினம் அதுவுமா ஏமாற தயார் என்றாலும், வாரண்ட் பாலா கைது என்று ஏமாற தயாரில்லை என்று பலர் கூறியுள்ளனர். சபாஷ்! ஆனாலும், ரொம்ப ஓவர் கான்பிடன்ட்!! 


அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரு கைது செய்ய என்றது ஓசூர் நாகஜோதி பாபு. (சரிதான்!)


கைது செய்த காவலர்கள் இவர்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடுறாங்களோ... நமக்கு பார்க்க கொடுத்து வைக்கலியே என்பது நாமக்கல் தனம். (அய்யோ பாவம்!)


இவரைப்பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்.


ஒருசிலர், மூன்று வாரண்டை ஐந்து வருடமாக வச்சிகிட்டு அலையுற அவர இந்த காலத்துல மட்டுமில்ல எந்த காலத்திலேயும் கைது செய்ய முடியாது. அப்படி செய்தால் நீதிபதிகளுக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம்.


சரிதான், எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?


காந்தி சொன்னதைத்தான் நான் சொன்னேன் என்பதால் காந்திதான் முதல் குற்றவாளி. முதலில் அவரை கைது செய்து விட்டு, என்னை கைது செய்ய வா என்பார் என்பது போடி ராஜசேகரன்.


சாட்சியத்தோட பேசுரதுல ரொம்பவே தெளிவாயிருக்காரு பாருங்க...


ஒருவேளை கைது செய்திருந்தால் என் சொத்து அத்தனையையும் சூரிட்டியா கொடுத்து பிணையில எடுப்பேன் என்றது ஈரோடு போக்குவரத்து கழக தொழிற்சங்கவாதி குணசேகரன்.


சபாஷ்! இப்படித்தான், எதுவானாலும் பரவாயில்லைன்னு தெளிவா இருக்கோணும்.


சரி, வாசகர்கள் இப்படி இருக்கும் போது, வாசகர் மற்றும் வாசகரில்லா பொய்யர்கள் எப்படி இருக்காங்க என்கிற சோதனையில்...


வாசகர்: வாரண்ட் பாலாவ கைது பண்ணிட்டாங்க பெயில்ல எடுக்கனும்...


பொய்யர்: கவலைப்படாதிங்க. பெயில்ல எடுத்துடலாம். என்ன.. கூடுதல் செலவாகும்.


இதுதான், சந்துல சிந்து பாடுறதுங்கிறது... ஏமாத்துறதுல என்னா திறம!


வாசகர்: அதுக்கென்ன பிளாங் செக்கே தர்றேன். நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்குங்க... ஆனா, இன்னைக்கே வாரண்ட் பாலாவ பெயில்ல எடுத்தாகனும்னு ஒத்தக்காலில் நிக்க...


நம்மைப்பற்றி நன்றாக அறிந்த பொய்யரின், கூட்டாளி பொய்யர்...


கூபொ: அவன் நம்மளைப்பத்தி எவ்வளவு மோசமா எழுதுறான். அவன பெயில்ல எடுப்பியா நீன்னு கேட்க, யாரு எது செஞ்சாலும் அத ஆதரிக்கிறதுதானே நம் தொழிலுன்னு சொல்லி ரெண்டு பேரும் மல்லுக்கு நிக்கிறாங்க...


பொய்யர்கள் நினைக்கிறபடி இவ்வளவு மோசமா எழுதுற நம்மகிட்டையே நடந்துகிற யோக்கியதை இதுன்னா, நீங்க மாட்டினா... யோசிச்சு பாருங்க!


இடையில் நாரதராக வந்த சேர்ந்த நம் வாசகியான பெண் பொய்யர்


பெபொ: ஏம்பா தேவையில்லாம நீங்க சண்டப் போட்டுக்குறீங்க... ஜாமீன் எடுப்பது எப்படின்னு புத்தகம் எழுதின அவரு, எல்லோரையும் ஜாமீன்ல எடுப்பாரு... 


ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க... நல்லாத்தான் சொல்லுறீங்க... ஆனா, அந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆளாக விரும்பல.


பெபொ: அவங்களோட புத்தகத்தை விக்கிறத்துக்காக புரளிய கிளப்பி விட்டுகிட்டு அலையுறாங்க... என்பது கும்பகோணத்தில் மூன்று பொய்யர்கள் மற்றும் வதந்தியை கிளப்பி விட்ட வாசகருக்கு இடையில் நடந்த உரையாடல்.


அதான பார்த்தேன். போயும் போயும் யார, யாரை ஏமாத்தப் பாக்குறீங்க... ஊர்ல ஆரம்பிச்சு உலகத்தையே பொய்திறமையில ஏமாத்திகிட்டு இருக்கிற எங்களையே ஏமாத்த பாக்குறீங்களா...


பொய்யர்கள் புத்தகத்த விக்க கிளப்பி விட்ட புரளி போலன்னு, நீங்க யாராவது நினைத்தால், அதற்கு நாங்க பொறுப்பல்ல.


வாசகரரோட, பொய்யர்களோட நிலைகளை பாத்தாச்சு, போலீசோட நிலை என்னான்னு பார்க்க வேண்டாமா...


தான் காவல்துறையில் பணியாற்றிய போது, தனக்கு கீழ் பணியாற்றி பின் சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்தவரை பிடித்து பல விதங்களில் லெப்ட் ரைட் வாங்கி விட்டார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுற்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீ.செ.கருப்பண்ணன்.


இவர், உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக உயர்ந்தவர். தான் தொடுக்கும் வழக்குகளில் அரசுப் பொய்யர்கள் மற்றும் கொள்ளையர்கள் ஏடா கூடமாக எதாவது செய்தால், அவர்களை ஒருவழி பண்ணிவிடுவார். நமது நீதியைத்தேடி... நூல்களை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து வருபவர்.
கொடுமையிலும், கொடுமை என்னான்னா, காந்தியின் இந்தியத் தன்னாட்சி நூலை வைத்திருப்பதே குற்றம் போல என்று நினைத்த ஒரு வாசகர், அதனை தீயிட்டு எரித்தே விட்டார் என்பதுதாம்.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)