நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, January 12, 2018

அர்த்தமுள்ள ஆய்வுக் கட்டுரையை எழுதுவது எப்படி?!


இன்று யாரைப் பார்த்தாலும், அவர்களுக்கு தகுதி இருக்கிறதோ, இல்லையோ ஆராய்ச்சியாளர்கள் என்று சர்வ சாதாரணமாக சொல்லிக் கொள்கிறார்கள். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற விதி விலக்கெல்லாம் கிடையவே கிடையாது. இதிலும் படித்த முட்டாள்களின் ஆராய்ச்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். 

ஆமாம், கல்வி கற்று தேர்ந்துள்ள ஒருவரிடம், நான்கு மீட்டர் நீளமுள்ள இரும்பு கம்பியை ஒரு மீட்டர் நீளமுள்ள துண்டுகளாக, மிகச் சரியாக வெட்டினால் எத்தனை கிடைக்கும் என்றால் நான்கு கிடைக்கும் என்பார். இதையே கல்வி கற்காத ஆனால், அவ்வேலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கேட்டால் மூன்றுதாம் கிடைக்கும் என்பார்.

உடனே நாம், என்ன இருந்தாலும் படிச்சவன், படிச்சவன்தான்! என்னதான் படிக்கவில்லை என்றாலும், இந்த சிறு விபரமே தெரியாதவர் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவார் என்றே நினைப்போம். ஆனால் உண்மை என்ன?

படித்தவர் போட்டது கல்விக் கூடத்தில் போட்ட மனக் கணக்கு. படிக்காதவர் போட்டது, தன் வாழ்வில் நடைமுறைப்படுத்திய அனுபவ கணக்கு. அதாவது இரும்பு கம்பியை உட்ட ஏதாவது ஒரு உபகரணத்தை பயன்படுத்தியே ஆக வேண்டும் அல்லவா?

இதில் சிறந்த உபகரணம் என்று ஹாக்சா பிளேடை எடுத்துக் கொண்டால் கூட, அதன் கனம் ஒரு மில்லி மீட்டர் என்று கொண்டால், மூன்று முறை அறுத்தால், குறைந்தது மூன்று மில்லிமீட்டர் காணாமல் போய் விடும். இதுமட்டுமல்லாமல், மேலும் சில விசயங்கள் உண்டு என்பதை இதற்கு மேல் நீங்களே புரிந்து கொள்ள முடியும்.  

இப்படிப்பட்ட வேறுபாட்டை களையும் ஒரு முயற்சியாக படித்த அறிவு வறுமைவாதிகள் கொண்டு வந்த திட்டமே, ‘‘ஆங்கிலத்தில் டாக்டரேட் என்று சொல்லப்படும் முனைவர் பட்டம்’’. இப்போது இப்பட்டமானது பல்கலைக் கழகங்களால் கூவி கூவி விற்கப்படுவதால், பணம் சம்பாதிக்க ஆசைப் படுபவர்கள், அதனை வாங்கவும் அலை மோதுகிறார்கள்.

இவர்கள் மேற்கொள்ளும் சுய(நல)க்கள ஆய்வு மற்றும் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் எல்லாம் கூட, நான் முன்னர் சொன்ன எழுத்தாளர்களைப் போன்றதே என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

படித்தவர்களின் ஆய்வுகள்தான் இப்படி கேவலமாக இருக்கிறது என்றால், படிக்காதவர்களின் ஆய்வுகள், விரிவஞ்சி வவரிக்க விரும்பாத வகையில் பல்வேறாக கெட்டுக் கிடக்கிறது. 

ஆய்வு என்றாலே, ஆராய்ச்சி செய்தல் என்று பொருள். ஆகையால், ஆய்வாளர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எது ஒன்றையும் ஆராய்ந்து, அதன் உண்மையை அறிந்தே அதனை வெளிப்படுத்த வேண்டும். 

இப்படிப்பட்ட  ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சார்புத் தன்மையோ அல்லது மற்றவர்களை துதிப்பாடிப் பிழைக்கும் பிச்சைக்காரர்களாகவே இருக்கக்கூடாது. மாறாக, தான் ஆராய்ந்து அறிந்தவற்றை தயங்காது எடுத்துரைக்கு ஆன்ம பலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆமாம், தான் சொல்லுங் கருத்து இந்தெந்த பிரபலங்கள் சொன்ன கருத்துக்களுக்கு எதிராக இருக்குமே, ஆகையால் எதிர்ப்பு இருக்குமே என்ற அச்சமும் இருக்கக்கூடாது.

எதிலும் நல்லது கெட்டது கலந்தே இருக்கும் என்பதால், தான் ஆராயும் விடயத்தில் இதுவும் இருக்கிறது; அதுவும் இருக்கிறது எனக்கூறி குழப்பக்கூடாது. எது அதிகமாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இரண்டையும் சொல்வதாக இருந்தால், எது கூடுதலாக இருக்கிறது என்று தெளிவுபடுத்த வேண்டும்.

இதற்கு முதலில் ஆதரவாக ஆராயப் போகிறோமோ அல்லது எதிர்ப்பாக ஆராயப் போகிறோமா என்று முடிவு செய்துக் கொள்வது முக்கியம். ஏனெனில், தேடலுக்கு ஏற்பவே விடியல் என்பதுபோல, இம்முடிவுக்கு தக்கவாறுதான் விடை கிடைக்கும்.

ஒன்றை மட்டுமே ஆதரிப்பதாக இருந்தால், அதனால் உள்ள பயன்களையும், ஆதரிக்காததில் உள்ள பாதகங்களையும் பட்டியலிட்டுக் காட்டுவது சிறப்பானதாக இருக்கும். இப்படிச் செய்வது எந்த விதத்திலும் குற்றமாகாது.

இதற்கு ஆராய்ச்சி உண்மையாக இருக்க வேண்டும். பொய்யான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டால், அதற்கான விளைவுகளையும், விமர்சனங்களையும் சந்திக்க நேரிடும், எச்சரிக்கை!

பயன்களை மட்டுமே பட்டியலிட்டு காட்டுவதன் மூலம் மட்டுமே பாதகங்களை புரிந்து கொள்ளவும் வைக்கலாம். ஆனால், புரிந்து கொள்பவர்கள் நாம் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்துக் கொள்வார்களா அல்லது அவரவர்களது இஷ்டப்படி புரிந்து கொள்வார்களா என்பதை கணிக்க முடியாது அல்லவா?

ஆகையால், நாம் சொல்ல விரும்பும் பாதகக் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக பதிவு செய்வதே நல்லதாக இருக்கும். இப்படி பதிவு செய்தாலே கூட, பலர் புரிந்துக் கொள்ளும் தன்மையில் இருக்க மாட்டார்கள் என்பது வேறு விடயம்.

தங்களின் கருத்து ஆதரவாக ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டுவது, கூடுதல் வலுவே தவிர தவறில்லை. ஆனால், அம்மேற்கோள் தன்னைவிட உயர்ந்தவர்களுடையதாக இருக்க வேண்டுமே அன்றி, தரந் தாழ்ந்தவர்களுடையதாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது ஆய்வாளர்களின் தரத்தை காட்டி விடும்.

மேலும், மேற்கோள் காட்டப்படும் நபர்களும் ஒரு சார்புத் தன்மை உள்ளவர்களாக இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம். அதாவது, ஒன்றின் மீது நம்பிக்கை இல்லாதவர், அதுபற்றிய நம்பிக்கை ஏற்படும் விதத்தில் எழுத முடியாது.

‘‘நமக்காக நாமேதான் வாதடனும்’’ என்ற நம் கொள்கைக்கு மாறாக, நம்மை விட சட்ட விரோதத் தொழில் செய்யும் பொய்யர்கள் சிறப்பாக வாதாட முடியும் என என்னால் கட்டுரை எழுத முடியுமா? அப்படி எழுதினால் என்ன அர்த்தமாகும்??

சரி விட்ட விசயத்துக்கு வருகிறேன்.

ஆய்வில் தான் காட்டும் உயர்ந்தவரின் மேற்கோள் பகுதியை எவரும் எளிதில் படித்துப் பார்க்கும் வண்ணம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். பெரும்பாலும், நூல்களில் இருந்துதான் மேற்கோள் காட்டுவார்கள். ஆகையால், அந்நூல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி இருக்க வேண்டும்.

ஒருவேளை அந்நூல் மிகவும் பழமையானது என்பதோடு, தற்போது பதிப்பில் இல்லை என்றாலோ அல்லது எவ்வகையிலும் எளிதில் கிடைக்காது என்றாலோ, அந்தக் குறிப்பிட்டப் பகுதியை மட்டும் அப்பழுக்கற்ற வகையில் அக்கட்டுரையிலேயே அச்சேற்றிவிட வேண்டும். இதை வைத்துத்தான் அதன் உண்மை தன்மைபற்றி படிப்பவர்கள் முடிவுக்கு வரமுடியும்.

இல்லையேல், மேற்கோள் காட்டப்பட்ட கருத்து, எந்த அளவிற்கு உண்மையானது என்ற கேள்விக்குறி, படிப்பவர்கள் அனைவரின் எண்ணத்திலும் எழுந்து விடும்.

ஆனால், ஆண்டாளை சிறப்பிக்கும் கட்டுரை என்று கூறி, கவிப் பொய்யர் வைரமுத்து 08-01-2018 அன்று தினமணியில் எழுதிய ‘‘தமிழை ஆண்டாள்’’ என்றக் கட்டுரையில், இப்படியொரு கருத்தை மேற்கோள் காட்டி உள்ளார்.


நான் ஏற்கெனவே சொன்னபடி, அந்த நூலில் இந்த கருத்துதான் சொல்லப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது என்பதோடு, அந்த நூலின் பகுதியும் வெளியிடப்படவில்லை. இதுபற்றி எல்லாம், கவிப் பொய்யரை யாரும் கேள்வி கேட்கவில்லை.

உண்மையில், அந்த நூலில், ‘‘இப்படியொரு கருத்து இருக்கிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை ஆகையால், உண்மையல்ல’’ என்றுகூட சொல்லப்பட்டு இருக்கலாம். இதில், கவிப் பொய்யர் முதல் பகுதியை மட்டும் எடுத்துச் சொல்லி இருக்கலாம் அல்லது கவிப் பொய்யர் சொன்னபடி தான் சொல்லப்பட்டு உள்ளது என்பதற்கு என்ன ஆதாரம்?!

என்னது இப்படி எல்லாங்கூட செய்வார்கள் என எண்ணாதீர்கள். செய்கிறார்கள் என்பதைப் பற்றிய என் அனுபவத்தையே  சொல்கிறேன்.

இப்படித்தான், என் நூலில் நான் முன்னதாகச் சொன்ன குறையை எடுத்துக்காட்டி விட்டு, அதன் தொடர்ச்சியாக தீர்வாக சொல்லப்பட்டதை சொல்லாமல் விட்ட ஓரிரு அற்பர்களின்  செயல் அனுபவங்களைப் பெற்று, அவர்களை எச்சரித்து இருக்கிறேன்.

இவ்வளவு ஏன்... இப்படிப்பட்ட, இழி செயலை நம் ‘‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலுக்கு தினமலரில் மதிப்புரை எழுதியப் ‘‘பின்னலூரான் என்ற பொய்யரே செய்தார்’’ என்பதை, ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் விரிவாகச் சொல்லி உள்ளேன்.

தன் கட்டுரையின் கருத்துக்கள் உண்மையானவை என்றால், அதனால் வரும் எதிர்வினை எதுவாயினும் அதனை உண்மையோடு எதிர்க்கொள்ள முடியும். ஆகையால், அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. மாறாக கேட்டால், கட்டுரையின் கருத்து உண்மையல்ல என்பதே கருத்தாகும்.

இதன் மூலம், இவர் ஆண்டாளை சிறப்பித்து கட்டுரை எழுதினாரா அல்லது அவதூறு செய்து கட்டுரை எழுதினாரா என்றால், சிறப்பித்து எழுதுவதுபோல அவதூறாக எழுதி உள்ளார் என்பதே சரி.  இதுவொரு திட்டமிட்ட செயல் என்பதால், சட்டப்படியோ, நியாயப்படியோ மன்னிக்கத் தக்கதும் அல்ல. 

மேலும், இப்படி எதையாவது பேசிவிட்டு அல்லது எழுதி விட்டு பின் அதற்காக வெட்கமே இல்லாமல் மன்னிப்பு கேட்பவர் என்பதற்கு, இவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இவர் கேட்ட மன்னிப்பு பற்றி, அவ்வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ள பகுதியிது!


இதிலிருந்து இவர் ஆய்வுக் கட்டுரை எழுத தகுதியற்ற ஒரு முட்டாள் என்றோ அல்லது ஆண்டாள் குறித்து தான் சொல்ல வந்த அவதூறு கருத்தை நேராகச் சொல்லும் ஆண்மை இல்லாதவர் என்றோ அல்லது தான் என்ன எழுதுகிறோம் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத பைத்தியம் என்றோதான் கருத வேண்டுமே தவிர, கவிஞர் என்று கருதக்கூடாது.

ஏனெனில், அறிவின் எல்லையை கடந்து, இயல்பான கவித்துவத்தை பெற்றவர்களைத்தான் கவிஞர்கள் என்பர். இவர்கள் பாடிய கவிகளே, (இ, எ)ன்றும் இலக்கிய காவியமாக இருக்கிறது.

ஆனால், இவரோ, ‘‘கண்ணுக்கு மை அழகு; கவிதைக்கு பொய் அழகு’’ என கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப, பணத்துக்கு பாட்டெழுதும் கவிப் பொய்யரே என்பதை 2016 ஆம் ஆண்டில் எழுதிய ‘‘மநு வரையுங்கலை!’’ நூலிலேயே எழுதி விட்டேன்.

இந்தப் பைத்தியத்தின் கட்டுரையை, நல்லதொரு நாளிதழாக விளங்கியும், நல்லதொரு தமிழைப் பரப்பியும் வரும் தினமணியில், எப்படி ஆசிரியர் வைத்தியநாதன் வெளியிட்டார் என்பது, புரியாத புதிராகவே இருக்கிறது. 

ஆமாம், நானும் தினமணியில் இரண்டு நடுப்பக்க கட்டுரைகளை எழுதி உள்ளவன் என்ற முறையிலும், இதுபற்றி அவரே என்னிடம் தொடர்புக் கொண்டு பேசிய வகையிலும், அவரின் சம்மதம் இல்லாமல் எந்தவொரு கட்டுரையும் வெளிவராது.

இதனால் தானோ, என்னவோ தன் வருத்தத்தையும், வாசகர்களின் ஆட்சேபனைகளையும் வெளியிட்டு வருகிறார்.


(இ, உ)றுதியாக, இயல்பான ஆராய்ச்சியில் ஈடுபடு பவர்களுக்கு, இதைப்பற்றி எல்லாம் வெளிப்படையாக தெரியா விட்டாலுங்கூட, இயல்பினாலே இதை எல்லாம் நிச்சயம் உணர்ந்தே இருப்பவர் என்பது என் அனுபவம். என்னுடைய சட்ட ஆராய்ச்சியில், இதையெல்லாம் இயல்பாகவே பின்பற்றி இருக்கிறேன்.  

எனவே, ஓர் ஆராய்ச்சியாளர் இந்த வழிமுறைகளில் தான் தங்களின் ஆராய்ச்சியை செய்திருப்பர். அது சம்பந்த மானவற்றை எழுதி முடித்தும் இருப்பர். ஆகையால், இதில் மறு பேச்சிக்கே இடமில்லை என்ற வகையில், எந்த சர்ச்சையும் எக்காலத்திலும் எழாது.

மொத்தத்தில், ஆய்வுக்கட்டுரைகள் அர்த்தம் உள்ளதாகவும் சமூகத்திற்கு பயன்மிக்கதாகவும் இருக்க வேண்டுமே தவிர, அற்பத்தனமானவற்றை எழுதி, அதனை விவாதப் பொருளாக்கி தங்களை வெளிப்படுத்திக் கொள்வதாக இருக்கக்கூடாது.

அப்படி இருந்தால், அவன் ஆய்வுக் கட்டுரை எழுதும் தகுதியுள்ள மனிதனல்ல; மாறாக, நீங்கள் நினைப்பதை நிரப்பிக் கொள்ளுங்கள். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, January 9, 2018

தைப்பூச வழிபாடு செய்ய வடலூர் செல்பவரா?


எந்த ஓர் இயக்கமும், அந்த இயக்கத்தை தோற்றுவித்த வர்களுக்குப் பின், அதன் கொள்கைக்கு நேரெதிராகவே செயல்படும் என்பது என் ஆய்வு முடிவு. 

ஆனால், இது ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தன்னார்வத்தின் பேரில் தொடங்கப்பட்ட குறிப்பிட்ட சிலரது அமைப்புகளுக்கு மட்டுந்தான் பொருந்துமே ஒழிய, மற்றபடி அரசு என்ற அமைப்பு உள்ளிட்டு தற்போது தொடங்கப்படும் எந்தவொரு அமைப்புக்கும் பொருந்தாது. 


இதன்படி, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அன்னதானமே உன்னதமான தானம் என்று கருதி, வடலூர் சத்திய ஞான சபையில், திருஅருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பு, இன்றும் எரிந்து பலரின் பசியை தீர்த்து வருகிறது.

ஆனால், வள்ளலாரின் கொள்கைக்கு மாறான சட்ட விரோத செயல்கள் பலவும் அங்கு பொறுப்பில் உள்ளவர்களால் அரங்கேற்றப் படுகின்றன. 

இதனை தடுக்க வேண்டியவர்களும், அதில் ஊறித் திளைக்கிறார்கள். ஆகையால், எப்படி தடுப்பது என்று தடுக்க நினைப்பவர்களுக்கும் தெரியவில்லை. மக்கள் நினைத்தால் எதையும் தடுக்கலாம்.

ஆமாம், மக்களால்தான் எல்லாம் நடக்கிறது என்பதோடு மக்களை முன்வைத்தே அனைத்தும் நடத்தப்படுகிறது. 

மக்கள்தான் வாரி வழங்குகின்றனர். ஆனால், தாங்கள் வாரி வழங்குவது என்னவாகிறது என்பதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடே இல்லை.

காரணம், இதுபோன்ற ஆன்மீக இயக்கங்களில் தவறுகள் நடக்காது என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இதுவே, அவர்கள் துணிந்து தவறு செய்வதற்கு, அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது.

திருஅருட்பிரகாச வள்ளலார் போன்ற மகான்கள் தன் நற்சிந்தனையில் உருவானவற்றை, அவ்வாறே ஆரம்பித்து வைத்து, மக்களுக்குத்தான் அர்ப்பணித்துச் சென்றார்களே தவிர, மற்றபடி தனக்குப் பின்னால், அதில் ஊழியம் செய்பவர்கள் கொள்ளையடிப்பதற்காக அல்ல.

ஆகையால், எந்தவொரு மகானின் கருத்துக்களையும், காரியங்களையும் காக்க வேண்டியது மக்களின் கடமையை! இதுவும் அம்மகான்களின் நலனுக்காக அல்ல; தங்களின் நலனுக்காகவே!!

ஆமாம், சத்தியத் தருமச்சாலையில் நீங்கள் கொடுக்கும் அரிசி மூட்டை, பருப்பு மூட்டை, எண்ணெய், துணிமணிகள் உள்ளிட்ட  விலை உயர்ந்தப் பொருட்கள் எல்லாம் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டு, பெறும் பணம் களவாடப்படுகிறது. 

ஆமாம், இந்த வகையில் களவாடியப்பணத்தில், இரண்டு அடுக்கு மாடி வீட்டை, அங்கு கூட்டிப் பெருக்க வந்த ஒருத்தியை, தன் கூத்தியாளாக வைத்துக் கொண்டு, அவள் பெயரில் கட்டி இருக்காராம், கணக்குப் பிள்ளை! 

இவரைப்பற்றிய பத்திரிகை செய்திகள் பல உள்ளன. ஓய்வு பெற்றப் பின்னும், மூன்று வருடங்களாக பணியில் நீடிக்கிறார் என்றால், இவரது செல்வாக்கு எத்தகையது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். 

யார் யாரோ நன்கொடையாக அச்சடித்துத் தரும் லட்சக்கணக்கான ஆறு திருமுறைகள் உள்ளிட்ட அனைத்து நூல்களையும் இரசீது வழங்காமல் விற்று, பெறும் பணம் களவாடப்படுகிறது. எனவே, நீங்கள் வாங்கும் நூல்களுக்கான இரசீதை கட்டாயமாக கேட்டுப் பெறுங்கள்.

இப்படி கேட்பவர்களை ஏமாற்ற கையால் இரசீது எழுதித்தரும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இரசீதுகளையும் சிலர் ஆதாரங்களாக வைத்திருக்கிறார்கள்.

ஏன், அச்சடித்த இரசீது வைத்திருக்கவில்லை? என்பதற்கு என்ன பதில் சொல்வார்கள்? பிரதி இல்லாமல் கையால் எழுதித்ரும் இரசீசை எப்படி நூல் விற்பனை கணக்கில் காட்டுவார்கள்??

ஆமாம், இந்த வகையில் அலுவலக ஊழியர் ஒருவர் எட்டு லட்சம் கையாடல் செய்து, மூன்று மாதங்கள் பணியிடை நீக்கத்தில் இருந்தார். அந்த தொகையை மீண்டும் செலுத்தியப்பின், ஊழியத்தில் இருந்து வருகிறார்.

சாதாரண ஊழியரான இவரால், எட்டு லட்சம் கையாடல் செய்ய முடிகிறது என்றால், கணக்கு வழக்குக்களைப் பார்க்கும் பொறுப்பில் உள்ள கணக்கு பிள்ளையால் கூட்ட வந்த கூத்தியாளுக்கு, ஐம்பது லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வீடு கட்டிக் கொடுக்க முடியாதா?!

வெளியில் தெரிந்தே இவ்வளவு நடக்குது என்றால், வெளியில் தெரியாமல் என்னென்ன அக்கப்போருகள் எல்லாம் நடக்கும் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் எழுத முடியாது என்பதோடு, எழுத முடியாத அளவிற்கு மிகக் கேவலமாகவும் நடக்கிறது. அவ்வளவு சொல்கிறார்கள்.

இதுபற்றி எல்லாம், கண்காணித்து, கையுங் களவுமாகப் பிடித்து விரிவான விசாரணை செய்ய ஏற்பாடு ஆகிக்கொண்டு இருக்கிறது. 

சாதாரண மாதப் பூசங்களிலேயே, பணத்திலும், தானியங்களிலும் இவ்வளவு முறை கேடுகள் நடக்கிறது என்றால், தைப்பூச நாளில் எவ்வளவு நடக்கும்?!

எனவே, முறைகேடுகளைத் தடுக்க நீங்கள் கொடுக்கும் ஓரிரு கிலோ அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவற்வைறை அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டி விடவும். 

இது தவிர, அதிகப்படியாக கொடுக்கும் எந்தவொரு பொருளுக்கும், அலுவலகத்தில் கட்டாயமாக இரசீதைக் கேட்டுப் பெறுங்கள். இதற்கென தானிய இரசீது என்ற ஒன்று உள்ளது. 

தானியங்கள் அல்லாதப் பிற அதிகப்படியான நன்கொடை பொருட்களுக்கு கடிதமாக கொடுக்கக் கேளுங்கள். இவை இரண்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாக ஊழியரும் சில சன்மார்க்க ஆர்வலர்களும்  செய்துள்ளார்கள். 

இவற்றில் ஏதோவொன்றைப் பெற்றால் மட்டுந்தான், நீங்கள் விரும்பியபடி, அது மக்களுக்குப் போய்ச் சேரும். 

ரூ 100 க்கும் குறைவான நன்கொடைகளுக்கு இரசீது கிடையாது. ஆகையால், இரசீது போடும் ஊழியர்களிடம் கொடுத்தால், அதனைப் பெற்றுக் கொண்டு, உங்களை ஆசிர்வதிப்பது போல விபூதிப் பொட்டலம் ஒன்றை தந்து, பணத்தை அவர்களது உண்டியலில் சேர்த்து விடுவார்கள். 

ஏமாந்து விடாதீர்கள். 100 க்கு கீழான தொகையை உண்டியலில் மட்டுமே போடுங்கள். 100 க்கு மேலான தொகைகளுக்கு கட்டாயம் இரசீதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவும், ஏழை யெளிய மக்களும் தங்களால் இயன்ற நன்கொடை வழங்கி இரசீது பெற்றுக் கொள்ளும் விதத்திலும் ரூ.25, ரூ.50 என்ற தொகைக்கு அச்சடிப்பதில், நிர்வாகத்திற்கு என்னப் பிரச்சினை இருக்கிறது??

இதுதவிர, சத்தியத் தரும உணவுச்சாலையின் உணவில் நடைபெறும் ஊழல்கள் தடுக்கப்பட வேண்டும். வடலூர் சபை, மேட்டுக் குப்ப சித்தி வளாகம் உள்ளிட்டவற்றில் நிரந்தரமாக தங்கி இருக்கும் ஏழையெளிய இருபாலின மக்களின் நலன் (அவர்கள் அநாதைகள் ஆக்கப்படாமல், தங்களின் சொந்தங்களோடு சேருதல் உள்ளிட்டவை) மற்றும் அப்பகுதிகளுக்கு வரும் இருபாலின ஆன்மீக அன்பர்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டி உள்ளது.  

இதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ அல்லது இதில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து, மக்களுக்கு உதவ நினைத்தாலோ அங்குள்ள அரசு நிர்வாக ஊழியரையோ, சன்மார்க்க சாதுக்களையோ அல்லது மஞ்சள் நிற மேலாடையில், பின்பக்கம் சேவை மையம் வடலூர் என குறிப்பிடப்பட்டுள்ள சன்மார்க்க அன்பர்களில் எவரையும் அனுகி தெளிவுப் பெறலாம். 

சாதுக்களுக்கான இருப்பிடம், உணவுச் சாலைக்கு எதிரே உள்ள மலேசியா கட்டிடம் ஆகும். இங்கு வெகுசிலர் மாத்திரமே இருப்பார்கள். சேவை மையத்துக்கான இடம் உணவுச் சாலைக்கு எதிரே உள்ளது.  

உங்களுக்குத் தெரிந்த வள்ளாலாரின் வழி நடப்பவர்கள் அனைவருக்கும், இச்செய்தியை அனுப்பவும். யாரை வைத்து, எதனை நடத்தனுமோ அதனை அவனே நடத்திக் கொள்வான்!

ஆமாம், வ‘ய’லூர் கோவில் திருப்பணி என்பதற்கு பதிலாக, வ‘ட’லூர் கோவில் திருப்பணி என, ஓரெழுத்து மாறி அச்சாகி விட்டதால், அதன்படியே கிருபானந்த வாரியார் வடலூரில் ஆன்மீகப் பணிகளைச் செய்தார் என அன்பர் சொல்லக் கேட்டதும் தேடிப் படித்தேன். இதற்கு எவ்வளவு நானயம் வேண்டும்!

இதில், //”வள்ளலாரின் அடியார்கள்” என்று பேர் வைத்துக் கொண்டிருக்கிற பண்பாடில்லாத சிலருடைய துன்ப அலைகளில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் திருப்பணி செய்தேன்’’ // என்று திருமுருக கிருபானந்த வாரியாரே சொல்லியுள்ள படிதான் தற்போதும் நடக்கிறது என்று சொல்வதை விட, பன்மடங்கு கூடுதலாகவே நடக்கிறது என்று சொல்வதே சரி!

ஆகையால், நமக்கும் ஒரு நல்வாய்ப்பு கிடைத்து உள்ளது. அக்கறை உள்ள நாமும் களமிறங்கினால் தான் வள்ளலாரின் கொள்கைகளை காப்பாற்ற முடியும். இது ஏற்கெனவே நான் சொன்னபடி, அவருக்காக அல்ல; நம் நலனுக்காகவே!

இதற்கு ஆங்காங்கே உள்ள சன்மார்க்க சங்கங்கள் முதலில் மாவட்ட ரீதியாகவும், பின் மாநில ரீதியாகவும் ஒன்று சேர வேண்டும். 

இதற்கான முன்னெடுப்புகளை, அரசால் நிர்வாக ஊழியராக நியமிக்கப்பட்டு உள்ளவரும், சன்மார்க்க சாதுக்களும், சேவை மையம் போன்ற சன்மார்க்க ஆர்வலர்களும், வடலூர் வாழ் அன்பர்களும், எங்களைப் போன்ற இன்னபிற தன்னார்வலர்களும் மேற்கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். 

குறிப்புகள் : இந்தக் கட்டுரையின் தகவல்கள் அனைத்தும், நம் வாசகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர், இந்த விடயங்களில் ஏமாந்து, அதன்பின் சுதாரித்துக் கொண்டு, நாம் தரும் பணம் உள்ளிட்ட பொருட்கள் சரியாக சென்றடைய யாரை அனுக வேண்டுமெ சொன்ன வழிமுறைகளின்படி, பொது மக்களுக்கு வழி காட்டும் பொறுட்டு எழுதப்பட்டது. 

எனவே, இதன் மீது மாற்றுக் கருத்துக்கள் எதுவும் யாருக்கேனும் இருந்தால், அதுகுறித்த உ(ய)ரிய முறையில் மறுப்பை தெரிவித்தால், அதனை சரி பார்த்து, அதன் அடிப்படையில் சரி செய்யப்படும். 

சட்ட விழிப்பறிவுணர்வு பெற்ற நம் வாசகர்களுக்கும், சாதாரணப் பொதுமக்களுக்கும் தெரிந்த இம்முறைகேடுகள், தெரிய வேண்டிய ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்புத் துறை, இந்து அறநிலையத்துறை, சோதனை நடத்த வேண்டிய வருமான வரித்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட ஊழியர்களுக்கு எப்படி தெரியாமல் (இரு, நட)க்கும்?!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, December 19, 2017

சத்தியவான் காந்தியின் செயலர் கல்யாணம்!


1942 முதல் சத்தியவான் காந்தி கொல்லப்படும் வரை அவரின் செயலராக இருந்த திரு. கல்யாணம் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான நீதிமன்ற அனுபவங்களை விளக்குகிறது, இத்தொடர் கட்டுரை! 

ஆகவே, இக்கட்டுரையை படித்தப்பின் அடுத்துப் படிக்கத் தொடருங்கள்.


கெளரவத் தொழில் என்று சொல்லப்படும், சட்டம் மருத்துவம் பொறியியல் உள்ளிட்டவை அனைத்தும் மிகமிக கேவலமான தொழில்களே! ஆகையால், இது தொடர்பான நம் தேவைகளை நாம்தான் செய்துக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதி உள்ளேன்.

இதில், இறுதியாக நமக்கான வீட்டை, நாமே திட்டமிட்டு கட்டலாம்! என்பதாகும். இதையும் படித்து விட்டு தொடருங்கள். ஏனெனில், இக்கட்டுரையில் சொல்லி உள்ளபடிதான், திரு. கல்யாணம் அவர்களுக்கு கட்டிட பொறியாளர் வீட்டை கட்டித் தராமல் இருந்துள்ளார், கட்டித்தந்த வீடும் ஒழுங்காய் இல்லை.

இதற்காக நிவாரணந்தேடி நீதிமன்ற சென்றபோது, காந்தியின் செயலர் கல்யாணத்துக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் மேற்கண்ட மூன்று பக்க கட்டுரையில் சொல்லப்பட்டு உள்ளது.

காந்தியுடன் இருந்தவருக்கு, நிதிபதிகளிடம் நாமே பேசலாம் என எண்ணி இருந்தவருக்கு, அதுபற்றிய சட்டத் தெளிவு இல்லாததால், சட்ட விரோதத் தொழில் செய்யும் பொய்யர்களிடம் சிக்கி உள்ளார்.

இதனை எழுதிய எழுத்தாளர் குமரி. எஸ். நீலகண்டனுக்கும், ‘‘வழக்காளியே வாதாடலாம்’’ என்பது பற்றி தெரியாமல், தவறான கருத்தை ‘‘ஆகஸ்ட் 15’’ என்றத் தலைப்பில், 2012 ஆம் ஆண்டில் நூலாகவே எழுதி உள்ளார். 

ஆமாம், இதிலிருந்துதான் தினமணி நாளிதழின் இலவச இணைப்பான தினமணி கதிரில் தொடர்ந்து 33 வாரங்கள் எழுதி முடிக்க இருக்கிறார். இந்த தொடர் 32 வது தொடர்.

சத்தியவான் காந்தி, பகுத்தறிவுப் பெரியார் என நூற்றாண்டுகளுக்கு முன்பே வாதாட ஆரம்பித்து, இன்றும் நானும் நம் வாசகர்கள் பலரும் வழக்காளிகளாக வாதாடி வரலாறு படைத்து வரும் நிலையிலும், இதுபற்றிய விரிவான விவரங்களை எழு நூல்களாகவே எழுதியுள்ள நிலையிலும்..,

இந்த உண்மைகளுக்கு மாறாக, ‘‘திரு. கல்யாணம் அவர்களின் சட்ட அறியாமையால் ஏற்பட்ட அனுபவத்தை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு வழக்காளிகள் வாதாட முடியாது என்ற தவறான கருத்து’’ சில லட்சம் பிரதிகளில் அச்சாகி விட்டது, நிச்சயம் அபத்தந்தான்!

ஆமாம், எழுத்தாளர்களுக்கே அடிப்படை பேச்சுரிமை என்பது நீதிமன்றத்தில் வாதாடுவதற்கும் பொருந்தும் என தெரியவில்லையா அல்லது தெரிந்தே தவறான தகவல்களை பதிவு செய்து குழப்புகிறார்களா என்பது அவரவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால், என்னைப் பொருத்தவரை, இந்நவீன யுகத்தில் வாதாடும் உரிமைப்பற்றி, எத்தனை எத்தனையோ செய்திகள் வெளிவர, இது அத்துறையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

ஒருவேளை அப்படி இருந்தால், அவர்கள் மற்றவர் களின் உரிமை குறித்து எடுத்து உரைக்கு தகுதியுள்ள எழுத்தாளர்கள் இல்லை என்பதோடு, எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ள அறவே அறிவும் தகுதியும் அற்றவர்கள்.

ஆகவே, 2012 ஆம் ஆண்டில், முதன் முதலாக வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 15 நூலின் அடுத்தடுத்தப் பதிப்புகளில் திருத்தி வெளியிட வலியுறுத்த உள்ளேன். அவர்கள் திருத்தி வெளியிடுகிறார்களோ இல்லையோ, இங்கு பதிவு செய்துள்ளதைப் போல, நம் நூல்களில் இதனை தவறாது பதிவு செய்வேன்.

ஆங்கிலேய அரசின் ஊழியராக இருந்த திரு. கல்யாணம் அவர்கள் காந்தியின் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட கொள்கைகளால் ஈர்க்கப் பட்டும், தன் அரசூழியத்தை இழந்தும், 1942 ஆம் ஆண்டில் சேர்ந்த அரசூழியத்தில் தான் பெற்ற வந்த கூலி, 250 இல் சேமித்து வைத்து இருந்த 2600 ரூபாயில், ரூ 2000 ஐ சபர்மதி ஆசிரமத்திற்கு நன்கொடையாக வழங்கியும், ஆசிரமத்தில் ஊதியம் வாங்காமலும் ஊழியத்தை தொடர்ந்து உள்ளார் என்று, ஆகஸ்ட் 15 நூலில் சொல்லப்பட்டு உள்ளது.

முன்பு நாமே வாதாட முடியாது என்று தவறாக சொல்லப்பட்டது போல, இதெல்லாம் எந்த அளவிற்கு சரியென தெரியவில்லை. ஏனெனில், 1942 ஆம் ஆண்டில் அரசூழியத்தில் ரூ. 250 கூலி கொடுக்கப் பட்டதாக சொல்வது, குடியரசு இந்தியாவில் கொடுத்ததை விட பல மடங்கு அதிகம்.

ஆனால், பகுத்தறிவு பெரியார் 10-05-1931 ஆம் ஆண்டில் எழுதிய தலையங்கத்தில், ‘‘நடுநிலைமையற்ற அதிகாரிகளும், நாணயமும், ஒழுக்கமும், பொறுப்புமற்ற வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தாங்கள் இந்த காரியங்களை செய்வதற்காக அடையும் ஊதியத்தையும், வரும்படியையும் பார்த்தால், உலகத்தில் எந்த யோக்கியமான நாணயமான மனிதனும், தொழிலாளியும் அடையும் ஊதியத்தை விட, எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகின்றார்கள். 

ஒரு முன்சீப் என்பவர் (கீழ்நிலை சிவில் நிதிபதி) 300 ரூபாயில் ஆரம்பமாகி அக்கிரமங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும் உயர்நீதிமன்ற நீதிபதி வரை உயர்த்தப்படுகிறார்’’ என்று குறிப்பிட்டு உள்ளதை, இத்தளத்தின் முகப்பு பக்கத்திலேயே சொல்லி உள்ளேன்.

இந்த வகையில் பார்த்தால், நம் சொத்தை கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயர்கள், அதற்கு உற்றத் துணையாக இருந்த நம் ஊழியர்களுக்கு கூலியை அளிக் கொடுத்து இருப்பார்கள் போலிருக்கிறது. இதுபற்றிய உண்மை என்ன என்பதை உங்களுக்கு தெரிந்தால், ஆதாரத்துடன் சொன்னால், சேர்த்து விடுகிறேன். அவ்வளவே!

சேர்க்கை நாள் 08-01-2018

கடந்த 24-12-2017 அன்று மதியம், சுமார் 3 மணி முதல் 4. 30 வரை 94 வயது இளைஞர் திரு. கல்யாணம் அவர்களை, நானும், அய்யப்பனும் சந்தித்துப் பேசும் பேற்றினைப் பெற்றோம்.

நாங்கள் சென்றபோது, 2 வது மாடியில் இருந்து 4 வது மாடியில் உள்ள தொட்டிகளில் பூச்செடிகளை நட்டுப் பராமரிக்கும் பணிகளைச் செய்துக் கொண்டிருந்தால், அதற்கு நாங்களும் சிறிது உதவ முடிந்தது.

நம்முடைய சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. நான் விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவரே தேனீரை தயாரித்துத் தந்தார். பருகி மகிழ்ந்தோம்.

சத்தியவான் காந்தியை சந்திக்கும் பேற்றினைப் பெறவில்லை என்றாலும், அவரோடு இறுதிவரை இருந்த இவரையாவது சந்திக்க முடிந்ததே என்ற ஆத்ம திருப்தியோடு, அவரது ஆசியோடும் விடை பெற்றோம். 

குறிப்பாக, இந்தக் கட்டுரையின் இறுதியில், 1942 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர் வாங்கியதாக சொன்ன கூலி 250 உண்மைதான் என்பது தெரிந்தது. 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, December 4, 2017

தனியார் நிறுவனங்கள் புறக்கணிக்கும், காவலூழிய வாரிசுகள்!அரசூழியத்துக்கு செல்ல வேண்டுமென்றால் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி அதிகார துஷ்பிரயோகம், இலஞ்சம் ஆகியவற்றால் மட்டுமே அரசுப்பணிக்கு செல்ல முடியும் என்பது ஊரறிந்த இரகசியந்தான்! 

தனியார் பணி என்பதும் சாதாரணமானது அல்ல. பிரபல நிறுவனங்களில் அரசுப் பணியை விட, எழுத்துத் தேர்வுகள் கடினமாக இருக்கும். இதில், வேலை தேடுவோரின் மனதைப் பரிசோதிக்கும் தேர்வும் நடக்கும். நேர்முகத் தேர்வும் நடக்கும். அதன் பிறகே, பணி நியமண கடிதம் வழங்கப்படும். 

இதில், மிக முக்கியமானது என்றால், கடுமையாக உழைக்கும் திறனைப் பெற்று இருக்க வேண்டும். அரசூழியத்தைப் போல சுத்த சோம்பேறிகளை எல்லாம் தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்துவிட மாட்டார்கள். இதையெல்லாம், நான் அனுபவத்தில் உணர்ந்தவன். 

இதே பெண்கள் எனில், அவர்களின் தேர்ச்சி முறை வேறுபடும்.  நாகரீகம் கருதி  வேறுபாட்டை விலக்க முடியாது. நீங்களே யோசித்துக் கொள்ள வேண்டியது தான். 

ஆனாலிது, எல்லாப் பெண்களுக்கும் அல்ல; மாறாக, ‘‘குறிப்பிட்ட வேலையைப் பெற தன்னையே விலையாக கொடுத்து படுக்கத் துணிந்த பெண்களுக்கு அல்ல அல்ல விலை மாதர்களுக்கு மட்டுமே! இது தனியார் ஊழியத்தைப் போலவே, அரசூழியத்திலும் உண்டு!!’’

இதையெல்லாம் விட கொடுமை, ‘‘சாமியார் மடங்களைப் போல தன்னார்வ (ஃப, தொ)ண்டு நிறுவனங்களில், இல்லாத நிறுவனங்களே இல்லை’’ என்பதை, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் தெளிவுபட சொல்லி உள்ளேன். 

இது ஒன்றைத்தவிர, மற்றவை எல்லாம் இரண்டு ஊழியத்திலும்  நேரெதிராகத்தான் இருக்கும். 

ஆமாம், அரசூழியத்துக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பலம் மற்றும் இலஞ்ச பலம் தனியார் நிறுவனங்களில் கீழ் மட்டத்தில் இருப்பதில்லை. மேல் மட்டத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. 

clip

இந்தச் செய்தியில் உள்ளபடி, காவலூழியக் குடும்பங்களை மட்டும் அழைத்து, ஒரே நாளில் அனைத்துத் தேர்வுகளையும் முடித்து தனியார் நிறுவனங்களில் வேலை கொடுப்பது என்பது, நிச்சயமாக உழியங் கொடுத்ததாக சொல்லப்படும் 47 நிறுவனங்களின் முடிவாக இருக்காது.

ஏனெனில், இவர்களால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும் என்பதை, தனியார் நிறுவனத்தார் அறியாதவர்கள் அல்லர்! தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்ல விரும்பு பவர்களில், காவலூழியர் களின் குடும்பத்தாரை முற்றிலுமாக நிராகரித்து விடுவார்கள். 

ஆமாம், இதனை நீங்கள் சோதித்து அறிய விரும்பினால், உங்களோடு வேலை செய்யும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் வேலை செய்யும் நபர்களோடு, எத்தனை பேர் காவலூழியர்கள் வாரிசுகள் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். விடை பூஜியமாகவே இருக்கும்.

ஆனாலிது. தொழில்துறையில் ஜாம்பவான்களாக உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள், கால் சென்டர்கள், தனியார் வங்கிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பொருந்தாது. ஏனெனில், இவற்றில் வேலை பார்க்கும் அளவிற்கு திறன் கொண்ட வாரிசுகள் தறுதலையாக இருக்க முடியாதுதானே? அதான்!

அப்படியானால், காவலூழியர்களின் தறுதலை வாரிசுகளுக்கு என்னதான் வழி என்ற கேள்வி எழுகிறது அல்லவா?!

இதற்கு விடையென்று சொல்லப் போனால், காவலூழியர்களின் தறுதலை வாரிசுகளை காப்பாற்ற, அக்காவல் ஊழியர்களால் உண்டாக்கப் பட்டதே ‘‘ஊர்க்காவல் படை’’ என்ற அமைப்பு. 

ஆகையால், இதில் அதிகபட்சம் அத்தறுதலைகளே இருப்பர். மற்ற இளைஞர்களின் பங்கு மிகமிகக் குறைவாகவே இருக்கும். வேண்டுமானால், சோதித்துப் பார்த்து சொல்லுங்கள். 

இதில், அவர்களுக்குள்ள பல நன்மைகளில் ஒன்று, இப்படையில் உள்ள தங்களின் வாரிசுகளையே, காவலூழியர்கள் புனையும் பொய் வழக்குக்களில் சாட்சிகளாக போடுவர்.

இதையெல்லாம், நான் 2001 ஆம் ஆண்டே ஆராய்ந் தறிந்து, வேலூர் சிறையில் விசாரணை கைதியாக இருந்து, தானே வாதாடி விடுதலையான நீதியைத் தேடி... வாசகர் வேலுச்சாமி மீதான வழக்கில் சாட்சியாக இருந்த காவலூழியரின் மகனை, விஜய் தொலைக்காட்சியில், நடிகை லட்சுமி தொகுத்து வழங்கிய, ‘‘கதையல்ல நிஜம்’’ நிகழ்ச்சியில் ஒப்புக் கொள்ள வைத்தோம்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த, உந்துனர் அறக் கட்டளையின் தலைவராக இருந்த, அமரர் ஆ.கி. வேங்கட சுப்ரமணியன் இந்திய ஆட்சிப் பணி ஊழியர் கூட, வியந்து கடிதம் எழுதினார். 

நம் நீதியைத்தேடி... குற்ற விசாரணை நூலை, அவர் பொறுப்பேற்று நடத்தி வந்த சுமார் 240 மக்கள் மையங் களுக்கும் உ(ய)ரிய நன்கொடையை கொடுத்து வாங்கியதோடு, அவர் ஆசிரியராக இருந்த குடிமக்கள் முரசு மாத இதழில் மதிப்புரை எழுதியும் சிறப்பித்தார். 

சரி, நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்.

ஆகவே, மேற்கண்ட செய்தியில் உள்ளது, வேறு வகையில் சட்டத்துக்கு விரோதமாக நடத்தப்பட்டு உள்ளது என்றே துணிந்து சொல்லலாம்.

‘‘மநு வரையுங்கலை!’’ நூலில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழியர் ‘‘திருட்டு தேவன்’’ ஐப்பற்றி எழுதி உள்ளேன். இத்தேவனின் மீதும், மற்ற ஊழியர்களின் மீதும் சரியான சட்ட நடவடிக்கையை எடுக்காமல் இருந்தது, ‘‘இந்திய காவல் பணி ஊழியர் சீமா அகர்வால்’’. 

இப்போது, இந்த சீமாட்டி, ‘‘மாநில குற்ற ஆவண காப்பக’’ பொறுப்பு ஊழியத்தில் உள்ளாராம். சரிதான்! புரியவில்லையா, மேற்கோளில் உள்ள ஊழியத்தை மீண்டும் சரியாகப் படியுங்கள், புரியும்!!

தன் தகுதிக்கு ஏற்ற பொறுப்பு ஊழியத்தில்தான் தற்போது இருக்கிறார் என்பதோடு, அதே தகுதியோடு இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கும் பொறுப்பு வகித்து உள்ளதால், உயர்மட்ட காவலூழியர்கள் என்ற அதிகார துஷ்பிரயோகத்தினாலேயே காவலூழியர்களின் வாரிசுகள் 2000 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டு உள்ளது என்பதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இதன் மூலம், நான் ஏற்கெனவே சொன்னபடி, ‘‘காவலூழியர்களின் வாரிசுகள் எல்லாம் சுயமாக வேலைதேட தகுதி இல்லாத தறுதலைகள் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டதையும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்’’. இல்லையெனில், இதுபோன்ற திட்டமிட்ட வேலை வாய்ப்பு முகாம்களே தேவைப்படாது. 

எது எப்படியோ, விவரமானவன் நிச்சயமாக வேலை கொடுத்திருக்க மாட்டான். வேலையைக் கொடுத்து, தன் காரியம் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்று எண்ணி வேலையை கொடுத்தவன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டோமே என விரைவில் வருத்தப்படுவான். அவ்வளவே!

காவலூழியர்களின் வாரிசுகளுக்கே இந்த அவலநிலை என்றால், காவலூழியர்கள் உள்ளிட்ட அரசூழியர் களுக்கு வேலை போனால், தனியார் நிறுவனங்களில் யார் வேலை தருவார்கள்? 

அப்படியே பாவப்பட்டு தந்தாலுங்கூட, இந்தச் சோம்பேறிகளால் என்ன வேலையைப் பார்க்க முடியும்??

இந்த உண்மைகளைப் புரிந்துக் கொண்டால், நீயும் அவர்களுக்கு முதலாளியே! அவர்கள் உனக்கு ஊழியர்களே என்பது, ஒருசேரப் புரிந்து விடும்!!  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, November 30, 2017

பல ரகப் பொய்யர்கள்!


சட்டப்படிப்பின் மூலம் சட்ட விரோத தொழிலைச் செய்பவர்களை நான் ‘‘பொய்யர்கள்’’ என்று கூறும் போதெல்லாம், ஏதேதோ காரணங் களுக்காக அப்படிப்பட்ட பொய்யர்களோடு நட்பில் உள்ளவர்களுக்கு சற்றேனும் கோபம் வருவது சகஜமே! 

இதற்காக நான் ஒருபோதும் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால், அப்படி சொல்வதை விட்டதில்லை. இனி சொல்லாமல் விடப் போவதுமில்லை.

ஆமாம், 2010 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில், ‘‘வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!’’ என்ற தத்துவத்தை முன்மொழிந்து உள்ளதோடு, அதற்கான விளக்கத்தில், ‘‘அது நானாகவே இருந்தாலும் அப்படித்தான்!’’ என்ற உண்மையை என்னையே ஆதாரமாக முன் வைத்து வழிமொழிந்தும் உள்ளேன். 

ஆனால், இதை எல்லாம் படிக்காமலும், படித்தாலும் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமலும், நம் வாசகர்களில் சிலர், சிறந்த பொய்யராக போவதாக சொல்லுவார்கள். (இ, எ)ப்படி சொல்பவர்களுக்காகவும் இந்தத் தலையங்கம். 

பொய்யர்களில், ‘‘சட்ட விரோத தொழில் செய்யும் பொய்யர்கள், போலிப் பொய்யர்கள், அரசுப் பொய்யர்கள், சகோதரப் பொய்யர்கள், உறவுப் பொய்யர்கள், நட்புப் பொய்யர்கள், சங்கப் பொய்யர்கள், இயக்கப் பொய்யர்கள், அரசியல் கட்சிப் பொய்யர்கள்’’ என ஒவ்வொரு வருக்கும் தக்கவாறு ஒவ்வொரு வகையில் பல ரகப் பொய்யர்கள் உள்ளனர்.

இவர்கள் எல்லாம் அவர்களை காத்துக் கொள்ளவே அத்தொழிலைச் செய்கிறார்களே ஒழிய, உங்களையோ, அரசையோ, நட்பையோ, கட்சியையோ காப்பற்ற அல்ல என்று நான் சொன்னால், உங்களால் நம்பவே முடியாது.


ஆனால், இதுதான் உண்மை என்பதை காலங் கடந்து உணர்வீர்கள். ஆனால், அதற்குள் இழக்க கூடாததை எல்லாம் இழந்து விடுவீர்கள்.

இப்படித்தான், பலரகப் பொய்யர்களிடம் சிக்கிய பலரும், நம் நூல்களை வாங்குபவர்களும் தினந்தினம் புலம்புகின்றனர். 

இதில் மிக முக்கியமாக கடந்த மாதங்கூட, ஓர் அரசியல் கட்சியின் பொய்யரை மலைப்போல நம்பி இருந்த அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர் ஒருவர், ‘‘அண்ணே நீங்க பொய்யர்கள் என்று சொல்லும் போதெல்லாம், நம் கட்சியில் உள்ளவர்கள் அப்படியல்ல என நம்பி இருந்தேன்.

ஆனால், எனக்கு வம்பு வழக்கு என வந்து, அவர்களின் உதவியை நாடிப் போன பிறகுதான், பொய்யர்கள் என நீங்கள் சொல்வதெல்லாம் மிக குறைவு என்பது புரிந்தது’’ என்றார். 

இவர் குறிப்பிடும் பொய்யர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடுவதாக பொய்ச் சொல்லும் பிரபலப் பொய்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இவர் ஏற்கெனவே நம் வாசகராக இருந்தாலும், கட்சிக்காரப் பொய்யர்கள் காப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில், நம் நூல்களில் கவனம் செலுத்தாமல் இருந்தவர்.

மேலும், நம்மிடம் வாங்கிய சில செட் நூல்களை தெரிந்தப் பொய்யர்கள் சிலருக்கு பாரி வள்ளலைப் போல வாரி வழங்கி விட்டாராம்!

ஆனால், அப்பொய்யர்களோ அந்நூல்களின் கருத்துக்கு ஆட்சேபனை எதையும் தெரிவிக்க வில்லை என்பவர், அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் எப்படி தெரிவிப்பார்கள் என்கிறார் ?!

எனவே, பாதுகாத்து படிக்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் ஒரு செட் நூல்களை வாங்கியும் உள்ளார். 

எனவே, எந்தப் பொய்யரும் பொய்யரே என்பதை நினைவில் கொண்டு, நீங்களே நியாயத்தைப் பெற போராடுங்கள். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, November 21, 2017

ஆளுநர்களுக்கே, ஆய்வு செய்யும் அதிகாரமுண்டு!


‘‘ஆளுநர்’’ என்ற சொல்லின் மூலம், அவரின் அதிகாரங்கள் எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை முட்டாள்களும் நன்கு அறியலாம்.

ஆமாம், இந்திய சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கடமைகளின் படி, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடந்தான் இருக்கிறது.  

இதனை அவர் நேரடியாகவும், தேவையான ஊழியர்களைக் கொண்டும் கண்காணிக்கலாம் என்று இந்திய சாசனக் கோட்பாடு 154(1) இல் தெளிவு படுத்தப்பட்டு உள்ளது என்பது உட்பட பல்வேறு சங்கதிகளை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் சொல்லி உள்ளேன். 

இதன்படிதான், தலைமைச் செயலாளர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரையென அத்தனை அத்தனை அடிமை ஊழியர்களும் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதை விட, கூலிக்கு மாரடிக்கிறார்களே என்று சொல்வதே சரியானது. 

இவர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கடமையும் ஆளுநருக்குத்தான் இருக்கிறதே தவிர, முதலமைச்சர் உள்ளிட்ட என்றவொரு அரசியல் வியாதிக்குங் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், ‘‘உத்தர விடுகிறேன்’’ என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த தகுதி யற்றவர்கள்.

ஆமாம், அமைச்சர்களால் கீழ்நிலை  அரசூழியனைக் கூட பணியிடை நீக்கம் செய்ய முடியாது. சட்டப்படி இவர்களது அதிகாரம் பல் பிடுங்கப்பட்ட பாம்புப் போல, ‘‘பரிந்துரைப்பது மட்டுந்தான். இதனை ‘‘ஆலோசனை என்றும் சொல்லலாம்’’.

இதுவே, இவர்களுக்கு இந்திய சாசனத்தில் வழங்கப் பட்டுள்ள அதிகபட்ச உரிமை. இதில், உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவர்களது கடிதங்கள் எதுவும் கிடைத்தால், படித்துப் பாருங்கள் அல்லது கோட்பாடு 

இவர்களின் பரிந்துரையை ஏற்பதும், ஏற்காததும் அளுநரின் அடிவைப் பொறுத்தது. ஆனால், அரசியல் வழியாக ஆளுநராகும் முட்டாள்கள் தங்களின் சட்டப்படின அதிகாரங்களை பயன்படுத்தாமல், அரசியல் வியாதிகளுக்கு ஜால்ரா போட்டு வந்தனர். 

ஆனால், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட புரோஹித்தோ, சுமார் 70 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் புதிதாக ஆய்வு செய்யத் தொடங்கியதால், ஆதரவு அரசியல் வியாதிகளைத் தவிர, மற்ற அரசியல் வியாதிகளும், ‘‘ஆளுநருக்கு ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை’’ எனக்கூறி குய்யோ முய்யோ எனக் கூக்குரல் இட்டு வந்தன. வந்தன என்று அஃறினையில் குறிப்பிடுவது சரியானதுதான்!

ஏனெனில், நாராயணசாமி போன்று இப்படியும் பல கோமாளிகள் அறிக்கை விட்டனர்.

இதனை அடுத்து ஆளுநர் மாளிகையே தனக்குள்ள ஆய்வு உரிமை குறித்து, இப்படியொரு அறிக்கை 20-11-2017 வெளியிட்டு உள்ளது.


இதில், கொடுமை என்னவென்றால் ஆளுநர் புரோகித் சட்டம் பயின்றவர். ஆளுநர் என்பதால், உயர்நீதிமன்ற நிதிபதிகளுக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கும் தகுதியில் உள்ளவர்.

மேலும், அரசியல் வியாதிகளுக்கு பதவிப் பிரணமானமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கும் தகுதியில் உள்ளவர் என்னும் நிலையில், இவருக்கு இல்லாத தகுதியோது? இவருக்கில்லாத தகுதி அரசியல் வியாதிகளுக்கு எப்படி வரும்??

ஆனால், இவர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், நான் முன்னரே சொன்னபடி, இந்திய சாசனக் கோட்பாடு 154(1)-இன் படியுள்ள  உரிமையை எடுத்துச் சொல்லாமல், சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்தாக சொல்லப்பட்டு உள்ளது.

மேலும், அசாமில் ஆளுநராக இருந்தபோது, செய்ததைத் தான் இங்கும் செய்கிறார் என்றும் கூறப்பட்டு உள்ளது முட்டாள்தனமாகவே இருக்கிறது.

ஏனெனில், ஒரு விடயத்தில் தன் விருப்பப்படி, செயல் படுவதற்கான உரிமையை ஆளுநருக்கு இந்திய சாசனக் கோட்பாடு 163(2) இல் வழங்கப்பட்டு உள்ளதோடு, இதுகுறித்து கேள்வி கேட்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கூட இல்லை எனவும் தெளிவுப் படுத்தப்பட்டு உள்ளது.

இதெல்லாம் தெரியாத கூமுட்டைகளா அரசியல் வியாதிகளும், ஆளுநரும்?! இல்லை யெனில், இதை யெல்லாம் மக்களுக்கு, தன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெளிவுபட எடுத்துச் சொல்லாத ஆளுநர் புரோஹித்துக்கு, இனியும் அப்பதவியில் அமர்ந்திருக்க என்ன சட்டத் தகுதி இருக்கு??!

சேர்க்கை நாள் 16-12-2017
தமிழக தலைமை ஊழியரின் ஆய்வு நடவடிக்கை, இந்திய சாசனத்தின்படி சரியானதே, என்பதை ஏற்க மறுக்கும் முட்டாள்கள் கறுப்புக்கொடி காட்டுகிறார்கள்!


அட, முத்தரசனும் ஆளுநர்களின் சட்ட உரிமை குறித்து அறியாத முட்டாள்தானா?!


சேர்க்கை நாள் 17-12-2017
பகுத்தறிவு அல்ல; பகூத்தறிவு!

clip

இவரைப் போன்ற, ‘‘சட்டம் படித்த தொழில் முறைப் பொய்யர்கள் எப்பவுமே, இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கு’’ என்றுமே சொல்லுவார்கள்.

ஆனால், அதனை சட்டப்படி நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் அல்லது சட்ட விளக்கங்கள் என்ன என்பதை வெளிப்படையாக எடுத்துச் சொல்ல மாட்டார்கள்.

ஏனெனில், இல்லாததை (சொ, மெ)ல்லுவது போல, இதுதான் அது என்று, இல்லாத ஒன்றை வெளிப்படையாக எடுத்துக் காட்ட முடியாதே, அதான்!
clip
இப்பதான் ஆளுநர் மாளிகை, ஆளுநருக்கு ஆய்வு செய்யும் உரிமை குறித்து ஓரளவிற்கு எடுத்துச் சொல்லி உள்ளது. ஆனால், நாம் குறிப்பிட்டுச் சொல்லும், இந்திய சாசனக் கோட்பாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

ஆ(கையா, னா)லும், அரசியல் வியாதிகளின் கண்டன கூத்துக்கள் தொடரும் என நம்பலாம்.

சேர்க்கை நாள் 18-12-2017


அட அறிவுவறுமையே...


சேர்க்கை நாள்: 05-01-2018


சபாஷ், கிரேன்பேடி!

clip
‘‘ஆளுநர்’’ என்ற சொல்லிலேயே, அவர்தான் ‘‘ஆளும் உரிமை உள்ளவர்’’ என்ற அரத்தம் இருக்க ஆனால், அரசியல் வியாதிகளோ ஆளுநர்களை எதிர்க்க என்ன காரணம் (நம் இஷ்டப்படி திட்டங்களை தீட்டி திருட முடியவிலையே) என்பது, இந்த செய்தியில் விளங்கும்.
அரசியல் வியாதிகளின் தொண்டர்கள் என்ற பெயரில் உலாவரும் குண்டர்களுக்கும், எடுபிடிகளுக்கும் இதெல்லாம் நன்றாகவே தெரியும். 
இந்திய சாசனத்தின்படி, ஆளுநரின் மீதான புகாரை, குடியரசுத் தலைவரிடந்தான் தெரிவிக்க முடியும் என்று கூட, தெரியாத அரசியல் வியாதிதான், நாராயணசாமியா?!
இதுபோலவே, தன்னிடம் கேள்வி கேள்வி கேட்க வேண்டியது இந்தியத் தலைமை ஊழியரே (குடியரசுத் தலைவரே) என்று தெரியாமல், கிரன்பேடி பிரதமருக்கு விளக்கம் சொல்ல வேண்டியது ஏனோ?!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, October 31, 2017

நம்மால் மட்டுமே, ‘‘இலஞ்ச, ஊழலை’’ ஒழிக்க முடியும்!நேற்று 30-10-2017 முதல், ‘‘ஊழல் ஒழிப்பு வாரம்’’ துவங்கி உள்ளது. ஊழல் ஒழிப்பை இந்த ஒருவாரத்தில் மட்டும் பிரதானப் படுத்தினால் போதும் என்பதே, அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

எனவே, ஊழலைச் செய்வோர், நாங்கள் ஊழலே செய்வதில்லை என்ற வகையில், இதனை மிகப்பெரிய அளவில் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலாக விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும், காரிய அடிமைகளும், கயமைக் கோமாளி களும், வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர் களும் ஆன அரசூழியர்கள், வழக்கம் போலவே, ஆங்காங்கே வெற்றுச் சம்பிரதாய உறுதி மொழியை எடுத்துக் கொண்டு உள்ளனர்.

ஆமாம், ஒவ்வொரு வருடமும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்களே, தொடர்ந்து ஊழல் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே?!

இவர்கள் நாம் செய்யும் ஊழலை நாமே வெளிப் படுத்தும் முட்டாள்கள் என்பதை அறியாதவர்களா என்றால் இல்லை; அப்புறம் ஏன் செய்கிறார்கள் என்றால், மக்களை மடையர்கள் ஆக்குவதற்கே!

‘‘ஊழல்’’ என்பது, திருடுவதற்கு என்றே தீட்டப்பட்ட திட்டங்களில் இருந்து நமக்கு தெரியாமல் ஏதோ வொரு வகையில் பணத்தை திருடுவது.

இதற்கான உதாரணமாக, சாலை போடுவது, பாலங்கள் கட்டுவது என்பதை சொல்லலாம். இதில் ஒதுக்கப்பட்ட தொகையில், எவ்வளவு செய்யப்பட்டது, எவ்வளவு ஊழல் செய்யப்பட்டது என்பது அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு தெரியாது.

ஆனால், இலஞ்சம் என்பது, நம்முடைய வேலையை செய்துக் கொடுப்பதற்காக நம்மிடம் இருந்து பெறப்படுவது என்பதால், நமக்கு தெரிந்தது.

இந்த புரிதல் கூட இல்லாமல், இரண்டும் ஒன்றே என்று எண்ணு(பவர்களு)ம் ஊழல் எதிர்ப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆகையால்தான், இந்த விளக்கத்தைச் சொல்கிறேன்.

எனவே, ஊழலைச் செய்பவர்கள் நினைத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். ஆனால், நாம் நினைத்தால் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இலஞ்சம் ஒழிந்தால் ஊழல் தானாகவே ஒழிய ஆரம்பித்து விடும்.

ஆகவே, இரண்டையும் ஒழிக்க வேண்டிய கடமை, முற்றிலுமாக நமக்கே இருக்கிறது. எனவேதான், இலஞ்சத்தை ஒழிக்க தேவையான சில சட்டப் பூர்வமான வழிமுறைகளை, 2008 ஆம் ஆண்டில் எழுதிய ‘‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலில்..,

1. அரசூழியர்களை சட்டப்படி கடமையாற்ற வைப்பது எப்படி?

2. சட்டப்படி இலஞ்சம் கொடுப்பது எப்படி?

3. இலஞ்ச ஒழிப்பு அமைப்புக்கள் என்ன செய்கின்றன?

4. இலஞ்சத்தை, பண அஞ்சலில் பாதுகாப்பாக அனுப்பலாம்!

5. அரசு மருத்துவ மனையில் இலஞ்சம் கேட்டால்...?

6. அரசூழியரின் மனைவிக்கு கடிதம் அனுப்பலாம்!

7. துட்டு கொடுக்காமல் எட்டு போட்டு உரிமம் பெற...

8. போக்குவரத்து காவலூழியர்களுக்கு போக்கு காட்டுவது எப்படி?

என்ற தலைப்புகளின் கீழ் சொன்னேன்.

இதனைப் படித்த சில அரசூழியர்கள், ‘‘என்னங்க, இப்படி யெல்லாம் ஐடியா கொடுத்து இருக்கீங்க’’ என்று புலம்பி இருக்கிறார்கள். அப்படியானால், இதன் விளைவுகள் என்ன மாதிரி இருக்கும் என்பதை, படித்த உடனேயே அவர்களால் புரிந்துக் கொள்ள முடிந்து இருக்கிறதுதானே?!

இதெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டது என்பதால், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு உள்ள கால அளவிற்குள் நம் வேலையை முடித்தே கொடுத்தாக வேண்டும்.

எனவே, சூழ்நிலைக்கு ஏற்றவாறு சொல்லியுள்ள இந்த வழி முறைகளை ஒவ்வொருவரும் கடைப் பிடித்தால், ஊழலை ஒழித்து விடலாம் என்பது, எனது ஆழ்ந்த அனுபவத்தின் வாயிலாக எழுந்த திடமான நம்பிக்கை.

ஆமாம், வழக்கம் போலவே, இதிலும் நான் கடைப் பிடித்த வழிமுறைகளையே உங்களுக்கு வழி மொழிந்து உள்ளேன்.

ஆமாம், சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று இருந்தால், எந்தவொரு சட்ட விரோதமான காரியத் தையும், இதிலும் குறிப்பாக அதிகாரத் திமிர் கொண்ட அரசூழியர்களின் சட்டத்துக்கு புறம்பான செயல்களை சட்டப்படியே சந்தித்து, தடுத்து நிறுத்துவதோடு, அவர்களையுங்கூட சந்தியில் நிறுத்த முடியும்.

அதிகாரத் திமிர்தானே இலஞ்சம் வாங்கவும், ஊழல் செய்யவும் தூண்டுகிறது. அதிகாரமே இல்லாமல் செய்து விட்டால், பல் பிடுங்கப்பட்ட பாம்புதானே?!

இப்படித்தான் இலஞ்சத்தையும் ஊழலையுங்கூட ஒழிக்க முடியுமே தவிர, ஊழலை ஒழிப்பதற்கு என்றே இருக்கிற ஊழல் அமைப்புக்களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது. இது அரசாங்க அமைப்புக்களாக இருந்தாலுஞ் சரி; தன்னார்வ அமைப்புக்களாக இருந்தாலுஞ் சரி.

ஆனால், நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்கியவர்கள் கூட, அதனைப் படிக்காமலேயே புலம்பிக் கொண்டிருக்க, அவர்களை ஆழ்ந்து படித்து செயல்படுத்த வலியுறுத்தினேன். விளைவு?


இப்படி படித்தப்பின், அவ்வழிமுறைகளைப் பயன் படுத்தி பலர் பயன் அடைந்திருந்தாலுங்கூட, அது பற்றிய விவரங்களை ஏனோ சட்ட விழிப்பறிவுணர்வுப் பதிவாக பதிவிட முன்வரவில்லை.

ஆகையால், அதுபற்றி பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. எனவே, இலஞ்சத்தை ஒழிக்க வேண்டு மென நினைப்பவர்கள், நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களின் வாயிலாக தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பதிவிட்டு பரப்புரை செய்யுங்கள்.

இப்படி செய்வதன் மூலம், சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாமல் இலஞ்சத்தை எதிர்க்கிறேன் என ஏடா கூடமான சட்ட சிக்கல்களில், அவர்கள் சிக்குவதை தவிர்க்கவும், தீவிரமாக எதிர்க்கவும் முடியும்!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, October 28, 2017

ஆண்களின் சந்நியாசமும், அதிலுள்ள சங்கட சாபக்கேடுகளும்!


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார்கள். 

உண்மைதான்! ஒரு குடும்பத் தலைவன், தன் குடும்பம், குழந்தைகளை விட்டு சந்நியாசம் செல்கிறான் என்றால், ‘‘அக்குடும்பத்தின் தலைவி அன்பானவளாக இல்லாமல் அரக்கியாக இருக்கிறாள்’’ என்றே அர்த்தம்.

மனைவியின் அரக்க குணம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டால், விவாகரத்தைப் பெற்று தப்பித்து விடுவார்கள். மாறாக, குழந்தைகளின் திருமண வயதில் தெரிந்தால், அவர்களின் பாடு அதோகதிதான்!

அவள் அரக்கியாக இருக்கிறாள் என்றால், அவளுக்கு, அவளது அப்பாவில் ஆரம்பித்து, உடன் பிறப்புக் களிடையே ஓடி, அவள் பெற்றெடுத்த பிள்ளைகள் வரை, பின் விளைவுகளை அறியாமல், அவளது அரக்கத் தனத்திற்கு பக்க பலமாய் இருக்கிறார்கள் என்று பொருள்.

ஆமாம், ‘‘காசிக்குப் போறேன் சந்நியாசி; உன் நிலைமை என்னாகும் நீ யோசி’’ என அவர் போய் விடுவார். இப்படிப் போனவர், நிச்சயமாக பிணமாக கூட திரும்பி வரமாட்டார். 


இந்தப் பாட்டை எல்லாம் இந்த அர்த்தத்தோடு தான் பாடிச் சென்று உள்ளனர், நம் முன்னோர்! இப்படி ஒவ்வொரு பாட்டுக்கும் உள்ளர்த்தம் இருப்பதை, ஆராய்ந்தால்தான் அறிய முடியும். 

ஆமாம், ‘‘காசிக்குப் போகும் சந்நியாசி; உன் குடும்பம் என்னாகும் நீ யோசி’’ என்பதை, ‘‘காசிக்குப் போறேன் சந்நியாசி; உன் நிலைமை என்னாகும் நீ யோசி’’ என வேறு விதமாக மாற்றி எழுதி இருக்கேனேன்னு நினைக்காதிங்க. 

இந்தப் பாட்டுல, சந்நியாசம் போக நினைத்தவரை தடுத்து, திருப்பி வீட்டிற்கு உள்ளேயே அனுப்பி விட்டார்கள். ஆனால், நானோ சந்நியாசம் போனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் நிலையும் என்னாகும் என்பதை, ஆராய்ந்து எடுத்து சொல்கிறேன். இதற்கேற்ப வசனத்தை மாற்றி அமைத்து இருக்கிறேன். அவ்வளவே! 

சரி, நம்ம போனவர் விசயத்துக்கு வருவோம். 

போனவர் உயிரோடு இருக்காரா... இல்லையா... 

நாம சுமங்கலியா இருக்கோமா... இல்லையா...

நாம பூ, பொட்டு வைத்துக் கொள்ளலாமா... கூடாதா...

சுப நிகழ்வுகளில் முன்னின்று கலந்துக் கொள்ளலாமா... கூடாதா...

சுப நிகழ்வுகளில் முன்னின்று கலந்துக் கொண்டால், நம் உற்றாரும், உறவினரும், உடன் பிறந்தவர்களும், பெற்றெடுத்த பிள்ளைகளும், மற்றவர்களும் நம்மைப் பற்றி என்னென்ன நினைக்கிறார்களோ என்றும்...

தன் உடன் பிறப்புகள், அனைவரையும் அழைத்துக் கொண்டாடும் 25 வது திருமண நாள், 60 வயது சஷ்டியப் பூர்த்தி, அதற்கு மேல் இருந்தால் 80 வயது சதாபிஷேகம் என அவரவரும் ஆனந்தமாக கொண்டாடும் ஒவ்வொரு தருனத்தின் போதும்.., 

நமக்கு இந்த வாய்ப்பு இருந்தும் இல்லாமல் போய் விட்டதே என, அக்கூட்டத்தில் கூனிக்குறுகி நிர்ப்பந்தத்தில் நிற்பதும்...

தன் மகனுக்கும், மகளுக்கும் தந்தையும் தாயுமாக கம்பீரமாக அமர்ந்து, திருமணம் செய்து வைக்க முடியாமல், உடன் பிறந்தவர்களை அல்லது முறையில்லாத நபர்களை முறையாக கருதி உட்கார வைத்து செய்து வைக்கும்போது..,

மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டிய, அத்தருனத்தில் நமக்கு இந்த வாய்ப்பு இருந்தும், நம் அரக்கப் புத்தியால் இல்லாமல் போய் விட்டதே என, அக்கூட்டத்தில் கூனிக்குறுகி நிர்ப்பதும்...

இதுபற்றி எல்லாம் தன் காதுபடவே பேசும் யாருக்கும் த(ர், க்)கப் பதில் சொல்ல முடியாமல், கேட்டும் கேட்காதது போல மனம் நோவதும் என...

அரக்கிகளாக திரிந்த அம்மனைவிகள் சாகும் வரை, மனப் போராட்டத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து வாழ்வதுதான் சன்னியாசம் பூண்ட கணவன் தரும் தண்டனை! 

இதுவுங்கூட வயது போய்விட்ட அல்லது மாற்றுத் துனை தேடமுடியாத பெண்களுக்கு மட்டுந்தான். வயதுள்ள பெண்களுக்கு வேறு யாராவது அகப்பட்டுக் கொள்வான்.

ஆமாம், ஊரறிந்த விபச்சாரிக்களுக்கே, பெரிய மனம் படைத்தவர்கள் வாழ்க்கை கொடுக்கிறார்களே!

குழந்தைகளைப் பொறுத்தவரை, சந்நியாசம் போக காரண அரக்கியாக இருந்த மனைவியை கேட்காமல், ‘‘உன் தந்தை எங்கே இருக்கிறார்’’ என அவரது குழந்தைகளைக் கேட்டால், உற்றார், உறவினர் என யார் கேட்டாலும், அக்குழந்தைகள் என்னத் தகுதியில் இருந்தாலும்..,

தங்களின் வீட்டில் நடந்த உண்மைகள் எதையும் வெளியில் சொல்ல முடியாமல், கூனிக்குறுதி தலையைக் கீழே தொங்கப் போடுவதையும், ஏதேதோ பொய்யைச் சொல்வதையும், அவர்களது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய அவலம் இருக்கும். 

ஆமாம், போனவர் பிணமாக வீடு வந்து சேர்ந்து விட்டால் கூட இதெல்லாம் தீர்க்கமான முடிவாகி விடும். ஆனால் ஆளும் இல்லை; அவரது உடலும் வீட்டுக்கு வரவில்லை என்றால் நிலைமை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். 

ஆம், வாழ்வை வெறுத்து, சந்நியாசம் போன ஆண்கள் யாரும், பிணமாக கூட வீடு (தி, வி)ரும்ப  மாட்டார்கள். இப்படி பலபேர் இ(றந்தி)ருக் கிறார்கள்.

குடும்பம் என்பது, கட்டிய மனைவி மட்டுமல்ல; பெற்ற குழந்தைகளும் சேர்ந்ததுதான். ஆகையால்,  காலப் போக்கில் அரக்கியாக விட்ட மனைவி களிடம் இருந்து தப்பிக்க, சந்நியாசம் போக நினைக்கும் ஆண்கள்.., 

இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் சங்கடங்களை தவிர்ப்பதற்காக தனியாகப் பிரிந்து, அக்கம் பக்கத்தி லேயே வாழ முற்பட வேண்டுமே தவிர, கண் காணாத இடத்திற்கு சென்று, காலமானப் பின்னும் வராமலேயே போய் விடக்கூடாது.

இப்படிப் போய்விட்டால், இறைவனது வீடு பேற்றை பெருவீர்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இப்படித் தான், இறைவனது வீடுபேற்றைப் பெற வேண்டும் என்றால்,  வேறு வழியில்லை.

ஆனால், உங்களது வாழ்வைப் போலவே, உங்கள் குழந்தைகளின் குடும்ப வாழ்வும், பல்வேறு விதங்களில் கேள்விக்குறி ஆகிவிடும் ஆபத்துண்டு. 

இதையெல்லாம் ஏதோ ஆண்களுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் சொல்வதாக யாராவது நினைத்தால், அவர்களுக்கும் அப்படியொரு நிலை வர வேண்டும் என நான் எண்ணமாட்டேன். 

இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற் காகத்தான், இந்த ஆராய்ச்சி விழிப்பறிவுணர்வுக் கட்டுரையை எழுதி உள்ளேன். 

எனவே, இதிலுள்ள உண்மையை உணர இப்படி யொரு நிலை எனக்கு வர வேண்டும் என்றோ அல்லது இப்படியொரு நிலையை அனுபவிப்பவரை காணச் செய்ய அருள் புரிய வேண்டுமென்றோ வேண்டிக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நடக்கும். அப்போது உண்மையை உணரத்தானே வேண்டும். 

சரி, நான் சொல்வதை விடுங்கள். 

‘‘ஆவதும் பெண்ணாலே; மனிதன் அழிவதும் பெண்ணாலே’’ என்று யார்யாரோ எப்படி எப்படியோ எழுதி வைத்து விட்டார்கள். இதெல்லாம் ஆண்களே எழுதியது என்றால்..,

தன் பருவ அழகைக்கூட, வயோதிக வடிவமாக வேண்டிப் பெற்ற ஒளவைப் பாட்டிக்கூட, தான் விருந்துக்கு சென்ற வீட்டில், மனைவியாக இருந்த அரக்கியைப் பார்த்து விட்டு, இவளோடு வாழ்வதை விட என்னோடு சந்நியாசம் வந்து விடு என அழைத்துச் சென்று விட்டதாக செய்தி உண்டு. 

கள்ளம், கபடம், சூது, வாது இல்லாத அந்தக் காலத்திலேயே அவ்வைக் கிழவி, ஒரு குடும்பத் தலைவனை தன்னோடு சந்நியாசம் அழைத்துச் செல்லும் அளவிற்கு பொங்கி எழுந்திருக்கிறாள் என்றால்..,

தன் கள்ளக் காதலன்களோடு சேர்ந்து கணவனையே கொலை செய்யும், இந்தக்கால அரக்கிகளைக் கண்டு, அந்த அவ்வைக் கிழவி இப்போது இருந்தால், என்ன செய்வாளோ, சொல்லுவாளோ!

எனவே, பெண்களே தங்களுக்கு வாய்த்த கணவன் எப்படி இருந்தாலும், கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என வாழ்ந்து விட்டுப் போய்ச் சேர முயலுங்கள்.  

மாறாக, அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பதாக நினைத்து, அரக்கத் தனமாக முடிவெடுக்காதீர்கள்! இப்படி அரக்கத்தனமாக முடிவு எடுக்கும், அரக்கி களுக்கு, நீங்கள் அவளது தந்தையோ, சகோதரனோ அல்லது மகனோ என யாராக இருந்தாலும் ஆதரவு தராதீர்கள். 

ஆதரவு தந்தால், நீங்களும் அதற்கான அனுபவத்தை அல்லது இதில் சொல்லியுள்ள ஒரு அனுபவத்தை யாவது  பெறுவீர்கள். இப்படி,  அவ்வளவே! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, October 27, 2017

ஏலம் என்றாலே, எச்சரிக்கையாகி விட வேண்டும்!


இன்று மின்னஞ்சலில் வந்த மடலின் சுருக்கமிது! 

// நான் கோவை, கணபதி, சத்திரோட்டில் இயங்கி வரும் மகாமேரு பெனிபிட் பண்ட் நிறுவனத்தில் நகைக்கடன் பெற்றேன் ரூ:2,06,000/- கடன் கணக்கு எண்: D28/17.03.2016

நான் இதுநாள் வரை ரொக்கமாக ரூபாய் 31900/- செலுத்தியுள்ளேன் அத்தொகையில் ரூபாய்: 16982/- அசலில் வரவு வைத்துள்ளார்கள் அதற்கு இரசீதும் வழங்கியுள்ளார்கள். 

தற்பொழுது எனது நகையை ஏலத்தில் விட்டு நகைகடனை வரவு வைத்தது போக மீதி தொகையை செலுத்தும்படி எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். 

நான் எவ்வளவோ போராடியும் எனது நகையை ஏலத்தில் விட்டுவிட்டார்கள், காவல்துறையை நாடியும் எவ்வித பயனும் இல்லை எனவே எனக்கு தாங்கள்தான் உதவ வேண்டும்.// 

இவருக்கான எனது பதில்:

நீங்களே சட்டம் அறிந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், நீதியைத்தேடி... நூல்களை படிக்க வேண்டியிருக்கும்.

யாராவது தீர்த்து தரவேண்டுமென விரும்பினால், பிரச்சினையை பெரிதுபடுத்தி பணம் சம்பாதிப்பதற்கு என்றே உள்ள வக்கீல்கள் என்கிற பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களைத் தான் நாடனும்.

இதுபற்றிய மற்ற  விவரக் குறிப்புகள்:

வரும் முன் காக்கும் நடவடிக்கையாக, யாரும் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற விரும்புவதில்லை. வந்தப் பின், எனக்கு உதவ வேண்டும் என்றால், ‘‘நானென்ன பெ(ரு, று)ங் கூலிக்கு மாரடிக்கும் பொய்த் தொழிலையா’’ செய்கிறேன்?!

இதுகூட தெரியாமல், நான் உதவ வேண்டும் என நினைப்பவர்கள் எவ்வளவு கூமுட்டைகளாக இருக்கிறார்கள் என்பதை விவரிக்க வேண்டிய தில்லை.

ஆனால், தங்களின் பிரச்சினையை தீர்ப்பது எப்படி என தெரியாமலேயே பலபேர், தங்களை எல்லாந் தெரிந்த லாடு லபக்கு தாசுகள் போன்று காட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும்..,

ஆகையால்தான், நான் சட்ட ஆராய்ச்சியில் களமிறங்க வேண்டி இருந்தது என்பதையும் முதல் நீதியைத்தேடி... நூலிலேயே எழுதி, நான் உணர்ந்தது முற்றிலும் உண்மையே என்பதையும் நூல்கள் முழுவதும் நிறுவி உள்ளேன்.

இப்படித்தான் இம்மின்னஞ்சலை அனுப்பியவரும் இருக்கிறார் என தெரிகிறது. அதாவது இவர், ஒரு மாத இதழின் ஆசிரியராம்! 

மற்றொரு இதழில் துனை ஆசிரியராம்!! ஏதோவொரு நலச் சங்கத்தில் செயலராம்!!! பதிப்பகம் வேறு நடத்துவதாக, பெயருக்குப் பின்னால், ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

உண்மையை, ஒளிக்காமல் சொல்ல வேண்டுமானால், அறிவுள்ளவர்கள் எவரும் தன் அறிவைத்தான் நம்பு வார்களே தவிர, அவர்கள் இருக்கும் தகுதிகளை பட்டியல் போடவே மாட்டார்கள். அப்படிப் போட்டார்கள் என்றால், அவர்கள் முட்டாள்கள் என்றே அர்த்தம்.   

சரி, நம்ம தலைப்பு விசயத்துக்கு வருவோம்.

ஏலத்தில் விடுதல் என்பது மிகப் பெரிய மோசடி. ஆமாம், இதில் ஒரு பொருளுக்கான விலை மதிப்பு என்பதே கிடையாது. அவரவர்களும் விரும்பிய தொகைக்கு கேட்பதுதான் மதிப்பு. 

ஏல முறைகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று தன்னுடைய உடமையை தானே ஏலத்தில் விடுதல். அடுத்து, மற்றவன் பொருளை தன்னுடைய உரிமையை தவறாகப் பயன்படுத்தி ஏலத்தில் விடுதல். 

இவ்விரு முறைகளையும், இன்றைய இளைஞர்கள் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது முறையை முதியவர்கள் கூட, பார்த்திருக்க முடியாது.


ஏனெனில், இதுபற்றி வெற்றுச் சடங்கு அறிவிப்புகள் எல்லாம், ஏலம் விட எத்தனிப் பவர்களின் அலுவலகங்களிலும், பொது மக்கள் படித்தும் படிக்காத நாளிதழ்களின் விளம்பரங்களில் மட்டுமே வரும். ஆகையால், இதுபற்றி சொல்வது சரியான புரிதலுக்கு ஏதுவாக இருக்கும். 

முதல் ஏல முறையில், அவர்களது பொருளை பொது இடத்தில் அல்லது மக்கள் அதிகமாக கூடும் சந்தைப் போன்ற இடங்களில், கூவிகூவி விற்பார்கள். 

அதன் ஆரம்ப விலை மற்றும் அதிகபட்ச விலை எவ்வளவு என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். 

அதிக விலைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்து விடுவர் அல்லது அவர்கள் எதிர்ப்பார்த்த லாபத்திற்கு யாரும் கேட்கவில்லை எனில் வைத்து விட்டு, அடுத்த பொருளை விற்க ஆரம்பிப்பர். இப்படி எந்தவொரு பொருளையுங் கூட விற்பார்கள். 

இதில், அவர்களுடைய ஆட்கள் சிலரும், பொதுமக்கள் போல கலந்து கொண்டு விலையை ஏற்றி விடுவார்கள். அவர்கள் இறுதியாக கேட்கும் விலைக்கு, வேறு யாரும் கேட்கவில்லை எனில், அவர்களே வாங்குவது போல வாங்கி வைத்துக் கொள்வதில் நட்டமில்லை. 

இந்த முறையிலான ஏலம், அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. ஆகையால், நான் பார்த்தே வருடக்கணக்கில் ஆகி விட்டது. 

இரண்டாவதாக, மற்றவன் பொருளை தன்னுடைய உரிமையை தவறாகப் பயன்படுத்தி ஏலத்தில் விடுதல் என்று ஆரம்பத்திலேயே சொன்னேன். அதாவது, அவர்களுக்கு செலுத்தாது நிலுவையில் உள்ள ஐந்து ரூபாய்க்காக.., 

‘‘ஐந்து ஆயிரமோ அல்லது ஐந்து லட்சமோ கூட மதிப்புள்ள பொருளை, 50 பைசாவுக்குத்தான் ஏலம் போனது’’ என அவர் களுடைய பினாமிகளுக்கே விற்று விட்டு, நிலுவை ரூபாய் 4.50 ஐ செலுத்தச் சொல்லுவார்கள். 

இப்படித்தான் இவரது நகையை குறைந்த விலைக்கு விற்றதாகே கணக்கு காட்டி, மீதி தொகையை கட்டச் சொல்லி இருக்கிறார்கள் போலும். ஆமாம், ஆனால் இதுகுறித்த விவரங்களை சொல்லாததால், இப்படித் தான் இருக்க வேண்டும் என்பது அனுமானம். 

இடத்தின் பேரில் கடன் வாங்கி இருந்தால், இடத்தை கைப்பற்றி விடுவார்கள். சம்பந்தமே இல்லாமல் பல இடங்களில், இது எங்களுடைய சொத்து; அத்துமீறி நுழைவோர் தண்டிக்கப்படுவீர்கள் என வங்கிகள் அறிவிப்பு பலகைகளை வைத்திருப்பதை கண்டு இருப்பீர்கள். 

இதனை கிராமத்தை விட, அதிக விலை மதிப்புள்ள நகரப் பகுதிகளில் அதிகமாகவே காணலாம். இது எல்லாமே இப்படி கைப்பற்றப் பட்டதாகத் ன் இருக்கும். இதற்கு முன்பாக, இதுதொடர்பான சம்பிரதாய வழக்குக்களும் நடந்து இருக்கும். 

நிதிபதிகளால் ஜப்தி செய்யப்பட்டு, ஏலம் விடப்படும் ஏலங்களே இப்படித்தான், மிகவும் நா(ண, ன)யமாக இருக்கும். எனவே, ஏலம் என்றாலே எச்சரிக்கையாகி விட வேண்டும். 

ஆமாம், எப்படியாவது நம் பொருளை மீட்டு விட முயல வேண்டும். இல்லை எனில்,  அவ்வளவுதான்!  அவர்கள் சொல்வதுதான்!! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)